Tuesday, September 4, 2018

தோல் சம்பந்தமான நோய்கள் குணமாக,பூவரசம் பூ:

தோல் சம்பந்தமான நோய்கள் குணமாக,பூவரசம் பூ:

பூவரசம் பூ:
இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரசம் பூக்கள் எண்ணற்ற மருத்துவக்குணங்களைப் பெற்றுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பூச்சிக்கடி மற்றும் வண்டுக்கடி போன்ற விஷக்கடிகளுக்கு இந்த பூக்களைப் பயன்படுத்தலாம் என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவக்குணங்கள்:
தோல் சம்பந்தமான நோய்கள் குணமாக:
தோல் ‌நோயினால் அவதிப்படுபவர்கள் பூவரசம் பூவை நன்கு அரைத்து அவற்றின் மீது தடவினால் தோல்நோய் குணமாகும்.

விஷக்கடி குணமாக:
பூச்சிக்கடி, வண்டுக்கடி போன்ற விஷப்பூச்சிகள் கடிப்பதால் உண்டாகும் தோல்சம்பந்தமான நோய்கள் குணமாக வேண்டுமெனில் பூவரசம் பூவை 25 கிராம அளவு எடுத்து நன்கு அரைத்து அதில் 200 மிலி நீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.பின் நீர் பாதியாக வற்றியவுடன் அ‌தனை வடிகட்டி தொடர்ந்து மூன்று ந‌ாளைக்கு காலை, மாலை என இருவேளை பருகி வந்தால் தோல்சம்பந்தமான நோய்களான ஊறல், தடிப்பு, அரிப்பு, வீக்கம், மயக்கம் மற்றும் சோம்பல் ஆகியவை குணமாகும்.

குறிப்பு:இவ்வகையான கஷாயத்தை உட்கொள்ளும்போது எண்ணெய், கடுகு போன்றவற்றை போட்டு தாளிக்காமல் சாப்பிட வேண்டும். மேலும் மீன் கருவாடு போன்றவற்றை சாப்பாட்டில் சேர்க்கக்கூடாது.

மூட்டுவீக்கம் குணமாக:
மூட்டு வீக்கத்தால் துன்பப்படும் வயது முதிர்ந்தவர்கள் அனைவரும் பூவரசம் பூ, காய், பட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வீக்கம் உள்ள இடத்தில் தடவினால் மூட்டு வீக்கம் குணமாகும்.

இத்தகைய மருத்துவக்குணங்களைப் பெற்ற இந்த “பூவரசம் பூவை” நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக உண்போம்; உலகில் நோயின்றி வாழ்வோம்.

🚶🏽‍♂HAROON SB

இந்துப்புவின் அற்புத மருத்துவ குணங்கள்

பழமைவாய்ந்த இந்துப்புவின் அற்புத மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா?

கடல் நீரிலிருந்து தயாராகும் உப்பை, நாம் தினமும் சமையலில் பயன்படுத்தி வருகிறோம். உப்பை கல் உப்பு, தூள் உப்பு எனப்பலவிதங்களில் பயன்படுத்தினாலும், அவை அனைத்தின் பலன்களும் ஒன்றுதான். "உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்பதற்கேற்ப, கரிப்பு சுவைக்காகவும், கார வகை உணவுகளில் சுவை கூட்டவும் உப்பு பயனாகிறது.

சமீப காலங்களில் கடல் உப்பை தினசரி பயன்படுத்துவதால், சிலருக்கு தைராய்டு உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளை உண்டாக்கும் தன்மைகள் இருப்பதாக மேலை நாட்டு ஆய்வாளர்கள் கண்டறிந்து, அதைப்போக்க அயோடினை கடல் உப்பில் கலக்க பரிந்துரைத்து, அதையே, முழுமூச்சாக நமது தேசத்திலும் பின்பற்றி, அயோடின் கலக்காத உப்பை, மக்கள் பயன்படுத்தத்தடை விதித்துள்ளனர்.

உலகளவில் இந்த தைராய்ட் பாதிப்புகள் உள்ள இரண்டு சதவீதம் பேருக்காக, அனைவரும் வெறும் உப்பை பயன்படுத்த தடைசெய்துள்ளனர். மேலும், உப்பு ஆலைகளில், ஆய்வில் உப்பில் அயோடின் அளவு குறைந்தால், ஏற்படும் அபராதத்தைத் தவிர்க்க, அயோடின் அளவை உப்பில் அதிகரித்து, மக்கள் உடல்நலனில் அக்கறை இன்றி விற்பனை செய்கின்றனர். கூடுதல் அளவுகளில் அயோடின் உள்ள நமது அன்றாட பயன்பாட்டு உப்பு, மேலும் அதிக இன்னலை நமக்கு அளிக்கும் என்பதே, உண்மை. சரி, எப்படி இந்த அயோடின் விசயங்களைத் தவிர்த்து, நாம் உப்பை பயன்படுத்துவது?

இன்றைய காலகட்டத்தில் அயோடின் கலக்காத சாதாரண உப்பை நாம் பயன்படுத்த வாய்ப்புகள் இல்லை, ஆனால், அதற்கு மாற்றாக, இமாலயன் உப்பு எனப்படும், இந்துப்பை பயன்படுத்தலாம். மிகத்தொன்மையான காலத்திலிருந்து, நம் முன்னோர் சமையலில் இடம்பெற்றுவந்த இந்துப்பு காலப்போக்கில், பயன்பாட்டிலிருந்து, விலகிவிட்டது.

இந்துப்பு என்றால் என்ன? உலகில் உள்ள மலைத்தொடர்கள் எல்லாம் கடினமான கருங்கல் பாறைகளால் ஆனவை, சில வகை மலைகள் மட்டும் விதிவிலக்காக, கடினமற்ற உடையும்தன்மைமிக்கவையாகக் காணப்படுகின்றன. அவையே உப்புப்பாறைகள் என அழைக்கப்படுகின்றன. அந்த உப்பு பாறைகளிலிருந்து கிடைப்பதே, பாறை உப்பு எனும் இந்துப்பாகும்.

நமது நாட்டின் இமயமலைத்தொடரின் அருகில் உள்ள உப்புமலைகளிலும், பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதிகளிலிருந்தும் உப்புப்பாறைகள் நமக்கு கிடைக்கின்றன. இராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் பாறை உப்பு, பூமிக்கு அடியில் இருந்து, சுரங்கங்கள் மூலம் எடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தூத்துக்குடி போன்ற சில இடங்களில், கிடைகிறது.

உலக நாகரீகங்களில் முதன்மையானதாகக் கருதப்படும், நைல் நதி நாகரீகம் எனும் எகிப்திய நாகரீகம் அக்காலத்தில் சிறந்து விளங்கியதற்கு காரணமாக ஆய்வாளர்கள் குறிப்பிடுவது, அவர்களின் இயற்கை உப்பு வளமேயாகும். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், அதுதான் உண்மை. அங்குள்ள பாலைவன நிலங்களில் இயற்கையாகக் கிடைத்த இந்துப்பை அவர்கள் உலக நாடுகளுக்கெல்லாம் சென்று விற்று வணிகம் செய்து, பொருளாதார வளம் பெற்றனர். அதனால், உண்டான அதீத செல்வச் செழிப்பினால், அவர்களின் வாழ்க்கை நவ நாகரீகமிக்கதாக மாறி, உலக நாடுகளுக்கெல்லாம், முன்னோடியாக எகிப்தியர் விளங்கினர், என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்துப்பில் உள்ள தாதுக்கள்: பாறைகளில் இருந்து வெட்டியெடுக்கப்படும் இந்துப்பு, நல்ல நீர் மற்றும் இளநீரில் ஊறவைத்து, பதப்படுத்தப்பட்டபிறகே, நமக்கு பயன்படுத்தக்கிடைக்கிறது. சற்றே மங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்துப்பில், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர், புளோரைடு, அயோடின் போன்ற தாதுக்களுடன் சோடியம் குளோரைடு அதிக அளவில் உள்ளது.

மனிதருக்கு நலம் தரும் 80 [எண்பது] வகையான கனிமத்தாதுக்களை, தன்னகத்தே கொண்டது. வட இந்தியர்கள், சிவ ராத்திரி போன்ற விரத நாட்களில், இந்துப்பைகொண்ட உணவுகள் தயாரித்து சாப்பிட்டு விரதம் முடிப்பர். அன்றாட உணவிலும் இந்துப்பை வட இந்தியர்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

இந்துப்பின் பயன்பாடு அவற்றின் நன்மைகள் குறித்து, தமிழ்நாட்டில் இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை, ஆயினும், பல்லாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட பழமைவாய்ந்த தமிழ் சித்த மருத்துவத்தில், முக்குற்றம் எனக்கூறும் வாதம், பித்தம் மற்றும் கபம் உள்ளிட்ட வியாதிகள் போக்கும் மருந்துகள் தயாரிப்பில், மனிதருக்கு நலம் தரும் இயற்கை தாதுக்கள் நிரம்பிய இந்துப்பும் சேர்க்கப்பட்டது.

இந்துப்பை உணவில் தினமும் உபயோகித்துவந்தால், வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் வியாதிகளின் தன்மைகள் நீங்கி, உடல் வலுவாகும். எளிதில் செரிமானமாகும் திறனுள்ளது, மனச்சோர்வு நீக்கும் தன்மைமிக்கது.

🚶🏽‍♂HAROON SB

- இரத்த அழுத்தம் இரத்த அழுத்தம் – ஒரு நோயா?

அறிந்து கொள்வோம் - இரத்த அழுத்தம்

          இரத்த அழுத்தம் – ஒரு நோயா?

இன்று அனைவரும் இரத்த அழுத்தம்  - நோய் என்று கருதி மருந்து வில்லைகள் எடுத்துக்

கொண்டு இருக்கிறோம். உண்மையில் இரத்த அழுத்தம் என்றால் என்ன என்பதை யாருமே

சிந்திப்பது இல்லை.

     இதயம் என்னும் தானியியங்கி மோட்டார் உடலின் பல பாகங்களுக்கும் இரத்தத்தை

கொண்டு செல்கிறது. இதன் கட்டுப்பாட்டு அறை மூளை .சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல்

இது இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும்.

      அதிக உடல் உழைப்பின் போதும் மன அழுத்தத்தின் போதும் இரத்த அழுத்தம் அதிகமாக

இருக்கும். உதாரணமாக ஒரு மாணவன் ஒட்டப்பந்தயத்தில் ஓடி முடித்தவுடன் பார்த்தால் இரத்த

அழுத்தம் அதிகமாக இருக்கும்.அதே மாணவன் தேர்வு எழுத போகுமுன்போ அல்லது

தேர்வு,போட்டி முடிவுகள் வெளியாகும் நேரத்திலோ இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்.

       உடலில் காயங்கள் ஏற்பட்டு இரத்தம் வெளியேறும்போது அதனை தடுக்க இரத்த அழுத்தம்

குறையும். இச்சமயம் பதட்டமும்,சோர்வும்,மயக்கமும் உண்டாகும்.எனவே மன நிலை,உடல்

நிலைக்கேற்பவே இரத்த அழுத்தம் இருக்கும்.

      நீங்கள் மருத்துவரிடம் முன் அனுமதி பெற்று அந்த நேரத்திற்கு பிரயாணம் செய்து,

மருத்துவமனையில் காத்திருந்து,அங்குள்ளவர்களிடம் நோயைப் பற்றிப் பேசி,சிந்தித்து, பின்

சோதனை செய்யும்போது உங்களுக்கு இரத்த அழுத்தம் கூடுதலாகவே இருக்கும்.

           இதற்கு மனமே காரணம்

       இந்திய மருத்துவ சாஸ்திரத்தின்படி இரத்த ஒட்டத்தை நாடித்துடிப்புகளின் மூலம்

காணும் முறைகளை விளக்கியுள்ளனர். இதன்படி காலம்,உடல்நிலை,வயதுகளுக்கேற்ப ஒருவரின்

நாடி வித்தியாசப்படும்.

காலங்கள் ; சித்திரை,வைகாசி மாதத்திற்கு காலையிலும்,ஆனி,ஆடி,ஐப்பசி,கார்த்திகைக்கு

மதியமும், மார்கழி, தை,மாசிக்கு மாலையிலும்,ஆவணி,புரட்டாசி,பங்குனிக்கு இரவிலும்

தெளிவாய் இருக்கும்.

நேரங்கள் ;நடந்து(பிரயாணம் செய்து) தேகம் களைத்திருந்தாலும்,சாப்பாடு,சுடு பதார்த்தங்கள்

(காபி,டீ),சாராயம், புகையிலை போன்றவை எடுத்திருந்தாலும், வெயில்,தூக்கமின்மை ,சுரம்,

மனசஞ்சலம்,அதிக பலவீனம்,இரத்தம் வடிதல் ஆகியவைகளினாலும் படபடவென்று ஓடும்.

பசி,விசனம்(கவலை),குளிர்,அதிக நித்திரை களினால் குறையும்.

நாடி துடிப்பு ; குழந்தை பிறந்தவுடன் 140  - பாலியத்தில் 120-130, -குழந்தையில் 100, -இளமையில்

90, - முழுமையான(பருவ) ஆண் 70-75, - (பருவ)பெண் 75-80, -முதுமையில் 75-80, -ஹீன பருவத்தில்

70, -உட்கார்ந்திருக்கும்போது 40,- நிற்கும்போது 70, -படித்திருக்கும்போது 67,-  என நேரங்

காலங்களுக்கேற்ப மாறுபடும். விருத்தர்,பாலர்,க்ஷயரோகி,தரித்திரர்,சிற்றின்பஞ்

சேர்ந்தவர்கள், தண்ணீரில் மூழ்கியவர்கள் உண்மை தெரியாது.நாடி பார்க்கும் ஸ்தானத்திற்குமேல்

யாதொரு கட்டிருந்தாலும்,பூமியில் கரத்தை ஊன்றியிருந்தாலும்காலைக் கட்டிக்கொண்டிருந்தாலும்

சரியாகத் தெரியாது.

          இவ்வாறு இந்திய மருத்துவ சாஸ்த்திரத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. நாடி துடிப்பு

என்பது இதய துடிப்பாகக் கொண்டாலும் கூட இரத்த அழுத்தமும்,இதயத் துடிப்பும் ஒன்றுடன்

ஒன்று சம்பந்தப்பட்டவையே.

       எனவே இரத்த அழுத்தம் என்பது கவலை தரக்கூடிய ஒன்றில்லை.குளிர்ந்த நீர் அதிகம்

பருகினாலே இரத்த அழுத்தம் சரியாகும் என்கிறது அமெரிக்க ஆய்வு.மனதை சலனமின்றி

வைத்துக்கொண்டாலே போதுமானது.

         உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் என்பதுகோடி நினைந்து எண்ணுவன என்கிறார்

ஔவையார். வீண் சிந்தனை தவிர்த்து, மனதை செம்மையாக்கிக் கொள்ள இரத்த அழுத்தம்

நம்மை அண்டாது.

         பாதி நோய்க்கு ஆதி காரணம் மலச்சிக்கல் என்கிறது வைத்திய சாஸ்திரம்.

மலச்சிக்கல் இன்றி உடலை நோய் அணுகாவண்ணம் பாதுகாத்து மனதை உபாதைகளில்

ஈடுபடாவண்ணம் தடுத்தாலே நோயின்றி வாழ முடியும்.

     மேலும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான உடல்வாகு கிடையாது.

கப,வாத,பித்த,பித்தவாத,கபவாத, வாதபித்த உடல் என்று உள்ளது.எனவே ஒருவருக்கு பொருந்தும்

மருந்து எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. நாம் உண்ட உணவினால் நம்

உடலே தினம் மாறுபடும்.எனவேதான்

     நோய்நாடி நோய்முதல்நாடி அதுதணிக்கும்

     வாய்நாடி வாய்ப்பச் செயல்    என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
 
எனவே உணவுப் பழக்கத்திலும் அன்றாட வாழ்க்கை

நடைமுறையையும் மாற்றி அமைத்து நோயின்றி
வாழ்வோம்.

🚶🏽‍♂HAROON SB

Monday, September 3, 2018

மருத்துவம் தவிருங்கள்! ஆரோக்யம் அனுபவியுங்கள்.......!.

ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்,
தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!

அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.❗

1.உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.

2.இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.

3.இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.

4.நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.

5.ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.

6.உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.

7.வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.

அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.

8.உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.

9.மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.

10.அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.

11.நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.

12.சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.

வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.

13 உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.

கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு. 🔴

🌿எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.

உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும். 🌿

வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது. ☘

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.

குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.

வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.

இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.

பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?

இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்? 👆🏿

வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.

இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.

கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!

இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!

இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!

இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!

மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!

மருத்துவம் தவிருங்கள்!

ஆரோக்யம் அனுபவியுங்கள்.......!.

ஆரா டீ செய்முறை

வணக்கம் ஆரா டீ செய்முறை: முதலில் தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும் பின்பு சிறிதளவு இஞ்சி தோல் நீக்கி அதை நன்றாக தட்டி எடுத்து அந்த தண்ணீரில் போடவும் பின்பு அடுப்பில் இருந்து இறக்கி நாட்டுச்சர்க்கரை கலந்து பருகவும்.இதை கற்று கொடுத்த வேதா ஐயாவுக்கு நன்றி வாழ்க வளமுடன்.

விரலை_வெட்ட_வேண்டாம்:👌

விரலை_வெட்ட_வேண்டாம்:👌
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என
ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!

நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.🌷

மேலும் விபரங்கள் கீழே.!
👇👇👇👇👇👇👇👇👇👇

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு
மருத்துவாிடம் சென்றால்,

சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,

விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,

காலில் இருந்தால்
காலை துண்டித்து விடுவதும்,

தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.

காலையும்,விரலையும், அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும், அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,

எனக்கு தெரிந்தவரின் காலில் ஏற்பட்ட குழிப்புண்ணுக்கு டாக்டா்கள்,

புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.

எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்ற முடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.

முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை.

🙌இதற்கு கண்கண்ட மருந்து🙌

ஆவாரம்_இலை:👌
👍👍👍👍👍👍

இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.

இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

இதை அதிகம் பகிர்ந்தால் பலரின்
கால்களையும் விரல்களையும் காப்பாற்றுவ

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் ;

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் ;

இது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு!! கடைசி வரை முழுமையாகப்படித்து விட்டுப் பின் உங்கள்
e-list இல் இருக்கும் அனைவருக்கும் அனுப்புங்கள்!!

Dr. Stephen Makeover தீராத முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு , ஒரு மரபு வழியல்லாத சிகிச்சை முறை அளித்ததில், பெரும்பாலானோர், நோயிலிருந்து மீண்டிருக்கின்றனர்.

முதலில் அவர் , அவரது நோயாளிகளின், நோயைக் குணப்படுத்த
சூரிய சக்தியை பயன்படுத்தினார்.
உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி செய்யும் இயற்கை வழிச் சிகிச்சை முறையில் நம்பிக்கையுடையவர்.
அவரது கட்டுரையைக் கீழே பார்ப்போம்;

"புற்றுநோயைக் குணப்படுத்தும் உத்திகளில் இதுவும் ஒன்று!!
புற்றுநோயைக் குணப்படுத்தும் எனது சிகிச்சைமுறைகளில், சமீபகால வெற்றிவிகிதம் 80%.

புற்றுநோயாளிகள் மரணத்தைத் தழுவக்கூடாது.புற்றுநோயாளிக்கான சிகிச்சை ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது- அது நாம் பழங்கள் எடுத்துக் கொள்ளும் முறையில் உள்ளது.

நீங்கள் நம்புவீர்களோ இல்லியோ, இதுவரை வழக்கமான சிகிச்சை முறையில் இறந்த நூற்றுக்கும் அதிகமான புற்று நோயாளிகளுக்கான நான் வருத்தப்படுகிறேன்.

பழங்கள் சாப்பிடும் முறை;;

எல்லோரும் நினைப்பது பழங்கள் சாப்பிடுவது என்றால்,அவற்றை விலைக்கு வாங்கி, வெட்டி, வாயிலிட்டு சாப்பிடுதல் என்று.

நீங்கள் நினைப்பது போல் எளிதானதல்ல அது. பழங்களை 'எப்படி' அதுவும் '*எப்போது'* சாப்பிடவேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

பழங்களைச் சாப்பிடும் சரியான முறை என்ன?

பழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல!!

பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்!!

பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும்
வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது!!

பழங்கள் ஒரு முக்கியமான உணவு;

சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம்.

பழத்துண்டு வயிற்றின் வழியே நேராகக் குடலுக்குள் செல்லத் தயாராக இருக்கிறது. ஆனால் பழத்திற்கு முன்னால் எடுத்துக்கொண்ட
'பிரட்' டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது.

இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது.

பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது.

அதனால் தயவு செய்து பழங்களை *வெறும் வயிற்றில்* அல்லது #உணவுக்கு முன்# சாப்பிடுங்கள்.!!

பலர் புகார் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள்.

""ஒவ்வொரு முறை நான் தர்ப்பூசணி பழம்( Watermelon) எடுக்கும்போதெல்லாம் எனக்கு ஏப்பம் வருகிறது, எப்போது நான் துரியன் பழம் சாப்பிட்டாலும் வயிறு ஊதிக் கொள்கிறது, எப்போது நான் வாழைப்பழம் சாப்பிட்டாலும், அவசரமாக கழிவறைக்கு ஓட வேண்டியிருக்கிறது, இன்னும் பல .. . . .

உண்மையில் நீங்கள் வெறும் வயிற்றில் பழம் எடுத்துக் கொண்டால், இந்த மாதிரி நிலைமை தோன்றாது!

உணவுக்குப் பின் பழம் எடுக்கும் போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால் , வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது!!

நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவை யெல்லாமே, வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால்,
** நடக்காமல் தடுக்கப்படும்**

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களெல்லாம் அமிலத்தன்மையுடையவை என்பதெல்லாம் உண்மையில்லை! ஏனென்றால் Dr. Herbert Shelton என்பவர் இந்த. வகையில் ஆராய்ச்சிகள் செய்து. கூறியதன்படி,எல்லாப் பழங்களும், நமது உடலுக்குள் சென்றதும் காரத்தன்மையுடையவையாகின்றன.

சரியான முறையில் பழங்கள் சாப்பிடும் வகையை முழுவதுமாக அறிந்து கொண்டால், நமக்கு, அழகு,நீண்ட ஆயுள்,உடல் ஆரோக்கியம், உடலுக்குத் தேவையான சக்தி, மகிழ்ச்சி, மற்றும் சரியான எடை இவற்றைப் பெறும் **ரகசியம்** கிடைத்து விடும்.

3)நீங்கள் பழச்சாறு அருந்தும் தேவை ஏற்படும்போது, **புதிதான** பழச்சாறுகளையே அருந்துங்கள். டின், பாக்கட்,மற்றும் பாட்டில் இவற்றில் அடைக்கப்பட்ட ரெடிமேட் பழச்சாறுகள்**வேண்டாம்**.

சூடாக்கப்பட்ட பழச்சாறுகளையும் குடிக்க வேண்டாம்.

பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களையும் உண்ணாதீர்கள்.ஏனெனில் அவற்றிலிருந்து உங்களுக்கு எந்த விதமான சத்துக்களும் கிடைக்காது.

சமைத்த பழங்களில் அதிலுள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப் படுகின்றன.உங்களுக்கு அதன் சுவை மட்டுமே கிடைக்கிறது.

ஆனால் பழச்சாறு சாறு அருந்துவதை விட , பழங்களை முழுதாகச் சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

நீங்கள் பழச்சாறு குடிப்பதாயிருந்தால், மடமடவென்று குடிக்காமல்,மெதுவாக ஒவ்வொரு வாயாக அருந்தவும்.ஏனென்றால், நீங்கள் பழச்சாறு விழுங்குவதற்கு முன், அதனை வாயிலுள்ள உமிழ்நீரோடு நன்கு கலக்கச் செய்து பின் உள்ளே அனுப்பவும்.

உங்கள் உடல் உறுப்பக்களைச் சுத்தம் செய்யவும், உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும். ஒரு 3- நாட்கள் பழங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.

அந்த 3 நாட்களும், பழங்களை மட்டும் சாப்பிட்டு, மற்றும் புதிதாய் எடுக்கப்பட்ட பழச்சாறுகளையும் மட்டுமே நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த டயட்டின் முடிவு நீங்களே ஆச்சரியப் படும்படி, நீங்கள் மிகவும் அழகாய், வனப்புடன் தோற்றமளிப்பதாய் உங்கள் ஃபிரண்ட்ஸ் கூறும்போது உணர்வீர்கள்.

கிவி பழம்;

இது ஒரு சிறிய ஆனால் வலிமை மிகுந்த பழம்.
இப்பழம் பொட்டாசியம், மக்னீஷியம், விட்டமின்- ஈ. மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஓர் நல்ல பழம்.
ஆரஞ்சுப் பழத்தை விட விட்டமின்-சி சத்து கிவி பழத்தில் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.

ஆப்பிள்;
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என எடுத்துக் கொண்டால். நோயின்றி வாழலாம் என்று சொல்வது உண்மையே!

ஆப்பிளில் விட்டமின்-சி சத்து குறைவாக இருப்பினும்,அதில் உள்ள antioxidants ,flavonoids போன்றவை இந்த விட்டமின் - சி சத்துக்களை மேம்படுத்துவதால், பெருங்குடல் புற்று நோய்,மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துக்களைக் குறைக்கிறது!

ஸ்ட்ராபெர்ரி ;
பாதுகாப்பு தரும் பழம்.
இந்தப் பழத்தில் மற்ற எல்லாப் பழங்களையும் விட. மொத்த Antioxidant சக்தி இருப்பதால்,இது நம் உடலில் சுதந்திரமாய் கட்டுப்பாடற்று பல்கிப் பெருகும் அடிப்படைக் கூறுகளால் ( free radicals) இரத்த நாளங்களில் அடைப்பு, புற்று நோய்க் காரணிகள் பெருகுதல் முதலியவை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கிறது.

ஆரஞ்சு;
இனிப்பான மருந்து.

ஒரு நாளைக்கு 2-4 ஆரஞ்சு எடுப்பது ஜலதோஷத்தை விலக்கும்.கொழுப்பைக் குறைக்க உதவும்.மேலும் சிறுநீரகக் கற்களைக் கரைப்பதோடு, கற்கள் வராமலும் தடுக்கும்.
அதனுடன் பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்தினைக் குறைக்கிறது.

தர்பூசணி;

மிகவும் குளிர்ச்சியான ஒரு தாகம் தீர்ப்பான்.
92% தண்ணீர்ச் சத்துக்களையுடையது.
மேலும் இந்தப் பழத்தில் மாபெரும் அளவில் Glutathione இருப்பதால்,அது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மேலும் இது lycopene. என்னும் புற்று நோயை எதிர்த்துப் போராடும் ஒரு oxidant இன் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது.
தர்ப்பூசணியில் உள்ள மற்ற சத்துக்கள் விட்டமின் -சி , பொட்டாசியம் ஆகியவை.

கொய்யா& பப்பாளி

இவை இரண்டுமே விட்டமின் - சி நிறைந்தது.உயர் விட்டமின்-சி கொண்ட பழங்களைத் தேர்வு செய்தால் சந்தேகத்துக்கிடமின்றி வெற்றி பெறும் தகுதியுடையவை.
கொய்யாப்பழம் நார்ச்சத்து அபரிமிதமாக உள்ளதால், மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.

பப்பாளிப்பழம் Carotene சத்துக்கள் நிறைந்தது எனவே கண்களுக்கு மிகவும் நல்லது.
##################
உணவிற்குப் பிறகு குளிர்ந்த தண்ணீர் அல்லது பானங்கள் குடிப்பது = புற்று நோய்.

இந்த தகவலைப் பெறும் ஒவ்வொரு நபரும், 10 நபர்களுக்காவது இத்தகவலை அனுப்பினால்,நிச்சயமாய் ஒரு உயிரையாவது காப்பாற்றலாம் செய்வீர்களா?

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...