Wednesday, November 7, 2018

பாம்பு விஷத்தை முறிக்கும் அதிசய புற்றுமண் கிடைக்கும் கோயில் எது தெரியுமா?

பாம்பு விஷத்தை முறிக்கும் அதிசய புற்றுமண் கிடைக்கும் கோயில் எது தெரியுமா?

*வாழை தோட்டத்து அய்யன் கோயில்*
  

நம் முன்னோர்கள் கோயில்களை வெறும் வழிபாட்டு தலமாக மட்டும் அமைக்காமல் நம்முடைய வாழ்கையின் பல நிலைகளிலும் உதவக்கூடிய ஒரு முழுமையான அமைப்பாக இயங்கும்படி நிறுவியிருக்கின்றனர். பஞ்ச காலத்தில் காத்துக்கொள்ள கோபுர கலசங்களில் நவதானிய விதைகளை வைத்தனர், பெருவெள்ளத்தில் இருந்து பாதுகாக்க தடிமனான கற்களால் ஆன மிகப்பெரிய மதில்களை அமைத்தனர், ஆன்றோர்கள் வாழ்ந்து கல்வி போதிக்கும் இடமாகவும், தீராத நோய்களையும் குணமாக்கும் மருத்துவ கூடமாகவும் கூட கோயில்கள் இருந்திருக்கின்றன.
அக்காலத்தில் ஒருவருக்கு பாம்பு கடித்தால் அவரை குணப்படுத்துவது என்பது இயலாத ஒன்றாக இருந்தது. இறப்பை உறுதி செய்யும் விஷயமாக இருந்த பாம்புக்கடியை குணப்படுத்தும் அருமருந்தாக கோவை மாவட்டம் சோமனூரில் இருக்கும் வாழைத் தோட்டத்து ஐய்யன் கோயிலில் கிடைக்கும் புற்றுமண் இருந்துவருகிறது. 

வாருங்கள், பாம்புக்கடியை குணப்படுத்தக்கூடிய புற்றுமண் கிடைக்கும் வாழைத் தோட்டத்து ஐய்யன் கோயிலுக்கு சென்று தரிசனம் மேற்கொள்ளலாம்.   

வாழைத்தோட்டத்து ஐய்யன் கோயில்
கோவை மாவட்டத்தில் திருப்பூர் எல்லையை ஒட்டி நொய்யல் தழுவியோடும் சோமனூர் என்ற ஊரில் அமைந்திருகிறதுவாழைத்தோட்டத்து ஐய்யன் கோயில்.
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு பின்னால் இருக்கும் வரலாற்றையும், வாழைத் தோட்டத்து அய்யன் நிகழ்த்திய அற்புதங்கள் பற்றியும், தீரா நோய்களையும் தோஷங்களையும் தீர்க்கும் இந்த கோயிலின் மகிமைகள் பற்றியும் அடுத்தடுத்த பக்கங்களில் தெரிந்துகொள்வோம்.

வாழைத் தோட்டத்து அய்யன் என்பவர் யார்?
சின்னையன் என்ற இயற்பெயர் கொண்ட வாழைத் தோட்டத்து கி.பி 1777ஆம் ஆண்டு செங்காளியப்பன் என்பவருக்கு மகனாக பிறந்திருக்கிறார். தனது 12ஆம் அகவை வரை கல்வி பயின்ற பிறகு தந்தையின் விருப்பப்படி மேய்ச்சல் தொழிலை மேற்கொண்டிருக்கிறார்.
சிறு வயதில் ஆன்மீகத்தில் பெரும் ஈடுபாடு கொண்டவராக இருந்த சின்னையன் மாடு மேய்க்கும் போது சிறு சிறு கற்களை அடுக்கி தெய்வ வழிபாடு மேற்கொண்டு வந்திருக்கிறார். ஒருநாள் இவர் மாடுமேய்க்கும் வழி வந்த பெரியவர் சின்னையனுக்கு சர்வவிஷ சம்ஹார மந்திரத்தையும், பஞ்சாட்சர மந்திரத்தையும் உபதேசித்துள்ளார்.

வாழைத் தோட்டத்து அய்யன் என்பவர் யார்?
இதே பெரியவர் பின்னொருநாள் சின்னையனின் அறையில் தோன்றி சிவ பெருமான் பார்வதி தேவியாரோடு இருக்கும் காட்சியை காட்டி மறைந்துவிட்டார்.
சிவ தரிசனம் பெற்றதன் பிறகு நோய்களை குணமாக்கும் வல்லமையையும், பாம்பு மற்றும் தேள் ஆகியவற்றின் விஷத்தை விபூதி மற்றும் பஞ்சாட்சிர மந்திரங்களை கொண்டு குணப்படுத்தி வந்திருக்கிறார்.

வாழைத் தோட்டத்து அய்யன் என்பவர் யார்?
தனது 72ஆவது வயதில் மாடு முட்டி இறைவனடி சேர்ந்தார். பின் தனது பண்ணையில் வேலை செய்து வரும் தொழிலாளி ஒருவரின் கனவில் தோன்றி தான் இதுநாள் வரை பூஜித்து வந்த லிங்கம் மற்றும் நந்தி ஆகியவவை இருக்கும் இடத்தை சொல்லியிருக்கிறார்.
இவற்றை சுற்றி தான் இன்று நாம் பார்க்கும் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

கோயில் அமைப்பு:
வாழைத் தோட்டத்து அய்யன் முக்தியடைந்ததாக சொல்லப்படும் கிளுவை மரத்தின் கீழ் தான் அவர் வழிபட்டு வந்த லிங்கம் மற்றும் நந்தி ஆகியவை இருந்திருக்கின்றன. இந்த லிங்கத்தை சுற்றி பின்னாளில் புற்று ஒன்று வளர்ந்திருக்கிறது. இந்த புற்று மண் பாம்பு விஷத்தை முறிக்கும் சக்தி கொண்டது என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

புற்று மண்:
இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் மருத்துவ குணம் கொண்ட இந்த புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பக்தர்கள் பூச்சிகடிகள் மற்றும் விஷக்கடிகளுக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர்.

ராகு தோஷம்:
ராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும், குடும்பத்தில் ஒற்றுமையின்றி இருப்பவர்களும் கூட வாழைத் தோட்டத்து அய்யன் கோயிலுக்கு வந்து வழிபட்டால் அக்குறைகள் நீங்கும் என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

திருவிழா:
மார்கழி மாதம் நிகழும் திருவாதிரை நட்சத்திர நாள் இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதேபோல தமிழ் புத்தாண்டான சித்திரை வருட பிறப்பின் போதும் சுற்றுவட்டாரப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாழைத் தோட்டத்து அய்யனை தரிசிக்க வருகின்றனர்.

சந்நிதிகள்:
இக்கோயிலின் மூலவராக வாழைத் தோட்டத்து அய்யன் கிளுவை மரத்தின் கீழ் சிறிய சிற்பமாக அருள்பாலிக்கிறார். அதோடு இக்கோயிலில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்கும் முருகன் ஆகியோரது சந்நிதிகளும் இங்கே இருக்கின்றன.

எப்படி அடைவது?
கோவை - அவினாசி சாலையில் உள்ள கருமத்தம்பட்டியில் இருந்து 8கி.மீ தொலைவில் சோமனூருக்கு அருகே அய்யம்பாளையம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. இக்கோயிலுக்கு உக்கடம் மற்றும் காந்திபுரம் பேருந்து நிலையங்களில் இருந்து தொடர்ச்சியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நீங்கள் கோவையில் இருந்தாலோ அல்லது அடுத்தமுறை கோவைக்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தாலோ நிச்சயம் வாழைத் தோட்டத்து அய்யன் கோயிலுக்கு சென்று வாருங்கள்.

முழங்கால் வலி அதிகமாக இருக்கிறது என்றார்கள்.

"முழங்கால் வலி அதிகமாக இருக்கிறது என்றார்கள்.
              பிரண்டையை உபயோகித்துகொள்ளுமாறு ஆலோசனை கூறி அனுப்பினேன்.
            
             கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லை. என வந்து தெரிவித்தார்கள்.

                 பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான்  எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க வைக்கிறது.

                    அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது. 
                    
                      குறிப்பாக, சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும். இதை எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.

                      பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபடுகிறது.

                  சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு  முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்...

                  பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் (அ) உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் .
                   பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது ஒரு அருமருந்து..
               மூலம் நோய் உள்ளவர்களுக்கு
உரிய  மருந்தாகவும், ஏற்ற உணவாகவும்
பயன்படுகிறது.
                 இந்த மூலிகையை "குத ரோக நாசினி" என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்படுகிறது.

                    இவ்விதமாக நிறைய வயிறு சம்மந்தப்பட்ட  குறைபாடுகள் பிரண்டையால் குணமாகிறது.
மற்றும் இயற்கை கால்சியம்  அதிகம் உள்ளது  .
                   இவ்வாறு இருக்க  நாம்  ஏன் அனாவசியமாக  கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் செய்து கொள்ள வேண்டும். யோசிங்க.....

                 வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் ஏழாயிரத்தில் உள்ள குறிப்பிடப்பட்டுள்ளது.
                  உலகிலேயே கடினமான பொருள் வைரம் ஆகும். அதில் உள்ள கார்பன் பிணைப்பையே உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு எனும்போது ........

               தேகத்தை வஜ்ஜிரமாக்கும் என்பதினால்தானோ என்னவோ
இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" எனப்படுகிறது. 
                  
                 இதை படிப்பதுடன் நிறுத்தி விடாமல்  அணைவரும் உபயோகித்து பயன்   அடைந்தால்  நான் மிகவும் மகிழ்வேன்.
                         Dr.M.C.Ramamurthy,
                            9150001551.

இன்சுலின் மரணங்களும் மறைக்கப்படும் உண்மைகளும்*

*இன்சுலின் மரணங்களும் மறைக்கப்படும் உண்மைகளும்*
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
*பக்க விளைவு (Side effect) எனும் பொய்*
🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹
*தொடர் - 6*
🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴
அலோபதியின் அறிவியல் மிக வினோதமானது நோய் வாய்ப்பட்ட மக்களிடம் அது ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்கிறது.. நீ தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறாயா? அல்லது கொலை செய்யப்பட விரும்புகிறாயா? என்பதே அக்கேள்வி.

"நாங்கள் வாழவே விரும்புகிறோம்" என மக்கள் கதறினால், உனக்கு வந்த நோயிலிருந்து நீ மீண்டு உன்னால் வாழவே முடியாது. ஒன்று நோயுடன் கிடந்து நீயே செத்துபோ, அல்லது  எனது மருந்துகளால் நான் உன்னை கொலை செய்கிறேன்,என்பதே அதன் மறைமுகமான பதில், எல்லா அலோபதி மருந்துகளுமே எதிர் விளைவு கொண்டவைதான் அதாவது எந்த நோய்க்காக மருந்து கொடுக்கப்படுகிறதோ அந்த நோயையும் குணப்படுத்தாமல், சம்பந்தமே இல்லாத வேறு பலநோய்களையும் உருவாக்குபவைதான் அலோபதி மருந்துகள்,

சர்க்கரை நோய் அலோபதியின் வணிகச் சந்தையை மிக விரிவானதாக மாற்றிவிட்டிருக்கிறது. பல ஆயிரம் கோடிகள் இந்தச்சந்தையில் புழங்குகின்றன. மரபு வழி மருத்துவ முறைகளால், சர்க்கரையை நாம் குணப்படுத்த முடியும் என்று கூறினால். தமது சந்தைக்கு பெரும் ஆபத்து வந்து சேரும்.என்ற பதட்டம் அவர்களில் சிலரை ஆட்கொள்கிறது.

இப்போது சில அலோபதி மருத்துவர்கள், அவரவர் இணைய பக்கங்களில், என்னை  *"சமுக விரோதி"* என்றே குறிப்பிட்டு எழுதிக் கொண்டுள்ளனர். ஒரு மருத்துவர் ஒரு படி மேலே சென்று தமது இயலாமையும், ஆற்றாமையையும் வெளிப்படுத்தி விட்டார்.

அலோபதிக்கு எதிராக எழுதப்படும் கட்டுரைகளுக்கு விருப்பம் *like* தெரிவிக்கும் நபர்களை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

அந்த நபர்கள் எங்களிடம் மருத்துவத்திற்கு வரும் வரும் போது *"கவனித்து"* அனுப்புவோம் என்று எழுதியுள்ளார் அந்த

*"மருத்துவர்"*

*ஒரு வேளை விஷ ஊசி போட்டு கொன்று விடுவாரோ!*

சரி, அப்படியே கொலை செய்தாலும் நாம் அவர்கள் மீது வழக்கு கூட தொடுக்க இயலாது. நாம் தான் அவர்கள் அவர்கள் நீட்டும் படிவங்களில் எல்லாம் என்ன இருக்கிறது எனக் கூட படிக்காமல் கையொப்பம் இட்டு தருகிறோமே.

ஆனால், உண்மையின் வலிமைக்கு முன், உலகின் எந்த சக்தியும் நிற்கவும் நிலைக்கவும் முடியாது. எந்த ஊசி போட்டும் உண்மையின் குரலை ஒடுக்கிவிட முடியாது. உலகில் உண்மை பேசுவோர், அறிவையும், ஆயுதங்களையும், நம்பி அல்ல மனசாட்சியையும் இயற்கையின் பேராற்றலின் ஆட்சியையும் நம்பி பேசுகின்றனர். ஆகவே இந்த மிரட்டல்கள் பரிதாபத்துக்கு உரியவையே தவிர, பயப்படத் தகுந்தவை அல்ல,

உண்மை பேசுவோர் எல்லாத் துறைகளிலும் இருக்கத்தான் செய்கின்றனர். அலோபதித் துறை எண்ணற்ற நல் மனதுக்காரர்களை கொண்ட துறை தான். அவர்களில் இருவரை உங்களுக்கு அறிமுகம் செய்ய விழைகிறேன்.

அமேரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இரு அலோபதி மருத்துவர்கள் அவர்கள். ஒருவர் என்ரிகோ பொர்டியூஸ், NPH உதவி ஆய்வாளர், மற்றவர் பேராசிரியர் ட்ரிவர் ஆர்சர்ட் M D, இருவரும் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் துறையை சேர்ந்தவர்கள். இன்சுலின் பயன்படுத்தும் சர்க்கரை நோயாளிகளின் ஆயுட்காலம் பற்றிய விரிவான ஆய்வு ஒன்றினை இவர்கள் மேற்கொண்டனர்.

இன்சுலின் சிகிச்சை அறிமுகமான 1920 களில் என்ன விதமான மாற்றங்கள் நடந்தன என்று என்று அவர்கள் அறிவித்துள்ளார்கள், *"இன்சுலின் சார்ந்த, சர்க்கரை நோய் மரணங்கள்"* என்பது அவர்களது ஆய்வுநூலின் மையக் கருத்து, ஆய்வின் தொகுப்புரையை அவர்கள் பின்வருமாறு தொடங்கியுள்ளார்கள்:

1920 களில் இன்சுலின் அறிமுக படுத்தப்பட்ட பின்னர், இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோயாளிகள் மரணம் அடையும் விதத்தில் அதிர்ச்சி அளிக்கதக்க மாற்றம் ஏற்பட்டது. இன்சுலினுக்கு முன்பு, சர்க்கரை நோயாளிகள் கோமா நிலைக்கு சென்று மரணமடைந்தனர். இன்சுலினுக்கு பின்னர், அதை பயன்படுத்திய மக்கள், சிறுநீரக செயலிழப்பு மற்றும் இதயநோய் ஏற்பட்டு மரணமடைவது அதிகரித்து விட்டது.

இன்சுலின் பயன் படுத்தும் நோயாளிகளின் மரண எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. குழந்தை பருவ இன்சுலின் நோயாளிகளை பொறுத்த வரை, தற்போது இன்சுலின் பயன் படுத்துவோரில் 15 சதவிதத்துக்கும் அதிகமானவர்கள் அவர்களது 40 வது வயதிலேயே வாழ்வில் நடைபிணங்களாக வாழ்ந்து மரணமடைவார்கள். அந்த நேரத்தில், நாட்டின் இறப்பு விகிதம் இப்போது உள்ளதைக்காட்டிலும் 20 மடங்குகள் அதிகமாக இருக்கும்.

மிகநீண்ட ஆய்வறிக்கையின் தொகுப்புரை (Summery) இவ்வாறு துவங்குகிறது. தொடர் இன்சுலின் பயன்பாடு மனித உடலை சீரழிக்கும் என்பதை அமேரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் அரசு சுகாதாரத்துறைகளே வெளிப்படையாக அறிவித்து கொண்டு இருக்கின்றன. மேற்கண்ட ஆய்வு அறிக்கையைகூட அமெரிக்காவின் "அமெரிக்க உடல் நல மற்றும் மனித சேவைத் துறை" தான் வெளியிட்டுள்ளது.

பல ஆண்டுகளாக இன்சுலின் குத்திக் கொள்ளும் நம் சமூகத்தவர் சிறுநீரக செயலிழப்புக்கு ஆளாகி, டயாலிசிஸ் எனும் செயற்கை இரத்த சுத்திகரிப்புக்கு ஆட்பட்டு, சில காலத்தில் மரணமடைவதை நாம் நேரடியாக பார்த்து கொண்டு தானே இருக்கிறோம். மரணமடையாத மக்கள் கூட விரும்பிய இடங்களுக்கு போக இயலாமல் விரும்பிய உணவுகளை உண்ண இயலாமல் நடைபிணங்களாக அலைவதையும் பார்க்கிறோம் தானே, இவை எல்லாம் சர்க்கரை நோயால் வந்தவையா? அல்லது அந்த நோய்க்கு வழங்கப்பட்ட இன்சுலினால் வந்தவையா? என இந்த நாட்டின் 120 கோடி மக்களில் ஒருவர் கூட கேட்க கூடாதா? அப்படி எழுதப்படும் கேள்விகளுக்கு இதுவரை எந்த அலோபதி மருத்துவராவது நேர்மையாக பதில் கூறியுள்ளாரா? இந்த இன்சுலின் நோயை குணப்படுத்துவதும் இல்லை, நோயாளியின் உயிருக்கு உத்தரவாதம் தரவும் இல்லை. மாறாக அந்த நோயாளி எதிர்பாராத பல உயிர் ஆபத்து நோய்களை உருவாக்குகிறது. பின்னர் எதற்கு இந்த "சிகிச்சை" என்று மக்கள் கேட்க வேண்டும்.

மாடுகளை தார்குச்சியால் குத்தினால் கூட, குத்தியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க விலங்கு நல வாரியம் இருக்கிறது, மனிதர்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகளால் ஏற்படும் மரணங்களை கேட்கத்தான் முறையான சட்ட அமைப்புகள் இல்லை.

பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ள வேறு சில தகவல்களை பார்ப்போம்.

"ஆயுள் காப்பீடு செய்து கொண்ட மக்களின் மரணம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு முடிவு இது. 1935-63 ஆண்டு காலத்தில் இன்சுலின் எடுத்துக் கொண்ட 30 வயதுக்கு குறைவான மக்களின் மரண எண்ணிக்கை எதிர் பார்க்கப்பட்டதை காட்டிலும் 6 மடங்குகள் அதிகமாக இருந்தது.

ஆயுள் காப்பீடு எடுத்துக் கொள்ளும் போது, காப்பீட்டு நிறுவனங்களுக்கு மக்களின் ஆயுள் காலம் குறித்து ஒரு கணக்கு இருக்கும் அல்லவா?, அந்த கணக்கை காட்டிலும் 6 மடங்குகள் அதிகமாக மரணங்கள் இன்சுலின் நோயாளிகளுக்கு ஏற்ப்பட்டது.

"இந்த மரணங்கள் அனைத்திலும், இதய நோய், கழுத்து பட்டை நரம்பு நோய்கள் மிக அதிக அளவில் இருந்தன. ஜோஸ்லின் க்ளினிக் மற்றும் வேறு சில குழுக்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள், அமெரிக்கா மக்கள் தொகையில் ஏற்படும் பொதுவான மரண எண்ணிக்கைக்கும், இன்சுலின் நோயாளிகளின் மரணங்களின் எண்ணிக்கைக்கும், இடையிலான வேறுபாடு குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருந்ததை காட்டுகிறது. 1931-59 காலத்தில் ஜோஸலின் க்ளினிக் நோயாளிகளின் மரண ஒப்பீட்டு ஆய்வு மசாசூசெட்ஸில் இருந்த பொதுமக்களின் வயது பாலினம் (ஆண் /பெண்) ஆகிய வற்றை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டது.
அதாவது இந்த க்ளினிக் ல் இரு‌ந்த இன்சுலின் நோயாளிகள் மற்றும் மசாசூசெட்ஸ் நகரின் மக்கள் தொகையில் ஏற்பட்ட மரணங்கள் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு நடத்தப்பட்ட ஆய்வு.

சர்க்கரை நோயாளிகளின் மரணம் எல்லா வயதுகளிலும் அதிகமாகவே காணப்பட்டது, 0-9 வயதில் இருந்த ஆண் குழந்தைகளில் மட்டும் இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆண்களை பொறுத்தவரை, எதிர்பார்க்கப்பட்ட மரண விகிதத்தை விட, 3.75 மடங்குகள் அதிகமானோர் இறந்து போனார்கள்.

அதாவது 10 பேர் இறந்து போவார்கள் எனக்கணக்கிட்டால் ஏறத்தாழ 38 பேர் இறந்து போனார்கள். என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்களான என்ரிகோ பொர்டியூஸ் மற்றும் "ட்ரிவர் ஆர்சர்ட்" ஆகியோர்.

இங்கேயுள்ள அலோபதி மருத்துவர்களில் எத்தனை பேர் இந்த ஆய்வு அறிக்கையை வாசித்து இருப்பார்கள், என சிந்தித்து பாருங்கள். மருந்து நிறுவனப் பிரதிநிதிகள் நீட்டும் விளம்பர படிவங்களை வாசித்து, அம்மருந்துகளை எழுதித் தள்ளினால் கிடைக்கும் "அன்பளிப்புகளை பற்றி சிந்திக்கும் மருத்துவர்கள் தான் அதிகம். மக்களை காப்பாற்ற தேவையான ஆய்வுகளை படித்து, அவற்றுக்கேற்றவாறு மருந்துகளின் அளவையும் தன்மைளையும் மாற்றி பரிந்துரைக்கும் மருத்துவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

சர்க்கரை நோய் என்ற காரணத்திற்காக அலோபதியை அணுகும் மக்களுக்கு, இரண்டு வழிகள் காட்டப்படுகின்றன, ஒன்று அலோபதி மருந்துகளை உட்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக செத்தொழிய வேண்டும், அல்லது நோயால் செத்தொழிய வேண்டும். ஆகக் கடைசியில் அவர் நோயை குணப்படுத்துவதும் இல்லை, எதிர்விளைவுகள் இல்லாத மருந்துகளை பரிந்துரைப்பதும் இல்லை.

சர்க்கரை "நோயை அமைதியான கொலைகாரன் (silent killer) என்கிறது அலோபதி மருத்துவம், உண்மையில்" அமைதியாக கொலை" செய்வது சர்க்கரை நோயா? அலோபதி மருந்துகளா? என்பதை கூட புரிந்து கொள்ள முடியாமல் போனால், நமக்கு வழங்கப்பட்ட வாழ்க்கையை வீணடிக்கிறோம் எனப் பொருள்.
🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈
*அடுத்த தொடர்ச்சி இனிப்பாக நாளை தொடரும்.*
*தொடர் - 7*
🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴

*இந்த சர்க்கரை என்ற நோய் என அறிவிக்கப்பட்டு ஆங்கில மருந்து எடுத்துக் கொண்டவர்கள் அந்த பாதிப்புகளில் இருந்து மீளவும், மாத்திரை, இன்சுலின் இவற்றை விட்டு சுக வாழ்வு பெற நமது ஆயர்பாடி இயற்கை மருத்துவ மனை வழங்கும் சித்த சக்தி துணை உணவு சாப்பிட்டு சிறப்பாக செயல்புரிந்து பல ஆயிரம் மக்கள் நண்மைகள் பெற்றுள்னர், உறவுகள் பயன் படுத்தி பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்,*
*ஆயர்பாடி இயற்கை மருத்துவ மனை, அனுப்பர்பாளையம், திருப்பூர், 9585436122, 8778832095.*
💚💚💚💚💚💚💚💚💚💚

இதயத்தில் அடைப்பு உள்ளதா?*

*இதயத்தில் அடைப்பு உள்ளதா?*

திருவனந்தபுரம் கட்டாக்கடா அருகில் உள்ள பன்னியோடு டாக்டர்.சுகுமாரன் வைத்தியர் அவர்கள் இதய அடைப்பிற்கு இலவசமாக  வைத்தியம் செய்கிறார். நாடித் துடிப்பை பார்த்தே உங்கள் நோயை கண்டுபிடிக்கிறார்.

*வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற எல்லா நாட்களிலும் வைத்தியம்.*

இதயத்தில் அடைப்பு உள்ளவர்களுக்கு மூன்று மாத மருந்துக்கு 2700 ரூபாய்..  *ஆறு நாட்கள் மருந்து உட்கொண்டாலே ரத்தக் குழாய் அடைப்பு மாறுகிறது.* பணம் கொடுக்க வசதி இல்லாதவருக்கு இலவசம்.

மிக முக்கியமான தகவல் என்பதால் இதனை அனைவருக்கும் பகிருங்கள். இதனால் யாரவது ஒருவர் பயன் பெற்றாலும்  மகிழ்ச்சியே..

*Sukumaran Vaidyans* ,
*G A Pharmacy & Nursing Home,* *Neyyattinkara P.O.,*
*Thiruvananthapuram.*
*Pin: 695 572,*
*Kerala State.*
*Phone: 0471 2222364.*
👍🙏

Tuesday, November 6, 2018

முதுகுத் தண்டு என்பது உடலின் வேர். வேரை நலமாக வைத்திருந்தால், உடல் என்னும் மரம் மிகச்சிறப்பாக இருக்கும். முதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க 10 யோசனைகள்:

முதுகுத் தண்டு என்பது உடலின் வேர். வேரை நலமாக வைத்திருந்தால், உடல் என்னும் மரம் மிகச்சிறப்பாக இருக்கும். முதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க 10 யோசனைகள்:

1. தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள். (தோப்புக்கரணம் போடுவதும் மிகச் சிறந்தது)

2.தினம் இருபத்தோரு நிமிடங்கள் வேகமாக நடங்கள்.

3. அமரும்போது வளையாதீர்கள்.

4. ஒரு மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.

5. நிற்கும் போது நிமிர்ந்து நில்லுங்கள்.

6. சுருண்டு படுக்காதீர்கள்.

7. கனமான தலையணைகளைத் தவிர்த்து விடுங்கள். கழுத்திற்கு நல்லதல்ல. முதுகும் பாதிக்கப்படும்.

8. டூ வீலர் ஓட்டும்போது வளைந்து, குனிந்து ஓட்டாதீர்கள்.

9. பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள். குத்த வைக்கும் நிலையில் அமர்ந்து தூக்கப் பழகுங்கள். பாரத்தை உங்கள் உடல் முழுதும் தாங்கட்டும்.

10. காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டி மடக்குங்கள்.

திடீரென்று கார் பிரேக் பிடிக்கவில்லை - என்ன செய்வது?* மு

*அதிகம்பகிருங்கள்.*
*ஆபத்துக்குஉதவும்*

*திடீரென்று கார் பிரேக் பிடிக்கவில்லை - என்ன செய்வது?*

முதலில் மோட்டாரில் கெட்டிக்காரன் எவனுமில்லை என்பதில் இந்த பதிவினை ஆரம்பிக்க விரும்புகிறேன்...
எனது கார் ஒன்றில் சமீபத்தில் 70km/hr வேகத்தில் சென்றுகொண்டிருந்த போது திடீரென்று பிரேக் பிடிக்கவில்லை!

முன்னும் பின்னும் பேருந்துகளும் இருசக்கர வாகனங்களும் செல்கின்றன!!!

முதலில் நான் பதட்டப்படாமல் பிரேக் பெடலை பம்ப் செய்து பார்த்தேன், பிரேக் ஆயில் குறைவு ஏதும் இருந்தால் பம்ப் செய்தால் பிரேக் பிடித்து விடும்...

பம்ப் செய்வது என்பது பிரேக் பெடலினை திருபத்திரும்ப வேகமாக மிதித்து ரிலீஸ் செய்வதுதான்.
பம்ப் செய்தும் பிரேக் பிடிக்கவில்லை!

பின் சாலையின் சூழலை வேகமாக பார்த்து இடைவெளிகளையும் வாகனங்கள் செல்லும் வேகத்தையும் கணித்துக்கொண்டு வேகமாக கியரை ஒவ்வொன்றாக குறைத்துக்கொண்டே முதல் கியருக்கு கொண்டு வந்தேன்....

அதே சமயம் வாகனத்தை பிற வாகனங்களில் மோதிவிடாமல் இடைவெளிகளை நோக்கி திருப்பி ஹெட்லைட் அமத்தியமத்தி எரியவிட்டு ஹாரனை அடித்து சாலையில் அனைவருக்கும் எச்சரிக்கை சமிக்கைகள் செய்துகொண்டே  ஓட்டினேன்...

  பிறகு ஹேன்ட் பிரேக்கை (எமர்ஜென்சி பிரேக்/ பார்க்கிங் பிரேக்) மெதுவாக இழுத்தேன்...

வாகனம் கட்டுப்பாட்டிற்குள் வந்து நின்றது...

செய்யக்கூடாதவை :
வண்டி பிரேக் பிடிக்கவில்லை என்றவுடன் பதட்டப்பட்டு வேகமாக ஹேன்ட் பிரேக்கை இழுத்தால் வயர் கட்டாகிவிடும்...

படிப்படியாக முதல் கியருக்கு கொண்டு வந்தபின்தான் ஹேன்ட் பிரேக்கை இழுக்க வேண்டும்...

ஹேன்ட் பிரேக் ஒன்றுதான் சேதாரத்தை குறைக்க ஒரே வழி......

இதுபோன்ற சூழல்களில் சீட் பெல்ட் போடாமல் இருந்தால் ஸ்டெரிங்கில் நெஞ்சு அடிபடவோ, கண்ணாடியில் தலை அடிபடவோ வாய்ப்புகள் இருக்கிறது!

சிலர் தங்கள் வாகனங்களில் ஹேன்ட் பிரேக் பழுதாகி பிடிக்காமல் இருப்பதை சரி செய்யாமல் இருப்பர்!

ஹேன்ட் பிரேக் அவசர காலங்களில் உயிரை காக்கக் கூடியது என்பதை உணர்ந்து பழுதுபார்க்கவும்..

எக்காரணம் கொண்டும் வண்டி ஓட்டும் போது எதிர்பாராத சூழல்களில் பதட்டப்படாமல் இருக்கவும்..

முடிந்த அளவு முன் செல்லும் வண்டிக்கு பின்னால் போதிய இடைவெளியில் வண்டியை ஓட்டவும்.

அவசர காலங்களில் உயிரை காக்கக் இந்த இடைவெளி ரொம்ப முக்கியம்...

தினமும் உங்கள் வண்டியில் பிரேக் ஆயில் அளவு, பிரேக் ஆயில் டியுப், டயரின் காற்றளவு, தேய்மானம் ஆகியவற்றை சரி பார்க்கவும்..

கண்டிப்பாக சீட் பெல்ட் அணிந்துகொண்டு வண்டியை ஓட்டவும்...

மறந்துவிடாதீங்க வண்டி ஒட்டிக்கிட்டு போகும்போது பிரேக் பிடிக்கவில்லை என்றால்....

1) பதட்டப்படாமல் இருத்தல்

2) சாலையின் சூழலை நன்கு பார்த்தல்

3) ஹார்ன் அடித்து எச்சரிக்கை செய்தல்

4) கியரை படிப்படியாக குறைத்து முதல் கியருக்கு கொண்டு வருதல்

5)மெதுவாக ஹேன்ட் பிரேக்கை இழுத்தல்

6)ஓரமாக வண்டியை நிறுத்துதல் வேண்டும்...

ஷேர் பண்ணுங்க உங்களுக்கும் உங்க நண்பர்களுக்கு எப்பொழுதாவது உதவலாம்!

🙌🏻 🤝🏻

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...