Friday, August 10, 2018

சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற, இந்த ஜூஸை குடிங்க.

சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற, இந்த ஜூஸை குடிங்க...

நம் உடலில் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் மிகவும் முக்கியமான பணிகளை செய்கின்றன. அதுவும் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்து, உடலினுள் ஓடச் செய்வதால், இந்த உறுப்புக்களில் கழிவுப் பொருட்கள் அல்லது டாக்ஸின்களின் அளவு நாம் நினைப்பதை விட அதிகமாகவே இருக்கும். மேலும் அன்றாடம் நாம் அனைவருமே ஆரோக்கியமான உணவுப் பொருட்களை மட்டும் தான் சாப்பிடுகிறோமா என்ன? நிச்சயம் இல்லை

இப்படி ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களையும் உண்பதால், உடலினுள் ஏராளமான அளவில் கழிவுகள் தேங்க வாய்ப்புள்ளது. பலரும் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை சுத்தம் செய்வது என்பது கடினமான ஓர் செயல்முறை என்று நினைக்கலாம். ஆனால் இந்த உறுப்புக்களை சுத்தம் செய்வதற்கு சரியான பொருட்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தினாலே போதும்.

இக்கட்டுரையில் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை சுத்தம் செய்யும் ஜூஸ்கள் மற்றும் அந்த ஜூஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களின் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் உடலில் இருந்து நச்சுப் பொருட்கள் வெளியேறுவதோடு, கொழுப்புக்களும் கரைந்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும். சரி, இப்போது சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை சுத்தம் செய்யும் ஜூஸ்கள் குறித்து காண்போமா...!

போதுமான தண்ணீர் குடிப்பது அவசியம் :
பொதுவாக எந்த ஒரு உறுப்பையும் சுத்தம் செய்ய ஆரம்பிக்கும் போது, முதலில் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக 2-3 லிட்டர் தண்ணீரை தினமும் குடிக்க வேண்டியது அவசியம். இப்படி ஒருவர் போதுமான அளவு நீரைக் குடிப்பதால், உடலில் உள்ள டாக்ஸின்கள் எளிதில் வெளியேறும். ஆகவே உங்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தம் செய்ய நினைத்தால், முதலில் அதிகளவு நீரைக் குடியுங்கள். அடுத்ததாக, ஜூஸ்களில் சேர்க்கப்படும் பொருட்களின் நன்மைகள் குறித்துக் காண்போம்.

தர்பூசணி :
தர்பூசணி சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தும். ஏனெனில் இதில் வளமான அளவில் வைட்டமின் சி, பேண்டோதெனிக் அமிலம், காப்பர், பளோடின், பொட்டாசியம், வைட்டமின் ஏ (கரோட்டினாய்டுகள்), வைட்டமின் பி1, வைட்டமின் பி6 மற்றும் மக்னீசியம் உள்ளது. அதோடு, தர்பூசணியில் நீர்ச்சத்தும் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.

ஸ்ட்ராபெர்ரி :
சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்த டாப் 50 உணவுகளைப் பட்டியலிட்டனர். அந்த பட்டியலில் ஸ்ட்ராபெர்ரியும் ஒன்று. ஆய்வாளர்கள் ஸ்ட்ராபெர்ரி, சர்க்கரை மற்றும் இரத்த சர்க்கரை அளவிற்கும் இடையேயான உறவு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அதில் அதிகளவு சர்க்கரை, தேவையில்லாத இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பது தெரிய வந்தது. ஆனால் ஸ்ட்ராபெர்ரி பழம் உயர்ந்து இருக்கும் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதாக தெரிய வந்தது. எனவே உங்கள் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள நினைத்தால், ஸ்ட்ராபெர்ரி பழங்களை சாப்பிடுங்கள். அதோடு இப்படி இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்வதற்கு காரணமாக பாலிஃபீனால்கள் தான் காரணம் எனவும் கண்டறிந்தனர். ஆகவே சர்க்கரை நோயாளிகள் இந்த ஸ்ட்ராபெர்ரி பழத்தை அச்சமின்றி அன்றாடம் ரசித்து ருசிக்கலாம்.

மாம்பழம் :
மிகவும் பிரபலமான மாம்பழம், அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் பழம். இது நல்ல சுவையுடன் இருப்பதோடு, நல்ல ப்ளேவரையும் கொண்டது. அதோடு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகளையும் தன்னுள் கொண்டது. மாம்பழத்தில் டயட்டரி நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் பாலி பீனோலிக் ஃப்ளேவோனாய்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவில் நிறைந்துள்ளது. புதிய ஆய்வு ஒன்றில், மாம்பழத்தில் குடல், மார்பகம், இரத்தம், புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுத்து பாதுகாப்பு அளிக்கும் பண்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஏற்கனவே பல்வேறு சோதனை ஆய்வுகளிலும், மாம்பழத்தில் உள்ள பாலிபீனோலிக் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், மார்பகம் மற்றும் குடல் புற்றுநோயைத் தடுப்பதாக கண்டறியப்பட்டிருந்தது.

மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் ப்ளேவோனாய்டுகளான பீட்டா-கரோட்டீன், ஆல்பா-கரோட்டீன் மற்றும் பீட்டா-கிரிப்டோஜாந்தின் போன்றவை அதிகளவில் உள்ளது. இத்துடன் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளும் உள்ளது. மாம்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ சருமத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க தேவையானவையாகும். இதில் உள்ள கரோட்டீன்கள் நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பளிக்கும். நற்பதமான மாம்பழத்தில் பொட்டாசியம் அதிகளவில் உள்ளது. 100 கிராம் மாம்பழத்தில் 156 மிகி பொட்டாசியமும், 2 மிகி சோடியமும் உள்து. பொட்டாசியம், உடலில் திரவங்களின் அளவைக் கட்டுப்படுத்த மற்றும் செல்களுக்கு தேவையான சத்தாகும். மாம்பழத்தில் உள்ள வைட்டமின் சி, ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும்.

சிட்ரஸ் பழங்கள் :
சிட்ரஸ் பழங்களில் கல்லீரலை சுத்தம் செய்யவும், நல்ல நிலையில் வைத்துக் கொள்ளவும் உதவும். ஒருவர் சிட்ரஸ் பழங்களை அன்றாடம் சாப்பிட்டால், அது தலைவலி, நாள்பட்ட சோர்வு, அடிவயிற்று பிரச்சனைகள், சரும பிரச்சனைகள் போன்றவற்றில் இருந்து விடுவிக்கும்.

கேரட் :
கேரட் கண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது தெரியும். அதோடு கேரட் சூப்பர் உணவுகளுள் ஒன்றும் கூட. ஏனெனில் இது கொலஸ்ட்ராலைக் குறைக்கும், மாரடைப்பில் இருந்து தடுக்கும், குறிப்பிட்ட புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்கும் மற்றும் இளமையிலேயே முதுமையாக காட்சியளிப்பதைத் தடுக்கும்.

புதினா :
புதினா குளிர்ச்சி நிறைந்தது. இது உடலை சுத்தம் செய்வதோடு, வேறு பல ஆரோக்கிய நன்மைகளையும் தன்னுள் கொண்டது. அதில் தலைவலி, அஜீரண கோளாறு, சுவாச பிரச்சனைகள், குமட்டல், காய்ச்சல், வயிற்று வலி மற்றும் வயிற்று பிடிப்புக்களில் இருந்து விடுவிக்கும். புதினாவில் மென்தால், மென்தோன் மற்றும் மென்தில் எஸ்டர் உள்ளது. இதனால் தான் இது நல்ல நறுமணத்துடன், பல்வேறு பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் ஜூஸ்! தயாரிக்கத் தேவையான பொருட்கள்:
* ஸ்ட்ராபெர்ரி - 1 கப்
* எலுமிச்சை - 1
* தர்பூசணி - 5 கப்
* புதினா - சிறிது

தயாரிக்கும் முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஜூஸை தினமும் ஒரு டம்ளர் என ஒரு 10 நாட்கள் தொடர்ந்து குடிக்க வேண்டும். இதனால் உங்கள் சிறுநீரகங்கள் சுத்தமாக இருக்கும்.

கல்லீரலை சுத்தம் செய்யும் ஜூஸ்! தேவையான பொருட்கள்:
* தோல் நீக்கப்பட்ட எலுமிச்சை - 1
* தோல் நீக்கப்பட்ட மாம்பழம் - 1 கப்
* தோல் நீக்கப்பட்ட ஆரஞ்சு - 3
* தோல் நீக்கப்பட்ட கேரட் - 3

தயாரிக்கும் முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் என 10 நாட்கள் குடித்து வர, கல்லீரலின் மூலை முடுக்குகளில் உள்ள கழிவுகள் வெளியேறி, கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

S.SETHURAMAN.B.Sc

தமிழ் நாட்டில் உத்திரமேரூர் கிருஸ்தவ கருணை இல்லத்தில்( St. Joseph’s Hospice) ஆதரவளிப்பதாகத் தெரிவித்து முதியவர்களைக் கொன்று எலும்புகள் விற்பனை செய்தவதாக வரும் செய்திகளில் எவ்வளவு உண்மை உள்ளது??? எழும்ப வச்சு என்ன அவ்வளவு சம்பாரிக்க போகிறார்கள்??? இதை பிஜேபி வேண்டும் என்றே பெரிதாக்கி சில நல்ல தொண்டு நிறுவனங்களையும் நாசம் செய்ய துடிப்பது நியாயமா????{கேள்வி : பெயர் சொல்ல விரும்பாதா கிருஸ்தவ நபர்}

மனித உடலின் விலை சிலர் 2,00,000 ரூபாய் அன்று பரப்புகிறார்கள் - 3,00,000 ரூபாய் அன்று பரப்புகிறார்கள். இப்படிப் பரவும் செய்திகளுக்கு நான் முதலில் பதில் சொல்லிவிடுகிறேன்...

பல்லுடன் இருக்கக்கூடிய மனித மண்டை ஓட்டின்(skull with teeth) விலை சுமார் 75,000 முதல் 1,00,000வரை கிடைக்கும் - நடுதண்டுவட எலும்பு விலை 30,000முதல் 50,000வரை போகும்... மொத்த மனித உடலின் எலும்பின் விலைமட்டும் சுமார் 1,67,700ரூபாயில் இருந்து 2லட்சம் வரை மேற்கத்திய நாடுகளில் தாராளமாக கிடக்கும் என்று கூறுகிறது இன்னொரு ஆய்வுக் கட்டுரை. அந்தக் கட்டுரை வெளியான ஆண்டு 2007. 2007களின் முன்பு இருந்தே தெற்காசியாவில் முக்கியமாக இந்தியாவில் இருந்து இறந்த மனிதர்கள் உடல் கள்ள சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் , அது முக்கியமாகத் தொண்டு நிறுவனம் என்ற பெயரில் இயங்கும் கூட்டங்கள் தான் செய்கின்றன என்பதும் உலகம் அறிந்த உண்மை. (சிலர் இதை எதோ புதிய செய்தி போல் நினைக்கிறார்கள். இது காலம் காலமாக இங்கே கேள்வி கேட்பார் இல்லாமல் நடக்கிறது.)

இன்னும் ஒரு படி மேலே சென்று சொல்லவேண்டும் என்றால் இன்றைய தேதியில் உடல் இறந்த உடனே அதன் இதயம்(Heart) , நுரையீரல்(Lung) , குடல்(Intestine) , Kidney(சிறுநீரக), கணையம்(pancreas) , கல்லீரல்(liver) இந்த முக்கியமான உறுப்புகளைச் சரியான நேரத்தில் எடுத்து உலக சந்தைக்கு கொண்டு செல்ல முடியும் என்றால் இதன் மொத்த மதிப்பு சராசரியாக உலக 75,00,000லட்சம். இங்கே இறந்த உடல் என்று பலர் மிகக் குறைவாக எடை போடுகிறார்கள்.

ஆனால் இந்த மதிப்பு கூட மிக மிகக் குறைவு என்பேன்... எதனால் ?????

இந்த கிட்னி இருக்குல அத மட்டும் நீங்க சரியாக எடுக்து அமெரிக்காவில் ஒரு மருத்துவமனைக்கு ஒருவரின் அறுவை சிகிச்சை தேவைக்கு இல்லை ஆராய்ச்சிக்கு கொண்டு செல்ல முடியும் என்றால் அதன் அமெரிக்க சந்தை மதிப்பு சுமார் 1,70,43,000 ரூபாய். அதாவது 1கோடியே 70லட்சம் இந்த கிட்னி மட்டும். அதுவும் அதிகம் சந்தையில் டிமாண்ட் உள்ள மனித பாகம் இது. இப்படி ஒவ்வொரு பாகத்தின் விலையையும் சரியாக நீங்கள் எடுத்து விற்க முடியும் என்றால் அந்த உடலின் மொத்த மதிப்பு சுமார் 3.5கோடி.. (நீங்கள் ஒவ்வொரு மனித பாகத்தின் விலையையும் பொறுமையாக ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு விலை என்று தேடி படிக்கவும். விலை நாடுகளுக்கு நாடு மாறுபடும். நான் கூறுவது ஒரு ஐரோப்பிய அமெரிக்க சந்தை மதிப்பு.) {அனைத்து நாடுகளிலும் சட்டப்பூர்வமானது இல்லை தான் என்றாலும் இதன் கள்ள சந்தை என்றுமே நடந்து வந்துள்ளது.}

இதுவரை முதலில் புரிகிறதா ??????
-----------------------------------------------------
இப்போது நமது ஊர் பிரச்சனைக்கு வருவோம்..

நான் மேலே சொன்ன விஷயத்தை வைத்து இயங்கும் இந்த கேடு கெட்ட கூட்டத்துக்கு இந்தச் சமூகத்தில் யார் மிக எளிய அதே நேரம் பயனுள்ள இலக்கு என்று யோசித்தால் - அனாதையாக கைவிடப்பட்ட பெரியவர்கள் தான். அதுவும் இந்த சாகும் நிலையில் உள்ள ஒரு மனிதன் தான் மிக மிக எளிமையான இலக்கு. 10கிராம் தங்க செயினுக்கு காதையே அறுத்துச் செல்லும் கேடு நிறைந்த சமூகத்தில் - 1 கிலோ தங்கத்தின் மதிப்பாக இருக்கும் இந்த வயதான மனிதனை விட்டு வைப்பார்களா என்ன???? அதுவும் கேள்வி கேட்பார் இல்லாத மனிதன் வேறு. வயதான சாகும் தருவாயில் உள்ளவர்கள் மீது மட்டும் அக்கறை கொள்ளும் குணமே விசித்திரமாக உள்ளது...

இந்த விதமான வயதானவர்களை மட்டும் தேடி அலையும் இந்தக் கருணை இல்லத்தின் கருணை மீது எப்போது நம்பகத்தன்மை இழக்கிறோம் என்றால் இந்த குறிப்பிட்ட கருணை இல்லம் முதலில் முறையாக அங்கீகாரம் பெற்ற அமைப்பு இல்லை. இரண்டாவது இந்த அமைப்பில் இறந்தவர்கள் விவரமும் கொடுக்கப்படவில்லை. மூன்றாவது இவர்கள் இடத்தில் இருந்து வரும் வயதானவர்கள் கொடுக்கும் தகவல்கள்.

------------------------------------------------------
என் மனம் நொந்து கூறுகிறேன்

ஒரு நிமிடம் இதை மட்டும் யோசிக்கவும்: வயதான காலத்தில் நியாபகமறதி(alzheimer) காரணமாக காணாமல் போகும் ஒரு 75வயது மதிக்க தக்க அழகான பார்வதி பாட்டி - எங்கோ ஒரு சாலையில் எப்படி செல்வது என்று தெரியாமல் நிற்க - இந்த வேணில் இந்த கேடுகெட்ட கூட்டம் பிடிச்சுட்டு போனா - பாவம் எப்படி தப்பி வரமுடியும் அந்த மனிஷியால்? அட நீங்கள் சென்று கேட்டால் கூட தங்கள் சொந்த விவரம் கூட ஒழுங்க சொல்ல தெரியாது இந்த பார்வதி போன்றவர்களுக்கு? 1500பெரியவர்களில் எத்தனை பார்வதி அடங்கும் என்று நினைக்கும் பொது மனம் வேதனைபடவில்லையா உங்களுக்கு?? அப்படி ஒரு பார்வதி பாட்டி உங்கள் அனைவரது வீட்டிலும் உண்டு... நாளை நீயும் பார்வதி ஆவாய் மனதி கொள்.
{இது போல ஒவ்வொரு பெரியவர்களுக்கும் ஒரு கதை உண்டு. குழந்தைகள் போல தான் இவர்களும் முதலில் அதை புரிந்து கொள்.}
-------------------------------------------------------

இந்தச் செய்தியை பிஜேபி காரர்கள் பெரிதாக்குவதாகக் கூறும் அனைவருக்கும் நான் கேட்கிறேன் ஒரு தலித் இறந்தால்? ஒரு சிறுபான்மையினர் கொலை என்றால் என்ன கூச்சல் இங்கே நடக்கும்??? தலித் என்று முன்னிறுத்தி இந்துக்களை பிரிக்க முற்படும் செய்தி ஊடகங்கள்- இது போல விசயங்களால் ஒன்ருபட்டுவிட கூடாது என்று நினைகிறதோ? கம்யூனிஸ்ட் ஊடகங்கள் தரங்கெட்ட தனம் அல்லவா இது.

கேள்வி கேட்பார் இல்லாமல் சுமார் 1500பெரியவர்கள் காணாமல் போகும் போது எந்த ஒருவனும் வாயைத் திறக்க மாட்டோம் என்று இருக்கும் இந்த அனைத்து நடுநிலை வேஷம் தரித்த அனைவரையும் நான் கேட்கிறேன் இதே ஒரே ஒரு கொலை ஏதாவது ஒரு இந்து மடத்தில் நடந்தால் இந்நேரம் எத்தனை விவாத மேடைகளைக் கூட்டி இருப்பான் இந்த புதிய தலைமுறை ???? இந்த news 7?????

இப்போது எதனால் பேச மறுக்கிறார்கள் இந்த அனைத்து ஊடகங்களும்?????? எங்கே இருக்கிறான் சீமான் என்ற செபாஷ்டீன் ???? எங்கே இருக்கிறான் மற்ற போராளிகள்??????

ஆக இந்து மதம் சார்ந்த ஒற்றுமையைக் கெடுக்க ஏதாவது செய்தி என்றால் துள்ளி குதிக்கும் இதே ஊடக போராளிகள் - இதை மட்டும் பேச மறுப்போம் என்றால் என்ன அர்த்தம் இதில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது????? உண்மையில் பிஜேபி அல்ல மதவாதம் தூண்டுபவர்கள் ; ஒரு மதம் என்றால் ஒரு வேஷம் இன்னொரு மதம் என்றால் பகுத்தறிவு கூட்டம் முதல் போராளி வரை ஒளிந்து கொள்வான் என்றால் இவர்கள் தானே அமைதியாய் இருக்கும் இந்துக்களைத் தூண்டுகிறார்கள் என்று அர்த்தம்?????எங்கே இந்த திக????? பெரியார்வாதிகள் எங்கே????? கடவுள் இல்லை என்று பகுத்தறிவு பெரிய அந்தக் கனிமொழி வாய் இப்போது மட்டும் ஊமை ஆகிவிட்டதா???? ஈஷா மையம் என்று புலன் விசாரணை நடத்திய எந்தப் போராளி - அதே புலன் விசாரணையை இங்கே நடத்துவான்????

நீயா நானா ஆரம்பித்து - News7 வரை எங்கும் எதிலும் கிருஸ்தவர்கள் ஆதிக்கம் மூலம் மறைமுகமாக இந்துமக்கள் மீது, அவர்கள் நம்பிக்கை மீது தாக்குதல் நடத்துவதாகச் சந்தேகம் கொள்ள போதுமான ஆதாரம் இங்கே உண்டு. எனவே பிஜேபி இந்த விசயத்தை முன்வைத்து உங்கள் அனைவரின் நடுநிலை வேஷத்தைக் கேள்வி கேட்பதில் எந்தத் தவறும் இல்லை. 1500 பேர் எந்த வித அடையாளமும் இல்லாமல் காணாமல் போன விசயத்தில் வாய் திறக்காமல் - 1தற்கொலைக்கு ஆர்ப்பாட்டம் செய்யும் அந்தப் புத்தியை இவர்கள் சந்தேகம் கொள்வதில் 100% நியாயம் இருக்கிறது தானே.

இந்த NGO அட்டுழியம் நாளை ஜோசப் விஜய் படம் எடுப்பாரா இல்லை அதை கதையாக கொண்டு அட்லி என்ற கிருஸ்தவர் தான் இயக்குவாரா???? எல்லா விசயத்துக்கும் குரல் கொடுக்க சொல்லி ரஜினியை அவமானம் செய்யும் எவனாது இதற்கு ஜோசப் விஜய் பேச சொல்லுங்க உங்கள் நேர்மையை நான் பாராட்டுவேன்.

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இப்போ பிரச்சனவை பேச சொல்லுங்க???? எஸ் ஆர் சற்குணத்தை பிடிச்சு நாலு வாங்கு வாங்குங்க பார்க்கலாம்..

எனவே இந்த விஷயத்தை பிஜேபி அதன் ஆதரவாளர்கள் தாராளமாக எழுப்பலாம்(மததுவேசம் வேண்டியது இல்லை).
-------------------------------------------------------------

இறுதியாக :

இங்கே மதம் கொண்ட அரசியல் என்ற நிலைக்கு மக்களைத் தள்ளுவது பிஜேபி அல்ல. திமுக திக இரண்டும் தான். இந்துக்களை மட்டும் பகுத்தறிவு பேசுவோம் மற்றவர்கள் என்றால் அனைத்தையும் மூடிக்கொண்டு சிறுபான்மையினர் உரிமை பேசுவோம் என்று திரியும் கம்யூனிசத் , பெரியாரிய கூட்டம் செய்யும் அப்பட்டமான மதசார்பு வேடம் தான் காரணம் இந்தவிதமாக நேரங்களில் பிஜேபி ஆதரவாளர்கள் கொதிப்படைய. நீங்க முதலில் வாய தொறந்தா ஏண்டா பிஜேபி வாய தொறக்க போறான்???? வாயை தொரங்கடா????

சரி அவனுக புத்தி அப்படி.... நான் நடுநிலை வேஷம் போடும் மற்றவர்களைக் கேட்கிறேன் இதற்கு நீங்கள் குரல் கொடுக்காதது ஏன்???? உங்கள் வீட்டுத் தாத்தா பாட்டிக்குச் சாகும் முன் அனைத்து உறுப்புகளையும் விற்பனைக்குக் கொண்டு செல்ல ஒரு கும்பல் கடத்தும் என்றால் நீங்கள் சும்மா விடுவீரா????சல்லிக்கட்டு போராட்டம் போராட்டம் போல 1000மடங்கு பெரிய போராட்டம் அல்லவா இந்த வயதானவர்களைக் காப்பாற்ற நடந்திருக்க வேண்டும்? ஆனால் ஒரு சத்தம் இல்லை.. இரண்டு நாட்களாக மறைந்த ஸ்ரீ தேவி வரலாறு தான் ஓடுகிறது டீவியில்.

பிஜேபி ஆதரவாளர்கள் இந்த விவகாரத்தை விட்டுவிட வேண்டாம். எவன் என்ன சொன்னாலும் சரி ஒரு கை பாருங்க.... எந்த பெரிய பிரச்சனை வந்தாலும் பார்க்கலாம்.. இந்த கொடூரத்தை செய்த , துணை நின்ற ஒருத்தன் கூட இங்கே இருந்து தப்ப கூடாது...

-மாரிதாஸ்

பித்தப்பை கற்கள் எப்படி உருவாகிறது ? - தெரிந்துகொள்வோம்

பித்தப்பை கற்கள் எப்படி உருவாகிறது ? - தெரிந்துகொள்வோம்

கற்கள் எப்படி உருவாகின்றது

பித்தமானது நமது உணவில் உள்ள கொழுப்பு சத்தை கிரகித்துக் கொள்ள தேவைப்படுகிறது. மேலும் பித்தமானது கழிவுப் பொருட்கள், பித்த தாது உப்புக்கள், வேண்டாத கொலஸ்ட்ரால்களை வெளியேற்ற உதவுகின்றது.

பித்தமானது கல்லீரலில் உருவாகி, பித்தப்பையில் தேக்கி வைக்கப்பட்டு, தேவைப்படும் போது பித்தக்குழாய் வழியாக சிறுகுடல் சென்று உணவு செரிமானத்திற்கு உதவுகின்றது. தினமும் ஒருவருக்கு சுமார் அரை லிட்டரிலிருந்து ஒரு லிட்டர் வரை பித்தம் சுரக்கின்றது.

கல் உற்பத்தியாவதற்கு, பித்தத்திலுள்ள கொலஸ்ட்ரால், கால்சியம் உப்புக்கள், தாதுக்களை கரைச்சல் வடிவத்தில் வைக்க பித்தம் தோல்வியடையும் போது கல் உருவாகின்றது. நாம் பித்தக் கற்களை கொலஸ்ட்ரால் கற்கள் என்றும், நிறக்கற்கள் என்றும் வகைப்படுத்துகின்றோம்.

70-80% கொலஸ்ட்ரால் கற்களாகவும், 20-30% நிறக்கற்களாகவும் இருக்கின்றது. கற்கள் உற்பத்தி ஆகும் முன்பு, சிறு மணல் துகள்கள் போன்று தேக்கமடையும். பித்த உற்பத்தியைவிட கொலஸ்ட்ரால் உற்பத்தி அதிகமாகும்போது, கொலஸ்ட்ரால் கற்கள் உருவாகின்றது. அப்போது கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாகி, அப்படிவங்கள் ஒன்றின் மேல் ஒன்று படிந்தோ, இணைந்தோ கற்கள் உருவாகின்றது.

நிறக்கற்கள், கால்சியம் உப்புடன் பித்தம், பாஸ்பேட் தாதுக்கள் சேரும்போது உருவாகின்றது. இரத்த சேதம், கல்லீரல் நோய்கள், கிருமிகள் தாக்கத்தினாலும் பித்தக்கற்கள் உருவாகின்றது.

பித்தக்கற்களினால் வரும் பாதிப்பு :

பலருக்கு பித்த கற்கள் எந்த தொந்தரவும் தராமல் இருக்கும். சிலருக்கு பித்தம் வரும் குழாய் அடைக்கப்பட்டு வலி உண்டாகலாம். அதனால் பித்தப்பை சுழற்சி, அழுகிப் போகுதல், நுண் கிருமிகள் தொற்றி, வலி, காய்ச்சல், மஞ்சள் காமாலை உருவாகலாம். பித்தக்கற்கள் நகர்ந்து பித்தக்குழாய் அடைப்பு, கணையம் சுழற்சி, குடல் தேக்கம், பித்தப்பை புற்று நோய்கள் உருவாகலாம்.

எந்த தொந்தரவும் தராத கற்கள் உள்ளவர்களில் ஆண்டொன்றில் 1-2% நோயாளிகளுக்கு தொந்தரவும், அதற்கான வைத்தியமும் செய்ய நேரிடலாம். அதிக காலம் கற்கள் தொந்தரவு தராமல் இருந்தால், அது தொந்தரவு தர வாய்ப்புக் குறைவு.

நோய் கண்டறிதல் :

1.அல்ட்ராசவுண்ட்ஸ்கேன்.

சுமார் 98% பித்தக் கற்களை இதன் மூலம் கண்டுபிடிக்க இயலும்.

2. எக்ஸ்ரே

10-15% பித்தக் கற்களை மட் டுமே கண்டுபிடிக்க இயலும்.

3. கோலிஸ்ண்டிகிராபி

இதன் மூலம் பித்தப்பை, பித்தக்குழாய், கல்லீரல் முத லிய வற்றின் செயல்பாட் டினை அறிய முடியும்.

4. சி.டி.ஸ்கேன்

நோய் அறிகுறிகள்

1. வயிற்றின் மேல்பகுதியில் வலது பக்கமாக, திருகு வலியாகவும், அந்த வலி வலது தோள், முதுகு போன்ற இடத்திற்கு பரவவும் செய்யலாம்.

2. மஞ்சள்காமாலை மற்றும் விட்டு விட்டு மஞ்சள் காமாலை.

3. காய்ச்சல்

4. வாந்தி

5. வயிற்றுவலி பொதுவாக கொழுப்பு சத்து நிறைந்த உணவு எடுத்துக் கொண்டால் வரும்.

பித்தக்கற்களினால் வரும் வலியை நோயாளிகள் நன்கு அறிவர். ஒரு வருடத்தில் எத்தனை தடவை வந்தது என்பது முதல், எவ்வளவு நாள் இருந்தது என்பதை நினைவு கூறும் அளவிற்கு அந்த வலி இருக்கும். வலியானது 1-5 மணி நேரத்திற்கும், பொதுவாக 24 மணி நேரத்திற்குள் வலி குறைந்துவிடும். அவ்வாறு குறையாவிட்டால் பித்தப்பை அழுகும் நிலையில் இருக்கிறது என்பதை அறிய முடியும்.

6. புளித்த ஏப்பம்

7. நெஞ்சு கரிப்பு, உப்புசம்.

வைத்திய முறைகள்:-

1. கிருமிகளை அழிக்கும் ஆண்டிபயாடிக் மருந்து.

2. படுக்கை ஓய்வு

3. வலி நிவாரண மருந்து கள்

4. ஆப்பரேஷன்

a. லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை.

b. திறந்த வகை அறுவை சிகிச்சை.

c. எஸ்டோஸ்கோபி முறை

a.அறுவை சிகிச்சை எனப்படும் சாவி துவார துளை வழியாக பித்தப்பை அகற்றுதல்.

நன்மைகள்:-

1. குறைந்த இரத்த சேதம்

2. சிறு தழும்பு

3. ஆப்பரேஷனுக்கு பின்பு பணிக்கு விரைவாக செல்லு தல்.

4. வலி குறைவு

5. குடல் இறக்கம் போன்ற தையல் விடுவதால் வரக்கூடிய தொந்தரவு குறைவு.

6. கடினமான வேலைகளை வழக்கம் போல் செய்ய முடியும்.

தீமைகள்:-

1. சில நேரங்களில் மிகவும் அழுகிய நிலையில் உள்ள பித்தப்பையை இந்த வகை ஆப்பரேஷன் மூலம் அகற்றுவது கடினம்.

2. பித்தப்பை புற்று நோய் ஏற் பட்டிருப்பின் இந்த வகை ஆப்பரேஷன் செய்தல் கூடாது.

3. சில நேரங்களில் இரத்தக் கசிவை நிறுத்துவது கடின மாகி, திறந்த வகை ஆப்பரேஷனுக்கு மாற்றப்பட வேண்டியது ஆக லாம்.

திறந்த வகை ஆப்பரேஷன் (Open Surgery)

நன்மைகள்:-

1. பித்தப்பை புற்று நோய் கள்

2. அதிக இரத்த சேதம் ஏற் பட நேர்தல்.

3. அழுகிய நிலையில் உள்ள பித்தப்பை

தீமைகள்:-

1. மிக நீளமான தழும்பு

2. வேலைக்கு செல்வதற்கு தாமதம்

3. அதிக வலி

4. மிக கடினமான வேலை செய்தல் சிரமம்.

5. குடல் இறக்கம் போன்ற நோய்கள் வர வாய்ப்பு.

6. எண்டோஸ்கோபி மூலம் அகற்றுதல். வாய் வழியாக இந்தக் கருவியை இரப்பை சிறுகுடல், பித்தக்குழாய் வழியாக செலுத்தி பித்தக் குழாய் கற்களை அகற்றுதல்.

S.S.R

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...