Friday, June 23, 2017

குடி தண்ணீரை RO பில்டர் செய்யக் கூடாது. ஏன்???.

நல்ல குடி நீர் என்பதற்கும்,
சுத்தமான குடி நீர் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் உணர வேண்டும்...அவசிய பதிவு.
அவசியம் படியுங்கள்.

குடி தண்ணீரை RO பில்டர் செய்யக் கூடாது. ஏன்???.

நம் வீடுகளில் ஆர்.ஓ.சிஸ்டம் எனும்
தண்ணீரைச் சுத்தம் செய்வதற்கு
சாதனங்களை வைத்திருக்கிறோம்.

இந்த R.O சாதனத்தில் மூன்று
மாதத்திற்குப் பிறகு அந்த பில்டரை
வெளியில் எடுத்துப் பார்த்தால்
வெள்ளையாக இருந்த வாட்டர் பில்டர் ஒரு மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில் தூசுகளோடு இருக்கும்.

அதை உதறி தட்டினால் அதிலிருந்து
மரத்தூள் போன்ற தூசுகள் கீழே கொட்டும்.

நாம் என்ன நினைப்போம்...அப்பப்பா நல்ல வேளை, இந்த
வாட்டர் பில்டர் இருந்ததால் இந்த தூசுக்கள் நம் உடம்பிற்குள் செல்லவில்லை என்று.

ஆனால் நான் என்ன நினைப்பேன் என்றால் இந்த தாதுப் பொருட்கள் இந்தக் குடும்பத்தில் உள்ள, வீட்டில் உள்ள மனிதர்களின் உடம்பில் செல்லவில்லையே...நிச்சயமாக
அவர்கள் நோயோடு இருப்பார்கள் என்று நினைப்பேன்.

கண்ணுக்கே தெரியாத அந்தத் தூசுகளை பணம் செலவு செய்து சில கருவிகளை வாங்கி அதிலுள்ள தாதுக்களை பிரித்து
எடுத்துக் கீழே கொட்டுகிறோமே!.

அது தூசுக்கள் அல்ல, நம் உடலுக்குத்
தேவைப்படும் அத்தியாவசிய
தாதுப் பொருட்கள் ஆகும்.

நீங்கள் தண்ணீரைப் பார்த்தால் அதில் அந்தத் தூசுகள் உங்கள் கண்ணுக்கே தெரியாது.

ஆர்.ஓ.சாதனத்தை பயன் படுத்தினால் மட்டுமே அந்தத்
தூசுகள் கண்ணுக்குத் தெரியும்.

தண்ணீரில் கண்ணுக்கே தெரியாத
தூசுகளைப் பார்த்து பயப்படுகிறோமே...ஆனால்
கொத்து பரோட்டா, சிக்கன் 65, ஆனியன் ரோஸ்ட் என்று கடினமான பல பொருட்களைச்
சாப்பிடும் நாம் கண்ணுக்கே தெரியாத அந்த சின்னச் சின்ன தாதுப் பொருட்களை ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு ஆர்.ஓ வில் ஊற்றி வடிக்கச் செய்ய வேண்டும்.

யாருடைய வீட்டில் தண்ணீரை சுத்தம்
செய்வதற்கு R.O மெஷின் இருக்கிறதோ அந்த வீட்டில் உள்ள அனைவரும் உங்கள் இரத்தத்தில் உங்களுக்குத் தேவையான தாதுப் பொருட்கள் இல்லாமல் மருந்துக் கடைகளில் சென்று இந்த தூசுகளை மருந்து என்ற பெயரில் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே அசைக்க இயலாத உண்மை.

தண்ணீரில் இருக்கும் அந்தத்
தாதுப் பொருட்களை R.O செய்யாமல் குடித்தால் நாம் மருந்து மாத்திரை என்ற தூசுக்களை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

எனவே தண்ணீரை ஆர்.ஓ (R.O) செய்யக் கூடாது.

தண்ணீரை R.O செய்து குடித்தால்
மனிதனுக்கு நோய் வரும்.வாழ்நாள் முழுவதுமே தீராது.

சரி...

மினரல் பாட்டில் வாட்டர் -ஐ
பயன்படுத்தலாமா?

மினரல் வாட்டர் பயன்படுத்தவே கூடாது.

மினரல் வாட்டர் கம்பெனிகளில் Anti Scale Dosing Machine என்று ஒரு மெஷின் இருக்கும்.

இந்த மெஷினின் வேலை தண்ணீரில் உள்ள அனைத்து தாதுப் பொருட்களையும் எடுத்து விட்டு சப்பைத் தண்ணீராக மாற்றுகிறது.

எனவே நல்ல தண்ணீரை
ஒன்றுமில்லாத சப்பைத் தண்ணீராக
மாற்றுவதற்கு நாம் பல வேலைகளை
செய்து அதை பாட்டிலில் அடைத்துப்
பணம் கொடுத்து வாங்கி
குடிக்கிறோம்.

எனவே தயவு செய்து பாட்டிலில்
அடைக்கப் பட்ட மினரல் வாட்டர்
என்று அழைக்கப்படும் தண்ணீரில் உள்ள இயற்கையான சத்துகளே இல்லாத Packaged Drinking Water ஐ யாருமே பயன்படுத்தக் கூடாது.

குடி நீரை இயற்கையாக சுத்திகரிக்கும் முறைதான் என்ன?...

தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது.

ஆர்.ஓ R.O செய்யக் கூடாது.

பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தக் கூடாது.

வேறு எப்படித்தான் தண்ணீரை
சுத்தப் படுத்துவது என்று கேட்டால்,
சாதாரணமாக குழாயில் வரும் அந்தத் தண்ணீரை அப்படியே சாப்பிடலாம்.

அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

உலகத்திலேயே மிகப் பெரிய, மிகச் சிறந்த தடுப்பூசி சாதாரண குழாய் தண்ணீர் மட்டுமே.

யார் ஒருவர் குழாய் தண்ணீரை
நேரடியாகக் குடித்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு எந்த நோய்க் கிருமியாலும் நோய் வராது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக
இருக்கும். எனவே தயவு செய்து குழாயில் வரும் தண்ணீரை அப்படியே சாப்பிடுங்கள்.

குழாயில் வரும் தண்ணீரை எப்படிக்
குடிப்பது?...

தண்ணீரில் TDS அதிகமாக இருக்கிறது.தாதுப் பொருட்கள் அதிகமாக இருக்கிறது.

சாக்கடை நீர் கலந்து வருகிறது
என்றெல்லாம் மனதில் எண்ணம் தோன்றும்.

எங்கள் ஊர் தண்ணீரில் மாசு அதிகமாக உள்ளது என TV, பேப்பர் மூலமாகத் தெரிந்துக் கொண்டோம் என்று பலர் கூறுகிறீர்கள்.

உங்க ஊரில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து ஊரிலும் தண்ணீர்
கெட்டு விட்டதாக அந்தந்த ஊரில் உள்ள தண்ணீரைப் பாட்டிலில்
மூலமாக வியாபாரம் செய்யும் கம்பெனிகள் ஒன்று சேர்ந்து
பிரச்சாரம் செய்கிறது.

அப்பொழுதுதானே நீங்கள் குழாய் தண்ணீரைக் குடிக்காமல் பாட்டிலில்
தண்ணீரை வாங்கிக் குடிப்பீர்கள் என்ற எண்ணத்தில் அவர்கள்
பிரச்சாரம் செய்கிறார்கள்.

மேலும் மருந்து மாத்திரை கம்பெனிகள் தண்ணீரைக் கொதிக்க வைத்து மற்றும் R.O பிளான்ட் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரைப் பருகுவதால் உலக மக்களுக்கு நோய் வருகிறது என்பதை புரிந்து கொண்டு நல்ல விஷயத்தைப் பிரச்சாரம் செய்வது போல கெட்ட விஷயத்தை பணம் செலவு செய்து பிரச்சாரம் செய்து நம்மை நோயோடு இருக்க வைத்து, அதன் மூலமாக மருந்து மாத்திரை வியாபாரம் செய்வதற்குத் திட்டமிட்டு உள்ளார்கள்.

உண்மையிலேயே குழாய் தண்ணீர்
குடித்தால் ஒன்றும் ஆகாது.

இருந்தாலும் சில ஊர்களில் சாயப் பட்டறை இருக்கிறது,

தண்ணீர் கெட்டிருக்கிறது என்று
ஒரு வேளை நாங்கள் நினைத்தால் உங்களது மன திருப்திக்காக சில காரியங்களை செய்யலாம். நான் கூறுவது போல உங்கள்
தண்ணீரைக் கீழ்க்கண்ட முறையில்
இயற்கையான முறையில் சுத்திகரிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை
சுத்திகரிக்கும் கருவி.

மண் பானையில் குடி தண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட
பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் இயற்கையாகவே சக்தியை அளிக்கிறது.

எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த Water Filter மண் பானை ஆகும்.

நாற்பதாயிரம் ரூபாய் செலவு செய்து
உங்கள் வீட்டில் ஆர்.ஓ எனும் குப்பை மிஷினை வாங்கி வைத்து இருக்கிறீர்களே நாற்பதாயிரம்
ரூபாய்க்கு மண் பானை வாங்கினால்
எவ்வளவு பானை கிடைக்கும். தினமும் நாம் ஒரு பானையை உடைத்தால் கூட தீராது.

ஆனால் அப்படிப்பட்ட அற்புதமான
இயற்கையான ஒரு Water Filter வாட்டர் பில்டரை யாரும் பயன்படுத்துவதே இல்லை.

எனவே தயவு செய்து தண்ணீரை மண் பானையில் வைத்து குடித்தால் கெட்ட பொருள்களும்
அழியும். மண் சக்தியும் கிடைக்கும்,
பிராண சக்தி அதிகரிக்கும்.

வெள்ளை நிற பருத்தித் துணியால் தண்ணீரை வடி கட்டலாம்.

வெள்ளை நிறத்தில் உள்ள சுத்தமான பருத்தித் துணியால்  தண்ணீரை வடி கட்டினால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து
நோயை உண்டு செய்யும் வைரஸ், பாக்டீரியா போன்றவற்றை இந்தத் துணி உறிஞ்சிக் கொள்கிறது என்ற உண்மை, அறிவியல்
பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனால்தான் அம்மை போன்ற நோய்கள் வரும் பொழுது நமது முன்னோர்கள் எந்த ஒரு மருந்து மாத்திரையும் சாப்பிடாமல்
மருத்துவமனைக்குச் செல்லாமல்
வெள்ளைத் துணியில் வடி கட்டிய நீரில் குளிப்பாட்டி குணப் படுத்தி இருக்கிறார்கள்.

எனவே தேவைப் பட்டால் இந்த
முறையில் தண்ணீரைச் சுத்தப் படுத்தலாம்.

செம்புக் காசு அல்லது செம்பு பாத்திரம் மூலமாகவும் தண்ணீரை சுத்தப் படுத்தலாம்

செம்பு என்ற உலோக பாத்திரத்தின்
மூலமாக செய்யப்பட்ட ஒரு குடத்திலோ அல்லது செம்பிலோ நாம் நீரை இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வைப்பது மூலமாக தண்ணீருக்கு அதிகப் படியான
சக்தி கிடைக்கிறது.

அதில் உள்ள கெட்டப்
பொருள் அழிக்கப் படுகிறது. தாமிரத்திற்கு அந்த சக்தி இயற்கையிலேயே உள்ளது.

எனவே செம்பு என்ற தாமிர உலோகத்தின் மூலம் செய்யப்பட்ட பாத்திரங்களை தண்ணீர் வைக்க
பயன் படுத்தலாம். அல்லது மண் பானையில் செம்புக் காசுகளை போட்டு வைத்தால் அந்த செம்பு காசுகள் தண்ணீரை
சுத்தப் படுத்திக் கொண்டே இருக்கும்.

பழங்காலத்தில் மலைகளில் தவம் செய்து வந்த ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள் எப்பொழுதுமே அருகில் ஒரு செம்பு கமண்டலத்தில் தண்ணீரை வைத்துக்
கொண்டு இருப்பார்கள் என்பதை அறவீர்களா?.

அவர்களிடம் சென்று நீங்கள் ஏதாவது வம்பு பேசினால்
அந்த தண்ணீரை எடுத்து நீ நாயாக போவாய் என்று சாபமிட்டவுடன் அந்த மனிதன் நாயாக போவதைப் போல நாம் படங்களில் பார்த்திருப்போம்.

செம்பில் வைக்கப்படும் தண்ணீருக்கு அவ்வளவு சக்தி உள்ளது. எனவே செம்பு என்ற உலோகத்தின் சக்தியின் மூலமாக நாம் தண்ணீரை சுத்தப் படுத்த முடியும்.

எனவே மேலே கூறப்பட்டுள்ள வகையில் மண்பானை, வெள்ளை பருத்தித் துணி,செம்பு என்ற தாமிர உலோகம் மற்றும் பல இயற்கை முறையில் தண்ணீரை
சுத்தப்படுத்துவதற்கு பல உத்திகள்
இருக்கும் பொழுது நாம் ஏன் செயற்கை முறையில் சுத்தம் செய்வதற்கு R.O. சிஸ்டத்தை உபயோகிக்க வேண்டும்?.

இதுவும் இல்லாமல் பூமியில் உள்ள மண்ணில் உள்ள அடுக்குக்கு எத்தகைய தண்ணீரையும் சுத்தப்படுத்தும் சக்தி உண்டு.

அதே போல் மண்ணை சுட்டு கேன்டில் முறையில் எவர்சில்வர் வாட்டர் பில்டர் பாத்திரக் கடைகளில் கிடைக்கும்.அதுவும் இயற்கையான எளிதான முறைதான்.அதில் மூன்று கேன்டில் உள்ள வாட்டர் பில்டர் அனைத்து குடும்பத்துக்கும் உகந்தது.

வடிந்த தண்ணீரை மண் பானையில் ஊற்றி மகிழ்வுடன் அருந்துங்கள்.

என் அருமை மக்களே!...
நோய் தீர்க்கும் குடி தண்ணீரை உதாசீனம் செய்யாதீர்கள்.

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்க்காதே எனும் முன்னோர் வாக்கை நம்புங்கள்.

R.O எனும் அமெரிக்க என்சைம் அரக்கனை தூக்கி எறியுங்கள்.
www.siddharmedicine.in @ 9943909495. .  4

சின்ன சின்ன கை வைத்தியங்கள் !!!

சின்ன சின்ன கை வைத்தியங்கள் !!!
1. ஒரு 30 வினாடிகள்... இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!

2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்!

3. கொட்டாவியை நிறுத்த...கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..அதனால்...ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்

4. உடல் துர் நாற்றத்தைப்போக்க...குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்... நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!

5. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா? எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.\

6. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா? வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்
.
7. வேனல் கட்டி தொல்லையா? வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.

8. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்! •• முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும் •• கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.•• நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.

•• சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.

•• செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.

•• முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.

•• வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.

9. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு
நீங்கும்.

10. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

11. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.

12. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.

13. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.

14. மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }

15. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

16. பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.

17. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?

அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.

சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.

உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.

18. சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

•• சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

•• சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.

•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி

எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.

அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.

•• தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.

•• சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு. 
  -Ramachandran Krishnasamy

*மாஸ்டர் ஹெல்த் செக்கப்பின் திடுக்கிடும் இரகசியம்*

*மாஸ்டர் ஹெல்த் செக்கப்பின் திடுக்கிடும் இரகசியம்*

நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது?

ஒருவர் ஆரோக்கியமாக இருக்கின்றாரா?
இல்லையா?

எப்படி தெரிந்து கொள்வது?

"மாஸ்டர் செக்கப்" செய்துகொள்வதுதான், இன்று பரவலாக நம்பப்படும் ஒரு முறை!

பரிசோதனை செய்வது என்பது
"சொந்தக்காசில் சூனியம்" வைத்துக்கொள்வது போன்றது.
நோயில்லாமல் வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவரை,

"நீ நோயாளிதான்" என நம்ப வைத்து மருந்து மாத்திரை விற்கும் நிறுவனங்களுக்கு நிரந்தர வாடிக்கையாளாராக்கும்
"தந்திர வியாபார வலை" தான் பரிசோதனை செய்ய பரிந்துரைப்பது.

அல்லது,
"அப்படியிருக்கும், இப்படியிருக்கும்"
என பயமுறுத்தி பரிசோதனை செய்ய தூண்டுவது.

நம்மில் அநேகர் இதில் மாட்டிக்கொண்டு, இல்லாத நோய்க்கு மருத்துவம் செய்து, உள்ளபடியே நோயை வரவழைத்துக் கொண்டவர்கள்தான்.

இதில் மோசமாக பாதிக்கப்படுபவர்கள்
(most affected victims)

நன்கு படித்தவர்கள்(?),
பணம் படைத்தவர்கள்(double income),
புகழடைந்தவர்கள்.

எப்படி?

ஒவ்வொருவரின் உடலும் நாங்கள் சொல்வதுபோல்தான் இயங்கவேண்டும்.
*சர்க்கரை நோய் ரீடிங் 80/140,
*இரத்த அழுத்த நோய் ரீடிங் 80/120,
*சிறுநீரக நோய் ரீடிங் 1.02,
*கொழுப்பு அளவு,
*உப்பு அளவு
பொதுவாக இப்படி தான் இருக்க வேண்டும் என்று, WHO பரிந்துரையின்படி சில அளவுகளை நிர்ணயித்திருக்கிறது நவீன ஆங்கில மருத்துவம்.

இதை நாமும் உண்மை என நம்பி, நோயாளிகளாக மாறிகொண்டிருக்கிறோம்.

இத்தகைய "ரீடிங்குகள்" நவீன விஞ்ஞானத்தின் "நன்கொடைகள்".

Our Body mechanism is beyond சயின்ஸ்.

நம் உடல் இயற்கை விதிகளின்படி இயங்குகிறது.
ஒவ்வொருவரின் உடலியக்கமும் ஒவ்வொருமாதிரி இயங்குகிறது.

*உலகில் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இருக்காது*
*யாருக்கும் கைரேகை ஒன்று போலிருக்காது*

உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும்,
*வெவ்வேறு தட்ப வெப்ப நிலை* ,
*வெவ்வேறு உணவு பழக்கம்*,
*வெவ்வேறு உணவு உண்ணும் முறை*,
*வெவ்வேறு கலாச்சாரம்*,
*வெவ்வேறு ஜீன் கட்டமைப்பு* இருக்கின்றன!

*இது உண்மையானால் ஒவ்வொரு மனிதனின் உடலியக்கமும் தனித்தன்மையுடையதாகத்தானே (unique) இருக்கும்*.

அப்படியானால் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இயங்காது.

அப்படியானால், "உலகில் பல மூலைகளிலிருக்கும் எல்லோருக்கும் ஒரே ரீடிங் இருக்கவேண்டும்",
என்று ஆங்கில மருத்துவ உலகம், "அடம் பிடிப்பது" எப்பேற்பட்ட "முட்டாள் தனம்". இதை சரியென்று ஏற்றுக்கொண்டு, அதற்குத்தக்கப்படி உடலியக்கத்தை மாற்றுவது எவ்வளவு பெரிய "அறியாமை".

எனவே இந்தபரிந்துரைகளை கட்டவிழ்த்துவிடும்
"Master check-up"
என்பது இந்த நூற்றாண்டின்
"மாபெரும் ஆங்கில மருத்துவத்தின் வணிக மோசடி".

அப்படியானால்,
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருப்பது, இல்லாதது,
எப்படி தெரிந்துக் கொள்வது?
வரும் முன் காப்பது எப்படி?
இந்நிலை உங்களுக்கு இருக்கிறதா?
என உறுதி செய்துகொள்ளுங்கள்.

1. தரமான பசி.
2. தரமான தாகம்.
3. தரமான தூக்கம்.

"தரம்" என்ன என்ற பதிலில் ஒவ்வொருவாருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும். எனவே மேற்சொன்ன பசி, தாகம், தூக்கம் இவற்றில் திருப்தியாக இருந்தால், "நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்" என உறுதி செய்து கொள்ளலாம்.

படித்தில் உணர்ந்தது

சிந்திப்பவர் மட்டுமே.....
அனைத்து (நோய்) துன்பங்களில் இருந்தும், அறியாமையில் இருந்தும்,
விடுதலை பெறுவர் ... !!!

முடிந்தவரை மற்றவர்களுக்கு பகர்ந்து கொள்ளுங்கள்....

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...