Saturday, June 10, 2017

உயர் ரத்தஅழுத்தத்தை குறைக்கும் வாழைப்பழம்

உயர் ரத்தஅழுத்தத்தை குறைக்கும் வாழைப்பழம்

S.SETHU RAMAN.B.Sc

வாழைப்பழங்களில் மிக அதிக அளவில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்துகள், மாவுசத்துகள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளன. எனவே வாழைப்பழங்கள் மிகச்சிறந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. வாழைப்பழங்களில் பொட்டாசியம் என்னும் தாது சுமார் 450 மில்லி கிராம் வரை நிறைந்துள்ளன.

இயற்கையாகவே வாழைப்பழங்களில் மிக எளிதில் செரிக்கக்கூடிய சர்க்கரை சத்துகளான குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் மிக அதிக அளவில் நிறைந்துள்ளன. எனவே நாம் வாழைப்பழத்தை உண்ணுவதன் மூலம் நம் உடல் புத்துணர்ச்சி பெற தேவையான கலோரி சத்தினை உடனடியாக பெறலாம். மேலும் வாழைப்பழங்களில் நமது உடலுக்கு தேவையான மிக இன்றியமையாத வைட்டமின்களான ஏ, பி 5, பி 6, சி மற்றும் டி குறிப்பிடத்தக்க அளவில் நிறைந்துள்ளன.

சமீபத்திய ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பின்படி தினந்தோறும் நம் உணவில் 2 வாழைப்பழங்களை உண்ணுவதன் மூலம் சுமார் 10 சதவீதம் வரை உயர் ரத்தஅழுத்தத்தை குறைக்கலாம். வாழைப்பழங்களில் காணப்படும் லியூகோசியானிடின் என்னும் வேதிப்பொருள் நமது உணவுக்குழாய், குடல்கள் மற்றும் வயிற்றின் பாதுகாப்பு ஜவ்வுகளான முக்கோஸ்-ன் தடிமனை அதிகரிக்க செய்து நமது உணவுகுழாய், குடல்கள் மற்றும் வயிற்றில் ஏற்படும் புண்களில் இருந்து பாதுகாக்கின்றன.

பொதுவாக வாழைப்பழங்கள் மிகச்சிறந்த அமில எதிர்பான்களாக செயல்பட்டு நமது உடலில் ஏற்படும் அதிகப்படியான அமிலத்தன்மையை நடுநிலையாக்கி அதனால் ஏற்படும் நெஞ்சு எரிச்சலை தடுக்கின்றன. நன்கு பழுத்த வாழைப்பழங்கள் மிகச்சிறந்த திட உணவுப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஏனென்றால் வாழைப்பழங்கள் குழந்தைகளுக்கு ஒவ்வாமை என்னும் அலர்ஜி நோயை ஏற்படுத்துவதில்லை.

எனவேதான் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நன்கு பழுத்த வாழைப்பழத்தினை நன்கு மசித்து மிக எளிய மற்றும் சத்து மிகுந்த உணவாக பயன்படுத்தி வருகிறார்கள். பொதுவாக நாம் தினந்தோறும் உண்ணும் உணவில் கொழுப்புச்சத்து நிறைந்துள்ளன. வாழைப்பழத்தில் காணப்படும் நார்சத்துக்கள் கொழுப்பு அளவினை சீராக வைக்க உதவுகின்றன.

சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டுக்கு வாழைப்பழங்களில் காணப்படும் பொட்டாசியம் என்னும் தாது மிக முக்கிய பங்குவகிக்கிறது. தினந்தோறும் 4 அல்லது 6 முறை வாழைப்பழங்களை நமது அன்றாட உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் சிறுநீரகங்களில் ஏற்படும் புற்றுநோய்க்கான காரணிகளிடம் இருந்து 40 சதவீதம் வரை சிறுநீரகத்தை பாதுகாத்துக்கொள்ளலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவினை அதிகரிக்கச்செய்து நமது உடலில் ரத்தசோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

வாழைக்காய் ஊறுகாய், உலர் வாழைத்துண்டுகள், வாழைப்பழ மிட்டாய், வாழைப்பழ பார், வாழைப்பழ அத்தி போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களையும் தயாரிக்கலாம்.

S.SETHU RAMAN.B.Sc

தொப்பையை குறைக்க உதவும் ஒரு முக்கிய பொருள் கொள்ளு

தொப்பையை குறைக்க உதவும் ஒரு முக்கிய பொருள் கொள்ளு

S.SETHU RAMAN.B.Sc

கொள்ளுப் பருப்பின் மருத்துவ குணம்: கொள்ளுப்பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதே போல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிக  அளவு மாவுச்சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்து சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.

கொள்ளுப் பருப்பை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புகளைப் பலப்படுத்தும்.  வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், கண் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.

வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மாதாந்திர ஒழுங்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும். எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளு என்பதால் அதனை கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.

குளிர்காலத்தி்ல் தான் அதிகம் சளிபிடிக்கும். அந்த காலக்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காது. சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்கும்.

கொள்ளு பருப்பை ஆட்டி பால் எடுத்து அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளுவை அரைத்து பொடி செய்து வைத்துக் கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம். நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியைபோட்டால் அருமையாக இருக்கும். இப்படி செய்ய முடியாதவர்கள் கொள்ளு ரசம், கொள்ளு துவையல்,  கொள்ளு குழம்பு வைத்து அவ்வப்போது உண்டு வந்தாலும் உடல் எடை குறையும்.

S.SETHU RAMAN.B.Sc

முதுகு வலி வருவதற்கான காரணங்கள்

முதுகு வலி வருவதற்கான காரணங்கள்

S.SETHU RAMAN.B.Sc

முதுகு வலி என்பது நம்மிடையே காணப்படும் சர்வ சாதாரண சொல். 90 சதவீத மக்கள் வாழ்வில் ஒரு முறையாவது முதுகு வலி அனுபவிக்காமல் இருந்திருக்க முடியாது. இதற்காக மருத்துவரிடம் செல்பவர் அநேகர். முதுகுவலி, கீழ் முதுகு வலியெல்லாம் கடினம்தான் என்றாலும் பொதுவில் ஆபத்தானதாக இருப்பதில்லை. முதுகுவலி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆயினும் 25 வயது முதல் 55 வயது உடையோர் அடிக்கடி கூறுவர்.

தண்டு வடம் தசை, தசைதார், எலும்பு அதன்பிரிவு என பல அமைப்புகளை தன்னுள் கொண்டது. இதில் ஏதேனும் பாதிப்பு இருப்பதால் முதுகு வலி ஏற்படலாம்.
அதிக உழைப்பு: இதுதான் முதுகு வலியின் முதல் காரணம். இயந்திரத்தனமான உழைப்பும், ஓட்டமும் கைகளையும், கால்களையும் மொத்தத்தில் உடலின் ஒவ்வொரு உறுப்பினையும் நாம் முனைந்து கெடுக்கின்றோம். இதன் காரணமாக.

* அதிகம் உழைத்த தசை
* அதிகம் உழைத்த தசை கால்கள்
* தசை பிடிப்பு
இவைகள் வலிக்கு காரணமாகின்றன.
* முறையற்ற முறையில் பொருட்களை தூக்குவது.
* முறையற்ற முறையில் அதிக கனமான பொருட்களை தூக்குவது
* கோணல் மாணலாக படுப்பது, தூக்குவது

இவை பொதுவில் முதுகு வலிக்கான காரணங்கள்.

* முதுகு தண்டு எலும்புகளுக்கு இடையே ஏற்படும் பாதிப்பு.
* சயாடிகா-இடுப்பின் கீழே பின் காலின் வழியில் ஏற்படும் வலி.
* மூட்டு வலி
* எலும்பு தேய்மானம்
* முதுகு தண்டு வளைவு
இவைகளின் காரணமாகவும் வலி ஏற்படலாம்.

* தண்டு வட புற்று நோய்
* தண்டுவட கிருமி தாக்குதல்
* தூக்கம் சரிவர இன்மை
* முறையான படுக்கையின்மை
ஆகியவை காரணமாகவும் முதுகு வலி ஏற்படலாம். கீழ்கண்ட காரணங்கள் உங்கள் முதுகு வலிக்கு காரணமாக இருக்கலாம் என்பதனை அறியுங்கள்.

* அதிக மன உளைச்சலையுடைய வேலை.
* கர்ப்ப காலம்
* அதிக உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை
* முதுமை
* படபடப்பு
* மனக் கவலை
* பெண்களுக்கு ஆண்களை விட முதுகு வலி அதிகமாக இருக்கும்.
* அதிக எடை
* புகை பிடித்தல்
* அதிக உழைப்பு
* முறையற்ற அதிக நேர உடற்பயிற்சி
ஆகியவை ஆகும்.

முதுகு வலியுடன் கீழ்கண்ட அறிகுறிகளும் இருந்தால் உடனடியாக தாமதிக்காது மருத்துவரை அணுக வேண்டும்.

* எடை குறைதல்
* ஜுரம்
* வீக்கம்
* விடாத தொடர் வலி
* காலில் இறங்கும் வலி
* முட்டிக்கு கீழ் இறங்கும் வலி
* ஏதாவது அடி, காயம்
* சிறுநீர் செல்வதில் பிரச்சினை
* கழிவு வெளியேறுவதில் பிரச்சினை
* பிறப்புறுப்புகள் மரத்து போதல்
* எக்ஸ்ரே
* எம்.ஆர்.ஐ.
* சிடி ஸ்கேன்
போன்று பல வகை பரிசோதனைகள் மூலம் பாதிப்புகளை அறிய முடியும்.

பாதிப்புக்கேற்ப சிகிச்சை முறைகள் அளிக்கப்படும்.

சயாடிகா எனும் தடித்த நரம்பு முதுகின் கீழ் பகுதியிலிருந்து காலின் பின் வழி இறங்குவது. இதில் வலி வரும் பொழுது
* கீழ் முதுகு வலிக்கும்
* உட்காரும் பொழுது வலிக்கும்.
* இடுப்பு வலிக்கும்.
* காலில் எரிச்சல், வலி இருக்கும்.
* கால், பாதத்தில் மரத்து போதல், வலி இன்றி இருத்தல், காலை நகர்த்துவதில் கடினம் ஆகியவை இருக்கும்.
* எழுந்து நிற்க முயலும் பொழுது தாங் கொண்ணா வலி இருக்கும்.

இந்த வலிக்கான காரணங்கள்

* தண்டு வட பிரச்சினை
* கர்ப்பம்
* இடுப்பில் சதை பிடிப்பு
ஆகியவை ஆகும்.
தொடர்ந்து வலி இருந்தால்
* பக்க வாட்டில் திரும்பி படுத்து உறங்குங்கள்.
* உங்கள் படுக்கை மெத்தென இருக்கக் கூடாது. கடினமாக உறுதியாக இருக்க வேண்டும்.
* மருத்துவ ஆலோசனை பெற்று தரையில் பாய் போட்டு படுக்கலாம்.
* உட்காரும் பொழுது நாற்காலியில் கூன் போட்டு, குறுகி வழிந்து உட்காராதீர்கள்.

* பாதம் பூமியில் முறையாய் படிந்து இருக்க வேண்டும்.
* மருத்துவ உதவியுடன் வலி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.
* மனஉளைச்சல் நிவாரணத்திற்கு மருந்து, மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.
* உடற்பயிற்சியாளர் உதவியுடன் தகுந்த உடற்பயிற்சிகள் செய்யலாம்.
* வலி என்று அதிக ஓய்வு வேண்டாம். சிறிது சிறிதாக நடக்க ஆரம்பியுங்கள்.
* வலி இருக்கும் இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். 20 நிமிடங்கள் வரை செய்யலாம். முதல் 2, 3 நாட்கள் நாள் ஒன்றுக்கு 3 முறையாவது ஐஸ் ஒத்தடமும் பின்னர் சூடு ஒத்தடமும் கொடுக்க வலி நிவாரணம் கிடைக்கும்.
* முறையான ‘மசாஜ்’ நல்லதே.

S.SETHU RAMAN.B.Sc

பெண்களின் குழந்தையின்மை பிரச்சனைக்கு இயற்கை வைத்தியம்

பெண்களின் குழந்தையின்மை பிரச்சனைக்கு இயற்கை வைத்தியம்

S.SETHU RAMAN.B.Sc

பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுவதற்கு மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள், கருப்பைக் கோளாறுகள், கருப்பை வலு போன்றவை ஆகும்.

• வெள்ளறுகுச் செடியை தேவையான அளவு எடுத்து மாதவிடாயின் முதல் மூன்று நாட்கள் எலுமிச்சை அளவு அரைத்து நீரில் கலந்து குடித்து வந்தால் மாதவிடாய்க் கோளாறுகள் குறையும்.

• அரச மரத்தின் இலை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு கஷாயம் செய்து அருந்தி வந்தால் கருப்பைக் கோளாறுகள் குறையும்.

• அருகம்புல் சாறு காலை உணவுக்கு முன் குடிக்கவும். செவ்வாழை பழம் மதிய உணவுக்கு பின் சாப்பிடவும். மாதுளம்பழச் சாறு இரவு உணவுக்கு பின் குடித்து வர கருப்பை வலுப்பெறும்.

• 48 நாட்கள் தொடர்ந்து பசலைக்கீரையை (கணவன், மனைவி இருவரும்)உணவில் சேர்த்து கொண்டால் கர்ப்பப்பை தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

– சிலருக்கு ஒவ்வாமையாக இருக்கக் கூடும். எனவே, முதலில் தகுந்த மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொண்டு மற்றும் இது உங்களுக்கு எந்த விதத்திலும் பக்கவிளைவுகள் ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்துக் கொண்டு பயன்படுத்துங்கள்.

S.SETHU RAMAN.B.Sc

*சக்கரை குறைபாட்டின் உண்மைகள்....

*சக்கரை குறைபாட்டின் உண்மைகள்.......*
1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்(Polyurea-excessive and frequent urination).

2. அதிக தாகம்(Polydipsia-dryness of mouth and excessive thirst)

3. அதிக பசி (அதிக சோர்வு)(Polyphagia-excessive hunger)

இவைகள்தான் உளகலாவிய சர்க்கரை நோயின் அறிகுறிகளாக(international symptoms of Diabetes Mellitus) கருதப்படுகிறது.

இப்படிப்பட்ட அறிகுறிகள் இருப்பது நோயல்ல!
ஆங்கிலமருத்துவத்திற்கு தெரிந்துவிட்டால்தான் நோயாக மாற்றப்படுகிறது!

நீங்கள் அந்த மருத்துவத்திற்கும் அது சார்ந்த அனைத்து "பகல் கொள்ளை வியாபாரத்திற்கும்" நிரந்தர ATM card ஆக மாற்றப்படுகிறீர்கள்!

இந்த அறிகுறிகள் பல கோடி ரூபாய் வணிகமாக மாற்றப்படுகிறது!
ஏன் ஏற்படுகிறது என்ற தெளிவை,
நவீன மருத்துவம் விளக்குவதில்லை!

அப்படி ஏதேனும் medical miracle நடக்குமேயானால் அடுத்த நொடியிலிருந்து நீங்கள் சர்க்கரை நோயிலிருந்து பூரண குணமடைய ஆரம்பித்துவிடுவீர்கள்!

இது உங்களை ஆறுதல் படுத்த சொல்லப்படும் வார்த்தைகள் அல்ல!
நடைமுறையில் சாத்தியாமாகி கொண்டிருக்கும் 100 விழுக்காடு உண்மை!

ஏன் ஏற்படுகிறது?
நாம் தெரிந்துக்கொள்வோம்!

இந்த கோரப்பிடியிலிருந்து விடுபடுவோம்!
வராமல் தடுப்போம்!

செரிக்கப்பட்ட மாவுச்சத்து இரண்டுவிதமான குளுக்கோஸாக மாற்றப்படுகிறது!

1. தரமான குளுக்கோஸ்,
2. தரமற்ற குளுக்கோஸ்.

இதை இனம்கண்டு பிரிப்பது "கனையம்" என்கின்ற pancreas!
இது இயற்கை நமக்களித்துள்ள அற்புத உருப்பு!
இது என்றைக்கும் "நல்ல function" தான் செய்யும்!
"Malfunction" செய்யாது!

தரமான குளுக்கோஸுக்கு மட்டுமே "insulin" சுரக்கும்!
தரமற்ற குளுக்கோஸஸுக்கு insulin சுரக்காது, சுரக்கக்கூடாது!

ஏன்?
தரமற்ற சர்க்கரை "உடல் செல்களுக்கு" சென்றடைந்தால், அவைகள் நோய்வாய் படும்!
அனைத்து உறுப்புகளும், பலமிழக்க ஆரம்பிக்கும்!

ஆக,
தரமற்ற சர்க்கரை இன்சுலின் சுரப்பு கிடைக்கப்பெறாமல்,
செல்களால் நிராகரிக்கப்பட்டு,
இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை தூக்கிவிட்டு,
சிறுநீரகத்தால்,
சிறுநீர் மூலம் வெளியேற்றப்பட்டு,
இரத்தம் சுத்திகரிக்கப்படும்!

எனவே சிறுநீர்வழியாக சர்க்கரை வெளியேறுவது நோயல்ல!

Pancreas னுடய malfunction னும் அல்ல!

மாறாக நம்மை நீண்ட நாட்களுக்கு உயிரோடு வைத்திருக்கும் உன்னத தற்காப்புக் கவசம்!
"A divine survival body mechanism"...!

இந்த சிறுநீர் யாருக்கும் தெரியாமல் வெளியேற்றுதல் தப்பித்தலாகும்!
மாறாக "நவீன மருத்துவத்திற்கு" தெரிந்துவிட்டால், "விற்பனை பொருளாக" மாற்றப்பட்டு,
உங்களை வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளுக்கு அடிமையாக்கி, 
உலக இன்ப துன்பங்களிலிருந்து விரைவாக விடுவித்துவிடும்!

தொடர்ந்து,
செரிமானக் கோளாறு காரணமாக, தரமற்ற சர்க்கரையை உற்பத்தி செய்வதால்,
உணவு சாப்பிட, சாப்பிட,
இடைவிடாது உற்பத்தியாகி கொண்டிருக்கும் "குப்பை சர்க்கரை" சிறுநீரகம் ஓயாமல் வேலைசெய்து, சிறுநீராக வெளியேற்றப்படுகிறது!

இப்போது தெளிவாகியிறுக்கும்,
ஏன்
"Polyurea"(excessive and frequent urination)
"அடிக்கடி சிறுநீர் கழித்தல்"
ஏற்படுகிறது என்று?

நமது உடல் 70 விழுக்காடு நீரால் ஆனது!
அடிக்கடி சிறுநீர் வெளியேறுவதால்,
நீர் சத்து குறைந்து "Dehydration" எனும் நிலை ஏற்படுகிறது!
இதுவே நா வறட்சி மற்றும் அதிக தாகம்!
இந்நிலையை சமாளிக்க உடல்  அதிகப்படியான நீர் கேட்கிறது!

இப்போது விளங்கியிருக்கும்
ஏன்,
2. Polydipsia(dryness of mouth-excessive thirst) அதிக தாகம் ஏற்படுகிறது என்று?

எவ்வளவுஉணவுஉட்கொண்டாலும், எத்தனை முறை பிரித்து, பிரித்து சாப்பிட்டுக்கொண்டே இருந்தாலும்,
தரமான சர்க்கரையளவு குறைவாகவும்,
தரமற்ற சர்க்கரையளவு அதிகமாகவும் இருக்கும் பட்சத்தில்,
தரமற்ற சர்க்கரை சிறுநீரால் வெளியேற்றப்படுவதால்,
உடல் செல்களுக்கு உணவுதட்டுப்பாடு ஏற்பட்டு,
நம்முடல் தொடர் சோர்வை உணர்கிறது!

இப்போது புரிந்திருக்கும்
ஏன்
3. Polyphagia(excessive hunger-feeling tired)
அதிக பசி மற்றும் அதிக சோர்வுஏற்படுகிறது என்று?

சரி இதற்கு தீர்வுதான் என்ன?
உறுதியாக மருத்துவமோ, மருந்து மாத்திரைகளோ தீர்வல்ல!

இது செரிமான கோளாறாதலால்(metabolic disorder),
உண்கிற உணவை எப்படி நன்றாக செரிமானித்து,
தேவையான அளவு தரமான குளுக்கோஸை உற்பத்தி செய்வது
என்ற pre KG syllabus பாடத்தை கற்றுக்கொள்ள முயற்சிக்கவும்!

இதுமட்டுமே சர்க்கரை நேய் எனும் செரிமானக் கோளாறிலிருந்து
முற்றிலும் வெளிவரும் ஒரே வழி!

கீழ்க்கண்ட மூன்று மந்திரங்களை கற்றுக்கொள்ளுங்கள்
(ஓரறிவு குறைவாக உள்ள மிருகங்கள், பறவைகளுக்கு நன்றாக தெரிந்த வித்தை)

1. எதை சாப்பிடுவது(proper diet)?
2. எப்படி சாப்பிடுவது(proper eating
     techniques)?
3. எப்போது சாப்பிடுவது(need based diet)?

இந்த மூன்று விஷயங்களை FB பதிவின் மூலம் விளக்க முயற்சிப்பது கேலிகூத்தாகிவிடும்!

நூற்றுக்கணக்கான சந்தேகங்களுக்கு பதில் சொல்லவேண்டியிருக்கும்,
"நேருக்கு நேர்" என்ற முறைதான் நடைமுறை சாத்தியம்!
இதற்கு பிரயத்தனப்படவேண்டும்!

இயற்கை ஆர்வலர்கள்( ஹீலர்பாஸ்கர் போன்றோர், அவர் எழுதிய புத்தகம் படித்தாலும் அவரின் நேரடி ஆலோசனை கேட்டவர்களே நல்ல பயநாளிகளாக ஆகியிருப்பதை இங்கு குறிப்பிடுகிறேன்)
தகுதியான Acu ஹீலர்கள், நல்ல ஆசானிடம் பயிற்சி பெற்ற single touch ஹீலர்கள்,
மருந்து மாத்திரை சாராத தகுதியான தெரபிஸ்டுகள்,
இவர்களை தேடிப்பிடித்து,
நேரில் மீண்டும் குறிப்பிடுகிறேன் "நேரில்" சில காலம் தொடர்ந்து ஆலோசனை பெறுவது மூலமே தீர்வு பெறமுடியும்!

யானைமீது உட்கார்ந்து கொண்டே சுண்ணாம்பு கேட்காதீர்கள்!
இறங்கி வாருங்கள் தீர்வு கிடைக்கும்!

இதற்கான இடம், காலம்,
உங்களுக்கு வசதியாக எதிர்பார்க்கும், சோம்பேரித்தனத்திலிருந்து வெளியேறுங்கள்!
தகுதியான ஆட்களை தேடுங்கள்!

Diabetic ரீடிங்,
சர்க்கரை அளவு கட்டுப்பாடு(control),
Diabetic management,
உணவு கட்டுப்பாடு,
இவைகளனைத்தும் "ஏமாற்று வேலை",
பிரட்சினைகளை பெரிது படுத்தி வியாபாரம் செய்யும் தந்திரம்!

இந்த மாய வாலையிலிருந்து வெளியேறுங்கள்!
வாழ்த்துக்கள்....!
*Dr.JUSTIN*
*Health & Wealth*

கிரீன் டீ எப்ப‍டி குடிக்க வேண்டும்? – இதை யார்யார் சாப்பிடலாம் ? யார்யார் சாப்பிடக்கூடாது?

கிரீன் டீ எப்ப‍டி குடிக்க வேண்டும்? – இதை யார்யார் சாப்பிடலாம் ? யார்யார் சாப்பிடக்கூடாது?

S.SETHU RAMAN.B.Sc

கிரீன் டீ – சரியான தயாரிப்பு முறை
=> பவுடராக வாங்காமல் பச்சை இலையாக இருக்கும் கிரீன் டீயாக வாங்கவும்.
கிரீன் டீ இலைகளை நீருடன் சேர்த்து, கொதிக்கவைத்து வடிகட்டி, வெதுவெதுப்பான சூட்டில் அருந்துவது உடலுக்கு நல்லது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை, வெல்லம் அல்லது தேன் போன்றவற்றை சேர்க்காமல் குடிக்க வேண் டும்.
கிரீன் டீயை எப்படிக் குடிக்க வேண்டும்? *
=> தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் அளவுக்கு மேல் கிரீன் டீ குடிக்கக் கூடாது.
=> கிரீன் டீ சாப்பிடுவதால் உடலில் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுவது போல தோன்றினால், உடனே கிரீன் டீ சாப்பிடுவதை நிறுத்திவிடுவது நல்லது.
கிரீன் டீ யார்யார் சாப்பிடலாம் ?
=> மல்ட்டிபிள் ஸ்கெலரோசிஸ், டைப் 1 சர்க்கரை நோ ய், சொரியாசிஸ், ரூமட்டாய்டு ஆர்த்ரைடிஸ்,பெப்டிக் அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் கிரீன் டீ சாப்பிடலாம்.
கிரீன் டீ யார்யார் சாப்பிடக்கூடாது?
=> அலர்ஜி, ஆஸ்துமா,பித்தப்பை வீக்கம் சைனஸ், வைரஸ் காய்ச்சல், அல்சர், வைரஸ் தொற்று நோய்கள் உள்ளவர்கள் கிரீன் டீ சாப்பிடக் கூடாது.

S.SETHU RAMAN.B.Sc

*தயிர் உங்களுக்கு கிடைத்தால் என்ன வெல்லாம் செய்யலாம்..?*

*தயிர் உங்களுக்கு கிடைத்தால் என்ன வெல்லாம் செய்யலாம்..?*
***************************************************************************

*1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.*

*2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.*

*3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.*

*4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.*

*5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும்.*
*ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனேஜீரணிக்கப்பட்டிருக்கும்.*

*6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.*

*7. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.*

*8. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL.* *இது ஜீரண சக்தியைதூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.*

*9. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.*

*10. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.*

*11. பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் 'ரயித்தா' சாப்பிடுகிறோம்.*

*12. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.*

*13. வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.*

*14. புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.*

*15. தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.*

*16. வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.*

*17. வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.*

*18. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.*

*19. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.*

*20. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை* *திருப்தியை விட மேலான இன்பமுமில்லை*
*இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை*
*மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்* 
  
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!*
                            *அன்பான இனிய நற்காலைப்பொழுது வணக்கம் நட்பே*

*வாழ்க வளமுடன்*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...