Sunday, August 13, 2017

சோற்றுக் கற்றாழை. !!!! குமரியை வெல்ல குமரியை உண்க!

குமரியை வெல்ல குமரியை உண்க!

சோற்றுக் கற்றாழையைபனங்கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட்டுவர வயாகரா இன்றி இளைஞர்களின் இல்வாழ்க்கை அளவோடு சிறக்கும்.இதைத்தான் சித்தர்கள் தங்களுடைய பரிபாஷையில் ‘குமரியை வெல்ல குமரியை உண்க’ என்றுகுறிப்பிட்டுள்ளனர்.

மகரி தேரையரின்பாடலில் செப்பிய
“பொல்லா மேகம் கபம் புல்  சூலை
குட்டம்  ரசம் அல்லார் மந்தம் பகம் தரும் குன்மம் எல்லாம் விட்டு ஏகும்
அரிக்கும் எரிச்சர் கிரிச்சரமும் மாறும்இவை
குமரிக்கு மருண்டு”

வியப்பூட்டும் கற்றாழை ரகசியம்

ஆரோக்கியம், அழகு என இரண்டு ஏரியாவிலுமே சொல்லி அடிக்கும் கில்லி என்று கற்றாழையைச் சொல்லலாம். சாதாரண உடல் சூட்டிலிருந்து புற்றுநோய் வரை அத்தனைக்கும் நிவாரணமாகும் திறன் கொண்டது கற்றாழை. இதன் அருமையை உணர்ந்த சித்தர்கள், நீண்ட நாட்கள் வாழ்வதற்கு உறுதுணையாகும் வகையில் காயகல்ப மருந்தாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.கற்றாழையின் மருத்துவ மற்றும் வரலாற்றுச் சிறப்புகளைப் பற்றி விளக்குகிறார் சித்த மருத்துவர் வெங்கடேசன்.

உடலை உறுதியாக்கும் கற்றாழை!

உடலை உறுதியாக்கி நோய்களை அருகில் வரவிடாமல் செய்யும் ஆற்றல் கொண்டது கற்றாழை. இதை உணர்ந்துதான் சித்தர்கள் அதைக் கொண்டு காயகல்ப மருந்தாக செய்து பயன்படுத்தியிருக்கிறார்கள். நாமும் செய்து பின்பற்றக் கூடிய எளிய முறைதான் இது.
கற்றாழையின் உட்பகுதியில் உள்ள ஜெல் போன்ற பகுதியான சோற்றை எடுத்து 7 முறை நீரில் நன்றாகக் கழுவ வேண்டும். அதை சிறுசிறு துண்டுகள் போன்று வெட்டி, அதன்மீது பனங்கற்கண்டு சிறிது தூவிக் கொள்ள வேண்டும். இதை மூன்றிலிருந்து ஐந்து ஸ்பூன் அளவில் பகல் நேரத்தில் மட்டும் ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் உடல் உறுதியாகும்.

உடல் குளிர்ச்சிக்குக் கற்றாழை !

வெப்பம் மிகுதியால் ஏற்படக்கூடிய உடல்நல பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணியாக கற்றாழை உள்ளது. உடல் சூட்டைக் குறைப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கற்றாழை உதவுகிறது. சர்வரோக நிவாரணிநமது உடல் ஆரோக்கியமாக செயல்படுவதற்குத் தேவையான 22 அமினோ அமிலங்கள் கற்றாழையில் உள்ளது.

வைட்டமின்கள் A, B1, B2, B3,B5, B6, B12, C, E, மற்றும் துத்தநாகம், செலினியம், கால்சியம், மாங்கனீசு, மெக்னீசியம், குரோமியம், தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாதுக்களும் இதில் உள்ளன. பெருங்குடலை சுத்தம் செய்து, மலத்தை வெளியேற்றும் Aloin, Emodin போன்ற Anthraquinones என்கிற வேதிப்பொருளும், ஜீரண சக்தியை அதிகரிக்கும் Amylases, Bradykinases, Catalases, Phosphokinases போன்ற நொதிகளும், சருமத்தைப் பாதுகாக்கத் தேவையான Lignins போன்றவையும் உள்ளன.

கற்றாழையில் உள்ள Salicylic Acid மற்றும் Saponins, Sterols ஆகியவை புண்களை ஆற்றுவதில் பெரும்பங்கு வகிக்கிறது. இவை அனைத்தும் ஒருமித்த முறையில் செயல்படுவதால் கற்றாழையை சர்வரோக நிவாரணி என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

புற்றுநோய்க்குத் தீர்வு

ஆரம்பநிலை புற்றுநோய்களுக்கு கற்றாழை நல்ல தீர்வளிப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் Acemannan இதில் உள்ளது. இதை பயன்படுத்தி தற்போது எய்ட்ஸ் மற்றும் புற்றுநோய்களுக்கான மருந்துகள் தயாரித்து அமெரிக்க நிறுவனம் ஒன்று விற்பனை செய்து வருகிறது. ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல; அழகுக்கும்!

பெண்களின் சரும பராமரிப்பில் தனிச்சிறப்பு பெற்றது கற்றாழை. சருமம் பளபளப்பாக இருப்பதோடு பல்வேறு சரும நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும் கற்றாழை உதவுகிறது. சோற்றுக் கற்றாழையை வெட்டி எடுத்து, அதில் சிறிது மஞ்சள் பொடியைக் கலந்து குழைத்து, உடல் முழுவதும் தேய்க்க வேண்டும். அதன்பிறகு அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான சுடுநீரில் குளிக்க வேண்டும். இது போல் வாரத்துக்கு இரண்டு நாள் குளித்து வந்தால் பெண்களின் சருமம் மிளிரும். பேரழகி என்று வர்ணிக்கப்படும் கிளியோபாட்ரா சோற்றுக் கற்றாழையைப் பயன்படுத்தி தன்மேனி அழகை பாதுகாத்துக் கொண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் உண்டு.

மலச்சிக்கலுக்கு முழுமையான நிவாரணம்சோற்றுக் கற்றாழையை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, ஆமணக்கு எண்ணெயில் கலந்து அத்துடன் சிறிது சின்ன வெங்காயம், சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் போன்றவற்றை சேர்த்து காய்ச்சி, லேகிய பதத்தில் தயார் செய்து கொள்ள வேண்டும். மலச் சிக்கல் ஏற்பட்டு அவதிப்படும்போது இதனை ஒரு ஸ்பூன் அளவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் முழுமையாக குணமாகும்.

கூந்தல் வளர்ச்சிதேங்காய் எண்ணெய், சோப்பு, ஷாம்பூ போன்றவை தயாரிக்கும்போது, அவற்றுடன் கற்றாழை கலக்கப்படுகிறது. கற்றாழை பால் எடுத்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி ஆறிய பிறகு பாட்டிலில் வைத்து தலைக்கு தேய்த்து வந்தால் தலைமுடி உதிர்வது குறைந்து, முடி கருமையாக இருக்கவும், நன்கு வளர்வதற்கும் உதவுகிறது. 

புண்களை ஆற்றும் கற்றாழைகாயங்கள் ஏற்பட்டவுடன் கற்றாழையின் சோற்றை எடுத்து அதன் மீது தடவிவர கொப்பளங்கள் மறைந்த

ு புண்கள் குணமாகும். அல்சர் என்கிற வயிற்றுப்புண், மூலநோய் போன்றவற்றுக்கும் சோற்றுக் கற்றாழை சிறந்த நிவாரணம். வாய்ப்புண் மற்றும் நாக்கில் ரணம் வந்து அவதிப்படுபவர்கள் கற்றாழையை வெந்தயப்பொடி கால் ஸ்பூனுடன் கலந்து சாப்பிட்டுவந்தால் புண்கள் ஆறும்.  அலெக்ஸாண்டருக்கு உதவிய கற்றாழை!

ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களை வெற்றி கொண்ட பிறகு, அடுத்த போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தார் மாவீரன் அலெக்ஸான்டர். தொடர்ந்து போர்க்களத்திலேயே வீரர்கள் இருந்ததால் என்ன செய்வது என்று குழப்பம் அலெக்ஸாண்டருக்கு வந்தது.
உடனே தன்னுடைய குருவான அரிஸ்டாட்டிலிடம் ஆலோசனை கேட்டார்.

அப்போதுதான் சோற்றுக் கற்றாழையைத் தொடர்ந்து 15 நாட்கள் காயங்களின்மீது தடவி வந்தால், புண்கள் ஆறும் என்று ஆலோசனை கூறினார் அரிஸ்டாட்டில். கற்றாழையைப் பயன்படுத்தி வீரர்களின் காயங்களை குணமாக்கிய பிறகு மீண்டும் பழைய உற்சாகத்தோடு போருக்கு வீரர்களை அழைத்துச் சென்று மேலும் பல வெற்றிகளைப் பெற்றார் அலெக்ஸாண்டர்.

யார் சாப்பிடக்கூடாது?

கற்றாழை குளிர்ச்சியானது என்பதால் ஆஸ்துமா, சளி, இருமல் போன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் சோற்றுக் கற்றாழை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

வீட்டில் வளர்க்கும் முறை

கற்றாழை ஒரு செடி வைத்தால் அதனருகே சிறிய சிறிய செடிகளாக வளரக்கூடியது. இதுபோன்ற ஒரு சிறிய செடியை அடிவேருடன் எடுத்து சின்ன சின்ன தொட்டிகளில் வைத்து வீடுகளில் எளிதாக வளர்க்கலாம். தோட்டங்கள் போன்ற மண் தரையில் ஒரு இடத்தில் ஒரு செடியை வைத்து நீரூற்றி வந்தால், பக்கத்திலேயே அடுத்தடுத்து சிறுசிறு செடிகளாக வளர்ந்து பல்கிப் பெருகக்கூடியது கற்றாழை.

“பொல்லா மேகம் கபம் போக்கும் கற்றாழை”
.
   இதற்கு தழிழ் மெய் உலகம் பல்ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இதை உணர்து இத்தாவரத்துக்கு “குமரி” என பெயர் இயம்பி இழமையை நிலைத்து முதுமையை விரட்டிடும் அற்புதமுகிலிகையாக இயம்பியிருக்கின்றது. மானிடப் பிறவியின் அர்த்தம் புரிந்து மானிடர்க்காக வாழ்ந்த சித்தார்கள் இதை புரிந்திருந்தனர். அனுபவ அறிவால் நுன்மதி நுளை புலத்தால் அவர்களின் தெய்வீக அற்றலால் வெளிப்படுத்தினர்.
     தேரையர் பாதார்த்த குணசிந்தாமனியில் குமரியின் மருத்துவ பண்பை “பொல்லா மேகம் கபம் புல் சூலை
குட்டம் ரசம் அல்லார் மந்தம்
பகம் தரும் குன்மம் எல்லாம் விட்டு ஏகும்
அரிக்கும் எரிச்சர் கிரிச்சரமும் மாறும்
குமரிக்கு மருண்டு”

1.“பொல்லா மேகம்”: இது சக்கரை நோயைக் குறிக்கின்றது. இதனை மேகத்துக்கு ஒப்பிடுகின்றார். மேகமானது தோன்றி மறைவதுடன் திரும்பத் திரும்ப தோன்றுவதும் மேகங்கள் உயர்வதும் தாழ்வதும் அதன் இயக்கையான குணமாமும் இதையொத்த பண்புடையது சக்கரை நோயாகும். இன் நோயைப் போக்கும் தன்மை குமரிக்கு உண்டு.
2.“கபம்”: கபம் என்பது நாசி, தொண்டை, நெஞ்சிப்பகுதியில் சளி கட்டி உடலை உபாதைக்குட்படுத்தும். இதனை கிராமப்புறங்களில் சளிபிடித்தால் சனிபிடித்தமாதிரி என்று இயம்புவதுண்டு அவ்வளவு அவத்தைப்பாடுத்தும். கண்டத்தில் கபம் கட்டி சுவாசத்தை தடை செய்து உடல் இயக்கத்தை நிறுத்தக்கூடிய தன்மையானது கபம். நெருப்பெரிய ஒட்சிசன் தேவை ஒட்சிசன் இல்லாவிட்டால் நெருப்பு அனைந்து விடும். இது போன்றே பிரபஞ்கம் இயங்க பிராணவாயு தேவை. அதுபோன்று உடல் இயங்க ஆத்துமா வாகிய அக்கினி பிரகாசிக்க வேண்டும். அதற்கு பிராணவாயு கண்டத்தின் வழியாக செல்ல வேண்டும். அதை கபம் தடைசெய்யும் இச் சந்தர்ப்பாத்தில் வாயால் சுவாசிக்க நேரும் இதனை “மோவாய் சுவாசம்”என்பர். இது போன்று ஒரு மனிதன் இறப்பதற்கு முன்னர் சுவாசம் நெஞ்கிப்பகுதிக்கு மேல் சுவாசம் இழுத்துக் கொண்டு இருக்கும் இதனை “சேப்பம் கட்டி இழுக்குது” என்பர். சேப்பம் என்பது கபம் இறுதியாக உடலிலிருந்து உயிரை பிரிக்க கபம் உதவுகின்றது. அப்படிபட்ட கபத்தை இல்லாமல் செய்யும் ஆற்றல் குமரிக்குண்டு.
     குமரி குளிர்த்தன்மையானது. இது கபத்தை உருவாக்கக்கூடியது எனலாம். இதன் தன்மை கபத்தை இல்லாமல் செய்துவிடும் தன்மையுள்ளது. ஆரம்பத்தில் சளியை ஏற்படுத்தி பின்னர் தெடர்ந்து உண்டுவர நோய் எதிப்புச் சக்தியை உருவாக்கி கபத்தை அடியோடுடொலித்து விடும் சக்தி பெற்று விடும் குமரி.  குமரியைப் பயன்படுத்துவதில் கவனம் தேவை பொதுவாக கபத்தினால் உண்டாகும் அஸ்டுமா,கடுமையான ஜலதோம், சைனஸ் வருத்தங்கள் உள்ளவர் நிதானத்துடன் தவித்துக் கொள்வது நன்று. பொதுவாக குளிர்சியைத் தரும் தன்மை குமரிக்கு உண்டு. அதேவேளை சளியைத் தடுக்கும் வல்லமையும் குமரிக்கு உண்டு. சிறிது சிறிதாக நாளுக்கு நாள் உணவாக சேர்த்து வர காலப்போக்கில் நோய்எதிப்பு சத்தியைப் பொற்று விடும் உடல் அதன் பின்னர் கபம் தனது சக்தியை இழந்து விடும். வயதானவர்களுக்கு மார்புப் பகுதியில் கபம் கட்டுவது இயல்பு இதனால் உடல் நல்ல திடகாத்திரத்தை இழந்து விடும் அச்சந்தப்பத்தில் குமரியை உணவாக்கி  திடகாத்திரத்தைப் பெறமுடியும் எனவே குமரி ஓர் காயகற்ப முகிலிகையாகும.;
3.“புல் சூலை”: உடலில் குடலில் பு

ழுக்கள் ஒட்டுண்ணியாக இருப்பது உடலில் உள்ள சத்துப்பொருட்களை உறுஞ்சி குடித்து தேகாரோக்கியத்தை இழக்கச் செய்வது இயல்பு பல்வேறு நோய்களை ஏற்ப்படுத்தும். இப்படிப்பட்ட புழுக்களை அகற்றும் ஆற்றல் குமரிக்கு உண்டு.
4.“சூலை”: சூலை என்பது கணுக்களில், கபாலத்தில்,வயிற்றில், குடலில் வரும். கணுக்களில் வரும்போது கணுச்சூலை என்றும் கபாலத்தில் ஏற்படுகின்ற போது கபாலைச்சூலை அல்லது சிரசூலை என்றும் குடலில் வருகின்ற போது குடல்சூலை என்றும் இரைப்பையில் வருகின்ற போது சூலை நோய் என்றும் குறிப்பிடுகின்றனர். சூலையின் வேதனை சூலத்தால் குத்துவதை ஒத்தவலியை போன்றது. இது உஸ்னத்தால் உண்டாவது இதை தடுக்கும் ஆற்றல் குமரிக்கு உண்டு. சங்கால இலக்கியம் குமரியின் தன்மையை “குமரியின் சாற்றை உண்டு குடல் புண் ஆறக்கண்டேன்” என்று கூறுகின்றது. கருக்குடலில் இருக்கும் பினிகளுக் கெல்லாம் அருமருந்து குமரி 
5.“குட்டம்”: தொழுநோய்யாகிய விரல்கள் அழுகி விழுவதுடன் அங்கங்கள் சுருங்கி ஒலிந்து அபலட்சணத்தை உருவாக்கின்ற கிருமிகளை அகற்றி ஒழிக்கும் ஆற்றல் குமரிக்குண்டு.
6.“ரசம்”: எலும்பு மச்சையை ரசம் என்று அழைப்பதுண்டு எலும்பு மச்சையில் உள்ள சத்துக்கள் குன்றிப்போனால் சிவப்பணுக்களின் உற்பத்தி தடைப்படும் இதன் விளைவால் இரத்தத்தை நரம்பு வளியாக இலுத்துக் செல்லும் பிராணவாயுவின் அளவு குறைவடைந்து நாம் செயல்படும் செயலாற்றல் குறைவடையும் இதனால் இளமையில் முதுமையை எதிர் நோக்க விளையும் அத்துடன் வெளுப்பு நோய்க்கு ஆட்படுவோம். இன்நிலையிலிருந் எம்மை காக்க குமரி ஓர் அருமந்தாகும். இது சிவப்பணு உற்பத்தியை அதிகரித்து எம்மை பலமிக்தாக்கும் தன்மை குமரிக்கு உண்டு.

7.“மந்தம்”: மந்தம் என்பது ஐPரணக்குறைபாடு இயல்பான வேகத்தில் குறைபாடு இதனால் ஏற்படும் அஐPரணம் வயிற்று பொருமலாக இருக்கும் இதன் மூலம் உடலில் அமிலம் சுரந்து அசாதாரன நிலையை ஏற்படுத்தும் இவ்வாறன நிலையிலிருந்து குமரி எம்மைப் பாதுகாக்கும்.
8. “பகம் தரும்”: பகர்தரும் என்பது ஆசன வாசலில் ஏற்படும் புண்ணும் சீளுமான நிலை இதை வயல் வெளியில் சேறும்சகதியுமாக இருக்கும் நிலைக்கு ஒப்பிடுவர். இது மூலநோயின் ஒருவகை இதனால் குத்துகின்றது போன்ற வலியும் எரிச்சலும் கடுப்புடண் கூடிய வலியும் ஆசனவாசலால் இரத்தக்கசிவுள்ள பல பண்புகளைக் கொண்ட மூலரோகம் உழையும் மூலரோகம் எனப்படும். மூலநோய் என்பது பலவகை உண்டு உள்மூலம், வெளிமூலம், உதிரமூலம், ஆசனவாய் வெடிப்பு, ஆசனவாயில் திறவு இன்னுமோர் மேலதிக பாதை போல் தோன்றும் இயல்பு இதை பவித்திரம் என்பார்கள்  இதனை போக்க வவ்லது குமரி.
9.“குன்மம் எல்லாம் விட்டு ஏகும்”: அஜினத்தால் ஏற்படும் நோய் குன்மம் இப்படிப்hட்ட நோய்கள் எல்லாம் நம்மை விட்டு ஓடிடும் எனக்குறிப்பிர்வதுடன். 
10. “அரிக்கும் எரிச்சர் கிரிச்சரமும் மாறும்”: கிரிச்சரம் என்பது  சிறுநீர்த்தாரையில் சிறுநீர் வரும் பாதையில் அரிப்பும் எரிச்சலும் இருந்து அளொகரியத்தை ஏற்படுத்துகின்ற நீர்த்தாரை நோய் இதற்கு குமரி அருமருந்து .      
பயன் படுத்தும் முறைகள்:
       சோற்றுக்கற்றாழை(குமரி)யின் தொலை நீக்கி சோற்றை எடுத்து அதை ஏழு முறை சுத்மான நீரில் திரும்பத்திரும் புதிய புதிய நீரினால் கழுவி சுத்தம் செய்து அதிலுள்ள அலோயின் என்ற சத்தை நீக்கிவிட வேண்டும். இது கொளுகொளுப்பாக இருக்கும் இதை நீக்கியபின் மருத்து உயயோகத்துக்கு உகந்தாக அமையும். தாழையின் மடலைத் தெரிவு செய்கையில் பின்வரும் விடையங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
1. கற்றாழை மரத்தின் முதிர்வு ஆகக்குறைந்தது ஒன்றரைவருடத்தை பூர்திசெய்திருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் முழுமையான மருத்துவ பண்புகள் நிறைந்தாக இருக்கும். வேதியல் மூலக்கூறுகளை முழுமையாக பெற்றிருக்கும்.
2. தாழை ஓலை மரத்திலிருந்து வெட்டி எடுத்து அரைமணித்தியாலத்;துக்கும் ஒரு மனித்தியாலத்துக்கும் இடையில்  தோலை நீக்கி சுத்தம் செய்தல் உத்தமம். ஆனாலும் நான்கு மணித்தியாலத்துக்கு மேல்படுதலாகாது.

3. இவ்வாறு எடுத்து கொள்வதன் நோக்கம் உடலில் சத்து பொருளைகளை படிப்படியாக சேர்த்துக் கொள்வதே இதன் நோக்கம் இப்படி முறையான செயல் பாட்டுக்கு காரணமாகும்.
4. ஏக்கனவே கபம் அதிமாகி இளை நோய்க்கு ஆளானவர்களும் பினிச நோக்கு ஆளானவர்களுடம் வைத்தியரின் ஆலோசணையுடன் குமரியை உபயோகித்தொடங்குவது சிறந்தது. உகயோகிப்பதானால் தற்போது பயன்படுத்திக் கொண்டு இருக்கும் ஆலோபதி மருந்துடன் சேர்த்து பயன்படுத்தி காலப் போக்கில் ஆலோபதி மருந்துகளை நிறுத்திக் கொள்ள முடியும். பொதுவாக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளல் நன்று.
5. முதுமையால் உண்டாகும் மூட்டுவலி முட்டிவலி மூட்டுக்களில் வழுவின்மை போன்ற நோய்களுக்கு குமரியை தோலுடன் இரண்டு சதுரடி அளவு எடுத்து அதனுடன் இஞ்சி, மஞ்சல் சமனிடை சேர்த்து விழுது போல் அரைத்து சாதுவாக சூடாக்கி மூட்டுகளில் பற்றுப்போல் நன்றாக பூசி காயவிட மூட்டுவலி, வீக்கம் என்பன நீங்கி சுகம் பெறலாம். இது போன்று காலை மாலை பற்றிடலாம். 
      குமரி குளிர

்மையானது  இதை பாவிக்க ஆரம்பிக்கும் போது இது முதலில் கபத்தை உருவாக்கி பின்னர் எதிப்புச் சத்தியை உடலில் ஏற்படுத்தி உடலை கபத்திலிருந்து காத்து ஸ்திரப்படுத்தும்.

*வழுக்கை தலையிலும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் ஓர் கிராமத்து வைத்தியம்!*

*வழுக்கை தலையிலும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் ஓர் கிராமத்து வைத்தியம்!*

இன்றைய காலத்தில் தலைமுடி கொட்டுவது என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக ஆண்கள் தான் தலைமுடி உதிர்வால் அதிகம் கஷ்டப்படுகின்றனர்.

இதற்காக எவ்வளவோ முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைத்தப் பாடில்லை.

ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறையை ஆண்கள், பெண்கள் என இருபாலரும் பின்பற்றி வந்தால், நிச்சயம் தலைமுடி கொட்டும் பிரச்சனையில் இருந்து விடுபடுவதோடு, தலைமுடியும் நன்கு வளரும்.

முக்கியமாக இந்த வழியின் மூலம் வழுக்கை விழுந்த இடத்திலும் முடி வளர்ச்சியைத் தூண்டச் செய்யலாம்.

*தேவையான பொருட்கள் :*

தேங்காய் எண்ணெய்
விளக்கெண்ணெய்
வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்
கற்றாழை

*செய்முறை #1 :*

முதலில் கற்றாழை இலையை எடுத்துக் கொண்டு, அதனை முனைகளில் உள்ள கூர்மையான பகுதியை நீக்கிவிட்டு, இரண்டாக பிளந்து கொள்ள வேண்டும். பின் கத்தியால் ஜெல் போன்ற பகுதியில் கீறி விட்டு, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தேய்த்து, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.

*செய்முறை #2 :*

பின்பு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். அத்துடன் 1 வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மாத்திரையை ஊசியால் துளையிட்டு, அதனுள் உள்ள எண்ணெயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்

*செய்முறை #3 :*

இந்த எண்ணெயை நேரடியாக சூடேற்றக்கூடாது. மாறாக ஒரு அகன்ற பாத்திரத்தில் சுடுநீரை ஊற்றி, அதனுள் அந்த எண்ணெய் கலவையுள்ள பௌலை சிறிது நேரம் வைக்க வேண்டும்.

*செய்முறை #4 :*

அடுத்து அந்த எண்ணெயை ஸ்காலப்பில் படும்படி தடவி 10 நிமிடம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தலைமுடியை அலச வேண்டும்.

*குறிப்பு :*

இந்த செயல்முறையை வாரத்திற்கு 4-5 முறை செய்து வந்தால், தலைமுடியில் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதை நீங்கள் நன்கு காணலாம்.

Sunday, August 6, 2017

Kidney stone cured With just 60 rs!

இத்தனை ஆண்டுகளில் நோயில் படுத்தவனில்லை. சிறு அறுவை சிகிச்சை கூட இல்லை. பதினைந்து நாட்களுக்கு முன் அடிவயிற்றில் கடும் வலி! பெங்களுரில் தவிர்க்க முடியாத திருமணங்கள். போய் விட்டேன் வலி அதிகமாயிற்று!

உடனே மருத்துவமனைக்கு சென்று காண்பிக்க ஸ்கேனில் சிறுநீரகக் கட்டி என்று வந்தது.

"உடனே அறுவை சிகிச்சை செய்யா விடில் உயிருக்கே ஆபத்து என்ற எச்சரிக்கை!"

நான் மறுத்துவிட்டு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு சென்னையில் என் குடும்ப டாக்டரிடம் காண்பிக்க அவரும் உறுதிப்படுத்தினார்...

என் மகன் அமெரிக்காவில் இருந்து உடனே வருவதாக தகவல் அனுப்பினான்...

என் மனைவி எத்தனை லட்சம் செலவானாலும் சரி என்று கதற ஆரம்பித்து விட்டாள்...

கையமர்த்திய டாக்டர், "முதலில் பதினைந்து நாட்களுக்கு ஒரு மருந்து தருகிறேன் அதில் குணம்
தெரியாவிட்டால் அறுவை சிகிச்சை செய்யலாம்" என்றார்.

அவர் கொடுத்த மருந்து நான்கு நாட்களில் வேலை செய்ய ஆரம்பித்தது. நேற்றோடு வலி போய்விட்டது...

டாக்டர் மீண்டும் ஸ்கேன் எடுத்துப் பார்க்க கட்டியும் போய்விட்டது...
எனக்கு ஆச்சரியம்…
"உங்களுக்கு குணமாகி விட்டது" என்றார்.

அவர் கொடுத்த மருந்து #Citralka என்ற 60 ரூபாய் ஸிரப்...

இந்த மருந்தை பற்றி 40 வருடங்களுக்கு முன்பே கேள்விப் பட்டிருக்கிறேன்

Urinary infection க்கு தலைசிறந்த மருந்து,

"ஏன் டாக்டர் இந்த மருந்தை யாரும் prescibe செய்வதில்லை?" என்று கேட்க...

அவரோ சிரித்துக் கொண்டே "பின்பு எப்படி  லட்சங்களை கறப்பது?" என்றவர்

"நம் நாட்டின் மிகப் பெரிய எதிரிகள் மருந்துக் கம்பெனிகள் மருத்துவ மனைகள், இவர்களை சரி செய்தாலே பலர் ஏமாற்றப்படுவது குறையும்" என்றவர், பல மருத்துவமனைகள் எனக்கு எதிராக செயல்படுகின்றன என் உயிருக்கே கூட ஆபத்து வரலாம்!
I am agaist exploitation of innocent patients!" என்று முடிக்க அவரை ஒரு கேள்வி கேட்டேன்.

"ஏன் டாக்டர் நீங்கள் எப்போதுமே கறுப்பு கலரிலேயே உடை அணிகிறீர்கள்? உங்கள் காரில் சே'குவாரா ஸ்டிக்கர் இருக்கிறதே?"
என கேட்க...

"நான் கடவுள் நம்பிக்கை உடையவன் தான், ஆனால் Anti Establishment... சுரண்டலுக்கு எதிரனவன் அதனால் சே' குவாரா பிடிக்கும்" என்றார்.

25 வருடங்களாக இன்சுலினிலேயே வாழ்ந்து வந்த எனக்கு சக்கரை நோயை ஒரே வருடத்தில் ஒழித்து... என்னை டசன் கணக்கில் '#இமாம்_பசந்த்' மாம்பழங்களை சாப்பிடும் அளவிற்கு  குணமாக்கிய டாக்டர் இவர் தான்... இவர் ஒரு ஆங்கில மருத்துவர் MS படித்தவர் அவருடைய அனுமதியுடன் அவருடைய தொடர்பு தகவல்களை வெளியிடுகிறேன்.

Dr. V.Madhavan MD (Int. Med) Consultant Diabetologist/Physician

#CARE_CLINIC

For Appointments 044  24742734/ 65551839/24483314 (between 9 am and 1 pm)

At Chennai T Nagar, Thiruvanmiyur, Nanganalur. …

அவரைப்பார்க்க செல்லும் போது சமீபத்தில் நல்ல தரமான Labல் எடுக்கப்பட்ட FF , PP , HbA1c (3 மாத சராசரி சக்கரை அளவீடு) தகவல்களுடன் செல்லவும்!

Forward message …

Saturday, August 5, 2017

*நோய்கள் உருவாகும் இடங்கள் !*

*நோய்கள் உருவாகும் இடங்கள் !*
------------------------------------------------------------

*நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.*

*இதோ*

*1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்*

*2 - டீ*

*3 - காபி*

*4 - வெள்ளை சர்க்கரை*

*5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.*

*6 - பாக்கெட் பால்.*

*7 - பாக்கெட் தயிர்*

*8 - பாட்டில் நெய்*

*9 - சீமை மாட்டு பால்*

*10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.*

*11 - பொடி உப்பு*

*12 - ஐயோடின் உப்பு*

*13 - அனைத்து ரீப்பயின்டு ஆயில்*

*14 - பிராய்லர் கோழி*

*15 - பிராய்லர் கோழி முட்டை*

*16 - பட்டை தீட்டிய அரிசி*

*17 - குக்கர் சோறு*

*18 - பில்டர் தண்ணீர்*

*19 - கொதிக்க வைத்த தண்ணீர்*

*20 - மினரல் வாட்டர்*

*21 - RO தண்ணீர்*

*22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்*

*23 - Non Stick பாத்திரங்கள்*

*24 - மைக்ரோ ஓவன் அடுப்பு*

*25 - மின் அடுப்பு*

*26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள்*

*27 - சோப்பு*

*28 - ஷாம்பு*

*29 - பற்பசை*

*30 - Foam படுக்கை மற்றும் இருக்கை*

*31 - குளிர்பானங்கள்*

*32 - ஜஸ் கீரீம்கள்*

*33 - அனைத்து மைதா பொருட்கள்*

*34 - பேக்கரி பொருட்கள்*

*35 - சாக்லேட்*

*36 - Branded மசாலா பொருட்கள்*

*37 - இரசாயன கொசு விரட்டி*

*38 - Ac*

*39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.*

*40 - பிஸ்கட்டுகள்*

*41 - பன்னாட்டு சிப்ஸ்*

*42 - புகைப்பழக்கம்*

*43 - மதுப்பழக்கம்*

*44 - சுடு நீரில் குளிப்பது*

*45 - தலைக்கு டை*

*46 - துரித உணவுகள்*

*47 - குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்*

*48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.*

*49 - ஆங்கில மருந்துகள்*

*50 - அலோபதி வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள்*

*51 - உடல் உழைப்பு இல்லாமை*

*52 - பசிக்காமல் உண்பது*

*53 - அவசரமாக உண்பது*

*54 - மெல்லாமல் உண்பது*

*55 - இடையில் தண்ணீர் குடிப்பது*

*56 - எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்.*

*57 - 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்*

*58 - அறியாமை*

*59 - சுற்றுச்சூழல் மாசுபாடு*

*60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்*

*அரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது*

*மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் தான் நோய்கள் உருவாகிறது.*

*உயிர் பிழைக்க ஒரே வழி*

*இயற்கைக்கு திரும்புவது மட்டுமே*

*நன்றி*

🌸🌱🌼🌿🌷🙏🏾🌷🌿🌼🌱🌸

"திரிபலா பொடி" "திரிபலா சூரணம்"

கல்லாதது உலகளவு:
"திரிபலா பொடி"

"திரிபலா சூரணம்"

மலச்சிக்கல் தீரும், குடல் புண் ஆறும். இரத்தச் சோகை அதிக உடல் எடை குறையும். உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு , வெளியேறும்.

நன்றாக காய வைத்த நெல்லி வற்றல்,கடுக்காய்த்தோல், மற்றும் தான்றிக்காய்த்தோல் பொடிகள் ,சம அளவில் கலந்ததே ,திரிபலா சூரணம்.

இதை, இரவில் ஒரு தேக்கரண்டி அளவு சுடுதண்ணீரில் கலந்து தினமும் சாப்பிட்டு வர , குடல் புண் ஆறும். இரத்தச் சோகை அதிக உடல் எடை குறையும்.உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு , வெளியேறும்
உடல் முதுமை மாறி, இளமைப்பொலிவு ஏற்படும். மலச்சிக்கல் தீரும்.திரிபலாவில் க்ரீன் டீயை விடவும் அதிக ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உள்ளதாக ஆய்வு கூறுகிறது

ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம்.

திரிபலா குடல் அழற்சிக்குக்கூட நல்ல மருந்து.

திரிபலாவை புறக்காயங்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம். திரிபலா கலந்த கொதிக்கவைக்கப்பட்ட நீரால் காயங்களைக் கழுவதும் நல்ல பயன் தரும்.

அதேபோல வாய்ப்புண் வருகிற போதும் இதைப் பயன்படுத்தலாம்மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்த லாம்

தொண்டை வலி:

சளி பிடிக்கிறதுக்கு ஒரு நாலைஞ்சு மணி நேரத்துக்கு முன்னாடி பாத்தீங்கன்னா தொண்டை ஒரு மாதிரி கரகரக்கும். அப்பவே தெரியணும், நமக்கு நாளைக்கு சளி பிடிக்கப் போவுதுன்னு. அந்த மாதிரி நேரத்துல நான் என்ன செய்வேண்டுமென்றல், கொஞ்சம் திரிபலாவை எடுத்து சுடுதண்ணியில போட்டு, நல்லா வாய் கொப்பளிக்க . சளி வராது. தொண்டைக்கும் இதமா இருக்கும். பிள்ளை அவ்வப்போது பள்ளிக்கூடத்திலிருந்து கொண்டுவரும் மற்ற தொண்டை வலிகளுக்கும் இது நல்ல மருந்து. வாய் கொப்புளிச்சுத் துப்பத் தெரிந்த குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். முழுங்கினாலும் பெரிய பிரச்சினை இல்ல, இருந்தாலும் ரொம்ப சின்ன பிள்ளைங்களுக்கு வேணாம்.

பல்லிடுக்குப் பிரச்சினை:

சில நேரம் பல்லிடுக்கில் உணவுத் துகள் மாட்டிக் கொள்கிறது. காரட் துண்டு, ஆட்டுக்கறி இப்படி. அப்போது கவனிக்காம விட்டுட்டா, அடுத்த நாள் வலிக்கும். அப்போ அந்தத் துணுக்கை floss போட்டு எடுத்துட்டாலும் வலிக்கும். அந்த நேரத்தில் திரிபலாவை சுடுதண்ணியில போட்டு வாய் கொப்பளிச்சா, அல்லது அந்த இடத்தில் வைத்து லேசாக பல் தேய்ப்பது போலத் தேய்த்தால் வலி மாயமாய்ப் போகிறது. மற்ற வகை பல்/ஈறு வலிகளுக்கும் இதைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.

திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?

திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.

நோய் எதிர்ப்புச் சக்தி...

ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ‘ஆன்டிபாடி’ (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்..

உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான “கட்டற்ற காரணிகளை” (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.

செரிமானமின்மை..

செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.

மலச்சிக்கல்...

திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்

இரத்த சோகை ஏன் வருகிறது? தடுக்கும் உணவுகள் -

கல்லாதது உலகளவு:
இரத்த சோகை ஏன் வருகிறது?

தடுக்கும் உணவுகள் -

இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின்கள் நிறைந்த சத்துள்ள உணவுகளை நிறைய சேர்த்துக் கொண்டாலே இஇரத்த சோகையினைத் தவிர்க்கலாம்.

தினமும் உணவில் 100 கிராம் தேன் உணவில் சேர்த்துக்கொண்டால் இரத்த சோகை விரைவில் குணம் ஆகும். ஒரே நேரத்தில் 100 கிராம் தேன் சாப்பிட வேண்டாம் மூன்று அளவாக பிரித்து சாப்பிடவும்.

ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து (பால், தண்ணீர்) சாப்பிடலாம். மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு.

தேனுடன், இஞ்சி, விதை நீக்கிய பேரீச்சம்பழம் இரண்டையும் ஊறவைத்து இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மல பந்தம் நீங்கி, ஜீரணப்பாதை சீராகும்.

தினமும் இரவு படுக்கபோகும் முன்பு ஆரிய வெந்நீர் அல்லது ஆறிய பாலில் ஒரு மேஜைக்கரண்டி தேன் கலந்து பருகிவிட்டு படுத்தால் உடலில் நோய எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நல்ல உறக்கமும் வரும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனை குடிக்கலாம் .. இரத்தச் சோகையை போக்க குழந்தைகளுக்கு உணவில் அதிக இரும்புச் சத்துள்ள கீரைகளான, முருங்கைக்கீரை, அரைக்கீரை, புதினா கொத்தமல்லி, கறிவேப்பிலை அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை போன்ற கீரைகளையும், திராட்சை, பேரீச்சை, உலர்ந்த திராட்சை, பப்பாளி, அத்திப்பழம், மாம்பழம், பலாபழம், சப்போட்டா, ஆப்பிள், நெல்லிக்கனி போன்ற பழங்களையும் தினமும் கொடுத்து வருவது நல்லது.

இதனால் ரத்தம் விருத்தி அடைந்து, இரத்தச் சோகை நீங்கும். முளைகட்டிய பச்சை பயறு, முந்திரி பருப்பு, உளுந்தங்களி, பாதாம், பிஸ்தா பருப்பு போன்றவை அதிகம் உணவில் சேர்த்து வருவது நல்லது.

காய்கறி சாலட்டுகள் அடிக்கடி கொடுப்பது நல்லது. பெண் குழந்தைகள் பருவ வயது வரையும் அதற்கு பின்பும் மேற்கண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் இரத்தச் சோகை நீங்கும்.

பொதுவாக சிவப்பு அணுக்களின் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் நிலைதான் இரத்த சோகை என்று அழைக்கப்படுகிறது.

இரத்த சோகை ஏற்படக் காரணங்கள்:

ஆண்களுக்கு: 100 மி.லி. இரத்தத்தில் 14.5 முதல் 15.5 கிராம்களும்,

பெண்களுக்கு: 100 மி.லி இரத்தத்தில் 13.4 முதல் 14.5 கிராம்களும் இருக்க வேண்டும்.

அப்படியில்லாமல், குழந்தைகளுக்கு 6 மாதம் முதல் 5 வயது வரை: 11 கிராமுக்கு குறைவாகவும் 6 வயது முதல் 14 வயது வரை: 12 கிராமுக்கு குறைவாகவும், பெரியவர்களான ஆண்களுக்கு: 13 கிராமுக்கு குறைவாகவும், பெண்களுக்கு: 12 கிராமுக்கு குறைவாகவும், கர்ப்பிணிகளுக்கு: 11 கிராமுக்கு குறைவாகவும் இருந்தால் இரத்த சோகை ஏற்படும்.

ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்.....!

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...