Friday, April 29, 2016

கற்பூரவள்ளி - மருத்துவ பயன்கள்:-
கற்பூரவள்ளி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி. கற்பூரவள்ளி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும்.
கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. கற்பூரவல்லியின் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை. கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து.
வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும். இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.
இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும். இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்.
இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது. கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும். தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.
மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும். சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.
குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள்.
இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும். அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள்.குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.
 மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி.
மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த Water Filter மண் பானை ஆகும். நாற்பதாயிரம் ரூபாய் செலவு செய்து உங்கள் வீட்டில் Water Filter வாங்கி வைத்திருக்கிறீர்களே நாற்பதாயிரம் ரூபாய்க்கு மண் பானை வாங்கினால் எவ்வளவு பானை கிடைக்கும், தினமும் நாம் ஒரு பானையை உடைத்தால் கூட தீராது. ஆனால் அப்படிப்பட்ட அற்புதமான இயற்கையான ஒரு Water Filter ஐ யாரும் பயன்படுத்துவதில்லை. எனவே தயவு செய்து தண்ணீரை மண் பானையில் வைத்தக் குடித்தால் கெட்ட பொருள்களும் அழியும்.மண் சக்தியும் கிடைக்கும்,பிராண சக்தி அதிகரிக்கும்.
நம் வீடுகளில் வாட்டர் பில்டர் எனும் தண்ணீரைச் சுத்தம் செய்வதற்குக் கருவிகளை வைத்திருக்கிறோம். இந்த வாட்டர் பில்டரில் ஒரு மூன்று மாதத்திற்குப் பிறகு அந்த பில்டரை வெளியில் எடுத்துப் பார்த்தால் வெள்ளையாக இருந்த வாட்டர் பில்டர் ஒரு மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில் தூசுகளோடு இருக்கும்.அதை உதறினால் தட்டினால் அதிலிருந்து மரத்தூள் போன்ற தூசுகள் கிழே கொட்டும். நாம் என்ன நினைப்போம் நல்ல வேளை, இந்த வாட்டர் பில்டர் இருந்தால் இந்த தூசுக்கள் நம் உடம்பிற்குள் செல்லவில்லை என்று.ஆனால் நான் என்ன நினைப்பேன் என்றால் இந்த ததூப்பொருட்கள் இந்தக் குடும்பத்தில் உள்ள, வீட்டில் உள்ள மனிதர்களுக்கு செல்லவில்லை என்று.ஆனால் நான் என்ன நினைப்பேன் என்றால் இந்த ததூப்பொருட்கள் இந்தக் குடும்பத்தில் உள்ள,வீட்டில் உள்ள மனிதர்களுக்கு செல்லவில்லையா? அவர்கள் நோயோடு இருப்பார்கள் என்று நினைப்பேன்.
கண்ணுக்கே தெரியாத அந்தக் தூசுகளை பணம் செலவு செய்து சில கருவிகளை வாங்கி அதிலுள்ள ததூக்களை பிரித்து எடுத்துக் கீழே கொட்டுகிறோமே அது தூசுக்கள் அல்ல, நம் உடலுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய ததூப் பொருட்கள் ஆகும். நீங்கள் தண்ணீரைக் பார்த்தால் அதில் அந்தக் தூசுகள் கண்ணுக்குத் தெரியாது. பில்டரை பயன்படுத்தினால் மட்டுமே அந்தக் தூசுகள் கண்ணுக்குத் தெரியும். தண்ணீரில் கண்ணுக்கே தெரியாத தூசுகளைப் பார்த்து பயப்படுகிரோமே, கொத்து புரோட்டா, சிக்கன் 65, ஆனியன் ரோஸ்ட் என்று கடினமான பல பொருட்களைச் சாப்பிடும் நாம் கண்ணுக்கே தெரியாத அந்த சின்னச் சின்ன தாதுப் பொருட்களை ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு பில்டர் செய்ய வேண்டும்.யாருடைய வீட்டில் தண்ணீரை பில்டர் செய்வதற்கு மெஷின் இருக்கிறதோ அந்த வீட்டில் உள்ள அனைவரும் உங்கள் இரத்தத்தில் உங்களுக்குத் தேவையான தாதுப் பொருட்கள் இல்லாமல் மருந்துக் கடைகளில் சென்று இந்த தூசுகளை மருந்து என்ற பெயரில் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். தண்ணீரில் இருக்கும் அந்தத் தாதூப் பொருட்களை பில்டர் செய்யக்கூடாது. தண்ணீரைக் பில்டர் செய்து சாப்பிட்டால் மனிதருக்கு நோய் வரும்.வாழ்வோம் ஆரோக்கியமாக !

மெல்ல கொல்லும் குடிநீர் " பாட்டில்கள் "
குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை.
குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும்.
இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம்.
அடிப்புற முக்கோணத்திற்குள் எண் ''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.
எண் ''2'' இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும்.
எண் ''3'' என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும்.
எண் ''4'' எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும்.
எண் ''5'' பிபி (பாலி புரோபைலின்) வேதிப்பொருளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும்,
எண் ''6'' இருப்பின், பிஎஸ் (பாலிஸ்டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும்.
இதுதவிர எண் ''7'' இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம்.viaதமிழன் என்ற இந்தியன்
இந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும்.
பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது.
புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர்.
இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம்
தமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ''மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது.
உணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது.
''ஒன்ஸ் யூஸ்'' பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும்.
இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்'' என்றார்.
கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளவும்.


உணவில் தரமற்ற பொருட்களை கலக்கிறார்கள்? எப்படி கண்டு பிடிப்பது ?
கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது. இது தெரியாமல் அதை காசு கொடுத்து வாங்கி உண்டு நம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறோம்.
தவறான வழியில் காசு சம்பாதிக்க மக்கள் உயிரோடு விளையாடும் இந்த கயவர்கள் எப்படியெல்லாம் உண்ணும் உணவில் தரமற்ற ஆபத்தான பொருட்களை கலக்கிறார்கள்? அதை எப்படி கண்டு பிடிப்பது?
சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கிறார்கள். சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைத்தால் அதில் சுண்ணாம்பு இருந்தால் கிளாசின் அடிப் பகுதியில் படியும்.
பெருங்காயத்தில் பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரைத்தால் பால் போன்ற கரைசல் கிடைக்கும். கலப்படமற்ற பெருங்காயத்தை எரியச் செய்தால் மிகுந்த ஒளியுடன் எரியும்
ஏலக்காயில் அதன் எண்ணெயை நீக்கி விட்டு முகப்பவுடர் சேர்க்கிறார்கள் இதை கையால் தடவிப்பார்த்தால் முகப்பவுடர் கையில் ஓட்டிக்கொள்ளும். இந்த ஏலக்காயில் மணமிருக்காது.
மஞ்சள் தூளில்,பருப்பு வகைகளில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறாகள். அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.
மிளகாய் தூளில் மரப்பொடி , செங்கல் பொடி, Rodamine Culture மற்றும் சிவப்பு வண்ணப்பொடி கலக்கிறார்கள். நீரில் கரைத்து சோதித்தால் மரத்தூள் மிதக்கும் வண்ணப் பொடி தண்ணீரில் நிறமுண்டாக்கும். செங்கல் பொடி மிளாய் பொடியை விட சீக்கிரம் கிளாசின் அடியில் போய் செட்டில் ஆகிவிடும். 2 கிராம் மிளாய் பொடியில் 5 ml acetone சேர்த்தால் உடனடி சிவப்பு நிறம் தோன்றினால் Rodamine Culture கலப்படத்தை உறுதி செய்யலாம்.
காபித் தூளில் சிக்கரி கலக்கிறார்கள். குளிர்ந்த நீரில் கலந்து குலுக்கினால் காபித்தூள் மிதக்கும் சிக்கரி கீழே படிந்து விடும்.
கொத்துமல்லி தூளில் குதிரைச்சாணத்தூள் கலக்கிறார்கள். நீரில் கரைத்தால் குதிரைச் சாணத்தூள் மிதக்கும்
கிராம்பில் அதன் எண்னெயை எடுத்து விட்டிருப்பார்கள். எண்ணை நீக்கப்பட்ட கிராம்பு சுருங்கி இருக்கும்
சீரகத்தில் புல்விதை நிலக்கரிதூள் கொண்டு வண்ணம் ஊட்டப் பட்டிருக்கும். கைகளில் வைத்து தேய்த்தால் விரல்களில் கருமை படியும்.
நெய்யில் மசித்த உருளக்கிழங்கு, வனஸ்பதி சேர்த்திருப்பார்கள். 10-மி.லி.ஹைட்றோ குளோரிக் அமிலத்துடன் 10-மி.லி உருக்கிய நெய் கலந்து அதோடு ஒரு மேசைக்கரண்டி சர்க்கரையை கரைத்து ஒரு நிமிடம் நன்றாக குலுக்கவும் வனஸ்பதி கலந்திருந்தால் பத்து நிமிடங்களுக்கு பின் சிவப்பு நிறமாக மாறும்.
வெல்லத்தில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறார்கள்.அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.
ரவையில் இரும்புத் தூள் கலக்கிறார்கள் காந்தத்தை அருகே காட்டினால் இரும்புத்தூள் ஒட்டிக்கொள்ளும்.
பாக்குத்தூளில் மரத்தூள் மற்றும் கலர் பொடி சேர்க்கிறார்கள் நீரில் கரைத்தால் தண்ணீரில் வண்ணம் கரையும்.
பாலில்,நெய்யில் மசித்த உருளக்கிழங்கு அல்லது பிற மாவுகள் கலக்கிறார்கள். கலப்பட பாலில் ஒரு சொட்டு டிஞ்சர் அயோடின் சேர்த்தால் மர வண்ண டிஞ்சர் நீல வண்ணம் ஆகும். பாலில் யூரியா கலப்படம் செய்திருந்தால் 5 ml பாலில்இரண்டு துளி bromothymol blue சொலுசன் கலந்து பத்து நிமிடம் கழித்து நீலநிறமானால் யூரியாகலந்திருப்பதை உறுதி செய்யலாம் பாலில் தண்ணீர் சேர்த்திருந்தால் ஒரு துளி பாலை வழ வழப்பான செங்குத்து தளத்தில் வழிய விட்டால் தூய பால் வெள்ளை கோட்டிட்டது போல் வழியும் கலப்பட பால் எந்த அடையாளமும் ஏற்படுத்தாது உடனடி வழிந்து விடும். டிடெர்ஜென்ட் பவுடர் எண்னெய் எல்லாம் சேர்த்து பால் போன்ற செயற்கை பாலையும் உருவாக்கி விடுகிறார்கள்.
தேயிலைத்தூளில் பயன்படுத்திய பின் உலத்திய தூள் செயற்கை வண்னமூட்டிய தூள் கலக்கிறார்கள். ஈர, வெள்ளை பில்டர் தாளில் தேயிலைத் தூளை பரப்பினால் மஞ்சள், சிவப்பு, பிங்க் புள்ளிகள் உண்டானால் அதில் கலர் சேர்த்திருக்கிறார்கள். இரும்புத்தூள் சேர்த்திருந்தால் காந்தம் மூலம் கண்டுபிடிக்கலாம்.
சமையல் எண்ணெயில் ஆர்ஜிமோன் எண்ணெய் கலக்கிறார்கள். எண்ணெயுடன் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் சேர்த்து சிறிது சிறிதாக ஃபெர்ரிக் க்ளோரைடு கலவையில் கலந்தால் எண்ணெயில் ஆர்ஜிமோன் கலப்படமிருந்தால் அரக்கு வண்ண படிவு உண்டாகும்.
குங்குமப்பூவில் நிறம் மற்றும் மணம் ஏற்றப்பட்ட உலர்ந்த சோள நார்கள் கலக்கிறார்கள்.தூய குங்குமப்பூ எளிதில் முறியாது கடினமாக இருக்கும். கலப்பட நார் எளிதில் முறிந்து விடும்.
ஜவ்வரிசியில் மணல் மற்றும் டால்கம் பவுடர் சேர்கிறார்கள். வாயிலிட்டு மென்றால் கல் நற நறவென்றிருக்கும். தண்ணீரில் வேக வைக்கும் போது தூய ஜவ்வரிசி பருத்து பெரிதாகும்.
நல்ல மிளகில் உலர்த்தப்பட்ட பப்பாளி விதைகள், கருப்பு கற்கள் சேர்க்கிறார்கள். முட்டை வடிவ கரும்பச்சை பப்பாளி விதைகள் சுவையற்றவை.
தேங்காய் எண்ணெயில் பிற எண்ணெய்கள் கலக்கிறார்கள். தேங்காய் எண்ணெயை ஃபிரிட்ஜில் வைத்தால் உறையும் ஆனால் கலந்த .பிற எண்ணெய் உறையாது தனித்து இருக்கும்.
கம்புவில் பூஞ்சைகள் கலக்கிறார்கள். உப்பு நீரில் பூஞ்சைகள் மிதக்கும்.
இலவங்கப்பட்டையுடன் (தால்சினி) தரங்குறைந்த கருவாய் பட்டை (கேசியா) வில் வண்ணம் சேர்த்து கலக்கிறார்கள். சேர்க்கப்பட்ட வண்ணம் நீரில் கரையும்.
சாதாரண உப்பில் வெள்ளைக் கல் தூள், சுண்ணாம்பு கலக்கிறார்கள் உப்பை தண்ணீரில் கரைத்தால் சுண்ணாம்பு கலப்படம் இருந்தால் தண்ணீர் வெள்ளை நிறமாகும். தூய உப்பு நிறமற்று இருக்கும்.
தேனில் சர்க்கரை பாகு கலப்படம் செய்கிறார்கள்.தூய தேனில் நனைத்த பஞ்சுத்திரியை தீயில் காட்டினால் எரியும் கலப்பட தேனில் எரியாது வெடி ஒலி உண்டாகும்.
கடலை எண்ணெயில் பருத்திக்கொட்டை எண்ணெய் கலக்கிறார்கள் .2.5 மி.லி ஹால்பென் கரைசல் சேர்த்து லேசாக மூடி பொருத்தி கொதிநீரில் 30 நிமிடம் சூடு படுத்தினா கலப்படமிருந்தால் ரோஸ் நிறமுண்டாகும்.
ஐஸ் கிரீமில் வாஷிங் பவுடர் கலக்கிறார்கள். சில துளி எலுமிச்சை சாறு அதில் விட்டால் குமிழ்கள் ஏற்பட்டால் இதை உறுதி செய்யலாம்.
முட்டை யில் டீ டிக்காசன் மூலம் சாயம் ஏற்றி நாட்டு கோழி முட்டியாக விற்கிறார்கள்.
விழிப்புணர்வு மூலம் மட்டும் தான் இந்த தீமையை வேருடன் ஒழிக்க முடியும்.


மாரடைப்பு வந்தவர்களுக்குப் பொன்னான நேரம்
டாக்டர் கு. கணேசன் எழுதிய ‘மாரடைப்புச்
சந்தேகங்களும் டாக்டரின் ஆலோசனைகளும்’
நூலில் இருந்து பயனுள்ள சில பகுதிகள்:
ஒருவருக்கு மாரடைப்பு வந்த பின்னர், முதல்
60 நிமிடங்கள் அவருக்குப் `பொன்னான நேரம்’. இந்த
நேரத்துக்குள் நவீன சிகிச்சைகள் தரக்கூடிய, அதாவது, கேத்லேப் வசதியுள்ள மருத்துவமனைக்குச் சென்று பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையைச்
செய்துகொண்டால், 100 சதவீதம் ரத்தக்குழாய் அடைப்பை நீக்கி, இதயத் தசைகள் பாதிப்படையாமல்
பார்த்துக்கொள்ளலாம்.
இதன்மூலம் மீண்டும் எப்போதும்போல், உடல்நலத்துடன் அதிக நாள்கள் அவர் வாழ முடியும். மாரடைப்பு வந்தவர்களுக்கு இந்த ஒரு மணி நேரத்துக்குள் சிகிச்சை
பெற முடியாவிட்டால், குறைந்தது 12 மணி நேரத்திற்குள்ளாக இந்தச் சிகிச்சையைச் செய்துகொண்டால், இதயத்துக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க  முடியும். 12 மணி நேரம் கடந்துவிட்டால்,
இதயத் தசைகளில் தழும்பு ஏற்பட்டுவிடும்.பிறகு, அந்த இடம் வேலை செய்யாது.
இதனால், சிகிச்சைக்குப் பின்னர்கூட மூச்சுத்திணறல், சோர்வு போன்ற தொல்லைகள் உருவாகலாம்.
இதன் விளைவாக வாழ்நாள் குறையும். மாரடைப்பு வந்தவர்கள் சாப்பிட வேண்டியவை:
அரிசி, கோதுமை, மைதா, கம்பு, கேழ்வரகு, முழு
தானிய வகைகள்.துவரை, பட்டாணி, கொண்டைக்
கடலை, கடலைப்பருப்பு வகைகள்.வெண்ணெய் நீக்கப்பட்ட பால்,மோர்.கீரைகள், காய்கறிகள், பழங்கள் (இதய
நோயுடன் நீரிழிவு நோயும் இருந்தால்,பழங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.) நார்ச்சத்து மிகுந்த தக்காளி, அவரை, வெண்டைக்காய், கொத்தவரங்காய்,
கத்தரிக்காய், வாழைத்தண்டு, பூசணிக்காய் ஆகிய காய்கறிகள்.எண்ணெயில் வறுத்த காய்களைவிட
ஆவியில் அவித்த அல்லது வேகவைத்த காய்கள் நல்லது.
மாரடைப்பு வந்தவர்கள் குறைத்துக்கொள்ள வேண்டியவை:
கொழுப்பு நீக்கப்பட்ட ஆட்டிறைச்சியை மூன்று வாரங்களுக்கு ஒருமுறை (கல்லீரல்,மூளை, சிறுநீரகம் தவிர்த்து) சாப்பிடலாம்.கோழி இறைச்சியை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சாப்பிடலாம்.வாரத்துக்கு மூன்று முறை, இரண்டு மீன்துண்டுகள் சாப்பிடலாம்.
தினமும் 5 மி.லி.க்கு மேல் நெய்யைஉணவில் சேர்த்துக்கொள்ளக்கூடாது.
மாரடைப்பு வந்தவர்கள் தவிர்க்க வேண்டியவை:
முட்டையின் மஞ்சள் கரு, மாட்டுக் கறி,பன்றிக் கறி.
ஆடை நீக்கப்படாத பால், தயிர்,வெண்ணெய், பாலாடை,
பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள்.தேங்காய், முந்திரிப் பருப்பு, பாதாம்பருப்பு, பிஸ்தா.எண்ணெயில் பொரிக்கப்படும்அப்பளம், வடை, பஜ்ஜி, போண்டா, பூரி.
உருளைக்கிழங்கு சிப்ஸ், சமோசா, கருவாடு,வடகம்.
பீட்ஸா, பர்கர், குளிர்பானங்கள், கிரீம்கேக்குகள், ஸ்கிரீம், கோலா, ஜாம்,பாதாம் கீர், மது பானங்கள்.
மாரடைப்பு வந்தவர்கள் பின்பற்ற வேண்டிய பொதுவான
குறிப்புகள்:பொரித்த உணவு வகைகள்ஆகாது.l
உப்பைக் குறைக்க வேண்டும்.நொறுக்குத்தீனிகள் ஆகாது.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரை, இனிப்பு
போன்றவற்றைக் குறைத்துக்கொள்ளவேண்டும்.
அதிகம் சாப்பிடக் கூடாது.அடிக்கடி சாப்பிடவும் கூடாது.
மாரடைப்புச் சந்தேகங்களும் ாக்டரின்ஆலோசனைகளும்,
டாக்டர் கு. கணேசன், மருத்துவப்
பதிப்பகம், எண்: 26/12, மேற்கு அரசமரத்
தெரு, அமைந்தகரை, சென்னை- 29.


ஒரே மாதத்தில்
தொப்பையைக்
குறைக்க
தினமும்
வெறும்
வயிற்றில்
குடிக்க
வேண்டிய
பானங்கள்!
தொப்பை மற்றும் உடல்
எடையைக் குறைப்பது
என்பது கடினமானது
என்று நினைத்து
முயற்சியைக்
கைவிடாதீர்கள்.
காலையில் எழுந்ததும்
வெறும் வயிற்றில்
கொழுப்புச் செல்களைக்
கரைக்க, உடலின்
மெட்டபாலிசத்தை
அதிகரித்து
கலோரிகளை எரிக்கும்
முயற்சியில்
ஈடுபட்டால், நிச்சயம்
தொப்பையைக்
குறைக்கலாம். அதற்கு
உதவுவது ஒருசில
பானங்கள் தான்.
அந்த பானங்கள்
என்னவென்று தெரிந்து,
அவற்றில் ஏதேனும்
ஒன்றை தேர்வு செய்து,
தினமும் காலையில்
எழுந்ததும் வெறும்
வயிற்றில் குடித்து வர,
உடலின் மெட்டபாலிசம்
அதிகரிப்பதோடு, உடல்
பருமனை உண்டாக்கும்
டாக்ஸின்களும்
வெளியேறும்.
மேலும் வெறும்
வயிற்றில் அந்த
பானங்களைக்
குடிப்பதால், எளிதில்
அந்த பானங்களில் உள்ள
சத்துக்கள் உடலால்
உறிஞ்சப்பட்டு,
கொழுப்புச் செல்களைக்
குறைக்கும் பணி
வேகமாக்கப்படும்.
சரி, இப்போது
தொப்பையை ஒரே
மாதத்தில் கரைக்க
உதவும் அந்த பானங்கள்
என்னவென்று பார்ப்போம்.
முக்கியமாக இங்கு
கொடுக்கப்பட்டுள்ள அந்த
பானங்கள் எந்த ஒரு
பக்கவிளைவையும்
ஏற்படுத்தாது என்பதால்
தைரியமாக நீங்கள்
பின்பற்றலாம்.
மிளகு தண்ணீர்
ஒரு டம்ளர் எலுமிச்சை
ஜூஸில், 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் சேர்த்து
கலந்து, காலையில்
எழுந்ததும் வெறும்
வயிற்றில் குடிக்க
வேண்டும். முக்கியமாக
இது குடித்து 1
மணிநேரம் கழித்து தான்
காலை உணவை
உட்கொள்ள வேண்டும்.
இதனால் மிளகில் உள்ள
கேப்சைசின் உடலின்
மெட்டபாலிசத்தை
தூண்டி, கொழுப்புச்
செல்களைக் கரைக்கும்.
மேலும் இந்த பானம்
நுரையீரலில் உள்ள
டாக்ஸின்களை
வெளியேற்றவும்
உதவும்.
இஞ்சி தண்ணீர்
இஞ்சி தண்ணீர் உடலினுள்
உள்ள எடையை
அதிகரிக்கும்
டாக்ஸின்களை
வெளியேற்றி,
மெட்டபாலிசத்தை
அதிகரித்து, பகல்
வேளையில்
கொழுப்புக்களை
வேகமாக கரைக்கும்.
அதற்கு இரவில் படுக்கும்
போது ஒரு டம்ளர் நீரில்
சிறிது இஞ்சியை
துருவிப் போட்டு ஊற
வைத்து, மறுநாள்
காலையில் அதனை
வெறும் வயிற்றில்
குடிக்க வேண்டும்.
மஞ்சள் தண்ணீர்
காலையில் எழுந்ததும்
ஒரு டம்ளர் நீரில் 1
டீஸ்பூன் மஞ்சள் தூள்
சேர்த்து கலந்து குடிக்க
வேண்டும். இதனால்
டாக்ஸின்கள்
வெளியேறி, உடலினுள்
அழற்சியினால் ஏற்பட்ட
வீக்கம் குறையும்.
மேலும் மஞ்சளில் உள்ள
மருத்துவ குணங்கள்
உடலில் உள்ள
கிருமிகளை அழித்து,
உடலுக்கு நல்ல
பாதுகாப்பை அளிக்கும்.
எலுமிச்சை தண்ணீர்
ஒரு டம்ளர் எலுமிச்சை
ஜூஸில் தேன் கலந்து
தினமும் காலையில்
குடித்து வர, அதில் உள்ள
அமிலங்கள் மற்றும் இதர
சத்துக்கள் உடலின்
மெட்டபாலிசத்தை
தூண்டி, கொழுப்புக்கள்
கரைய வழிவகுக்கும்.
முக்கியமாக இந்த ஜூஸ்
குடித்து 1 மணிநேரம்
கழித்து தான் காலை
உணவை உட்கொள்ள
வேண்டும்.
ஆப்பிள் சீடர்
வினிகர்
காலை உணவு
உண்பதற்கு முன், ஒரு
டம்ளர் நீரில் ஆப்பிள் சீடர்
வினிகரை ஒரு டீஸ்பூன்
சேர்த்து கலந்து,
குடித்து வந்தால்,
கொழுப்புக்கள் கரைத்து
உடல் எடை
குறைவதோடு, நாள்
முழுவதும்
சுறுசுறுப்புடனும்
இருக்கலாம். மேலும்
இந்த பானம் செரிமான
பிரச்சனைகளையும்
சரிசெய்யும்.
குளோரெல்லா தண்ணீர்
இந்த பானம் உடலில் உள்ள
நச்சுமிக்க
மெர்குரிகளை
வெளியேற்றி, உடலில்
உள்ள பாதிக்கப்பட்ட
செல்களைப்
புதுப்பித்து, உடல்
பருமன் குறைய உதவும்.
அதற்கு ஒரு டீஸ்பூன்
குளோரெல்லா
பொடியை ஒரு டம்ளர்
நீரில் கலந்து,
காலையில் வெறும்
வயிற்றில் குடிக்கலாம்
அல்லது குளோரெல்லா
மாத்திரை கிடைத்தால்,
தினமும் ஒன்றை
வெறும் வயிற்றில்
போட்டுக் கொள்ளலாம்.


ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்!!!
01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.!&
02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு!
03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை!
04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை!
05. காது மந்தம் போக்கும் தூதுவளை!
06. மூத்திரக்கடுப்பு மாற்ற பசலைக் கீரை!
07. பித்த மயக்கம் தீர புளியாரை!
08. உடற் சூடு அகல முருங்கைக் கீரை!
09. நீரிழிவு நோய்க்கு துளசி இலை!
10. இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூடு!
11. கண் பார்வை அதிகரிக்க கரட், புதினா, ஏலக்காய்!
12. கடுமையான ஜலதோசத்திற்கு தேனும் எலுமிச்சையும்!
13. வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி!
14. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்!
15. கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்!
16. இளைத்த உடல் பெருக்க மிளகு!
17. பொடுகைப் போக்க தயிரில் குளி!
18. மூலநோய்க்கு கருணைக்கிழங்கு!
19. இதயப் பலவீனம் போக்க மாதுளை!
20. வெள்ளை வெட்டை தீர அன்னாசி!
21. காதுவலி தீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில் விடுக!
22. பீனீசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண்!
23. பொன்னாங்காணி உண்டால் நோய் தணிந்து உடல் தேறும்!
24. வாழைத்தண்டு சிறு நீரகக்கற்களை கரைக்கும்!
25. மலத்தை இளக்கும் ரோஜா இதழ்கள்!
26. மாதுளம் பிஞ்சு பேதியை நிறுத்தும்!
27. கருப்பை நோய்க்கு வாழைப்பூ!
28. ஜீரண சக்தியை அதிகரிக்கும் மிளகும் இஞ்சியும்!
29. மூளைக்கு வலுவூட்டுவது பேரிச்சம்பழம் பாதாம் பருப்பு!
30. மருதோன்றி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்.!

CLEAN YOUR KIDNEYS
- our kidneys are filtering the blood by removing salt and any unwanted bacteria entering our body.
With time, salt accumulates in our kidneys and it needs to undergo cleaning treatment.
How are we going to do this?
Here is an easy, cheap and simple way to do it.
Take a bunch of coriander (DHANIYA Leaves) and wash it clean.
Cut it in small pieces and put it in a pot.
Pour clean water and boil it for ten minutes and let it cool down.
Next filter it and pour it in a clean bottle and keep it in refrigerator to cool.
Drink one glass everyday and you will notice all salt and other accumulated impurities coming out of your kidneys during urination.
You will be able to notice the difference yourself!
DHANIYA/CORIANDER is known as a best cleaning treatment for kidneys and the best part is it is natural!
Please share this information with others and keep your kidneys clean.
Dont just Read
👉Do forward to whom you care.👈


கால்ஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி! 
காலத்துக்கு ஏத்த
மாதிரி, இடத்துக்கு தகுந்த மாதிரி சில நோய் வந்து மனுஷன பாடாப்படுத்திரும்.
அதுலயும் சில நோய் இருக்குற இடம் தெரியாது. ஆனா...
ஆளை உண்டு,இல்லைனு
ஆக்கிடும்.
இந்த... கால் ஆணி இருக்கே,
அது வந்துட்டா உயிர் போற மாதிரி வலி
எடுக்கும்.
சிலர் என்ன வைத்தியம் செய்றதுனு தெரியாம பனைவெல்லத்தை கால்ஆணி உள்ள
இடத்துல வச்சு தீக்குச்சியை பத்த வைப்பாங்க.
இன்னுஞ்சிலர் பிளேட வச்சு ரத்தம்வர்ற
அளவுக்கு ரவுண்ட் ரவுண்டா அறுத்து எடுப்பாங்க. எவ்வளவு கொடுமையானவைத்தியம்
பாருங்க.
கைவசம் எளிமையான வைத்தியமெல்லாம் இருக்கும்போது... எதுக்காகஇந்த முரட்டு
வைத்தியம்?
அம்மான் பச்சரிசி செடினு ஒண்ணு கேள்விப்பட்டிருப்பீங்க.
அந்தச் செடியை உடைச்சு, அதுல வர்ற பாலை எடுத்து, கால் ஆணி இருக்கறஇடத்துல தடவி
வந்தா... அந்தப் பிரச்னை ரொம்பச் சொகமா மறஞ்சி போயிரும்.
ஒரு செடியை சிறுசு
சிறுசா உடைச்சு அதில வர்ற பாலை பயன்படுத் தலாம். ஒரு தடவை தடவினதும்குணம்
கெடச்சிராது. தொடர்ந்து ரெண்டு வாரமாவது செஞ்சு பாருங்க. முதல்ல வலிகொறையும், ள
பிறகு போகப் போக ஆணியும் மறைஞ்சிரும்.
மருதாணி இலை கொஞ்சம், மஞ்சத் துண்டு
கொஞ்சம் ரெண்டையும் எடுத்து மையா அரைக்கணும். ஒரு நெல்லிக்காய் அளவுஎடுத்து,
ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி கால் ஆணி உள்ள இடத்துல வச்சுகட்டிடணும்.
தொடர்ந்து 10 நாள் செஞ்சு பாருங்க. துண்டக் காணோம்... துணியைக் காணோம்னுபாய்ஞ்சி
ஓடிப்போயிரும் ஆணி.
சித்திரமூலம் (இதை கொடிவேலி என்றும் சொல்வார்கள். நாட்டு
மருந்து கடைகளில் கிடைக்கும்) வேர்ப்பட்டையை ஒரு புளியங்கொட்டை அளவுஎடுத்துஅரைச்சு தூங்கப்போறதுக்கு முன்னாடி கால் ஆணி மேல பூசி வந்தா... மூணுநாள்ல குணம்
கிடைக்கும். இந்த வைத்தியம் செய்யும்போது சிலருக்கு அந்த இடத்துல புண்உண்டாகும்.
அப்படி வந்தா... ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில ஒரு சிட்டிகை மஞ்சள்தூள்சேர்த்து
குழைச்சு, புண் வந்த இடத்துல பூசுனா புண் ஆறிடும். கால் ஆணியும்காணாமப்போயிரும். கால் ஆணி நீங்க ...இஞ்சிச் சாற்றுடன் சிறிதளவு நீர்த்தசுண்ணாம்பைக் கலந்து கால் ஆணிக்கு மருந்தாக போட்டு வந்தால் கால் ஆணிநீங்கி விடும்.5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு, கைப்பிடி அளவு
மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ளஇடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து,துணியினால் இறுகக் கட்டி விட வேண்டும். படுக்கும் முன்பு இதை செய்யவேண்டும். தொடர்ந்து அரை மண்டலம் (20 நாட்கள்) வரை இவ்விதம் செய்தால்கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்
வியர்வை நாற்றம் குறைய
திருநீற்றுப் பச்சிலை, துளசி, வேப்பங்கொழுந்து இவை மூன்றையும் நன்கு அரைத்து பாசிப்பயறு, வெந்தயப் பொடி கலந்து தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றம் குறையும்.
அதீத வியர்வை
உள்ளங்கை மற்றும் கால் வியர்வை நிற்க இலந்தை மர இலைகளை சாறு எடுத்து உள்ளங்கை மற்றும் கால்களில் தடவி வர வியர்ப்பது நிற்கும்.
அதிகப்படியான வியர்வை பிரச்சனை சரியாக
இலந்தை மர இலைகளை எடுத்து நசுக்கி சாறு எடுத்து உள்ளங்கை மற்றும் கால்களில் தடவி வர அதிகப்படியான வியர்வை பிரச்சனை சரியாகும்.

மிகவும் முக்கியம்......                         அனைவரும் கவனமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது.பொதுவாக டாக்டர்கள் மருந்து சீட்டு எழுதித்தரும் போது அதில் கலந்துள்ள கலவை பற்றி எழுதாமல் தயாரிப்பு நிறுவன பெயரையே எழுதுவதால் அதிக விலை உள்ள மாத்திரைகளையே (அது குறைவாக கிடைக்கும் என்ற போதும் ) அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.மருந்து விலைப் பட்டியல் பற்றி அறிய கீழ்க்கண்ட வழி முறைகளைப் பின்பற்றவும்.........                                     (1) "1MG Health App For India" என்பதை உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்யவும்........                        (2) மருந்து பெயரை தேடவும்...........                          (3) பயன்படுத்தும் மருந்து தேடவும்.(உதாரணம்...லிரிகா 75 மில்லி கிராம்) (பிபிசர் கம்பெனி).......                          (4) கம்பெனி பெயர், மருந்து பெயர், விலை,கலந்துள்ள வேதிப் பொருட்கள் முதலிய விபரம்  பற்றி அறியலாம்.                         (5) Substitute என்பதை க்ளிக் செய்யவும்.......              (6) அதே மருந்துகள் மிக குறைந்த விலையிலும் கிடைப்பதை அறிந்து ஆச்சரியப் படுவீர்கள்.........(உதாரணம்.லிரிகா என்ற மருந்து பதினான்கு மாத்திரை 768.56 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஒரு மாத்திரை ரூ.54.89. ஆனால்  அதே மாத்திரை Prebaxe என்ற பெயரில் சிப்லா என்ற கம்பெனி பத்து மாத்திரை 59 ரூபாய்க்கு தருகிறது. ஒரு மாத்திரை ரூ.5.90 மட்டுமே......                 இதை DELETE  செய்யாமல் FORWARD  செய்யவும்.... உங்களது போன் புக்கில் உள்ள எல்லா நம்பருக்கும்......          அனைவரும் பயன் பெற சுப்ரீம் கோர்ட் தலையிட்டு கவனம் செலுத்தி வருகிறது.........                        உயிர் காக்கும் மருந்துகளை கிடைக்காமல் செயவதில் கம்பெனிகள் அக்கறை காட்டுகின்றன.ஆனால் சாமானியனின் மருத்துவ தேவையை கவனத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட் செயல்படுகிறது......               அன்புக்கு விலை இல்லை.....மற்ற தளங்களில் பதிவிடவும்.....மற்றவர்க்கு உதவுவதே உருப்படியான காரியம்.......எப்போதும் உதவுங்கள்......
எச்சரிக்கை !!!
யாரும் உன்னவேண்டாம்

நாய்க்கு கூட குடுக்கவேண்டாம்...
Sugar disease is a slow poison
இதுதான்,
இன்றைக்கு இனிப்பான செய்தி.. 😀
உங்கள்
சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா?
கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள்
.
நிச்சயமாகப் போகும்.
ஆக,
சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம்.
இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?
இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்?
காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு
படுக்கச் செல்லும்முன் குடிக்கும் பால் வரை
சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது.... 😈😈😈😈
பதார்த்தத்தில் தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்
😬.
இந்த
வெள்ளை சீனியை
எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால.....
இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.
குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்...
.
1.கரும்பிலிருந்துசாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது.
இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.
4.
102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது
.
5. அடுத்து,
பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது
.
6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது
.
7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது.
சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.
8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே
.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது
.
காரணம்
அதில் உள்ள சல்பர் டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது
.
குடலில்
மட்டுமல்ல,
பல் வலி, பல்சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரியவியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது
.
ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு,
வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்
.
இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.
This is true so Can we avoid
டாக்டர் டேவிட் ரூபன் என்ற ஊட்டச்சத்து நிபுணர் சர்க்கரையைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்
.
“சர்க்கரையின் உண்மைப் பெயர் சுக்ரோஸ். அதன் இரசாயன மூலக்கூறு C12H22O11
.
இந்த சர்க்கரையில்
12 கார்பன் அணு (atom)
22 ஹைட்ரோஜன் அணு,
1 ஆக்ஸீஜன் அணு உள்ளது
.
இதனைத் தவிர்த்து வேறு எதுவும் சர்க்கரையில் கிடையாது
.
கொகைனின் இரசாயன மூலக்கூறு C17H21NO4
.
இரண்டிற்கும் அவ்வளவாக வேறுபாடு கிடையாது
.
சர்க்கரையில் நைட்ரோஜன் அணு மட்டும் இல்லை என்பதே சிறிய வேறுபாடு
.
நண்பர்களே இன்றய ஊடகங்களால் மறைக்கப்பட்ட சதி எனவும் கூறலாம் பணத்திற்காக நம் பாமரமக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.......!
நண்பர்களே (முக்கியம்)படித்துவிட்டு பகிருங்கள
கருமை உண்டாகி நரை மாற🌿🍀🍃🍊🍒😊நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தனப் பொடி ஆகியவை தலா 10 கிராம்- இவை அனைத்தையும் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்கவைக்கவும்.
இந்தக் கலவையை நான்கு நாட்கள் வெயிலில் வைக்க வேண்டும். சூரியக் கதிர்கள் பட்டு எண்ணெயில் சாரம் இறங்கும். பின்பு வெள்ளைத் துணியில் அதை வடிகட்டவும். குளிக்கும் முன் தலையில் தேய்த்து வந்தால் நரை குறையும். செம்பட்டை முடி கருமையாகும்.
* செம்பருத்தி பூ, அவுரி விதை, காயவைத்த நெல்லிக்காய் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். நரைமுடிக்குத் தேவையான அளவு அந்தக் கலவையைத் தண்ணீரில் கலந்து ஒரு இரும்பு பாத்திரத்தில் நான்கு மணி நேரங்கள் வைக்கவும். வெள்ளை முடி உள்ள இடங்களில் அதைத் தடவி அரை மணி நேரத்தில் அலசிவிடவும். இது முடியைக் கருப்பாக்கும். வெள்ளை முடி அதிகமாகாமல் தடுக்கும்.
* 50 கிராம் அளவுக்கு மருதாணிப் பொடியில் ஒரு முட்டை, 5 மி.லி.தூய தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய், 2 டேபிள்ஸ்பூன் தயிர், 2 டேபிள்ஸ்பூன் காபி (சிக்கரி கலக்காதது) அல்லது  டீ டிகாக்‌ஷன், எலுமிச்சைச்சாறு 5 முதல் 8 சொட்டு, தேவைக்கேற்ப வெதுவெதுப்பான நீர் சேர்க்கவும். இவற்றை ஒரு இரும்பு பாத்திரத்தில் 4 மணி நேரம் ஊற வைக்கவும். தலையில் ஆயில் மசாஜ் செய்த பின் கொஞ்சம் கொஞ்சமாக முடியை எடுத்து எல்லா பக்கமும் பரவும்படி இதைத் தடவிக் கொண்டை போடவும். வெறும் பளபளப்பு மட்டும் வேண்டுமானால், அரை மணி நேரத்தில் குளிக்கவும். கலர் வேண்டுமானால் 2 முதல் 3 மணி நேரம் ஊற வைத்துக் குளிக்கவும். சுருட்டை முடி உள்ளவர்கள் ஹென்னா போடுவதை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக மூலிகை மருத்துவத்தில் ஆர்வம், சந்தேகம்,விருப்பமுள்ளவர்கள் மட்டும் என்னை தொடர்பு கொள்ள சு.இளையராஜா எ மூலிகை சு.புகழேந்தி.உணவு உலகம்.கைபேசி 8675288853,இலவச ஆலோசனை எண்.நன்றி

கோடையில் வரும் வியர்குருவை தடுக்கும் - இயற்கை மருத்துவம் 
கோடைக்காலத்தில் ஏற்படும் பொதுவாக தொல்லைத் தரக்கூடிய பிரச்சனைகளில் வியர்குருவும் ஒன்று.
கோடைக்காலத்தில் ஏற்படும் பொதுவாக தொல்லைத் தரக்கூடிய பிரச்சனைகளில் வியர்குருவும் ஒன்று. அதிகப்படியான வெயிலால் போதிய காற்றோட்டம் கிடைக்காமல், வியர்வை அதிகம் வெளியேறுவதால் வியர்க்குரு வரும். இதனைத் தவிர்ப்பதற்காக பலரும் காட்டன் உடைகளை உடுத்துவார்கள் மற்றும் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுப்பார்கள். ஒருசில இயற்கை வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் கோடையில் வரும் வியர்குருவைத் தடுக்கலாம்.
* வேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, வியர்குருவால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலைத் தடுக்கும். எனவே வியர்குரு அதிகம் இருந்தால், வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவுங்கள். அல்லது வேப்பிலை போட்ட தண்ணீரை கொதிக்க வைத்து ஆறிய பின் அந்த நீரால் முகம் மற்றும் உடலை கழுவி வந்தால் வியர்குருவால் ஏற்படும் அரிப்பை கட்டுப்படுத்தும்.
* சந்தனம் குளிர்ச்சித்தன்மை கொண்டது. சந்தனப்பொடியை ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இதனை தொடர்ந்து செய்து வந்தால் கோடைக்காலத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை உண்டாக்கும் வியர்குருவை போக்கலாம்.
* கோடையில் சருமத்திற்கு சோப்பு பயன்படுத்துவதற்கு பதிலாக, பாசிப்பருப்பு மாவைக் கொண்டு தேய்த்து குளித்து வர வியர்குரு பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அதற்கு பாசிப்பருப்பு மாவு, உளுத்தம் பருப்பு மாவு, கடலைப்பருப்பு மாவு ஆகியவற்றை ஒன்றாக சரிவிகிதத்தில் கலந்து, தினமும் அவற்றைக் கொண்டு தேய்த்து குளிக்க வேண்டும்.

#மீண்டும் சூடேற்றக்கூடாத உணவுகள்
மீதமுள்ள உணவை வீணாக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அவற்றை சுட வைத்து மீண்டும் சாப்பிடுவது என்பது நம்மில் அனைவருமே செய்யக்கூடியவை. அப்படி செய்வது சரி தான் என்றாலும், அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது.
சில உணவுகளை மீண்டும் சுட வைக்கும் போது, அவை அதன் ஊட்டச்சத்துக்களை இழந்துவிடும். ஏன், அதில் சில வகை விஷமாக கூட மாறிவிடும்.
அதனால் அப்படிப்பட்ட உணவுகள் எது என்பதை நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
நம் குடும்பத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க அவ்வகை உணவுகளை மீண்டும் சுட வைப்பதை தவிர்க்கவும்.
#உருளைக்கிழங்குகள்
உருளைக்கிழங்குகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிய நன்மையை அளிப்பதில் மாற்று கருத்து கிடையாது.
அதில் ஊட்டச்சத்துக்கள் மிக உயர்ந்த அளவில் உள்ளது. ஆனால் எவ்வளவு தூரம் அதனை குளிர்சாதன பெட்டியில் வைக்கிறீர்களோ அவ்வளவு தூரம் அதன் ஊட்டச்சத்துக்களை அது இழந்துவிடும். அவற்றை மீண்டும் சுட வைப்பதால் அது நச்சுத்தன்மையை அடைந்துவிடும்.
#கோழிக்கறி
தற்போதைய காலத்தில் மீண்டும் சுட வைக்கப்படும் உணவில் முக்கிய பங்கை கோழிக்கறி பெறுகிறது.
ஆனால் அதனை மீண்டும் சுட வைத்து, உண்ணுவது மிக ஆபத்தானதாகும். அதற்கு காரணம் இந்த உணவில் உள்ள அளவுக்கு அதிகமான புரதம். இதனை மீண்டும் சுட வைக்கும் போது நமக்கு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். அப்படி உண்ண வேண்டுமானால், அதை அப்படியே குளிர்ச்சியாகவே உண்ணுங்கள்.
#காளான்கள்
காளான்களைப் பொறுத்தவரை அதனை தயார் செய்த உடனேயே சாப்பிட்டு விட வேண்டும். அதனை ஆற போட்டு விட்டால், அதிலுள்ள புரதத்தின் அளவுகளில் மாற்றம் ஏற்படும். இதனால் செரிமானமாக கஷ்டமாக இருக்கும்.
#பீட்ரூட்
பீட்ரூட்டில் நைட்ரேட்டின் அளவு அதிகமாக உள்ளதால் தான், அது நல்லதாக கருதப்படுகிறது. ஆனால் அதையே மீண்டும் சுட வைக்கும் போது, அது பலனளிக்காமல் போய் விடுகிறது.
#கீரை
கீரைகளை மீண்டும் சுட வைப்பதும் கூட ஆபத்தானதே. கீரைகளிலும் நைட்ரேட்டின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் அதனை மீண்டும் சுட வைக்கும் போது, ஒட்டு மொத்த கீரை முழுவதுமே 100% நைட்ரேட்டாக மாறிவிடும். இது உடலுக்கு புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்.
#முட்டைகள்
அளவுக்கு அதிகமான வெப்பத்தில் இருக்கும் போது முட்டை நச்சுத்தன்மையை பெற்றுவிடும். எனவே மீண்டும் சுட வைத்த அவித்த முட்டைகள் அல்லது பொரித்த முட்டைகளை விட்டு விலகியே இருங்கள். இவை உங்கள் வயிற்றை பதம் பார்த்து விடும்.
ஓசோன் மண்டலத்தை பாதுகாக்கும் துளசி :
★****★****★****★****★
நீங்கள் மரத்தை நட வேண்டாம் , இந்த துளசியையாவது நடுங்கள் !!!
சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் ஓசோன் படலத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எதிர்கொண்டு அதனை பாதுகாக்க வீடுகள் தோறும் துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும்.
ஓசோன் படலத்தைப் பாதுகாக்க மரம் வளர்க்க வேண்டும் என்ற கருத்து பரவலாக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
இருப்பினும் ஓசோன் படலத்தைப் பாதுகாக்க எளிமையாக வீடுகள்தோறும் துளசிச் செடியை வளர்க்கலாம்.
அரசமரம், மூங்கில், துளசி இவை மூன்றும்
காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடுபவை அரச மரம், மூங்கில் மற்றும் துளசிச் செடி.
இதில் அரச மரம், மூங்கில் ஆகியவற்றை வளர்க்க பெரிய அளவிலான இடமும், அதிக ஆண்டுகள் காத்திருக்கவும் வேண்டும்.
ஆனால், துளசியை வளர்க்க சிறிய தொட்டியும், வீட்டின் ஜன்னல் பகுதியுமே போதுமானது. விதை போட்டாலும், கன்றாக வைத்தாலும் 2 முதல் 4 மாதங்களில் முழுமையான ஆக்சிஜனை தரவல்லது துளசிச் செடி.
துளசிச் செடி 20 மணி நேரம் ஆக்சிஜனையும் 4 மணி நேரம் ஓசோனையும் வெளியிடுகிறது. ஒரு துளசிச் செடி அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஓசோனை வெளியிடுகிறது.
துளசிச் செடியை வீடுகளில் வைத்தால் சுத்தமாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பிற்போக்குத்தனமான பேச்சுகளை புறந்தள்ளிவிட்டு, துளசியை வீடுகள் தோறும் வளர்க்க வேண்டும்.
பூமியில் கரியமில வாயுவை தற்போதுள்ள 400 பிபிஎம் என்ற உயரிய நிலையில் இருந்து 350 பிபிஎம் என்ற சாதாரண நிலைக்கு குறைக்க
72 கோடி அரச மரங்கள் (அல்லது)
720 கோடி மூங்கில் மரங்கள் (அல்லது)
7,200 கோடி துளசிச் செடிகள் தேவை.
இதில் நம் ஒவ்வொருவரது பங்களிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் 16 துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும்.
🌿🌿

தலைமுடி பராமரிக்கும் முறை
1. வேப்பிலையை அரைத்து தலையில் தடவி, 15-20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசலாம்.
2. இரண்டு முட்டைகளை உடைத்து அதில் இருக்கும் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து தலையில் நன்றாக தேய்த்தபின். 15-20 நிமிடங்கள் கழித்து அலசலாம்.
3. வெந்தயத்தை கூழாக்கி அதில் பன்னீரைச் சேர்த்து தலையில் தேய்த்து 20-30 நிமிடங்கள் கழித்து அலசலாம்.
4. செம்பருத்தி (செவ்வரத்தை) இலையை அரைத்து அதனை தலையில் தேய்த்து ஊறவிட்டு பின்னர் நன்கு அலசி விடலாம்.
5. இரவில் லேசான சூட்டில் தேங்காய் எண்ணெய் தேய்த்து ஊறவிட்டு பின்னர் காலையில் தலைக்கு குளிக்கலாம்.
6. ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை எடுத்து நாலு கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும். அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம்.
7. வினிகரை தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு தொல்லை குறையும்.
8. சுடு தண்ணீரில் அடிக்கடி தலை குளிப்பதை தவிர்க்கவும்.
9. வெந்தயம் ,வேப்பிலை, கறிவேபிள்ளை, பாசிபருப்பு, ஆவாரம்பூ இவை எல்லாவற்றையும் வெயில் காயவைத்து மிஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்பூவுக்கு பதிலாக வாரம் இருமுறை இந்த பவுடரை கூந்தலில் தேய்த்து அலசி வந்தால் கூந்தல் பளபளக்கும்.
9. ஹேர் ரையர் (hair dryer) அடிக்கடி உபயோகித்தால் தலை வறண்டு, முடியின் வேர்கள் பழுதடைந்து விடும். அதிகம் கேமிகல் நிறைந்த ஷாம்பூ மற்றும் ஹேர் கலர் உபயோகிப்பதை தவிர்த்து கொள்ளுவது நல்லது .
10. ஆலிவ் எண்ணையை இரவு படுக்கும் முன் தலையில் தடவி ஊறவிட்டு மறுநாள் காலையில் அலசினால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
11. முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து ,ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் கூந்தல் பளபளக்கும்.
12. முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன் ,வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும் .
13. இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது. .அது முற்றிலும் தவறு .தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் . அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.
14. எண்ணெய் குளியல் மிகவும் அவசியம் .சிறிது நல்ல எண்ணையில் இரண்டு மிளகு ,பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும். முடி உதிர்வதையும் தடுக்கலாம்.
15. கறிவேபிலை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம்.


தண்ணீர் தண்ணீர்
'தவிச்ச வாய்க்குத் தண்ணீர்’ என்ற நிலை மாறி, தண்ணீரைக் கூட பணம் கொடுத்துதான் வாங்கவேண்டி இருக்கிறது. அப்படியே வாங்கினாலும், குடிக்கும் தண்ணீர் சுகாதாரமாக இருக்கிறதா என்றால், அதுவும் சந்தேகம்தான்.-
இன்று, சாமானியர்களும் மினரல் வாட்டர் எனப்படும் சுத்திகரித்தத் தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர். பாட்டில்களில் கிடைக்கும் குடிதண்ணீர் சுகாதாரமானதுதானா? எத்தனை நாட்கள்வரை அதைப் பயன்படுத்தலாம்? மனதுக்குள் அலையடிக்கும் கேள்விகளை, தீவிர சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவர் வசந்த் செந்தில் முன் வைத்தோம்.
• பாட்டிலின் லேபிளில், ஐ.எஸ்.ஐ. முத்திரைக்குக் கீழ் ஏழு இலக்க எண்கள், ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், அவை உண்மையா எனக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.
• பொது இடங்களில் விற்கும் பாட்டில் தண்ணீரின் தூய்மையை அறிவது- உண்மையில் கடினம்தான். பல பாட்டில்களில் தயாரித்த தேதி, காலாவதி தேதி, பேட்ஜ் எண் போன்ற விவரங்கள் எதுவுமே குறிப்பிடப்பட்டு இருக்காது. உரிய விவரங்கள் உள்ள பாட்டில் தண்ணீரைப் பார்த்து வாங்குங்கள்.
• பாட்டிலில் கிடைக்கும் நீரைவிட குளோரினால் சுத்தம் செய்யப்பட்டு வரும் குழாய் நீர் பல மடங்கு சுத்தமானது. இரண்டு நாட்கள் வரை கிருமிகள் வளராது. 3 நாட்களுக்கு மேல் மிக மெதுவாக 7 நாட்கள் வரை கிருமிகள் வளர ஆரம்பிக்கும். 7 நாட்களுக்கு மேல் வேகமாக வளர வாய்ப்புண்டு. எனவே, குழாயில் பிடித்ததும் வடிகட்டி 20 நிமிடம் கொதிக்க வைத்து நன்றாக ஆறியப் பிறகு பருகுவது நல்லது.
• கொதிக்க வைத்த நீருடன் குளிர்ந்த நீரைக் கலப்பதும், நீரைக் கொதிக்கவைக்காமல் வெதுவெதுப்பாக சூடுபடுத்திக் குடிப்பதும் நீரில் உள்ள கிருமிகளை மிக வேகமாக வளரவைக்கும். உஷார்!
• பாட்டிலில் அடைக்கப்பட்டக் குடிநீர் பாட்டிலின் மூடியைத் திறந்த 24 மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். ஏனெனில், பாட்டிலில் தண்ணீர் அடைக்கப்பட்ட பிறகு, ஏற்படும் கிருமித் தொற்றை அழிக்கவல்ல கிருமி நாசினி (குளோரின் போன்றவை) இல்லாததால் பாட்டிலில் ஏற்படும் சிறு நுண்துளைகள்கூடக் கிருமித்தொற்றுக்கு வழிவகை செய்துவிடும்.
• வீடுகளில் சாதாரண ஃபில்டரின் மூலம் நீரை வடிகட்டினாலும், பாக்டீரியாவை வடிகட்டுமே தவிர வைரஸ் கிருமிகளை வடிகட்டாது. வைரஸ் கிருமிகளைக் கொல்ல, குடிநீரை 20 நிமிடம் நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும்.
• தண்ணீரை வடிக்கட்டிக் கொதிக்க வைத்து அதே பாத்திரத்தில் வைத்திருந்தால் 24 மணி நேரம் வரை குடிக்க மிகப் பாதுகாப்பாக இருக்கும். ஆனால், வேறு பாத்திரத்துக்கு மாற்றும்போது கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு.
• கொதிக்க வைத்து ஆறிய பிறகு, குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்தாலும் 48 மணி நேரத்துக்கு மேல் அதைப் பயன்படுத்தக்கூடாது.

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..
நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து உதவுங்கள்.
தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது,
இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது,
இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.
தேவையான பொருள்கள் :
1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு
செய்முறை:
நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின்(இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும், 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.
இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.
அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.
ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம், இதனை IT (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.
நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து மகிழுங்கள்.

அல்சர் அவதிக்கு விடிவு

இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன.
இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது.
புண் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.
காரணங்கள்:
அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.
ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.
சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.
கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.
வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம். பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.
கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம்.
மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.
பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம். சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.
சேர்க்க வேண்டியவை:
கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு.
தவிர்க்க வேண்டியவை:
அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.
கடைப்பிடிக்க வேண்டியவை:
காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.
உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும்.
பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம்.
தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.

சரும பிரச்சனைகளை அதிகமாக எண்ணெய் பசை சருமத்தினர் தான் சந்திப்பார்கள். அவர்களது முகத்தில் எந்நேரமும் எண்ணெய் வழிந்தவாறு இருப்பதால், அவர்களின் முகம் பொலிவிழந்து, ஒருவித கருமையாக காணப்படும். இவர்களது முகத்தை பளிச்சென்று வெள்ளையாக்க சில இயற்கை வழிகளை பார்க்கலாம்.
* 4 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை ஒருநாள் விட்டு ஒருநாள் செய்ய வேண்டும்.
* 3 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.
* 2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸில், 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
* 4 டீஸ்பூன் தக்காளி சாற்றினை எடுத்துக் கொண்டு, அத்துடல் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால் மிகவும் நல்லது. விரைவில் சருமத்தின் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தி சருமத்தை பொலிவாக்கும்.
* ஆரஞ்சு பழத்தோலை நன்கு உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர்ந்ததும் கழுவ, முகத்தில் உள்ள கருமை படிப்படியாக அகலும்.
-  இந்த இயற்கை வழிமுறைகளை தவறாமல் தினமும் செய்து வந்தால் உங்கள் சருமத்தினை பொலிவாக்கலாம். இயற்கையுடன் இணைந்து இருப்போம்

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...