Sunday, October 8, 2017

வயதானவர்களுக்கு வரக்கூடிய நோய்கள்*

(கடைசி வரை முழுதாக படிக்கவும்)

வயதானவர்களுக்கு வரக்கூடிய நோய்கள், குறிப்பாக நாற்பது வயதைத் தொட்டவர்களுக்கு வரக்கூடிய நோய்கள்.

- கண்களின் பார்வை மங்கும்

- காதுகள் கேட்கும் திறன் குறையும்

- ஞாபக மறதி வரும்

- பல் கொட்டும்

- வாய் பேச கொளரும்

- மூச்சு விடச் சிரமம் வரும்

- சாப்பாடு செரிக்காது

- மலச்சிக்கல் வரும்

- கை வலி வரும்

- இடுப்பு வலி வரும்

- கால் வலி, கால் பாத வலி வரும்

- நடக்க, நிற்கச் சிரமம்

- சிறுநீர் கழிக்க சிரமம்

- மலம் கழிக்க சிரமம்

- இரவில் தூக்கம் வராது

- இனிப்பு நீர், இரத்த கொதிப்பு வரும்

- உடலுக்குப் பல வகையான நோய்களும் தொந்தரவுகளும் வரும்.

- இன்னும் பல...

*இப்படி, எந்தப் பன்னாடையாவது சொன்னால். கண்டிப்பாக நம்பாதீர்கள்.

வயதானால் நோய்வரும் என்று எந்த இயற்கையின்  சட்டமும் கிடையாது.*

உங்களைப் படைத்தது இறைவன் அல்லது இயற்கை, என்று எதை நீங்கள் நம்பினாலும்
*உங்களை முழுமையாகப் படைத்திருக்கிறது*.

உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.

அதனால் *எவனாவது வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்*.

உங்கள் கூடவே வாழும்
மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது.

எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை.

எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.

எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.

மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.

மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.

*நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்*----------

முதுமை என்று எதுவும் இல்லை.

நோய் என்று எதுவும் இல்லை.

இயலாமை என்று எதுவுமில்லை.

எல்லாம் உங்கள் மனதிலும்,
அதன் நம்பிக்கையிலும்  தான் இருக்கிறது.

சிந்தனையை மாற்றுங்கள்.

ஆரோக்கியமாக வாழுங்கள்.

நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.

*மரணம்*----------

*மனிதனின் மரணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?.*😀

அவன் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளை அழைத்து. நான் இந்த வாழ்க்கையை முடித்துக் கொண்டு, அடுத்த கட்டத்துக்கு செல்கிறேன். போய் வருகிறேன். சந்தோஷமாக வாழுங்கள் என்று. தன் குடும்பத்தினரிடம் விடை பெற்று. மகிழ்ச்சியாக உடலைத் துறக்க வேண்டும்.😌

*யாருடைய மரணமும், மரண படுக்கையிலோ, மருத்துவ மனையிலோ நடக்கக் கூடாது.*

*சிந்தனையை மாற்றுங்கள்,  

நான் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழ்வேன் என்று நம்புங்கள்.

எல்லாத் தொந்தரவும் பறந்து போகும்.

#படித்ததில் பிடித்தது

இலுமினாட்டிகளின் சதி !

"இந்தியர்கள் முட்டாள்கள், அவர்களிடம் போதுமான பணம் இருக்கிறது, ஆனால் மூளை இல்லை ! " (" Indians are fools, they have enough Money , But no Brain ! ") என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார் டாக்டர் இர்வின். அங்கே கூடியிருந்த பன்னாட்டு மருந்து முதலாளிகளும் வெடிச்சிரிப்பை உதிர்த்தனர். கூட்டம் நடக்கும் இடம் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இவர்கள் உருவாக்கும் சதித்திட்டம் பயங்கரமானது.. டாக்டர் இர்வின் இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றவர். உப்பின் மூலக் கூறுகள் எவை, அதில் உள்ள வேதிப்பொருள்கள் எவை, அதை கார்ப்பரேட் கமாடிட்டியாக மாற்றுவது எப்படி என்று ஆய்வு நடத்தியவர், . மேலும் அவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போஸ்ட் டாக்டரேட் படிப்பை முடித்தவர். பரங்கிப் பேட்டையில் மூன்றாண்டுகள் தங்கி இந்திய உணவில் உப்பின் பங்கு என்பது குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்தவர். நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் பட்ட மேற்படிப்பைத் தொடர்ந்தபோது ஒருமுறை இவரை நூலகத்தில் வைத்துப் பேசியிருக்கிறேன். சதி ஆலோசனைக் கூட்டத்தில் தொடர்ந்து அவர் இப்படிப் பேசினார்: “இந்தியர்கள் சாதாரணமாக நோய் வந்து பாயில் படுக்கமாட்டார்கள். காலம் காலமாக தினை, சாமை, வரகு, கேழ்வரகு, பனி வரகு, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களையும், கடலைக்காய், தேங்காய் போன்றவற்றையும் உண்டு நோய் எதிர்ப்புச் சக்தி உடையவர்களாய் இருந்தார்கள். வடி கஞ்சியும், பழைய சோறும் அவர்களுடைய உடல் நலத்தைக் காத்து நின்றன. இப்போது அவர்களுடைய பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தை மாற்றி அமைத்துவிட்டோம். கடலைக்காய், தேங்காய் ஆகியவற்றில் கொழுப்பு அதிகமாக உள்ளது என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டோம். நம்முடைய விளம்பர அரக்கர்கள் அவர்களை நம் பீசா, பர்கர், கொக்கோ கோலா பக்கம் இழுத்துவிட்டார்கள்.. பழைய சோறு, கம்பங்கூழ், கேப்பைக்களி என்பதெல்லாம் அவர்களுடைய உணவுத் திட்டத்திலிருந்து விடைபெற்றுவிட்டன. சென்னையில் நம் நாட்டின் சப்வே பிரான்ச்சில் பீசாவுக்கும் பர்கருக்கும் கூட்டம் அலை மோதுகிறது” “தமிழ் நாட்டில் சின்னச் சின்னக் கிராமங்களின் பெட்டிக் கடைகளில் கூட பாலித்தின் பைகளில் அடைக்கப்பட்ட பன்னாட்டுத் தின்பண்டங்கள்தாம் கடையை அடைத்துக்கொண்டு தொங்குகின்றன. பாரம்பரிய கடலை உருண்டைகளும், பொரி உருண்டைகளும், இஞ்சி மொரபாக்களும் காணாமல் போய்விட்டன. வெல்லப்பாகு கலந்து செய்யப்பட்ட புளிப்பு மிட்டாய்களும் ஆரஞ்சு மிட்டாய்களும் போன இடம் தெரியவில்லை. உப்பும் மசாலாவும் கொட்டி செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகளை இந்தக்கால குழந்தைகள் விரும்பித் தின்கின்றன.” “ ஓர் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்துக் கொள்வோம். அதற்குள் இந்தியர்கள் முக்கால்வாசிப் பேர்களை சிறுநீரக மற்றும் இதய நோயாளிகளாக மாற்றிவிடுவோம்.” “அப்படி மாற்றுவதால் நமக்கு என்ன நன்மை?” - ஒரு பண முதலை கேட்டது. ஊருக்கு ஊர் பல டயாலிசிஸ் சென்டர்களை வைத்துவிடுவோம். இனி பத்து வயது சிறுவர்கள் கூட காலையில் ஒருமணி நேரம் டையாலிசிஸ் செய்துகொண்டுதான் பள்ளிக்குச் செல்லவேண்டும்.” “நம் சதித் திட்டம் நிச்சயம் வெற்றியடையும். அது வெற்றியடைந்தால் இந்தியாவில் இருபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதய நோயாளிகளாகவே இருப்பர். அவர்கள் அனைவரும் இரத்த அழுத்த மாத்திரைகளை மூன்று வேளையும் உணவு மாதிரி உண்டே ஆக வேண்டும். அப்புறம் என்ன அந்த மருந்து தொழிற்சாலைகளை வைத்துள்ள நாம்தான் உலகத்துப் பணக்காரர்களாக உலா வருவோம்.” “அருமை அருமை அந்தச் சதித் திட்டம் என்ன?” # # # “உங்கள் உப்பில் அயோடின் உள்ளதா? எங்கள் டேபிள் சால்ட் அயோடின் நிறைந்தது. இதுதான் தேசத்தின் உப்பு” ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையிலும் பெரிய பெரிய சமையல் ஜாம்பவான்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உப்புத்தூள் விளம்பரங்கள் ஒரு நாளைக்கு நூறு முறை வரத் தொடங்கின. இப்படிப்பட்ட விளம்பரங்களால் இந்தியர்களின் மூளை மழுங்கடிக்கப்பட்டது. எந்த வீட்டிலும் இப்போது உப்பு ஜாடி இல்லை. உப்புப் பானை இல்லை. உப்புத்தூள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு உபயோகத்திற்கு வந்துவிட்டன. கல்லுப்பின் பயன்பாடு அறவே நின்றுவிட்டது. சரியாக ஐந்தாண்டுகளில் அவர்களுடைய சதித்திட்டம் இந்தியாவில் வெற்றி அடைந்துவிட்டது. பெரிய நகரங்களில் விண்ணைத் தொடும் கார்ப்பரேட் மருத்துவ மனைகள் பெருகிவிட்டன. அவற்றில் குளிரூட்டப்பெற்ற அறைகளில் இளைஞர்களும் இளம்பெண்களும் ஹெட்செட்டைப் பொருத்திப் பாட்டு கேட்டுக் கொண்டு படுத்திருக்க, அவர்களுடைய சிறுநீரை இயந்திரங்கள் பிரித்துக்கொண்டிருந்தன. # # # இந்த ஆட்கொல்லி அயோடின் உப்புக்கு எதிராகக் குரல் கொடுக்க ஒரு நூறு இளைஞர்கள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குமுன் திரண்டார்கள். மெகாஃபோனை தன் வாயின் முன் பிடித்துக்கொண்டு, வேகாத வெயிலில் நின்றபடி ஓர் இளைஞன் உரத்தக் குரலில் பேசினான்: “பொது மக்களே! நீங்கள் உப்புப் போட்டுதான் சோறு தின்கிறீர்களா? நம் பாட்டனும் பூட்டனும் கல் உப்பைத்தானே பயன்படுத்தினார்கள்? ஃபெரஸ் சயனைட் என்னும் மெல்லக் கொல்லும் நச்சுப்பொருள் உப்புத் தூளில் கலந்து விற்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா?”. “ஒரு குண்டூசி முனையளவு சயனைட் வயிற்றுக்குள் இல்லையில்லை வாய்க்குள் போனாலே அடுத்த நொடியில் இறக்க நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?.” “நாம் வாங்கும் பொடிஉப்பு படு வெள்ளையாக இருப்பதற்காக அலுமினியம் சார்ந்த ஒரு வேதிப் பொருளை அதில் கலக்கிறார்கள். அது சிவப்புக் கம்பளம் விரித்துப் புற்று நோயை வரவேற்கும்.” ‘2020 இல் இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டுன் என அப்துல் கலாம் முயற்சி மேற்கொண்டார். ஆனால் மேலை நாட்டு மருந்து முதலாளிகள் நம் நாட்டை ஒரு தளர்ந்த நாடாக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளார்கள். அதற்கு அவர்கள் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம்தான் இந்த அயோடின் உப்பு.” “ஒரு முப்பது ஆண்டுகளுக்குமுன் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் பார்க்க அவ்வளவு அழகாக இருப்பார்கள் தெரியுமா?. இப்போது தொப்பைப் பெருத்துப் போய் பார்க்கச் சகிக்கவில்லை. எல்லாம் இந்தச் செயற்கை உப்பு நிறைந்த தின் பண்டங்களைத் தின்றதன் விளைவுதான். போதாக் குறைக்கு நம் இல்லத்தரசிகள் சமையலுக்கும் இந்த நச்சு உப்பைத்தான் பயன்படுத்துகிறார்கள்.” கடலுக்கு அருகில் இருக்கும் உப்பளங்கள் மூலம் இயற்கையாகக் கிடைக்கும் கல்லுப்பில் உடலுக்குத் தேவையான அனைத்துத் தாது உப்புகளும் உரிய விகிதத்தில் உள்ளன. இந்தக் கல்லுப்பை அப்படியே பயன்படுத்திய தலைமுறையினருக்கு இதய நோய் வந்ததா? சர்க்கரை நோய் வந்ததா? சிறு நீரகக் கோளாறுதான் வந்ததா? உடல் பருமன் நோய் என்பது அவர்கள் அறியாத ஒன்று.” “நம் அரசியல்வாதிகள் ஊழல் மலிந்தவராய் இருப்பதால்தான் வெளிநாட்டுப் பணமுதலைகள் நம் நாட்டுக்குள் எளிதாக நுழைந்து குதியாட்டம் போடுகின்றன. வெல்ஃபேர் கவர்ண்மெண்ட் என்று வாய்கிழியப் பேசுவார்கள். ஆனால் உண்மையில் மக்கள் நலம் குழிதோண்டிப் புதைக்கப் படுகிறது.” *“போதிய விழிப்புணர்வு இல்லாததால் பணக்கார நோய்களை ஏழைகளும் நடுத்தட்டு மக்களும் விலைகொடுத்து வாங்குகிறார்கள்.”* சுற்றி நின்றவர்கள் பலத்தக் கரவொலி எழுப்பி ஆராவாரம் செய்தார்கள். அடுத்த சில நொடிகளில் சைரன் பொருத்திய வேன்கள் வந்து நின்றன, இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் அவர்களை அள்ளி வேனில் திணித்துக் கொண்டு விரைந்தனர். இதை எல்லாத் தொலைக்காட்சியினரும் படம்பிடித்தார்கள். ஆனால் எதிலும் ஒளிபரப்பவில்லை! இப்படிப்பட்ட சமூகப் பொறுப்பு மிகுந்த தொலைக்காட்சி சேனல்களை தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது! மக்களாகிய நாம் தான் திருந்த வேண்டும்...! *பொடி உப்பைத் தவிர்ப்போம்...இந்து உப்பு அல்லது  கல் உப்பைப் பயன் படுத்துவோம்...!*
🤔🤔🤔🤔
*புகழ்மணி*
மறைமலை நகர்
🤝🤝🤝🤝🤝

Thursday, October 5, 2017

கொய்யா இலை

உணவிலும் மாற்றம்!!!
                உடலிலும் மாற்றம்!!!!

  இன்றைய மருத்துவ சிந்தனை

கொய்யா இலை

கொய்யா இலையை வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ தயாரித்து, பின் அதை 12 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை குறைக்கலாம்.

கொய்யா இலையை (8) எடுத்து ஒன்றரை லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி தினமும் மூன்று முறை குடித்து வந்தால் தீராத வயிற்று வலி காணாமல் போய்விடும்.

கொய்யா இலையை சாதாரணமாக வாயில் போட்டு மென்றும் அல்லது கொய்யா இலையில் டீ செய்து சாப்பிட்டு வந்தாலும், வாயில் ஏற்படும் பல் வலி, ஈறு பிரச்சனைகள். வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் ஆகியவற்றை உடனே சரி செய்கிறது.

கொய்யா இலையில்  டீ போட்டு தினந்தோறும் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளை பராமரித்து கல்லீரலுக்கு சிறந்த டானிக்காக பயன்படுகிறது.

கொய்யா இலையில் கஷாயம்
(75 மில்லி) அளவுக்கு  தினந்தோறும் குடித்து வந்தால்,  அதிக உதிரப்போக்கு மற்றும் தைராய்டு சுரப்பு சமநிலைக்கு வரும்.

கொய்யா இலையின் சாறு
(75 மில்லி) எடுத்து அதோடு தேன் கலந்து தினமும் காலை மாலை என இருவேளையும்  சாப்பிட்டு வந்தால் விரைவில் உங்கள் உங்கள் எடை குறைவதை நீங்கள் காணலாம்.

KOVAI  HERBAL CARE

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

உங்கள் சிறுநீரகம் நலமாக இருக்கிறதா? #மாவேள்

உங்கள் சிறுநீரகம் நலமாக இருக்கிறதா? #மாவேள்

நாம் நலமாகத்தான் இருக்கின்றோமா? என்ற கேள்வி எல்லோர் மனதையும் ஆட்டுவித்தே வருகிறது. எல்லாவற்றையும் நாம் ஏன் முடிவிற்கு கொண்டுவரக்கூடாது?

" நீரகம் " தேநீரை அருந்துங்கள். சிறுநீரக கல் உள்ளவர்கள் " நீரகம் + " காலை & மாலை நேரத்தில் தொடர்ந்து 10 நாட்கள் அருந்துங்கள்.

இணையதளத்தில் வாங்கிட :
http://www.maavel.com/product/save-kidney-tea/
http://www.maavel.com/product/neeragam-plus-save-kidney-tea/
வாட்சப் : 9688660235

நோய் வந்தபின் வருந்தி செல்லவேண்டாம். மருந்துகளை உணவாக எடுத்துக்கொள்ளத்தொடங்குங்கள்.

ஆரம்ப நிலையில் ஏற்படும் அறிகுறிகளாவன,

1. உடல எடை இழப்பு
2. குமுட்டல் வாந்தி
3. பொதுவான உடல்நலக்குறைவு
4. சோர்வு
5. தலைவலி
6. அடிக்கடி ஏற்படும் விக்கல்
7. உடல் முழுக்க ஏற்படும் அறிப்பு (ப்ரூரைட்டிஸ்)

பின் நிலைகளில் ஏற்படும் அறிகுறிகளாவன:

1. வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு கூடுவது அல்லது குறைவது
2. இரவு நேரத்தில் சிறுநீர் கழிப்பது
3.சுலபமாக காயம் ஏற்படுதல் அல்லது இரத்தம் வடிதல்
4.வாந்தியில் அல்லது மலத்தில் இரத்தம் காணப்படுதல்
5.மந்தமான துாங்கிவிழுகிற நிலமை, சுறுசுறுப்பின்மை, குழப்பம், சித்தபிரமை , நினைவற்ற நிலை
6.தசை துடிப்பு அல்லது தசை இழுப்பு
தோலில் வெள்ளைநிற படிகங்கள்
7.கைகள் பாதங்கள் மற்றும் பிற பகுதிகளில் உணர்வு திறன் குறைதல் நோயுடன் தொடர்புடைய மற்ற கூடுதல் அறிகுறிகளாவன
8.அதிக அளவில் இரவு நேரங்களில் சிறுநீர் கழித்தல்
9.அதிக தாகம் ஏற்படுதல்
10.தோல் நிறம் வெளிர்ந்து காணப்படுதல்
11.நகங்கள் ஒழுங்கின்றி காணப்படுதல்
12.சுவாசம் நாற்றம் எடுத்தல்
13.உயர் இரத்த அழுத்தம்
14.பசியின்மை
15.அடிக்கடி நீர்கடுப்பு ஏற்படுதல்

போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் பனை சக்கரை சுவையில் உள்ள #நீரகம் தேநீரை பயன்படுத்துங்கள். பாதுகாப்பான உணர்வில் மகிழ்வாக வாழுங்கள்!

-#மாவேள்

*செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!*

*செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!*

தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள்,
அதிக சிரமம் மற்றும் செலவு
creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும்,

அப்படி இந்த level உள் இல்லை என்றால்
கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும் என்பார்கள்,

பல லட்சம் செலவு ஆகும், வேதனை வலி இருக்கும்
இதை சரி செய்ய எளிய வழி உண்டு.

*உயிர் இயற்கை விவசாயிகள் நேரடி விற்பனை நிலையத்திற்கு சென்று இந்து உப்பு என்று கேளுங்கள் கிடைக்கும்*

ஒரு கிலோ 42 ருபாய் மட்டுமே.

*இந்த உப்பை கொண்டு வீட்டில் மூன்று வேளையும் உணவு சமைத்து சாப்பிடுங்கள்.சாதாரண கடல் உப்பை எப்படி சமையலுக்கு பயன்படுத்துகிறீர்களோ,அதேபோல் இதையும் பயன்படுத்தலாம்.*

15 நாட்கள் அல்லது அதிக பட்சம் 30 நாளில்
உங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும் ,
அதன் பிறகு நீங்கள் creatinine level சோதனை
செய்து பாருங்கள் சரியான அளவில் இருக்கும்.

இந்த உப்பை கொண்டு சமைத்த உணவை

நோயாளி மட்டும் தான் சாப்பிட வேண்டுமா?

யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்,
ஒரு வயது குழந்தை முதல் முதியவர்
வரை சாப்பிடலாம்

இந்து உப்பு என்றால் என்ன ?….
இமாலய மலைப்பகுதியில் பாறைகளை வெட்டி
எடுக்க படும் உப்பே இந்து உப்பு இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள் , கூகிள் சென்று ஆங்கிலத்தில் himaalayan rock salt என்று type செய்தால் உங்களுக்கு தகவல் கிடைக்கும், உடலுக்கு தேவையான 80 மினரல் இந்த உப்பில் உள்ளது.

இந்த உப்பு வேற எந்த நோய்க்கு கேட்கும்?

Thyroid பிரச்சனைக்கு கேட்கும்,

வாய் கொப்பளித்தால் பல் ஈறுகள் பிரச்சனை
வாய் புண் ஆகியவை கேட்கும்

அல்சர் piles வந்தால் பச்சை மிளகாய் தவிர்த்து
வர மிளகாய் சேர்ப்பது போல , சாதா உப்பை
தவிர்த்து இந்து உப்பு சேருங்கள்
கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும்.

Docter குடுகிற மருந்தை கேள்வி கேட்காம

கண்ணை மூடி கொண்டு சாப்பிடுறீங்க

கடையில் விற்கும் இந்த உப்பை வாங்கி சாப்பிடுங்க கிட்னி சரியாகும்னு சொல்லுகிறார்கள்
சந்தேக படமா சாப்பிடுங்க ,மேலும் தினமணி ஞாயிறு மணியில் ஆயுர்வேத நிபுணரும், பேராசிரியருமான எஸ்.சுவாமிநாதன்அவர்கள் எழுதிய இந்துப்பு பற்றிய கட்டுரையில் இருந்து சில விபரங்கள்..
.மனிதன் பயன்படுத்ததக்கது இந்துப்பு தான் என்கிறது ஆயுர்வேதம்.

1. இந்துப்பு சிறிதளவு சுவையுடையது.

2 ஆண்மையை வளர்ப்பது.

3 . மனதிற்கு நல்லது..

4.வாதம், பித்தம், கபம் மூன்றையும் போக்க வல்லது.இலேசானது.

5.சிறிதளவு உஷ்ணமுள்ளது.

6.கடலுப்பை உண்ணும் போது அது முடிவில் இனிப்பாக மாறிவிடும். அது விரைவில் சீரணமாகாது.
ஆனால் இந்துப்பு இதற்கு நேர்மாறானது. கடலுப்பினால் ஏற்படும் கெடுதலைக்கூட தடுத்து விடும்.எனவே நீங்கள் இந்துப்பு வாங்கி உணவில் சேர்த்து பயன்படுத்துங்கள்.
*உயிர் இயற்கை விவசாயிகள் நேரடி விற்பனை நிலையம்*
ஈரோடு-8695331144
               8695221144
கோவை-9345001144
                  9344001144
                  8695771144
*NAGAR*

*சூரிய நமஸ்காரத்தின்போது உச்ச‍ரிக்கப்படும் 12 மந்திரங்களும் அதன் அர்த்த‍ங்களும்! – அறிய வேண்டிய தகவல்*

*சூரிய நமஸ்காரத்தின்போது உச்ச‍ரிக்கப்படும் 12 மந்திரங்களும் அதன் அர்த்த‍ங்களும்! – அறிய வேண்டிய தகவல்*

*உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்து வாழ்வதற்கு சூரியனேகாரணம் .*

சூரியனை கடவுளாக வண ங்கும் பழக்கம் பழங்கால தொட்டெ இருந்து வருகிறது. சூரிய நமஸ்காரம் நமது ஆன்மீக வாழ்வுடனும், ஆரோக்கிய வாழ்வுடனும் ஒன்றிய அறிவியல் மருத்துவக் கூறுகளை உள்ளடக்கிய நோய் தீர்க்கும் யோக பயிற்சியாகும்.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? என்ற பழமொழி உண்டு. சூரிய நமஸ்காரத்திற்கும் கண்ணிற்கும் உள்ள நெருக்கமான தொடர்பை இதுகாட்டுகிறது. கண்ணொளி வழங்கும் சூரியனின் சக்தி உடலில் ஏற்படும் நோய்களை நீக்கி உடல.் ஆரோக்கி யத்தையும் பாதுகாக்கிறது.

அதிகாலைநேரத்தில் நம் உடலில் படும் சூரிய ஒளி தேக ஆரோக்கியத்திற்கு முக் கிய பங்கு வகிக்கிறது. இதைத்தான் நமது பாரத பூமியில் வாழ்ந்த சித்தர்கள் காலை வெயிலில் ஆரம்பிக்கும் பித்தம், மாலை வெயிலில் தணிந்து போகும் என்றனர். சூரிய ஒளியைக் கொண்டு கொடிய நோயான காமாலையையும் குணப்படுத்தலாம் என்கிறது அதர்வண வேதம்.

இதனை அடிப்படையாகக் கொண்டு தோன்றியதுதான் சன்பாத் எனப்படும் சூரிய ஒளிக் குளியல்.சூரியக் குளிய லால் சிறுவர்களின் மன ஆற்றல் பத்து முதல் இருபது சதவீதம் வரை அதிகரி த்துள்ளதாக மேலை நாட்டு நவீன மரு த்துவ ஆய்வு நிரூபித்துள்ளது.

சூரிய நமஸ்காரம் செய்வதற்கு மிகவும் உகந்த நேரம் சூரிய உதயமாகும் அதிகாலை நேரம். இளஞ் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள் எண்ணற்ற நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது. இரவில் தூக்கத்தால் உட லுக்கும், மனத்திற்கும் ஓய்வு கிடைப்பதா ல், அதிகாலையில் உடற்தசைகள் உடற்பயிற்சி செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.

மூளையின் அலைகள், அதிர்வுகள் குறைந்து அமைதியாக இருப்பதும் அதிகாலையில்தான். அதிகாலையில் வெப்பம் குறைவாக இருப்பதால் சூரிய நமஸ்கார பயிற்சி யின் போது நமது உடலும் உள்ளமும் சோர்வடைவதில்லை. சூரிய நமஸ்காரம் செய்வதற்கு உகந்த திசை கிழக்கு. சூரியனின் கதிர்கள் உடல் முழுவதும் படும்வகையில் சுத்தமான காற்று இருக்கக் கூடிய திறந்த வெளியில் நின்றபடி செய்ய வேண்டும்.

*12 மந்திரங்களை சொல்லி சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் நம் உடல் நோய்கள் யாவும் தீர்ந்துவிடும்.*

*12 மந்திரங்கள்*
*ஓம் மித்ராய நமஹ- சிறந்த நண்பன்*

*ஓம் ரவயே நமஹ -போற்றுதலுக்குரியவன்*

*ஓம் சூர்யாய நமஹ- ஊக்கம் அளிப்பவன்*

*ஓம் பானவே நமஹ -அழகூட்டுபவன்*

*ஓம் ககாய நமஹ -உணர்வுகளுக்கு வலிமை தருபவன்*

*ஓம் பூஷ்ணே நமஹ-புத்துணர்ச்சி தருபவன்*

*ஓம் ஹிரண்யகர்ப்பாய- நமஹ ஆற்றல் அளிப்பவன்*

*ஓம் மரீசயே நமஹ- நோய்களை அழிப்பவன்*

*ஓம் ஆதித்யாய நமஹ -கவர்ந்திழு ப்பவன்*

*ஓம் சவித்ரே நமஹ -சிருஷ்டிப்பவன்*

*ஓம் அர்க்காய நமஹ -வணக்கத் திற்கு உரியவன்*

*ஓம் பாஸ்கராய நமஹ- ஒளிமிகுந் து பிரகாசிப்பவன்.*

மேற்கண்ட மந்திரத்தை உச்சரித்த வாறு சூரிய நமஸ்காரம் செய்யும் போது நமது மனம் சிதறாமல் ஒரு முகப்ப டுகிறது. மந்திரத்தை உச்சரிக்கும்போது அதனதிர்வு நமது உடலின் எல்லா பகுதிகளுக்கும் சென்று பல உணர்வுகளை ஏற் படுத்தும் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மையாகும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...