Monday, August 14, 2017

உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கான எளிய வழி!

உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கான எளிய வழி!

ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும்.  8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.

ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது  தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை  முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது  நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம்  ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது.

பிறகு ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில்  ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை  உற்பத்தி செய்ய வைக்கிறது.

உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி:

நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை  பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை  மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.

காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு  பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிப்பதை கண்கூடாக பார்க்கலாம்.

இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும். உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும்,  வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து இருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர், ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள்  உருவாக காரணமாக இருக்கும் செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.

– அனைவருக்கும் பகிருங்கள்

நீரிழிவு ,குடல் நோய், நுரையீரல் கோளாறை குணமாக்கும் கொய்யா,:-

நீரிழிவு ,குடல் நோய், நுரையீரல் கோளாறை குணமாக்கும் கொய்யா,:-
புகை பழக்கம் உடையவர்களின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் கொய்யா சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம்.

குடல் நோய், நுரையீரல் கோளாறை குணமாக்கும் கொய்யா
நெல்லிக்கு அடுத்து கொய்யாவில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது. கொய்யா இனிப்பும், அமிலச் சத்துகளும் கலந்த ருசியான பழம். குளிர்ச்சி மிகுந்தது.

100 கிராம் கொய்யாப்பழச்சாறில் உள்ள சத்துக்கள்.

நீர் – 76%
மாவுப்பொருள் – 15%
புரதம் – 1.5%
கொழுப்பு – 0.2%
கால்சியம் – 0.01%
பாஸ்பரஸ் – 0.04%
இரும்புச்சத்து – 1 யூனிட்
வைட்டமின் C – 300 யூனிட்

மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கிறது கொய்யாப் பழம். சிலருக்கு தொடர்ச்சியாக தலைவலி பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்களின் ரத்தத்தில் உள்ள ஒருசில குறைபாடுகளால் தலைவலி ஏற்படும். இந்த வலியை நிரந்தரமாக தீர்த்து விடுகிறது கொய்யாப்பழம். இப்பழம் ரத்தத்தை சுத்திகரித்து தலைவலிக்கான மூலகாரணத்தை சரிசெய்து விடுகிறது. இதனால் தீராத தலைவலியால் அவதிப்படுவோர் கொய்யாப்பழத்தை நிறைய சாப்பிடலாம்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் கொய்யாவுக்கு முக்கியபங்கு உண்டு. நீரிழிவு நோயாளிகள் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு பெருமளவில் குறைந்து விடும். கொய்யாப்பழம் ரத்தத்தை நன்றாக சுத்திகரிப்பதால் இதய நோய் பெருமளவில் குறையும். இந்நோய் வராமலும் தடுத்து விடும். குடல் நோய்களான ஜீரண கோளாறு, பேதி போன்றவற்றை குணப்படுத்தும்.

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யாவில் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் தினமும் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.

மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றி விடுகிறது. புகை பழக்கம் உடையவர்களின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் கொய்யா சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம். ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யா சீராக்குகிறது.

ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் :-

ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் :-

1.வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.
சளிக் காய்ச்சல்

2.புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.

3.இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

4.சளி
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

5.டான்சில்
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

6.வயிற்றுப் போக்கு
சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.

7.வாயுக் கோளாறு
மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

8.நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

9.தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

10.தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

11.தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

12.வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய்
நாற்றம் போகும்.

13.உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

14.அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

15.குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

16.வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

17.வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

18.மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

19.சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

20.பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

21.மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

22.சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

23.தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

24.மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

25.தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

26.மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

27.வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்

சிறுநீரகக்கல்லை வெளியேற்ற மிக எளிய முறை

சிறுநீரகக்கல்லை வெளியேற்ற மிக எளிய முறை:-
மருத்துவா்.ஜெ.ஜெயபிரகாஷ்
+919840341404

*சிறுநீரகத்தில் (கிட்னியில்) கல் இருந்தால் வெடிக்காத  தென்னம்பாளையின் உள்ளே உள்ள பருப்பை (அரிசி போன்று இருக்கும்) ஒரு கையளவு எடுத்து சாறு பிழிந்து  எடுத்து காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 5 - 7 நாட்கள் சாப்பிட்டால் எத்தனை பெரிய கல் ஆயினும் முழுமையாக வெளி வந்து விடும். சாப்பிட்ட உடனே  கடுமையான வலி முற்றிலும் குறைந்து விடும்.*

*தென்னை மரம் ஏறும் நபர்களிடம் கூறுங்கள் அவர் உதவி செய்வார்கள்*

இந்தியாவில் வயிற்று புற்றுநோய் மிக மிக குறைவாக இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?

உலகிலேயே அதிகபடியான மிளகாய் காரம்
மற்றும் மசாலா பயன்படுத்தும்
இந்தியாவில்
வயிற்று புற்றுநோய் மிக மிக குறைவாக இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?
கத்தரிக்காய்
இவ்வளவு கடுமையான காரம் மசாலா பயன்படுத்தும் இந்தியாவில்
கத்தரிக்காய் பயன்பாடு உள்ளதால் அவற்றில் உள்ள வேதிபொருட்கள்
புற்றுநோயை அழிக்கும் தன்மை உள்ளதை
அறிந்த பன்னாட்டு கம்பெனிகள் மரபணு மாற்றம் செய்த கத்தரியை புகுத்தியுள்ளதாக ஒரு தகவல் உள்ளது.
கத்தரி வகையில் உயர்ந்த மருத்துவகுணம் நிறைந்தது
"கண்டங்கத்திரி"
கண்டங்(கழுத்து)+ கத்திரி
கழுத்து பகுதியில் ஏற்படும் அனைத்து நோய்களையும் கத்தரித்து விடும் என்பதால் இதற்கு கண்டங்கத்தரி என பெயர் பெற்றது
இவற்றிற்கு கோழை அகற்றி என பெயரும் உண்டு. நுரையீரலில் உள்ள நீர் மற்றும் சளியை அகற்றும் பண்பு உண்டு.
தொண்டை பகுதியில் ஏற்படும் அனைத்து விதமான நோயையும் போக்கிவிடும் இவற்றை உட்கொள்ளும் போது.
தைராய்டு நோயையும் இவை குணமாக்கும்.
தூதுவளைக்கு இணையான மருத்துவகுணம் கொண்டது.
2020 ல் இந்தியாவில் சுமார் 50 கோடி பேருக்கு புற்றுநோய் இருக்கும் என மதிப்பிட்டு
புற்றுநோய்க்கான மருந்தை தயாரிக்க ஐரோப்பிய, அமெரிக்க கம்மெனிகள் தயாராகி வருவது எத்தனை பேருக்கு தெரியுமா?
கத்தரிக்காயை விட பல மடங்கு சிறப்பு வாய்ந்த
கண்டங்கத்தரியை
பயன்படுத்தி உடல் நலத்தை பேணுவோம்.
புற்றுநோய் வராமல் தடுப்போம்.

இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில உணவுகள்:-

இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில உணவுகள்:-

💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

பொதுவாக உடல் ஆரோக்கியமானது இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தான் உள்ளன. ஏனெனில் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கு இரத்தமானதுதான் மிகவும் இன்றியமையாதது. எனவே அத்தகைய இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், உடலில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, உடலின் உறுப்புக்கள் மெதுவாக பாதிக்கப்படும். இவ்வாறு அதிகப்படியான நச்சுக்கள் இரத்தத்தில் இருந்தால் தான், அலர்ஜி, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, தொடர்ச்சியான தலை வலி, சோர்வு போன்றவை ஏற்படும்.

அதுமட்டுமின்றி, அசுத்த இரத்தமானது உடலில் இருந்தால், உடலில் மட்டுமின்றி, சருமத்திலும் பல பிரச்சனைகள் ஏற்படும். அதில் பிம்பிள், முகப்பரு, கருமைப் படிதல், பொலிவிழந்த சருமம் மற்றும் வறட்சியான சருமம் போன்றவை ஏற்படும். எனவே தான், கடைகளில் இரத்தத்தை சுத்திகரிக்கும் பல்வேறு மருந்துகள் உள்ளன. ஆனால் இந்த மருந்துகளால் எந்த நன்மையும் கிடைப்பதில்லை. ஆகவே இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுகளை சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, உடலில் இரத்தத்தை சுத்திகரிக்கும்

கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நிணநீர் நாளங்கள் நன்கு செயல்பட்டு, இரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலில் இரத்தத்தை சீராக ஓட வைக்கும். இங்கு இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில உணவுகளைக் பார்ப்போம். அதைப் படித்து, அவற்றை உணவில் சேர்த்து வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, சருமமும் நன்கு அழகாக மின்னும் என்று உறுதிபட கூறுகிறார்கள்.

அதாவது வாரம் 2-3 முறை ஒரு டம்ளர் முட்டைகோஸ் ஜூஸை குடித்து வந்தால், உடலில் உள்ள இரத்தமானது சுத்தமாகும்.

பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான காலிஃப்ளவரில் குளோரோஃபில் என்னும் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் பொருள் அதிகம் உள்ளது. ஆகவே இந்த உணவுப்பொருளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

கசப்புத் தன்மையுடைய பாகற்காய் அதிகம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். அதிலும், பாகற்காயை வேக வைத்து சாப்பிட்டால் தான், அதன் முழு நன்மையைப் பெற முடியும்.

வாரத்திற்கு 2 முறை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு, அந்த நீரை பருகி வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் மட்டுமின்றி, கிருமிகளும் அழிந்துவிடும்.

பூண்டு ஒரு சிறந்த ஆன்டி-பயாடிக் மட்டுமின்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மையும் கொண்டது. மேலும் இது உடலில் தங்கியுள்ள நச்சுகளை மட்டுமின்றி, தேவையற்ற கொழுப்புக்களையும் கரைத்துவிடும்.

கேரட் சாப்பிட்டால், சருமம் பொலிவாக இருக்கும் என்று சொல்வார்களே, அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் கேரட் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும் என்பதால் தான். ஆகவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடித்து, ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருங்கள்.

எலுமிச்சையில் உள்ள புளிப்புத்தன்மை இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் உள்ள அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். மேலும் இது உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.

பழங்களில் அன்னாசிப் பழம் இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. ஆகவே அன்னாசியை டயட்டில் சேர்த்து, இரத்தத்தை மட்டுமின்றி, சிறுநீரகத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இஞ்சி டீயை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தாலும், இரத்தம் சுத்தமாக இருக்கும்.

சிறுநீரகத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுத்தப்படுத்தும் தன்மை பார்ஸ்லியில் அதிகம் உள்ளது. மேலும் இது இரத்தத்தை சுத்தப்படுத்தும் வைத்தியங்களில் மிகவும் பிரபலமான பொருளும் கூட.

நெல்லிக்காயிலும் இரத்தத்தை சுத்திகரிக்கும் பொருள் அதிகம் நிரம்பியுள்ளது. ஆகவே தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு, இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்

வெங்காயத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள் இந்தப் பிரச்சனைகளை எல்லாம் போக்கும்…

வெங்காயத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள் இந்தப் பிரச்சனைகளை எல்லாம் போக்கும்…

News Fast

அனைத்து வகையான சமையலிலும் முக்கிய இடம்பிடித்துள்ளது வெங்காயம். இதில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளன.

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்:

1.. நீர்க்கடுப்பால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஒரு சிறிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும்.

2.. இதேபோன்று வெயில் காலத்தில் உடலில் கட்டிகள் தோன்றும், இதற்கு, சிறிய வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் வெகு விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

3.. உடல் சூட்டால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிறிய வெங்காயத்தை துண்டுகளாக்கி பசு நெய்யில் வதக்கிச் சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

4.. வெங்காயத்துடன் வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

5.. வெங்காய சாற்றை மோரில் கலந்து குடித்தால், இருமல் குறையும். வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச்சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வந்தால் பல்வலி, ஈறுவலி குறையும்.

6.. வெங்காயச் சாற்றையும், தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால், சீதபேதி நிற்கும். வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

7.. வெங்காயத்தில் குறைந்த கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயம் சாப்பிடலாம்.

8.. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

9.. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் 3 வேளை சாப்பிட்டால் நுரையீரல் சுத்தமாகும்.

10.. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து, வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இருதுண்டாக நறுக்கி தேய்த்த்தால் முடி வளரும்.

பக்கவாதம் ஒரு மாதத்தில் குணமான அதிசயம் !

பக்கவாதம் ஒரு மாதத்தில் குணமான அதிசயம் !
------------------------------------------------------------------

வணக்கம் என் சித்தி 10 வருடம் BP க்கு ஆங்கில மருந்துகளை சாப்பிட்டு வந்தார், தீடிரென்று இடது கையும் காலும் செயலிலந்துவிட்டது. படுத்த படுக்கை ஆகிவிட்டார்.

உடனே நான் திரு.ஐகத்குரு ஐயா அவர்களிடம் கேட்டபோது, அவர் ஒரு மருந்தை வீட்டி செய்து கொடுக்கும்படி சொன்னார், 3 மாதத்தில் குணமாகும் என்றார். இதோ அந்த எளிமையான மருந்து

தேவையான பொருட்கள்
-------------------------------------------
மருதம்பட்டை - 2 to 3
பூண்டு - 8 பல்
எழுமிச்சை சாறு - 6 பழம்
ஆப்பிள் வினீகர் - 200ml
தேன் - 200ml

செய்முறை
--------------------

மருதம்பட்டையை நீரில் போட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி ஆரிய பின் அதில் பூண்டு சாறு, எழுமிச்சை சாறு, ஆப்பிள் வீனிகர், தேன் இவைகளை கலந்தால் மருந்து தயார்.

பயன்படுத்தும் முறை
-------------------------------------

காலை வெறும் வயிற்றில் 1 Spoon 1 டம்ளர் வெது வெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். உணவிற்கு பின் 15 நிமிடம் கழித்து மூன்று வேளையும் குடிக்க வேண்டும்.

உடனை இதை தயார் செய்து கொடுக்க ஆரம்பித்தோம். இதனுடன் அக்குபங்சர் மற்றும் வர்ம சிகிச்சையும் சேர்த்து கொடுத்தோம். பின் ஒவ்வொறு வாரமும் அதிசியங்கள் கண் முன்னே நிகழ்ந்தது.

நிற்கவே முடியாமல் இருந்த என் சித்தி

மருத்து எடுத்த 1 வாரத்திலே நிற்க ஆரம்பித்தார்.

2 வது வாரத்தில் காலை இழுத்து நடக்க ஆரம்பித்தார்.

3 வது வாரத்தில் காலை தூக்கி நன்றாக நடந்தார்.

4 வது வாரத்தில் செயலிலந்த இடது கையை தூக்கினார்.

இது அத்தனையும் ஒரு மாதத்தில் நடந்து முடிந்தது. நம்ப முடியாத அளவிற்கு வேகமான முன்னேற்றம். அவர் நடப்பது அவருக்கே வியப்பை ஏற்படுத்தியது. என் சித்திக்கு இரண்டு பெண் பிள்ளைகள்.

இனி என் வாழ்நாள் முடிந்தது என நினைத்தேன் ஒரு மாதத்தில் என்னை மீட்டு கொடுத்துவிட்டீர்கள் என கண் கலங்கினார். வீட்டில் அனைவருக்கும் வியப்பு கலந்த மகிழ்ச்சி. இத்துனை வேகத்தில் பக்கவாதம் குணமானதை யாரும் இதுவரை பார்த்ததில்லை.

இவ்வளவு துள்ளியமான வேகமாக வேலை செய்யும் சித்த மருந்துகளையும்  மருத்துவமுறைகளையும் நம் முன்னோர்கள் நமக்கு அழகாக வடிவமைத்து கொடுத்துள்ளார்கள். நாம் இந்த மண்ணில் பிறந்ததற்கே மிகப்பெரும் பேறு பெற்றிருக்க வேண்டும்.

இதை விடுத்து மக்கள் ஆங்கில மருத்துவத்தில் வீழ்வது அவர்கள் விதி என்றே சொல்லவேண்டும்.

இதுவே என் சித்தி ஆங்கல வைத்தியம் பார்த்திருந்தால் இந்நேரம் மூளையில் கட்டி என அறுவை சிகிச்சை செய்து, உணவை கொடுக்க மூக்கில் ஒரு குழாய், காற்றை சுவாசிக்க கழுத்தில் துளையிட்டு அதில் ஒரு குழாய், சிறுநீர் கழிக்க ஒரு குழாய் என படுக்க வைத்திருப்பார்கள்.

உங்களை வாழ்நாள் முழுவதும் நோயாளியாக வைத்து கொலை செய்யும் ஆங்கில மருத்துவம் வேகமானதா ? சிறந்ததா ?

அல்லது 1 மாதத்தில் பக்கவாதத்தை குணப்படுத்திய நம் மரபு மருத்துவம் வேகமானதா ? சிறந்ததா ?

என நீங்களே முடிவு செய்யுங்கள்.

யார் என்று பாராமல், முகம் கூட தெரியாத ஒருவருக்கு போனில் மருத்து சொன்ன திரு.ஜகத்குரு ஐயா அவர்களுக்கு கோடி நன்றிகள்.
[29/07 09:55] jagathguru: 😊🙏🙏

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...