DISCLAIMER: THESE INFORMATIONS ARE COLLECTED FROM MY WHATSAPP nd FACEBOOK groups. YOU HAVE TO CONFIRM THESE DETAILS WITH YOUR PHYSICIAN , BEFORE USE. AND as per your physicians directions. THANKS NAGARAJAN
Monday, December 10, 2018
வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு சருமத்தை அழகாக்கும் எளிய குறிப்புகள்...!
வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு சருமத்தை அழகாக்கும் எளிய குறிப்புகள்...!
இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.
மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். ஆப்பிள் பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை குறையும்.
தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.
வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.
இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும்.
முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.
. 🦅Ⓜ🦅
*_┈┉┅━❀𝙶𝚄𝙻𝙵 𝙽𝙴𝚆𝚂❀━┅┉┈_*
சிறு தானிய அடை
சிறு தானிய அடை
தேவையான பொருட்கள்
சோளம் – ஒரு டீஸ்பூன்
குதிரைவாலி – ஒரு டீஸ்பூன்
சாமை – ஒரு டீஸ்பூன்
வரகு – ஒரு டீஸ்பூன்
திணை – ஒரு டீஸ்பூன்
கேழ்வரகு – ஒரு டீஸ்பூன்
கம்பு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – இரண்டு
இஞ்சி – அரை துண்டு
பெருங்காயம் – சிறிதளவு
பார்லி (வறுத்தது) – ஒரு டீஸ்பூன் (பவுடர்)
சுக்கு பொடி – கால் டீஸ்பூன்
கறிவேப்பலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
கேரட்– இரண்டு ஸ்பூன் (நறுக்கியது)
பீன்ஸ் – இரண்டு டீஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
சோளம், குதிரைவாலி, சாமை, வரகு, திணை, கேழ்வரகு, கம்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி, பெருங்காயம், பார்லி பவுடர், சுக்கு பவுடர், கேரட், பீன்ஸ் கறிவேப்பலை, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும்.
அடை மாவு பதத்தில்மாவை கலந்துகொள்ளவும்.
பிறகு தவாவில் மாவை அடைபோல் ஊற்றி எண்ணெய் சுற்றி ஊற்றி திருப்பி போட்டு வெந்ததுடன் எடுத்து சூடாக பரிமாறவும்.
. 🦅Ⓜ🦅
*_┈┉┅━❀𝙶𝚄𝙻𝙵 𝙽𝙴𝚆𝚂❀━┅┉┈_*
முகத்தில் தோன்றிடும் கரும்புள்ளி உடனே மறைய
முகத்தில் தோன்றிடும் கரும்புள்ளி உடனே மறைய இத ட்ரை பண்ணி பாருங்க!
வெயில் காலங்களில் அதிகம் வாங்கப்படும் காய்களில் ஒன்று வெள்ளரிக்காய். குளிர்ச்சியான காய் என்று வர்ணிக்கப்படும் வெள்ளரிக்காயில் ஏராளமானமருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. இது நம் உடலிலிருந்து தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றி நீர்ச்சத்தை தக்க வைக்க உதவுகிறது.
வெயில் காலங்களில் நம் உடலிலிருந்து அதிகப்படியான நீர்ச்சத்து வெளியேறும் என்பதால், அதனை ஈடுகட்ட இதுபோன்ற காய்களை சாப்பிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. வெள்ளரிக்காயில் தொண்ணூத்து ஐந்து சதவீதம் நீர்ச்சத்து மட்டுமேயிருக்கிறது. இந்த வெள்ளரிக்காய் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் மிகவும் நன்மையளிக்கிறது.
முகத்தில் தோன்றிடும் கரும்புள்ளியை வெள்ளரிக்காய் உதவியுடன் எப்படி போகச் செய்யலாம் என்று பார்க்கலாம்.
வெள்ளரியை அரைத்து ஜூஸாக்கி உங்கள் சருமத்தில் தடவிக் கொள்ளுங்கள். இது சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவற்றை உடனடியாக குறைத்திடும்.
இதனை தினமும் கூட செய்யலாம். ஒரு வெள்ளரியை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள் பின்னர் அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். காட்டனில் அந்த ஜூஸை முக்கியெடுத்து முகம் முழுவதும் துடைத்தெடுங்கள்.
மீதியிருக்கும் ஜூஸை ப்ரிட்ஜில் வைத்து இரண்டு நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
வெள்ளரியை பச்சையாக அப்படியே எடுத்துக் கொள்ளலாம். இல்லையெனில் வெள்ளரியை பொடியாக நறுக்கி தண்ணீரில் ஊற வைத்திடுங்கள். சுமார் இரண்டு மணி நேரம் வரை ஊறிய பிறகு அந்த தண்ணீரை எடுத்து குடிக்கலாம்.அந்த தண்ணீரில் அரை ஸ்பூன் மஞ்சள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அந்த தண்ணீருடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்துமுகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போடலாம்.
சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்திடும். அதே சமயம், சருமத் துளைகளில் இருக்கும் அழுக்குகளை நீக்கிட உதவிடும்.
வெள்ளரியை தோல்நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் மூன்று ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து கழுவிடலாம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இதனை செய்யலாம்.
முகத்தில் தோன்றிடும் கரும்புள்ளியை நீக்கச்செய்ய பல்வேறு வீட்டு வைத்திய மருத்துவ முறைகள் இருக்கிறது.அவற்றில் வெள்ளரியுடன் இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து நீங்கள் செய்யப்போகும் இந்த வைத்தியம் மிகவும் பயன் தரக்கூடியது. அதிலும் குறிப்பாக இதில் சேர்க்கப்படும் பேக்கிங் சோடா மிகுந்த பலனை தரக்கூடியது.
ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். ஆப்பிளை தோல் சீவி ஆப்பிள் மற்றும் வெள்ளரி இரண்டையும் பாதியளவு அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த அந்த கலவையுடன் தேன் கலந்து ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்திட வேண்டும்.
பின்னர் அந்த கலவையை முகத்தில் தடவி இருபது நிமிடங்கள் வரை காத்திருந்த பின்னர் கழுவிடலாம்.
வெள்ளரியை தோல் நீக்கி சுத்தம் செய்து நன்றாக அரைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். தனியாக தக்காளிச்சாறுடன் இரண்டு ஸ்பூன் சந்தனம் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் இரண்டையும் கலந்து முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும். இருபது நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இதனை தினமும் கூட நீங்கள் செய்யலாம்.
எலுமிச்சையில் இருக்கும் அமிலம் சருமத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை நீக்கிடும் ஆற்றல் கொண்டது. அத்துடன் கரும்புள்ளியை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியா தொற்றினையும் நீக்கிடும்.
வெள்ளரச்சாறு ஒரு ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு டீஸ்ப்பூன் இரண்டையும் கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து கழுவி விடலாம். இதனை முகத்தில் அப்ளை செய்த பிறகு ஆவி பிடித்தால் இரட்டிப்பு பலன் உண்டு.
மஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளிலிருந்து நம்மை காத்திடும். வெள்ளரியை பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும்.
நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம்.
கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை ஃபிரஸ்ஸாக வைத்திருக்க உதவுகிறது. வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு முன்னால் தடவிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவி விடலாம்.
இது சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மட்டுமல்ல சரும சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுத்திடும்.
வேப்பிலையும், வெள்ளரியும் முதலில் ஒன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் தனியாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னரத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
அதனை முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்வது போல செய்ய வேண்டும். இதனை வாரத்தில் மூன்று முறை செய்யலாம்.
. 🐎Ⓜ🦅
*_┈┉┅━❀𝙶𝚄𝙻𝙵 𝙽𝙴𝚆𝚂❀━┅┉┈_*
CANCER:: மாதம் 1 முறை வெறும் வயிற்றில் இந்த ஒரு மூலிகை ஜூஸை குடிச்சா குடல் புற்று நோய் வராது!!
மாதம் 1 முறை வெறும் வயிற்றில் இந்த ஒரு மூலிகை ஜூஸை குடிச்சா குடல் புற்று நோய் வராது!!
புற்று நோயை தடுப்பதில் குடல் சுத்தமும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்த காலத்தில் மாதமொருமுறை விளக்கெண்ணெயை குடித்து நச்சுக்களை வெளியேற்றினார்கள். இதனால் குடலுறுப்புகள் ஆரோக்கியமாகவும் , ஆற்றல் மிக்கதாகவும் இருந்தது.
ஆனால் இன்றைய நாட்களில் குடல்களில் நச்சுக்கள் தேங்கி அதிகப்படியான ஃப்ரீ ரேடிகள்ஸ் உற்பத்தியாகி அவை சாதாரண செல்களை தாக்கி புற்று நோயை வரவழைக்கின்றன. இதற்கு மிக முக்கிய காரணம் நாம் உண்ணும் கண்ட ரசாயன மற்றும் இன்ஸ்டன்ட் உணவுகள்தான்.
அவற்றை நீங்கள் களைந்துவிட்டால் புற்று நோய் , அப்பண்டிஸ் போன்ற நோய்களை தடுக்கலாம். அவற்றை நீக்குவது பற்றிதான் இந்த கட்டுரை. தொடர்ந்து படியுங்கள்.
கற்றாழை மிகச் சிறந்த பண்புகளை கொண்ட அற்புத மூலிகை என சித்தர்கள் விவரிக்கிறார்கள். இதனை சாப்பிடும் முறை மிக முக்கியமானது . அதன் இலையை கிழித்து உள்ளிருக்கும் ஜெல்லை அப்படியே சாப்பிடக் கூடாது. அதன் பச்சை நிறம் போக, நன்றாக கழுவி அதன் பின்னரே உபயோகிக்க வேண்டும்.
கற்றாழையை பயன்படுத்தி எப்படி உங்கள் குடலை சுத்தப்படுத்தலாம் என பார்க்கலாம். இந்த ஜூஸை மாதம் ஒரு முறையென தொடர்ந்து 1வாரம் குடித்தால் உங்கள் குடல்கள் நன்றாக செயல்படும். இந்த காலத்தில் அதிகம் பயமுறுத்தும் புற்று நோய் உங்களை அண்டாது.
தேவையானவை :
கற்றாழை - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
நீர் - 1/2 கப்
கற்றாழை ஜெல்லை நன்றாக கழுவி அதனுடன் நீர் மற்றும் தேனை கலந்து மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். இதனை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடிக்க வேண்டும்.
இது நச்சுக்களை மிக சுத்தமக வெளியேற்றுகிறது. அதோடு அதிலுள்ள டயடிக் நார்ச்சத்துக்கள் வயிற்றிலுள்ள பாதிப்படைந்த செல்களுக்கி நிவாரணம் அளிக்கிறது.
தேவையானவை :
கற்றாழை - 2 டேபிள் ஸ்பூன்
ஆரஞ்சு ஜூஸ் - 1 கப்
இவை இரண்டையும் மிக்ஸ்யில் போட்டு வடிக்கட்டாமல் அப்படியே குடிக்க வேண்டும். வெறும் வயிற்றில் 8- 10 நாட்கள் குடிக்க வேண்டும்.
இந்த கலவையிலுள்ள அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடென்ட் குடல்களில் தங்கியிருக்கும் ஃப்ரீ ரேடிகல்ஸை அழித்து புற்று நோய் வராமல் காக்கும்.
தேவையானவை :
கற்றாழை - 2 டேபிள் ஸ்பூன்
மாம்பழம் - 1
நீர் - 1 அப்
இஞ்சி - 1 டீஸ் பூன்
மாம்பழத்தின் சதைப்பகுதியை எடுத்து அதனுடன் கற்றாழை ஜெல் மற்றும் நீர் சேர்த்து விருப்பமிருந்தால் இஞ்சியை கலந்து மிக்ஸ்யில் சுழற்றவும். பின்னர் அதனை வெறும் வயிற்றில் 15 நாட்களுக்கு குடிக்க வேண்டும். இப்படி செய்தால் பாதிக்கப்பட்ட குடல்களும் பலம் பெற்று புதிதாய் வேலை செய்யும்.
தேவையானவை
அன்னாசி - 3 துண்டுகள்
வெள்ளரிக்காய் - அரை
கற்றாழை - 3 டேபிள் ஸ்பூன்
நீர் - 1 கப்
முதலில் அன்னாசி மற்றும் வெள்ளர்க்காயை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் கற்றாழை மற்றும் நீர் கலந்து நன்றாக அரைக்க வேண்டும். இந்த ஜூஸை 7 நாட்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
. 🐎Ⓜ🦅
*_┈┉┅━❀𝙶𝚄𝙻𝙵 𝙽𝙴𝚆𝚂❀━┅┉┈_*
Ⓜஇரத்தக்கட்டை நீக்கும் எளிமையான இயற்கை வைத்திய குறிப்புகள்....!*
*Ⓜஇரத்தக்கட்டை நீக்கும் எளிமையான இயற்கை வைத்திய குறிப்புகள்....!*
'சாதாரணக் காயம்தானே என்று அலச்சியதால் நாம் கவனிக்காமல் விட்டுவிடும் சின்னக் காயங்கள்கூட சில நேரங்களில் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
அந்த வகையில் 'ரத்தக்கட்டு ஏற்பட்டு அதனால் ஏற்படும் காயங்களை அலட்சியப்படுத்தினால், நாளடைவில் அந்த இடத்தில் ரத்த அழற்சி ஏற்பட்டு, கட்டிகளாக மாறிவிடும். பாதிக்கப்பட்ட பகுதியை அறுவைச் சிகிச்சை செய்து அகற்ற வேண்டிய நிலைகூட ஏற்படலாம்''.
''உடல் உறுப்புகளில் அடி ஏற்படும்போது, தோலுக்கு அடியில் உள்ள மெல்லிய 'முடிவு ரத்த நாளங்கள்’ மற்றும் தசை செல்களில் சிதைவு ஏற்படும். இதனால், தோல் பகுதியைக் கிழித்துக்கொண்டு ரத்தம் வெளியேற முடியாமல் தோலுக்கு உள்ளேயே தேங்கி நின்றுவிடும். இதைத்தான் ரத்தக்கட்டு என்கிறோம்.
தீர்வுகள்:
முதலில் அடிபட்ட இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஆமணக்கு இலை, நொச்சி இலை இரண்டையும் சம அளவு எடுத்து, விளக்கெண்ணையில் வதக்கி, வெள்ளைத் துணியில் வைத்துக் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். இதற்கு வீக்கத்தை உருக்கி ரத்தக்கட்டைப் போக்கும் தன்மை அதிகம்.
வெறும் விறலி மஞ்சளைப் பொடி செய்து, அரை ஸ்பூன் பொடியினை ஒன்றரை கப் தண்ணீரில் கலந்து, இளஞ்சூடாக்கி ரத்தக்கட்டு உள்ள இடத்தின் மேல் பத்து போடலாம். மஞ்சளுக்கு ரத்தக்கட்டைக் குணமாக்கும் தன்மை உண்டு.
சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் அமுக்கிராங்கிழங்குச் சூரணத்தை வாங்கி, ஒரு கோப்பை பாலில் அரை ஸ்பூன் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் ஐந்து நாட்கள் குடித்து வர, ரத்தக்கட்டு கரைந்துவிடும். அமுக்கிராங் கிழங்குச் சூரண மாத்திரைகளும் சாப்பிடலாம்.
கருஞ்சீரகத்தைப் பொடிசெய்து அதில் கால் ஸ்பூன் அளவு எடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, பொடி அரிசிக் கஞ்சியில் போட்டுவேகவைத்துக் குடிக்கலாம். ஆனால், கர்ப்பிணிகளோ, கருத்தரிக்கும் நேரத்தில் உள்ள பெண்களோ கருஞ்சீரகம் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்''
. 🐎Ⓜ🦅
*_┈┉┅━❀𝙶𝚄𝙻𝙵 𝙽𝙴𝚆𝚂❀━┅┉┈_*
இதயத்தில் அடைப்பு உள்ளதா?*
*இதயத்தில் அடைப்பு உள்ளதா?*
திருவனந்தபுரம் கட்டாக்கடா அருகில் உள்ள பன்னியோடு டாக்டர்.சுகுமாரன் வைத்தியர் அவர்கள் இதய அடைப்பிற்கு இலவசமாக வைத்தியம் செய்கிறார். நாடித் துடிப்பை பார்த்தே உங்கள் நோயை கண்டுபிடிக்கிறார்.
*வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற எல்லா நாட்களிலும் வைத்தியம்.*
இதயத்தில் அடைப்பு உள்ளவர்களுக்கு மூன்று மாத மருந்துக்கு 2700 ரூபாய்.. *ஆறு நாட்கள் மருந்து உட்கொண்டாலே ரத்தக் குழாய் அடைப்பு மாறுகிறது.* பணம் கொடுக்க வசதி இல்லாதவருக்கு இலவசம்.
மிக முக்கியமான தகவல் என்பதால் இதனை அனைவருக்கும் பகிருங்கள். இதனால் யாரவது ஒருவர் பயன் பெற்றாலும் மகிழ்ச்சியே..
*Sukumaran Vaidyans* ,
*G A Pharmacy & Nursing Home,* *Neyyattinkara P.O.,*
*Thiruvananthapuram.*
*Pin: 695 572,*
*Kerala State.*
*Phone: 0471 2222364.*
👍🏻🙏🏻
Sunday, December 9, 2018
டிவி முன் செலவு செய்யும் ஒவ்வொரு மணிநேரமும் உங்கள் மாரடைப்பு ரிஸ்க்கை 18% அதிகரிக்கிறது.
தொடர்ந்து உட்கார்ந்திருப்பது "உட்காரும் வியாதி" (சிட்டிங் டிஸீஸ்) என தற்போது வகைப்பட்டுத்தபட்டுள்ளது.
#Sitting #Killing #nbalakumar
சராசரி வெள்ளைகாலர் தொழிலாளி ஒரு நாளுக்கு 7.7 மணிநேரம் உட்கார்ந்தே செலவு செய்கிறாராம் (தூங்கும் நேரம் தனி)
ஆய்வு ஒன்றில் லண்டன் நகர பஸ் டிரைவர்கள் ஒரு நாளுக்கு 12 மணிநேரம் உட்கார்ந்திருப்பதாக கண்டறியபட்டுள்ளது. இது வழக்கமான ஆபிஸ் பணியாளர்களை விட 3 மணிநேரம் அதிகம். லண்டன் டிரைவர்களின் 74% பேர் அதீத உடல்பருமனுடனும், மாரடைப்பு அபாயத்துடனும் இருப்பதாக கண்டறியபட்டுள்ளது.
நாள் முழுக்க உட்கார்ந்தே இருப்பவர்கள் லீவு நாளிலும் உட்கார்ந்து கொண்டே இருக்கிறார்களாம். இதை விஞ்ஞானிகள் #knockoff #effect என அழைக்கிரார்கள்.
டிவி முன் செலவு செய்யும் ஒவ்வொரு மணிநேரமும் உங்கள் மாரடைப்பு ரிஸ்க்கை 18% அதிகரிக்கிறது.
நாள் முழுக்க உட்கார்ந்திருந்துவிட்டு ஒரு மணிநேரம் உடல்பயிற்சி செய்வது எவ்விதத்திலும் உங்களை காப்பாற்றுவதில்லை. அம்மாதிரி இருப்பவர்களை விஞ்ஞானிகள் "#Active #couch #potato" என அழைக்கிறார்கள்.
பரிந்துரைக்கபடும் லைப்ஸ்டைல் மாற்றங்கள்:
20 நிமிடத்துக்கு மேல் உட்கார்ந்திருக்கையில் உங்கள் கலோரிகளை எரிக்கும் திறன் (மெடபாலிசம்) சுருங்கி விடுகிறது. அதனால் 20 நிமிடத்துக்கு மேல் உட்கார்ந்து வேலை செய்வது தவறு. 20 நிமிடத்துக்கு ஒரு முறை எழுந்து ஒரு நிமிட நடையாவது போய்வருவது அவசியம்.
ஒரு மணிநேரத்துக்கு 250 அடிகளாவது நடப்பது அவசியம் என ஃபிட்பிட் முதலான உபகரணங்கள் கூறுகின்றன. இது குறைந்தபட்ச அளவீடு என்பதை நினைவில் கொண்டு 500 அடிகளாவது நடக்க முயலவும்
20 நிமிடத்துக்கு ஒரு முறை எழுந்து சின்ன, சின்ன பயிற்சிகள், ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள், ஒரு மாடி ஏறுதல் என ஓரிரு நிமிடங்கள் செய்துவிட்டு ஒவ்வொரு மணிநேரத்துக்கும் ஐந்து முதல் 10 நிமிட நடை என்பதை வழக்கமாக கொள்ளவும்.
இதனால் பணிகள் பாதிக்காது. இம்மாதிரி பணிநேரங்களில் சின்ன, சின்ன பயிற்சிகள் செய்பவர்கள், மதிய உணவு வேளையில் சின்னதாக வாக் போகிறவர்களின் புரடக்டிவிட்டி கணிசமாக அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக மாலை 3 மணிக்கு மேல் நம் புரடக்டிவிட்டி குறைகிறது. 3 மணிக்கு 15 நிமிட உடல்பயிற்சி செய்வது நம் புரடக்டிவிட்டியை கூடுதலாக 2 மணி நேரம் அதிகரிக்கிறதாம்.
தினம் குறைந்தது 10,000 அடிகள் என்பதை குறிக்கோளாக கொள்வதும் செல்போனில் பெடோமீட்டர் ஆப் நிறுவி ஒரு மண்நேரத்துக்கு 500 அடிகளாவது நடந்துள்ளோமா என்பதை கவனிப்பதும் பலனளிக்கும். பேசர் ஆப்பில் அப்படி 500 அடிகள் நடந்ததை காட்டும் முள் உள்ளது.
உட்கார்ந்திருப்பது சிகரெட் குடிப்பதை விட மோசமான விஷயம் என்பதை நினைவில் கொள்வோம்.
தொடர்ந்து உட்கார்ந்திருப்பது "உட்காரும் வியாதி" (சிட்டிங் டிஸீஸ்) என தற்போது வகைப்பட்டுத்தபட்டுள்ளது. #Sitting #Killing
தொடர்ந்து உட்கார்ந்திருப்பது "உட்காரும் வியாதி" (சிட்டிங் டிஸீஸ்) என தற்போது வகைப்பட்டுத்தபட்டுள்ளது.
#Sitting #Killing #nbalakumar
சராசரி வெள்ளைகாலர் தொழிலாளி ஒரு நாளுக்கு 7.7 மணிநேரம் உட்கார்ந்தே செலவு செய்கிறாராம் (தூங்கும் நேரம் தனி)
ஆய்வு ஒன்றில் லண்டன் நகர பஸ் டிரைவர்கள் ஒரு நாளுக்கு 12 மணிநேரம் உட்கார்ந்திருப்பதாக கண்டறியபட்டுள்ளது. இது வழக்கமான ஆபிஸ் பணியாளர்களை விட 3 மணிநேரம் அதிகம். லண்டன் டிரைவர்களின் 74% பேர் அதீத உடல்பருமனுடனும், மாரடைப்பு அபாயத்துடனும் இருப்பதாக கண்டறியபட்டுள்ளது.
நாள் முழுக்க உட்கார்ந்தே இருப்பவர்கள் லீவு நாளிலும் உட்கார்ந்து கொண்டே இருக்கிறார்களாம். இதை விஞ்ஞானிகள் #knockoff #effect என அழைக்கிரார்கள்.
டிவி முன் செலவு செய்யும் ஒவ்வொரு மணிநேரமும் உங்கள் மாரடைப்பு ரிஸ்க்கை 18% அதிகரிக்கிறது.
நாள் முழுக்க உட்கார்ந்திருந்துவிட்டு ஒரு மணிநேரம் உடல்பயிற்சி செய்வது எவ்விதத்திலும் உங்களை காப்பாற்றுவதில்லை. அம்மாதிரி இருப்பவர்களை விஞ்ஞானிகள் "#Active #couch #potato" என அழைக்கிறார்கள்.
பரிந்துரைக்கபடும் லைப்ஸ்டைல் மாற்றங்கள்:
20 நிமிடத்துக்கு மேல் உட்கார்ந்திருக்கையில் உங்கள் கலோரிகளை எரிக்கும் திறன் (மெடபாலிசம்) சுருங்கி விடுகிறது. அதனால் 20 நிமிடத்துக்கு மேல் உட்கார்ந்து வேலை செய்வது தவறு. 20 நிமிடத்துக்கு ஒரு முறை எழுந்து ஒரு நிமிட நடையாவது போய்வருவது அவசியம்.
ஒரு மணிநேரத்துக்கு 250 அடிகளாவது நடப்பது அவசியம் என ஃபிட்பிட் முதலான உபகரணங்கள் கூறுகின்றன. இது குறைந்தபட்ச அளவீடு என்பதை நினைவில் கொண்டு 500 அடிகளாவது நடக்க முயலவும்
20 நிமிடத்துக்கு ஒரு முறை எழுந்து சின்ன, சின்ன பயிற்சிகள், ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள், ஒரு மாடி ஏறுதல் என ஓரிரு நிமிடங்கள் செய்துவிட்டு ஒவ்வொரு மணிநேரத்துக்கும் ஐந்து முதல் 10 நிமிட நடை என்பதை வழக்கமாக கொள்ளவும்.
இதனால் பணிகள் பாதிக்காது. இம்மாதிரி பணிநேரங்களில் சின்ன, சின்ன பயிற்சிகள் செய்பவர்கள், மதிய உணவு வேளையில் சின்னதாக வாக் போகிறவர்களின் புரடக்டிவிட்டி கணிசமாக அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக மாலை 3 மணிக்கு மேல் நம் புரடக்டிவிட்டி குறைகிறது. 3 மணிக்கு 15 நிமிட உடல்பயிற்சி செய்வது நம் புரடக்டிவிட்டியை கூடுதலாக 2 மணி நேரம் அதிகரிக்கிறதாம்.
தினம் குறைந்தது 10,000 அடிகள் என்பதை குறிக்கோளாக கொள்வதும் செல்போனில் பெடோமீட்டர் ஆப் நிறுவி ஒரு மண்நேரத்துக்கு 500 அடிகளாவது நடந்துள்ளோமா என்பதை கவனிப்பதும் பலனளிக்கும். பேசர் ஆப்பில் அப்படி 500 அடிகள் நடந்ததை காட்டும் முள் உள்ளது.
உட்கார்ந்திருப்பது சிகரெட் குடிப்பதை விட மோசமான விஷயம் என்பதை நினைவில் கொள்வோம்.
சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.
WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள் தியானம...
-
#சோரியாஸிஸ்க்கு #வீட்டு_வைத்தியம். வேப்ப இலைகளை உலர வைத்து, பொடித்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். தினமும் இருவேளை இந்த பொடிய...
-
உடலில் தோன்றும் கொழுப்பு கட்டிகள் கர்ப பை கட்டிகள் தீர மருத்துவம் கழற்ச்ச்சிக்காய் ஆளி விதை வெள்ளருகு ஆகாச கருடன் கிழங்கு ஆடுதீன் டாபாளை வே...
-
♦தூங்கி எழுந்ததும் இடுப்பு வலிப்பது ஏன்? என்ன செய்தால் சரியாகும்?♦ ♦எழுந்ததும் இடுப்பு வலிக்க காரணம் இரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்...