Saturday, September 8, 2018

கர்ப்பிணிகளுக்கு ஆயுர்வேதம் சொல்லும் அறிவுரைகள்

கர்ப்பிணிகளுக்கு ஆயுர்வேதம் சொல்லும் அறிவுரைகள்

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.M.Sc.,MBA
டாக்டர் .ஜீவா .,BAMS
டாக்டர்.கீர்த்திகா .,BAMS

இயற்கை முறையில் கர்ப்பத்தை காப்போம்

      பெண்களின் அடுத்த பிறவியாக கருதப்படும் பிரசவமானது இன்றைய காலத்தில் பணம் பறிக்கும் தொழிலாக மாறிவிட்டது.

     பெண்கள் நாட்டின் கண்களாக கருதப்படுபவர்கள். ஆனால், இக்காலக்கட்டத்தில் பெண்களே, கண்மூடித்தனமாக தேவையற்ற மருந்து, மாத்திரைகளை கர்ப்பகாலத்தில் பயன்படுத்துகிறார்கள்.

     நம் முன்னோர்களின் காலத்தில் எவ்வித மருந்து மாத்திரைகளும் இல்லாமல் இயற்கை உணவு முறைகள் மற்றும் இயற்கை மருத்துவத்தின் மூலமாக நான்கு ஐந்து குழந்த்தைகலானாலும் சுகப்ரசவமாகவே அமைந்தது.பிரசவத்திற்கு பிறகும் தாயும் சேயும் எவ்வித குறைபாடும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

      நவீன காலக்கட்டத்தில் உதாரணமாக கர்பிணி பெண்களில் multivitamins மாத்திரைகள் உட்கொள்ளாதவர்களை காண்பது மிக அரிது. ஆனால்  தேவியற்ற பல இம்மாத்திரைகளால் தாய்க்கோ அல்லது சேய்க்கோ எவ்வித ஆரோக்யமும் பலனும் கிடைப்பதில்லை.

      இவ்வாறு தேவையின்றி பணத்தையும் காலத்தையும் வீணாக செலவிட்டாலும் இக்காலத்தில் pre eclampsia,வரம்பு மீறிய கருவளர்ச்சி(Restricted Fetal Growth),நரம்பு குழாயில் குறைபாடு(Nural Tube Defect ),எலும்புகளில் குறைபாடு (Skeletal Deformity ),குறைந்த எடைகொண்ட குழந்தை (Low Birth Weight) ஆகிய பாதிப்புகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டேதான் வருகிறது.

அம்மாவாக போகிற தாய்மார்களின் கனவு எல்லாம் –நல்ல அறிவான ,அழகான ,ஆரோக்யமான குழந்தை –அதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளார்கள் ..வெறும் மதர் ஹார்லிக்ஸ் சாப்பிட்டால் போதும் என்கிற மன நிலைக்கு இன்றைய விளம்பரங்கள் நம்மை புத்தி மழுங்க செய்து விட்டது.

ஆயுர்வேதம் என்கிற வாழ்கை அறிவியல் –கரு தரித்த நாள் முதல் சுக பிரசவம் வரை செய்ய வேண்டிய வழிமுறைகளை தொகுத்து வழங்கியுள்ளது..ஆங்கில மருத்துவ பரிசோதனைகள் நாம் ஒட்டு மொத்தமாக தவிர்க்க முடியாது என்றாலும் –தேவை இல்லாமல் பல பரிசோதனைகள் –தேவை இல்லாத மருந்துகள் எடுப்பதற்கு வழி வகுக்கும் என்பதை மறந்து விட கூடாது ..

அம்மாவாக போகிறவர்களுக்கு ஆயுர்வேதம் சொல்கிற வாழ்வியல் –உணவியல் ஆலோசனைகள்

ஆரோக்ய குழந்தை பெற மாதா மாதம் கர்ப்பிணிகளுக்கான உணவு முறைகள் -ஆயுர்வேதம் சொல்வது என்ன ?

  ஆயுர்வேத ஆச்சர்யாக்களின் கூற்றுப்படி மாசானுமாசிக பத்தியம்

ஒவ்வொரு மாதமும் கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ள வேண்டிய ஆயுர்வேத உணவு முறைகள் :-

முதல் மாதம் :-

       பால்,இனிப்பான குளிர்ச்சியான திரவ உணவுகள்,அதிமதுரம் + வெண்ணெய் சேர்த்து உண்ணவேண்டும், குறுந்தொட்டி பால் கஷாயம் பருக வேண்டும் .கருப்பு உலர் திராட்சை பருகலாம்.ஆச்சார்யர் சரகர் எதையும் கலக்காத தூய்மையான பாலை காய்ச்சி குளிர செய்து தக்க அளவில் அடிக்கடி பருக சொல்கிறார்

இரண்டாவது மாதம் :-

      இனிப்பு சுவைக்கொண்ட மூலிகைப் பொருள்கள் சேர்த்து தயாரிக்கப்பட்ட பாலினை உட்கொள்ள வேண்டும்,இனிப்பான பாலில் காகோலி சேர்த்து பருக வேண்டும்,லக்ஷண மூலிகையின் பால் கஷாயம் பருக வேண்டும்.காகோலி மூலிகை கிடைக்காதவர்கள் சதாவரியை பயன்படுத்தலாம்

மூன்றாவது மாதம் :-

       பாலில் தேன் மற்றும் நெய் சேர்த்து பருக வேண்டும்.
சிறு நாகபூ நாட்டு சர்க்கரையுடன்  பால் கஷாயம் செய்து பருக வேண்டும்.

நான்காவது மாதம் :-
       பால்,வெண்ணெய்,குறுவை அரிசி,தயிர்,மாமிச ரசம்,ஓரிலை பால் கஷாயம் ஆகியவற்றை பருக வேண்டும் .

ஐந்தாவது மாதம்:-

      வெண்ணையை உருக்கி எடுத்த நெய்,குறுவை அரிசி,மாம்சரசம்,பால்,நெய்,சீந்தில் பால் கஷாயம் ஆகியவற்றை பருக வேண்டும் .பாலில் இருந்து எடுத்த வெண்ணெயை ஒரு கவள அளவு அருந்த வேண்டும் .

ஆறாவது மாதம் :-

      நெய்யில் செய்த இனிப்பு பண்டங்கள்,நெருஞ்சில் மூலிகையை நெய்யுடன் சேர்த்து எடுக்க வேண்டும், ஓரிலை  பால் கஷாயம் செய்து பருக வேண்டும்.
பாலில் இருந்து எடுத்த வெண்ணையில் தயாரான நெய்யை இனிப்பு மருந்துகளுடன் கலந்து பக்குவம் செய்து அந்த நெய்யை பருக வேண்டும்

ஏழாவது மாதம்:-

      விதாரிகந்த முதலிய மூலிகைகளை நெய்யுடன் சேர்த்து உண்ண வேண்டும்,பார்லி அரிசி, கோதுமை பால் கஷாயம் ஆகியவற்றை உண்ண வேண்டும் .
ஏழாவது மாதத்தில் ஆறாவது மாதத்தில் சொன்ன அதே நெய்யை பருக வேண்டும்

எட்டாவது மாதம் :-

     கஞ்சியுடன் பால் சேர்த்து உண்ண வேண்டும்.
     குறுந்தொட்டி முதலிய மூலிகைகளைக் கொண்டு கஷாயவஸ்தியும், மதுர கன திரவியங்களில் ஸ்நேகங்களைக் கொண்டு அனுவாசன வஸ்தியும் மேற்கொள்ள வேண்டும்.
     மூர்வா அல்லது குருந்தொட்டி பால் கஷாயம் பருக வேண்டும்.

ஒன்பதாவது மாதம்:-

     நெய் சேர்த்த அரிசி கஞ்சி,மாம்ச ரசம் ஆகியவற்றை பருக வேண்டும்.
     குருந்தொட்டி பால் கஷாயம் பருக வேண்டும்.
     அனுவாசன வஸ்தி,யோனி பிச்சு ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம்
வலியற்ற சுகப்ரசவம் நடைபெறும்.

கர்பகாலத்தில் தவிர்க்க வேண்டியவை :-

  காரமான குளிர்ச்சியான உணவு வகைகள்.
  கடினமான உடற்பயிற்சி.
  உடலுறவு கொள்ளுதல்.
  தொலைதூர பயணம்.
  பகலில் உறங்குவது.
  இரவில் கண்விழித்தல்.
  இயற்கை உபாதைகளை அடக்கி வைத்தல்.
  அதிக எடையினை சுமத்தல்.
  சிவப்பு நிற ஆடைகளை அணிவது.
  அதிக நேரம் நிமிர்த்து படுத்திருப்பது .
  இறுக்கமான ஆடைகளை அணிவது.
  விரதம் இருப்பது.
  கோபம்,துக்கம்,பயம்.

இனிவரும் கர்ப்பங்கள் அனைத்தும் ஆரோக்கியமாக இவ்வுலகில் கால்பதிக்க ஆயுர்வேத மருத்துவத்தை பின்பற்றுவீர்.
தரமான ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையை –ஆங்கில மருந்துகளோடும் தொடரலாம். தேவையான மருந்து எது ,தேவையற்ற மருந்து எது என்றும் ஆலோசனை பெற்று ,ஆயுர்வேத முறைப்படி அழகான ஆரோக்ய குழந்தை பெற ஆலோசனைக்கு –அல் ஷிபா ஆயுஷ் மருத்துவனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை     90 4333 6000

Special Thanks To Dr.Jeeva.,BAMS.,

http://ayurvedamaruthuvam.blogspot.in/2017/04/blog-post_20.html

Thursday, September 6, 2018

நான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து, சிறுநீரில் விட்டு பாருங்கள்..!! அடுத்த கணத்தில் தெரியவரும், அதிர்ச்சி..?

நான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து, சிறுநீரில் விட்டு பாருங்கள்..!! அடுத்த கணத்தில் தெரியவரும், அதிர்ச்சி..?

பொதுவாக நம்முடைய உடலில் என்ன பிரச்சனையாக இருந்தாலும் ரத்தப் பரிசோதனை அல்லது சிறுநீர் பரிசோதனை செய்து பார்த்து, டாக்டர் கூறுவதை கேட்டு நம்முடைய பிரச்சனையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஆனால் நம்முடைய சித்தர்கள் எந்த ஒரு டாக்டரின் துணை இன்றி அவர்களுடைய சிறுநீரை அவர்களாகவே சோதனை செய்து, என்ன வியாதி இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடுவார்கள்.

சித்தர்கள் சிறுநீரைப் பரிசோதித்துப் பார்க்கும் முறை அவ்வளவு கஷ்டமானது கிடையாது.

அந்த முறையைப் பயன்படுத்தி நாமே நம்முடைய சிறுநீரைப் சோதனை செய்து தெரிந்து கொள்ள முடியும்.

நம்முடைய உடலில் உண்டாகும் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் தான் காரணம் என்று ஆரம்பத்திலே நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர்

அதில் எந்த ஒன்று நம்முடைய உடலில் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டாலே போதும் அதை நாம் குணப்படுத்த முடியும்.

இதைத்தான் நம்முடைய சித்தர்கள் சிறுநீர் பரிசோதனை மூலம் கண்டுபிடித்தனர். இந்த மூன்றும் சிறுநீரில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை வைத்து நோயை குணபடுத்தி உள்ளனர்

எவ்வாறு செய்யலாம்..?

காலையில் எழுந்ததும் சிறுநீரை ஒரு தெளிவான கண்ணாடி டம்ளரில் எடுத்து அதில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை அதில் விட்டு சிறுது நேரம் கழித்து பாருங்கள். அறிவியல் ரீதியாக என்ன நடக்கிறது..?

அந்த எண்ணெய்த்துளி சிறுநீரின் மேல் கயிறு போல நெளிந்து காணப்பட்டால் உடலில் வாதம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்று பொருள்..அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக அதை குணபடுத்த பார்க்க வேண்டும்..

அதுவே மோதிரம் போல வட்ட வடிவில் அல்லது கோள வடிவில் இருந்தால் உங்களுக்கு பித்த நோய் இருப்பதாக பொருள்..

சிறுநீரின் மேல் எண்ணெய் முத்துப்போல் அங்கொன்று இங்கொன்றாக நின்றுகொண்டிருந்தால் கபம் அதிகமாக இருக்கிறதென்று பொருள்.

அதேபோல் எண்ணெய்த்துளி மிக வேகமாக சிறுநீருக்குள் பரவினால் நோய் விரைவில் குணமடையும் என்பதாக பொருள்

எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாத் தாமதமாகும்.உடனடியாக அதை குறைக்க நடவடிக்கை எடுப்பது நல்லது

அதுவே எண்ணெய்த்துளி சிதறினாலோ சிறுநீருக்குள் அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த முடியாது.மிகவும் சிரமமான நிலை என்று அர்த்தம்..

🚶🏽‍♂HAROON SB

மஞ்சள் பாலின் திகைக்க வைக்கும் 15 நன்மைகள்

மஞ்சள் பாலின் திகைக்க வைக்கும் 15 நன்மைகள்

மஞ்சள் உலகின் மிகச்சக்தி வாய்ந்த மற்றும் இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்துள்ள பொருட்களில் ஒன்றாகும். குறிப்பாக, மஞ்சளானது நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஆதரவு மற்றும் அழற்சி குறைபாடுகள் (அதாவது கீல்வாதம்) சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அத்தோடு அதன் நன்மை நின்று விடுவதில்லை.

மேலும் மஞ்சள் மற்றும் பால் இயற்கையான ஆன்டி-பயாடிக் பண்புகளை கொண்டுள்ளன. உங்களுடைய அன்றாட உணவில் இந்த இரண்டு இயற்கை பொருட்களையும் சேர்த்துக் கொள்வதால், பல்வேறு நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகளைத் தடுக்கலாம். அதிலும் மஞ்சள் தூளை சற்றே சூடான பாலுடன் கலக்கப்படும் போது, எண்ணிலடங்கா பலவித சுகாதார பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இது சுற்றுச்சூழலிலுள்ள அபாயகரமான நச்சுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளுடன் போராட ஒரு பயனுள்ள தீர்வாகவும் உள்ளது.

மஞ்சள் பால் செய்முறை:

1 அங்குல மஞ்சள் துண்டை எடுத்துக் கொள்ளவும். அதை பாலில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பின் பாலை வடிகட்டி மஞ்சளை எடுத்துவிடவும். பின்பு குளிர வைத்து, இந்த பாலைக் குடிக்கவும்.

இப்போது இயற்கை நமக்கு தந்த இந்த அற்புதமான அன்பளிப்பின் முக்கியமான 15 நன்மைகளைப் பார்ப்போம்.

சுவாசக் கோளாறு

மஞ்சள் பால், பாக்டீரியா நோய்த்தொற்றுகள் மற்றும் நச்சுயிரி சார்ந்த நோய்த்தொற்றுகளைத் தாக்கும் நுண்ணுயிர் ஆகும். இந்த மசாலாப் பொருள் உடலை வெப்பப்படுத்தும் என்பதால் நுரையீரலின் சளித் தேக்கம் மற்றும் சைனஸ் பிரச்சனைக்கு விரைவான நிவாரணம் வழங்குகிறது. அதுமட்டுமின்றி சுவாச அமைப்பு தொடர்பான நோய்களான ஆஸ்துமா மற்றும் மூச்சு குழாய் அழற்சி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாகவும் இருக்கிறது.

புற்றுநோய்

மஞ்சள் பால் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகளைக் கொண்டுள்ளதால், இது மார்பகம், சரும, நுரையீரல், புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் வளர்ச்சியை தடுக்கிறது மற்றும் நிறுத்தவும் செய்கிறது.

தூக்கமின்மை

வெதுவெதுப்பான மஞ்சள் பால் அமினோ அமிலம், டிரிப்தோபன் போன்றவற்றை உற்பத்தி செய்து அமைதியான மற்றும் பேரின்ப தூக்கத்தைத் தூண்டும் என்று கூறப்படுகிறது.


ஜலதோஷம் மற்றும் இருமல்

மஞ்சள் பால் ஜலதோஷம் மற்றும் இருமலுக்கு ஒரு சிறந்த தீர்வாக கருதப்படக் காரணம், அதன் நச்சுயிரிக்கு எதிரான குணமும் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் ஆகும். இது தொண்டைப் புண், இருமல் மற்றும் சளிக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது.

கீல்வாதம்

மஞ்சள் பால், கீல்வாதத்தை குணப்படுத்த மற்றும் நாள்பட்ட மூட்டு வலிகளின் காரணமாக ஏற்படும் வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது வலியை குறைத்து நெகிழ்தன்மையுள்ள மூட்டுக்கள் மற்றும் தசைகள் உருவாக்க உதவுகிறது.

வேதனை மற்றும் வலிகள்

மஞ்சள் தூள் கலந்த பொன்னான பால், வேதனை மற்றும் வலிகளிலிருந்து சிறந்த நிவாரணம் அளிக்கிறது. இதனால் உடலில் உள்ள முதுகெலும்பு மற்றும் மூட்டுகளையும் வலுப்படுத்த முடியும்.


ஆன்டி-ஆக்ஸிடன்ட்

மஞ்சள் பால் ஒரு தடையற்ற முழுமையான எதிர் ஆக்ஸிகரணிகளுக்கு ஒரு சிறந்த ஆதாரமாக உள்ளது. இதனால் பல வியாதிகளை குணப்படுத்தவும் முடியும்.


இரத்தத்தை சுத்தப்படுத்தும்

மஞ்சள் பால் ஆயுர்வேத பாரம்பரியத்தில் இரத்தத்தை தூய்மைப்படுத்தும் ஒரு சிறந்த பொருளாகவும் மற்றும் சுத்தப்படுத்தியாகவும் கருதப்படுகிறது. இது உடலில் உள்ள இரத்த ஓட்டத்திற்கு உயிர்ப்பூட்டு பொருளாகவும் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யவும் உதவுகிறது. மேலும் இது நிணநீர் அமைப்பு மற்றும் இரத்த குழாய்களில் இருக்கும் அனைத்து நச்சுக்களையும் நீக்கி, இரத்த மெலிவூட்டியாக வேலை செய்கிறது

கல்லீரல் நச்சு நீக்கி

மஞ்சள் பால் ஒரு இயற்கையான கல்லீரல் நச்சு நீக்கியாக விளங்குகிறது. இது இரத்தத்தை தூய்மைப்படுத்தி, இதனால் கல்லீரல் நன்றாக செயல்பட உதவும் ஒரு ஊக்கியாகவும் இருக்கிறது. இதன் தூய்மைப்படுத்தும் குணத்தினால், இது கல்லீரலுக்கு ஆதரவாகவும் மற்றும் நிணநீர் மண்டலத்தையும் சுத்தமாக்குகிறது.


எலும்பு சுகாதாரம்

மஞ்சள் பாலில் கால்சியம் நிறைந்து காணப்படுவதால், அவை எலும்புகள் ஆரோக்கியமாக மற்றும் வலுவாக வைத்திருக்கவும் உதவுகிறது. இந்தியாவில் தலைச்சிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், நல்ல ஆரோக்கியமான எலும்பைப் பெற, இந்த மஞ்சள் பாலை தினசரி குடிக்கிறார். மஞ்சள் பால் எலும்பு தேய்மானத்தையும் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸையும் குறைக்கிறது.


செரிமான நலம்

இது ஒரு சக்தி வாய்ந்த கிருமி நாசினியாக இருப்பதால், குடல் சுகாதாரத்தை ஊக்குவிக்கிறது. மேலும் வயிற்று புண்களையும் மற்றும் பெருங்குடல் அழற்சியையும் கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி இது சிறந்த செரிமான சுகாதாரத்திற்கும் மற்றும் வயிற்றுப்புண்கள், வயிற்றுப் போக்கு மற்றும் அஜீரணத்தையும் தடுக்கிறது.



மாதவிடாய் தசைப்பிடிப்புகள்

இது வலிப்பு நோயைக் குறைக்கும் மருந்தாக இருப்பதால், மாதவிடாய் காலத்தில் உண்டாகும் தசைப்பிடிப்புகள் மற்றும் வலியையும் போக்குகின்றது. கர்ப்பிணிப் பெண்களுக்கு எளிதாக பிரசவம் நடைப்பெற, குழந்தைப் பேற்றுக்குப் பின் நலம் பெற, அதிகமான தாய்ப்பால் சுரத்தலுக்கு மற்றும் கருப்பைகள் வேகமாக சுருங்குதலுக்கும் மஞ்சள் தூள் கலந்த பொன்னான பாலை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.


சொறி மற்றும் சருமம் சிவத்தல்

கிளியோபாட்ரா, மென்மையான மிருதுவான மற்றும் ஒளிரும் சருமத்தைப் பெற மஞ்சள் பாலில் குளித்தார். இதே போல், ஒளிரும் சருமத்தைப் பெற வேண்டுமானால் மஞ்சள் பாலை குடிக்க வேண்டும். மேலும் சருமம் சிவத்தல் மற்றும் கரும்புள்ளிகளின் தோற்றத்தைக் குறைக்க, ஒரு பஞ்சுருண்டையை மஞ்சள் பாலில் ஊற வைத்து, பின் அந்த பாலில் நனைத்த பஞ்சினைக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதனால் சருமமானது முன்பை விட இன்னும் பிரகாசமாகவும் மற்றும் ஜொலிக்கவும் செய்யும்.

எடை குறைப்பு

மஞ்சள் பால் உணவில் இருக்கும் கொழுப்பை முறிக்க உதவுகிறது. இதனால் இது உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கிறது.

எக்ஸிமா/சிரங்கு

எக்ஸிமா சிகிச்சைக்கு தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் பால் குடிக்க வேண்டும். இதனால் நாளடைவில் அந்த பிரச்சனை குணமாகும்.

ஆட்டிசம் Autism குணமாகும்.

ஆட்டிசம் Autism குணமாகும்.

உங்களுக்கு தெரிந்த சிறப்பு குழந்தைகள் யாரேனும் இருந்தால் தயவுசெய்து அவர்களின் பெற்றோரிடம் இந்த செய்தியை சொல்லுங்கள்.

விரிவான ஆலோசனைக்கு +917373773396 என்ற எண்ணை அழைக்கவும்.

இந்த செய்தியை ஷேர் செய்வதன் மூலமும் நீங்கள் பல குழந்தைகள் குணமாக உதவ முடியும்.

குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டுவது விளையாட்டு காரியம் அல்ல, அது அறிவியல்..

#முன்னேர்கள்___மூடர்கள்__அல்ல__________விஞ்ஞானிகள்

குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டுவது விளையாட்டு காரியம் அல்ல,
அது அறிவியல்..

குழந்தை கருவில் இருக்கும்போது தாயின் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு உணவு செல்கிறது. குழந்தை பிறந்து தொப்புள் கொடி உடலில் இருந்து பிரிந்த பின்புதான் உணவு குழலின் விட்டம் விரிய தொடங்குகிறது.. இது முழுமையடைய ஐந்து வருடம் ஆகிறது.

நிலவை காட்டி சோறு ஊட்டும் போது, குழந்தை மேல்நோக்கி பார்க்கும்போது தொண்டை மற்றும் உணவுக்குழல் விரிவடைகிறது. அப்போது உணவு இலகுவாக இறைப்பையை நோக்கி இறங்குகிறது.

மேலும் தொண்டைக் குழலில் கீழ் நோக்கி இறங்கும் அலைவு இயக்கங்கள் மற்றும் செரிமான ஊக்கிகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்கின்றன. இப்பயிற்சிகள் மூலம் குழந்தைகளின் உணவு செரிமான மண்டலம் ஆரோக்கியம் பெறுகிறது. மேலும் நிலாவை காட்டி சோறு ஊட்டும்போது குழந்தைகள் உணவில் ஆர்வம் செலுத்துகிறார்கள்..

செல்போனை காண்பித்தும், டிவியை காட்டியும் குழந்தைகளுக்கு உணவூட்டும் இன்றையை தலைமுறை தாய்மார்கள் இனியாவது திருத்தி கொள்ளுங்கள்.

தெ.இரவிச்சந்திரன்🙏

வலி தீர்க்கும் வழி °°°°°°°°°°

வலி தீர்க்கும் வழி
°°°°°°°°°°°°°°°°°°°°°°°
        அதிகாலையில் ஒரு தொலைபேசி அழைப்பு .கால்கள் நரம்பு இழுப்பதாகவும்,மூட்டுகளில் கடுமையாக வலி இருப்பதாகவும் இதனால் இரவில் நிம்மதியாக தூங்க முடிவதில்லை என்றும் சொன்னார் அந்த நபர் .இதற்கு தீர்வு வேண்டும் என்று கேட்டிருந்தார்,

         இதே போன்ற வலி ,வேதனைகளில் அல்லல்படுவோர் ஏராளம் , உச்சியில் இருந்து  ,உள்ளங்கால் வரை வலி எந்தப் பகுதியிலும் ஏற்படும் .இதற்கு எந்த பாரபட்சமும் இல்லை .இது எங்கள் ஏரியா,   எனவே இங்கே மட்டும் தான் இருப்பேன்  என எந்த வலியும் அடம்பிடிப்பதில்லை,
           விடாமல் இருக்கும் வலி,விட்டு விட்டு வரும் வலி மொத்தத்தில் அனைத்தையும்  இரண்டாக பிரிக்கலாம் .செரட்டோனின் மற்றும் சப்ஸ்டைன்ஸ் பி ஆகிய வேதிப்பொருட்கள் வலி உணர்வை மூளைக்கு கடத்துகின்றன. வலி நிவாரணிகளால் நரம்பு முடிச்சுகளில் மரத்துப் போக செய்வனால் தற்காலிகமாக வலி அற்ற உணர்வு ஏற்படுகிறது .ஆனாலும் மீண்டும் வலி ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது, வலிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம் ஆயிற்றே?
            எப்படி இரண்டில் அடங்கும்  என கேள்வி இருக்கும் எனில்  நன்றாக யோசித்துப் பாருங்கள் ,
உச்சியில் இருந்து  பாதம் வரை   அந்த இடத்தின் பெயரால் வலி குறிப்பிடப்படுகிறது ,தலையில் ஏற்படுவது தலைவலி,         கால்களில் வருவது கால்வலி,    தோள்பட்டை எனில் தோள்வலி,          இது போன்று வலிகளை பட்டியல் இடலாம்,
        ஆனால் வலி  வலி தானே ?
இதற்கு ஒரு எளிய வழியில் தீர்வு காணலாம் ,
     இந்த வலிகள் அனைத்தும் வாதநோய் சார்ந்து வருகிறது என்பதால் மூன்று மூலிகைகளை இதற்கு *வாதநிவர்த்தி* மருந்தாக பயன்படுத்தி குணம் அடையலாம் ,

   அரசஇலை.
துளசி இலை
அத்தி இலை
இந்த மூன்றும் சம அளவில் எடுத்து பொடி செய்து பால் அல்லது மோர் அல்லது சுடுதண்ணீரில் கலந்து குடித்து வர வலிகள் அகலும்.

வாயுகோளாறு,நரம்பு தளர்ச்சி ,வாதநோய் இருப்போரும் இதைப் பயன்படுத்தலாம் .
      தேவைப்படும் அன்பர்கள் இந்த *வாதநிவர்த்தி*  பொடியை இலவசமாக நேரில் அல்லது கூரியரில் பெற்றுக் கொள்ளலாம் . 
9865287123--(whatsapp only )

https://www.facebook.com/commerce/products/1899854156756343/?notif_id=1522236313193537&notif_t=commerce_product_review&ref=notif/www.facebook.com/Shree-Nandhi-179077666049665/

அக்கி _ HERPES AND ITS TYPES

அக்கி – Herpes

அக்கியின் வகைகள் என்ன என்ன ?

அக்கியில் நிறைய வகைகள் இருந்தாலும் இரண்டு முக்கியமாக காணப்படுகிறது. Herpes Zoaster மற்றும் Herpes Simplex. அக்கி பிரச்னை நரம்புகளை தான் பொதுவாக பாதிக்கும்.

அக்கி யாருக்கு வரும் ?

யாருக்கு வேண்டுமனாலும் வரலாம். சின்ன வயதில் அம்மை போட்டிருந்தால், அதே வைரஸ் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் சமயத்தில் அக்கியாக உருவெடுக்கும்.

என்ன அறிகுறி ?

ஆரம்பத்தில் அதிக உடல் எரிச்சல் இருக்கும். தீப்புண் ஏற்பட்டது போன்ற எரிச்சல். அதன்பின் பாதிக்கப்பட்ட பகுதியில் உடல் வலி ஏற்படும். அதன் பின்னர் தான் அக்கி வெளிப்படும்.

அக்கியின் பாதிப்பு எப்படி இருக்கும்? உடலில் எங்கே தென்படும் ?

அக்கியி்ன் வெளிப்புற பாதிப்பு சருமத்தில் இருக்கும் வியர்குரு அல்லது அம்மை போன்ற சிறுகட்டிகள், நீர் கொப்புளங்கள் உடலில் ஏற்படும். சருமம் சிவக்கும். ஜுரம், உடல் வலி, உடல் எரிச்சல் ஏற்பட்டு, உடல் பலவீனம் அடையும். கழுத்து மற்றும் வாய் போல், முகம் அல்லது உடலின் ஒரு புறத்தில் ஏற்படும். கட்டி உடைந்து புண் ஆனாலும் தழும்புகள் எதுவும் ஏற்படாது ஆறிவிடும். சொறிந்தாலோ கீறினாலோ இன்ஃபெக்ஷனாகி தழும்புகள் ஏற்படும்.

சவ்வுப்படலம் சருமத்தில் சேரும் இடத்தில் இது வர வாய்ப்புள்ளது. வாய், மூக்குப் பகுதிகளில் சிலருக்கு அதிக பாதிப்புத் தெரியும். அந்தரங்கப்பகுதியிலும் வரலாம். சருமத்தில் வரலாம். உடலில் வயிற்றில், நெஞ்சில் வரலாம். கிருமி நரம்பில் தங்கி, சருமத்தில் அந்த நரம்புப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும். கண்களைக் கூட பாதிக்கலாம்.

தவிர்க்க வேண்டியவை

இச்சமயத்தில் உடலுக்கு ஓய்வு தேவை. வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவரிடம் உடனடியாகக் காண்பிக்க வேண்டும்.

ஒரு தடவை வந்தால் மீண்டும் வருமா?

ஒரு தடவை வந்துவிட்டால் மீண்டும் வராது என்று சொல்ல முடியாது. அவரவர் உடல் தன்மையைப் பொருத்தது அது. ஆனால் வரக்கூடிய சாத்தியம் அதிகம் உள்ளது. ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் விரைவில் குணமடையலாம்.

சிகிச்சை

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் ஆன்டி வைரஸ் மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துறைப்பார்கள். லாக்டோ கேலமைன் லோஷன் தடவலாம். முறையான சிகிச்சையில் இரண்டு வாரத்தில் கட்டுப்படுத்திவிடலாம். தண்ணீர், பழரசம், கஞ்சி, இளநீர் என அதிக திரவ உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

நன்றி
நட்புடன்
இராம்.கதிர்வேலு...

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...