Sunday, September 2, 2018

மூச்சுக்காற்றே மூலதனம்

மூச்சுக்காற்றே மூலதனம்

காலையில் முழித்த முகம் சரியில்லை! எடுத்த காரியம் எதுவும் நடக்கவில்லை! என்று அலுத்துக் கொள்வோர்களும், இன்றைக்குக் கழுதை முகத்தில் முழித்திருப்பான் போலிருக்கிறது! அதிர்ஷ்டக்காரன், அவனுக்கு அடித்தது, யோகம் என்று வியந்து போவோரும் இருக்கின்றார்கள்.

ஆனால், காலையில் தூங்கி எழும்போதே அன்றைய தினம் எப்படி இருக்கும்! எப்படி இருந்தால் தனக்கு நன்மை உண்டாகும் என்பதை அறிந்து செயல்படுபவர்கள் குறைவு. நாம் நமது மூக்கின் வழியாக விடுகின்ற மூச்சுக்காற்று நம்மை ஆக்குகின்றது. நம்மை ஆள்கின்றது. நம்மை வழி நடத்துகின்றது.
நம்மைப் பற்றியும் நம் உடம்பைப் பற்றியும் முன்னறிவிப்பு செய்யும் மணியாக மூக்கையும் மூச்சையும் குறிப்பிடலாம்.

படுக்கையிலிருந்து எழ வேண்டிய நேரம் அதிகாலை 4.00 மணி. 4.00 மணி என்பது மிகவும் முக்கியமான நேரமாகும். அதிகாலை 4.00 மணிக்கு எந்த நாசிப்பக்கமாக மூச்சு வெளிவருகிறது என்பதைக் கவனித்தால், அன்றைய பொழுதில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மூக்கிலிருந்து வெளிவருகின்ற மூச்சு முறையாக இல்லாமல் தாறுமாறாக இருக்குமேயானால், மதங்கொண்ட யானையைப் போல் தாறுமாறாக நடந்து இன்பங்களை இழந்து துன்பங்களைச் சம்பாதித்துக் கொள்ளவேண்டியிருக்கும். ஒவ்வொரு நாளும் நாம் விடுகின்ற மூச்சு, மூக்கின் இரண்டு நாசிகளில் ஒரு பக்க நாசியில் வெளி வர வேண்டும்.

மூக்கில் விடுகின்ற மூச்சுக்காற்று முறையாக வெளிவர முதலில் இடது பக்கத்து நாசி வழியாக உள்ளுக்கு இழுத்து வலது பக்க நாசி வழியாக வெளியிட வேண்டும். அடுத்து, வலது பக்க நாசி வழியாக உள்ளுக்கு இழுத்து இடது பக்கத்து நாசி வழியாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு, காலையிலும் மாலையிலும் 21 முறை செய்து பழக வேண்டும். அவ்வாறு செய்தால், மூக்கிலும் மூச்சுக் குழாயிலும் நுரையீரலிலும் உள்ள அடைப்புகளும், சளியும் வெளியேறிவிடும். அதன் பின் மூச்சுவிடுவது இயல்பாக இருக்கும்.

அடுத்ததாக, அதிகாலையில் விழித்தெழுந்து மூக்கில் எந்த நாசி வழியாக மூச்சுக்காற்று வெளியே வருகிறது என்று பார்க்க வேண்டும்.
அதிகாலையில் எந்தப்பக்கத்து நாசி வழியாக மூச்சுக் காற்று வெளிவருகிறது என்பதைக் கொண்டு, அன்றைய தினம் நமது உடம்பு எவ்வாறு இருக்கும் என்பதை முன்னரே அறிந்து கொள்ளலாம்.

வலது நாசி என்பது சூரிய கலை.
இடது நாசி என்பது சந்திர கலை.

ஒவ்வொரு நாளும் அதிகாலை நான்கு மணிக்கு அன்றைய பொழுதின் உடல் நலம் தொடங்குகிறது. அன்றைய பொழுதின் உடல் நடத்தை அதிகாலையிலேயே கண்டறிந்து கொண்டு, அதற்கு வேண்டிய மாற்ற நடவடிக்கைகளைச் செய்து கொண்டால், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல, அதிகாலையிலேயே முடிந்துவிடும்.
எப்படியென்றால், வார நாள்களில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய இம்மூன்று நாள்களில் அதிகாலை நான்கு மணியிலிருந்து காலை ஆறு மணி வரை இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும்.

ஞாயிறு, செவ்வாய், சனி ஆகிய இம்மூன்று நாள்களில் வலது பக்க நாசி வாயாக மூச்சு வெளிவர வேண்டும்.
வார நாள்கள் எனில் வியாழக்கிழமை மிகவும் முக்கியமான நாளாகும். மற்ற ஆறு நாள்களைப்போல வியாழக்கிழமையில் மூச்சு விட முடியாது.
வியாழக்கிழமை அன்று பௌர்ணமியாக இருந்தால், அதிகாலை நான்கு மணிக்கு இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும்.

வியாழக்கிழமை அன்று அமாவாசையாக இருந்தால் இடது நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும்.
இவை இரண்டும் இல்லாமல் வளர்பிறையாக இருந்தால் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும்.
தேய்பிறையாக இருந்தால் வலது பக்க நாசி வாயாக மூச்சு வெளிவர வேண்டும்.

மேலே கூறியது கூறியவாறு மூச்சு வெளிவந்து கொண்டிருந்தால் அந்த ஏழு நாள்களும் உடல் நலமும் மன நலமும் சீறாக இருக்கும். எவ்விதமான நோய்நொடிகளும் அண்டாமல் இருக்கும்.
அதற்கு மாறாக, நடந்தால் என்ன நடக்கும் என்பதைக் காண்பதற்கு முன் ஒரு சிறிய இடைவேளை.
ஞாயிறு அன்று காலையில் வலது பக்க நாசியில் மூச்சு வெளிவராமல் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், தலைவலி, சளி, இருமல், ஈளை, மூச்சடைப்பு நோய்கள் உருவாகும்.

திங்கள் அன்று காலையில் இடது பக்க நாசியில் மூச்சு வெளிவராமல் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவந்தால், ஜலதோசம், ஆஸ்துமா, தும்மல் நோய்கள் உண்டாகும். செவ்வாய் அன்று காலையில் வலது பக்க நாசியில் மூச்சு வெளிவராமல் இடது பக்க நாசி வழியாக மூசு வெளிவந்தால், காய்ச்சல், கண் எரிச்சல், நெஞ்செரிச்சல், பித்த மயக்கம் ஆகியவை ஏற்படும். புதன் அன்று காலையில் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவராமல் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், உடல் வலி, கைகால் குடைச்சல், மூட்டுவலி, நீரேற்றம், தலைக்குத்தல் போன்ற நோய்கள் உருவாகும். வியாழக்கிழமை நாளில் பௌர்ணமி, அமாவாசை, வளர்பிறை, தேய்பிறை ஆகியவை இருந்தால், முறையே இடது நாசி, வலது நாசி, இடது நாசி, வலது நாசி ஆகிய நாசி வழியாக மூச்சு வெளிவரவேண்டும். அதற்கு மாறாக வெளிவந்தால், அடி வயிற்றில் நோயுண்டாகும். பெண்களுக்குக் கருப்பைக் கோளாறு ஏற்படும். மலட்டுத் தன்மை உருவாகும். இல்லற உறவு கசந்து போகும். வெள்ளி அன்று காலையில் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவராமல் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், கண் வலி வரும். கண் நோய் உண்டாகும். பார்வை குறையும். சனி அன்று காலையில் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவராமல் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், குளிர் கரம், சரும நோய், குட்டம் போன்ற நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு.
மூக்கின் வழியாக வருகின்ற மூச்சுக்காற்று தடம் மாறி நடந்தால் உடல்நலம் மட்டுந்தான் பாதிக்கும் என்றில்லை. மன நலமும் பாதிக்கும். மன நலத்தில் ஏற்படுகின்ற பாதிப்பினால், உற்றார் உறவினர்களுடன் பழகும் பழக்கங்களும் பாதிக்கும். அதனால், உறவு முறிவுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

வார நாள்களில் விடுகின்ற மூச்சுக்காற்று தடம்மாறினால் உடல் நலத்தில் குறைபாடுகளும் நோய்களும் உருவாகி, அவற்றின் ஆதிக்கத்தினால் உடல் நலம் பாதிக்கும். உறவும் தொழிலும் உடன்படாமல் எதிர்மறையாகச் செயல்படும். கசப்பும் இழப்பும் வாழக்கையைத் தடம் புரளச் செய்துவிடும்.
இன்பத்துக்கும் துன்பத்துக்கும் காரணமானது மூச்சுக்காற்று. அது, நாள்தோறும் விடியற்காலையில் எவ்வாறு இயங்குகிறது என்பதைக் கொண்டு அன்றைய பொழுதின் ஆரோக்கியத்தை, மன வளத்தை அறிந்து கொள்ளலாம்.

மூச்சுக்காற்று எந்த நாசியில் இயங்குகிறது என்பதைக் கண்டறிந்து அன்றைய பொழுது எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்வது மட்டும் உடல் நலத்தைப் பேணுவது ஆகாது.

தீங்கும் தீமையும் வரப்போகிறது என்றறிந்து கொண்டு வருவது வரட்டும்! ஒரு கை பார்த்துக் கொள்ளலாம்! என்றிருப்பது அறிவுடமையுமாகாது. எந்தச் செயலுக்கும் ஒரு மாற்று இருப்பதைப் போல, எல்லாவற்றுக்கும் தீர்வு என்பது இருக்கும் என்பதை உணர்ந்து அந்தத் தீர்வு என்ன என்று அறிய முற்பட வேண்டும்.

மூச்சுக்காற்று அதன் இயல்புக்கு மாறாக நடக்கத்தொடங்கும் போதே அதனை மாற்றுவதற்கான தீர்வைச் செய்து முறையாக இயங்கச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் தீங்கும் தீமையும் நீர்த்துப் போகும்.
கிழமைக்கு ஏற்றவாறு நாசியின் வலப்புறமோ அல்லது இடப்புறமோ இயங்குகின்ற மூச்சானது, சுமார் ஒரு மணி நேரம் வரை இயங்கிவிட்டு அடுத்த நாசிக்கு மாறிவிடும்.
அதிகாலை நான்கு மணி என்பது அன்றையப் பொழுதின் தொடக்க நேரம் என்று முன்னரே சொன்னோம். அந்த நேரத்தைக்குறிப்பிடவே 'வைகறை துயில் எழு’ என்று கூறப்பட்டுள்ளது.

சூரியகலை சூரியனின் ஆதிக்கத்தில் இயங்குகிறது. இது வெப்பமானது. சந்திரகலை சந்திரனின் ஆதிக்கத்தில் இயங்குகிறது. இது குளிர்ச்சியானது. குளிர்ச்சியும் வெப்பமும் உடலுக்குத் தேவை என்பதால் அவை இரண்டும் மாறி மாறி இயங்கி உலைப் பாதுகாக்கின்றன.
வெப்பம் மிகுந்தாலும் நோயாகும். குளிர்ச்சி மிகுந்தாலும் நோயாகும். அவை இரண்டும் சம அளவில் இயங்கிக் கொண்டிருந்தால், அல்லது இயங்கச் செய்து கொண்டிருந்தால் நோய் என்னும் பேச்சுக்கே இடமில்லை.
அதிகாலையில் எழுந்திருந்த காலைக்கடன்களை முடித்து விட்டு, முகத்தைச் சுத்தம் செய்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், நாசிக்குக் கீழே கையை வைத்து எந்த நாசியின் வழியாக மூச்சுக்காற்று வந்து போகிறது என்பதைச் சோதிக்க வேண்டும்.

அதன் பிறகு, அன்றைய கிழமை என்ன, அக்கிழமையன்று எந்த நாசியின் வழியாக மூச்சு இயங்க வேண்டும் என்றறிந்து ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, ஞாயிற்றுக்கிழமை அன்றைக்கு வலப்புற நாசி வழியாக மூச்சுக்காற்று இயங்க வேண்டும். அன்றைக்கு அதிகாலையில் வலப்புறத்தில் இயங்கினால் தோஷமில்லை. மாறாக இடப்புறமாக இயங்குகிறது என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்ய வேண்டும்?
போர்வை, சமுக்காளம் போன்ற துணியைத் தரையில் விரித்துக் கொண்டு, அதன் மீது பத்ம ஆசனம் போட்டு அமர்ந்து கொள்ள வேண்டும். பத்மாசனம் போட முடியாவிட்டால் சுகாசனம் போட்டு அமர்ந்து கொள்ளலாம்.

சுகாசனம் என்பது சாப்பிடும்போது உட்காருவதுபோல் உட்கார்வது. அவ்வாறு உட்கார்ந்து கொண்டு வலது கையின் கட்டை விரல் மோதிர விரல் ஆகிய இரண்ட மட்டும் நீட்டிக் கொண்டு மற்ற மூன்று விரல்களையும் உட்புறமாக மடக்கிக் கொண்டு, கட்டை விரலை வலப்புற நாசியிலும் மோதிர விரலை இடப்புற நாசியிலும் மூக்கைச் சிந்தும்போது வைப்பது போல் வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது, கட்டை விரலால் வலப்புற நாசியை அமுக்கி மூச்சு வராமல் அடைத்துக் கொண்டு இடப்புறத்து நாசி வழியாக மூச்சை மெதுவாக உள்ளுக்குள் இழுக்க வேண்டும். அவ்வாறு இழுக்கும் நேரம் அரை நிமிடம் என்று வைத்துக் கொள்வோம்.

மூச்சை இழுத்தவுடன் மோதிர விரலால் இடப்புறத்து நாசியை அடைத்துக் கொண்டு, கட்டை விரலை எடுத்து விட்டு, வலப்புற நாசி வழியாகக் காற்றை வெளியே விட வேண்டும். மூச்சை வெளியே விடும்போது, இடப்புறமாக மூச்சை இழுக்கும்போது ஆகும் நேரம் அரை நிமிடத்தைப் போல இரண்டு மடங்கு நேரம் (ஒரு நிமிடம்) மூச்சை மெதுவாக வெளியே விட வேண்டும்.

அடுத்து, வலப்புற நாசி வழியாக மூச்சை வெளியே விட்டதும், அந்த நாசியின் வழியாகவே மூச்சை அரை நிமிட நேரம் அளவுக்கு உள்ளே இழுக்க வேண்டும்.
காற்று உள்ளே சென்ற வலப்புற நாசியைக் கட்டை விரலால் அடைத்துக் கொண்டு, இடப்புறத்தை அடைத்துக் கொண்டிருக்கும் மோதிர விரலைத் தளர்த்திக் கொண்டு ஒரு நிமிட நேரம் அளவுக்கு உள்ளே சென்ற காற்றை மெதுவாக வெளியே விட வேண்டும்.
இவ்வாறு, வலப்புறமும் இடப்புறமும் மாறி மாறி விட வேண்டும். வலது புறத்திலும் இடது புறத்திலும் மூச்சு விடுவது ஒன்று எனக் கணக்கிட்டு, இருபத்தொரு முறை விட வேண்டும்.

அவ்வாறு செய்த பின்பு, சிறிது நேர ஓய்வுக்குப் பின்பு நாசியைச் சோதிக்க வேண்டும். அப்போது, இயல்பாக வரவேண்டிய வலது புறத்து நாசி வழியாக மூச்சு வர வேண்டும்- அப்போதும் இடது புறத்து வழியாகவே மூச்சு வந்து கொண்டிருந்தால், கவலைப்படவேண்டாம்.
விரித்து வைத்துள்ள துணியின் மீது, தெற்கில் தலையை வைத்துப் படுத்துக் கொள்ளலாம். இடது கையை மடக்கி தலைக்கு வைத்துக் கொள்ளலாம். உள்ளங்களையில் காதைவைத்து படுத்துக் கொள்ளவும். இடது காலை மடக்கி வலது காலை நீட்டிக் கொள்ளவும். வலது கை வலது தொடையில் இருக்குமாறு நீட்டிக் கொண்டு, பத்துப் பதினைந்து நிமிடங்கள் படுத்திருந்தால், மூச்சு இடது கலையிலிருந்து மாறி வலதுக்கு வந்துவிடும்.

மேலும் மற்றொரு முறை சுவர் ஓரமாக நின்று கொண்டு இடது காலைத் தூக்கி வலது கால் தொடை மீது வைத்துக் கொள்ளவும். கை இரண்டையும் ஒன்றாகச்¢சேர்த்து கும்பிடுவதுபோல வைத்துக் கொண்டு, கையைத் தலைக்கு மேலே நீட்டிக் கொள்ளவும். இதற்கு நின்ற பாத ஆசனம் என்று பெயர். இந்த ஆசனத்தில் ஐந்து நிமிடம் நின்றால் மூச்சு இடகலையிலிருந்து வலதுக்கு மாறிவிடும்.
இவ்வாறு கலையை மாற்றிக்கொண்டால், அன்றைய பொழுது ஆனந்தமாக இருக்கும்.
கால் மேல் கால்:
ஒரு சிலர் எந்த இடத்தில் அமர்ந்தாலும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.
பெரியவர்கள் முன்னிலையில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு அமரக் கூடாது! அது மரியாதைக் குறைவு என்றெல்லாம் கூறப்பட்டாலும், யார் எதைச் சொன்னாலும் நான் அப்படித்தான் உட்காருவேன் என்று, உட்காருவோரும் இருக்கின்றார்கள்.
வலது காலின் பெரு விரலிலிருந்து சூரிய கலையும், இடது காலின் பெருவிரலில் இருந்து சந்திர கலையும் தொடங்குகிறது என்பதால், வலது காலைச் சூரியனாகவும் இடது காலைச் சந்திரனாகவும் கருதலாம்.
உட்காரும் போது வலது கால் இடது காலின் மீது போட்டுக் கொண்டு அமர்ந்தால் சூரிய ஆற்றல் மிகும். இடது கால் வலது காலின் மீது போட்டுக் கொண்டு அமர்ந்தால் சந்திர ஆற்றல் மிகும்.
எப்போதும் வலது காலை இடது கால் மீது போட்டுக் கொண்டு அமர்கின்றவர்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். இடது காலை வலது கால் மீது போட்டுக் கொண்டு அமர்கின்றவர்கள் சாந்தமானவர்களாக இருப்பார்கள்.

இருக்கையில் அமரும் போது அப்படி அமரலாம். தரையில் அமரும் போது என்ன செய்யலாம்?
தரையில் அமரும் போதும் முதலில் இடது காலை மடக்கிக் கொள்ளவும். அடுத்து வலது காலைத்தூக்கி இடது கால் மீது போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டால் சூரிய ஆற்றல் கிடைக்கும்.

🚶🏽‍♂HAROON SB

கொழுப்புகள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கொழுப்புகள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது.

கூடுதல் உடல் பருமனுக்கான காரணங்கள்:
அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளல், குறைவான சக்தியைச் செலவிடல், அதிக சக்தி தரும் உணவுகளை உட்கொள்ளல் (இனிப்புகள்/ ஐஸ்-கீரிம்/ குளிர்பானங்கள்), மதுப் பழக்கம் போன்றவற்றால் கூடுதல் பருமன் ஏற்படுகிறது. வயது மற்றும் பரம்பரைக் காரணிகளும்கூட உடல்பருமனுக்குக் காரணங்கள். தைராய்டு சுரப்புக் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பு அதிகரிப்பதாலும் உடல் பருமன் அதிகரிக்கும். கூடுதல் உடல்பருமனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வாதம், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன.

உடல்பருமனுக்கு எளிய சித்த மருத்துவம்:

இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol) ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.

கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.

சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.

பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.

எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள் ஸ்பூனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.

சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:

தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.

நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:

இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள்.

தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.

🚶🏽‍♂HAROON SB

திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து

திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து

இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் முக்கியம். அதைப்போல் நமது பிரச்சனைகளை சரியாகத் தீர்க்கும் விதமாக எதையும் கையாள வேண்டியுள்ளது. இதற்கு உடலும் உள்ளமும் முழுத் தகுதியுடன் இருந்தால் தான் இவை சாத்தியமாகும். உடலும் உள்ளமும் முழுத்தகுதியுடன் விளங்குவதற்கு, அன்றாட வேலைகளை ஒரு ஒழுங்கு முறையுடன் செய்து வர வேண்டும். முறையான மற்றும் கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையை உடலளவில் மிகவும் வசதியான முறையில் வாழ்கிறோம். ஆனால், மனதளவில் மிகவும் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை தான் வாழ்கிறோம். இத்தகைய வாழ்க்கை முறை சீக்கிரமாகவே முதுமையாக உணர வைத்து விடும் அல்லது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

திரிபலா என்றால் என்ன?

திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் (Emblica officinalis),கடுக்காய் (Terminalia chebula) மற்றும் தான்றிக்காய் (Terminalia belerica) ஆகும்.

திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?

திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.

நோய் எதிர்ப்புச் சக்தி

ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் 'ஆன்டிபாடி' (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்

உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான "கட்டற்ற காரணிகளை" (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.

செரிமானமின்மை

செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.

மலச்சிக்கல்

திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.

வயிற்றுப் பூச்சிகளும் தொற்றுகளும்

வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.

இரத்தசோகை

இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்).

சர்க்கரை நோய்

திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் (langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது.

உடல்பருமன்

இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.

சருமப் பிரச்சனைகள்

இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.

சுவாசக் கோளாறுகள்
சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சைனஸ் என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. மேலும் நமது சுவாசப்பாதையிலுள்ள சளியில் பாக்டீரியாக்கள் வளராமலும் இது தடுக்கிறது.

தலைவலி

தலைவலிக்கு நிவாரணமாகவும் திரிபலா பயன்படுகிறது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது.

புற்று நோய்

புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் (metastasis) வளரும் அபாயத்தையும் குறைக்கிறது.

🚶🏽‍♂HAROON SB

முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய* கீரையாகும்.

முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய* கீரையாகும்.

தமிழ்நாட்டு கிராமங்களில், குறிப்பாக தஞ்சை மாவட்ட கிராமங்களில் எல்லோர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.

இதை தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.
குறைந்தது மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.

கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

பிரசவம் என்றாலே மகப்பேறு மருத்துவமனைகள் பல ஆயிரம் பணச் செலவு

> என்றாகிவிட்ட இந்தக்காலத்தில் சுகப்பிரசவம் ஆக முடக்கற்றான் இலையைத் அம்மியில்
> வைத்து மை போல் மைய அரைத்து, பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில்
> கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ,
> களைப்போ தோன்றாது. இது கை கண்ட முறையாகும்என்றால் யாராவது நம்புவார்களா
> ஆனாலும் இதை பதிவு செய்துவிடுகிறேண்..
> மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக -: வாரம் ஒருமுறை முடக்கற்றான் இரசம்
> வைத்துச் சாப்பிட்டு வந்தால்உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு,
> வாதம்,மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.

> ரசம் தயாரிக்க ஒரு சின்ன டிப்ஸ்
> கை பிடியளவுமுடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு டம்ளரளவு தண்ணீர்
> விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம்
> வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து இரசம்
> தயாரிக்க வேண்டும்.
> மலம் சரிவரபோக ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை வெள்ளைப் பூண்டு
> பற்களில் ஐந்து நசுக்கி இதில் போட்டு அரைது தேக்கரண்டி அளவு மிளகை
> ஒன்றிரண்டாகஉடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு
> அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சியகஷாயத்தை வடிகட்டி
> விடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால்
> ஒரு எலுமச்சப் பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம்
> சாதம்மட்டும் சாப்பிடலாம்.
> மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்ப்பட முடக்கற்றான் இலையை வதக்கி அடி
> வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு பெண்களுக்கு ஒழுங்காக வரும்.
> மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி சுண்ணாம்பு,
> பாஸ்பரம் படிவங்கள்தான் பாரிச வாயு எனும் கைகால் முடக்கு வாதம் ஆகும்
> இவைகளைத் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.
> வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம்
> ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து
> வரவும் பின் முடி கொட்டுவது நின்று விடும் நரை விழுவதை தடுக்கும்.
> கருகருவென முடி வளர தொடங்கும்
> இதன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கீல்களில் வரும் வாதத்திற்கு
> வீககத்திற்க்கு வைத்துக் கட்ட குணமாகும் .

🚶🏽‍♂HAROON SB

ஃப்ரிட்ஜில் உள்ள தீமைகள்!

ஃப்ரிட்ஜில் உள்ள தீமைகள்!

முடிந்தவரை எந்த காய் கனிகல் கீரைகளை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டாம் இயற்கை உணவை இயற்க்கையாகவே உண்ணவும் பதப்படுத்த வேண்டாம்

ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே ஃப்ரிட்ஜில் பதப்படுத்த வேண்டும். எல்லா வகையான உணவுகளையும் பதப்படுத்துவதால் அது உங்கள் முழு ஆரோக்கியத்தையும் கெடுத்து உடல் உபாதைகளை தரும். ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரியான் என்ற வாயு பதப்படுத்தும் காய்கறி மற்றும் பழங்களுக்குள் ஊடுருவி அவற்றின் தன்மையை மாற்றி விடும். மேலும் இவற்றின் மீது ஏதேனும் கிருமிகள் ஒட்டி கொண்டு இருந்தால் அதனையும் அதிக காலம் உயிர் வாழ செய்யும்.

தக்காளியை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா?

தக்காளியை ஃப்ரிட்ஜில் வைத்து சமைத்து உண்டால் அதன் தன்மை முற்றிலும் மாறி சக்கைக்கு ஈடாகி விடும். சிலர் தக்காளியை பல நாள் அப்படியே இருக்க வேண்டும் என்பதற்காக ஃப்ரிட்ஜில் வைப்பார்கள். இது அவற்றில் உள்ள என்சைம்களில் வேதி வினை புரிந்து மாற்றி விடுகிறது. அத்துடன் இதில் உள்ள 65 % ஊட்டசத்துக்கள் குறைந்தும் விடுகிறது. ஃப்ரிட்ஜில் வைத்த தக்காளியில் சுவை குறைந்து, மணம் இல்லாதவாறு மாறிவிடும். அதிக நாள் ஃப்ரிட்ஜில் வைத்த தக்காளியை சமைத்து சாப்பிட்டால் சில சமயங்களில் குடல் சார்ந்த பிரச்சினைகள் கூட வரலாம்.

தக்காளிக்கு மட்டும்தானா இது?

பொதுவாக ஃப்ரிட்ஜில் காய்கறிகள் மற்றும் பழங்கள் வைப்பது அவற்றின் ஊட்டச்சத்துக்களின் தன்மையை குறைத்து விடும். ஃப்ரிட்ஜில் வைப்பதால் பழத்தின் தன்மை மாறி, தோல் இறுகி விடும். இவற்றின் சுவை மற்றும் அமிலத்தில் மாற்றம் பெரும். இதனால் நல்ல ஆரோக்கியமான உணவு நன்மையற்ற பொருளுக்கு சமமாக கருதப்படும். தக்காளியை மட்டும் ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது என்றில்லை, இதை போன்றே பல்வேறு உணவு வகைகளை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.

ஃப்ரிட்ஜில் வைக்க கூடாதவை.

மூலிகைகள் போன்றவற்றை கட்டாயம் ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது. ஏனெனில் அவற்றின் மருத்துவ தன்மை மாறக்கூடும். மேலும் சில சமயங்களில் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும். அவகேடோ, வாழைப்பழம், எலுமிச்சை, ஆப்பிள், பெரிஸ் போன்ற பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்க தவிர்க்க வேண்டும். வெங்காயம், தக்காளி, உருளை கிழங்கு, பூண்டு, மிளகு, வாசனை பொருட்கள், ஜாம், ஊறுகாய், பிரட் ஆகியவற்றையும் பதப்படுத்த கூடாது.

ஃப்ரிட்ஜில் தட்பவெப்பம்.

எந்த வகை ஃப்ரிட்ஜாக இருந்தாலும் குறிப்பிட்ட அளவே அதன் தட்பவெப்பம் இருத்தல் வேண்டும். அதிக படியான தட்பவெப்பம் உணவு பொருட்களின் தன்மையை மாற்றி விடும். உணவுகள் நீண்ட நாட்களுக்கு பதப்படுத்தப்பட்டு அதன் பிறகு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எந்த உணவாக இருந்தாலும் அதற்கென்று சில கால அளவு இருக்கிறது. அதே போல் ஒவ்வொரு உணவிற்கும் தனி தனி தட்பவெப்பமும் உள்ளது. அதற்கேற்றாற் போல ஃப்ரிட்ஜின் தட்ப வெப்பத்தை வைத்தல் சிறந்தது.

எது சிறந்தது?

எப்போதும் சுத்தமான ஃபிரெஷ் உணவுகளே உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. காய்கறிகள் என்றாலும் பழங்கள் என்றாலும் அதன் தன்மை அவற்றின் கால அளவு மற்றும் பதப்படுத்தும் முறையை பொருத்தே தீர்மானிக்க படும். எப்போது உணவு உண்டாலும் அது பதப்படுத்தாத உணவா ? என்பதை அறிந்து உண்ணவும். அத்துடன் வெளியில் அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.

🚶🏽‍♂HAROON SB

மாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..?*

*மாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..?*

*கைமேல் பலன் தரும்குறிப்புகள்..!*

குளிர் காலம் ஆரம்பிச்சாச்சு. அடுத்து வீட்டில் ஒவ்வொருவராய் மாறி மாறி சளி, காய்ச்சல் என வந்து குளிரோடு உடல் நிலையும் பாதித்து இம்சை பண்ணும். குளிர்கால தட்பவெப்பம் கிருமிகள் பெருக்கத்திற்கு ஏதுவான காலமென்பதால் விரைவில் நமது உடலில் புகுந்து நோய்களை உண்டாக்குகின்றன.

சளி பிடித்தால், நமது உடலிலுள்ள வெள்ளையணுக்களே அக்கிருமிகளுடன் சண்டையிடும். அவற்றை பூஸ்ட் அப் செய்வது போல் நமது மூலிகைகளைய அவற்றிற்கு தரும் போது வெள்ளையணுக்கள் பலம் பெற்று கிருமிகளை வெளியேற்றும். இது நடப்பதற்கு குறைந்தது 3 -5 நாட்களாகும்.

இப்படி இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளை நாம் மாத்திரைகள் கொண்டு தடுக்கும்போது, வெள்ளையணுக்கள் எதிர்த்து போரிடாமல் சோம்பேறியாகும். நமது உடல் எல்லாவ்ற்றிற்கும் மாத்திரைகளையே எதிர்பார்க்கும். ஆகவே முடிந்தாரை மாத்திரைகளை தவிர்த்து இயற்கை வைத்தியங்களை முயற்சியுங்கள்.

*குறிப்பு 1 :*

கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.

*குறிப்பு 2*

ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

*குறிப்பு 3 ;*

ஒரு டம்ளர் அன்னாசிச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு மறையும் சளித்தொல்லை குணமாகும்.

*குறிப்பு-4 :*

வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

*குறிப்பு- 5 :*

மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

*குறிப்பு- 6 :*

கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்.

*குறிப்பு- 7 :*

வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

🚶🏽‍♂HAROON SB

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...