Tuesday, November 27, 2018

கோபத்தை குறைக்க வழி.....! கோபம்

கோபத்தை குறைக்க வழி.....!

கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடந்தது.
அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பதில் தந்திருந்தார்கள்.
ஒருவர் கூறினார், நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை. நான் ஒன்று சொல்ல, அவர்கள் ஒன்று செய்கிறார்கள்.

இதனால் கோபம் உடனே வந்துவிடுகிறது என்றார். மற்றொருவர், யாராவது என்னை தவறாகச் சொல்லி விட்டார்கள் என்று உடனே கோபம் வந்துவிடும் என்றார். அடுத்தவர், நான் செயாத்தைச் செய்த மாதிரி சொல்லி விட்டார்கள் என்றால் அவ்வளவுதான் அவர்கள் என்கிறார்.

இன்னொருவர், சொன்னதைத் திரும்பத் திரும்பச் சொன்னால், நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்று சொல்லுகின்றார். வேறோருவரோ, நினைத்தது கிடைக்கவில்லை என்றால் சும்மா விடமாட்டேன் என்றார்.

இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு எதனால் கோபம் வருகிறது என்று கருத்து தெரிவித்தனர். இப்படி அடுத்தவர்கள் எதாவது செய்தால் இவர்களுக்குக் கோபம் ஏற்படுமாம். அது சரி நீங்களே எதாவாது தவறு செய்தால் உங்கள் மீது கொபப்படுவீர்களா? என்பதற்கு, அது எப்படி நீங்கள் எங்கள் மேலேயே நாங்கள் கோபப்படுவோமா என்றனர்.

கோபம் என்றால் என்ன?
கோபம் என்பது அடுத்தவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் தண்டனைக்குப் பெயர்தான் கோபம். அதுமட்டுமல்லாமல் நாம் நம் கோபத்தை குறைக்க அடுத்தவர்களிடம் இதே கோபத்துடன் செயற்பட்டால் நட்பு நசுங்கி விடும்.
உறவு அறுந்து போகும்.
உரிமை ஊஞ்சலாடும்.

நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் தண்டனை என்ன?
சவுக்கு எடுத்து சுளீர் சுளீர் என்று எங்களையே அடித்துக் கொண்டால் மட்டும் அதற்குப் பெயர் தண்டனை இல்லை.
கோபம் ஏற்படுவதால் பதட்டம் உண்டாகின்றது. இதனால் எங்கள் உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படுகின்றது.

இந்தப்பாதிப்பால் நரம்புத்தளர்ச்சி, இரத்த அழுத்தம், மன உளைச்சல், நடுக்கம் போன்ற உபாதைகள் உண்டாகின்றது.

இதே நிலை நீடித்தால் ஒரு மன நோயாளி போல் ஆகி விடுவோம்.

இது பொய்யல்ல சத்தியமான உண்மை இது...

அன்பின் வேறொரு விதமான வெளிப்பாடுதான் கோபம்.
முதலில் அடுத்தவர்களுக்கு கோபம் வருகின்ற மாதிரி நீங்கள் நடக்காதீர்கள்.
அடுத்தவர்களை குறை சொல்லாதீர்கள். எதையும் அடுத்தவர்களிடம் எதிர்பார்க்காதீங்கள்.

அவர்கள் உங்கள் மேல் கோபப்பட்டால் முதலில் மன்னிப்புக் கேளுங்கள்.
ஈகோ பார்க்காதீர்கள்.
நீங்கள் கோபப் படுகின்ற மாதிரி அடுத்தவர்கள் நடந்து கொள்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
முதலில் மன்னிப்புக் கேட்டு என்னைக் கொஞ்சம் யோசிக்க விடுங்கள் அமைதியாகி விடுங்கள். எவர்மேல் தவறு என்று சிந்தியுங்கள்.

கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாகி விடும். அப்படி இல்லை என்றால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லுங்கள்.
தனிமையாக உட்கார்ந்து யோசியுங்கள். அடிக்கடி யாரிடம் கொபப்படுகிறீர்களோ அவர்களிடம் மனம் விட்டு இன்பமாக சிரித்து பேசுங்கள்.
அடுத்தவர்களே தவறு    செய்திருந்தால் கூட நீங்க நல்லது பண்ணுங்க.

அடுத்தவங்க என்ன செய்து விட்டார்கள் என்று கோபப்படுகிறோம்.
என்ன நடந்துவிட்டது பெரிதாக. என்னத்தை இழந்துட்டோம்.
மரணம் ஒன்று தான் மாபெரும் இழப்பு.
அதை தவிர வேறொன்றுமே இழப்பு கிடையாது. எல்லாத்தையும் சமாளித்து விடலாம் என்னும் முடிவுக்கு வாங்கள்.

வீட்டு பெரியவர்கள்  திட்டும் போது கவனித்திருப்பீர்கள் என்னத்த பெரிதாகச் சாதித்து விட்டீர்கள் என்று.
நாட்காட்டியில் உள்ள தேதி பேப்பரை கிழித்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு நாளும் தூங்க செல்லும் முன் இன்றைக்கு என்ன சாதித்தோம் என்று யோசித்து விட்டு தூங்குங்க.

அடுத்தவர்களுக்கு நல்லது செய்யாவிடினும் கோபம் என்கிற கொடிய நோயை பரப்பாமல் இருந்தாலே நீங்க அவங்களுக்கு நல்லது செய்த மாதரி தான்.
தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்பவன் கூட. ஒரு வினாடி யோசித்தானால் தனது முடிவை மாற்றிக்கொள்வான்.

நமக்கோ ஆறு அறிவை ஆண்டவன் கொடுத்துள்ளான்.
இதில் ஆறாவது அறிவை அப்பப்ப யோசிப்பதற்கு உபயோகம்  பண்ணுவீர்கலானால்... கோபம் வரவே வராது. நாமெல்லாம் சாதிக்கப்பிறந்தவர்கள்.

கோபப்படாமல் இருப்பதே ஒரு மாபெரும் சாதனை தான்.
வாழ்வது இந்த பூமியில் ஒரு முறை தான். அதை கோபப்படாமல் சிறந்த முறையில் வாழ்ந்து சாதிப்போம்....

🌹🍎

அதிகாலையில் உடலுறவில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள்!

அதிகாலையில் உடலுறவில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள்!

அதிகாலையில் உடலுறவில் ஈடுபடும் போது கணவன் மற்றும் மனைவிக்கு மனதளவில் நன்மைகள்

பொதுவாக திருமணமான ஆணும், பெண்ணும், இரவில் உடலுறவு கொள்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். பெரும்பாலோனோர் அதனையே கடைபிடித்தும் வருகின்றனர். இது தொன்றுதொட்டு வரும் பழக்கமாக கூறப்படுகிறது. சிலர், விருப்பம் இல்லையென்றாலும், அந்த நேரத்தில், அவசர அவசரமாக உடலுறவில் ஈடுபட்டு தூங்கி விடுகின்றனர்.
இதில், சிலர் ஆண்கள் மட்டும் விதிவிலக்காக அதிகாலையில் உறவு கொள்வதையே விரும்புகின்றனர். ஆனால், காலை நேரத்தில் வேகமாக எழுந்துவிட்டு என்ன சமையல் செய்யலாம்? குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பனுமே? என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கும் பெண்கள் சிலர், கணவர் முயற்சிக்கும் போது இரவு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டு தவிர்க்க முயற்சிப்பார்கள்.

இரவு நேரத்தில், உறவு கொள்வதை விட அதிகாலையில், அவர்கள் உடலுறவு கொள்வதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும். அதிகாலை நேரத்தில் உடலுறவு கொள்ளும் போது ஆக்சிடோசின் எனப்படும், ரசாயனம் ஒன்று வெளிப்படும். இந்த ரசாயனம் நாள் முழுவதும் நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க பெரிதும் உதவிகரமாக இருக்கும். மேலும், மன அமைதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரும்

அதோடு, மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை ஏற்படுவது தடுக்கப்படுகிறது சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் விரைவில் குணமடைவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், பெண்களது கூந்தல், சருமம், நகம் ஆகியவை நன்றாக வளர்ச்சி அடையவும், காலை நேரத்தில் உறவு கொள்வது உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

பகல் முழுவதும் வேலை பார்த்துவரும், ஆண்களும், பெண்களும், இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்குவதற்கு தான் விரும்புவார்கள். அப்படியிருக்கும் ஆண்களும், பெண்களும், அதிகாலையில் உறவு வைத்துக்கொண்டால் ஏகப்பட்ட நன்மைகள் ஏற்படும்.

பெண் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்..

பெண் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்..

#பெற்றோர்கள்கவனத்திற்கு:

1. பெண் குழந்தைகளுக்கு, "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.

2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.

5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!

6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.

7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்

8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.

9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!

12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.

13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!

15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.

16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!

17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள்.

21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள்.
சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.

22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!

25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!

26. பாழாய்ப் போன லெக்கின்ஸை வாங்கிக் கொடுக்காதீர்கள்.  சிலவகை ஆடைகள் சிலருக்கு பொருந்துவது இல்லை. அதுவே ஆபாசமாகக் காட்சியளிக்கின்று.

ஆட்டிசம் Autism குணமாகும். உ

ஆட்டிசம் Autism குணமாகும்.

உங்களுக்கு தெரிந்த சிறப்பு குழந்தைகள் யாரேனும் இருந்தால் தயவுசெய்து அவர்களின் பெற்றோரிடம் இந்த செய்தியை சொல்லுங்கள்.

விரிவான ஆலோசனைக்கு +917373773396 என்ற எண்ணை அழைக்கவும்.

இந்த செய்தியை ஷேர் செய்வதன் மூலமும் நீங்கள் பல குழந்தைகள் குணமாக உதவ முடியும்.

ஓர் உணவுக் கவளத்தை எத்தனை முறை சுவைக்க வேண்டும்? - மருத்துவ உண்மை!

ஓர் உணவுக் கவளத்தை எத்தனை முறை சுவைக்க வேண்டும்? - மருத்துவ உண்மை!

பற்களோடும் எச்சில் சுரப்புகளோடும் நாம் சாப்பிடும் உணவுப் பொருள்கள் உறவாடுவது எவ்வளவு அவசியம் தெரியுமா?

‘நொறுங்கத் தின்றால் நூறு வயது ’ என்றொரு பழமொழி உண்டு. உணவை  நன்றாக மென்று சாப்பிட்டால், நோயின்றி வாழலாம் என்பதுதான்  பழமொழி உணர்த்தும் உண்மை. செரிமானம் என்னும் அடித்தளம் பலமாக அமைந்துவிட்டால், நோய்கள் நம்மை நெருங்காது. 

`வேலைகளை விரைந்து முடித்துவிட்டு, பொறுமையாக உணவைச் சாப்பிடலாம்’ என்றிருந்த காலம் மாறி, `உணவை விரைவாகச் சாப்பிட்டுவிட்டு, மற்ற அலுவல்களுக்கு நிறைய நேரம் ஒதுக்கலாம்’ என்ற சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பற்களோடும் எச்சில் சுரப்புகளோடும் தொடர்புகொள்ளாமலே, உணவுப் பொருள்களை நேரடியாக உணவுக்குழாய்க்குள் (Oesophagus) தள்ள முயல்கிறோம். உணவை நொறுக்குவதற்கு அத்தியாவசியமான டெரிகாய்ட் (Pterygoid), மேஸட்டார் (Masseter), டெம்பொராலிஸ் (Temporalis) போன்ற தசைகளுக்கு வேலைகொடுக்காமல் ஓய்வளிக்கிறோம்.

பற்களோடும் எச்சில் சுரப்புகளோடும் நாம் சாப்பிடும் உணவுப் பொருள்கள் உறவாடுவது எவ்வளவு அவசியம் தெரியுமா? குடிக்கும் நீரைக்கூட மென்று பருகுங்கள் என்று சொல்வார்கள். அப்படி இருக்கும்போது, உணவுகளை நன்றாக மென்ற பிறகு உட்செலுத்துவதுதானே சரியாக இருக்கும். பலர் நினைப்பதைப்போல, செரிமானம் வயிற்றில் தொடங்குவதில்லை. வாய்ப் பகுதியிலேயே தொடங்கிவிடுகிறது. பற்கள், தாடைத் தசைகள், நாக்கு, எச்சில் ஆகியவற்றின் உதவியுடன் உணவை நொறுக்குவதுதான் செரிமானத்தின் முதல் படி. இந்த அடிப்படையைப் புரிந்துகொண்டால், உணவை நொறுக்குவதற்கான அவசியம் புரிந்துவிடும்.

உணவுகளை நொறுக்கி, சிறுசிறு அளவாக மாற்றும்போது, உணவுகளிலிருந்து சாரங்களைப் பிரித்தெடுக்க செரிமானக் கருவிகளுக்கு எளிதாக இருக்கும். இல்லையென்றால், வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் உணவை உடைக்க, செரிமானக் கருவிகள் அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். நன்றாக மென்று சாப்பிடும்போது, எச்சில் சுரப்பின் அளவு அதிகரிக்கும். நொறுக்கப்பட்ட உணவுடன் எச்சில் கலந்து, பிசுபிசுப்புடன் இரைப்பை நோக்கிப் பயணிக்கவைக்கும். நாம் சாப்பிடும் மாவுப்பொருள்களை உடைக்கும் செயல், எச்சில் சுரப்புகளில் உள்ள `அமைலேஸ்’ (Salivary amylase) நொதியால் வாய்ப்பகுதியிலேயே தொடங்கிவிடுகிறது. எச்சில் சுரப்பில் இருக்கும் `லைஸோசைம்’ (Lysozyme) என்னும் நொதிக்குக் கிருமிகளை அழிக்கும் தன்மையும் இருக்கிறது. கொழுப்புப் பொருள்களின் செரிமானமும் எச்சில் சுரப்புகளால் வாயிலேயே தொடங்கிவைக்கப்படுகிறது. ஆனால், முழுமைபெறுவதற்கு அவை வயிற்றுக்குள் செல்வது அவசியம்.

நாம் உணவுகளை நன்றாக மென்று சாப்பிடும்போது, விரைவில் உணவு உண்ட திருப்தி கிடைக்கும். மென்று சாப்பிடாவிட்டால், திருப்தி இல்லாமல் அதிக அளவில் உணவுகளை எடுத்துக்கொள்ள நேரிடும். உணவை அதிக நேரம் சவைக்கும்போது, உணவுகளில் உள்ள சுவையை முழுமையாக அனுபவிக்க முடியும். வாயில் மென்று சாப்பிடத் தொடங்கும்போதே, வயிற்றுப் பகுதியில் செரிமானத்துக்குத் தேவையான செயல்பாடுகள் எல்லாம் தொடங்கிவிடும். `வாயில் உணவு நுழைந்துவிட்டது… நம்மிடம் வரும் உணவை செரிப்பதற்குத் தயாராவோம்’ என வயிற்றுத் தசைகள், கணையம், கல்லீரல் என உள்ளுறுப்புகள் காத்துக்கிடப்பது இயங்கியல்.

ஓர் உணவுக் கவளத்தை எத்தனை முறை சவைக்க வேண்டும் என்றால், அது உணவைப் பொறுத்தது. சில காய் மற்றும் பழ வகைகளை ஐந்து முதல் பத்துமுறை சவைத்தால் போதுமானது. அதுவே, சற்று கடினமான உணவையோ இறைச்சித் துண்டுகளையோ இருபது முதல் முப்பது முறை சவைக்கவேண்டியிருக்கும். உணவு நூல்களும் சுமார் முப்பதுமுறை வரை மென்று சாப்பிட வேண்டும் என்றே கூறுகின்றன.

ஆனால், நாம் எத்தனை முறை மென்று சாப்பிடுகிறோம் என்று யோசித்துப்பாருங்கள். அடுத்த வேளை உணவு சாப்பிடும்போது கவனித்தால், நாம் அவ்வளவாக உணவை சவைப்பதில்லை என்பது தெளிவாகத் தெரியும். ’முப்பது முறை சவைக்கிறேன்’ என்று எண்ணிக்கொண்டே சாப்பிட வேண்டிய அவசியமில்லை. உணவு, வாயில் நன்றாக கூழ்ம நிலைக்கு வந்தவுடன் விழுங்கினால் போதும். விழுங்குவதற்கு முன், சிறு உணவுத் துணுக்குகள் வாய்ப்பகுதியில் சுழன்றுகொண்டிருந்தால், நீங்கள் உணவை தேவையான அளவுக்கு சவைக்கவில்லை என்று அர்த்தம்.

உணவை மென்று சாப்பிடுவதால் பற்களுக்கு பலம் உண்டாகும். மெல்லும்போது சுரக்கும் அதிக அளவிலான எச்சில் சுரப்பு, பற்களில் கிருமிகளின் தாக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்ளும். `உணவு சாப்பிடும்நேரத்தில் முழுக் கவனத்தையும் உணவில் மட்டுமே செலுத்த வேண்டும்’ என்று சொல்வதற்கான காரணங்கள் பல. செல்போன் பேசிக்கொண்டும், வேறு செயல்களைச் செய்துகொண்டும் சாப்பிடும்போது, உணவின்மேல் கவனம் இல்லாமல், மென்று சாப்பிடுவதற்கு வாய்ப்பே இல்லாமல்போகும்.

முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும், மென்று சாப்பிடமுடியாத சூழலில், செரிப்பதற்குக் கடினமான உணவுகளைக் கொடுத்து, செரிமானக் கருவிகளுக்கு கூடுதல் சுமை கொடுக்கக் கூடாது. செரிமானத்துக்கு எளிமையான மற்றும் கூழ்ம வகை உணவுகளைக் கொடுப்பது நல்லது. பற்களின் செயல்பாடு தொடங்கியதும், குழந்தைப் பருவம் முதல் மென்று சாப்பிடுவதன் அவசியத்தை அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது முக்கியம்.

சில தாய்ப் பறவைகள், உணவை நன்றாக நொறுக்கித் தங்களது இளம் குஞ்சுகளுக்கு ஊட்டிவிடுவதும் செரிமானத்தைத் தூண்டும் அறிவியல்தான். சில விலங்குகளின் வயிற்றுக்குள் சென்ற பாதி செரிமானமான உணவுப் பொருள்கள், வாய்ப்பகுதியில் நொறுக்கப்படுவதற்காக மீண்டும் எதுக்களிக்கப்படுவதும் இயற்கை உணர்த்தும் அறிவியலே.

தொடர்ந்து, உணவை மென்று சாப்பிடாமல் விழுங்கிக்கொண்டிருந்தால், வயிற்று உப்புசம், உணவு எதுக்களித்தல், வாய்வுப்பெருக்கம் போன்ற குறிகுணங்கள் தோன்றும். அனைவரது வீட்டிலும் ஒரு கண்காணிப்பு கேமரா இருந்தால், கீழ்க்கண்ட நிகழ்வுகளைக் காணமுடியும். காலையில் பள்ளி செல்லும் குழந்தைகள் புத்தகங்களை பரபரப்பாகத் தேட, குடும்பத் தலைவர் அலுவலகம் செல்லும் அவசரத்தில் வேறு வேலை செய்துகொண்டே காலை உணவை வேகவேகமாக உட்செலுத்த, குடும்பத் தலைவியோ, இட்லித் துண்டுகளைக் குழந்தைகளின் வாயில் திணிக்க, மீதமிருக்கும் இட்லியை வேகமாக விழுங்கிவிட்டு, அவரும் அலுவலகம் செல்லும் அவசர யுகத்தில் உணவை மெதுவாக மென்று சாப்பிட முடியுமா? மென்று சாப்பிடுவதன் அறிவியலைப் புரிந்துகொண்டால்...

உணவை நொறுக்குவதற்கு வாய்ப்பகுதியில் மட்டுமே பற்கள் இருக்கின்றன. வாய்ப்பகுதியைத் தாண்டிவிட்டால், தசைகளின் இயக்கங்கள் மற்றும் ரசாயனங்களின் சூட்சுமங்களின் மூலமே உணவுகளைக் கசக்கிப் பிழிந்து சாரத்தை உறிஞ்ச முடியும். செரிமானத்தைஎளிமையாக்க பற்கள், தசைகள், ரசாயனங்கள் போன்றவற்றின் கூட்டுச் செயல்பாடு மிகவும் அவசியம். செரிமானத்தின்போது தசைகளும் ரசாயனங்களும் நாம் சொல்வதைக் கேட்காது. ஆனால், `உணவை நன்றாக நொறுக்கு’ என்று பற்களுக்கு ஆணையிடலாம் அல்லவா... பற்களைப் பயன்படுத்தி நொறுங்கத் தின்போம்!...

மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாக வள்ளலார் அருளிய காயகல்பம் மூலிகை மருத்துவம்

மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாக வள்ளலார் அருளிய காயகல்பம் மூலிகை மருத்துவம்

காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகளாகும்.

சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும்.

ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் மருந்தினை
அருளியுள்ளார்.

வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம்,

தூதுவளை 50 கிராம்,

முசுமுசுக்கை 50 கிராம்,

சீரகம் 50 கிராம்

ஆகியவற்றை பொடியாக
காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்).

இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில் மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள்
கொதிக்க வைத்து நாட்டு சர்க்கரை கலந்து லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.

இதனை சாப்பிட ஆரம்பித்த மறுநாளிலிருந்து மலம் கருப்பு நிறத்தில் வரும்.

சிறுகுடல், பெருங்குடலில் இருக்கும் பழைய மலங்கள் வெளித்தள்ளப்படும்.

சிறுகுடல் உறிஞ்சிகள் (VILLUS) தூய்மைப் படுத்தப்பட்டு சாப்பிடும் அனைத்தும் முழுமையாக இரத்தத்தில் சேர்க்கப்படும்.

99 சதவீதம் பெரும் நோய்கள் உடலை தாக்காமல் இருக்கும்.

கேன்சர், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள் வராது.

உடலில் உள்ள அனைத்து நோய்களும் குணமாகும்.

வள்ளலார் அருளிய எளிய முறை காயகற்ப சூரணம் இது.

இதற்கு பத்தியம் எதுவுமில்லை.

இந்த காயகற்ப சூரணம் சர்வரோக நிவாரணியாக செயல்படுகிறது.

காலையில் அருந்துவதற்கு ஏற்ற மூலிகைபானமாகவும் விளங்குகிறது.

இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும்.

இதனைப் படிக்கும் அனைத்து நண்பர்களும் இந்த மருந்தினை அவசியம் சாப்பிட வேண்டும். நோயற்ற வாழ்வு வாழ வேண்டும்.

மனஅழுத்தம் என்றால் என்ன?

மனஅழுத்தம் என்றால் என்ன?


நம்முடைய மூளையில் செரட்டோனின், டோப்பமின் என்ற ரசாயனப் பொருட்கள் சுரக்கின்றன. இவற்றின் அளவு சமநிலையில் இருந்தால் பிரச்னை இல்லை. கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால்தான் மனஅழுத்தம் ஏற்படும். பாரதிக்கும் இவை சமநிலையில் இல்லாததால்தான் இவ்வளவு பிரச்னைகள் வந்திருக்கின்றன.

சில சமயம் எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே சிலருக்கு மனஅழுத்தம் தீர்ந்துவிடும். அப்போது இந்த ரசாயனப் பொருட்கள் சமநிலைக்குத் தற்செயலாக வந்திருக்கும். அதனால்தான் பயம், படபடப்பு தானாகவே குறைந்து, மனஅழுத்தம் இல்லாமல் போகின்றது. இது எல்லோருக்கும் சாத்தியமல்ல. மனஅழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் ஷிஷிஸிமி குரூப் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். இது செரட்டோனின், டோப்பமின் போன்ற ரசாயனப் பொருட்களின் சுரப்பை குறைவாகவோ, கூடுதலாகவோ சுரக்கவிடாமல் சமநிலையில் வைத்திருக்கும்.

மனஅழுத்தத்தின் அறிகுறிகள்
இனம்புரியாத கவலை, நம்பிக்கையின்மை, விரக்தி போன்ற உணர்வுகள் ஒருவருக்கு இருந்தால், அவர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

எப்போதும் விரக்தியாகப் பேசுவது, அதிகமாகக் கோபப்படுவது, அதிக கவலை, தூக்கமில்லாமலிருப்பது, பசியின்மை, வயிற்றுப்போக்கு, பிறருடன் பேசுவதைக் குறைத்துக் கொள்வது, அடிக்கடி சோர்ந்து போவது, ஏதோ நடக்கப்போகிறது என்கிற பயத்துடனேயே இருப்பது, தனிமையில் அழுவது, தேவையில்லாமல் பதற்றமடைவது, சோகமாகவே இருப்பது, நாம் எதற்கும் உபயோகமற்றவர் என்ற எண்ணம் தலைதூக்குவது, சில நேரங்களில் தற்கொலை எண்ணம் ஏற்படுவது... இவை யாவும் மனஅழுத்தத்திற்கான அறிகுறிகள்தான். எடை குறைவதும், தேவைக்கு அதிகமான எடை கூடுவதும்கூட மனஅழுத்தத்தின் அறிகுறிகள்தான் என்கிறார்கள்.

சிலருக்கு இது பரம்பரை நோயாகவும் இருக்கலாம் என்கிறார்கள். அளவுக்கு மீறிய மாத்திரைகளைச் சாப்பிடுவதும் இதற்கு இன்னொரு காரணம்.

வருமுன் காப்போம்
மனஅழுத்தம் வரும்முன் காக்க இயற்கையே நமக்குச் சில சிகிச்சைகளை அளித்துள்ளது.

உடற்பயிற்சி
மனஅழுத்தம் ஏற்படாமலிருக்க உடற்பயிற்சிதான் மிகப்பெரிய சிகிச்சை. பாரதிக்கு மருத்துவர்கள் மருந்துகளை மட்டும் பரிந்துரை செய்யவில்லை. உடற்பயிற்சிகளையும் சிகிச்சைகளாக அளித்ததால்தான் அவரால் இன்று சகஜ நிலைக்குத் திரும்ப முடிந்தது.

நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் வாக்கிங் போவதும் நல்ல உடற்பயிற்சிதான். வாக்கிங் என்றால் 45 நிமிடங்கள் தொடர்ந்து சுறுசுறுப்பாக நடக்க வேண்டும். அப்போதுதான் நமது உடலில் மீஸீபீஷீrஜீலீவீஸீ என்ற வேதிப்பொருள் சுரந்து, நல்ல மூடுக்குக் (விஷீஷீபீ மீறீமீஸ்ணீtமீ) கொண்டுவரும்.

யோகா
மனஅழுத்தத்தைக் குறைக்க யோகா வகுப்புகளுக்குப் போகலாம். ஏதோ அரைமணி நேரம் மட்டும் அமைதியாக இருந்துவிட்டு, மற்ற நேரம் முழுக்க டென்ஷனாக இருப்பதில் அர்த்தமில்லை. வாழ்நாள் முழுக்க ஒருவரின் மனதை அமைதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் அதற்குப் பலன் கிடைக்கும். தியானத்தின் மூலம் தனது அழுக்கை, குரூரத்தை, எரிச்சலை, அதிருப்தியை, கவலையை, விரக்தியை மாற்றிக்கொண்டால்தான் அது வாழ்வை வளப்படுத்தும்.

தனிமையைத் தவிர்த்தல்
கூடிய மட்டும் தனிமையைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்குப் பிடித்தமானவரிடம் மனம்விட்டுப் பேசுங்கள்.

இசை, புத்தகம்
நல்ல புத்தகங்களைப் படிப்பது மனஅழுத்தத்தைத் தவிர்க்கும் என்கிறார்கள். மனதிற்குப் பிடித்த இசையைத் தொடர்ந்து கேட்பது மிக நல்லது. மனம் வேறு சிந்தனைக்குப் போகாமல் கட்டுப்படுத்தும் திறன் இசைக்கு உண்டு.

உணவு
அசைவப் பிரியர்கள் மீன் சாப்பிடலாம். அதில் உள்ள ஒமேகா_த்ரீ என்ற கொழுப்பு திரவம் உங்கள் மனதை நல்ல மூடுக்குக் கொண்டு வரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

தியானம்
கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்யலாம். கண்ணை மூடிய நிலையில் கடல் அலை, குளக்கரை, இயற்கை காட்சிகளென்று கற்பனை செய்து பார்ப்பது மனஅழுத்தத்திலிருந்து விடுதலை பெற உதவும்.

மனஅழுத்தத்தைத் தவிர்க்க சில வழிகள்:

1. உடற்பயிற்சி
2. யோகா, தியானம்
3. ஒமேகா த்ரீ கொழுப்புள்ள மீன்கள்
4. இசை
5. புத்தகம்.

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...