Friday, June 23, 2017

சின்ன சின்ன கை வைத்தியங்கள் !!!

சின்ன சின்ன கை வைத்தியங்கள் !!!
1. ஒரு 30 வினாடிகள்... இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!

2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்!

3. கொட்டாவியை நிறுத்த...கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..அதனால்...ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்

4. உடல் துர் நாற்றத்தைப்போக்க...குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்... நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!

5. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா? எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.\

6. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா? வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்
.
7. வேனல் கட்டி தொல்லையா? வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.

8. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்! •• முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும் •• கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.•• நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.

•• சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.

•• செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.

•• முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.

•• வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.

9. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு
நீங்கும்.

10. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

11. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.

12. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.

13. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.

14. மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }

15. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

16. பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.

17. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?

அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.

சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.

உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.

18. சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

•• சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

•• சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.

•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி

எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.

அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.

•• தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.

•• சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு. 
  -Ramachandran Krishnasamy

*மாஸ்டர் ஹெல்த் செக்கப்பின் திடுக்கிடும் இரகசியம்*

*மாஸ்டர் ஹெல்த் செக்கப்பின் திடுக்கிடும் இரகசியம்*

நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது?

ஒருவர் ஆரோக்கியமாக இருக்கின்றாரா?
இல்லையா?

எப்படி தெரிந்து கொள்வது?

"மாஸ்டர் செக்கப்" செய்துகொள்வதுதான், இன்று பரவலாக நம்பப்படும் ஒரு முறை!

பரிசோதனை செய்வது என்பது
"சொந்தக்காசில் சூனியம்" வைத்துக்கொள்வது போன்றது.
நோயில்லாமல் வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவரை,

"நீ நோயாளிதான்" என நம்ப வைத்து மருந்து மாத்திரை விற்கும் நிறுவனங்களுக்கு நிரந்தர வாடிக்கையாளாராக்கும்
"தந்திர வியாபார வலை" தான் பரிசோதனை செய்ய பரிந்துரைப்பது.

அல்லது,
"அப்படியிருக்கும், இப்படியிருக்கும்"
என பயமுறுத்தி பரிசோதனை செய்ய தூண்டுவது.

நம்மில் அநேகர் இதில் மாட்டிக்கொண்டு, இல்லாத நோய்க்கு மருத்துவம் செய்து, உள்ளபடியே நோயை வரவழைத்துக் கொண்டவர்கள்தான்.

இதில் மோசமாக பாதிக்கப்படுபவர்கள்
(most affected victims)

நன்கு படித்தவர்கள்(?),
பணம் படைத்தவர்கள்(double income),
புகழடைந்தவர்கள்.

எப்படி?

ஒவ்வொருவரின் உடலும் நாங்கள் சொல்வதுபோல்தான் இயங்கவேண்டும்.
*சர்க்கரை நோய் ரீடிங் 80/140,
*இரத்த அழுத்த நோய் ரீடிங் 80/120,
*சிறுநீரக நோய் ரீடிங் 1.02,
*கொழுப்பு அளவு,
*உப்பு அளவு
பொதுவாக இப்படி தான் இருக்க வேண்டும் என்று, WHO பரிந்துரையின்படி சில அளவுகளை நிர்ணயித்திருக்கிறது நவீன ஆங்கில மருத்துவம்.

இதை நாமும் உண்மை என நம்பி, நோயாளிகளாக மாறிகொண்டிருக்கிறோம்.

இத்தகைய "ரீடிங்குகள்" நவீன விஞ்ஞானத்தின் "நன்கொடைகள்".

Our Body mechanism is beyond சயின்ஸ்.

நம் உடல் இயற்கை விதிகளின்படி இயங்குகிறது.
ஒவ்வொருவரின் உடலியக்கமும் ஒவ்வொருமாதிரி இயங்குகிறது.

*உலகில் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இருக்காது*
*யாருக்கும் கைரேகை ஒன்று போலிருக்காது*

உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும்,
*வெவ்வேறு தட்ப வெப்ப நிலை* ,
*வெவ்வேறு உணவு பழக்கம்*,
*வெவ்வேறு உணவு உண்ணும் முறை*,
*வெவ்வேறு கலாச்சாரம்*,
*வெவ்வேறு ஜீன் கட்டமைப்பு* இருக்கின்றன!

*இது உண்மையானால் ஒவ்வொரு மனிதனின் உடலியக்கமும் தனித்தன்மையுடையதாகத்தானே (unique) இருக்கும்*.

அப்படியானால் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இயங்காது.

அப்படியானால், "உலகில் பல மூலைகளிலிருக்கும் எல்லோருக்கும் ஒரே ரீடிங் இருக்கவேண்டும்",
என்று ஆங்கில மருத்துவ உலகம், "அடம் பிடிப்பது" எப்பேற்பட்ட "முட்டாள் தனம்". இதை சரியென்று ஏற்றுக்கொண்டு, அதற்குத்தக்கப்படி உடலியக்கத்தை மாற்றுவது எவ்வளவு பெரிய "அறியாமை".

எனவே இந்தபரிந்துரைகளை கட்டவிழ்த்துவிடும்
"Master check-up"
என்பது இந்த நூற்றாண்டின்
"மாபெரும் ஆங்கில மருத்துவத்தின் வணிக மோசடி".

அப்படியானால்,
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருப்பது, இல்லாதது,
எப்படி தெரிந்துக் கொள்வது?
வரும் முன் காப்பது எப்படி?
இந்நிலை உங்களுக்கு இருக்கிறதா?
என உறுதி செய்துகொள்ளுங்கள்.

1. தரமான பசி.
2. தரமான தாகம்.
3. தரமான தூக்கம்.

"தரம்" என்ன என்ற பதிலில் ஒவ்வொருவாருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும். எனவே மேற்சொன்ன பசி, தாகம், தூக்கம் இவற்றில் திருப்தியாக இருந்தால், "நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்" என உறுதி செய்து கொள்ளலாம்.

படித்தில் உணர்ந்தது

சிந்திப்பவர் மட்டுமே.....
அனைத்து (நோய்) துன்பங்களில் இருந்தும், அறியாமையில் இருந்தும்,
விடுதலை பெறுவர் ... !!!

முடிந்தவரை மற்றவர்களுக்கு பகர்ந்து கொள்ளுங்கள்....

Wednesday, June 21, 2017

இந்தியாவை அழிக்க போகும் ஆன்டிபயாடிக் செயல் இழப்பு (Anti biotic Resistance

இந்தியாவை அழிக்க போகும் ஆன்டிபயாடிக் செயல் இழப்பு (Anti biotic Resistance )

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர்.வர்தினி .,BHMS

(சற்று பெரிய கட்டுரை தான் -ஆனாலும் நீங்கள் இதை படித்தே ஆக வேண்டும்)

மக்களை நோய்களில் இருந்து காப்பாற்ற பயன்பட்ட அற்புத ஆன்டிபயாடிக் இன்று மக்களை அழிக்க ஆண்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ் என்னும் ஆன்டிபயாடிக் செயல் இழந்த தன்மையால் நூற்றுக்கு நூறு உள்ளது  என்பது எத்தனை மக்களுக்கு தெரியும்?

உலக சுகாதர ஆய்வு நிறுவனம் இந்தியாவின் சுகாதாரத்திற்கு மிக பெரிய அச்சுறுத்தலாக இந்த ஆண்டிபயாடிக் எதிர்ப்பு இருக்கும் என்று உறுதி பட சொல்கிறது.

மேற்கத்திய நாடுகள எல்லாம் இந்த ஆண்டிபயாடிக் செயல் இழப்பு பற்றி அறிந்து அதை நடைமுறை படுத்தும் போது –இங்கே அதை பற்றி விழிப்புணர்வே இல்லாமல் இருப்பது பற்றி மருத்துவனாய் என்னை ஒரு மீள முடியா சோகம் அழுத்தி கொண்டே இருக்கிறது –அதற்காக ஒரு சிறிய கட்டுரை

புவி வெப்பம் அடைவதை விட , கொசுக்களை ஒழிப்பதை விட , இரசாயன உர விவசாயத்தை விட , விவசாய கடன்களை விட ,உலகப்போரை விட ஓர் அச்சுறத்தல் இருக்கும் என்றால் அது மனிதகுலத்தையே அழிக்க கூடிய . பிரச்சனை இந்த ஆண்டிபயாடிக் எதிர்ப்பு – ஆண்டிபயாட்டிக்குகளையே அழிக்கும் அளவுக்கு ‘கிருமிகளின் எதிர்ப்பு சக்தி’ (Antibiotic Resistance) நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது’ என்பது தான் அது 

ஆண்டி-பயோடிக் எதிர்ப்பு (Antibiotic Resistance)  அல்லது ஆன்டி பயாடிக் செயல் இழப்பு என்றால் என்ன.?

உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை நம்பாமல் –வெளியில் இருந்து செயற்கையாக கெமிக்கல் ஆண்டிபயாடிக் என்னும் நோயினை விரட்ட இந்த நவீன மருத்துவ உலகம் கண்டறிந்தது . ‘இப்போது நடைமுறையில் உள்ள பல்வேறு ஆண்டிபயாடிக் மருந்துகளுக்குக் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா கிருமிகள் சவால் விடுகின்றன; நோய்களுக்கு எதிராக இந்த மருந்துகள் நடத்தும் தாக்குதலுக்கு அவை பெரும் தடையாக நிற்கின்றன; ஆண்டிபயாடிக் மருந்துக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொண்டு, பலத்த ஆதிக்கம் செலுத்துகின்றன.

இதனால் நிமோனியா, கொனோரியா, காலரா, வயிற்றுப்போக்கு, சிறுநீர்ப் பாதைத் தொற்று போன்ற சாதாரண நோய்களுக்குக் கொடுக்கப்படுகிற ஆண்டிபயாட்டிக்குகள்கூட செயல்திறனை இழந்து நிற்கின்றன. அற்புதங்கள் புரியும் ஆண்டிபயாட்டிக்குகளையே அழிக்கும் அளவுக்கு ‘கிருமிகளின் எதிர்ப்பு சக்தி’ (Antibiotic Resistance) நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது’ என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

காரணம் என்ன?

ஒரு நோய்க்குக் குறிப்பிட்ட காலத்துக்குக் கொடுக்கப்பட்ட ஆண்டிபயாடிக் மருந்தைப் பாதியில் நிறுத்தினால் அல்லது விட்டுவிட்டுச் சாப்பிட்டால், உடலில் அந்த நோயை உண்டாக்கிய எல்லாக் கிருமிகளும் சாகாமல் போகலாம்.

அப்போது அந்த மருந்தின் பிடியிலிருந்து தப்பிக்க, எஞ்சியுள்ள கிருமிகள் தடுப்பாற்றல் கொண்ட கிருமிகளாக உருமாறிவிடும். இவற்றை அழிக்க இன்னும் வீரியம் மிகுந்த ஆண்டிபயாடிக் மருந்துகள் தேவைப்படும். ஆனால், இவற்றின் பக்கவிளைவுகள் ஆபத்தானவையாக இருக்கும்.

எந்த மருந்தும் வேலை செய்யாத நிலைக்கு நாம் தள்ளப்பட Antibiotic Resistance ஒரு காரணமாக அமைந்து –இந்தியாவை அழிக்க காத்துகொண்டு இருக்கிறது
உதாரணத்திற்கு -மருந்துக்குக் கட்டுப்படாத காசநோய்

கடந்த ஒரு நூற்றாண்டாக மிரளவைத்துக் கொண்டிருக்கும் காசநோய், இதற்கு நல்ல உதாரணம். காசநோய் முற்றிலும் குணமடையக் குறைந்தது 6 மாதங்களுக்கு இடைவிடாமல் மருந்து சாப்பிட வேண்டும்.

ஆனால், மருந்து எடுத்துக்கொள்ள ஆரம்பித்த இரண்டு மாதங்களுக்குள் நோயின் அறிகுறிகள் மறைந்துவிடுவதால், நோய் குணமாகிவிட்டது என்று நம்பி பெரும்பாலோர் மருந்து சாப்பிடுவதைப் பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள். இதனால் காசநோய்க் கிருமிகள் அந்த மருந்துகளையே எதிர்த்துப் போராடும் திறனைப் பெற்றுவிடுகின்றன.
அதன் பிறகு ஏற்கெனவே கொடுத்துவந்த மருந்துகளால், இந்தக் கிருமிகளைக் கட்டுப்படுத்த முடியாது. இதன் விளைவாக, நோயின் தன்மை அதிகரித்து மருந்துக்குக் கட்டுப்படாத காசநோயாக (Multi Drug Resistance TB) அது உருமாறிவிடுகிறது. இதற்கு வழக்கமான 6 மாத சிகிச்சை போதாது. 2 வருடங்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் மட்டும் 70 லட்சத்துக்கு மேற்பட்ட காச நோயாளிகள் இந்த நிலைமையில் உள்ளனர்.

பாம்பை அடித்து பாதியில் விட்ட கதையாக –ஆண்டிபயாடிக் மருந்துகள் –

ஆண்டிபயாடிக் என்பது இரட்டை முனைக் கத்தி போன்றது. இதன் அளவு குறைந்தாலும் ஆபத்து; கூடினாலும் ஆபத்து. இதில் இரண்டாவது கருத்துக்குச் சரியான உதாரணம் இது: நம் நாட்டில் சாதாரணச் சளிக்கு வழக்கமாகப் பயன்படுத்தக்கூடிய அமாக்ஸிசிலின் மருந்து அதீதமாக (Over dose) பயன்படுத்தப்பட்ட காரணத்தால், அது பலன் தரும் திறனை இழந்துவிட்டது.

அதற்குப் பதிலாக அதைவிட வீரியம் நிறைந்த ஆண்டிபயாடிக்குகளைத்தான் அலோபதி மருத்துவம் இப்போது பயன்படுத்துகிறது
இவற்றின் விலையோ அதிகம். பக்கவிளைவுகளும் கூடுதல்...................................
அலட்சியம் வேண்டாம்!

ஆண்டிபயாடிக் விஷயத்தில் நாம் மிகவும் அலட்சியமாகவே இருக்கிறோம் என்பதை இந்தியப் பொதுச் சுகாதாரத் துறை இயக்குனரே ஒப்புக்கொண்டுள்ளார். ஆண்டிபயாடிக் சிகிச்சையை முறை தவறிப் பயன்படுத்தும்போது, எதிர்ப்பு சக்தி உடைய கிருமிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து, ஆண்டிபயாடிக் மருந்துகளையே பயனற்றவையாக ஆக்கிவிடும் ஆபத்து ஏற்படுகிறது.

இந்தியாவில் இந்த நிலைமை மிகவும் மோசம். சாதாரண வைரஸ் காய்ச்சல், சளி போன்றவற்றைக்கூடப் பல மருத்துவர்கள் வீரியம் மிகுந்த ஆண்டிபயாடிக் மாத்திரை, ஊசி மருந்து மூலம் குணப்படுத்த முற்படுகிறார்கள். உடனடியாக நோய் குணமாக வேண்டும் என்கிற நோக்கத்தில் நோயாளிகளும் இதுபோன்ற ஆண்டிபயாடிக் சிகிச்சையை விரும்புகிறார்கள். மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது லாபத்துக்காகச் சாதாரண நோய்களுக்குக்கூட அதிக வீரியமுள்ள ஆண்டிபயாட்டிக்குளை வலிந்து பரிந்துரைக்கின்றன.

நகரங்களில் தனியார் மருத்துவ வசதிகள் பெருகியிருப்பதும், கிராமங்களில் போலி மருத்துவர்கள் ஆதிக்கம் செலுத்துவதும் இந்தியாவில் அதிகமான ஆண்டிபயாடிக் பயன்பாட்டுக்குக் காரணமாக அமைகின்றன. இதனால் 50 சதவீத ஆண்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்களும் நோயாளிகளும் அளவுக்கு மீறியோ, தேவையற்ற சூழலிலோ பயன்படுத்துகிறார்கள் என்கிறது இந்தியப் பொதுச் சுகாதாரத் துறை.

இந்திய நிலைமை

இந்தியாவில்தான் காலரா, டைஃபாய்டு, காசநோய் போன்ற தொற்றுநோய்களின் பாதிப்பு அதிகம். எனவே, தொற்றுநோய்களுக்கு எதிராகப் போராடும் ஆண்டிபயாடிக்குகளின் பயன்பாடும் மிக அதிகம். இப்போதுள்ள நிலைமையில் வழக்கமான ஆண்டிபயாடிக்குகளுக்கு தடுப்பாற்றலைக் கிருமிகள் பெற்றுவிட்டால், அந்த ஆண்டிபயாடிக்குகள் வேலை செய்யாமல் போகும்போது என்ன செய்வது?

1987-க்குப் பிறகு நம் நாட்டில் புதிய ஆண்டிபயாட்டிக் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. புதிய மருந்துகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேல்நாடுகளைத்தான் நாம் நம்பி இருக்க வேண்டும். இறக்குமதி ஆகும் மருந்துகளின் விலை மிக அதிகம். இந்த நிலைமை நீடித்தால், புதிய ஆண்டிபயாடிக்குகள் இல்லாத ஒரு யுகத்தை நம்மால் சமாளிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே!
இந்த நிலைமை நீடித்தால், எந்த ஒரு மருந்துக்கும் கட்டுப்படாத நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போது சாதாரண சளி, இருமல்கூட உயிரிழப்பில் முடியக்கூடும் என்று எச்சரிக்கிறது உலக சுகாதார ஆய்வு நிறுவனம்
இதற்கு யார் பொறுப்பு.?
•  சிறிய நோய்க்கும் மருத்துவர் இன்றி எடுக்கப்படும் ஆண்டிபயாடிக் மருந்துகள்
•  விலை உயர்ந்த ஆண்டிபயாடிக் மருந்தே நல்லது என்று –மருந்து கம்பெனியின் கை கூலியாக மாறிய சில போலி மருத்துவ தரகர்கள்
•  பாதியில் அவசரப்பட்டு நிறுத்தபடும் ஆன்டி பயாடிக்க்குகள்
•  இரண்டு அல்லது மூன்று வேலைக்கு மட்டும் மருந்தை கொடுத்து –நோயாளியை  திரும்ப வர சொல்லும் –இரண்டு வேலை GP மருத்துவர்கள் –நோயின் குறி குணம் மாறிய உடன் மருத்துவரை பார்க்காத அலட்சிய நோயாளிகள்
•  ஆராய்ச்சிக்கு உட்படாத இரு வேறு ஆன்டி பயாடிக் மருந்துகளின் சேர்ந்த  –ஒரே மருந்துகள்
•  மருந்து கட்டுப்பாடு துறைக்கு போதுமான அளவு –ஆட்கள் இல்லாத நிலை
•  போலி –பேராசை மருத்துவர்கள்

தீர்வு என்ன.?

•  ஐரோப்பா ,மற்றும் அமெரிக்க நாடு மற்றும் வளர்ந்த பல நாடுகளில் ஆன்டிபயாடிக்குக்கள் மிகவும் அவசர காலத்தில் மட்டுமே –தேவையை கருத்தில் கொண்டு அவசியம் கருதியே பயன் படுத்துகிறார்கள் –அதே போல சாதாரண தொற்றுக்கு ,தொற்று பயத்திற்கு உடனடியாக ஆண்டிபயாடிக் மருந்துகளை எடுப்பதை தவிர்த்தல் நல்லது.
•  உடலின் எதிர்ப்பு சக்தியை நம்பி இருக்க வேண்டும் –உடனடியாக ஆண்டிபயாடிக் மருந்தை ஆரம்பிக்க கூடாது
•  ஆண்டி-பயோடிக் என்பது பிரமாஸ்திரம். இது பாக்டீரியாக்களை நமது நோய் சக்தியை அழிகாத போது மட்டுமே பயன்படுத்தப்படல் வேண்டும்

நாம் என்ன செய்ய முடியும்.?
•  உங்களுக்கு இருமல், சளி, காயம், வயிற்று உபாதைகள் Amoxycillin, Cloxacillin, Tinidazole, Ampicillin, Levoflaxin etc., போன்ற மருந்துகள் எடுக்க வேண்டாம்.
•  இரண்டாவதாக உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஆண்டி-பயோடிக் பரிந்துரைத்தல் காலம் வரை நிச்சயமாக ஆண்டி-பயோடிக் எடுக்கப்பட வேண்டும். 3 நாட்களுக்கு பிறகு நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்றாலும் கூட  நிச்சயமாக நிறுத்தாதீர்கள். நீங்கள் நோயின் குறிகுணத்தில் இருந்து மீண்டது போன்று  உணர்ந்தாலும் கூட முழு coures மருந்தையும் எடுத்துகொள்ளுங்கள்...........
ஆண்டி-பயோடிக் எதிர்ப்பின் விளைவுகள் என்ன.?
•  ஆண்டி-பயோடிக் தடுப்பு பாக்டீரியா காரணமாக, மக்கள் நுரையீரல் தொற்று, காசநோய், உட்புற தொற்றுக்கள், அறுவை சிகிச்சையின் போது தொற்று நோய்கள் போன்ற நோய்களால் பதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, மக்கள் ஆபத்தான விகிதத்தில் இறந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் இந்த ஆண்டி பயாடிக் செயல் இழப்பே
•  “Superbugs” உங்களையும், என்னையும் பாதிக்கலாம். ஆனால், அந்த தொற்றிலிருந்து நம்மை காப்பாற்ற எதுவும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60,௦௦௦ குழந்தைகளுக்கு இந்த “Superbugs” இடமிருந்து தொற்று ஏற்படுகின்றது.
•  இந்த சூப்பர் பக் என்னும் மரபியல் மாற்றத்தை அடைந்த கிருமிகளின் பல்கி பெருகுதல் –கால்நடைகளில் இருந்தும் ,மற்ற உயிரினத்தில் இருந்தும் –உடலின் எதிர்ப்பு ஆற்றலை அழித்து- சிறிய நோய்க்கே பலியாகிட காரணமாய் அமைகிறதே .

அரசாங்கம் என்ன செய்ய முடியும்.?
•  சரியாய் மருந்து சீட்டு இல்லாமல் விற்கப்படும் ஆண்டி-பயோடிக்கை தடை செய்ய வேண்டும் . அதில்  எந்த ஒரு Compromise-யும் செய்யக்ககூடாது.
•  ஆண்டி-பயோடிக்கை சட்ட விரோதமான மருந்துகள் என்று சொல்ல வேண்டும். ஆண்டி-பயோடிக்குகளை நம் இந்தியாவில் தடுக்க இதுவே ஒரே வழி,
•  மனிதர்களுக்கு ஆண்டி-பயோடிக்ஸ் பற்றி விழிப்புணர்வு தர வேண்டும்.
•  குறைந்தது GP என்னும் ஜெனெரல் ப்ராக்டிஷனர் பொது மருத்துவர்கள் –வெளி நோயாளிகளாக ஆண்டிபயாடிக் கொடுப்பதை சட்டம் இயற்றி தடுக்க வேண்டும் –உள் நோயாளிக்கே –அல்லது சரியான மருத்துவ வசதி உள்ள மருத்துவமனைக்கே ஆண்டிபயாடிக் மருந்தை பரிந்துரைக்கும் தகுதியை கொடுக்க வேண்டும்

நீங்கள் எப்படி உதவ முடியும்.?
•  அது முற்றிலும் தேவையில்லை என்ற போதிலும் ஆண்டி-பயோடிக்கை எடுத்து கொள்ளாதே.
•  அன்றாட நோய்கள் பெரும்பாலும் ஆண்டி-பயோடிக் இல்லாமலே 2 முதல் 3 நாட்களில் குணமடையும், ஆதனால், ஆண்டி-பயோடிக்  அவசியமற்றது.
•   அவசிய இல்லாத நேரத்திலும் மற்றவர்களை ஆண்டி-பயோடிக் எடுங்கள் என்று வற்புறுத்த வேண்டாம்.
நீங்களும் தெரிந்துகொண்டு, மற்றவர்களுக்கும் தெரிவியுங்கள் மாற்றம் செய்யுங்கள்.
தேவை ஒருங்கிணைந்த மருத்துவம்!

எல்லா நோய்களுக்கும் அலோபதி சிகிச்சைதான் சிறந்தது என்பதில்லை. சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட மாற்று மருத்துவ முறைகளிலும் நோய் குணமாகும். வருங்காலத்தில் ஒருங்கிணைந்த மருத்துவ முறையால் மட்டுமே ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும். இதை மறந்தாலோ அல்லது மறுத்தாலோ சாதாரண நோய்களுக்குக்கூடப் பெரும் விலை கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும். கடந்த நூற்றாண்டின் முற்பகுதியைவிட மோசமான நிலைக்கு மனித குலம் தள்ளப்படும். இது, மனித குலத்துக்கு நுண்ணுயிரிகள் விடுக்கும் எச்சரிக்கை.
எதிர்ப்பு சக்தியை ஒருங்கிணைந்த மருத்துவத்தால் பெறுவோம்
ஒருங்கிணைந்த சிகிச்சை மற்றும் ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை     9043336000 (ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை –கீழ்கட்டளை சென்னை )

இந்த செய்தியை நம்மால் முடிந்தவரை பகிரவும்,

http://ayurvedamaruthuvam.blogspot.com/2017/05/antibiotic-resistance.html

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...