Thursday, August 9, 2018

#காதுகளை_பாதுகாக்கும் #வழி_முறைகள்…!!!…???

#காதுகளை_பாதுகாக்கும் #வழி_முறைகள்…!!!…???

காதுகளின் ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது?

எதனால் செவித்திறன் குறைகிறது?

இத்தகைய பாதிப்பில் இருந்து காதுகளை எவ்விதம் பாதுகாப்பது என்பது குறித்து காண்போம்.

பொதுவாக, கேட்கும் திறனுக்கும், பேச்சுத் திறனுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. பிறக்கும் போதே குழந்தைகளின் காதுகள், கேட்கும் சக்தியை இழந்து விட்டால் அவர்களுக்கு பேச்சு வராது. அதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் கேட்கும் திறன் எவ்வளவு முக்கியம் என்று.

கேட்கும் திறனால் மட்டுமே மொழித்திறன் உருவாகி குழந்தை பேச தொடங்குகிறது. இத்தகைய கேட்கும் திறன் கொண்ட காதுகளின் ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது?

எதனால் செவித்திறன் குறைகிறது?

இத்தகைய பாதிப்பில் இருந்து காதுகளை எவ்விதம் பாதுகாப்பது என்பது குறித்து காண்போம்.

மனித உடலில் காதுகள் ஒரு இன்றியமையாத உறுப்பு என்று சொன்னால் அது மிகையில்லை. காதுகளுக்கு கேட்கும் திறன் மட்டுமல்லாது இன்னும் சில திறன்களும் இருக்கிறது. அவைகள், #உடலின்_சமநிலையை பாதுகாத்தல், கட்டுப்படுத்துதல் போன்ற முக்கிய பணிகளையும் செய்கின்றன.

#_உடலின்_சமநிலை #மாறுபடும்_போது……

தள்ளாட்டம்,

தலைச்சுற்றல்,

கிறுகிறுப்பு

ஆகியவை வந்துவிடும். அதுமட்டுமின்றி
#தூங்கி_எழும்போதும்…
ஒரு பக்கம் சாய்வதாலும் உடலின் சமநிலை மாறுபட்டு கிறுகிறுப்பு வர வாய்ப்புள்ளது. குறிப்பாக சொல்வதென்றால், நாம் நேராக நிற்கவும், தள்ளாடாமல் நடப்பதற்கும் காதுகள் மிக அவசியமாகிறது.

பொதுவாக காதுகளின் அமைப்பு 3 பிரிவுகளாக உள்ளது.

ஒன்று, வெளிக் காது.

2-வது நடுக்காது.

3-வது உள்காது.

வெளிக்காது என்பது,
செவி மடலில் இருந்து காது சவ்வு பகுதி வரை இருக்கும். நடுக்காது, ஜவ்வு பகுதியில் இருந்து காது நரம்பு தொடங்கும் பகுதி வரை இருக்கும். உள்காது, காது நரம்பில் இருந்து மூளை நரம்பு மண்டலம் வரை இருக்கும். இதில் செவிப்பறை என்பது நடுக்காதில் இருக்கும்.

இத்தகைய முக்கியத்துவம் பெற்ற காதுகளுக்குள் புகும் ஒலி அலைகளின் சத்தம் 20 முதல் 20 ஆயிரம் ஹெட்ஸ் (அளவீடு) வரை தான் இருக்க வேண்டும். இந்த அளவீடு ஒலி அலைகளுக்கு சத்தம் குறைவாக இருந்தால் கேட்காது.

காதுகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்கள் நிறைய உள்ளன.

அடிக்கடி சளிப்பிடித்தல்,

தொண்டை வலி,

விபத்து

போன்ற காரணங்களால் காதுகள் பாதிக்கப்படும். பொதுவாக நடுக்காதுக்கும், மூக்குக்கும் இடையே ஒரு #துளை இருக்கும். அதன்வழியே கிருமிகள் எளிதாக நடுக்காதை சென்றடைந்து விடும். அந்தக்கிருமிகள் நடுக்காதில் உள்ள செவிப்பறையை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் கேட்கும் திறன் குறையும். இதுபோன்ற பாதிப்புகள் குழந்தைகளுக்கு அதிகம் வரும்.

பெரியவர்களை பொறுத்தவரை,

அடிக்கடி சளிப்பிடித்தல்,

மூக்கு தண்டு வளைதல்,

மூக்கில் கட்டி,

சைனஸ் தொந்தரவு,

பிற கட்டிகள்,

கிருமி தொற்று

போன்ற காரணங்களால் கேட்கும் திறன் பாதிக்கும். காது வலியுடன் சீழ் வடியும், சிலருக்கு நரம்புகள் பாதிக்கப்பட்டு #முகவாதம் வரலாம். கண் இமைகள் மூடாமல் போகும் வாய்ப்பும் உள்ளது. அப்போதும் சரிவர கவனிக்காமல் போனால் #மூளையில்_சீழ்_கட்டிகள் தோன்றலாம். அதனால் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு #கோமா நிலைக்கு தள்ளப்படலாம்.

பொதுவாக காதுகள் பாதிக்கப்படும் போது, முதலில் தலைவலி, காது வலி ஏற்படும். காதுக்குள் கொப்பளங்கள் தோன்றும். அதற்கடுத்த நிலையில் சீழ் வடியும். இதுபோன்று அறிகுறிகள் தோன்றினால் தாமதிக்காமல் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக காதுகளை பொறுத்தவரை பாதுகாப்பு என்பது முக்கியமானது.

அதிக சத்தத்தை கேட்கக் கூடாது. அவ்வாறு சத்தத்தை கேட்க நேர்ந்தால் காதில் முன்னெச்சரிக்கையாக பஞ்சை வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் வாகனங்களில் உள்ள காற்று ஒலிப்பான் (ஏர்ஹாரன்) மற்றும் கூம்புவடிவ ஒலி பெருக்கி சத்தமும் ஆகாது. காதை சுத்தப்படுத்த குச்சி, பட்ஸ் உபயோகிக்க கூடாது. சாதாரணமாக, விபத்தில் காதில் அடிபடாமல் பார்த்து கொள்ள வேண்டும். அடிக்கடி சளிப்பிடிக்க விடாமல் எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது.

வாகனங்களில் போகும்போது காற்றின் வேகத்தில் பூச்சிகள் காதுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது. மேலும் தூங்கும் போது காதில் எறும்பு, சிறு பூச்சிகள் நுழைய வாய்ப்புள்ளது. அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதேபோல் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு இவற்றை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு இல்லையென்றால் தலையின் அடிப்பகுதி பாதிக்கப்படுவதுடன், மத்திய நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும். இதுதவிர வயதானவர்களுக்கு காதில் காதில் புற்றுநோய்க்கிருமி தொற்றும் ஏற்படலாம்.

பொதுவாக குழந்தைகள் பிறந்த சில மாதங்களில் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசினாலும் 1½ வயதில் சரளமாக பேச ஆரம்பிக்கும். 2 வயதில் அதற்கு சிந்திக்கும் திறன் வளரும். பரம்பரை வழியாக, சொந்தத்தில் திருமணம் செய்வதால் பிறவிக்குறைபாடாக காதுகேளாமை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அவ்வாறு பிறவிக்குறைபாடுகளுடன் பிறந்த குழந்தையை 3 மாதங்களில் கண்டறிந்து விடலாம்.

பொதுவாக பிறவிக்குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உள்காதில் மற்றும் நரம்பில் தான் பிரச்சினைகள் இருக்கும்.

பொதுவாக காதுகளை பாதுகாக்க மற்ற சிறப்பு பயிற்சிகள் ஏதும் கிடையாது. ஆனால் தலைசுற்று, கிறுகிறுப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள சிறப்பு பயிற்சிகள் இருக்கிறது. கண்களுக்கு ஓய்வு கொடுப்பதை போன்று காதுகளுக்கு ஓய்வு கொடுக்க முடியாது. அதற்கு ஓய்வே கிடையாது. 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டு தான் இருக்கும். அதனால் தான் தூங்கும் போது கூட ஏதாவது ஒரு சத்தம் கேட்டால் விழித்து கொள்கிறோம்.

ஹெட்போனில் தொடர்ந்து பாட்டு கேட்டுக்கொண்டே தூங்குவதாலும், அதிக சத்தமாக வைத்து பாட்டு கேட்பதாலும், குறிப்பிட்ட மருந்து, மாத்திரையை தொடர்ந்து சாப்பிடுவதாலும் காது நரம்புகள் வலுவிழந்து போகிறது. இதனால் காதுகளின் செவித்திறன் குறைந்து போகும்.

தலையில் மூளைக்கு அருகில் கண், காது, மூக்கு போன்ற உறுப்புகள் உள்ளது. அதனால் மிகுந்த எச்சரிக்கையாக இந்த உறுப்புகளை பாதுகாக்க வேண்டியது அவசியம். அதனால் ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டாலும் அதனருகில் இருக்கும் மற்ற உறுப்பும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பல்வலி வந்தால் தலைவலி வரும். கழுத்து வலி வந்தால் காது வலி வரும். இந்த பாதிப்பை ரெபர்டு ஆட்டாலாஜியா என்று மருத்துவம் கூறுகிறது.

காதுகள் எப்போதும் உலர்வாக இருக்க வேண்டிய பகுதி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதனால் குளிர் காற்று, குளிர்ந்தநீர் காதுக்குள் போகக்கூடாது. அது காதின் ஆரோக்கியத்தை கெடுத்து பாதிப்பை உண்டாக்கும். அம்மை நோயை அலட்சியப்படுத்தக்கூடாது. அதனாலும் காதுகளுக்கு பாதிப்பு ஏற்படும்.

#உள்காதில்_நீர் #கோர்த்தால்……

காது கேட்காது. அப்போது இரைச்சல், தலைச்சுற்றல், கிறுகிறுப்பு ஆகிய பாதிப்புகள் ஏற்படும்.

காது தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் திறன் கொண்டது. அதற்காக காதுக்குள் ‘செரூமன்‘ என்னும் ஒருவகை திரவம் சுரக்கிறது. அந்த திரவம் காதை சுத்தப்படுத்தும். ஒரு சிலருக்கு ‘செரூமன்‘ திரவத்தால் அழுக்கு சேருவதுண்டு. அதனை அகற்ற மருத்துவரின் துணையோடு காதுக்குள் ஊசி மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்ய வழி இருக்கிறது.

அதிக சத்தமான இடி மற்றும் பட்டாசு வெடிப்பதை கேட்டால் காது சவ்வு கிழிந்து விடும். சில தொழிற்சாலைகளில் உள்ள எந்திரங்களில் இருந்து அதிக சத்தம் வரும். இதுபோன்ற அதிக சத்தத்தை தொடர்ந்து கேட்பதால் காதின் செவித்திறன் பாதிக்கப்படும். அதனால் அங்கு பணியாளர்கள் உள்பட அனைவரும் வருடம் ஒரு முறை செவித்திறன் குறித்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

அதேபோல் குழந்தைகள் விளையாட்டாக சிறு பொருட்களை காதுக்குள் போட்டுக்கொள்வார்கள். அதனை வெளியில் சொல்லவும் தெரியாது. அதுபோன்ற சமயத்தில் பெரியவர்கள் அதனை கண்டறிந்து டாக்டரிடம் சென்று அதற்கு உரிய முறையில் சிகிச்சை எடுத்து அதனை அகற்ற வேண்டும். கையில் கிடைத்த சிறு பொருட்களை கொண்டு காதை குடையக்கூடாது. அதிக நேரம் ஒரே காதில் வைத்து செல்போன் பேசக்கூடாது. இவ்வாறு காதுகள் விஷயத்தில் அக்கறை செலுத்தினால் காதுகளை பாதுகாக்கலாம்.

எலும்புகளை பலப்படுத்தும் அத்திப்பழம்...!!!

எலும்புகளை பலப்படுத்தும் அத்திப்பழம்...!!!

பலருக்கும் அத்திப்பழம் பற்றி தெரியாது. ஏன் பாத்திருக்கக்கூடமாட்டார்கள். அப்படியே பார்த்தாலும், இதை எப்படி சாப்பிடுவது என்று பலரும் கேட்பார்கள். ஏனெனில் அத்திப்பழம் பார்ப்பதற்கு அப்படி இருக்கும். மேலும் இந்த அத்திப்பழம் அவ்வளவு எளிதில் கிடைக்காது. ஆனால் இதன் மறுவடிவமான உலர்ந்த அத்திப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைக்கும்.

பலரும் கடைகளில் முந்திரி, உலர் திராட்சை, பிஸ்தா உள்ள இடங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இதன் வடிவத்தைப் பார்த்து, இது எப்படி இருக்குமோ என்று நினைத்து வாங்கி சுவைத்திருக்கமாட்டீர்கள். இனிமேல் கடைக்கு சென்றால், தவறாமல் இந்த உலர்ந்த அத்திப்பழத்தை வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் மற்ற உலர் பழங்களை விட, இதில் அலாதியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சரி, இப்போது அந்த உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

செரிமானத்தை அதிகரிக்கும்:

உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதிலும் 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய 5 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான பிரச்சனைகள் நீங்கி, குடலியக்கம் சீராக நடைபெறும்.

எடை குறைவு:

உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. ஒரு துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் 47 கலோரிகள் உள்ளது. இதனால் 0.2 கிராம் கொழுப்பைத் தான் இதில் இருந்து பெற முடியும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு, இது மிகவும் சிறப்பான ஸ்நாக்ஸ்.

உயர் இரத்த அழுத்தம்:

உணவில் உப்பு அதிகம் சேர்த்து வந்தால், உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும். அப்படி சோடியத்தின் அளவு அதிகரித்து, பொட்டாசியத்தின் அளவு குறைருந்தால், அதன் காரணமாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். ஆனால் உலர்ந்த அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாக இருப்பதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால், உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கலாம்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்தது:

உலர்ந்த அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வளமையாக நிறைந்துள்ளது. மேலும் மற்ற பழங்களை விட, அத்திப்பழத்தில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மிகவும் தரமானது என்று ஆய்வு ஒன்று சொல்கிறது. குறிப்பாக உலர்ந்த அத்திப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஈ அதிகம் நிறைந்துள்ளது.

இதய நோயைத் தடுக்கும்:

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், ப்ரீ-ராடிக்கல்களால் உடலின் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, இதய நோயின் தாக்கம் தடுக்கப்படும். மேலும் முன்பு குறிப்பிட்டது போல், இது உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பதால், கரோனரி இதய நோயின் தாக்கமும் குறையும். மேலும் ஆய்வு ஒன்றில் உலர்ந்த அத்திப்பழம் ட்ரை-கிளிசரைடுகளின் அளவைக் குறைப்பதால், இதய நோய் வரும் வாய்ப்பு சீராக குறையும்.

புற்றுநோயைத் தடுக்கும்:

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த அத்திப்பழம், ப்ரீ-ராடிக்கல்களால், செல்லுலார் டி.என்.ஏ பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, அதனால் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும்.

எலும்புகளை வலிமையாக்கும்:

ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 3% கால்சியம் நிறைந்துள்ளது. இது ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய கால்சியத்தின் அளவாகும். எனவே தினமும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, எலும்புகள் வலிமையாகும்.

நீரிழிவிற்கு நல்லது:

உலர்ந்த அத்திப்பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிட யோசிப்பார்கள். ஆனால் இதில் உள்ள நார்ச்சத்து, நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது என்பதால், இதனை உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசித்து, எத்தனை எடுத்துக் கொள்வது என்று கேட்டு தெரிந்து பின் சாப்பிடுங்கள்.

இரத்த சோகையை தடுக்கும்:

உலர்ந்த அத்திப்பழத்தில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. அதிலும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 2% இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உடல் முழுவதும் ஹீமோகுளோபினை எடுத்துச் செல்ல இந்த கனிமச்சத்து மிகவும் இன்றியமையாதது. எனவே இதனை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், உடலின் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை வருவதும் தடுக்கப்படும்.

இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியம்:

பண்டைய இதிகாசங்களின் படி, கிரேக்கர்கள் அத்திப்பழத்தை ஒரு இயற்கை பாலுணர்வூக்கியாக பயன்படுத்தி வந்தனர். அத்திப்பழமானது புனிதமான பழமாகவும், காதல் மற்றும் கருவுறுதலுக்கு நெருங்கிய தொடர்புடையதாகவும் கருதப்பட்டு வந்தது. விஞ்ஞானரீதியாக, அத்திப்பழம் கருவுறுதவை அதிகரிக்கவும், பாலுணர்ச்சியைத் தூண்டவும் செய்கிறது. இதற்கு அத்திப்பழத்தில் உள்ள ஜிங்க், மாங்கனீசு மற்றும் மக்னீசியம், இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிப்பது தான் காரணம்.

Tuesday, August 7, 2018

*கேன்சர் நோய்* *(cancer Diseases)*👩🏻‍🔬 🌻

👩🏻‍🔬 *கேன்சர் நோய்* *(cancer Diseases)*👩🏻‍🔬

🌻இறைவனின் படைப்பில் *கேன்சர் நோயை அழிக்க* இன்னொரு மருந்து கண்டுபிடிக்கபட்டு  உள்ளது, அது *கொய்யா விதைதான்*, இது சாபிட்ட 48 மணி நேரத்தில் இருந்து கேன்சர் செல்களை அழிக்கிறது என ஆராய்ச்சியில் தெரிய வந்து உள்ளது.

👩🏻‍🔬 பிறருக்கும் பகிர்வோம் கேன்சர் இல்லா நாடாக மாத்துவோம் 👈
தயவு செய்து 🙏 அதிகமாக பகிரவும்

😎நண்பர்களே நம்மால் ஒருவர் பயன்
அடைந்தாலும் அந்த
இறைவனுக்கு🙏🙏
நன்றி சொல்ல
கடமை படுவோம்.........

🌻 *frnzz plz pass this msg to all*🌻

👩🏻‍🔬 பல பேர் பார்க்க👀 வேண்டிய
உபயோகமான🎗 செய்தி,பகிர்ந்து கொள்ளுங்கள்👈👍

👩🏻‍🔬 *ஒருநாள் 👉உங்களுக்கே👈 உதவ நேரிடலாம்....*

📍இதனை அதிகமாக FORWARD செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி.......

📍இதனை FORWARD செய்வதினால் எனக்கென்ன🤔🙄😒 பயன் என்று நினைத்து,🙇

📍இதனை FORWARD செய்யாமல் செல்லும் சகோதரசகோதரிகளே....

📍ஒரு நாள்இது உங்களுக்கும் உதவக்கூடும்என்பதனை மறந்திடவேண்டாம்.

*அக்கறையுடன்*
📍இதனை FORWARD செய்த, அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑

தைராய்டு வியாதிக்கு இனி மருந்து மாத்திரை தேவையில்லை.... இதை சாப்பிட்டாலே போதும்...

தைராய்டு வியாதிக்கு இனி மருந்து மாத்திரை தேவையில்லை.... இதை சாப்பிட்டாலே போதும்...

தேங்காய் பூ

தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இள நீரில் இருப்பதை இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கிறது.

இளநீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல ருசி இருக்கும். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் தேங்காய் பூவை தேடி கண்டுபிடித்து சாப்பிடத் தோன்றும்.

** நோய் எதிர்ப்பு சக்தி :

தேங்காய் பூவில் மிக அதிக ஊட்டச் சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும். பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய் பூ கொடுக்கும்

** சக்தி தரும் :

மன அழுத்தம் அல்லது வேலைப்பளு அதிகம் இருப்பவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டால் முழு எனர்ஜி கிடைப்பதோடு நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் அளவிற்கு மேஜிக் தேங்காய் பூவில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ரை பண்ணிப் பாருங்களேன்.

** ஜீரண சக்திக்கு :

உங்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். இதிலுள்ள மினரல், விட்டமின் உங்கள் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்க்லை குனமாக்குகிறது

** சர்க்கரை வியாதிக்கு :

தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. . இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுபடுத்த இயலும்.

** இதயம் :

இதயத்தில் படியும் கொழுப்பை கரையச் செய்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது. இதய நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கும்.

** தைராய்டு :

நீங்கள் தைராய்டு பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்தால் தேங்காய் பூவை சாப்பிடுங்கள். இது தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு பாதிப்பை குணப்படுத்துகிறது.

** புற்று நோய் :

ஃப்ரீ ரேடிகல்ஸை வெளியேற்றுகிறது. செல்களை பாதுகாக்கிறது. புற்று நோய் வராமல் காக்கிறது.

** உடல் எடை :

உடல் எடையை கட்டுக் கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமால் வேகமாக உட்ல எடை குறையும்.

** சிறு நீரகம் :

சிறு நீரக பாதிப்பை குறைக்கிறது. சிறு நீரக தொற்று நோய்களை குணப்படுத்தும். நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிரு நீரகத்தை பெறலாம்.

** முதுமை :

தேங்காய் பூவில் முக்கியமான முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. சுருக்கங்கள், வய்தான தோற்றம், சரும தொய்வு போன்றவை நம்மை நெருங்க விடாது. சூரியனால் உண்டாகும் சரும பாதிப்புகளை தடுக்கிறது.

ரியுமடாய்ட் ஆர்த்ரைடிஸ் எனும் மூட்டு வாத நோய்

உணவு விழிப்புணர்வு

ஆட்டோ இம்யூன் வியாதிகளும் கொழுப்பும்

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா

ரியுமடாய்ட் ஆர்த்ரைடிஸ் எனும் மூட்டு வாத நோய்

இந்தியாவில் சுமார் சுமார் மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் மூட்டு வாத நோயால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த மூட்டு வாத நோய் ஆட்டோ இம்யூன் வியாதிகளுள் மிக முக்கிய இடத்தில் இருப்பதற்கு காரணம்,
இந்த நோய் தரும் வலியும் அதனால் ஏற்படும் இயல்பு வாழ்க்கை முடக்கமும் தான் .

இத்தகைய கொடிய ஒரு நோய்
நம்மிடையே முன்னிலும் அதிகமாக கண்டறியப்பட்டு வருகிறது.

காரணம் ???

சூழலியல் மாற்றம்(environmental changes)
மரபு வழியாக வருகிறது ( hereditary )ஆகிய இரு காரணங்கள் கூறப்படுகிறது.

இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த இரு காரணங்களையும் தான்.

மனித இனம் தோன்றிய 26 லட்சம் வருடங்களில் இல்லாத ஜீன் எனும் மரபணு மாற்றங்கள் கடந்த 10,000 வருடங்களாக ஏற்பட்டு, அதுவும் கடந்த 100 ஆண்டுகளாக மிக வேகமாக ஏற்படுவதற்கு காரணம் என்ன???

சூழலியல் மாற்றம் என்றால் என்ன??

சூழலியலில் நாம் செய்த மிகப்பெரிய மாற்றங்களில்

நாம் தினமும் மூன்று வேலை உண்ணும் உணவு தான் முக்கிய இடம் வகிக்கிறது.

ஆக, தேவையற்ற முறையில் உணவு முறைகளை  மாற்றி நாம் தான் உறங்கிக்கொண்டிருந்த கெட்ட ஜீன்களை எழுப்பிவிட்டோம்.

அதன் பலனை இப்போது அறுவடை செய்கிறோம்.

மூட்டு வாத நோய் என்பது நமது மூட்டுகள் அனைத்தையும் ஒன்றாக தாக்கி இன்ப்லமேசனை ஏற்படுத்தி முடக்கிவிடும் நோயாகும்.

Arthritis என்றால் மூட்டுகளில் ஏற்படும் இன்ப்லமேசன் ஆகும்.

இந்த இன்ப்லமேசன் ஏன் ஏற்படுகிறது??

வரலாற்றில் எங்கேனும் ஒரு சூழலிலாவது "ட்ரேன்ஸ் ஃபேட்" (transfat) எனும் கொடிய நஞ்சை நமது முன்னோர்கள் உண்டார்கள் என்ற சான்று உள்ளதா??

ட்ரேன்ஸ் ஃபேட் என்றால் என்ன??

நாம் உண்ணும் ஒவ்வொரு பொறித்த உணவிலும் இருப்பது இந்த ட்ரேன்ஸ் ஃபேட் தான் . இவை நமக்கு செய்யும் ஊறுகள் ஒன்றல்ல இரண்டல்ல.

எண்ணெயின் கொதிக்கும் திறனை அதிகரிக்க , அவைகளின் மீது "ஹைட்ரஜனேற்றம்"(hydrogenation) எனும் வேதியியல் மாற்றம் செய்து நல்ல கொழுப்பை "ட்ரான்ஸ் ஃபேட்" ஆக மாற்றிவிட்டோம்.

இந்த ட்ரேன்ஸ் ஃபேட் நமது குடலில் பங்கத்தை ஏற்படுத்துகிறது.
இது "leaky gut syndrome" எனும் பிரச்சனையை வரவழைக்கிறது.

பாதிப்புக்குள்ளான குடலில் நாம் உண்ணும் உணவில் இருந்து உட்கொள்ளப்படும் அனைத்து சத்துகளும் ரத்தத்தில் கலக்கும்.

பொதுவாக , நல்ல நிலையில் இருக்கும் குடலுக்கு , தேவையான சத்துகளை மட்டும் உறிஞ்சி தேவையற்ற சத்துகளை வெளியேற்றும் சக்தி உண்டு.

ஆனால் லீக்கி கட் பிரச்சனை இருக்கும் குடலுக்கு , எதை உட்கொண்டு எதை விட வேண்டும் என்று தெரியாது. ஆக, அனைத்து சத்துகளையும் ரத்தத்தில் கலக்க விடும்.

இதனால், நமது எதிர்ப்பு சக்தியானது தடம்புரண்டு, நமது மூட்டுகளை அழிக்கும்.

மேலும் , தானியங்களை பிரதானமாக உண்ணும் ஒருவருக்கு

உடலில் பல இடங்களில் இன்ஃப்லமேசன் தோன்ற வாய்ப்புண்டு.

காரணம்.

மாவுச்சத்தை பிரதான எரிபொருளாக நமது செல்கள் உட்கொள்ளும்போது ,
நமது செல்களில் "free radicals" எனும் கழிவுகள் தோன்றும்.

இந்த free radicals நமது உடலுக்கு பங்கம் விளைவிக்கக்கூடியவை.

எனவே, காலை மதியம் இரவு மூன்று வேலையும் இட்லி தோசை சாதம் என்று உண்டால் அது மேலும் மூட்டு வாதத்தை அதிகப்படுத்தும்.

பொதுவாக , ஒருவருக்கு மூட்டு வாதம் இருப்பது ,

அவர்கள் கூறும் நோய் அறிகுறிகளை வைத்தே மூட்டு வாதம் வந்ததை அறியலாம்

கணுக்கை, விரல்கள்,முழங்கை, முழங்கால் என்று அனைத்து மூட்டுகளிலும் புண் ஏற்பட்டு வலி தரும்.

ரத்த பரிசோதனை செய்தால்,
ரியுமடாய்ட் ஃபேக்டர் எனும் காரணி இருக்கலாம்.

நோயின் ஆரம்பத்தில், ரத்தத்தில் தென்படாமல் போகப்போக தென்படலாம்.

Erythrocyte sedementation rate எனும் ரத்த சிவப்பணுக்கள் படியும் தன்மை மிக அதிகமாகும்.

C-reactive proteins எனும் இன்ப்லமேசனை குறிக்கும் காரணி மிக மிக அதிகமாக இருக்கும்

ஆண்ட்டி நியூக்ளியர் ஆண்டிபாடிகளும் ரத்தத்தில் அதிகம் இருக்கலாம்.

இத்தகைய மூட்டு வாதத்திற்கு , தற்போது இருக்கும் சிகிச்சைகள்

மூட்டு வலியை குணப்படுத்தும் வலி நிவாரணிகள் மற்றும் நோயின் தன்மையை மாற்றும் மருந்துகள் என்று அழைக்கப்படும் disease modifying anti rheumatoid drugs (DMARDs) கொடுக்கப்படும்.

இவை மூட்டு வாதத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை.

ஒருவர் மூட்டுவாதத்திற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு கூட உணவில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் மூட்டு வாதம் தரும் துன்பங்களில் இருந்து விடுதலை பெறலாம்

மூட்டு வாதம் இருப்பவர்கள்

1. தானியங்கள், சிறு தானியங்களை தவிர்க்க வேண்டும்

2. க்ளூடன் கொண்ட கோதுமையை அறவே ஒதுக்க வேண்டும்.

3. முடிந்தவரை இயற்கை வழியில் விளைந்த ஆர்கானிக் காய்கறிகளை உண்ணலாம் .

4. நாட்டுக்கோழி கறி, புல் மேய்ந்த ஆட்டு கறி , ஈரல் , ஆட்டுகால் சூப் போன்றவற்றை உண்ண வேண்டும்

5. பசு மஞ்சள், மிளகு, துளசி , பூண்டு, சிறு வெங்காயம் போன்றவற்றை சேர்த்தால் இன்ப்லமேசன் குறையும்

6. பாமாயில், சஃபோலா , சன் பிளவர் ஆயில், வனஸ்பதி போன்ற செயற்கை எண்ணெய்களை நிறுத்த வேண்டும் .

7. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், நெய் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.

8. எண்ணெயில் தீக்குளித்த உணவுகளை அறவே ஒதுக்க வேண்டும்.

இத்தகைய மாற்றங்களை உணவில் செய்வதன் மூலம்
மூட்டு வாதத்தின் தீவிரத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

Dr.farook Abdulla
நாளை

சோரியாசிஸ்

இயற்கையான முறையில் பற்களை பாதுகாக்க சில மருத்துவ குறிப்புகள்...!*

🍧☕ பயணம் 🍜உணவு🍿ஆரோக்கியம்

Today tips

🏵 *இயற்கையான முறையில் பற்களை பாதுகாக்க சில மருத்துவ குறிப்புகள்...!*

ஒவ்வொருவருக்கும் பற்கள் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இல்லாவிட்டால் அதனாலேயே நிறைய உடல்நல பிரச்ச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.  அதற்கு தினமும் இரண்டு வேளை பற்களை துலக்கினால் மட்டும் போதாது. உணவை சாப்பிட்டவுடன் வாயை கொப்பளிக்க வேண்டும்.
பல்லில் ஏற்பட்ட குழி தொற்றுக்குள்ளாகும் போது பல்வலி ஏற்படுகிறது. பல்லின் வேர் முனையை தொற்று அடைந்து சீழ் கட்டும்போது வலி தாக்க முடியாத  அளவு ஏற்படுகிறது.


வலியுள்ள பல்லின் மீது திரிகடுகுப் பொடியை வைத்து சிறிது நேரம் அழுத்திப் பிடித்திருந்தால் வாயினின்று உமிழ்நீர் கூடுதலாக வெளியேறும். வலி தணியும். 2  முறை வீதம் ஓரிரு நாட்கள் செய்தால் நன்கு பயனளிக்கும்.

பல் கூச்சத்தை பேக்கிங் சோடா கொண்டு சரிசெய்ய முடியும். அதற்கு ஒரு டம்ளர் நீரில் 1 சிட்டிகை பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு 2 வாரத்திற்கு ஒருமுறை வாயைக் கொப்பளிக்க பல் கூச்சத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

தினமும் காலையில் பற்களைத் துலக்கும் முன் தேங்காய் எண்ணெய் வாயில் ஊற்றி 5 நிமிடம் கொப்பளித்து துப்ப வேண்டும். இம்முறையால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

ஒரு துண்டு சுக்கை கால் லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சி பால், சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர பல் வலி தீரும். பற்களில் தொற்று ஏற்படாதவாறு உணவுத் துணுக்குகளை அகற்றி பற்களை சுத்தம் செய்ய வேண்டும். பல்துலக்க உப்பையே நன்கு பொடித்தும் பயன்படுத்தலாம்.


ஆலமரத்துப் பட்டையை பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல் வலி, பல் கூச்சம் உள்ளிட்ட பல் பாதிப்புகளுக்கு தீர்வு கிடைக்கும். இஞ்சி சாற்றில் தேன்  கலந்து குடித்தால் பல் வலி குணமாகும். உப்புடன் கொய்யா இலையைச் சேர்த்து அரைத்து, உலர்த்திப் பொடி செய்து பின்னர் பல் துலக்கலாம். இதன் மூலம்  பல் வலி மற்றும் ஈறு வீக்கம் குணமாகும்.

அக்காலத்தில் பற்களைத் துலக்குவதற்கு வேப்பங்குச்சியைப் பயன்படுத்தி வந்தனர். வேப்பங்குச்சியைக் கொண்டு தினமும் பற்களைத் துலக்கலாம் அல்லது  வேப்பிலையை நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, அந்த நீரால் தினமும் மூன்று வேளை வாயைக் கொப்பளித்து வாருங்கள்.


கிராம்பு, கொட்டைப் பாக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கினால் பல்வலி மறையும். கொய்யா இலையை மென்று தின்று வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் விலகும்.

Monday, August 6, 2018

இருதயகோளாறு, சிறுநீரக கோளாறு, சர்க்கரை, BP, கேன்சர் போன்றவற்றிற்கு காரணம் என்ன? எந்தவொரு மருந்து மாத்திரைகளும் இல்லாமல் நமக்கு நாமே சரி செய்வது எப்படி?

நோய்கள் என்று சொல்லப்படும் தும்மல், மூக்கு ஒழுகுதல்,சளி, இருமல், நெஞ்சு சளி, ஆஸ்துமா, வீசிங்.., வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், உடல் வலி, அல்சர், தோல் வியாதிகள், கண் சம்மந்தப்பட்ட நோய்கள், இருதயகோளாறு, சிறுநீரக கோளாறு, சர்க்கரை, BP, கேன்சர் போன்றவற்றிற்கு  காரணம் என்ன? எந்தவொரு மருந்து மாத்திரைகளும் இல்லாமல் நமக்கு நாமே சரி செய்வது எப்படி? என்று ""❤ ஹீலர் பாஸ்கர் ❤"" அவர்கள் பேசிய 5 வீடியோ YouTube லிங்க் இதில் உள்ளது. பார்ப்போம்! பயனடைவோம்!! பகிர்வோம்!!! வாழ்வோம் ஆரோக்கியமாக..

Anatomic Therapy 2015 One Day Camp HD Videos:

http://www.youtube.com/playlist?list=PLUw0Sq3WlkAx63hoVolOwOXw9mxpMbx2J

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...