Sunday, September 2, 2018

கொழுப்புகள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கொழுப்புகள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது.

கூடுதல் உடல் பருமனுக்கான காரணங்கள்:
அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளல், குறைவான சக்தியைச் செலவிடல், அதிக சக்தி தரும் உணவுகளை உட்கொள்ளல் (இனிப்புகள்/ ஐஸ்-கீரிம்/ குளிர்பானங்கள்), மதுப் பழக்கம் போன்றவற்றால் கூடுதல் பருமன் ஏற்படுகிறது. வயது மற்றும் பரம்பரைக் காரணிகளும்கூட உடல்பருமனுக்குக் காரணங்கள். தைராய்டு சுரப்புக் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பு அதிகரிப்பதாலும் உடல் பருமன் அதிகரிக்கும். கூடுதல் உடல்பருமனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வாதம், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன.

உடல்பருமனுக்கு எளிய சித்த மருத்துவம்:

இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol) ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.

கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.

சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.

பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.

எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள் ஸ்பூனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.

சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:

தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.

நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:

இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள்.

தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.

🚶🏽‍♂HAROON SB

திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து

திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து

இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் முக்கியம். அதைப்போல் நமது பிரச்சனைகளை சரியாகத் தீர்க்கும் விதமாக எதையும் கையாள வேண்டியுள்ளது. இதற்கு உடலும் உள்ளமும் முழுத் தகுதியுடன் இருந்தால் தான் இவை சாத்தியமாகும். உடலும் உள்ளமும் முழுத்தகுதியுடன் விளங்குவதற்கு, அன்றாட வேலைகளை ஒரு ஒழுங்கு முறையுடன் செய்து வர வேண்டும். முறையான மற்றும் கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையை உடலளவில் மிகவும் வசதியான முறையில் வாழ்கிறோம். ஆனால், மனதளவில் மிகவும் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை தான் வாழ்கிறோம். இத்தகைய வாழ்க்கை முறை சீக்கிரமாகவே முதுமையாக உணர வைத்து விடும் அல்லது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

திரிபலா என்றால் என்ன?

திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் (Emblica officinalis),கடுக்காய் (Terminalia chebula) மற்றும் தான்றிக்காய் (Terminalia belerica) ஆகும்.

திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?

திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.

நோய் எதிர்ப்புச் சக்தி

ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் 'ஆன்டிபாடி' (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்

உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான "கட்டற்ற காரணிகளை" (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.

செரிமானமின்மை

செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.

மலச்சிக்கல்

திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.

வயிற்றுப் பூச்சிகளும் தொற்றுகளும்

வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.

இரத்தசோகை

இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்).

சர்க்கரை நோய்

திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் (langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது.

உடல்பருமன்

இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.

சருமப் பிரச்சனைகள்

இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.

சுவாசக் கோளாறுகள்
சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சைனஸ் என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. மேலும் நமது சுவாசப்பாதையிலுள்ள சளியில் பாக்டீரியாக்கள் வளராமலும் இது தடுக்கிறது.

தலைவலி

தலைவலிக்கு நிவாரணமாகவும் திரிபலா பயன்படுகிறது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது.

புற்று நோய்

புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் (metastasis) வளரும் அபாயத்தையும் குறைக்கிறது.

🚶🏽‍♂HAROON SB

முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய* கீரையாகும்.

முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய* கீரையாகும்.

தமிழ்நாட்டு கிராமங்களில், குறிப்பாக தஞ்சை மாவட்ட கிராமங்களில் எல்லோர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.

இதை தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.
குறைந்தது மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.

கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

பிரசவம் என்றாலே மகப்பேறு மருத்துவமனைகள் பல ஆயிரம் பணச் செலவு

> என்றாகிவிட்ட இந்தக்காலத்தில் சுகப்பிரசவம் ஆக முடக்கற்றான் இலையைத் அம்மியில்
> வைத்து மை போல் மைய அரைத்து, பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில்
> கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ,
> களைப்போ தோன்றாது. இது கை கண்ட முறையாகும்என்றால் யாராவது நம்புவார்களா
> ஆனாலும் இதை பதிவு செய்துவிடுகிறேண்..
> மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக -: வாரம் ஒருமுறை முடக்கற்றான் இரசம்
> வைத்துச் சாப்பிட்டு வந்தால்உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு,
> வாதம்,மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.

> ரசம் தயாரிக்க ஒரு சின்ன டிப்ஸ்
> கை பிடியளவுமுடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு டம்ளரளவு தண்ணீர்
> விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம்
> வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து இரசம்
> தயாரிக்க வேண்டும்.
> மலம் சரிவரபோக ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை வெள்ளைப் பூண்டு
> பற்களில் ஐந்து நசுக்கி இதில் போட்டு அரைது தேக்கரண்டி அளவு மிளகை
> ஒன்றிரண்டாகஉடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு
> அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சியகஷாயத்தை வடிகட்டி
> விடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால்
> ஒரு எலுமச்சப் பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம்
> சாதம்மட்டும் சாப்பிடலாம்.
> மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்ப்பட முடக்கற்றான் இலையை வதக்கி அடி
> வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு பெண்களுக்கு ஒழுங்காக வரும்.
> மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி சுண்ணாம்பு,
> பாஸ்பரம் படிவங்கள்தான் பாரிச வாயு எனும் கைகால் முடக்கு வாதம் ஆகும்
> இவைகளைத் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.
> வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம்
> ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து
> வரவும் பின் முடி கொட்டுவது நின்று விடும் நரை விழுவதை தடுக்கும்.
> கருகருவென முடி வளர தொடங்கும்
> இதன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கீல்களில் வரும் வாதத்திற்கு
> வீககத்திற்க்கு வைத்துக் கட்ட குணமாகும் .

🚶🏽‍♂HAROON SB

ஃப்ரிட்ஜில் உள்ள தீமைகள்!

ஃப்ரிட்ஜில் உள்ள தீமைகள்!

முடிந்தவரை எந்த காய் கனிகல் கீரைகளை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டாம் இயற்கை உணவை இயற்க்கையாகவே உண்ணவும் பதப்படுத்த வேண்டாம்

ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே ஃப்ரிட்ஜில் பதப்படுத்த வேண்டும். எல்லா வகையான உணவுகளையும் பதப்படுத்துவதால் அது உங்கள் முழு ஆரோக்கியத்தையும் கெடுத்து உடல் உபாதைகளை தரும். ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரியான் என்ற வாயு பதப்படுத்தும் காய்கறி மற்றும் பழங்களுக்குள் ஊடுருவி அவற்றின் தன்மையை மாற்றி விடும். மேலும் இவற்றின் மீது ஏதேனும் கிருமிகள் ஒட்டி கொண்டு இருந்தால் அதனையும் அதிக காலம் உயிர் வாழ செய்யும்.

தக்காளியை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா?

தக்காளியை ஃப்ரிட்ஜில் வைத்து சமைத்து உண்டால் அதன் தன்மை முற்றிலும் மாறி சக்கைக்கு ஈடாகி விடும். சிலர் தக்காளியை பல நாள் அப்படியே இருக்க வேண்டும் என்பதற்காக ஃப்ரிட்ஜில் வைப்பார்கள். இது அவற்றில் உள்ள என்சைம்களில் வேதி வினை புரிந்து மாற்றி விடுகிறது. அத்துடன் இதில் உள்ள 65 % ஊட்டசத்துக்கள் குறைந்தும் விடுகிறது. ஃப்ரிட்ஜில் வைத்த தக்காளியில் சுவை குறைந்து, மணம் இல்லாதவாறு மாறிவிடும். அதிக நாள் ஃப்ரிட்ஜில் வைத்த தக்காளியை சமைத்து சாப்பிட்டால் சில சமயங்களில் குடல் சார்ந்த பிரச்சினைகள் கூட வரலாம்.

தக்காளிக்கு மட்டும்தானா இது?

பொதுவாக ஃப்ரிட்ஜில் காய்கறிகள் மற்றும் பழங்கள் வைப்பது அவற்றின் ஊட்டச்சத்துக்களின் தன்மையை குறைத்து விடும். ஃப்ரிட்ஜில் வைப்பதால் பழத்தின் தன்மை மாறி, தோல் இறுகி விடும். இவற்றின் சுவை மற்றும் அமிலத்தில் மாற்றம் பெரும். இதனால் நல்ல ஆரோக்கியமான உணவு நன்மையற்ற பொருளுக்கு சமமாக கருதப்படும். தக்காளியை மட்டும் ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது என்றில்லை, இதை போன்றே பல்வேறு உணவு வகைகளை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.

ஃப்ரிட்ஜில் வைக்க கூடாதவை.

மூலிகைகள் போன்றவற்றை கட்டாயம் ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது. ஏனெனில் அவற்றின் மருத்துவ தன்மை மாறக்கூடும். மேலும் சில சமயங்களில் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும். அவகேடோ, வாழைப்பழம், எலுமிச்சை, ஆப்பிள், பெரிஸ் போன்ற பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்க தவிர்க்க வேண்டும். வெங்காயம், தக்காளி, உருளை கிழங்கு, பூண்டு, மிளகு, வாசனை பொருட்கள், ஜாம், ஊறுகாய், பிரட் ஆகியவற்றையும் பதப்படுத்த கூடாது.

ஃப்ரிட்ஜில் தட்பவெப்பம்.

எந்த வகை ஃப்ரிட்ஜாக இருந்தாலும் குறிப்பிட்ட அளவே அதன் தட்பவெப்பம் இருத்தல் வேண்டும். அதிக படியான தட்பவெப்பம் உணவு பொருட்களின் தன்மையை மாற்றி விடும். உணவுகள் நீண்ட நாட்களுக்கு பதப்படுத்தப்பட்டு அதன் பிறகு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எந்த உணவாக இருந்தாலும் அதற்கென்று சில கால அளவு இருக்கிறது. அதே போல் ஒவ்வொரு உணவிற்கும் தனி தனி தட்பவெப்பமும் உள்ளது. அதற்கேற்றாற் போல ஃப்ரிட்ஜின் தட்ப வெப்பத்தை வைத்தல் சிறந்தது.

எது சிறந்தது?

எப்போதும் சுத்தமான ஃபிரெஷ் உணவுகளே உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. காய்கறிகள் என்றாலும் பழங்கள் என்றாலும் அதன் தன்மை அவற்றின் கால அளவு மற்றும் பதப்படுத்தும் முறையை பொருத்தே தீர்மானிக்க படும். எப்போது உணவு உண்டாலும் அது பதப்படுத்தாத உணவா ? என்பதை அறிந்து உண்ணவும். அத்துடன் வெளியில் அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.

🚶🏽‍♂HAROON SB

மாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..?*

*மாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..?*

*கைமேல் பலன் தரும்குறிப்புகள்..!*

குளிர் காலம் ஆரம்பிச்சாச்சு. அடுத்து வீட்டில் ஒவ்வொருவராய் மாறி மாறி சளி, காய்ச்சல் என வந்து குளிரோடு உடல் நிலையும் பாதித்து இம்சை பண்ணும். குளிர்கால தட்பவெப்பம் கிருமிகள் பெருக்கத்திற்கு ஏதுவான காலமென்பதால் விரைவில் நமது உடலில் புகுந்து நோய்களை உண்டாக்குகின்றன.

சளி பிடித்தால், நமது உடலிலுள்ள வெள்ளையணுக்களே அக்கிருமிகளுடன் சண்டையிடும். அவற்றை பூஸ்ட் அப் செய்வது போல் நமது மூலிகைகளைய அவற்றிற்கு தரும் போது வெள்ளையணுக்கள் பலம் பெற்று கிருமிகளை வெளியேற்றும். இது நடப்பதற்கு குறைந்தது 3 -5 நாட்களாகும்.

இப்படி இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளை நாம் மாத்திரைகள் கொண்டு தடுக்கும்போது, வெள்ளையணுக்கள் எதிர்த்து போரிடாமல் சோம்பேறியாகும். நமது உடல் எல்லாவ்ற்றிற்கும் மாத்திரைகளையே எதிர்பார்க்கும். ஆகவே முடிந்தாரை மாத்திரைகளை தவிர்த்து இயற்கை வைத்தியங்களை முயற்சியுங்கள்.

*குறிப்பு 1 :*

கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.

*குறிப்பு 2*

ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

*குறிப்பு 3 ;*

ஒரு டம்ளர் அன்னாசிச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு மறையும் சளித்தொல்லை குணமாகும்.

*குறிப்பு-4 :*

வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

*குறிப்பு- 5 :*

மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

*குறிப்பு- 6 :*

கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்.

*குறிப்பு- 7 :*

வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

🚶🏽‍♂HAROON SB

Friday, August 31, 2018

1⃣சித்த சக்தி துணை உணவு

*1⃣சித்த சக்தி துணை உணவு*
🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴
      *இந்த துணை உணவு தலைசிறந்த உணவியல் நிபுணர்கள் அறிஞர்கள் முன்னிலையில் அற்புத இலைகள், சக்தி மிகுந்த மரப்பட்டைகள், வீரிய மிக்க விதைகள் & குரு மகத்துவத்துடன் தயாரித்த அற்புதமான ஒரு துணை உணவு*

*சித்த சக்தி துணை உணவில் உள்ளவை*
🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷
*1⃣சீந்தில் கொடி*,
*2⃣மஞ்சள் கரிசலாங்கண்ணி*
*3⃣வெள்ளை கரிசலாங்கண்ணி*
*4⃣வெள்ளருகு*
*5⃣லவங்கப்பட்டை*
*6⃣வெண்டை விதை*
*7⃣முருங்கை விதை*
*8⃣குருஉப்பு*

*தீரும் உடல் பிரச்சனைகள்*
🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈

*👉🏻சர்க்கரை (நோய்) குறைபாடு*
*👉🏻தோல் அரிப்பு*
*👉🏻மலச்சிக்கல்*
*👉🏻நரம்பு தளர்ச்சி*
*👉🏻மூட்டு வலி*
*👉🏻கர்ப்பப்பை குறைபாடுகள்*
*👉🏻தைராய்டு*
         *மற்றும் நாட்பட்ட எல்லா நோய்களையும் விரட்டி அனைத்து உயிரணுக்களையும் சமச்சீராக உற்பத்தி செய்து ராஜ உறுப்புகள் அதன் துணை உறுப்புகளையும் வலிமை செய்து ஆரோக்கியத்தை பாதுகாக்க சித்த சக்தி துணை புரியும்*

*(மேலும் விபரங்கள், அலைபேசி (or) நேரில் பெறவும்)*

💚💚💚💚💚💚💚💚💚💚
*2⃣சித்த ஆனந்த குளிகை...*
*(SIDDHA AANANDHA KULIKAI)*
🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈
*இதன் பயன்கள் :*

*😀தொப்பை குறைய,எடை குறைய,*
*☺ஜுரண சக்தி வலிமை பெற,* *தைராய்டு சீராக,கொழுப்பு* *சமமாக,சர்க்கரை குறைபாடு,இருதய குறைபாடு* *ஆரோக்கியத்தை பாதுகாக்க துணை புரிகிறது...*

*பயன்படுத்தும் முறை:*

        *உணவுக்கு பின் 1 விதம் மூன்று வேளை சாப்பிட வேண்டும்*

*ஒரு மாதத்திற்கு ஒரு பாக்கெட் போதுமானது...*

*இதில் உள்ள பொருட்கள்...*

*👉🏻மாதுளை,*
*👉🏻முப்பு (குரு உணவு),*
*👉🏻சுக்கு,*
*👉🏻பனைவெல்லம்,*
*👉🏻முந்திரி,*

*விலை 50 கிராம் 203 மட்டும்*
💚💚💚💚💚💚💚💚💚💚

*3⃣சித்த சக்தி கூந்தல் எண்ணெய்*
*(Sidha Sakthi Hair Oil)*
🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈
*இதன் பயன்கள்:*☺

*1) 35 வயதுக்குள் இருப்பவர்களுக்கு இளநரை மாறி கருமை நிறம் கிடைக்கும்,*
*2) கூந்தல் நன்றாக வளரும்,*
*3) பொடுகு நீங்கும்,*
*4) முடி உதிர்தல் நீங்கும் ,*
*5) சைனஸ் உள்ளவர்களும் உபயோகிக்கலாம்,*
*6) குடும்பத்தில் அனைவரும் உபயோகிக்க சிறந்தது...* 😀😀

😁 *இந்த எண்ணெயில் கலந்திருப்பவை:*

*👉🏻கரிசலாங்கண்ணி,*
*👉🏻செம்பருத்தி,*
*👉🏻முந்திரி,*
*👉🏻சீரகம்,*
*👉🏻ஆலிவேரா,*
*👉🏻குங்குமப்பூ,*
*👉🏻தேங்காய்,*
*👉🏻குரு முப்பு,*

*100ml 203 ரூபாய் மட்டும்*
💚💚💚💚💚💚💚💚💚💚
*4⃣சித்த சக்தி குளியல் பொடி..*
*(SIDHA SAKTHI BATH POWDER...)*

*👉🏻சந்தனம்,*
*👉🏻பாசிப்பயறு,*
*👉🏻பூலாங்கிழங்கு,*
*👉🏻துளசி,*
*👉🏻வேம்பு,*
*👉🏻மஞ்சள்,*
*👉🏻ரோஜா இதழ்,*

   *போன்ற 100% இயற்கை பொருட்களால் ஆனது...*

*பயன்படுத்தும் முறை:*
    *தினமும் 10கிராம் அளவு குளியல் பொடியை நீரில் கலந்து உடல் முழுவதும் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால் உடலுக்கு நறுமணமும், புத்துணர்வுடன் தோலுக்கு பாதுகாப்பு தரும்....*
                                                                                                                                                                                                                   *1 பாக்கெட் விலை ரூபாய்.50 மட்டும்.*                                                                                                                                           *ஆயற்பாடி இயற்கை மருத்துவ மனை அறக்கட்டளை*
*சென்னை, வேளச்சேரி கிளை*

*திருமதி. நான்சி ந. M.D. (Acu).,
*📞9382747569

வாழ்க வளமுடன்                                                                                                                                                                      வாழ்க நலமுடன்...........!                                                                                                                                                                    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.......!

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...