Thursday, August 16, 2018

சோரியாஸிஸ்

#சோரியாஸிஸ்

#இன்று
#உலகம்_முழுவதும்……
பரவலாகப் பெருகி வரும் நோய் சோரியாஸிஸ் எனப்படும் செதில்படை நோயாகும்.

♦தமிழில்  ♦சோரியாஸிஸ்ஸை…

காளாஞ்சக படை,

மீன் செதில் படை,

‘செதில் படை’

என்று அழைப்பர்.

சோரியாஸிஸ் நோய் பொதுவாக மக்கள் தொகையில் 2-4% பாதிக்கிறது.

சோரியாஸிஸ் நோய்   ஆண்கள்  பெண்கள் மற்றும் எல்லா வயதினரையும் பாதிக்கும்.
இருப்பினும் சோரியாஸிஸ் நோய்   15 முதல் 30 வயது வரையுள்ள இளைஞர்கள் மத்தியிலும், 60 முதல் 75 வயது வரையுள்ள முதியவர்களைப்   பொதுவாக பாதிக்கிறது .
ஆனால் ஆண்கள் அதிகமாக சோரியாஸிஸ் நோயால் பாதிக்கப் படுகின்றனர்.

சோரியாஸிஸ் நோய் நாள்பட்ட, திரும்ப திரும்ப வரும் நோய்.

சோரியாஸிஸ் நோய் பழங்காலத்திலேயே இருக்கிறது.
சோரியாஸிஸ் உயிர் கொல்லி நோய் அல்ல.

சோரியாஸிஸ்……

வைரஸ்,

பாக்டீரியா,

பூஞ்சை,

இஸ்ட்,

போன்ற நுண்ணுயிர்களால் வருவது இல்லை.
மறாக அது நோய் எதிப்பு சக்தியின் அதிக வேலைபாடே காரணம் அதாவது சம நிலையில் இல்லாத நிலை தான் சோரியாஸிஸ்.

ரத்தத்தில் உள்ள எதிர்ப்பு சக்தி அணுக்கள்,
அதிகப் பிரசங்கியாக தன் சகாக்களிடமே தாக்குதல் நடத்த, உடம்பு தடித்து வீங்குகிறது.
ஆனால், அதற்குள் நம் நகங்கள் அந்தப் பிரதேசத்தில் ஏற்படுத்திய காயத்தில் தடயங்கள் நிலைத்துவிடும்.

அதனால், இந்த நோய்க்கு சாதுரியமான சிகிச்சை அவசியம். வெள்ளையணுக்களைத் ‘தட்டி’வைத்தோ, ‘கொட்டி’ ஒழுங்காக வேலைசெய்யப் பணிக்கவோ, சரியான நவீன மருத்துவச் சிகிச்சைகளும் சித்த மருத்துவச் சிகிச்சையும் உண்டு.

சோரியாஸிஸ்
அடுத்தவர்களுக்கு  தொற்றும் தொற்று நோய்யல்ல.

#குறிகுணங்கள்

இயல்பாக நமது உடல் ஏழு நாட்களுக்கு ஒரு முறை சருமத்தை மாற்றிக்
கொண்டிருக்கும். ஆனால் இந்நோய் பீடிக்கப்படும்பொழுது மூன்று நாட்களுக்கு ஒரு முறை சருமம் மாற்றப்படும்.

அதாவது நமது உடம்பில் இறந்துபோன செல்கள் சருமம் வழியாக வெளியேறி புது சருமம் உண்டாகிறது. ஒருவர் சோரியாஸிஸ் நோயினால் பீடிக்கப்படுகையில், அவருடைய உயிர் செல்கள் அதிகளவில் மடிந்து, அவருக்கு பல்வேறு உபாதைகளைக் கொண்டு வருகிறது என்பதை நாம் உணர வேண்டும்.

உடலில் சிறு தடிப்புகள் ஏற்படும். மென்மையான, வெண்மையான, பளபளப்பான மீன் செதில்கள் போன்று மூடப்பட்டு இருக்கும். செதில்களைப் பிய்த்தால், குண்டூசி முனையளவு ஒத்த ரத்தக்கசிவு ஏற்படும். படை உருவாகும் இடங்களும், வடிவமும் ஆளுக்கு ஆள் வேறுபடலாம். உடலெங்கும் படை காணப்பட்டு செதில் உதிரலாம். தலை, காதின் பின்புறம் சிறுசிறு கட்டிகள் உருவாகி செதில் உதிரலாம்.

நாணயம் போன்ற வடிவமுடைய படைகளும், கிருமித் தொற்று இல்லாத கீழ் கொப்புளங்களும் ஏற்படலாம். அக்குள், தொடைமடிப்பு, தொப்புள் ஆகிய இடங்களில் பாதிப்பு ஏற்பட்டால் நீர்க்கசிவு ஏற்படலாம். உள்ளங்கை, உள்ளங்கால்களில் தடிப்பான வெடிப்புகளை உடைய படைகள் ஏற்படலாம். நாட்பட்ட நிலையில், முழங்கால்களைப் பாதித்து, வாதம் போன்று நகரவிடாமல் பாதிப்பை ஏற்படுத்தலாம். நகங்களைப் பாதித்து, நகத்தின் குறுக்கே பள்ளம் விழலாம். நகத்தின் நிறம் மாறலாம். அரிப்பு இல்லாமலும், சிலருக்கு மிகுதியான அரிப்பும் காணப்படலாம்.

#நோய்வரக்_காரணம்

வாத நாடி பாதிப்படைந்து, அதனால் பிற நாடிகளையும் (பித்தம், கபம்) பாதிப்புக்கு உள்ளாக்கி இந்நோய் ஏற்படும்.

தீவிர விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு சில மருந்துகளினாலும், நோய் எதிர்ப்புத் திறனின் மாறுபாட்டாலும், பரம்பரை காரணமாகவும், மன அழுத்தத்தினாலும் இந்நோய் வரலாம் என நவீன அறிவியல் விளக்கமளிக்கிறது.

இந்நோயால் பீடிக்கப்பட்டவர்களின் அவஸ்தை சொல்லி மாளாது. மனதளவில் இந்நோய் இவர்களைக் குற்றுயிராய் ஆக்கிவிடும். கால்மூட்டுகளில் வலி, வீக்கம், தூக்கமின்மை, நரம்பு நோய்கள் போன்றவையும் சோரியாஸிஸ் நோயின் சார்பு நோய்களால் வந்து பீடிக்கும்.

சோரியாஸிஸ் நோயின் பாதிப்புக்கு உட்பட்டவர்கள் தங்களது உணவு விஷயத்தில் மிகவும் கவனமாய் இருக்க வேண்டும்.

#சோரியாசிஸ்நோய்யில்
#9_வகைகள்
#உள்ளது …!!! ???

உடல் உறுப்புகளிலேயே மிகப் பெரியது தோல்.

உள்ளுறுப்புகள் புற பாதிப்புகளால் தாக்கப்படாமல் காக்கும் கேடயமே தோல். இதன் பரப்பளவு 2 சதுரமீட்டர்.

உடல் எடையில் 16 முதல் 20 சதவிகிதம் வரை தோலின் எடை உள்ளது.

தோலின் மீது சுமார் 2 மில்லியன் வியர்வைச் சுரப்பிகள் அமைந்துள்ளன.

சராசரியாக ஒரு நாளைக்கு 500 மி.லி. 600 மில்லி வரை வியர்வை சுரக்கிறது.

#இதுவரை……!!!! ????

உலகில் கண்டறியப்பட்டுள்ள
தோல் நோய்கள் 600க்கும் மேல் உள்ளன.

#__சோரியாசிஸ்_ஒரு
#ஆடோஇம்யூன்_நோய் 

உடலில் நமது பாதுகாப்புக்காக உள்ள அணுக்கள், தவறுதலாக நல்ல திசுக்களை அழிப்பது
ஆடோஇம்யூன் நோய்.

1. உங்கள் சருமம் சுத்தமாகவும் அரிப்பில்லாமலும் இருக்கலாம். ஆனால், உங்களுக்கு…

பாதவலியோ,

குதிகால் வலியோ

இருக்கும் பட்சத்தில் அது……

சோரியாஸிஸ் #வாதமாக இருக்கலாம்.

‘கை கால் விரல்களில் ஏற்படும் #வீக்கம் சோரியாஸிஸ் #வாதத்தின் அறிகுறியாக இருக்கலாம்.’

2 . திடீரெனத் தோன்றும் தோல் தடிப்பு. இதிலும் குறிப்பாக தலை, கை, கால்களின் வெளிப்பகுதிகள், முழங்கை, முழங்கால் போன்ற இடங்களில் வட்ட வட்டமாக தோல் தடிப்பு உண்டாகும்.

3. தடித்த இடத்தில் மிதமான அரிப்பு.

4. தடித்த தோல் சொரசொரப்பாக மாறுதல்.

5. அதைச் சொரிந்தால் வெள்ளை நிறத்தில் பக்குகள் உதிர்தல்.

6. கிருமித் தொற்று சேர்ந்துகொண்டால் சீழ் கட்டுதல்!

#ஒன்பது_வகைகள்.                                   

1,#பிளேக்
சோரியாஸிஸ்-

இந்த வகை சோரியாஸிஸ் பொதுவான வகையாகும். இது பொதுவாக, வெள்ளி செதில்கள் மூடப் பட்டிருக்கும், சிவப்பு உலர் தோல் புண்கள் (பிளேக்) ஏற்படுகிறது. இந்த வகை சோரியாஸிஸ் வந்தவர்களில்  10ல்8 பேர் பாதிக்கப் படுகின்றனர்.
இது உங்கள் உடலில் தோன்றும்,
ஆனாலும்
பெரும்பாலும் முழங்கைகள்,
முழங்கால்கள் உச்சந் தலையில் உங்கள் பிறப்பு உறுப்புகளில் வாயின் உட்புறத்தில்  தோன்றும்

2,#கட்டேட்தடிப்பு
சோரியாஸிஸ்

பொதுவாக கழுத்து கைகள், கால்கள் மற்றும் கையின் மேல் பகுதிகளில் உச்சந் தலையில்  தடிப்பு , சிறு புண்கள். புண்கள் மீது நீர் துளி உறுவாகும். இந்த வகை பெரும்பாலும் குழந்தைகள் அல்லது இளைஞர்களைப் பாதிக்கிறது இந்த வகை சோரியாஸிஸ் வந்தவர்களில் 10ல்2 பேருக்கு பாதிக்கப் படுகின்றனர்.

3, #உச்சந்தலையில் சோரியாஸிஸ்

தோலில்  வெள்ளி செதில்கள் மற்றும் வெள்ளி செதில் நீக்கப்பட்ட போது இரத்தம் கசிந்து சிவப்பு திட்டுகள் ஏற்படுகிறது. தோலில்   தடிமன் செதில் மூடப்பட்டிருக்கும். குறிப்பாக  உச்சந் தலையில் அரிப்பு ஏற்பட்டு  பிறகு, உங்கள் முடி அல்லது உங்கள் தோல்களில் இறந்த தோல் செதில்களைக்  கானலாம்.

4, #இன்வேர்ஸ் சோரியாஸிஸ்-

வீக்கமான தோல் திட்டுகள்,
மென்மையான தோல் திட்டுகள்.
ஏற்படுகிறது. இந்த வகை தோல் அலற்சியுடன் கூடிய சோரியாஸிஸ்  மக்களைப் பதிக்கிறது.
முக்கியமாக இடுப்பு பகுதி, மார்பின்  கீழ் மற்றும் பிறப்புறுப்புகள்,
அக்குள்களில் உள்ள தோலில்  பாதிக்கும், தோலில்  உராய்வு மற்றும் தோலில் வியர்த்தல் போன்ற காரணங்களால் தோல் சோரியாஸிஸ் மோசமடையும்.

5, #பஸ்டுலர் சோரியாஸிஸ்-

பொதுவாக சில நேரங்களில் சீழ் நிறைந்த கொப்புளங்கள் தோன்றும்  உங்கள் தோல் சிவந்து மென்மையாக மாறும் ,  விரைவாக பரவலாக திட்டுகள் உருவாகிறது.   கைகள், கால்கள், அல்லது விரல் சிறிய பகுதிகளில் இந்த திட்டுகள் உருவாகிறது.

6, #ஏரித்ரோடேர்மிக் சோரியாஸிஸ்

பொதுவான வகையைச் சார்ந்ததாகும்,  குறைவான தடிப்பு    , சிவந்த தடிப்பு  நமைச்சல் மற்றும்  அதிக  எரிச்சல் கொண்டதாய் இருக்கும் . உடல் முழுவதும் பரவிக் கிடக்கும்.

7, #நகதடிப்பு
சோரியாஸிஸ்

சோரியாஸிஸ் நகங்களில் பள்ளம்,  நிறமாற்றம்,  நக உடைவு மற்றும் அசாதாரண நக  வளர்ச்சி  உண்டாகும். கைகள், 
கால்கள்,  விரல் நகங்களைப்  பாதிக்கும் .

8, #பிறப்பு_உறுப்பு சோரியாஸிஸ்

ஆண் பெண் பிறப்பு உறுப்பில் சில சமயங்களில் சோரியாஸிஸ் வருவதுண்டு. ஆண் குறியின்  ஒரு பகுதியாகிய சின்ன  மொட்டு  பகுதியில் பிறப்பு உறுப்பு சொரியாஸிஸ்  பாதிக்கிறது. அதே போல் பெண்களின் , தொடையில், பிறப்புறுப்பு,  இடுப்பு, பிறப்புறுப்புகள் மேலே மற்றும்  பிறப்புறுப்பு,  மற்றும் ஆசன வாய் பகுதிகளில் பாதிக்கும்.

9. #ஆர்த்தரைடீஸ்
    (மூட்டுவாத)
சோரியாசிஸ்

இந்த வகைய்
சருமத்தில் நமைச்சலுடன் கூடிய சிகப்பு திட்டுகளாக தோன்றும்.

நகங்கள் சொத்தையினால் பாதிக்கப்படும்.

அழற்சி, வீக்கம் – இவை விரல் மூட்டுக்கள், கால் கட்டை விரல் மூட்டுக்கள் – இவற்றை பாதிக்கும்.

பாதிப்படைந்த விரல் நகங்களின் அருகாமையில் உள்ள மூட்டுக்கள் பாதிக்கப்படலாம்.
சர்ம பாதிப்புகளும், ஆர்த்தரைடீஸீம் (மூட்டுவாதமும்)
சேர்ந்தே தோன்றலாம்.

சோரியாசிஸ் குறையும் மறையும் போது ஆர்த்தரைடீஸீம் மறைந்து விடும். 

சோரியாசிஸ் ஆர்த்தரைடீஸீம் உடனே கவனிக்கப்பட வேண்டும். இதனாலும் நிரந்தரமாக #மூட்டுக்கள் பாதிக்கப்பட்டு #முடக்குவாதமாக மாரும்.

#அனைத்து_வகையான #தோல்_நோய்களுக்கும்
#நிரந்தர_தீர்வுக்கு……

+91 9543336948
+91 8608883311

Tuesday, August 14, 2018

கல்லீரல் காத்து நலமாய் வாழ்வோம்

மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம்.
அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல் !

மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான்.

இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை.

மற்ற எந்த உடல்
உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது.

இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது.

நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவல் அனுப்பும்.

பதறிப்போன கல்லீரல் நொடிப் பொழுதில் ரத்தம் வெளியேறும் இடத்திற்கு 'ப்ரோத்ரோம்பின்' என்ற ரசாயனத்தை அனுப்பி வைக்கும்.
அந்த ரசாயனம் ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு சிலந்தி வலைப் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி ரத்தத்தை உறைய செய்துவிடும்.
இதனால் ரத்த வெளியேற்றம் தடுக்கப்படுகிறது.
கல்லீரல் மட்டும் இந்த வேலையை செய்ய வில்லை என்றால் ஒரு சின்ன காயம் போதும் நம்மைக் கொல்வதற்கு.

இன்றைக்கு லேசான தலைவலி என்றாலும், உடல் மெலிவதற்கு என்றாலும், சத்துப் பற்றாக்குறை என்றாலும் மாத்திரைகளாக உள்ளே தள்ளுகிறோம்.

இந்த மாத்திரைகள் எல்லாவற்றிலும் நச்சுத் தன்மை நிறைந்திருக்கிறது.

அந்த நச்சுத்தன்மையை உடலில் சேராமல் தடுத்து நம் உடலை பாதுகாப்பது கல்லீரல்தான்.

மதுவிலும் ஏராளமான விஷத்தன்மை உள்ளது. அந்த விஷத்தன்மையை போக்குவதற்காக இரவு முழுவதும் கல்லீரல் போராடுகிறது.

கல்லீரல் விஷத்திற்கு எதிராக போராடும் வரைதான் குடிகாரர்கள் எவ்வளவு குடித்தாலும் அசராமல் நிற்பேன் என்று வசனம் பேசமுடியும்.

கல்லீரல் கெட்டு விட்டது என்றால் அவரால் ஸ்டெடியாக மூச்சுக் கூட விடமுடியாது. அப்புறம் எங்கு வசனம் பேசுவது.

கல்லீரல் ஒருவருக்கு சரியாக இல்லையெனில், சாப்பிடும் எந்த உணவும் செரிக்காது. உணவுப்பொருட்களை மட்டுமல்ல... மருந்து, மாத்திரைகள், ஆல்கஹால், ஏன் சமயத்தில் விஷத்தைக்கூடச் செரிக்கக்கூடிய சக்தி படைத்தது இந்தக் கல்லீரல்.
அத்தகைய முக்கியமானதொரு ஜீரண உறுப்பு இது. அதற்காக ‘எவ்ளோ அடிச்சாலும் தாங்குதே; ரொம்ப நல்லது போல’ என்று தாறுமாறாக அதற்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாது. கண்மூடித்தனமாக அளவு கடந்து குடிக்கிறபோது கல்லீரல் வீக்கத்தைத் தடுக்க இயலாது.

கல்லீரலை கழுதையோடு ஒப்பிடுவார்கள். கழுதை எவ்வளவு பாரத்தை அதன் மீது தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருந்தாலும் அசராமல் சுமக்கும். அதே கழுதை படுத்துவிட்டால் திரும்பவும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது.

கல்லீரலும் அப்படிதான் தொடர்ந்து குடிக்க குடிக்க மது என்னும் விஷத்தோடு ஓயாமல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும் !

இத்தகைய கல்லீரலை காப்பாற்ற
~மதுவையும் புகையும் தவிர்க்க வேண்டும்.~

~பால் கலந்த டீ, காப்பி மற்றும் செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.~ அதற்கு பதிலாக கருப்பட்டி காப்பி, சுக்கு காப்பி, பால் கலக்காத இஞ்சு டீ மற்றும் எலுமிச்சை டீ, இயற்கையான பழச்சாறுகள், கரும்புச்சாறு, பதநீர், மோர் போன்றவற்றை பருகலாம்.

உணவை நிதானமாக மென்று விழுங்க வேண்டும்.

நமக்கு அசதியாக இருக்கும்போது ஓய்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

~முடிந்தவரை தொட்டதிற்கெல்லாம் ஆங்கில மருந்துக்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.~
கல்லீரல் காத்து நலமாய் வாழ்வோம்

நன்றி.

Monday, August 13, 2018

*உடலுக்கு உறுதி தரும் உலர் திராட்சை*

*உடலுக்கு உறுதி தரும் உலர் திராட்சை*

சமையலில் சுவை மற்றும் மணம் கூட்டுவதற்கு உலர் திராட்சை பயன்படுத்தப்படு கிறது என்றே பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். ஆனால், இந்த உணவுப்பண்டத்திற்கென மருத்துவ குணங்கள் நிறைய உள்ளன.

* பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்துத் தரப்பு வயதினருக்கும் ஏற்ற உலர் திராட்சையை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்; உணவு வேளைக்குப் பின்னரும் சாப்பிடலாம்.

* உலர் திராட்சை எளிதாகக் கிடைக்கக்கூடிய மருத்துவ குணம் நிறைந்த ஓர் உணவுப்பொருள். கறுப்பு மற்றும் வெளிர் நிறம் என இரண்டு வகைகள் இதில் உண்டு.

* நேரடியாக சூரிய ஒளியில் உலர வைத்தல், சல்ஃபர் டை ஆக்சைடு என்ற வேதிப்பொருள் சேர்த்து பதப்படுத்துதல், தண்ணீரில் ஊற வைத்து பதப்படுத்துதல் என மூன்றுவிதமாக திராட்சையைப் பதப்படுத்தி உலர் திராட்சையாக மாற்றுகிறார்கள்.

* புளிப்புத்தன்மை, இனிப்பு சுவை இரண்டும் கலந்த உலர் திராட்சையில் தேனின் மருத்துவ குணம் நிறைய உள்ளது.

* விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் ஏற்ற சத்துணவாக இது திகழ்கிறது. இவர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஆயிரம் கலோரி தேவைப்படும்.

* ஒரு கப் உலர் திராட்சை சாப்பிட்டால் 130 கலோரி கிடைக்கும். பயிற்சியின் இடையேயும் பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்றவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.

* பெண்கள் மெனோபாஸ் காலக்கட்டத்தில், தினமும் 5 உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால் எலும்பு பலவீனம் அடைவது தடுக்கப்படும். ரத்தசோகை குறைபாட்டை சரி செய்யும் தன்மையும் இதற்கு உண்டு.

* உலர் திராட்சையை உண்பதால் செரிமான குறைபாடு வராது. மலச்சிக்கல் பிரச்சினை தீரும். நோய் எதிர்ப்பு திறனும் அதிகரிக்கும்.

* உலர் திராட்சையில் புரதம் 3 சதவீதமும், நார்ச்சத்து 3.7%-லிருந்து 6.8 சதவிகிதமும் உள்ளன. இவற்றைத் தவிர, வைட்டமின்-சி, பொட்டாசியம், இரும்புச்சத்து, நீர்ச்சத்து, மினரல்கள் மற்றும் தாதுக்களும் அதிகம் உள்ளன.

* கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு உடல் நலனுக்குத் தீங்கும் உண்டாக்கும் கெட்ட கொழுப்பு சேர்வதையும் உலர்திராட்சை குறைக்கிறது. புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உலர்திராட்சைக்கு உண்டு.

* பல் சொத்தை, ஈறு தொடர்பான பிரச்சினைகளையும் சரி செய்யும். வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை வளர விடாமல் தடுக்கும்.

* ரசாயனம் சேர்க்கப்பட்டு உலர் திராட்சை பதப்படுத்தப்படும் வாய்ப்பு உண்டு என்பதால் தண்ணீரில் நீண்ட நேரம் ஊற வைத்து நன்றாக கழுவிய பின்னர் சாப்பிடுவதே பாதுகாப்பானது.

எப்படி வரும் ஆரோக்கியம்?

உடலுக்கு வடிவம் கொடுப்பதில் தொடங்கி, உடலின் சமநிலையைத் தக்க வைத்துக்கொள்வது வரை அனைத்து செயல்களுக்கும் எலும்புகள் அவசியம் என்பது நமக்குத் தெரியும். ஒரு மாறுதலுக்காக எலும்புகளின் ஆரோக்கி யத்தைக் குலைக்கும் விஷயங்களையும், அவற்றுக்கான தீர்வுகளையும் தெரிந்துகொள்வோம்.

உடலியக்கம்

தினமும் உடற்பயிற்சிகள் செய்வோருக்கும், உடலள வில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்போருக்கும் எலும்புகள் ஆரோக்கியமாகவே இருக்கும். உடலுழைப்பே இல்லாதவர்களுக்கு எலும்புகளின் ஆரோக்கியம் இள வயதிலேயே பாதிக்கப்படும்.

கால்சியம்

எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு கால்சியம் சத்து அடிப்படை. சிறு வயது முதல் பால் பிடிக்காது, தயிர் பிடிக்காது என்று வளர்பவர்களுக்கும், காய்கறி, பழங்கள், தானியங்கள் எடுத்துக்கொள்ளாதவர்களுக்கும் உடலில் போதுமான அளவு கால்சியம் இருக்காது. அவர்களுக்கு எலும்புகளின் அடர்த்தி குறைவாக இருக்கும். தவிர சிறிய அடிபட்டாலே எலும்பு முறிவு ஏற்படும் அளவுக்கு எலும்புகள் உறுதியின்றி இருக்கும்.

புகை மற்றும் குடிப்பழக்கம்

இந்த இரண்டும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையே அழிக்கும் வல்லமை கொண்டவை. புகைப்பழக்கத்தால் எலும்புகளின் அடர்த்தி குறையும். அதே போல தினமும் குடிப்பவர்களுக்கு உடலில் கால்சியம் கிரகிக்கப்படும் தன்மை பாதிக்கப்படுவதால் எலும்புகள் உறுதியிழக்கும்.

பாலினம்

ஆண்களைவிட பெண்களுக்கே எலும்பு தொடர்பான பாதிப்புகள் அதிகம். காரணம் அவர்களுக்கு இயல்பி லேயே ஆண்களைவிட எலும்புத் திசுக்களின் அளவு குறைவு. தவிர மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்புகள் வலுவிழப்பது மிகவும் சகஜமான ஒன்று. அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படுகிற எலும்புகள் மென்மையாதல் பிரச்சினை ஏற்படவும் வாய்ப்புகள் மிக அதிகம்.

உடல் எடை

அதிக உடல் பருமன் இதயம் முதல் எலும்புகள் வரை ஆரோக்கியத்தை பாதிக்கிற விஷயம். அதே போல சராசரிக்கும் குறைவான உடல் எடை கொண்டவர்களுக்கும் எலும்புகளின் ஆரோக்கியம் சீராக இருக்காது. ஒல்லியாக இருப்பவர்கள் தாம் ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். அவர்களுக்கு எலும் புகள் ஆரோக்கியமாக இருக்கின்றனவா என்பதே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

ஹார்மோன் சமநிலையின்மை

தைராய்டு ஹார்மோன்களின் சீரற்ற தன்மையும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். மாதவிடாய் நிற்கும் காலத்தில் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு வெகுவாகக் குறைவதும் ஒரு காரணம். மெனோபாஸ்க்கு முன் நீண்ட நாட்களாக மாதவிடாய் வராமலிருப்பதும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை அதிகரிக்கும். ஆண்களைப் பொறுத்தவரை டெஸ்ட் டோஸ்டீரோன் என்கிற ஹார்மோன் அளவு குறைவது அவர்களுக்கு எலும்புகளின் உறுதியை பாதிக்கும்.

முறையற்ற உணவுப்பழக்கம்

சரியான நேரத்துக்கு சரிவிகித உணவு உண்ணத் தவறுகிறவர்களுக்கு எலும்புகள் ஆரோக்கியம் இழக்கும். உதாரணத்துக்கு உடல் எடை அதிகரிக்குமோ என்கிற பயத்தில் உணவைத் தவிர்ப்பவர்கள், சாப்பிட்டதை உடனே வாந்தி அல்லது பேதி மூலம் வெளியேற்றுகிறவர்கள் போன்றவர்களுக்கு எலும்புகளின் ஆரோக்கியம் பாதிக் கப்படும்.

மருத்துவ சிகிச்சைகள்

சில வகை பிரச்சினைகளுக்காக ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொள்வோருக்கும் அதன் விளைவு எலும்புகளின் ஆரோக்கியத்தில் பிரதிபலிக்கும். புற்றுநோய்க்காக எடுத்துக் கொள்கிற சில மருந்துகளும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.

எலும்புகளின் ஆரோக்கியம்

மேம்பட என்ன செய்யலாம்?

* கால்சியம் : 19 வயது முதல் 50 வயது வரையிலான ஆண்களுக்கு தினசரி 1000 மி.கி கால்சியமும், 50 வயது முதல் 70 வயது வரையுள்ள பெண்களுக்கும், ஆண் களுக்கும் இந்த அளவு 1200 மி.கி அளவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. பாதாம், ப்ரோக்கோலி, சோயா, சாலமன் மற்றும் சார்டைன் வகை மீன்கள் போன்றவற்றில் கால்சியம் அதிகமுள்ளதால் அவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும். இவற்றை எடுத்துக்கொள்வதில் நடைமுறை சிரமங்கள் இருந்தால் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் சப்ளிமென்ட்டுகள் எடுத்துக்கொள்ளலாம்.

* வைட்டமின் டி : கால்சியம் சத்தை உட்கிரகிக்க வைட்டமின் டி சத்தும் அவசியம். அதை சூரிய வெளிச்சத்திலிருந்து இயற்கையாகப் பெறலாம். இளம் வெயிலில் உடற்பயிற்சி செய்வது, தோட்ட வேலை செய்வது போன்றவை பலனளிக்கும். அளவைப் பரிசோதித்துத் தெரிந்துகொண்டு, அதற்கும் மருத்துவரிடம் கேட்டு சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ளலாம்.

* உடற்பயிற்சியும் உடலியக்கமும் : எடை தூக்கும் பயிற்சிகள் மிக முக்கியம். நடைப்பயிற்சி நல்லது. ஜாகிங், மாடிப்படிகளில் ஏறி இறங்குவது போன்றவை சிறந்த பயிற்சிகள். புகையும் குடியும் தவிர்க்கப்பட வேண்டும்.

இன்னும் சில சத்துக்கள்

கால்சியம் மற்றும் வைட்டமின் டி மட்டுமே எலும்பு களின் நலன்காக்க போதுமானவை அல்ல. இவை தவிர வேறு சில சத்துகளும் அவசியம். அதன்படி மக்னீசியம் எலும்புகளின் அடர்த்தி குறைவதை இது தடுக்கும். கீரைகள், பீன்ஸ், நட்ஸ் மற்றும் சீட்ஸ் போன்றவற்றில் மக்னீசியம் இருக்கிறது. வைட்டமின் பி எலும்பு முறிவுக் கும், வீக்கத்துக்கும் காரணமான ஹோமோசிஸ்டைனை கட்டுக்குள் வைத் திருக்க வைட்டமின் பி அவசியம். முழுதானியங்கள், பால், முட்டை, கீரை, பழங்களில் இது அதிகமுள்ளது. வைட்டமின் ஏ அளவு குறைந்தாலும், கூடினாலும் எலும்புகளுக்கு நல்லதல்ல. கேரட், ஈரல், வெண்ணெய், முட்டை போன்றவை வைட்டமின் ஏ நிறைந்தவை.புரதம் எலும்புகளின் அடர்த்திக்கு 20 சதவிகிதம் புரதச்சத்து அவசியம். புரதத்தின் அளவும் சரியாக இருக்க வேண்டியது அவசியம்.

தெரியுமா?!

கிரீன் டீ குடிப்பது உடல் எடையை குறைக்கும், சர்க் கரை நோய் வராமல் தடுக்கும் என்பதை நாம் கேள்விப் பட்டிருப்போம். இதுபோன்ற நன்மைகளால் கிரீன் டீ பருகு பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செயல்படும் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வுக்குழு கிரீன் டீயில் காணப்படும் பாலிபெனால்ஸ் மூலக்கூறுகள் உடலுக்கு பலவிதங்களில் நன்மை புரிவதைக் கண்டுபிடித்துள்ளது. இந்த மூலக் கூறுகள் கல்லீரலால் கிரகிக்கப்பட்டு பல்வேறு வளர்சிதை மாற்றப் பணிகளில் பங்கெடுக்கிறது. ரத்தம் மற்றும் தோல் செல்களாலும் இந்த மூலக்கூறுகள் உறிஞ்சப்படுகின்றன.  குடல் பகுதியும் கிரீன் டீயிலுள்ள இந்த மூலக்கூறுகளை கிரகிப்பதாக இந்த புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கிரீன் டீயிலுள்ள இந்த மூலக்கூறு உடல் எடை  குறைப்பிற்கு முக்கியக் காரணமாக இருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...