Sunday, July 23, 2017

இஞ்சி – சுக்கு – கடுக்காய் -உண்ணும் முறை

இஞ்சி – சுக்கு – கடுக்காய் -உண்ணும் முறை

 

 

கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு 

மாலையில் கடுக்காய் மண்டலம் 

கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி 

நடப்பவனும் கோலை வீசி குலாவி 

நடப்பானே …

சித்தர்கள் இது போன்ற பாடல்கள் வடிவில் எளிய முறையில் நோய் களைத் தீர்க்கும் வழிமுறைகளை வடித்துள்ளனர்.ஆனால் இவைகளின் உண்மை விளக்கங்களை கண்டறிந்து அதன் படி உண்டோமானால் பாடல்களில் கண்டபடி உண்மையான பலன்களை அடைய முடியும்.

 

சித்த மருத்துவ முறையின் தத்துவமே அண்டத்தில்  உள்ளது பிண்டத்தில் என்பதுதான் அதாவது அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங் களின் ஒரு பகுதிதான் பிண்டமாகிய நமது உடலிலும் இயங்குகின்றது.

 

நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்,என்ற ஐந்து பூதங்களில் நிலம் கீழே நாம் வாழ்வதற்கு ஆதாரமாகவும்,ஆகாயம் மேலே சாட்சியாகவும் இருப் பதால் நடுவில் உள்ள நீர்,நெருப்பு,காற்று என்ற மூன்று வித சக்திகளை மட்டும் இயங்கும் சக்திகளாக குறிப்பிட்டுள்ளனர்.

 

எனவேதான் சித்த மருத்துவ முறையில் நாடி பிடித்து நோய்களைக் கணிக்க மூன்று விரல்களைப் பயன்படுத்துகின்றனர்.அவை வாதம், பித்தம்,கபம் எனப்படும்.

 

வாதம் –  காற்று –     1,மாத்திரை அளவு –

பித்தம் – நெருப்பு –  1/2,மாத்திரை அளவு-

கபம் –       நீர் –             1/4-மாத்திரை  அளவு –

 

இது நாடியின் அளவுகளாகும் இதன் படி கையில் நாடி துடித்தால் உடலில் நோய் இல்லை என அர்த்தம்.இந்த நாடி அளவுகளை கூடவோ குறை யவோ அல்லாமல் சமன் படுத்தும் மருந்துகள் தான் மேற்கண்ட பாடலில் உள்ளவை.

 

வாதம் –  காற்று –     1,மாத்திரை அளவு – ——– சுக்கு 

பித்தம் – நெருப்பு –  1/2,மாத்திரை அளவு——— இஞ்சி 

கபம் –       நீர் –             1/4-மாத்திரை  அளவு ——– கடுக்காய் 

 

இஞ்சி,சுக்கு,கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத,பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை.அடுத்து ,

 

சித்த மருத்துவத்தின் அடிப்படையே ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும் ,நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான். எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.சுத்தி முறை எனும் பிரிவு சித்த மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.

 

சுக்குக்கு புற நஞ்சு – கடுக்காய்க்கு அக நஞ்சு எனும் விளக்கம் உள்ளது அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு எனவும் ,கடுக்காயில் உள்ளே உள்ள கொட்டை  நஞ்சு எனவே இவைகளை நீக்கினால்தான் அமிர்தமாக வேலை செய்யும்.

 

சுக்கு சுத்தி ; தரமான சுக்கு தேவையான அளவில் வாங்கி சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஒரு போஸ்ட் கார்ட் கணத்தில் பூசி காயவிடவும்.பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும்.பிறகு நன்கு ஆரிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும் .இதனை இடித்து சலித்து பதனம் செய்யவும். 

 

கடுக்காய் சுத்தி ;கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.கொட்டை  நஞ்சு எனவே  நீக்கிவிடவும்.சதைப் பகுதியை இடித்து தூள் செய்யவும்.

 

இஞ்சி சுத்தி ; இஞ்சியை சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து சாற்றை வடித்து வைக்கவும் இதை பத்து நிமிடம் கழித்து பார்க்க அடியில் சுண்ணாம்பு போல் வண்டல் இருக்கும் இதுதான் நஞ்சு எனவே மேலே உள்ள தெளிவை மட்டும் எடுத்துக் கொள்ளவும் .

 

இந்த முறையில் சுத்தி செய்த பிறகு அமிர்தமாக வேலை செய்யும். 

உண்ணும் முறை :

காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இது பித்தத்தை சமன் செய்யும்.

 

மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும்.இது வாயுவை சமன் செய்யும்.

 

இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும்.இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும்.மலம் மிதமாக இளகிப் போகும்.

 

இதன்படி ஒரு மண்டலம் உண்ண  உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும். 

நாடித்துடிப்பு

1. உங்கள் நாடித்துடிப்பை எங்கே உணர முடியும்?
மணிக்கட்டில், அதாவது கட்டை விரலுக்குச் சற்று கீழே. இதுவே மிக எளிதாக உங்கள் நாடித்துடிப்பை உணரக் கூடிய இடம்.

2. ஏன் உங்கள் நாடித்துடிப்பை பரிசோதனை செய்ய வேண்டும்?

முக்கியமான காரணம் உங்கள் நாடித் துடிப்பின் எண்ணிக்கையை அறிந்து கொள்வது. இதன் மூலம் இதயம் சீராகச் சரியான எண்ணிக்கையிலும் துடிக்கிறதா என்று  அறிந்து கொள்ள முடியும்.

3. எப்போது நாடித்துடிப்பைப் பரிசோதனை செய்யலாம்?

நீங்கள் நல்ல ஓய்வில் இருக்கும்போது, காஃபின், நிக்கோடின் போன்ற ஊக்கிகளைப் பயன் படுத்தாது இருக்கும் போதும்.

4. நாடித்துடிப்பின் இயல்பான அளவு என்ன?

ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 100 வரை. உங்கள் மன அழுத்தம், நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற மருந்துகள் போன்ற வற்றால் உங்கள் நாடித்துடிப்பு குறையவோ,  கூடவோ செய்யலாம்.

5. எப்பொழுது நாடித்துடிப்பு சம்பந்தமாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்?

நாம் ஒவ்வொருவரும் தனித்தனியான இயல்பு உள்ளவர்கள். ஆகவே பொது வான ஒரு வரையறையைச் சொல்வது கடினம். நாடித்துடிப்பு சிலருக்கு 100க்கு மேல் இருக்கலாம். சிலருக்கு 60க்குக் கீழ் இருக்கலாம். தொடர்ந்து 120க்கு மேல் இருந்தாலோ அல்லது தொடர்ந்து 40க்குக் கீழ் இருந்தாலோ நீங்கள் மருத்துவ ஆலோசனையைப்  பெற வேண்டியது அவசியம்.

உங்கள் நாடித்துடிப்பு என்பது உங்கள் இதயம் துடிக்கிற அளவு. இதை இதயத் துடிப்பு அளவு (ஹார்ட் ரேட்) என்கிறோம். ஒரு நிமிடத்திற்கு உங்கள் இதயம் துடிக்கிற  எண்ணிக்கையின் அளவு இது.

இதயத்துடிப்பு நபருக்கு நபர் வயது, மனநிலை, செய்கிற வேலையைப் பொறுத்து மாறுபடும். இதயத்துடிப்பு, நாடித்துடிப்பு இவற்றின் எண்ணிக்கை மாறுபடுவது, சீரற்ற தன்மை  இரண்டுமே இருதய நோய் களாலோ அல்லது இருதயம் தொடர் புடைய வேறுசில பிரச்னைகளாலோ ஏற்படலாம். இதனை இதயத்தின் சீரற்ற தன்மை  கார்டியாக் அரித் மியா என்று சொல்கிறோம். ஆகவே உங்கள் நாடித் துடிப்பை அறிந்து கொள்வது உங்கள் இதயத்தை அறிந்து கொள்வது ஆகும்.

நாடித்துடிப்பை எப்படி பரிசோதிப்பது?

உங்கள் ஆள் காட்டி, இரண்டாவது, மூன்றாவது விரல்களின் நுனிகளை அடுத்த கையின் மணிக்கட்டின் கட்டை விரலின் அடிப்பாகத்திற்குச் சற்று கீழே வைக்கவும். விரல்களை லேசாக அழுத்தவும். நாடித் துடிப்பை இப்போது உணர முடியும்.

*உடலை வலுவூட்டக் கூடிய 3 வகை களி!*

*உடலை வலுவூட்டக் கூடிய 3 வகை களி!*

நமது பழந்தமிழரின் உணவில் மிக முக்கியமானது களி. பல்வேறு வகையான களிகளை நம் மக்கள் உண்டு வந்தார்கள். நீண்ட நேர பசியைத் தாங்குவதற்கும், உடலை உரமாக்கவும் களி சிறந்த உணவு.

*இப்போதைய தலைமுறையில் பலர் களி வகைகளை வீட்டில் செய்வது கிடையாது.*

ஆனால் ஆரோக்கிய வாழ்வை நாடும் மக்கள் மீண்டும் பழந்தமிழர் உணவுமுறையை மீட்டெடுக்க விரும்புகிறார்கள்.

*சிறுதானிய உணவு வகைகளையும், களி வகைகளையும் பலர் பரிமாற  ஆரம்பித்திருக்கிறார்கள்.*

*மூன்று முக்கியமான களி வகைகளை பற்றி இங்கே பார்ப்போம்: -*

1. *கேப்பைக் களி  : -*

ராகி களி, கேப்பைக் களி, கேழ்வரகுக் களி என வெவ்வேறு பெயரில் மக்கள் இதனை அழைக்கிறார்கள். இந்தக் களியை எளிதாக செய்யலாம். முதலில்  ராகியை நன்றாக அரைத்து ராகி மாவைத் தயார் செய்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். ராகி மாவை, கொதி நீரில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பின்னர் உருண்டை வடிவில் வார்த்து எடுத்துச் சாப்பிடலாம்.

கேப்பைக் களியைப் பொறுத்தவரையில் அதனுடன்  வெல்லம், கருப்பட்டி, தேங்காய் போன்றவற்றைச் சேர்த்துச் சாப்பிடலாம்.

*பலன்கள் : -*

கால்சியம் மிகவும் அதிகம் என்பதால், வளரும் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், பெண்கள், தாய்மார்களுக்கு ஏற்ற உணவு இது.
கேழ்வரகு, பசியைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. 

உடல் வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் கொண்டது. கோடையில்  அனைவருமே காலை அல்லது மதிய உணவாக எடுத்து கொள்ளலாம்
வைட்டமின்கள், தாதுஉப்புகள் நிறைந்தது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். குடல் புண்களை ஆற்றும்.

2. *உளுத்தங்களி : -*

*தேவையானவை  :-*

நன்கு அரைத்த உளுத்தம் பருப்பு மாவு -  ஆறு கைப்பிடி

கருப்பட்டி அல்லது வெல்லம் - தேவையான அளவு

தேங்காய் துருவியது

நல்lலெண்ணெய் - நான்கு ஸ்பூன்

அரிசிமாவு - சிறிதளவு

ஏலக்காய் -  நான்கு கிராம்

வறுத்த பாசி பருப்பு - சிறிதளவு

*செய்முறை : -*

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி  அரிசிமாவு,  வறுத்த  பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றைச்  சேர்த்து கலக்கவும் .பின்னர் கொதிக்க வைத்து, அதனுடன் கருப்பட்டி அல்லது வெல்லத்துடன்  எண்ணெய் ஊற்றி நன்றாகக் கிண்டவும். பின்னர்  உளுந்து மாவைப் போட்டு நன்றாக கிண்டவும். ஏலக்காய், தேங்காய் துருவல்  ஆகியவற்றை சேர்த்து கிளறி பரிமாறவும்.

*பலன்கள் :-*

உளுத்தங்களியில் கார்ப்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் மற்றும் தாது உப்புகள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன. இடுப்பு எலும்பு வலுவாகும். பூப்பெய்தும் பெண்கள், கர்ப்பிணிகள், விளையாட்டு வீரர்கள் போன்றோருக்கு மிகவும் ஏற்றது. உடல் எடையைக் கூட்ட விரும்புபவர்கள் வாரம் இரு முறையாவது இதைச்  செய்து சாப்பிடுவது  பலன் அளிக்கும்.


3. *வெந்தயக் களி  :-*

*தேவையானவை:*

புழுங்கல் அரிசி - 300 கிராம்

உளுந்தம் பருப்பு - 50 கிராம்

வெந்தயம் - 50 கிராம்

நல்லெண்ணெய் -  தேவையான அளவு

நாட்டுச் சர்க்கரை - 300 கிராம்

*செய்முறை  :-*

புழுங்கல் அரிசியை இரவே ஊறவைத்து நன்றாக மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். உளுத்தம் பருப்புடன், வெந்தயம் சேர்த்து, தனியாக அரைத்துக் கொள்ளவும்.  பின்னர் புழுங்கல் அரிசி மாவுடன், உளுந்து மாவைக் கலக்கவும்.  தோசை மாவு பதத்திற்கு நன்றாகக் கலந்த பிறகு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி,  கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.  களி போல நன்றாகத் திரண்டு வரும்போது நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துக் கலக்க வேண்டும். பாத்திரத்தில் கிண்டும் போது நடுவே கட்டிகள் வராத அளவுக்கு கிண்ட வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். பின்னர் உருண்டைகளாக உருட்டிச் சாப்பிடலாம்.

*பலன்கள் :-*

கிராமத்தில்  வயதானவர்களுக்கு தரப்படும் முக்கியமான  உணவு வெந்தயக்களி. இதில் அத்தனை சத்துக்களும் இருக்கிறது. உடலை வலுவூட்டும் .உடல் குளுமை அடையும், செரிமானம் சீராகும்,  வயிற்றுப்புண், வாய்ப்புண் இருந்தால் குணம் கிடைக்கும்.

*ஆகவே, களி சாப்பிட்டால், நலம் பெருகும்.*

Saturday, July 22, 2017

உள்ளங்காலில் ஏற்படும் எரிச்சல்

பாகல் இலையின் சாறு எடுத்து உள்ளங்காலில் தடவி வர உள்ளங்காலில் ஏற்படும் எரிச்சல் நீங்கும். www.siddharmedicine.in @ 9943909495

கருப்பையை பாதுகாக்க எளிய டிப்ஸ்!

கருப்பையை பாதுகாக்க எளிய டிப்ஸ்!

கருப்பை பெண்ணின் உடல் வலிமைக்கு தேவையான ஹார்மோன்களைத் தருகிறது. கருப்பை அகற்றியவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன, கருப்பையை எப்படி பாதுகாப்பது போன்றவை குறித்து விளக்குகிறார் மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் சுமதி செந்தில்குமார்.

பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து மாதவிடாய் நிற்கும் வரை சினைமுட்டைப் பையில் இருந்து மாதம் ஒரு முட்டை வெளியாகும். அது விந்துவுடன் சேர்ந்து கரு உருவாகும்.

அது கருப்பையில் வளர்ச்சியடைந்து குழந்தை பிறக்கிறது. பலரும் சினைப்பையும், கருப்பையும் குழந்தை பிறப்பதற்காக மட்டும் தான் என்று நினைக்கிறார்கள்.

பெண்களின் சினை முட்டைப் பையில் உருவாகும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் பெண் தன்மை மற்றும் சத்துக்களை கொடுக்கிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது.

மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் ஈஸ்ட்ரோ ஜன் சுரப்பு அதிகம் இருக்கும். அதன் பின்னர் மெல்ல மெல்ல குறைந்து விடும். பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் சராசரி வயது 51.

மாதவிடாய் நிற்பதற்கு முன்பே கருப்பையை எடுத்து விடுவதால் பெண்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். உடல்சூடு, இரவில் அதிகம் வியர்த்தல், தூக்கமின்மை, அடிக்கடி கோபம், சலிப்பு, மறதி, மனஉளைச்சல், உடல் வலி போன்ற பிரச்னைகள் தாக்கும்.

சிறுநீர்ப்பையில் கிருமித்தொற்று உண்டாகும். உடலுறவில் பிரச்னை ஏற்படும். எலும்பு தேய்மானம் மற்றும் முதுகெலும்பு உடைதல் உள்ளிட்ட தொந்தரவுகளும் வரும்.

பெண்கள் 45 வயதுக்கு முன்னரே கருப்பையை எடுக்கும் போது இது போன்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. தவிர்க்க முடியாத காரணத்தால் கருப்பையை எடுக்க நேரும்போது, சினை முட்டைப் பையை விட்டு விட்டால் இப்பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் என்று சிலர் நினைக்கின்றனர்.

ஆனால் கருப்பை எடுத்த சில ஆண்டுகளிலேயே சினை முட்டைப் பையும் இயங்காது. இந்த மெனோபாஸ் அறிகுறிகளுக்கு ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி சிகிச்சை உண்டு. ஆனால் அது கடும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.

ரத்தக் குழாயில் ரத்தம் உறைதல், மார்பக புற்றுநோய் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எனவே கருப்பையை எடுப்பதை விட அதை பாதுகாப்பதே சிறந்தது.

பாதுகாப்பு முறை: அதிகமாக உதிரம் போதல், வலி, சிறிய கட்டிகள், வெள்ளைப்படுதல் ஆகியவற்றை காரணம் காட்டி கருப்பையை அகற்ற வேண்டாம்.

இது போன்ற பிரச்னைகளுக்கு மாற்று வழிகளை கடைபிடிக்கலாம். கட்டி மிகவும் பெரிதாக இருத்தல், வளர்ந்து கொண்டே போதல், கேன்சர் கட்டியாக மாற வாய்ப்பு இருத்தல், மாதவிடாய் உதிரம் மருந்துக்குக் கட்டுப்படாமல் போதல் போன்ற வழியில்லாத காரணத்தால் மட்டுமே கருப்பையை அகற்றலாம். பிறகு கட்டி வரலாம் என்ற கற்பனையில் கருப்பையை அகற்றக் கூடாது.

நவீன மருத்துவத்தில் சினைப்பை மற்றும் கருப்பையை அகற்றாமலேயே கட்டியை அகற்ற லேப்ராஸ்கோபி முறையில் பல சிகிச்சைகள் உள்ளன. மெனோபாஸ் பிரச்னைகளுக்கு கர்ப்பவியல் நிபுணர்களை அணுகும் போது சரியான மருத்துவம் கிடைக்கும்.

கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை எதுவாக இருந்தாலும் அதில் சில பிரச்னைகளும் இருக்கும். கருப்பை வாயில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை சிறிய சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

24 வயது முதல் 64 வயது வரை உடலுறவு வைத்துக் கொள்ளும் பெண்கள் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை பேப்ஸ்மியர் டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். முடிந்தளவு கருப்பை மற்றும் சினை முட்டைப் பையை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

ரெசிபி

ஆட்டு ஈரல் சூப்: ஆட்டு ஈரல் கால் கிலோ எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயம் 10 உரித்து வெட்டிக் கொள்ளவும், தனியா, மிளகு, சீரகம், மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.

பெரிய வெங்காயம் - பாதி, தக்காளி 1, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தேவையான அளவு. தனியா, சீரகம், மிளகு ஆகியவற்றை பொடியாக்கிக் கொள்ளவும்.

அரிசி களைந்த தண்ணீரை குக்கரில் ஊற்றி அதில் ஈரல் துண்டுகள், அரைத்த பொடி, வெங்காயத்தை தனியாக வதக்கி அரைத்து இத்துடன் சேர்க்கவும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து கடைசியில் மிளகுத்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். இதில் போதுமான அளவு இரும்புச் சத்து உள்ளது. பெண்கள் வாரம் ஒரு முறை இதை அருந்தலாம்.

பனீர் கேரட் குருமா: பனீர் அரை கப், கேரட் கால் கிலோ, வெங்காயம் 4, தக்காளி 4, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, பச்சை மிளகாய், கரம் மசாலா அரை டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண் ணெய் விட்டு சோம்பு, பட்டை கிராம்பு உள்ளிட்டவற்றை வதக்கவும். பின்னர் இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். சின்ன வெங்காயம், தக்காளியை தனியாக வதக்கி அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு தண்ணீர் விட்டு நீள வாக்கில் கேரட்டை வெட்டி போடவும். தேவையான உப்பு சேர்த்து வேக விடவும். மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். தக்காளி, வெங்காயம் அரைத்த பேஸ்ட் சேர்த்து கொதிக்க விடவும்.

இறுதியில் பனீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். கொத்தமல்லித் தழை சேர்த்து பரிமாறலாம்.

நூடுல்ஸ் கட்லட்: தேவையான அளவு நூடுல்சை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணியை அரை வேக்காடாக எடுத்துக் கொள்ளவும்.

உருளைக் கிழங்கை தனியாக வேக வைத்து மசித்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு அரைத்துக் கொள்ளவும். வேக வைத்த நூடுல்ஸ், வேகவைத்த காய்கறிகள், உருளைக் கிழங்கு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

வெண்ணெயைத் துருவி இதில் சேர்த்து பிசைந்து கொள்ளவும். மைதா, பிரட் தூள் ஆகிவற்றை எடுத்துக் கொள்ள வும். பிசைந்த கலவையை பிடித்த வடிவத்தில் தட்டி முதலில் மைதா வில் பிரட்டி பின்னர் ரொட்டித் தூளில் பிரட்டி பின்னர் தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இரு புறமும் சிவக்க வேக வைத்து எடுக்கவும்.

டயட்

அடிக்கடி அபார்ஷன், அதிக டெலிவரி, மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு, சிறுநீரகத் தொற்று, சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், தைராய்டு போன்ற உடல் நலக் குறைபாடு இருப்பவர்களுக்கு கருப்பை பிரச்னை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

பரம்பரை காரணங்களாலும் பெண்களுக்கு வரலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சோதித்து கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது அவசியம்.

அதே போல் உயரத்துக்கு ஏற்ற எடையை பராமரித்தல், தினமும் வாக்கிங், சத்தான உணவு என்று வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால் தான் கருப்பையை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் உட்கொள்ள வேண்டும். இரும்புச் சத்து உணவுகள் அவசியம். உப்பை கண்டிப்பாக குறைக்கவும். குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்பு வகைகள், ஐஸ் கிரீம், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள், கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும்.

அரிசி உணவுகளையும் குறைக்க வேண்டும். உணவில் ஒரு கப் சாதத்துடன் இரண்டு கப் காய்கறி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

கட்டாயம் ஒரு கீரை இருக்கட்டும். முளைக்கீரை மற்றும் வெந்தயக் கீரை ஆகியவற்றை வாரம் இரண்டு முறையாவது சேர்க்க வேண்டும்.

கருப்பையை எடுத்தவர்கள் ஒரு நாளைக்கு 1200 கலோரி அளவுக்கான உணவு மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் கருப்பை எடுத்த உடன் பெண்களின் எடை அதிகரிக்கும்.

மேலும் சாதத்துக்கு பதிலாக பழங்கள், கீரைகள் அதிகம் சாப்பிடுவது அவசியம். இத்துடன் பிறப்புறுப்பு, கருப்பை வாய்ப்பகுதியில் நோய்த் தொற்று ஏற்படாதவாறு சுத்தத்தை கடை பிடிக்க வேண்டியதும் அவசியம் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

வெள்ளரி விதையை அரைத்து பாலில் கலந்து குடித்தால் சிறுநீர் தொடர்பான பிரச்னைகள் தீரும்.

வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

மாதவிலக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படாதவர்கள் வெங்காயத் தாள், காயவைத்த கறுப்பு எள், கருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளவும்.

மாதவிலக்கு தடைபடும் காலங்களில் காலை, மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு மூன்று நாட்கள் சாப்பிட்டால் மாதவிலக்கு ஏற்படும்.

விளா மரத்தின் பிசினை மஞ்சள் சேர்த்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

வாழைப்பூவை இடித்து சாறு எடுத்து அதில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குண மாகும்.

வல்லாரைக் கீரை சாற்றில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறு சரியாகும்.

லவங்கப் பட்டையை பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு நிற்கும்.

முள் இலவம்பட்டையை 200 கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து தினமும் காலை, மாலை இரு வேளையும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்னை குணமாகும்.

முருங்கை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கருப்பை பலப்படும்.

பல் சொத்தைப் பற்றி தெரியுமா? மருத்துவா்.ஜெ.ஜெயபிரகாஷ்

பல் சொத்தைப் பற்றி தெரியுமா?
மருத்துவா்.ஜெ.ஜெயபிரகாஷ்
+919840341404

பல் சொத்தை என்றதும், பல்லை புடுங்கலாமா? சிமெண்ட் வைத்து அடைக்கலாமா என்று யோசிக்கிறோமேத் தவிர பல் சொத்தை ஏன் எப்படி ஏற்படுகிறது என்று ஆராய்கிறோமா?

ஏன் ஆராய வேண்டும் என்று கேட்கலாம்? அப்படி ஆராய்ந்து உண்மையை அறிந்தால்தான் அடுத்த பல்லை சொத்தையாகாமல் தடுக்கலாம்.

பல் சொத்தை என்பது பரம்பரை வியாதியாகும். தாய்க்கோ, தந்தைக்கோ பல் சொத்தை இருந்தால் நிச்சயமாக அவர்களது குழந்தைகளுக்கும் பல் சொத்தை ஏற்படும்.

மேலும் நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்துமே கூழ் போன்ற பசை உணவாக உள்ளன.

காய்கறியை பச்சையாக சாப்பிட்டால் அது பற்களில் ஒட்டாது. ஆனால் அதை சமைக்கும் போது அது பசையாக மாறி பற்களில் ஒட்டுகிறது. இப்படி நாள்தோறும் பற்களில் ஒட்டிக் கொள்ளும் உணவுத் துகள்கள் பற்களை பாதிக்கின்றன.

பல் தேய்க்கும் முறை பற்றியும் நமக்கு சரியாகத் தெரிவதில்லை. விளம்பரத்தில் வருவது போல பிரஷ் முழுவதும் பேஸ்டை நிரப்பி பல் துலக்கக் கூடாது. ஒரு பட்டாணி அளவுக்குத்தான் பேஸ்ட் வைத்து பல் தேய்க்க வேண்டும். அதுவும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமேத் தேய்க்க வேண்டும். ஆனால் பலரும் பிரஷ்ஷை வாயில் வைத்தால் எடுக்க பல மணி ஆகிறது. இதனால் நமது பல்லில் இருக்கும் எனாமல் தேய்ந்து போய் பல் கூச்சம் ஏற்படுகிறது.

ப‌ல் தே‌ய்‌ப்பது ம‌ட்டு‌ம் மு‌க்‌கியம‌ல்ல.. வாயை ந‌ன்கு கொ‌ப்ப‌ளி‌க்க வே‌ண்டியது இ‌ர‌வி‌ல் படு‌க்க‌ச் செ‌ல்லு‌ம் மு‌ன்பு உ‌ப்பு‌த் த‌‌ண்‌ணீ‌ரா‌ல் வா‌யை கொ‌ப்ப‌ளி‌ப்பது ‌மிகவு‌ம் ந‌ல்லது.

ஈறு ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்ப‌டாம‌ல் இரு‌க்க, ஈறுகளு‌க்கு ந‌ல்ல ர‌த்த ஓ‌ட்ட‌ம் இரு‌க்க வே‌ண்டு‌ம். எ‌ந்த‌ப் பகு‌‌தி‌க்கு‌ம் ர‌த்த ஓ‌ட்ட‌ம் குறையு‌ம் போதுதா‌ன் ஏ‌ற்படு‌கிறது. கா‌ய்க‌றிக‌ள், பழ‌ங்களை ந‌ன்கு கடி‌த்து மெ‌ன்று சா‌ப்‌பிடுவது ஈறு‌ப்பகு‌திகளு‌க்கு ந‌ல்ல ப‌யி‌ற்‌சியாக அமையு‌ம்.

அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்வத‌ற்கு‌க் கூட சொ‌த்தை‌ப் ப‌ல் இரு‌ப்பவ‌ர்களு‌க்கு ‌சில அறுவை ‌சி‌‌கி‌ச்சைகளை செ‌ய்ய மா‌ட்டா‌ர்க‌ள். சொ‌‌த்தை‌ப் ப‌ல்லை ‌அறுவை செ‌ய்வா‌ர்க‌ள். ‌நீ‌‌ரி‌ழிவு என‌ப்படு‌ம் ச‌ர்‌க்கரை ‌இரு‌க்கு‌ம் அனை‌த்து ‌விஷய‌ங்களு‌ம் சொ‌த்தை‌ப் ப‌ல்லு‌க்கு‌ம் பொரு‌ந்து‌ம்.

சா‌ப்‌பிடு‌ம் போது ந‌ன்கு தி‌ண்பதா‌ல் உண‌வி‌ல் அ‌திகள‌வி‌ல் உ‌மி‌‌ழ்‌நீ‌ர் சே‌ர்‌‌ந்து உணவு செ‌ரிமான‌த்‌‌தி‌ற்கு உத‌வு‌கிறது. அதே‌ப்போல சா‌ப்‌பி‌ட்டது‌ம் வாயை ந‌ல்ல த‌ண்‌ணீ‌ரி‌ல் கொ‌ப்ப‌ளி‌த்து அ‌ந்த ‌நீரை து‌ப்‌பி‌விட‌க் கூடாது. முழு‌ங்‌கி‌விட வே‌ண்டு‌ம். இதுவு‌ம் செ‌ரிமான‌த்‌தி‌ற்கு உத‌வி செ‌ய்யு‌ம்.

அ‌ந்த கால‌த்‌தி‌ல் சா‌ப்‌பி‌ட்டு முடி‌ந்தது‌ம் வெ‌ற்‌றிலை பா‌க்கு போடுவா‌ர்க‌ள். வெ‌ற்‌றிலை‌க்கு செ‌ரிமான‌த் ‌திறனு‌ம், ச‌ளியை‌ப் போ‌க்கு‌ம் ச‌க்‌தியு‌ம் உ‌ள்ளது. வெ‌ற்‌றிலை‌ப் பா‌க்கு‌ப் போ‌ட்டா‌ல் அ‌ந்த சாறையு‌ம் து‌ப்‌பி‌விட‌க் கூடாது.

தா‌ய், த‌ந்தைய‌ரி‌ல் இருவரு‌க்கோ அ‌ல்லது யாரேனு‌ம் ஒருவரு‌க்கோ ‌ப‌ல் சொ‌‌த்தை இரு‌ந்தா‌ல், அவ‌ர்களது ‌பி‌ள்ளை‌க்கு‌ம் ப‌ல் சொ‌த்தை க‌ண்டி‌ப்பாக வரு‌ம். அதனை த‌வி‌ர்‌க்க முடியாது. அ‌ப்பாவை ‌விட, அ‌ம்மா‌வி‌ற்கு ப‌ல் சொ‌த்தை இரு‌ந்தா‌ல் குழ‌ந்தை‌க்கு வர அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் உ‌ள்ளன.

ப‌ல்சொ‌த்தை‌க்கு ச‌ர்வா‌ங்காசன‌ம், ‌சிரசாசன‌ம் செ‌ய்தா‌ல் ‌பி‌ர‌ச்‌சினை குறையு‌ம். ‌சிரசாசன‌ம் செ‌ய்யு‌ம் போது ப‌ல் சொ‌த்தை மாறுவது க‌ண்கூடாக‌த் தெ‌ரியு‌ம். பொதுவாக ப‌ற்களை ‌பிடு‌ங்க‌க் கூடாது எ‌ன்பா‌ர்க‌ள். ‌கீ‌ழ்‌ப் ப‌ல்லை‌ப் புடு‌ங்‌கினாலு‌ம் மே‌ல் ப‌ல்லை‌ப் புடு‌ங்கவே‌க் கூடாது. ஏ‌ன் எ‌னி‌ல் மே‌ல் ப‌ல், நேரடியாக மூளையுட‌ன் தொட‌ர்பு ‌கொ‌ண்டிரு‌ப்பதாகு‌ம்.

த‌ற்போது சொ‌த்தை‌ப் ப‌ற்க‌‌ளி‌ன் வே‌ர்களு‌க்கு சொ‌த்தையை ச‌ரி செ‌ய்யு‌ம் முறை வ‌ந்து‌ள்ளது. அ‌தி‌ல்லாம‌ல் ஒரு ப‌ல்லை‌ப் புடு‌ங்‌கி‌வி‌‌ட்டா‌ல் அ‌ந்த இட‌த்‌தி‌ல் செ‌ய‌ற்கை‌ப் ப‌ல் பொரு‌த்துவது‌ம் ந‌ல்லது. ஏ‌ன் எ‌னி‌ல் ‌கீ‌ழ்‌ப்ப‌ல்லை‌ப் அதனா‌ல் மே‌ல் ப‌ல் இற‌ங்கு‌ம் ‌நிலை ஏ‌ற்படு‌ம். இதனை‌த் த‌வி‌ர்‌க்கவே செ‌‌ய‌ற்கை‌ப் ப‌ல் பொரு‌த்த‌ப்படு‌கிறது.

ப‌ற்களு‌‌க்கு ப‌ச்சை‌க் கா‌‌ய்க‌றிகளை அதாவது கேர‌ட், வெ‌ள்‌ள‌ரி‌க்கா‌ய் போ‌ன்‌ற‌வ‌ற்றை‌க் கடி‌த்து மெ‌ன்று ‌தி‌ண்பதா‌ல் ந‌ல்ல ப‌யி‌ற்‌சி ‌கிடை‌க்கு‌ம்.

ஆ‌‌யி‌ல் பு‌ல்‌லி‌ங் ப‌ற்‌றி சொ‌ல்லு‌ங்க‌ள்...

ஆ‌யி‌ல் ‌பு‌ல்‌லி‌ங் எ‌ன்பது‌ம் ப‌ற்களு‌க்கு ந‌ன்மை தர‌க்கூடியதுதா‌ன். வெறு‌ம் ந‌ல்லெ‌ண்ணை‌யி‌ல் கூட செ‌ய்யலா‌ம். ஆனா‌ல் வார‌த்‌தி‌ல் ஒரு நா‌ள் ம‌ட்டுமே ஆ‌யி‌ல் பு‌ல்‌லி‌ங் செ‌‌ய்வது ந‌ல்லது.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...