Monday, May 2, 2016

குடல் புழுக்களை வெளியேற்ற உணவே மருந்து!!!

நம் குடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்பதை எப்படி கண்டறிவது என்று கேட்கலாம்.
 நிச்சயம் அதற்கும் அறிகுறிகள் உள்ளன. 
அவை வயிற்றுப்போக்கு, மிகுந்த சோர்வு, குமட்டல், மலக்குடல் எரிச்சல், திடீர் உடல் எடை குறைவு போன்றவை

சிறுகுடற்புழுக்களை நீக்க குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மருந்து

இரத்த சோகை சத்துக் குறைபாடு செரிமானக் கோளாறுகள் அலர்ஜி மலச்சிக்கல் வயிற்ருப் போக்கு ஆகிய பிரச்சினைகள் தீர்ந்து குடல் இயக்கம் சீர் படும்

மருந்து ஒன்று
சுண்டைக்காய்ப் பொரியல்
பச்சை சுண்டைக்காயை நைத்து எடுத்துக் கொள்ளவும்
வாணலியில் விளக்கெண்ணெய் ஊற்றி சீரகம் வெந்தயம் சின்ன வெங்காயம் கறிவேப்பிலை போட்டு தாளித்து நைத்து வைத்திருக்கும் சுண்டைக்காயைப் போட்டுக் கிளறி மஞ்சள் தூள் போட்டிக் கிளறி மிளகுத்த்கூல் கல் உப்புப் போட்டு பொரியலாக்கி இறக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் நீங்கும்

மருந்து இரண்டு 
பாகற் காய் கூட்டு
மிதி பாகல்  அல்லது நாட்டு பாகற்காய் மட்டும் பயன் படுத்த வேண்டும்

வாணலியில் நல்லெண்ணெய்  விட்டு சின்ன வெங்காயம் பெருங்காயம் பாகல் காய் துவரம்பருப்புடன் பூண்டு சேர்த்து வேக வைத்து எடுத்த பருப்பு மசியல்ஆகியவற்றை சேர்த்து கூட்டாக செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் வெளியேறும் 

மருந்து மூன்று
அகத்திக் கீரை பூண்டு சாறு
அகத்திக் கீரை சாறு   ..  ஒரு தேக்கரண்டி
பூண்டு சாறு.             .... ..  ஒரு தேக்கரண்டி
தேன்    .......  தேவையான அளவு
மூன்றையும் கலந்து தினமும் காலையில் ஒரு வாரம் மட்டும் குடித்து வர குடலில் தங்கியிருக்கும் புழுக்கள் வெளியேறும்

 மருந்து நான்கு
வாய் விடங்கப் பொடி
வாய் விடங்கம் ஓமம் மிளகு சுக்கு கறிவேப்பிலை கல் உப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக பொன்னிறமாக வறுத்து ஆறவைத்து ஒன்றாக சேர்த்து அரைத்துப் பொடியாக எடுக்க வேண்டும்
இந்த வாய் விடங்கப் பொடியை தோசை இட்டிலி சோறு போன்ற உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் வெளியேறும் 
குறிப்பு : வாய் விடங்கம் அல்லது வாய் விளங்கம் என்பது மிளகு போன்ற ஒரு பொருள் எல்லா நாட்டு மறுத்துக் கடைகளிலும் கிடைக்கும் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன் அந் தமிழ் நாட்டு அடுக்களையில் மிளகு போல  தவறாமல் இடம் பிடித்திருந்த நாம் மறந்துவிட்ட பொருள் இது
மருந்து ஐந்து  
வேப்பிலை துவையல்
சிலர் வேப்ப இலைக் கொளுந்துகளை அரைத்துக் குடிப்பர்
கசப்பு காரணமாக சிலர் குடிக்க மறுப்பார்கள் அப்படிப் பட்டவர்கள் கீழ்க்கண்டவாறு  வேப்பிலை உருண்டைகள் செய்து விழுங்கலாம்
வேப்பங்  கொழுந்து கறிவேப்பிலை  பூண்டு மிளகு ஓமம் சுக்கு ஆகிய பொருட்களைத் தேவையான அளவு எடுத்து நாட்டுப் பசு நெய்யில் பொன்னிறமாக வறுத்து இறக்கி ஆறவைத்து கல் உப்பு சேர்த்து அரைத்து துவைலாக்கி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி விழுங்கி தண்ணீர் குடிக்க குடல் புழுக்கள் வெளிஎறம்

 மருந்து ஆறு    

குப்பைமேனியிலையை நிழலில் உலர்த்திப் பொடித்து 1/2 தேக்கரண்டிஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள், மலப்புழுக்கள் வெளியேறும். நீரில் கலந்தும் கொடுக்கலாம்.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது 
பெரியவர்கள் குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி.
அளவு குடித்து வர பெரியவர்களின் குடல் புழுக்கள் வெளியேறும்
 மருந்து ஏழு
   கீரை சூப் 
சின்ன வெங்காயம்        - இரண்டு 

நல்ல மிளகு                      - இரண்டு

சீரகம்                                     - 1/2 தேக்கரண்டி 

இஞ்சி                                    - சிறிய துண்டு

தேவையான அளவு     -  கீரை (தண்டுக்கீரை அல்லது அகத்திக்கீரை)

பூண்டு                                   - 1 பல்  

சேர்த்து சூப் செய்து, வாரத்தில் மூன்று நாட்கள் மாலை வேளையில் அருந்தி வந்தால் குடற்புழுக்கள் நீங்கும்.  
மருந்து எட்டு
* யானை திப்பிலி, அரிசி திப்பிலி, வேப்பிலை, சுக்கு, சீந்தில் தண்டு, நிலவேம்பு, சுண்டை வற்றல் ஆகியவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து, சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, பின் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

* 10 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டியபின் வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்துவர, வயிற்றுப்புழுக்கள் வெளியேறும். 

மருந்து ஒன்பது  

* புழுத்தொல்லையினால் ஏற்பட்ட தோல் தடிப்பு, வெள்ளை நிற மாவு படிதல், மலவாய் அரிப்பு, பலவிதமான வயிற்று உபாதைகள் நீங்க யானைத்திப்பிலியை இளவறுப்பாக வறுத்து, பொடித்து 1 கிராம் அளவு எடுத்து தேனுடன் குழப்பி, 3 முதல் 7 நாட்கள் சாப்பிட்டுவர வயிற்றுப்புழுக்கள் மலத்துடன் வெளியேறும்

மருந்து பத்து
குப்பை மேனி செடியின் வேரை இடித்து கஷாயமாக்க வேண்டும். அக்கஷாயத்தில் 30 மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து அருந்தினால் வயிற்று புழுக்கள் வெளியாகும்.
மருந்து பதினொன்று  

குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்று புண்களை உண்டாக்கும். இதனால் செரிமானத்தன்மை குறையும். இந்த குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும்.

உலகில் ஏராளமானோர் டென்சனாகவோ, சோர்வுடனோ, தலை வலி இருக்கும் போதோ, தூக்கம் வருவதைத் தடுக்கவோ பருகும் ஓர் பானம் தான் டீ. இந்த டீயில் பல வெரைட்டிகள் உள்ளன. டீயின் சுவையை அதிகரிக்க நாம் இஞ்சி, ஏலக்காய், எலுமிச்சை, தேன், சோம்பு போன்றவற்றை சேர்ப்போம்.

ஆனால் குடிக்கும் டீயின் சுவையை அதிகரிக்கவும், அந்த டீயினால் உடல் ஆரோக்கியம் மேம்படவும் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்த்தால் நினைக்க முடியாத அளவிலான நன்மைகளைப் பெறலாம். இங்கு டீயின் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்ப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.

வெல்லத்தில் உள்ள உட்பொருட்கள் குடலியக்கத்தைத் தூண்டி, மலச்சிக்கலில் இருந்து தடுக்கும். எனவே உங்களுக்கு வயிறு சரியில்லை என்றாலோ அல்லது செரிமான பிரச்சனைகள் இருந்தாலோ, டீயில் வெல்லத்தை சேர்த்து குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இரத்த சோகை உள்ளவர்கள் குடிக்கும் டீயில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்த்தால், அதில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்தின் காரணமாக ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

சர்க்கரையால் உடலுக்கு தீங்கு தான் விளையும். குறிப்பாக கல்லீரலைத் தான் சர்க்கரை முதலில் பாதிக்கும். எனவே கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கல்லீரலை சுத்தம் செய்யவும். குடிக்கும் டீயில் வெல்லத்தை சேர்த்து குடியுங்கள்.

ஒரு கப் சூடான டீயில் வெல்லத்தை சேர்த்து குடிப்பதன் மூலம் சளி, வயிற்று உப்புசம், இருமல், காய்ச்சல் போன்றவற்றில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
சர்க்கரை நோய் குணமாக மூலிகை இலை  -  இன்சுலின் செடி

ஒரு நாள் இரு இலைகள் வீதம் (காலை ஒன்று மாலை ஒன்று) ஒரு மாதத்திற்கு நன்றாக மென்று சுவைத்தால் போதும் நோய் குணமாகும். இவ்விலை சாப்பிடுவதற்கு முன்  சர்க்கரையின் அளவினை மருத்துவரிடம் சென்று குறிப்பெடுத்துக்கொள்ளவும். பின் வாரம் ஒருமுறை சர்கரையின் அளவினை சரிபார்க்கவும்.  சர்கரையின் அளவு குறைவதைக்காண முடியும். இச்செடிகளின் நாற்றினைப் பெற 9884294021, 8939196327. என்ற எண்களைத் தொடா்பு கொள்ளவும் 

INSULIN PLANT - " A LEAF A DAY KEEPS DIABETES AWAY".
A medicinal plant with Anti-diabetic property.
Costus igeus commonly known as insulin plant in India, belongs to family Costaceae. 
The Leaf helps to build up insulin in the human body.
The patient has to take two leaves per day in the morning and evening  for one week. 
The leaves must be chewed well before swallowing. After one week the patient should take one leaf each in the morning and evening. This dosage should be continued for 30 days. 
Allopathic doctors too recommend it and it is found to be effective in bringing blood sugar levels under completely under control.

To cultivate such healthy herb,
Pls contact Indra Gardens : 9884294021, 8939196327.
பெண்களின் பாதுகாப்பிற்கு சில ஆலோசனைகள்…!

1. இரவானாலும், பகலானாலும் இரயிலில் பயணம் செய்யும் போது ஆட்களே இல்லாத அல்லது ஒரு சிலர் மட்டுமே இருக்கும் கம்பார்ட்மெண்டில் ஏறாதீர்கள். ஆட்கள் இருக்கும் பக்கமே ஏறுங்கள்……!

2. ஆட்டோவில் தனியே பயணம் செய்ய வேண்டியத் தருணம் வந்தால், ஆட்டோவில் ஏறும் போதே தொலைபேசியில் உங்கள் வீட்டாருக்கோ இல்லை நண்பருக்கோ அழைத்துப் பேசத் தொடங்குங்கள்.எங்கு இருந்து எங்கு செல்கிறீர்கள் என்பதை சொல்லி விட்டு தொடர்ந்து இறங்கும் இடம் வரும் வரை அழைப்பைத் துண்டிக்காமல் பேசிக் கொண்டே செல்லுங்கள்……! ( அதற்காக ஆட்டோக்காரர் சரியான ரூட்டில் தான் செல்கிறாரா என்பதை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்)

3.பேருந்து நிலையம், இரயில் நிலையம், பேருந்து நிறுத்தம் என எங்கு நின்றாலும் ஏதேனும் ஒரு குடும்பம் நிற்கும் பக்கமோ இல்லை பெண்கள் கூட்டமாக நிற்கும் பக்கமோ நில்லுங்கள். தனியே நிற்காதீர்கள்……!

4.இரவில் வீதியில் தனியாக நடக்க வேண்டி வந்தால், அச்சத்தோடு தலையை குனிந்தபடி நடக்காதீர்கள். நிமிர்ந்து எல்லா பக்கமும் நோட்டம் விட்ட படி நடங்கள்.அதற்காகதிரு திருவென முழிக்க கூடாது.பயம் வந்தால் மீண்டும் தொலைபேசியில் துணைத் தேடிக் கொள்ளுங்கள்.தொலைபேசியை பையில் வைத்து விட்டு ஹெட் போனில் பேசுங்கள்……!

5.கேலி கிண்டல் செய்யும் ஆண்களை எப்போதும் கண்டு கொள்ளாதீர்கள். முறைக்காதீர்கள்.நீங்கள் ஆகாயத்தில் நடப்பது போலவும் உங்கள் காதில் எதுவுமே விழாதது போலவும் நினைத்துக் கொண்டு நடையைக்கட்டுங்கள்……!

6.கண்ட இடத்தில் எல்லாம் மொபைல் ரீ சார்ஜ் செய்யாதீர்கள். எவரையும் எளிதில் நம்பி மொபைல் நம்பர் கொடுக்காதீர்கள்.காதலனே அழைத்தாலும் தேவையற்ற நேரங்களில் தேவையற்ற இடங்களுக்கு செல்லாதீர்கள் ……!

7.மற்ற பெண்கள் அப்படி இருக்கிறார்களே என்று எவரை பார்த்தும் எதையும் செய்யாதீர்கள்……!

8.உங்கள் சுதந்திரத்திற்கான எல்லையை யாரும் சொல்லிதரக் கூடாது.நீங்களே உங்களுக்கு எல்லை இட்டுக் கொள்ளுங்கள்……!

#தன் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் தான் வளர்ந்த ஊரை விட்டு ஏதோ ஒரு நகரத்தில், பெண்கள் விடுதியில் தன் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்காக சொல்கிறேன்……!

உங்களுக்கு உங்களை விட பெரிய பாதுகாப்பு யாருமில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்
நீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

உடலிருந்து சிறுநீரை வெளியேற்றும் சிறுநீர்க் குழாய் வீக்கமடைந்து எரிச்சலுக்கு ஆளாவதால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது.

காரணங்கள்:
சிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று அல்லது புண் இருப்பது, அதிகம் தண்ணீர் அருந்தாது, பால்வினை நோய்கள், அடிபடுதல், கருத்தடைச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் போன்றவற்றால் நீர்க்கடுப்பு ஏற்படலாம்.

அறிகுறிகள்
ஆண்களுக்கு சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, சிறுநீர் மற்றும் விந்துடன் ரத்தம் கலந்து வெளியேறும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.
பெண்களுக்கு வயிற்றுவலி, சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, குளிர் மற்றும் காய்ச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, பிறப்புறுப்புக் கசிவு போன்றவை காணப்படும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
கைப்பிடி உளுந்தை நீரில் ஊறவைத்து, மறுநாள் அதிகாலை நீரை வடித்து, அந்த நீரை அரை டம்ளர் அருந்தலாம்.
கற்பாசியை அரைத்து இடுப்புப் பகுதியிலும், அடிவயிற்றிலும் பூசலாம்.
சிறு துண்டு கற்றாழையை நன்றாகக் கழுவி, வெண்ணெய், கற்கண்டு, வால் மிளகுத்தூள் சேர்த்து உண்ணலாம்.
கால் டம்ளர் பருப்புக் கீரையின் சாற்றை இரண்டு வேளை அருந்தலாம்.
அரை ஸ்பூன் முள்ளிக்கீரை வேர்ப்பொடியை நீர் கலந்து அருந்தலாம்.
சரக்கொன்றை புளியுடன் கடுகுரோகிணி, சுக்கு, வாய்விடங்கம், பெருங்காயம், படிகாரம், பொட்டிலுப்பு கூகைநீறு ஆகியவற்றை சேர்த்து அரைத்து அடிவயிற்றில் பற்றுப் போடலாம்.
செண்பகப் பூவுடன் பத்து மடங்கு நீர் சேர்த்துக் காய்ச்சி, அதில் அரை டம்ளர் அருந்தலாம்.
கைப்பிடியளவு சுரைக்கொடியை தண்ணீர் விட்டுக் காய்ச்சி, வடித்து வெண்ணெய் கலந்து அருந்தலாம்.
சதாவேரிக் கிழங்கின் பொடி அரைஸ்பூன் வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.
துத்தி வேர்ப்பொடியை அரை ஸ்பூனை திராட்சைப் பழச்சாற்றில் கலந்து சாப்பிடலாம்.
அரை ஸ்பூன் தேற்றான் விதைப்பொடி எடுத்து எலுமிச்சைச் சாறு, நீர் சேர்த்து உண்ணலாம்.

சேர்க்கவேண்டியவை:
திராட்சை, எலுமிச்சை, அன்னாசி, வெங்காயம், உருளைக்கிழங்கு முள்ளங்கி, பூசணி, வெள்ளரி.

தவிர்க்க வேண்டியவை:
துவர்ப்பு மற்றும் கார உணவுகள்.
பாட்டி வைத்தியம்.....

1) சிறிது படிக்காரத்தைக் கரைத்த நீரில் முகத்தை கழுவி வந்தால் முகப்பருவினால் தோன்றிய வடுக்கள் மாறும்.

2) எட்டிமரத்தின் இலையை மை போல அரைத்து கட்டி உள்ள இடத்தில் தினமும் தடவி வந்தால் கட்டிகள் குறையும்.

3) முளை கட்டிய தானியங்கள்,தக்காளி, ஸ்ட்ராபெரி, அத்திபழம் இவற்றை தினமும் உணவில் சேர்க்க வேனற்கட்டி வரமால் தடுக்கலாம்.

4) வெள்ளரி சாறெடுத்து பாலாடையுடன் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் குளிர்ச்சி அடையும்.

5) 20 கிராம் பழம்பாசியின் இலையை அரை லிட்டர் பாலில் காய்ச்சி வடிகட்டி எலுமிச்சைசாறு, தேன் கலந்து காலை, மாலை குடிக்க மூலம் குணமாகும்.

6) அதிக உடல் வெப்பம் உள்ளவர்கள் தினமும் கமலா ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வர உடல் வெப்பம் தணிந்து உடல் குளிச்சி அடையும்.

7) எட்டிமரத்தின் இலையை பறித்து வெந்நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து அந்த நீரில் குளித்து வந்தால் நரம்பில் ஏற்படும் வலி குறையும்.

8) கற்றாழை மடல் 10 கிராம், உப்பு 10 கிராம் இரண்டையும் இடித்து கடிவாயில் வைத்து 3 நாள்கள் கட்டினால் நாய் கடி விஷம் குறையும்.

9) கம்பளிப்பூச்சி கடித்த இடத்தில் முருங்கை இலையை அரைத்து பற்றுப் போட அரிப்பு குறையும்.

10) வெப்பம் பூவை காய வைத்து போடி செய்து வெந்நீரில் கலந்து தினமும் காலை, மாலை குடிக்க வாயுத் தொல்லை குறையும்.
இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமா?
----------------------------------------------------
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த சரியான உணவுப் பொருட்களை உட்கொள்வதோடு, அன்றாடம் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம். அதுமட்டுமின்றி, தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் இஞ்சி, பூண்டு, எலுமிச்சை கலந்த நீரைக் குடித்து வருவதன் மூலமும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம். மேலும் இந்நீரைக் குடித்தால், வேறு சில உடல்நல பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம்.
5 எலுமிச்சை, சிறிது பூண்டு மற்றும் இஞ்சி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அவைகளை துண்டுகளாக்கிக் கொண்டு, 2 லிட்டர் நீரில் போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். நீர் நன்கு கொதிக்கும் போது, அதனை வடிகட்டி சேகரித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
நீரைக் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவு சீராகும். இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவு சீரானால், அது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளைத் தடுக்கும்.
இந்நீரை தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் உள்ள நோய்க்கிருமிகள் வெளியேற்றப்பட்டு, அடிக்கடி சளி, இருமல் போன்றவை வருவது தடுக்கப்படும்.
இதயத் தமனிகளில் அடைப்பு ஏதேனும் இருந்தால், அதனை இந்த தண்ணீர் சரிசெய்யும். மேலும் இந்த கலவையை தினமும் குடித்து வந்தால், இரத்த நாளங்களில் இருக்கும் வேறு சில பிரச்சனைகளும் நீங்கும்.
தினமும் காலையில் இந்நீரை ஒரு டம்ளர் குடித்து வந்தால், இதுவரை உடல் சோர்வை சந்தித்த நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படலாம்.
முக்கியமாக இந்நீர் கல்லீரலில் தேங்கியுள்ள நச்சுக்களை முற்றிலும் வெளியேற்றும். எனவே தினமும் ஒரு டம்ளர் வெறும் வயிற்றில் குடித்து உங்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்
இந்நீரில் உடலின் உட்பகுதியில் ஏற்பட்டுள்ள காயங்களைக் குணப்படுத்தும் பொருள் நிறைந்திருப்பதோடு, இதனை அன்றாடம் குடித்தால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
நகரமயமாக்கல் சூழலில் மேற்கத்திய கலாச்சர தாக்குதலால் சத்து மிகுந்த உணவு பொருட்கள் பயன்பாடு குறைந்தது.

ஆனால் இப்போது உணவு பொருட்கள் மூலம் பெருகி வரும் நோய்களால் பண்டைய உணவு பொருட்களுக்கு ஏங்கி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.

சமீபகாலமாக கம்பு, ராகி போன்ற தமிழர்களின் பண்டைய சிறு தானியங்களை வாங்கி வைத்து பயன்படுத்துவது நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது.

சிறுதானியங்களில் பல வகைகள் இருந்தாலும் சோளம் முதன்மையான உணவு பொருளாக கருதப்படுகிறது.

சோள உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஆந்திரபிரதேசம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சோளம் பயிரிடப்படுகிறது.

சோளத்தில் ரொட்டி, கஞ்சி, கூழ், சாதம் போன்றவை மட்டும் தயாரிக்கப்பட்டு வந்த நிலை மாறி தற்போது, இட்லி, தோசை, ஊத்தாப்பம், பணியாரம், ரொட்டி, பரோட்டா, அப்பம், அடை, உப்புமா, கேசரி, வடகம், முறுக்கு, பிஸ்கட், சோள பொரி லட்டு, சேமியா, கொழுக்கட்டை, சமோசா உள்ளிட்ட பல உணவு வகைகள் சோளத்தில் தயாரித்து பயன்படுத்தலாம்.

தற்போது சோள தானியங்களுக்கு நகர்ப்புறங்களில் அதிக கிராக்கி ஏற்பட்டு வருகிறது. மழை வளம் குறைந்து வரும் சூழலில், குறைந்த நீர் தேவையுள்ள சோளப்பயிர்களை விவசாயிகள் உற்பத்தி செய்வது மூலம் நல்ல லாபத்தையும் ஈட்ட முடியும்.

சோளத்தில் அதிகளவு மாவுசத்து, நார்சத்தும் அடங்கியுள்ளதால் இது ஒரு சக்தி தரும் உணவாக திகழ்கிறது. குலூட்டான் எனும் வேதிப்பொருள் சோளத்தில் இல்லாத காரணத்தால் கோதுமை ஒவ்வாமை உள்ளவர்களும் சோளத்தை சாப்பிடலாம்.

கோதுமையில் உள்ள புரதத்தைவிட சோளத்தில் உள்ள புரதம் சிறப்பு வாய்ந்தது. பட்டை தீட்டப்படாத சோளத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் இது மலச்சிக்கலுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது.

நீரிழிவு நோயை குறைக்கும் தன்மை கொண்டதால் இன்சுலின் சாரா நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும்.சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு. தினமும் சாப்பிட்டு வந்தால் கண் குறைபாடுகளை சீர் செய்யும் ‘பீட்டா கரோட்டின்’, இதில் அதிகமாக உள்ளது.

எனவே இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக வாழலாம்!
சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய பழங்கள்

உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

ஆய்வு ஒன்றிலும், நீரிழிவு நோயாளிகள், தினமும் 4-5 பழங்களை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று சொல்கிறது. மேலும் அந்த ஆய்வில் நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் சர்க்கரையுள்ள பொருளைத் தவிர்க்கக்கூடாது என்றும், தினமும் ஒரு குறிப்பிட்ட அளவில் சர்க்கரையை உடலில் சேர்க்க வேண்டும் என்றும், அதிலும் பழங்களில் உள்ள சர்க்கரையை நாள்தோறும் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறது. அதாவது நம் முன்னோர்கள் சொல்வது போல், "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" தான்.

எனவே நீரிழிவு நோயாளிகள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளலாம். இப்போது நீரிழிவு நோயாளிகள் பயமின்றி நிம்மதியாக சாப்பிடக்கூடிய சில பழங்களைப் பார்ப்போம்.

கிவி

கிவி பழம் நீரிழிவு நோயாளிகளுக்கான ஒரு சிறந்த பழம். ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

செர்ரி

செர்ரி பழங்களில் கிளைசீமிக் இன்டெக்ஸின் அளவு 20 மற்றும் அதற்கு குறைவாகத் தான் இருக்கும். எனவே இதனை அவ்வப்போது அளவாக சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

கொய்யா

கொய்யாப்பழம் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும். அதுமட்டுமின்றி, கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சில அதிக அளவிலும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் நிறைந்துள்ளது.

நாவல் பழம்

கிராமப்பகுதிகளில் அதிகம் கிடைக்கும் இந்த பழம், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழம். ஏனெனில் இதனை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு விரைவில் கட்டுப்படும். அதுமட்டுமின்றி, இதன் கொட்டையை பொடி செய்து சாப்பிட்டால், இன்னும் சிறந்த பலனைக் காண முடியும்.

பீச்

மிகவும் சுவையான பீச் பழத்திலும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. எனவே இந்த பழத்தையும் தைரியமாக நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.

பெர்ரிப் பழங்கள்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், எந்த ஒரு பயமும் இன்றி பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றை சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். இது நீரிழிவு நோயாளிகளுக்கும் தான். ஏனெனில் ஆப்பிள் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இது செரிமான மண்டலம், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அன்னாசி

அன்னாசிப் பழமும் சர்க்கரை நோயாளிகளுக்கான பழம் தான். இந்த பழத்தில் ஆன்டி-வைரல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருக்கிறது.

பேரிக்காய்

சர்க்கரை நோய் உள்ளதா? அப்படியெனில் பேரிக்காயை சாப்பிடுங்கள். ஏனென்றால், பேரிக்காயில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

பப்பாளி

பப்பாளியும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள் மற்றும் மற்ற கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.

அத்திப் பழம்

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக் கொள்ள உதவும். அதிலும் இதனை தினமும் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

ஆரஞ்சு

சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி இருப்பதால், இந்த பழத்தை தினந்தோறும் அளவாக சாப்பிட்டு வந்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தர்பூசணி

தர்பூசணியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. எனவே இதனை அளவுக்கு மிகவும் குறைவாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு நீர்ச்சத்தானது கிடைத்து, உடல் வறட்சியானது தடுக்கப்படும்.

கிரேப் ஃபுரூட்

ஆரஞ்சுப் பழத்தைப் போன்றே காணப்படும் இந்த பழம் தான் கிரேப் ஃபுரூட். இது நீரிழிவு நோயாளிகளின் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும்.

மாதுளை

அழகான சிவப்பு நிறத்தில் உள்ள மணிகளைக் கொண்ட மாதுளையும் நீரிழிவு நோயாளிகள் தைரியமாக சாப்பிடக்கூடிய பழங்களுள் ஒன்று. ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

பலாப்பழம்

பலாப்பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால், இதனை நீரிழிவு நோயாளிகள் அறவே தொடக்கூடாது என்று நினைக்கக்கூடாது. ஏனென்றால், இந்த பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் பழங்களுள் ஒன்றாகும்.

நெல்லிக்காய்

கசப்பு தன்மைக் கொண்ட இந்த நெல்லிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான பழமாகும். இதில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை தினமும் உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.

முலாம்பழம்

முலாம் பழத்திலும் தர்பூசணியைப் போன்றே கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. ஆனால் இதில் நல்ல அளவில் நார்ச்சத்து நிரம்பியிருப்பதால், அளவாக சாப்பிடுவது சிறந்த பலனைத் தரும்.

நட்சத்திரப் பழம்

இந்த பழமும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற, இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும் பழமாகும். ஆனால் அளவாக சாப்பிட வேண்டும்.

வெள்ளை கொய்யா (White Jamun)

நாவல் பழத்தைப் போல் இது மிகவும் பிரபலமாக இல்லாவிட்டாலும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான ஒரு பழம். இதனை நீரிழிவு நோயாளிகள், தினமும் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
நமது உடல் பல உறுப்புகளால் ஆனது. இந்த உறுப்புகள் பல ஆயிரக்கணக்கான செல்களை கொண்ட திசுக்களால் ஆனது. திசுக்கள் செயல்பட, ப்ரீ ஆக்சிடன்ட், ஆன்டி ஆக்சிடன்ட் ஆகியவை, தராசு போல செயல்பட வேண்டும். ப்ரீ ஆக்சிடன்ட், பிராண வாயுவை கொடுக்கிறது. திசுவில் நடக்கும் வேதியியல் மாற்றத்தால், பல ப்ரீ ராடிக்கல்கள் வெளியே வருகின்றன.இந்த ப்ரீ ராடிக்கல்கள், உடலையும், உறுப்புகளையும் பாதிக்கின்றன. ப்ரீ ராடிக்கல்கள் தான், ஆக்சிடேட்டிவ் ஆக்சிடன்ட் (Oxidative Oxidants) என்றழைக்கப்படுகின்றன. இந்த, (Oxidant) களை வெளியேற்றி, உடலுறுப்புகளை காப்பாற்றுவது, ஆன்டி ஆக்சிடன்ட் (Anti Oxidant) எனும் மூலக்கூறு.

வியாதிகள், சர்க்கரை நோய், சாதாரணமாக வரும் ஜுரம், இருமல், விபத்து, நோய் எதிர்ப்பு தன்மை குறைவு, தொப்பை, சுற்றுப்புற சுகாதாரமற்ற நிலைகள், காற்று மாசுபடுதல், கதிரியக்க வீச்சு, புகைப்பிடித்தல், ஊதாக்கதிர்கள் என பல காரணிகள், "ப்ரீ ராடிக்கல்' களை உருவாக்குகின்றன. இதே, "ப்ரீ ராடிக்கல்' தான், முதுமைக்கும் காரணமாகிறது. புற்றுநோய் உட்பட பல நோய்களை உருவாக்கி, உறுப்புகள் செயலிழக்க செய்து விடுகிறது. ஆன்டி ஆக்சிடன்ட் உள்ள உணவுப் பொருட்கள்... கரோடினாய்ட்ஸ் - இது மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு நிறமுள்ள தக்காளி, காரட், ஆரஞ்சு பழம், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், ஆப்ரிகாட், பேரீட்சை, பிஸ்தா, பாதாம். இந்த கரோடினாய்ட் நிறமுள்ள சிறு மீன்கள்.ஆன்டி ஆக்சிடன்ட், புற்றுநோய், இதய நோயை தடுக்கிறது.எல்.டி.எல்., என்ற கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. கொழுப்பு, ரத்தக்குழாயின் உட்சுவரில் ஒட்டிக் கொள்வதை தடுக்கிறது. மாம்பழம், முட்டை, பால், கல்லீரல் ஆகியவற்றிலும், ஆன்டி ஆக்சிடன்ட் அதிகம் உண்டு.

வைட்டமின் "இ': 
இது, "ஆல்பா டோக்கோபரால்' எனப்படுகிறது. இது கார்ட்டினாடு வகுப்பை சார்ந்தது. சிவப்பு, பச்சை, ஆரஞ்சு நிறம் கொண்ட பழங்கள், காய்கறிகள், பச்சை இலைகள், கீரை வகைகள், காரட் ஆகியவற்றில் கிடைக்கிறது.மாமிச உணவை உட்கொள்ளும் புலி, சிறுத்தை ஆகியவை, தாவர உணவை மட்டும் உட்கொள்ளும் மாடுகளை கொன்று, முதலில் அதன் வயிற்றை கிழித்து, அதிலுள்ள இயற்கை உணவான பச்சை இலை, காய்களை உணவாக உட்கொண்டு, பிறகு தான் மாமிசத்தை சாப்பிடுகின்றன; எப்படி நம் அரசியல்வாதிகள் ஓட்டைப் பெற்று, முதலில் பணத்தைக் கொள்ளை அடிக்கின்றனரோ, அதுபோல!

செலினியம் (Selenium): 
"டிரேஸ் எலிமென்ட்' எனப்படும் இது, நிலத்தில் இருக்கிறது. இது நிலத்திலிருந்து விளைந்து வரும் பயறு வகைகள் மற்றும் முட்டையில் அதிகம் உள்ளது. இந்த செலினியம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

வைட்டமின் "சி': 
இதை, "அஸ்கார்பிக் ஆசிட்' என்பர். இது, "ப்ரீ ராடிக்கலை' அழிக்கிறது. மேலும், புண்ணில் ஏற்படும் நச்சுகளை அழித்து, புண்ணை ஆற வைக்கிறது. உடல் இரும்பு சத்தை அதிகம் உறிஞ்ச உதவுகிறது. பல் ஈறுகளை பாதுகாக்கிறது. அடிபடும் போது ஏற்படும் சிராய்ப்புகளை, உடனே போக்குகிறது. இதய நோய், கண் புரையை தடுக்கிறது. இச்சத்து, தக்காளி, பப்பாளி, மாம்பழம், உருளைக்கிழங்கில்அதிகம் உள்ளது.

யார் யாருக்கு இவை தேவை?
காலை முதல் இரவு வரை வேலை செய்யும் உழைப்பாளிகள்; தொழில்துறை வல்லுனர்கள்; அதிக பயணம் செய்பவர்கள்; காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை வேலை பார்க்கும் நிறுவனம் நடத்தும் முதலாளிகள்.
நாள் ஒன்றுக்கு 1,200 கலோரி உணவு உட்கொள்பவர்கள்.
கொழுப்புள்ள உணவு உட்கொள்பவர்கள்.
குடும்ப உறுப்பினர்கள் தந்தை, தாய், தாத்தா, பாட்டி, இவர்களில் இதய நோய், புற்றுநோய் இருந்தால், இவர்களுடைய வாரிசுகள் இந்த ஆன்டி ஆக்சிடன்ட்களை எடுத்து கொள்வது நல்லது.
நீங்கள் நீண்ட பயணம், இரவு தூக்கம் விழித்து இருந்தால் வரும் அலுப்பு ஆகியவற்றுக்கு, "ப்ரீ ராடிக்கல்'கள் தான் காரணம். இதை வெளியேற்ற, "ஆன்டி ஆக்சிடன்ட்' தேவை.
என்ன நன்மை?

செலினியம் (Selenium): 
நகம், முடி நன்றாக இருக்க உதவுகிறது. உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் "இ'யுடன் இணைந்து திசுக்களை பாதுகாக்கிறது. புற்றுநோயை தடுக்கிறது. நுரையீரல், புராஸ்ட்ரேட், பெருங்குடல் ஆகியவற்றை பாதுகாக்கிறது.

பீட்டாகெரோட்டின்: 
தோல், எலும்பு, கண் இவைகளை காக்கிறது. உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

வைட்டமின் "இ': 
திசுவை சுற்றியுள்ள உரையை காக்கிறது. சிவப்பு அணுவையும் காக்கிறது. தாவர எண்ணெய், பட்டாணி, கோதுமை, சாலட் ஆகியவற்றில் பீட்டா கெரோட்டின் அதிகம்.

வைட்டமின் "சி': "ப்ரீ ராடிக்கல்'களை அழிக்கிறது. சிமென்ட் போன்ற பசையை உருவாக்கி, எலும்பை சேர்க்கிறது. புண் ஆற உதவுகிறது. பல் ஈறை காக்கிறது. புற்றுநோய், இதய நோயை தடுக்கிறது.

பழைய சோற்றின் நன்மைகள்:-
1) பழைய சோற்றில், வைட்டமின் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிர, சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருக்கின்றன. இது நமது உணவு பாதையை ஆரோக்கியமாக்கும்.
2) பழைய சோற்றுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால், அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. காலை உணவாக இதை உண்டால், உடல் லேசாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
3) சோற்றில் இரவிலே தண்ணீர் ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உருவாகிறது. மறுநாள் இதை குடிப்பதால், உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவை குணமாகும்.
4) பழைய சோற்றில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையும் தீரும். மேலும், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து, உடல் எடையும் குறையும். அதே போல் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து, உடலை சோர்வின்றி வைக்க உதவுகிறது.
5) அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குணமாகிவிடும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால், எந்த நோயும் வராமல் உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும். அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகி விடுகிறது.
6) பழைய சோற்றுக்கு சூடான சாதத்தில் தண்ணீர் ஊற்றக் கூடாது. ஆறிய பின்பு மண் சட்டியில் போட்டு தண்ணீர் ஊற்றி, மறுநாள் காலையில் சிறிது மோர் கலந்து சின்ன வெங்காயத்துடன் சாப்பிட்டால் பலவித நன்மைகளை பெறலாம்.

அரச மரத்தை சுற்றுவது எப்படி?
*****************************************
குழந்தையில்லாத பெண்மணிகள் அரசமரத்தை சுற்றி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இதற்கு சில விதிமுறைகள் உள்ளன.
1)அரச மரத்தை வலம் வரும் போது வேகமாக நடக்கக்
கூ டாது சரியான இடைவெளி விட்டு மெதுவாக நடக்க வேண்டும்.
2)கைகளை ஆட்டாமல் உடலோடு ஓட்டி வைத்துக்கொண்டோ,வணங்க்கிக்கொண்டோ சுற்றி வர வேண்டும்.
3)சக பெண்களுடன் பேசிக்கொண்டே சுற்றக் கூ டாது .இதற்குப் பதிலாக ஏதாவது ஒரு துதிப்பாடலை பாடி வரவேண்டும்.
4)குறைந்த பட்சம் 7 முறை வலம் வர வேண்டும் ,அதிக பட்சமாக 108முறை சுற்றி வரலாம்.
5 )சனிக்கிழமைகளில் அரசமரத்தை சுற்றுவது மிகவும் நல்லது.சுற்றி முடிந்தபின் அரசமரத்தை கட்டிக்கொள்ள வேண்டும்வயிறு மரத்தின் மீது பட்டாள் கர்ப்பம் தரிக்கும் என்பது நம்பிக்கை மலட்டுத் தனத்திற்கு காரணமான பீடைகள் நீங்கிவிடும்.
6)அரசமரத்தை காலை வேளையில் தான் வலம் வரவேண்டும் .மதிய வேலையில் நிச்சயமாக வலம் வரக் கூ டாது
7 )ஆண்கள் தினமும் 108முறை வீதம் 3 ஆண்டுகள் தொடர்ந்து வலம் வந்தால் கடன் தொல்லை நீங்கும்,பய உணர்ச்சி அற்று விடும்,தீராத நோய்கள் தீர்ந்து விடும் ,வியாபாரத்தில் லாபம் கிட்டும்,உத்தியோக வாய்ப்பு கிடைக்கும்.
குடிநீர் பாட்டில்களில் ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்''

குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை.
குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம்.

அடிப்புற முக்கோணத்திற்குள் எண்
''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.

எண் ''2'' இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும்.

எண் ''3'' என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும்.

எண் ''4'' எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும்.

எண் ''5'' பிபி (பாலி புரோபைலின்) வேதிப்பொருளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும்,

எண் ''6'' இருப்பின், பிஎஸ் (பாலிஸ்டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும். இதுதவிர

எண் ''7'' இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம் என்ற இந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம்தமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ''மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது.

உணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது.

'ஒன்ஸ் யூஸ்'' பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும்.

இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்''
காலையில் வெறும் வயிற்றில் எந்த ஜூஸைக் குடிப்பது நல்லது? 

தற்போது பலர் தங்களது உடல்நல பிரச்சனைகளுக்கு மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, இயற்கை வைத்தியங்களை நாடுகின்றனர். மேலும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைப் பின்பற்ற முனைகின்றனர். அதில் ஒன்றாக பலரும் நினைத்து பின்பற்றி வருவது காலையில் எழுந்ததும் ஏதேனும் ஒரு ஜூஸைக் குடிப்பது. இங்கு காலையில் எந்த ஜூஸ் குடித்தால் என்ன நன்மை கிடைக்கும் என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது

பாகற்காய் ஜூஸ் :-

உங்களுக்கு சரியாக பசி எடுப்பதே இல்லையா? மற்றும் உங்கள் உடலில் உள்ள பூச்சிகளை அழிக்க நினைக்கிறீர்களா? அப்படியெனில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடியுங்கள். இது உங்களின் செரிமான திரவத்தின் அளவை அதிகரித்து, பசியின்மையைப் போக்கும் மற்றும் வயிற்றில் உள்ள பூச்சிகளையும் அழிக்கும். மேலும் பாகற்காய் ஜூஸ் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டுன் வைக்கும்.

கேரட் ஜூஸ் :-

நீங்கள் காலையில் கேரட் ஜூஸைக் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வையை மேம்படுத்துவதோடு, கேரட் ஜூஸில் உள்ள அதிகப்படியான பீட்டா-கரோட்டீன் முதுமையைத் தடுக்கும்.

சுரைக்காய் ஜூஸ் :-

உங்களுக்கு சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் இருக்கிறதா? அப்படியெனில் சுரைக்காய் கொண்டு ஜூஸ் தயாரித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான அமிலம் மட்டுப்படுத்தப்படும் மற்றும் சுரைக்காயில் சக்தி வாய்ந்த சிறுநீர்ப் பெருக்கியாக செயல்படும்.

பீட்ரூட் ஜூஸ் :-

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்ஸ் இரத்த நாளங்களை விரியச் செய்து உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வரும் அபாயம் குறையும்.

அருகம்புல் ஜூஸ் :-

அருகம்புல்லில் நோய்த் தீர்க்கும் பண்புகள் ஏராளமாக உள்ளது. குறிப்பாக அமினோ அமிலங்கள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பொருட்கள் அதிகம் உள்ளது. எனவே இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், வயிறு மற்றும் செரிமான பாதைகள் சுத்தமாகி, செரிமான பிரச்சனைகள் தடுக்கப்படும்.

கற்றாழை ஜூஸ் :-

கற்றாழை சரும அழகை மட்டும் அதிகரிக்க பயன்படுவதில்லை, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தான் பயன்படுகிறது. குறிப்பாக கற்றாழை ஜூஸை ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படுவதோடு, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை வேகமாக குறையவும் உதவும்.
தக்காளி தரும் சரும அழகு

தக்காளி தரும் சரும அழகுபொதுவாக தக்காளி அனைத்து வீடுகளிலும் சமையலறையில் பயன்படுத்தும் பொருள். பெண்களின் அழகை கூட்டுவதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கின்றது. பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள பியூட்டி பார்லருக்கு செல்வதை விட வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை வைத்து நம்மை அழகுப்படுத்தி கொள்ளலாம்.

* தக்காளியை தோல் மற்றும் விதைகள் நீக்கி கூழாக்குங்கள். ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவுங்கள். அதன் மேல் இந்த கூழைத் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இவ்வாறு செய்தால் ஒட்டிய கன்னங்கள் பூசினாற் போல் ஆகிவிடும்.

* ஒரு சிலருக்கு முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிந்தபடி இருக்கும் மேக்கப் போட்டாலும் தங்காது. இவர்கள் தக்காளி பழத்தை நன்கு அரைத்து, அந்த விழுதை முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழிவினால் முகம் பளபளப்பாகும். எண்ணெய் வடிதலை கட்டுப்படுத்தும்.

* தக்காளி விழுது, பாதாம் விழுது தலா அரை தேக்கரண்டி எடுத்து கலந்து முகத்தில் தடவுங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இதைச் செய்தால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.

* உருளைக்கிழங்கு துருவல் சாறு 1 தேக்கரண்டி, தக்காளி விழுது அரை தேக்கரண்டி இரண்டையும் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து தக தகவென்று மின்னும்.

* சருமம் மிருதுத்தன்மையை இழந்து விட்டதா? தக்காளி விழுதுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் பூசுங்கள். இவ்வாறு தொடந்து செய்து வந்தால் உங்கள் சருமம் மிருதுவாவதை காணலாம்.

* தக்காளிச் சாறுடன் சிறிது ரவையைக் கலந்து முகத்தில் தேய்த்துக் கழுவினால் முகம் பிரகாசிக்கும். இதுதான் இயற்கை ஸ்கரப்பாக உபயோகிக்கலாம்
ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும் குடமிளகாய் 

குடமிளகாயில் உள்ள வைட்டமின் ஏ, சி, ஈ, பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும். பார்வைத் திறனுக்கு உதவுவதுடன், இளமையிலேயே கண் தொடர்பான பிரச்னைகளை அண்ட விடாமலும் காக்கும். சாதாரண மிளகாயைவிட இதில் சதைப் பற்று அதிகம். மிதமாகப் பயன்படுத்தினால் அஜீரணத்தைப் போக்க உதவும். மேலும் கூந்தலின் ஆரோக்கியத்தைக் காத்து நுனியில் பிளவு ஏற்படுவதைத் தடுக்கிறது. காய்கறி சாலட் மற்றும் சூப்களில் பயன்படுத்தலாம்.
#Vikatan
நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

விலைக் குறைவில் அனைவரும் வாங்கி சாப்பிடும் வகையில் கிடைக்கும் ஒன்று தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன.
மூலிகைகளிலேயே அன்றாடம் சாப்பிட்டாலும், எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாத ஒன்று தான் நெல்லிக்காய். அதிலும் தேனுடன் சேர்த்து தினமும் ஒன்று சாப்பிட்டால், அதனால் கிடைக்கும் நன்மைகளோ அலாதி. சரி, இப்போது நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

1 இரத்த சோகை

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, இரத்தணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

2 இதயம் வலிமையடையும்

தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வருவதன் மூலம், இதய தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.

3 கண் பார்வை மேம்படும்

கண் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும்.

4 பசி தூண்டப்படும்

பசியின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம் சரிசெய்யலாம்.

5 சளி மற்றும் தொண்டைப்புண்

சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அதுமட்டுமின்றி தொண்டையில் புண்ணும் வரும். அத்தகையவர்கள் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், உடலில் தேங்கிய சளி அனைத்தும் வெளியேறிவிடுவதோடு, தொண்டைப்புண்ணும் குணமாகும்.

6 வெள்ளைப்படுதல்

சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் அதிகம் இருக்கும். அத்தகைய பெண்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம், வெள்ளைப்படுதலைத் தடுக்கலாம்.

7 சிறுநீரக பிரச்சனைகள்

முக்கியமாக தேனில் நெல்லிக்காயை ஊற வைத்து சாப்பிட்டால், சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, அப்பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகிவிடும்.

8 அசிடிட்டி

அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், தேனில் ஊறிய நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

9 பொலிவான சருமம்

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் காலையில் சாப்பிட்டால், முகத்தின் பொலிவு அதிகரித்து, சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும்.

10 முடி வளரும்

நெல்லிக்காய் மற்றும் தேனில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களால், இதுவரை அதிகமாக இருந்த முடி கொட்டும் பிரச்சனை தடுக்கப்பட்டு, மயிர்கால்கள் வலிமையடைந்து, முடியின் வளர்ச்சி அதிகமாகும்

பால.ரமேஷ்.

குடல் புழுக்களை வெளியேற்ற உணவே மருந்து!!!
நம் குடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்பதை எப்படி கண்டறிவது என்று கேட்கலாம்.
நிச்சயம் அதற்கும் அறிகுறிகள் உள்ளன. 
அவை வயிற்றுப்போக்கு, மிகுந்த சோர்வு, குமட்டல், மலக்குடல் எரிச்சல், திடீர் உடல் எடை குறைவு போன்றவை
சிறுகுடற்புழுக்களை நீக்க குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மருந்து
இரத்த சோகை சத்துக் குறைபாடு செரிமானக் கோளாறுகள் அலர்ஜி மலச்சிக்கல் வயிற்ருப் போக்கு ஆகிய பிரச்சினைகள் தீர்ந்து குடல் இயக்கம் சீர் படும்
மருந்து ஒன்று
சுண்டைக்காய்ப் பொரியல்
பச்சை சுண்டைக்காயை நைத்து எடுத்துக் கொள்ளவும்
வாணலியில் விளக்கெண்ணெய் ஊற்றி சீரகம் வெந்தயம் சின்ன வெங்காயம் கறிவேப்பிலை போட்டு தாளித்து நைத்து வைத்திருக்கும் சுண்டைக்காயைப் போட்டுக் கிளறி மஞ்சள் தூள் போட்டிக் கிளறி மிளகுத்த்கூல் கல் உப்புப் போட்டு பொரியலாக்கி இறக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் நீங்கும்
மருந்து இரண்டு 
பாகற் காய் கூட்டு
மிதி பாகல் அல்லது நாட்டு பாகற்காய் மட்டும் பயன் படுத்த வேண்டும்
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சின்ன வெங்காயம் பெருங்காயம் பாகல் காய் துவரம்பருப்புடன் பூண்டு சேர்த்து வேக வைத்து எடுத்த பருப்பு மசியல்ஆகியவற்றை சேர்த்து கூட்டாக செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் வெளியேறும்
மருந்து மூன்று
அகத்திக் கீரை பூண்டு சாறு
அகத்திக் கீரை சாறு .. ஒரு தேக்கரண்டி
பூண்டு சாறு. .... .. ஒரு தேக்கரண்டி
தேன் ....... தேவையான அளவு
மூன்றையும் கலந்து தினமும் காலையில் ஒரு வாரம் மட்டும் குடித்து வர குடலில் தங்கியிருக்கும் புழுக்கள் வெளியேறும்
மருந்து நான்கு
வாய் விடங்கப் பொடி
வாய் விடங்கம் ஓமம் மிளகு சுக்கு கறிவேப்பிலை கல் உப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக பொன்னிறமாக வறுத்து ஆறவைத்து ஒன்றாக சேர்த்து அரைத்துப் பொடியாக எடுக்க வேண்டும்
இந்த வாய் விடங்கப் பொடியை தோசை இட்டிலி சோறு போன்ற உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் வெளியேறும் 
குறிப்பு : வாய் விடங்கம் அல்லது வாய் விளங்கம் என்பது மிளகு போன்ற ஒரு பொருள் எல்லா நாட்டு மறுத்துக் கடைகளிலும் கிடைக்கும் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன் அந் தமிழ் நாட்டு அடுக்களையில் மிளகு போல தவறாமல் இடம் பிடித்திருந்த நாம் மறந்துவிட்ட பொருள் இது
மருந்து ஐந்து 
வேப்பிலை துவையல்
சிலர் வேப்ப இலைக் கொளுந்துகளை அரைத்துக் குடிப்பர்
கசப்பு காரணமாக சிலர் குடிக்க மறுப்பார்கள் அப்படிப் பட்டவர்கள் கீழ்க்கண்டவாறு வேப்பிலை உருண்டைகள் செய்து விழுங்கலாம்
வேப்பங் கொழுந்து கறிவேப்பிலை பூண்டு மிளகு ஓமம் சுக்கு ஆகிய பொருட்களைத் தேவையான அளவு எடுத்து நாட்டுப் பசு நெய்யில் பொன்னிறமாக வறுத்து இறக்கி ஆறவைத்து கல் உப்பு சேர்த்து அரைத்து துவைலாக்கி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி விழுங்கி தண்ணீர் குடிக்க குடல் புழுக்கள் வெளிஎறம்
மருந்து ஆறு
குப்பைமேனியிலையை நிழலில் உலர்த்திப் பொடித்து 1/2 தேக்கரண்டிஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள், மலப்புழுக்கள் வெளியேறும். நீரில் கலந்தும் கொடுக்கலாம்.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது 
பெரியவர்கள் குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி.
அளவு குடித்து வர பெரியவர்களின் குடல் புழுக்கள் வெளியேறும்
மருந்து ஏழு
கீரை சூப் 
சின்ன வெங்காயம் - இரண்டு
நல்ல மிளகு - இரண்டு
சீரகம் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
தேவையான அளவு - கீரை (தண்டுக்கீரை அல்லது அகத்திக்கீரை)
பூண்டு - 1 பல்
சேர்த்து சூப் செய்து, வாரத்தில் மூன்று நாட்கள் மாலை வேளையில் அருந்தி வந்தால் குடற்புழுக்கள் நீங்கும். 
மருந்து எட்டு
* யானை திப்பிலி, அரிசி திப்பிலி, வேப்பிலை, சுக்கு, சீந்தில் தண்டு, நிலவேம்பு, சுண்டை வற்றல் ஆகியவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து, சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, பின் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
* 10 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டியபின் வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்துவர, வயிற்றுப்புழுக்கள் வெளியேறும்.
மருந்து ஒன்பது
* புழுத்தொல்லையினால் ஏற்பட்ட தோல் தடிப்பு, வெள்ளை நிற மாவு படிதல், மலவாய் அரிப்பு, பலவிதமான வயிற்று உபாதைகள் நீங்க யானைத்திப்பிலியை இளவறுப்பாக வறுத்து, பொடித்து 1 கிராம் அளவு எடுத்து தேனுடன் குழப்பி, 3 முதல் 7 நாட்கள் சாப்பிட்டுவர வயிற்றுப்புழுக்கள் மலத்துடன் வெளியேறும்
மருந்து பத்து
குப்பை மேனி செடியின் வேரை இடித்து கஷாயமாக்க வேண்டும். அக்கஷாயத்தில் 30 மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து அருந்தினால் வயிற்று புழுக்கள் வெளியாகும்.
மருந்து பதினொன்று
குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்று புண்களை உண்டாக்கும். இதனால் செரிமானத்தன்மை குறையும். இந்த குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...