Friday, October 26, 2018

55 health tips for all diseases

நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!
• ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.
• உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.
• அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.
• பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.
• சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும்.
• மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.
• துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும்.
• மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.
• வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
• பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.
• வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.
• உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.
• வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச் சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.
• அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.
• அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
எளிய இயற்கை வைத்தியம்
1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
3. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.
4. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.
5. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
6. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
7. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
8. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
9. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
10. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
11. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
12. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
13. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
14. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
15. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
16. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.
17. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
18. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
19. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
20. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
21. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
22. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.
23. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
24. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
25. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
26. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
27. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
28. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
29. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
30. பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
31. புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.
32. பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
33. கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
34. சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
35. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
47. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
37. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
38. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
39. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
40. நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
42. இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
43. மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
44. கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
45. வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
46. ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
47. கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
48. சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
49. கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும்.
50. தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
51. தம்ளர் மோருடன் சிறிது பெருங்காயத்தூள்,உப்புச் சேர்த்து குடித்தால் சரியாகும்.
52. வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
53. சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.
54. ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
55. அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

விளாம் பழம் ஏராளமான மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது.

விளாம் பழம் ஏராளமான மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது.

1. பாம்புக் கடியின் வீரியத்தைக்கூட குறைக்க வல்லது. தசை நரம்புகளை சுருங்கச் செய்யும் சக்தி படைத்தது.

2. தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்துள்ள பழம். ரத்தத்தை விருத்தி படுத்துவதோடு, சுத்திகரிப்பும் செய்கிறது.

3. விளாம்பழத்தில் ‘வைட்டமின் பி2’ மற்றும் ‘வைட்டமின் ஏ’, சுண்ணாம்புச்சத்து (‘கால்சியம்’) அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுவடையச் செய்கிறது.

4. விளாம்பழ மரத்தின் பிசினைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

5. தயிருடன் விளாம் காயைப் பச்சடி போல் செய்து சாப்பிட்டால் வாய்ப்புண், குடல்புண் (அல்சர்) ஆறும்.

6. வெல்லத்துடன் விளாம்பழச் சதையைப் பிசறீ சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி விரைவில் நிவர்த்தியாகும்.

7. விளாம் பழத்துடன் பனங்கற்-கண்டைக் கலந்து சாப்பிட, பித்தக் கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலைச் சுற்றல் நீங்கும்.

8. தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்.
விளா மர இலையைத் தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க... வாயுத் தொல்லை மறையும்.

9. விளாங்காயை அரைத்து மோரில் கலந்து குடிக்க. நாள்பட்ட பேதி சரியாகும்.
விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மலம் இளக்கியாகிறது.

10. விளா மரப்பட்டையைப் பொடித்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்கவும். இந்தக் கசாயத்தை வடிகட்டிக் குடிக்க வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய்க் கசப்பு போன்றவை மாறும். பிரசவித்த பெண்களின் வயிற்று உள்ளுறுப்புகளுக்கு அதிக சக்தி கிடைக்கும்.

11. சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட ஜீரண சக்தி அதிரிகரிக்கும், நன்கு பசிக்கும் ஒவ்வாமை நோய், ரத்தப்போக்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.

12. பெண்களுக்கு மார்பகம், கருப்பையில் புற்றுநோய் வராமல் தடுக்கும். பழம் நல்ல வலி நிவாரணியாகச் செயல்படுகிறது. ஆரோக்கியத் தின்பண்டமாகவும். பித்த நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

13. இதன் கொழுந்து இலையை நீரில் போட்டுக் குடித்து வர வாயுத் தொல்லை ஒழியும். பித்தத்தைத் தணிக்கவும் இதன் இலை உதவுகிறது.

14. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாள்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும்  குணமாகும்.

15. பித்தத்தால் தலைவலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா நேரமும் வாயில் கசப்பு, அதிக வியர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்ற நிலை போன்றவற்றை விளாம் பழம் குணப்படுத்தும்.

16. விளாந்தளிர், நாரத்தைத் தளிர், கறிவேப்பிலை, எலுமிச்சை இலை இவற்றைச் சம அளவு எடுத்து உலர்த்திய பொடி, கடலைப் பருப்பு வறுத்து, பொடித்த பொடி தலா 100 கிராம், உப்பு 20 கிராம், மிளகு, வெந்தயம் தலா 10 கிராம் கலந்து உணவில் சேர்த்து சாப்பிட பித்தம் குணமாகும். நன்றாகப் பசி எடுக்கும். வாந்தி குணமாகும். உடலுக்கு ஊட்டமும் கிடைக்கும்.

17. விளாம் பிசினை உலர்த்தித் தூள் செய்து காலை  மாலை தலா ஒரு சிட்டிகை வெண்ணையுடன் கலந்து சாப்பிட வயிற்றுப் போக்கு மங்கையருக்கு வெள்ளைப்படுதல், நீர் எரிச்சல், மேக நோய், உள்ளுறுப்பு ரணம், மாதவிடாய் இம்சை ஆகியவை தீரும். இதற்கு உப்பு இல்லாப் பத்தியம் தேவை.

18. நீரிழிவு நோய்க்கு விளா வேர், ஆவாரை வேர், பூலா வேர், காட்டு மல்லி வேர், இலவங்கம் இவற்றை சம அளவு எடுத்து, எருமை மோரில் நன்கு வேக வைத்து, குறிப்பிட்ட அளவு தயிருடன் கலந்து அருந்தி வர விரைவில் குணம் தெரியும்.

பல் சார்ந்த நோய்கள்

பல் சார்ந்த நோய்கள் தீர மருத்துவம்
காட்டாமனக்கு இலையை கசாயம் வைத்து அரை டம்ளர் கசாயத்தில் ஒரு சிட்டிகை படிகார பஸ்பத்தை கலந்து காலை இரவு வாய் கொப்பளித்து வரபயோரியா எனும் பல்வேர் நோய் தீரும்
பல்லில் இருந்து இரத்தம் வடிதல் தீர
கடுக்காய் தோல்
சுக்கு
காசுக்கட்டி
இந்து உப்பு
கருவேலம்பட்டை ஆலம்பட்டை
இவைகளை சம அளவில் எடுத்து சூரனம் செய்து காலை மாலை பல் துலக்கி வர பல்லில் இருந்து ரத்தம் வருவது நீடிக்கும்

கத்தக்காம்பை தூள் செய்து 50 மில்லி கிராம் அளவுடன் 100 மில்லி கிராம் கருவ பட்டை தூள் செய்து 4 மணி நேரத்திற்க்கு ஒரு முறை கொடுத்து வர
குழந்தைகளின் செரியா கழிச்சல் குனமாகும் அதோடு சீதக்கழிச்சல் பல் சம்பந்தமான பிரச்சனை தொண்டை பிரச்சனை நாள்பட்ட புண்கள் ஆகியவை தீரும்
மகிழம்பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்க பல் வலி பல்லில் சீழ் இரத்தம் வடிதல் குனமாகும்
அம்மான்பச்சரிசி இலை சார்
மன தக்காளி இலை பழச் சார் இரன்டையும் சம அளவில் எடுத்து காலை இரவு உணவுக்கு முன் குடித்து வர வாய் புண் வாய்வேக்காடு குடல் புண் தீரும்
மரு.ரமேஷ் சிவன்
9043199315
கும்மிடிப்பூண்டி

Dengue alerts

Dengue etc images

Wednesday, October 24, 2018

சாப்பிட்டவுடன் படுக்காதே’ என வீட்டில் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். ‘ஏன் படுக்கக் கூடாது?’ எனக் கேட்டால், ‘அது உடலுக்கு நல்லது அல்ல…’

‘சாப்பிட்டவுடன் படுக்காதே’ என வீட்டில் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். ‘ஏன் படுக்கக் கூடாது?’ எனக் கேட்டால், ‘அது உடலுக்கு நல்லது அல்ல…’ என்று மட்டும் சொல்வார்கள். நாம் உட்கொள்ளும் உணவை செரிமானத்துக்கு உகந்ததாக மாற்ற, இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கிறது. சாப்பிட்டவுடன் படுக்கும்போது, இந்த அமிலம் உணவுக்குழாயில் பயணிக்க வாய்ப்பு அதிகம். அதாவது, மேல்நோக்கியும் பின்னோக்கியும் அமிலங்கள் போகும். இதனால், உணவுக்குழாய் பாதிக்கப்படும். இதற்காகத்தான் சாப்பிட்டவுடன் படுத்தால், உடலுக்கு நல்லது அல்ல என நம் பெரியவர்கள் சொன்னார்கள்.

இன்று, புற்றுநோயாளிகளில் 10 சதவிகிதம் பேர், உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு உணவுப் பழக்கம், வாழ்வியல் மாற்றம், மது, புகை போன்ற பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. மிருதுவான சவ்வினால் ஆன, குழல் போன்ற ஒரு பகுதி ஈசோபேகஸ். வாயில் மென்ற உணவை, வயிற்றுக்குக் கொண்டுசெல்லும் குழாய் இது. சாப்பிட்டவுடன் படுப்பதால், உணவுக்குழாயில் புண் (Esophagus reflux) ஏற்படுகிறது.

ஏன் உணவுக்குழாய் பாதிக்கப்படுகிறது?

வாயில் உணவை மெல்லும்போதே, 25 சதவிகிதம் செரிமானச் செயல்பாடு நடக்கத் தொடங்கிவிடும். உணவுக்குழாயில் எந்தவித அமிலச் சுரப்பிகளும் கிடையாது. இரைப்பையைத் தவிர, எங்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம் பட்டாலும், அது உணவுக்குழாயை அரிக்கத் தொடங்கும். இதனால், நெஞ்சு எரிச்சல் ஏற்படும்.

புகை, மது, சூடாகச் சாப்பிடுதல், சாப்பிடாமலேயே இருத்தல், தண்ணீர் குடிக்காமல் இருத்தல், புளிப்பு, உப்பு, காரம் அதிகமாகச் சாப்பிடுதல், குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், சூடான காபி, டீ குடித்தல் போன்ற காரணங்களால் உணவுக்குழாய் பாதிக்கும்.

மாத்திரைகளால் ஏற்படும் விளைவுகள்

நெஞ்சு எரிச்சல் பிரச்னைக்கு, நவீன மருத்துவத்தில் ஜெல் மருந்து, ஆன்ட்டாசிட் போன்ற மாத்திரைகளைத் தருகின்றனர். இந்த மருந்துகள் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே வேலை செய்யும். தொடர்ந்து எடுத்துவந்தால், ஒரு கட்டத்தில் அமிலத்தை சுரக்காமலேயே (HCL Secretion) செய்துவிடுவதுதான் இந்த மருந்துகளின் மிகப் பெரிய பக்கவிளைவு. மேலும், பசியின்மை, மஞ்சள் காமாலை, செரிமானப் பிரச்னை போன்றவையும் ஏற்படலாம்.

ஆஸ்பிரின், முஸ்லின் போன்ற மாத்திரைகள் உணவுக்குழாயை அரிக்கத் தொடங்கிவிடும். அப்போது, ரத்த வாந்தி வர வாய்ப்புகள் அதிகம்.

உணவுக்குழாயைக் காக்க…

காலை எழுந்ததும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் ஆரோக்கியத்தின் ஆரம்பம். இது, நம் உடலில் வாதம், பித்தம், கபத்தை சமன்படுத்த உதவும். காலை எழுந்தவுடன் திடமான உணவைச் சாப்பிடுவதுகூட உணவுக் குழாயைப் பாதிக்கலாம்.

மணத்தக்காளிக் கீரை, மாதுளை, வாழை,  பால், தண்ணீர்விட்டான் கிழங்கு, பரங்கிக்காய், பூசணி, வெண்பூசணி லேகியம், பிடிகருணை, சீரகத் தண்ணீர், வெந்தயம் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து காய்கறிகள், கனிகள், கீரைகள், சுத்தமான தண்ணீர் ஆகியவை உணவுக்குழாய் பிரச்னையைச் சரிசெய்யும்.

உணவுக்குழாயைக் காக்க 5 வழிகள்!

உணவை எப்போதும் மென்று தின்னும் பழக்கம் அவசியம்.

காலை எழுந்ததும் ஒரு கிளாஸ் நீர் அருந்த வேண்டும்.

சீரக நீர் பருகுவதால், உணவுக்குழாய் தொடர்பான பிரச்னை வராது.

நீர், நார்ச்சத்து உணவுகளைப் பிரதானமாக சாப்பிடுவது நல்லது.

சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது. குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது இடைவெளி வேண்டும்.

“காலையில் இஞ்சி… நண்பகல் சுக்கு… மாலை கடுக்காய்… ஒரு மண்டலம் உண்ண வயோதிகனும் வாலிபன் ஆவானே” என்ற சித்தரின் வாக்குப்படி, காலையிலே உண்ணும் உணவுதான், உணவுக்குழாய்க்கு நாம் கொடுக்கும் முதல் உணவு.

கற்றாழை: காலையில் முதல் உணவாகப் பருகும்போது, இதில் உள்ள கொலஜன் மற்றும் ஃபைபர், புண்களைக் குணமாக்கிவிடும். எரிச்சல் உணர்வை நீக்கும். ஆன்டிகேன்சர் மற்றும் ஆன்டி டியூமராக கற்றாழை செயல்படுகிறது.

வெள்ளரி: வெள்ளரியில் உள்ள நீர்ச்சத்து, நார்ச்சத்து, உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும். உணவுக்குழாய் தொடர்பானப் பிரச்னையைச் சரிசெய்யும்.

இஞ்சி: இதில் உள்ள ஃபினாலிக் காம்பவுண்ட்ஸ், உணவுக்குழாய் மற்றும் வயிறு தொடர்பான புற்றுநோய்களை வரவிடாமல் செய்யும். உமிழ்நீர் சுரக்க உதவும். செரிமான செயல்பாடு எளிதாகும்.

உணவுகுழாய் புண்களை சரிசெய்யும் ஜூஸ்!

தேவையானவை: வெள்ளரிக்காய் – 1, இஞ்சி – சிறிதளவு, கற்றாழை – 3-4 துண்டுகள், இந்துப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெள்ளரி, இஞ்சி, கற்றாழை ஆகியவற்றைத் தோல் நீக்கிக்கொள்ள வேண்டும். கற்றாழையை 10 முறைகளாவது, குழாய் நீரில் நன்கு கழுவ வேண்டும். இதனால், அதன் கசப்புச் சுவை நீங்கும். மூன்றையும் துண்டு துண்டாக நறுக்கி, மிக்ஸியில் அரைத்து, வடிகட்ட வேண்டும். இதில், சிறிதளவு இந்துப்பு சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்: வெறும் வயிற்றில் இந்த ஜூஸைப் பருகிவர, உணவுக்குழாய் புண், அல்சர், நெஞ்சு எரிச்சல் ஆகியவை குணமாகும். காலையில் இஞ்சி சேர்ப்பதால், வயோதிகம் தொடர்பான பிரச்னைகள் அனைத்தும் மறைந்துவிடும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும். செரிமான சக்தி மேம்படும். சாதாரண உப்பு, புண்களை மேலும் தீவிரப்படுத்தலாம். ஆகையால், இந்துப்பு எனும் ‘ஹிமாலயன் சால்ட்’ சேர்ப்பது, புண்கள் குணமாக உதவும். இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என, செரிமான மண்டலத்தில் வாய் முதல் ஆசனவாய் பகுதி வரை உள்ள பிரச்னைகளைச் சரிசெய்யும் திறன் இதற்கு உள்ளது.

திடீரென்று கார் பிரேக் பிடிக்கவில்லை - என்ன செய்வது?*

*அதிகம்பகிருங்கள்.*
*ஆபத்துக்குஉதவும்*

*திடீரென்று கார் பிரேக் பிடிக்கவில்லை - என்ன செய்வது?*

முதலில் மோட்டாரில் கெட்டிக்காரன் எவனுமில்லை என்பதில் இந்த பதிவினை ஆரம்பிக்க விரும்புகிறேன்...
எனது கார் ஒன்றில் சமீபத்தில் 70km/hr வேகத்தில் சென்றுகொண்டிருந்த போது திடீரென்று பிரேக் பிடிக்கவில்லை!

முன்னும் பின்னும் பேருந்துகளும் இருசக்கர வாகனங்களும் செல்கின்றன!!!

முதலில் நான் பதட்டப்படாமல் பிரேக் பெடலை பம்ப் செய்து பார்த்தேன், பிரேக் ஆயில் குறைவு ஏதும் இருந்தால் பம்ப் செய்தால் பிரேக் பிடித்து விடும்...

பம்ப் செய்வது என்பது பிரேக் பெடலினை திருபத்திரும்ப வேகமாக மிதித்து ரிலீஸ் செய்வதுதான்.
பம்ப் செய்தும் பிரேக் பிடிக்கவில்லை!

பின் சாலையின் சூழலை வேகமாக பார்த்து இடைவெளிகளையும் வாகனங்கள் செல்லும் வேகத்தையும் கணித்துக்கொண்டு வேகமாக கியரை ஒவ்வொன்றாக குறைத்துக்கொண்டே முதல் கியருக்கு கொண்டு வந்தேன்....

அதே சமயம் வாகனத்தை பிற வாகனங்களில் மோதிவிடாமல் இடைவெளிகளை நோக்கி திருப்பி ஹெட்லைட் அமத்தியமத்தி எரியவிட்டு ஹாரனை அடித்து சாலையில் அனைவருக்கும் எச்சரிக்கை சமிக்கைகள் செய்துகொண்டே  ஓட்டினேன்...

  பிறகு ஹேன்ட் பிரேக்கை (எமர்ஜென்சி பிரேக்/ பார்க்கிங் பிரேக்) மெதுவாக இழுத்தேன்...

வாகனம் கட்டுப்பாட்டிற்குள் வந்து நின்றது...

செய்யக்கூடாதவை :
வண்டி பிரேக் பிடிக்கவில்லை என்றவுடன் பதட்டப்பட்டு வேகமாக ஹேன்ட் பிரேக்கை இழுத்தால் வயர் கட்டாகிவிடும்...

படிப்படியாக முதல் கியருக்கு கொண்டு வந்தபின்தான் ஹேன்ட் பிரேக்கை இழுக்க வேண்டும்...

ஹேன்ட் பிரேக் ஒன்றுதான் சேதாரத்தை குறைக்க ஒரே வழி......

இதுபோன்ற சூழல்களில் சீட் பெல்ட் போடாமல் இருந்தால் ஸ்டெரிங்கில் நெஞ்சு அடிபடவோ, கண்ணாடியில் தலை அடிபடவோ வாய்ப்புகள் இருக்கிறது!

சிலர் தங்கள் வாகனங்களில் ஹேன்ட் பிரேக் பழுதாகி பிடிக்காமல் இருப்பதை சரி செய்யாமல் இருப்பர்!

ஹேன்ட் பிரேக் அவசர காலங்களில் உயிரை காக்கக் கூடியது என்பதை உணர்ந்து பழுதுபார்க்கவும்..

எக்காரணம் கொண்டும் வண்டி ஓட்டும் போது எதிர்பாராத சூழல்களில் பதட்டப்படாமல் இருக்கவும்..

முடிந்த அளவு முன் செல்லும் வண்டிக்கு பின்னால் போதிய இடைவெளியில் வண்டியை ஓட்டவும்.

அவசர காலங்களில் உயிரை காக்கக் இந்த இடைவெளி ரொம்ப முக்கியம்...

தினமும் உங்கள் வண்டியில் பிரேக் ஆயில் அளவு, பிரேக் ஆயில் டியுப், டயரின் காற்றளவு, தேய்மானம் ஆகியவற்றை சரி பார்க்கவும்..

கண்டிப்பாக சீட் பெல்ட் அணிந்துகொண்டு வண்டியை ஓட்டவும்...

மறந்துவிடாதீங்க வண்டி ஒட்டிக்கிட்டு போகும்போது பிரேக் பிடிக்கவில்லை என்றால்....

1) பதட்டப்படாமல் இருத்தல்

2) சாலையின் சூழலை நன்கு பார்த்தல்

3) ஹார்ன் அடித்து எச்சரிக்கை செய்தல்

4) கியரை படிப்படியாக குறைத்து முதல் கியருக்கு கொண்டு வருதல்

5)மெதுவாக ஹேன்ட் பிரேக்கை இழுத்தல்

6)ஓரமாக வண்டியை நிறுத்துதல் வேண்டும்...

ஷேர் பண்ணுங்க உங்களுக்கும் உங்க நண்பர்களுக்கு எப்பொழுதாவது உதவலாம்!

🙌🏻 🤝🏻

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...