Friday, June 29, 2018

ஒரு வரியில் பல வகை மருத்துவம்

ஒரு வரியில் பலவகை மருத்துவம் !

1. மாம்பழம்:

முக்கனிகளில் முதன்மையானது. இதில் உயிர்சத்து 'A' உள்ளதால் நல்ல கண் ஒளி தருகிறது. இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதினால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்.

2. வாழைப்பழம்:

தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் நம்மை அணுகாது.

3. முகம் வழுவழுப்பாக இருக்க:

கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்க போகுமுன் தடவி வந்தால் முகம் பளபளப்புடன் சுருக்கங்கள் நீங்கி பொலிவு தரும்.

4. இரத்த சோகையை போக்க:

பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கும்.

5. கர்ப்பிணிகள் சாப்பிட சிறந்தது:

தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கை, கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.

6. குழந்தைகளுக்கு:

குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுங்கள். கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும் ஆற்றல் உடையது.

7. உடல் சக்தி பெற:

இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1முடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.

8. வெட்டுக்காயம் குணமாக:

நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.

9. சுகப்பிரவசமாக:

ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

10. உடல் அரிப்பு குணம் பெற:

வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.

11. காதில் சீழ்வடிதல் குணமாக:

வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.

12. நெஞ்சுவலி குணமாக:

அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி வராது. அத்திப்பழம் இருதயத்தை பலப்படுத்துகிறது.

13. சிலந்தி கடிக்கு மருந்து:

தும்பை இலை சாறு எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து. தும்பை இலை சாறு சாப்பிடவும்.

14. சீதபேதி குணமாக:

புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிடி சீதபேதி குணமாகும்.

15. வயிற்று நோய் குணமாக:

சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிடி வயிற்று நோய் குணமாகும்.

16. காது வலி குணமாக: வெற்றிலை சாறை காதில் விட்டால் காதுவலி குணமாகும்.

17. நுரையீரல் குணமாக: நாயுறுவி செடியின் விதைகளை காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து போத்தலில் வைத்து தினசரி காலை, மாலை இரு வேளை 10 மில்லி பாலில் சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குணமாகும்.

18. பேதி குணமாக: மாங்கொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுத்தால் தண்ணீராக போகும் பேதி நிற்கும்.

19. வாதநோய் குணமாக: குப்பைமேனி இலை சாறு எடுத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர வாதநோய் குணமாகும்.

20. மலச்சிக்கல் சரியாக: அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 1 கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

21. மேகரோகம் குணமாக: ஆலம்பட்டையை பட்டு போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மேகரோகம் குணமாகும்.

22. நீரழிவு நோய் குணமாக: மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 1 கரண்டி வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.

23. இரத்த பேதியை குணப்படுத்த: அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை ஆகியவற்றை சமஅளவு பொடிசெய்து 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீத பேதி குணமாகும்.

24. மூட்டுவலி குணமாக: அத்திப்பாலை பற்று போட்டு வர மூட்டு வலி குணமாகும்.

25. நரம்பு தளர்ச்சி நீங்க: தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

26. பற்கள் உறுதியாக இருக்க: மாவிலையை பொடி செய்து பல் துளக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.

27. சேற்றுபுண் குணமாக: காய்ச்சிய வேப்பெண்ணெய் தடவி வர சேற்று புண் குணமாகும்.

28. மூலம் இரத்தம் வெளியேறுவதை நிறுத்த: வெங்காய சாறு 50 மில்லி, பசும்பால் 400 மில்லி, அதி மதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி பதமாகும் வரை கொதிக்க காய்ச்சி பத்திரப்படுத்தவும். இதனை நாள்தோறும் 1 கரண்டி வீதம் ஆறு நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

29. வயிற்றுவலி குணமாக: குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.

30. வயிற்று பூச்சிகள் ஒழிய: வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் 1 கரண்டி தேன் சேர்த்து கலக்கி காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட வயிற்று பூச்சிகள் தொந்தரவு இராது.

31. மலச்சிக்கல் தீர: பேயன் வாழைப்பழம் தோலுடன் பில்லையாக நறுக்கி பனங்கல்கண்டு சேர்த்து ஆமணக்கு எண்ணெய்யில் ஊற வைக்கவும் போத்தலை அன்றாடம் வெயிலில் வைக்கவும். 3 நாட்கள் ஊறிய பின் தினசரி 1 வில்லை எண்ணெய்யுடன் உட்கொள்ளவும். மலச்சிக்கல் தீரும்

32. குழந்தைகளுக்கு கண் சூடுதனிய: நெல்லிக்காய் சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுத்து வர கண்சூடு குணமாகும்.

33. இரத்தத்தை சுத்தப்படுத்த: இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட இரத்தம் சுத்தமாகும்.

34. கக்குவான் இருமல் குணமாக: நாயுறுவி கதிர், 1 சீயக்காய், 1 மஞ்சள் துண்டு சேர்த்து அரைத்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி கொதித்தவுடன் இறக்கி வைத்து கொள்ளவும். காலை, மாலை 1/2 டம்ளர் கொடுக்க குணமாகும்.

35. இரத்தம் உறைதல் குணமாக: நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் உறைவதை தடுக்கலாம்.

36. சொறி சிரங்கு குணமாக: கீழாநெல்லி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து பூசி 1 மணி நேரம் கழித்து குளிக்க சொறி சிரங்கு குணமாகும்.

37. சளி மூக்கடைப்பு தீர: கடுக்காய் பவுடர், நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் சாப்பிட சளி மூக்கடைப்பு குணமாகும்.

38. தலைவலி குணமாக: குப்பைமேனி சாறு தடவ தலைவலி குணமாகும்.

39. இரத்த கொதிப்பு குணமாக: அகத்தி கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வர இரத்த கொதிப்பு ஏற்படாது.

40. கண்வலி வராமல் தடுக்க: எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும். எத்தனை பூக்கள் விழுங்குகின்றமோ அத்தனை வருடம் கண்வலி வராது.

41. தொண்டை கரகரப்பு நீங்க: பூவரசன் வேர், பட்டை கஷாயம் செய்து கொப்பளித்து வர தொண்டை தொடர்பான பிணி அகலும்.

42. குடல்புண் குணமாக: மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.

43. கால்பித்த வெடிப்பு: அரசமரத்து பாலை பித்தவெடிப்பு மீது தடவிவர குணமாகும்.

44. இரத்தம் சுத்தமாக: தினசரி இலந்தை பழம் சாப்பிடுங்கள். இலந்தை பழம் இரத்தத்தை சுத்திகரித்து சக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பு உண்டாகும். பசியை தூண்டும்

45. முடிவளர்வதற்கு: கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வரவும். தலைமுடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் வளர்ந்து வரும்.

46. செருப்புக்கடி குணமாக: தென்னை ஓலையை தனலில் போட்டு கருக்கி பட்டு போல தூள் செய்து தேங்காய் எண்ணெய்யில குழப்பி பூசி வந்தால் மூன்றே நாளில் குணமாகும்.

47. கருப்பு முடியாக மாற்ற: காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர முடி கருமையாகும். முடி உதிர்வதை தடுக்கும்.

48. தொழுநோய் குணமாக: கடுக்காய் வேர், பட்டை இலை, பூ உலர்த்தி இடித்து சலித்து காலை, மாலை 1/2 கரண்டி பசும்பாலில் கலந்து உண்டு வர தொழுநோய் குணமாகும்.

49. பல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாக:

ஆலமரத்து பட்டையை பட்டு போல் பொடி செய்து வைத்து கொள்ளவும். வெந்நீரில் கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து 3 மாதம் சாப்பிட்டு வர பல் நோய் நீங்கும். பல் ஆட்டம், ஈறுகளின் தேய்மானம் தீரும். பல் கூச்சம், வாய் நாற்றம் விலகும்.

50. சதை போடுவது குறைக்க:

வாழை தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றை குடித்து வர உடல் பெருக்கம் குறையும். உடல் அழகு பெறும்.

51. தூக்கம் வர:

வெங்காயத்தை நசுக்கி அதன் விந்தை 1 சொட்டு கண்ணில் விட்டால் போதும். தூக்கம் வரும்.

52. உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்ற:

உடலில் கெட்ட நீர் உள்ளவர்கள் தினசரி பப்பாளிக் காயை சாப்பிட்டு வர துர்நீர் சிறுநீரின் வழியாகவும் வியர்வையின் வழியாகவும் வெளியேறும்.

53. கண்கள் குளிர்ச்சி:

கடுக்காய் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கி காயவைத்து பவுடராக்கி பாட்டிலில் வைத்து கொள்ளவும். தினசரி 3 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை சக்தி அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும். சளியினால் ஏற்படும் தலைவலி குணமாகும்.

54. வாந்தியை நிறுத்த:

துளசி சாறு, கல்கண்டு சேர்த்து சாப்பிட வாந்தி நிற்கும்.

55. பித்த வாந்தியை நிறுத்த:

வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.

56. வயிற்று கடுப்பு நீங்க:

அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

57. மந்தம் அஜீரணம் குணமாக:

கருவேப்பிலையை உலர்த்தி பொடி செய்து மிளகு, சுக்கு, சீரகம், உப்பு பொடியாக்கி கலந்து வைத்துக் கொள்ளவும். சோற்றுடன் 1 கரண்டி பவுடர் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் மந்தம் நீங்கும், மலக்கட்டு நீங்கும்.

58. சிறு நீர் எரிச்சல் குணமாக:

அன்னாசி பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

59. வாய் நாற்றம் போக:

நெல்லி, முள்ளி. தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் குடி நீரில் ஊறவைத்து காலையில் இந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்கவும். இதனால் வாய் நாற்றம் தீரும்.

60. சர்க்கரை வியாதி நீங்க:

கோவை பழம் தினசரி 1 சாப்பிட்டு வர சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.

61. தோல் வளம் பெற:

ஆலமரத்து பட்டைகளை பட்டுபோல் அரைத்து வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து வாரம் 1 முறை பருகி வந்தால் சரும நோய் வராது. தோலும் வளம்பெறும்.

62. வரட்டு இருமல் தனிய:

எலுமிச்சம் பழச்சாறு தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

63. கருப்பை கோளாறு நீங்க:

அரசஇலை கொழுந்து 10 - 20 எடுத்து அரைத்து மோருடன் பருகி வர கருப்பையில் தங்கிய அழுக்குகள், அடைப்புகள், கட்டிகள், கிருமிகள், சதை வளர்ச்சி ஆகியவை தூய்மை அடையும்.

64. தலைவலி :

ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

65. தொண்டை கரகரப்பு:

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

66. நெஞ்சு சளி:

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும்.

67. தொடர் விக்கல்:

நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

68. வாய் நாற்றம்:

சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

69. உதட்டு வெடிப்பு:

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வந்தால் உதட்டு வெடிப்பு குணமாகும்.

70. அஜீரணம்:

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.

71. குடல்புண்:

மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும்.

72. வாயுத் தொல்லை:

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.

73. வயிற்று வலி:

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்தால் வயிற்று வலி நீங்கும்.

74. மலச்சிக்கல்:

செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

75. சீதபேதி:

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

76. பித்த வெடிப்பு:

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

77. மூச்சுப்பிடிப்பு:

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

78. சரும நோய்:

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.

79. தேமல்:

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.

80. மூலம்

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.

81. தீப்புண்

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வந்தால் தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

82. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

83. வறட்டு இருமல்

எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் ;

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் ;

இது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு!! கடைசி வரை முழுமையாகப்படித்து விட்டுப் பின் உங்கள்
e-list இல் இருக்கும்  அனைவருக்கும் அனுப்புங்கள்!!

Dr. Stephen Makeover தீராத முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு , ஒரு மரபு வழியல்லாத சிகிச்சை முறை அளித்ததில், பெரும்பாலானோர், நோயிலிருந்து மீண்டிருக்கின்றனர்.

முதலில் அவர் , அவரது நோயாளிகளின், நோயைக் குணப்படுத்த
சூரிய சக்தியை பயன்படுத்தினார்.
உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி செய்யும் இயற்கை வழிச் சிகிச்சை முறையில் நம்பிக்கையுடையவர்.
அவரது கட்டுரையைக் கீழே பார்ப்போம்;

"புற்றுநோயைக் குணப்படுத்தும் உத்திகளில் இதுவும் ஒன்று!!
புற்றுநோயைக் குணப்படுத்தும் எனது சிகிச்சைமுறைகளில், சமீபகால வெற்றிவிகிதம் 80%.

புற்றுநோயாளிகள் மரணத்தைத் தழுவக்கூடாது.புற்றுநோயாளிக்கான சிகிச்சை ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது- அது நாம் பழங்கள் எடுத்துக் கொள்ளும் முறையில் உள்ளது.

நீங்கள் நம்புவீர்களோ இல்லியோ, இதுவரை வழக்கமான சிகிச்சை முறையில் இறந்த நூற்றுக்கும் அதிகமான புற்று நோயாளிகளுக்கான நான் வருத்தப்படுகிறேன்.

பழங்கள் சாப்பிடும் முறை;;

எல்லோரும் நினைப்பது பழங்கள் சாப்பிடுவது என்றால்,அவற்றை விலைக்கு வாங்கி, வெட்டி, வாயிலிட்டு சாப்பிடுதல் என்று.

நீங்கள் நினைப்பது போல் எளிதானதல்ல அது. பழங்களை 'எப்படி' அதுவும் '*எப்போது'* சாப்பிடவேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

பழங்களைச் சாப்பிடும் சரியான முறை என்ன?

பழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல!!

பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்!!

பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும்
வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது!!

பழங்கள் ஒரு முக்கியமான உணவு;

சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம்.

பழத்துண்டு வயிற்றின் வழியே நேராகக் குடலுக்குள் செல்லத் தயாராக இருக்கிறது. ஆனால் பழத்திற்கு முன்னால் எடுத்துக்கொண்ட
'பிரட்' டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது.

இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது.

பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது.

அதனால் தயவு செய்து பழங்களை *வெறும் வயிற்றில்* அல்லது #உணவுக்கு முன்# சாப்பிடுங்கள்.!!

பலர் புகார் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள்.

""ஒவ்வொரு முறை நான் தர்ப்பூசணி பழம்( Watermelon) எடுக்கும்போதெல்லாம் எனக்கு ஏப்பம் வருகிறது, எப்போது நான் துரியன் பழம் சாப்பிட்டாலும் வயிறு ஊதிக் கொள்கிறது, எப்போது நான் வாழைப்பழம் சாப்பிட்டாலும், அவசரமாக கழிவறைக்கு ஓட வேண்டியிருக்கிறது, இன்னும் பல .. . . .

உண்மையில் நீங்கள் வெறும் வயிற்றில் பழம் எடுத்துக் கொண்டால், இந்த மாதிரி நிலைமை தோன்றாது!

உணவுக்குப் பின் பழம் எடுக்கும் போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால் , வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது!!

நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவை யெல்லாமே, வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால்,
** நடக்காமல் தடுக்கப்படும்**

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களெல்லாம் அமிலத்தன்மையுடையவை என்பதெல்லாம் உண்மையில்லை! ஏனென்றால் Dr. Herbert Shelton என்பவர் இந்த. வகையில் ஆராய்ச்சிகள் செய்து. கூறியதன்படி,எல்லாப் பழங்களும், நமது உடலுக்குள் சென்றதும் காரத்தன்மையுடையவையாகின்றன.

சரியான முறையில் பழங்கள் சாப்பிடும் வகையை முழுவதுமாக அறிந்து கொண்டால், நமக்கு, அழகு,நீண்ட ஆயுள்,உடல் ஆரோக்கியம், உடலுக்குத் தேவையான சக்தி, மகிழ்ச்சி, மற்றும் சரியான எடை இவற்றைப் பெறும் **ரகசியம்** கிடைத்து விடும்.

3)நீங்கள் பழச்சாறு அருந்தும் தேவை ஏற்படும்போது, **புதிதான** பழச்சாறுகளையே அருந்துங்கள். டின், பாக்கட்,மற்றும் பாட்டில் இவற்றில் அடைக்கப்பட்ட ரெடிமேட் பழச்சாறுகள்**வேண்டாம்**.

சூடாக்கப்பட்ட பழச்சாறுகளையும் குடிக்க வேண்டாம்.

பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களையும் உண்ணாதீர்கள்.ஏனெனில் அவற்றிலிருந்து உங்களுக்கு எந்த விதமான சத்துக்களும் கிடைக்காது.

சமைத்த பழங்களில் அதிலுள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப் படுகின்றன.உங்களுக்கு அதன் சுவை மட்டுமே கிடைக்கிறது.

ஆனால் பழச்சாறு சாறு அருந்துவதை விட , பழங்களை முழுதாகச் சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

நீங்கள் பழச்சாறு குடிப்பதாயிருந்தால், மடமடவென்று குடிக்காமல்,மெதுவாக ஒவ்வொரு வாயாக அருந்தவும்.ஏனென்றால், நீங்கள் பழச்சாறு விழுங்குவதற்கு முன், அதனை வாயிலுள்ள உமிழ்நீரோடு நன்கு கலக்கச் செய்து பின் உள்ளே அனுப்பவும்.

உங்கள் உடல் உறுப்பக்களைச் சுத்தம் செய்யவும், உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும். ஒரு 3- நாட்கள் பழங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.

அந்த 3 நாட்களும், பழங்களை மட்டும் சாப்பிட்டு, மற்றும் புதிதாய் எடுக்கப்பட்ட பழச்சாறுகளையும் மட்டுமே நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த டயட்டின் முடிவு நீங்களே ஆச்சரியப் படும்படி, நீங்கள் மிகவும் அழகாய், வனப்புடன் தோற்றமளிப்பதாய் உங்கள் ஃபிரண்ட்ஸ் கூறும்போது உணர்வீர்கள்.

கிவி பழம்;

இது ஒரு சிறிய ஆனால் வலிமை மிகுந்த பழம்.
இப்பழம் பொட்டாசியம், மக்னீஷியம், விட்டமின்- ஈ. மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஓர் நல்ல பழம்.
ஆரஞ்சுப் பழத்தை விட விட்டமின்-சி சத்து கிவி பழத்தில் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.

ஆப்பிள்;
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என எடுத்துக் கொண்டால். நோயின்றி வாழலாம் என்று சொல்வது உண்மையே!

ஆப்பிளில் விட்டமின்-சி சத்து குறைவாக இருப்பினும்,அதில் உள்ள antioxidants ,flavonoids போன்றவை இந்த விட்டமின் - சி சத்துக்களை மேம்படுத்துவதால், பெருங்குடல் புற்று நோய்,மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துக்களைக் குறைக்கிறது!

ஸ்ட்ராபெர்ரி ;
பாதுகாப்பு தரும் பழம்.
இந்தப் பழத்தில் மற்ற எல்லாப் பழங்களையும் விட. மொத்த Antioxidant சக்தி இருப்பதால்,இது நம் உடலில் சுதந்திரமாய் கட்டுப்பாடற்று பல்கிப் பெருகும் அடிப்படைக் கூறுகளால் ( free radicals) இரத்த நாளங்களில் அடைப்பு, புற்று நோய்க் காரணிகள் பெருகுதல் முதலியவை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கிறது.

ஆரஞ்சு;
இனிப்பான மருந்து.

ஒரு நாளைக்கு 2-4 ஆரஞ்சு எடுப்பது ஜலதோஷத்தை விலக்கும்.கொழுப்பைக் குறைக்க உதவும்.மேலும் சிறுநீரகக் கற்களைக் கரைப்பதோடு, கற்கள் வராமலும் தடுக்கும்.
அதனுடன் பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்தினைக் குறைக்கிறது.

தர்பூசணி;

மிகவும் குளிர்ச்சியான ஒரு தாகம் தீர்ப்பான்.
92% தண்ணீர்ச் சத்துக்களையுடையது.
மேலும் இந்தப் பழத்தில் மாபெரும் அளவில் Glutathione இருப்பதால்,அது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மேலும் இது lycopene. என்னும் புற்று நோயை எதிர்த்துப் போராடும் ஒரு oxidant இன் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது.
தர்ப்பூசணியில் உள்ள மற்ற சத்துக்கள் விட்டமின் -சி , பொட்டாசியம் ஆகியவை.

கொய்யா& பப்பாளி

இவை இரண்டுமே விட்டமின் - சி நிறைந்தது.உயர் விட்டமின்-சி கொண்ட பழங்களைத் தேர்வு செய்தால் சந்தேகத்துக்கிடமின்றி வெற்றி பெறும் தகுதியுடையவை.
கொய்யாப்பழம் நார்ச்சத்து அபரிமிதமாக உள்ளதால், மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.

பப்பாளிப்பழம் Carotene சத்துக்கள் நிறைந்தது எனவே கண்களுக்கு மிகவும் நல்லது.
##################
உணவிற்குப் பிறகு குளிர்ந்த தண்ணீர் அல்லது பானங்கள் குடிப்பது = புற்று நோய்.

இந்த தகவலைப் பெறும் ஒவ்வொரு நபரும், 10 நபர்களுக்காவது இத்தகவலை அனுப்பினால்,நிச்சயமாய் ஒரு உயிரையாவது காப்பாற்றலாம் செய்வீர்களா?

Thursday, June 28, 2018

அனைத்து கட்டிகளையும் கரைக்க பயன்படும் சிறந்த மூலிகையான நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளிச்செடி

உடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் கரைக்க பயன்படும் சிறந்த மூலிகையான நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளிச்செடியை ஏன் பயன்படுத்த தவறினோம்?

புற்றுநோய் கட்டிகள், கட்டிகள் உடலில் ஏன் உருவாகிறது? நமது இரத்தத்தில் உள்ளபல விதமான செல்கள் கனிம கரிம பொருட்கள் கலந்து உள்ளது இவைகள் தான் உடல் செல்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. டிபன்ஸ் மெக்கானிசம் எனப்படும் உடல் செல்களின் தற்காப்பு செயலுக்கு இரத்த அணுக்கள் பெரிதும் உதவுகின்றன நமது உடலுக்குள் நுழையும் நூண்னுயிரிகளை இரத்த அணுக்கள் சண்டையிட்டு அழித்து விடுகின்றது இந்த கழிவுகள் தோலின் வழியாக வெளியேற்ற படுகின்றன. இந்த கழிவுகள் வியர்வை துவாரங்களை அடைத்து உடலில் கட்டிகளை உண்டு பன்னுகிறது.... இந்த கழிவுகள் சிறிது சிறிதாக திரண்டு பெரிதாகி சிவந்து,உடைந்து,சீழாக வெளியேறிய பின்பு புண்ணாக மாறி உடல் ஏற்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி மூலமாக புண் ஆறி விடுகிறது இது தான் இயற்கையான நிகழ்வு அதாவது கிருமிகளை கிருமிகளே அழித்து உடலில் இருந்து வெளியேற்றி உடலை பாதுகாக்கிறது தோலின் தன்மையை கெடுக்கும் சன்ஸ்கிரின் லோசன் மற்றும் அதிகப்படியான கிரீம்களை பயன்படுத்தும் அமெரிக்கா ஐரோப்பியா நாடுகளில் அதிகப்படியான புற்றுநோய் உருவாகிறது என்பதற்கான காரணத்தையும் புரிந்து கொள்ளலாம்....

நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளியின் மருத்துவ பயன்பாட்டுக்கு மிக முக்கிய காரணம் இதில் உள்ள நுண்ணூட்டங்களே, மிகையாக. உள்ள கால்சியம், பொட்டாசியம்,பாஸ்பரஸ், மெக்னீசியம் சத்துகளும்  உயர்தரமான நார்சத்தும் நிறைந்து உள்ளது இதில் விட்டமின் B மிகவும் அதிகமாக இருக்கும். இதில் இருக்கும் மிகையான பொட்டாசியம் இரத்த அழுத்தம் மிகையாகாமல் பாதுகாக்கிறது இரத்த நாளங்களில் உள்ள கழிவுகளை நீக்கி இதய நோய்கள் வராமலும் பாதுகாக்கும்.

வரண்ட நிலங்களில் ஆடு மாடு மேய்க்கும் போது நாவரட்சிக்கும், வெய்யில் ஏற்படுத்தும் உடல் சோர்வை போக்கவும் உஷ்ணத்தை குறைக்கவும் இந்த சப்பாத்தி கள்ளி பழம் உதவி புரியும்.

பழங்குடியினர் மத்தியில் இந்த சப்பாத்தி கள்ளி சிறந்த உணவாக மருந்தாக பயன்படுத்துவதை நான் உணர்ந்து இருக்கிறேன். நாங்கள் தொலை தூரமாக காடுகளில் திரியும் போது ஓடைகளில் தேங்கி இருக்கும் அசுத்தமான நீரை நன்னீராக மாற்ற சப்பாத்தி கள்ளியின் மடலில் உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து கலங்கிய அசுத்தமான நீருடன் கலந்து வைக்க சிறிது நேரத்தில் சுத்தமான நீர் மட்டும் கிடைக்கும் கழிவுகள் வீழ்படிவாக கீழே இருக்கும் இந்த தண்ணீரை குடிக்கும் போது உடலானது பெரும் ஆற்றல் பெருகிறது புத்துணர்வுடனே இருக்கும் எவ்வளவு தூரம் நடந்தாலும் சோர்வோ பசியோ எடுக்காது இது எனது அனுபவத்தில் உணர்ந்தது. இருளர் இனமக்கள் கக்குவான் நோய்க்கு இதன் பழத்தை நெருப்பில் வாட்டி குழந்தைகளுக்கு கொடுக்க பூரண குணமாவதையும் நான் அறிவேன்.

நாகதாளியின் பயன்பாடுகள்.

1.சப்பாத்தி கள்ளியின் பசையை மேல் பூச்சாக  பயன்படுத்தி வீக்கத்தை போக்கலாம்.

2.உடலில் ஏற்படும் எந்தவொரு கட்டியாக இருந்தாலும் இதன் மடலின் உள்ளே இருக்கும் சோற்றுடன் குவாட்ஸ் எனப்படும் வெள்ளைகல்லை அறைத்து  இரண்டையும் சமமாக சேர்த்து அறைத்து  கட்டிகளின் மீது பற்று போட கறைந்து விடும் அதுவும் அக்குள் கழுத்து பகுதிகளில் வரும் கட்டிகளுக்கு சிறந்த மருந்து இதுவே. ஓரிரு நாளில் கட்டி கரைந்து விடும்.

3.நாகதாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் குரல்வளை, பித்தப்பை,மலக்குடல், சார்ந்த அனைத்து குறைபாடுகளும் நீங்கும். காச இருமல், இரத்தம் கக்குதலும் தீரும்.

4. வைரஸ் காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களுக்கு பித்தப்பை வீங்கி விடும் இதனை சுரக்கட்டி(Enlargement of Spleen) என்பார்கள் இதனை தீர்க்க நாகதாளி பழத்தை கொடுக்க உடனடியாக குணம் கிடைக்கும்

5.ஞாபகமறதி எனப்படும் அல்ஸைமர் நோய்க்கு இது மருந்தாக பயன்படுத்தலாம் இந்த பழத்தை தொடர்ந்த எடுத்துகொள்ள கண் பார்வை கூர்மையாகிறது என்றும் ஏடுகளில் உள்ளது.

6.சப்பாத்தி கள்ளி பழத்தில் இருக்கும் உயர்தரமான நார்சத்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கறைத்து வெளியேற்றி உடல் பருமனை குறைக்கிறது அதனால் தான் பிரேசில் போன்ற நாடுகளில் இதிலிருந்து எடுக்கப்படும் Extract உடல் குறைப்புக்கு மருந்தாக பல நூறு கோடி ரூபாய்க்கான வியாபாரம் நடைபெறுகிறது என்பதையும் உணருவோம் . சித்த மருத்துவத்தில் இதனை தீ நீராக செய்து பயன்படுத்தி வந்தால் உடல் குறையும் சர்க்கரை நோயும் கட்டுபடுகிறது என்று குறிப்புகள் உள்ளது.கல்லீரல் பாதிப்படைந்து உருவாகும் மகோதிரம் எனப்படும் பெருவயிறு நோய்க்கு இது சிறந்த மருந்தாகும்.

உலகின் மிகச்சிறந்த இயற்கை உரம் சப்பாத்தி கள்ளி என்றால் மிகையாகாது....

தென்னை மரத்தை சுற்றி இரண்ட்டிக்கு குழி எடுத்து அதில் சப்பாத்தி கள்ளியின் மடல்களை வெட்டி பரப்பி இதன்மீது கொஞ்சம் கல்உப்பையும் அடுப்பு கரியையும் போட்டு மண் மூடி விட ஆறு மாதத்தில் தென்னை மரம் கருகருவென்று இருப்பது மட்டுமின்றி தென்னம் பிஞ்சு உதிர்வது அப்படியே மட்டுபடும் ஒரு வருடத்தில் சுமார் 300 தேங்காய் வரை காய்க்கும் தென்னையை தாக்கும் பலவிதமான நோய்கள் நெருங்கவே நெருங்காது இதுவும் அனுபவ ரீதியான உண்மை.

நிலங்களில் இதனை பயன்படுத்துவதில் உள்ள சிரமம் இதில் உள்ள கூர்மையான முட்கள் தான் அதனை போக்க எளிய வழிமுறை. வெட்டி போடபட்ட மடல்களின் மீது  எள்ளுபுண்ணாக்கை தூவ ஒரு வாரத்தில் முட்கள் இருந்த இடம் தெரியாமல் அழுகிவிடும் பிறகு அத்தனை வயல்களிலும் பயன்படுத்தி மண்ணை வளமாக்கி கொள்ளலாம்.

ஆடு மாடு மேய்க்கும் போது கால்களில் இந்த முள் ஆழமான சென்று விடும் அப்பொழுது எள்ளை அரைத்து முள் உள்ள இடத்தில் கட்ட ஒரிரு நாளில் தூள் தூளாக வந்து விடும்.

தென்அமெரிக்க பழங்குடியினர் இதனை உணவு பொருளாகவே பயன்படுத்தி வருகின்றனர் Tunas என்ற பெயரில் இதன் பழங்கள் விற்க்கபடுகிறதாம்.எங்கோ படித்தது.

இவ்வளவு சிறப்பான சப்பாத்தி கள்ளி பழத்தை நாமும் பயன்படுத்த முயல்வோம் ஏனெனில் இன்று புற்றுநோய் ஓர் பயமுறுத்தும் வகையில் உருவெடுத்து வருகிறது. இந்த பழத்தில் இருக்கும் Flavonoid,Polyphenol போன்ற வேதி பொருட்களால் புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கும் பண்பு உள்ளது என மேலை நாட்டு ஆய்வுகள் கூறுகிறது இந்த பழம் Antioxidant ஆக செயல்பட்டு உடல் செல்களுக்கு அதிகபடியான ஆக்சிஜனை கொண்டு செல்கிறது ....

நமக்கு தெரியும் இரத்த ஒட்டம் தடைபெற்ற இடங்களில் தான் புற்றுநோய் செல்கள் உருவாகிறது உடலில் உள்ள செல்களுக்கு அதிகபடியான ஆச்சிஜன் தேவை புற்றுசெல்களுக்கு சிறிதளவு ஆச்சிஜனே போதும். அதனால் தான் இவைகள் பல்கி பெருகி வருகிறது இந்த பழத்தில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் செல்களுக்கு ஆக்சிஜனை  அதிகரித்து புற்றுசெல்களை அழிக்க உதவி புரிகிறது....

எல்லா இடங்களிலும் எளிமையாக கிடைக்கும் சப்பாத்தி கள்ளி பழம். கொஞ்சம் மெனகெட்டாலே போதும். இது நமக்கான உணவு மருத்துவம். செலவில்லாத சிறந்த உணவு மருந்து.

Wednesday, June 27, 2018

தண்ணீர் தண்ணீர்

ஆங்கிலேயன் கற்றுக் கொடுத்த கெட்டப் பழக்கம்
 
காபி, டீ இவை இரண்டும் ஆங்கிலேயன் நமக்கு கற்றுக் கொடுத்த கெட்ட பழக்கம். இது தேவை இல்லாத பழக்கமும் கூட

ஒரே ஒரு மாதம் காபி, டீ அருந்துவதை நிறுத்துங்க. அதற்கு பதில் தண்ணீர் நிறைய குடிங்க பிறகு நடப்பதை பாருங்க ....

ஒரு மாதம் காபி, டீ, சோடா பானங்கள் போன்றவற்றைத் தவிர்த்து, தண்ணீரை மட்டும் குடித்து பாருங்கள். நிச்சயம் நீங்கள் நல்ல மாற்றத்தைக் காணலாம். இங்கு நீரைக் குடிப்பதால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.

ஆய்வுகளில் ஒரு நாளைக்கு ஒருவர் குளிர் பானங்கள், காபி, டீ அல்லது இதர பானங்களின் மூலம் 300-500 கலோரிகளை எடுப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் தவிர்த்து வெறும் தண்ணீரை மட்டும் குடிப்பதால், கலோரிகளின் அளவு குறைந்து உடல் எடை குறைவதைக் காணலாம்.

‎மூட்டுகள்‬ ஆரோக்கியமடையும்

உடலில் தண்ணீர் மிகவும் முக்கியமானது. அதிலும் மூட்டுகளுக்கு அருகில் உள்ள பாதிக்கப்பட்ட குருத்தெலும்புகளின் உருவாக்கத்திற்கு தண்ணீர் மிகவும் அவசியம். ஆகவே உங்கள் எலும்புகள் மற்றும் மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தண்ணீரை அதிகம் குடியுங்கள்.

ஆரோக்கியமான‬ இதயம்

தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிப்பது, இரத்த ஓட்டத்தை சீராக வைத்து, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டுடன் வைக்கும். நிபுணர்களும், தூங்கும் முன் சிறிது தண்ணீர் குடிப்பதால், இதய பிரச்சனைகள் வருவது குறைவதாக சொல்கின்றனர்.

‎ஆற்றல்‬ நிலையாக இருக்கும்

சோடா அல்லது குளிர் பானங்கள், காப்ஃபைன் போன்றவற்றைக் குடிக்கும் போது, உடலின் ஆற்றல் ஒரே நேரத்தில் வேகமாக அதிகரித்து, வேகமாக குறையும். ஆனால் தண்ணீரை அதிகம் குடித்து வந்தால், உடலுறுப்புக்களின் செயல்பாடு சீராகி, உடலின் ஆற்றல் நிலையாக இருக்கும்

‎முதுமை‬ தடுக்கப்படும்

தினமும் போதிய அளவில் தண்ணீரைக் குடித்து, காபி, டீ, ஆல்கஹாலுக்கு 'நோ' சொல்லி இருந்து பாருங்கள். உங்கள் சரும செல்களுக்கு வேண்டிய நீர்ச்சத்து கிடைத்து, சரும பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, சருமம் ஆரோக்கியமாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்கும்.

‎எடை‬ குறையும்

தண்ணீரைக் குடிக்கும் போது உடலுறுப்புக்களில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் அழுக்குகள் வெளியேற்றப்படுவதால், உடல் எடையில் சிறிது மாற்றத்தைக் காண முடியும்

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...