Friday, July 7, 2017

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

காலநிலை மாற்றங்கள் ஏற்படும் போது, அவை ஒத்துக்கொள்ளாமல், சிலர் ஜலதோஷம் மற்றும் புளூ ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதே இதற்கு காரணம். நம் உணவு முறைகளின் மூலமே உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க முடியும்.

வைட்டமின் ஏ, சி, இ:

வைட்டமின் ஏ (பீட்டா-கரோட் டீன்), வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ ஆகியவை உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு தன் மையை அதிகரித்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கேரட், பச்சைக் காய்கறிகள், தக்காளி, செர்ரி, நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்கள் மற்றும் கொய்யாப்பழம் ஆகியவற்றில் இந்த சத்துக்கள் அதிகளவில் உள்ளன. உடலின் ஆரோக்கியம் மற்றும் பலத்தை பேண, தினமும், ஐந்து பாதாம் பருப்பு சாப்பிட்டு வரலாம்.

ப்ரோபயாட்டிக்:

தயிர் மற்றும் பால் சார்ந்த சில பொருட்களில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு ப்ரோபயாட்டிக் என்று பெயர். இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குடலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிக்கும் என்சைமான, இம்யுனோகுளோபின் அதிகளவு சுரக்க, ப்ரோபயாட் டிக் உதவுகிறது. மேலும், இவை நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தொற்றை எதிர்த்து போராட உதவுகிறது.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாறு உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. அவை, அமிலத்தன்மை வாய்ந்த சூழ்நிலையில் வேகமாக வளர்ச்சியடையும் தீங்கு விளைவிக்கும் வைரஸ், பாக்டீரியா ஆகியவற்றை ஊக்குவிக்காமல், உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு சாதகமான, வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது. எலுமிச்சை பழச்சாறை தண்ணீர், சூப்கள், கிரேவிக்கள் அல்லது சாலட்களில் கலந்து சாப்பிடலாம்.

துத்தநாகம்:

இது உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை பலப்படுத்த உதவுகிறது. துத்தநாக பற்றாக்குறை, உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை பாதிப்பதோடு, கடும் பற்றாக்குறை நோய் எதிர்ப்பு தன்மையை முற்றிலுமாக செயல் இழந்து, போக வைக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே, உடலில் துத்தநாக பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண் டும். பீன்ஸ், சிப்பி வகை மீன்கள், பருப்புகள், தயிர் மற்றும் பால் ஆகியவற்றில் அதிகளவில் காணப்படுகிறது.

மூலிகைகள்:

உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும் மூலிகைகளை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை, உடலில் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. மஞ்சள், பூண்டு, சோம்பு ஆகியவற்றில் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது.

இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவுகள் உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க உதவுகின்றன. இயற்கை உணவுகள் கொடுத்து வளர்க்கப்படும் பசுவின் பாலில், சாதாரணமாக வளர்க்கப்படும் பசுவின் பாலை விட 50 சதவீதம் அதிகளவு வைட்டமின் இ சத்தும், 75 சதவீதம் அதிகளவு பீட்டா-கரோட்டினும் இருப்பதாக, தெரியவந்துள்ளது. மேலும், இவற்றில், சிறந்த நோய் எதிர்ப்பு திறனான “சியாசான்தைன்’ மற்றும் “லூட்டீன்’ ஆகியவை, இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக உள்ளன. இதே போன்று, இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றாலும், உடலின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கிறது. அவற்றில் வைட்டமின் சி, தாதுக்கள் மற்றும் சத்துக்கள் ஆகியவையும் அதிகளவில் உள்ளன

*இதய பிரச்சினைகளுக்கு,* (ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, இது சார்ந்த, ட்ரெட் மில், ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க), *பூண்டு!*

*இதய பிரச்சினைகளுக்கு,*
(ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, இது சார்ந்த, ட்ரெட் மில், ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க), *பூண்டு!*

உடல் உறிஞ்ச தகுதியில்லாத கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற,

நிறை மாத கர்பிணி போன்ற தோற்றத்தை தரும் பலரின் பானை வயிற்றை flat ஆக்க,

பச்சை பூண்டு மிக மிக சிறந்தது!

சிலர் இதை அப்படியே சாப்பிட முயற்சித்து,
அதில் உள்ள அமிலத்தன்மையின் வீரியம் தாங்கமுடியாமல்
சமைத்து சாப்பிடுதல் என்ற வசதியான குறிப்பை சாதகமாக்கிகொண்டு,
முயற்சித்து, பயன் இல்லாமல் பாதியிலேயே விட்டு விடுவார்கள்!

பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ குணம் உடையது!

சமைத்தால்,
அதன் இயல்பு தன்மை வெகுவாக பாதிக்கப்படும்!
இயற்கையாகவே,
சமைத்து கெடாத பூண்டு துண்டங்களை நன்கு கடித்து
உமிழ் நீரில் செரிமானம் செய்தலே,
பூண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும் சரியான முறையாகும்!

செய்முறை:
பத்து முழு பூண்டை உரித்து,
தோல் நீக்கி,
சிறு சிறு துண்டுகளாக்கி,
சுத்தமான பருத்தி துணியில் 8லிருந்து12 மணி நேரம்
நிழலில் காய வைத்த பின்,
அதனுடன் 5 முழு எலுமிச்சை பழங்களின் சாற்றோடு,
மூழ்கும் வரை தேன் ஊற்றி,
குறைந்தது 50 நாட்கள் ஊரவைத்த பின்,
காலை மாலை 1/2 ஸ்பூன் பூண்டு துண்டங்களை ருசித்து ரசித்து சாப்பிட,
ஆரோக்யத்தை அருகிலேயே வைத்துக்கொள்ளலாம்!

சாப்பிட அவ்வளவு ருசியாகவும்,
அடுத்த நாள் தானாக உடலும் மனமும் நாடும் ஒரு பதார்த்தமாக விளங்கும்!

6 மாதத்திற்கு ஒரு முறையாவது 48 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வர,
எம தர்மன் நமது பெயரை,
உடனடி காத்திருப்போர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு ,
100 ஆவது வயதிற்குபின் வரும் superannuation retirement பட்டியலில் சேர்த்து விடுவார்!

குறிப்பு: இது மருந்தல்ல!
உணவு!

நேபாளிய மக்களின் நீண்ட ஆயுளின் இரகசியம் இது.....!
*NAGAR*

Thursday, July 6, 2017

சுக பிரசவம் ஆக

சுக பிரசவம் ஆக
ஆப்பிள்பழம்,தேன்,ரோஜா இதழ்,குங்குமப்பூ,ஏலக்காய் இவற்றை அரைத்து 2 கிராம் அளவு சாப்பிட்டு வர வேண்டும். www.siddharmedicine.in@ 9943909495

வெந்தயம் என்ன தான் கசப்பாக இருந்தாலும், தன்னுள் ஏராளமான நன்மைகளை உள்ளடக்கியுள்ளது.

வெந்தயம்:-
பல உணவுகளில் சேர்க்கப்படும் வெந்தயம் என்ன தான் கசப்பாக இருந்தாலும், தன்னுள் ஏராளமான நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக இதில் புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளது. இத்தகைய வெந்தயத்தை நம் முன்னோர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தார்கள.
சர்க்கரை நோய் :-
சர்க்கரை நோயாளிகள் தினமும் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். மேலும் ஆய்வுகளிலும் வெந்தயத்தை சாப்பிடுவதால் டைப்-2 நீரிழிவு பிரச்சனையில் இருந்து நல்ல தீர்வு கிடைக்கும்
மாரடைப்பு :-
வெந்தயம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது மாரடைப்பினால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுவதைத் தடுத்து நல்ல பாதுகாப்பு வழங்கும். இதற்கு வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும்.
புற்றுநோய் :-
வெந்தயத்தில் உள்ள சக்தி வாய்ந்த சத்துக்கள், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் . எனவே உங்களுக்கு புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், வெந்தயத்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள்.
மாதவிடாய் பிடிப்புகள் :-
வெந்தயத்தை பெண்கள் காலையில் எழுந்ததும் உட்கொண்டு வந்தால், நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் வலி நிவாரணி பண்புகள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புக்களைத் தடுக்கும்.
உடல் சூடு :-
கோடையில் உடலில் அதிகம் சூடு பிடிக்கும். இதனைத் தடுக்க தினமும் காலையில் வெந்தயத்தை சாப்பிட வேண்டும். இதனால் உடல் குளிர்ச்சி அடைந்து, உடல் சூடு பிடிப்பது தடுக்கப்படும்.
தாய்ப்பால் உற்பத்தி :-
பிரசவித்த பெண்கள் வெந்தயத்தை தினமும் உட்கொள்வதனால், தாய்ப்பாலின் உற்பத்தி அதிகரிக்கும். இதற்கு வெந்தயத்தில் உள்ள பைட்டோ-ஈஸ்ட்ரோஜென் தான் முக்கிய காரணம்.
கொலஸ்ட்ரால் குறையும் :-
வெந்தயம் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவும் . இதற்கு வெந்தயத்தில் உள்ள நரின்ஜெனின் என்னும் ஃப்ளேவோனாய்டு தான் காரணம். ஆகவே உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பின், வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள்.
ஆர்த்ரிடிஸ் :-
இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் ஆர்த்ரிடிஸ் என்னும் எலும்பு மூட்டு வலி. இது கடுமையான வலியுடன், வீக்கத்துடனும் காணப்படும். ஆனால் தினமும் வெந்தயத்தை வெறும் வயிற்றில் உட்கொண்டு வருவதுடன் அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சிப் பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வலியைக் குறைக்கும்.
செரிமானம் :-
செரிமான பிரச்சனைகள் ஏதும் நேராமல் இருக்க வேண்டுமானால், வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இதனால் செரிமான கோளாறுகள், வாய்வுத் தொல்லை போன்றவை நீங்குவதோடு, மலச்சிக்கல், வயிற்று அல்சர் போன்றவைகளும் தடுக்கப்படும்.
எடை குறையும் :-
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்து, உடல் எடையும் வேகமாக குறையும்.
சிறுநீரக செயல்பாடுகள் :-
வெந்தயத்தில் உள்ள பாலிஃபீனோலிக் ஃப்ளேவோனாய்டுகள், சிறுநீரகங்களின் செயல்பாட்டை அதிகரித்து, சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கும். எனவே சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிடுங்கள்.
கல்லீரல் :-
கல்லீரல் தான் உடலை சுத்தம் செய்கிறது. அத்தகைய கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால், உடல் முழுவதும் பாதிப்பிற்குள்ளாகும். கல்லீரல் முதலில் பாதிக்கப்படுவதற்கு ஆல்கஹால் முக்கிய காரணம். ஆனால் வெந்தயத்தை தினமும் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள பாலிஃபீனாலிக் உட்பொருட்கள் மதுவினால் கல்லீரல் பாதிக்கப்படுவதைத் தடுக்கும்.

*_சர்க்கரை நோய்க்கான எளிய; முற்றிலும் இலவசமான, இயற்கை மருந்து!!_

🙏உமீழ் நீர்:உயிர் நீர்🙏

🍊🍐🍎🍋🍌🍅🍑🍒🍈☕🍵

*_சர்க்கரை நோய்க்கான எளிய; முற்றிலும் இலவசமான,  இயற்கை மருந்து!!_

_```சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்?```_

_```உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து!!```_

_```உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் ,  அதிக அளவு  எடுத்துக் கொண்டனர்!!```_

_```வாழ்வதற்காக  உண்டனர்!  உண்பதற்காக வாழ்ந்தனர்!```_

_```அதனால்தான் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர்!!```_

_```அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்!!```_

   _```உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை!!```_

_```"தூண்டல், துலங்கல்" என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது!```_

_```நம் முன்னோர்கள் நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு வேலை பார்த்தனர்!!```_

_```தற்காலத்தில் நாம் மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு வேலை பார்க்கிறோம்!!```_

_```அந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.  உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது!```_

_```வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்!```_

_```உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல், அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்!!```_

_```நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது!```_

_```உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்!```_

_```நாளடைவில் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது!!```_

_```சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்!!```_
_```எனவே; நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்!```_

_```நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட  உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும்!!```_

_```நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு அழித்து ஒழிப்போம்!!```_

_```இந்த உண்மையை உலகிற்கு சொல்வதால், சர்க்கரை நோயை வைத்துப் பிழைப்பு நடத்தும் பணப்பேய்கள் விடமாட்டார்கள்.  அந்தப் பணப் பேய்களிடமிருந்து நம் மக்களை மீட்க வேண்டும்.  எனவே இதை அதிக நபர்களுக்குப் பகிருங்கள்!
👌நொறுங்கத் தின்னா நூறு வயசு..

🙏உமீழ் நீர் : உயிர் நீர்🙏

👏👌👍🙏

அருமையான பதிவு :
இயற்கை ஆரோக்கிய வாழ்வின் மிகவும் அடிப்படை ஆதாரமாக உள்ள பகிர்வு.

நரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவம்

நரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவம்
September 3, 2014 மருத்துவம்
இன்றைய இளைய தலைமுறையினரை அதிகமாக பாதித்திருக்கும் பிணி இது. எழுதினால் கை நடுங்கும். எதை எடுத்தாலும் ஒரு தடுமாற்றம், அடிக்கடி களைப்பு, சோர்வு, தூக்கமின்மை இவைகள் முக்கிய அறிகுறிகளாகும். நரம்புத் தளர்ச்சி ஏற்பட்ட பெண்கள் மிகவும் பாதிக்கப் படுகின்றார்கள். அடிக்கடி அழுவதும், சிரிப்பதும், பயித்தியம் போல் நடப்பதும் உண்டு.எளிதில் சீரணமாகக் கூடிய உணவு வகைகள் காலைமாலை உணவுடன் இனிப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளுதல் நல்ல உடைகள், வாசனைப் பொருட்கள் கொள்ளுதல் பூந்தோட்டங்களில் கடற்கரையில் உலாவுவது என அவர்கள் மனோ நிலை எப்போதும் சந்தோஷ சூழலில் வைத்திருப்பது அவசியம்.
அன்பும், அரவணைப்பும் அவர்களுக்கு ஆறுதல் தரும்.

சித்த மருந்து..

அமுக்கிராக் கிழங்கு – ஐந்நூறு கிராம்.
மிளகு – இருபத்தி ஐந்து கிராம்.
சுக்கு – இருபத்தி ஐந்து கிராம்.
அதிமதுரம் – இருபத்தி ஐந்து கிராம்.
ஏல அரிசி – இருபத்தி ஐந்து கிராம்.
சாதிக்காய் – இருபத்தி ஐந்து கிராம்.
தேன் – ஒரு கிலோ.
பால் – அரை லிட்டர்.

அமுக்கிராக் கிழங்கை நன்றாக இடித்துக் கொள்ளவும்.ஒரு மண் சட்டியில் பாலை ஊற்றவும்.நல்ல ஒரு வெள்ளைத் துணியால் பானையின் வாயை கட்டி இடித்து வைத்துள்ள அமுக்கிராக் கிழங்குப் பொடியை துணியின் மேல் பரப்பி பானையின் மூடியால் பொடியை மூடி சுமார் முப்பது நிமிடங்கள்
சிறு நெருப்பில் அவித்து எடுத்துக் கொள்ளவும்.

இரண்டு மணி நேரம் நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து சலித்துக் கொள்ளவும்.

மற்ற மருந்துகளை தனித்தனியாக் இடித்து சலித்து மேற்கண்ட அளவில் எடுக்கவும்.

எல்லா பொடிகளையும் நன்கு கலக்கிக் கொள்ளவும்.

ஒரு கிலோ தேனை ஒரு சட்டியில் ஊற்றி [ சிறிய தணலில் ] மேற்கண்ட எல்லாப் பொடிகளையும் சிறிதுசிறிதாகக் கொட்டி நன்கு கிளறி கிண்டி வைக்கவும்

உண்ணும் முறை ; -

காலை உணவு உண்டு ஒரு தேக்கரண்டி அளவும் இரவு உணவிற்குப் பின்னர் ஒரு தேக்கரண்டி அளவும் உட்கொண்டு பால் அருந்தவும்.

நாற்பத்தெட்டு நாட்கள் உண்ண வேண்டும்.

பத்தியம் ; -

குளிர்ந்த பானங்கள், மீன், கருவாடு போன்ற அசைவ உணவுகளை அறவேத் தவிர்க்கவும்.

Wednesday, July 5, 2017

Sai Saravanan:
*உடற்சூடு! உடற்காங்கை!!*
இயற்கை மருத்துவம்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
#சிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை உடற்காங்கை என்பார்கள்.
#உடலுக்கு இயற்கையான சூட்டை தருவது உணவு. உடல் இயங்கிக் கொண்டே இருப்பதால், சூடு ஒரே நிலையில் இருக்கும். இந்த உடற்சூடு எனப்படும் உடல் வெப்பநிலை என்பது வேறு, உடற்காங்கை என்பது வேறு!
#உடற்காங்கை தான் பல நோய்களுக்கு காரணமாகிறது. அஜீரணம், மூட்டுவலி, இளநரை, பாலியல் கோளாறுகள், மாதவிடாய் கோளாறுகள் வாய்வுத்தொல்லை, மூலம் இவைகள் உண்டாவதற்கான காரணங்களில் அதீத உடல் உஷ்ணமும் ஒரு காரணம். உடல் உஷ்ணம் கண்களை பாதிக்கும்.
உடற்காங்கை அதிகமாவதற்கு காரணங்கள் *கோபம், மனக்கவலை, பயம், தாபம்* இவை உடற்சூட்டைக் கூட்டும். உள்ளங்கை, விலா, தலை நெற்றி இவற்றை தொட்டுப்பார்த்தால் சூடு தெரியும்.
#அடுத்த முக்கிய காரணம் உடலிலிருந்து வெளியேறாமல் தங்கி விடும் மலப்பொருட்கள் தான். உடலில் நச்சுப் பொருட்கள் தங்குவது எப்போதும் கெடுதலை விளைவிக்கும்.

1. உடலுக்கு எண்ணை பதமிடுதல் அவசியம். தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்க, உடற்சூட்டினால் பொலிவிழக்கும் தலைமுடி மீண்டும் கருமையடையும். இளநரையை தவிர்க்கலாம். ஈரமுள்ள தலையில் எண்ணை தடவாமல், உலர்ந்த கேசத்தில் எண்ணை தடவி பின் குளிக்க வேண்டும். தலையின் எண்ணை தடவாமல் ஸ்நானம் செய்வதும், ஸ்தானத்திற்கு பின் ஈரத்தலையில் எண்ணை தடவுவதும், நீர்கோர்வை, சளி, நரை இவற்றை வரவழிக்கும். கேசத்திலும், தோலிலும், எண்ணைப் பசை இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது உடல் உஷ்ணம் குறையும்.

2. இரவு படுக்கப் போகும் போது உள்ளங்கால்களில் நல்லெண்ணை தடவி, தேய்த்து பிடித்து விட்டுக் கொண்டால், கண்களின் எரிச்சல், காங்கை குறையும்.

3. எண்ணை குளியலுக்கு உகந்தவை சூடாக்கப்பட்ட நல்லெண்ணை, திரிபலாதி தைலம், நீலி பிருங்காதி தைலம், பொன்னாங்கண்ணி தைலம், போன்றவை பல பலன்களை அளிக்கும். *உங்களின் பாரம்பரிய மருத்துவரின் உதவியோடு, உங்களுக்கு பொருந்தும் தைலத்தை தேர்ந்தெடுக்கவும்.* கரிசிலாங்கண்ணி இலைகள், நெல்லி முள்ளி, மருதாணி, எள், இவற்றை தனியாக அரைத்தோ, இல்லை பால்விட்டு அரைத்தோ, சிறிது சூடு செய்து, குளியலுக்கு உபயோகிக்கலாம்.

4. உடலில் தங்கியுள்ள விஷமாகும் கழுவுப் பொருட்களை வெளியேற்ற விரேசன மருந்துகளை, டாக்டரின் அறிவுரைப்படி உட்கொள்ளவும். தினமும் மலம் கழிக்க இவை உதவும். மாதம் ஒரு முறை பேதி மருந்து உட்கொண்டால், வயிறு சுத்தமாகும். திராஷை கஷாயம் போன்றவை இயற்கையாக பலன்தரும்.

5. எண்ணை குளியலை மேற்கொள்ளும் போது, எண்ணையை காய்ச்சி தேய்த்துக் கொள்வதே நல்லது. மிளகு, ஓமம், இவற்றை போட்டு எண்ணையை காய்ச்சுவது வழக்கம். கொம்பரக்கை போட்டு காய்ச்சிய எண்ணையை உபயோகித்தால் உடற்காங்கை குறையும்.

6. எண்ணை தேய்த்துக் கொண்டு குளிக்கையில் சூடான நீரையே பயன்படுத்த வேண்டும்.

7. ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தண்ணீரில் ஒரு இரவு ஊற வைக்கவும். மறு நாள் காலையில் வெறும் வயிற்றில் இதை உட்கொள்ளவும். இதை இரண்டு நாட்களுக்கு செய்யவும்.

8. மதியம் உணவில் மோர் கலந்த சாதத்தில் இரண்டு மூன்று சிறு வெங்காயத்தை சேர்த்து, மூன்று நாட்களுக்கு சாப்பிடவும்.

9. தினமும் இரண்டு மூன்று நெல்லிக்காயை உட்கொள்ளவும்.

10. வெள்ளரி சாறு, கேரட் சாறு, இவைகள் உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

11. இளநீர் உடல் உஷ்ணத்தை குறைப்பது சிறந்தது.

12. கசகசா விதைகளை பாலில் அரைத்து இந்த களிம்பை தலையில் தடவிக் கொண்டு குளிக்கலாம்.

*13. மேகம் முற்றினால் வெள்ளை, வெள்ளை முற்றினால் வெட்டை, வெட்டை முற்றினால் கட்டை.*
இது கிராமத்து பழமொழி.
#மேகம் என்றால் சூடு, உஷ்ணம் என்று பொருள். உடலில் உஷ்ணம் அதிகரித்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் தோன்றும். இந்நிலை நீடித்தால் வெள்ளை, வெட்டையாக மாறும். இந்நிலை நீடித்தால் உடல் மெலிந்து வேறு பல நோய்கள் தோன்றி இறக்கும் நிலை உருவாகும்.
#சரி இதற்கு பழமொழியில் உள்ள மருத்துவம் எது என்றால்,இதில் உள்ள கடைசி வார்த்தைதான் மருந்து, அதாவது கட்டை இது சந்தனக்கட்டையை குறிப்பதாகும். இன்று சராசரியாக அதிகமாக பெண்களிடம் காணப்படும் நோய்களில் இதுவும் ஒன்று.
#முற்றிய நிலை வெள்ளை வெட்டைக்கு தரமான சந்தன கட்டையை சிறிது பன்னீர் விட்டு அம்மியில் தேய்க்க தேய்க்க விழுது போல் வரும். அதில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து ஒரிஜினல் சந்தன அத்தர் மூன்று சொட்டு விட்டு ஒரு தம்ளர் பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும்
#இப்படி மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட அதிக நாள்பட்ட வெள்ளை வெட்டை நோய் குணமாகும். அம்மா சொல்படி கேட்டு, வெள்ளிக்கிழமை நல்லெண்ணெய் அரப்பு போட்டு குளிச்சிக்கிட்டு இருந்தா, உடல் சூடும் ஆகாது, வெட்டையும் வராது. ஷாம்பு போட்டு குளிச்சிட்டு, மென்மையான உணவான இட்லியை மறந்து ஜீரணமாகாத பீட்ஸா வை சாப்பிட்டா எல்லாமே வரும்!!

14 . உடல் சூட்டை தணிக்க : இரவு சிறிது அளவு Sai Saravanan:
பாதாம் பிசினை தண்ணீரில் ஊறவைத்துக், மறுநாள் காலையில் பருக வேண்டும், சூடு தணியும் வரை எடுத்துக்கொள்ளவும்.
🙏என்றும் மக்கள் நலனில் அக்கறையுடன்
*வேதிஹா ஆர்கானிக்ஸ் & ஹெர்பல்ஸ்*
🌍🚸🚸🚸🚸🚸🌍
*Follow us on Facebook:*
www.facebook.com/groups/243591169428150/

*Join with us to Create Health Revolution*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...