Thursday, June 15, 2017

அலோபதி மருத்துவத்தின் பயங்கரவாதம்! Horrible side effects of Allopathic Medicine

அலோபதி மருத்துவத்தின் பயங்கரவாதம்!
Horrible side effects of Allopathic Medicine

"நவீன மருத்துவம் ஆரோக்கியத்திற்கே எதிரானது. மனித நலனுக்கு சேவை செய்வதற்காக அது உருவாக்கப்படவில்லை. மாறாக, பெரிய நிறுவனமாக உருவாகியிருக்கும் தனக்கு சேவை செய்வது மட்டுமே அதன் நோக்கம். நவீன மருத்துவம் குணப்படுத்துவதைவிட அதிகமானவர்களை நோயாளியாக்குகிறது" என்கிறார் ஆஸ்திரிய தத்துவ ஞானியும் ரோமன் கத்தோலிக்கப் பாதிரியாருமான இவான் இல்லிச். இவரே அமெரிக்காவில் இவ்வாறு சொல்லியிருந்தால் இவர் மேல் கார் ஏற்றிக் கொல்ல முயற்சிகள் செய்யப்பட்டிருக்கலாம். மருந்து கம்பெனிகளின் செல்வாக்கு அந்த அளவுக்கு அமெரிக்காவையும் மேற்குலகையும் தனது பிடியில் வைத்திருக்கிறது. 1975ல் வெளியிட்ட "மெடிக்கல் நெமசிஸ்" (மருத்துவத்தின் ஊழ்வினை) என்ற புத்தகம் மூலமாக முதல் முதலில் நவீன மருத்துவத்தின் பக்க விளைவுகளைப் பற்றித் தீவிரமாக மக்களிடையே பேசியவர் இவர். 2002ல் அவர் இறந்துவிட்டாலும் அலோபதி மருத்துவம் கட்டவிழ்த்துவிடும் ஊழிக்கால கிருமிகள் அவர் சொன்ன கருத்துக்கு உண்மை சேர்க்கின்றன. கடந்த வாரம்கூட அம்பலமான என்.டி.எம்-1 சூப்பர் பக் என்ற எந்த நோய் எதிர்ப்பு மருந்துக்கும் கட்டுப்படாத கிருமி இருப்பதைக் கண்டுபிடித்திருப்பதாக சில நவீன மருத்துவ ஆய்வாளர்கள் "பெருமை"யுடன் கூறியிருக்கிறார்கள்.
அலோபதி அல்லாத மருத்துவத்தில் நல்ல குணம் கிடைத்திருக்கிறது என்று ஒரு அலோபதி மருத்துவரிடம் கூறும்போது ஏதோ செய்வினை, பில்லி, சூனியத்தைப் பற்றிப் பேசுவது போல அவர்களின் முகம் கோணிவிடுகிறது. உடனடியாக அந்த அலோபதி மருத்துவரிடம் உருவாகும் எதிர்வினை, அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்ஷின் you are with us or against us  மாதிரியான ஒரு அகங்காரமான, ஆதிக்க வெறி கொண்ட அணுகுமுறைதான். இதில் அந்த தனிப்பட்ட மருத்துவரைக்குறை சொல்லிப் பயனில்லை. இன்று எம்.பி.பி.எஸ்., எம்.டி., எஃப்.ஆர்.சி.எஸ். என்றெல்லாம் எழுத்துக்களை போட்டுக்கொள்ளும் வர்க்கம் அவ்வாறு எதிர்வினையாற்றவே தயார் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனப்பாண்மை விட்டு வெளியே வருவதற்குத் திறந்த மனம் வேண்டும். பெரும்பாலான மருத்துவர்களிடம் அது இருப்பதில்லை. வரலாறு முழுக்கவே சக மருத்துவ முறைகளோடு பகைமை உணர்வுடன் வளர்க்கப்பட்ட மருத்துவம் அலோபதி. தனக்கு முன்பே பிறந்து தன்னை விட செல்வாக்குடனிருந்த ஹோமியோபதியைப் போர் செய்து ஓரங் கட்டிய அலோபதி, தான் புகுந்த மண்ணில் எல்லாம் அங்குள்ள பூர்வீக மருத்துவ முறைகளை மாந்த்ரீகத்திற்கு நிகராகத்தான் மதிக்கிறது. இந்தியாவில் ஆயுர்வேதத்தையும் சித்த மருத்துவத்தையும் நடத்துவது போல. அலோபதி மருத்துவம் உருவாக்கும் மத நிறுவன விசுவாசத்திலிருந்து வெளியே வந்தவர்கள்தான் அலோபதிக்கு எதிரான இயக்கத்திற்கு முக்கிய பங்களிக்கிறார்கள் என்பது, அது எந்த அளவுக்கு ஒரு மோசமான அரசியல் இயக்கமாக இருக்கிறது என்பதற்கு சாட்சி.
நவீன மருத்துவம் என்று இன்று அழைக்கப்படுகிற சிகிச்சை முறைக்கு அதன் தொடக்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட பெயர் அலோபதி. ஆனால் விவரமறிந்த அலோபதி மருத்துவர்கள் யாரும் அதை அந்தப்பெயரிட்டு அழைப்பதை ஏற்க மாட்டார்கள். அதன் அர்த்தம் அப்படி. "அலோ" என்றால் "எதிர்" என்று அர்த்தம். "பதி" என்றால் நோய் என்று அர்த்தம். அதாவது ஒரு நோய்க்கு நேர் எதிரான ஒன்றைப் பயன்படுத்தி சிகிச்சை தருவது. தலை வலிக்கிறதா? அதைவிட கடுமையான வலியை ஏற்படுத்துகிற ஒரு களிம்பைத் தடவினால் முடிந்துவிட்டது. மலச்சிக்கல் ஏற்படுகிறதா? ஜீரணத்தில் ஏற்படும் பிரச்சினை பற்றியெல்லாம் கவலை இல்லை. நேரடியாக குதம் வழியாக மலமிழக்கியைப் புகுத்திவிட்டால் விசயம் முடிந்துவிட்டது. உருவான காலத்தில் அலோபதி கொடூரமான வழி முறைகளில் சிகிச்சை தரும் முறையாகவே அறியப்பட்டது. ஹோமியோபதி அதற்கு நேர் எதிரானது. Principle of similars என்று ஹோமியோபதியை அழைக்கிறார்கள். நோயை உண்டாக்கும் கிருமியே தான் அதற்கு மருந்தும்கூட. எந்தக் கிருமி நோயை ஏற்படுத்துகிறதோ அதே கிருமியை மிக நுண்ணிய அளவில் உடலுக்குள் அனுப்புகிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை வீரியம் குறைவாக உள்ள கிருமிகள் தட்டி எழுப்புகிறது. இயற்கையாக, பக்க விளைவுகள் இல்லாமல் நோயை வேரோடு ஒழிக்க அல்லது நோய் வராமலே தடுக்க இது முடிகிறது.
தத்துவார்த்தமாகப் பார்த்தால் அலோபதியும் ஹோமியோபதியும் நேர் எதிரானவை. அதனால் அவற்றிற்கிடையிலான போரும் தவிர்க்க முடியாததாக மாறியது. டாக்டர் சாமுவேல் ஹானேமன் 1790களில் ஹோமியோபதியை ஜெர்மனியில் உருவாக்குகிறார். தனது மருத்துவத்தில் உடலுக்குத் தரும் அதே முக்கியத்துவத்தை மனதிற்கும் கொடுக்கிறார் அவர். தனிப்பட்ட முறையில் அவர் அந்த மருத்துவத்தை எந்த வகையிலும் ஆன்மீகம் அல்லது மதத்துடன் தொடர்புபடுத்தியதாகத் தெரியவில்லை. 1800களுக்கும் 1900களுக்கும் நடுவில் உருவாகிறது அலோபதி. 1844ல் அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோமியோபதி அமைக்கப்பட்டு, திட்டமிட்ட வளர்ச்சியை அடைய நினைக்கிறது. அதற்கு எதிராக 1848ல் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேசன் அமைக்கப்படுகிறது (அலோபதி மருத்துவர்களால்). இதே காலகட்டத்தில்தான் நோய் எதிர்ப்பு மருந்துகள் (ஆன்டிபயாடிக்ஸ்) கண்டு பிடிக்கப்படுகின்றன. இதனால் வேகமான வளர்ச்சியடையும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விரைவிலேயே அலோபதி மருத்துவத்தை தங்களுடைய கருவியாக சுவீகரிக்கின்றன. ஹோமியோபதியை ஒழிக்க இது உதவுவதால் அலோபதி மருத்துவமும் இந்தக் கூட்டுக்குத் தயாராகவே இருந்தது.
இந்த சதிக்கோட்பாட்டை நான் நம்புவதில்லை என்று சொல்பவர்களுக்காக ஒரு தகவல். அலோபதி மருத்துவர்கள் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேசனை அமைக்கும் போது தங்கள் உறுப்பினர்கள் யாரும் ஹோமியோபதி மருத்துவத்துடனோ, ஹோமியோபதி மருத்துவர்களுடனோ எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்பதை ஒரு விதியாக வைத்திருந்தார்கள். அதாவது, தங்களுடைய மதம் மட்டுமே உண்மையானது என்ற தட்டையான பார்வை கொண்ட ஒரு மத நிறுவனம் என்ன செய்யுமோ அதைச் செய்தார்கள். பிற்காலத்தில் அலோபதி மருத்துவர்கள் உருவாக்கிய சங்கம், மருந்துக் கம்பெனிகளின் செல்வாக்குடன் அமெரிக்காவில் அதிகார மையமாக மாறிய போது ஹோமியோபதி மருத்துவம் அறிவியல்பூர்வமற்றது என்ற பிம்பம் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டது. அலோபதி மருத்துவர்களும் அவர்களின் தொடர்ச்சியாக வந்திருக்கும் மருத்துவ ஆய்வு உலகமும் இன்றளவில்கூட ஹோமியோபதியை ஒரு அறிவியல்பூர்வமான மருத்துவமாக அங்கீகரிப்பதில்லை.
அலோபதி தன்னைப் பகுத்தறிவு பூர்வமான மருத்துவ முறை என்று கூறிக்கொண்டது. தன்னை அறிவியல்பூர்வமான சிகிச்சை என்றது. தன்னைத் தவிர அத்தனையும் அறிவியல் இல்லை என்றும் கூறி வருகிறது. ஹோமியோபதியை அனுபவ சிகிச்சை (emprirical) என்று அழைக்கலாம். ஒரு மருந்து நோயாளியிடம் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதை ஆராய்ந்தறிவது அறிவியல்பூர்வமான வழிமுறைதான். ஆனால் மருந்து நிறுவனங்களின் சக்தியோடு புதிய தொழில்நுட்பத்தின் வரவையும் அலோபதி தனதாகக் கொண்டு மருத்துவத்திற்கு ஏகபோக உரிமை கொண்டாட ஆரம்பித்தபோது அத்தகைய தர்க்கங்கள் எடுபடவில்லை. அந்தப்போரில் தோற்றுப் போன ஹோமியோபதி ஓரங்கட்டப்பட்டது. 1920களுக்குப் பிறகு மருத்துவத்தில் புகுந்த தொழில்நுட்பத்தின் உபயோகம் அலோபதியின் தனி ஆதிக்கத்தை முழுமையடையச் செய்தது. மேற்குலகின் ஒரே மருத்துவ முறை அலோபதி மட்டுமே என்பது போன்ற பிம்பம் உருவாக்கப்பட்டது.
நானாவித சக்திகளுடனான கூட்டு மூலம் ஹோமியோபதியின் ஆதிக்கத்தை அலோபதியால் ஒழிக்க முடிந்ததே தவிர, அந்த மருத்துவத்தின் தாக்கத்தையோ சாரத்தையோ அழிக்க முடியவில்லை. கடந்த இரு நூற்றாண்டுகளாக கொத்துக் கொத்தாக மனித உயிர்களைப் பறித்து வந்த கொள்ளை நோய்களை ஒழிப்பதற்கு, அறிகுறிகளை மட்டுமே ஒழிக்கும் அலோபதி கிஞ்சித்தும் பயன்படவில்லை. போலியோ முதல் அம்மை நோய் வரை உலகின் மிகக் கொடிய நோய்களுக்கு நிரந்த தீர்வைக் கொடுத்த அத்தனை தடுப்பூசிகளும் ஹோமியோபதி மருத்துவதத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவைதான்: நோய்க் கிருமியையே நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்துவது (தனி நபர்களின் தேவைக்கேற்ப மருந்தின் வீரியத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற ஹோமியோபதியின் மற்றொரு விதியையும் பின்பற்றியிருந்தால் ஏராளமான பக்க விளைவுகளையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தவிர்த்திருக்கலாம்). நோய் எதிர்ப்பு மருந்துகளைத் தங்கள் பிரம்மாஸ்திரமாகக் கொண்ட அலோபதியின் மடத்தனம் இன்று சூப்பர் பக் வரை கொண்டு வந்து விட்டிருக்கிறது. மனிதர்கள் புதிய ஆன்டிபயாடிக் தயாரிக்கும் வேகத்தைவிட அந்தக் கிருமிகளின் உருமாற்றம் வேகமாக நிகழ்கிறது (அரை மணி நேரத்தில் கூட ஒரு கிருமியால் தன்னை ஆன்டிபயாடிக்கைத் தாக்குப் பிடிப்பதாக மாற முடியுமாம்). இப்போது புதுடெல்லியின் பெயரைத் தாங்கிய என்.டி.எம்-1 என்ற சூப்பர்பக் மூலம் இந்தியாவுக்கான மருத்துவச் சுற்றுலாவை ஒழித்துக் கட்டுகிறார்களோ இல்லையோ, நோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்கும் தொழிலை ஒழித்துக்கட்ட வேண்டி வரும் போலிருக்கிறது. கிருமி தங்களை இவ்வளவு வேகமாக நோய் எதிர்ப்பு மருந்தைத் தாக்குப் பிடிப்பதாக மாறும்போது பல ஆயிரம் கோடி ரூபாயைக் கொட்டி ஆன்டிபயாடிக் மருந்துகளைத் தயாரிப்பதும் அதற்காக மேலும் பல ஆயிரம் கோடி செலவு செய்து ஆராய்ச்சிகள் நடத்திக்கொண்டிருப்பது வீண்வேலை என்று அலோபதி மருத்துவ வட்டாரத்திலேயே ஒரு தரப்பினர் கருதத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் இத்தனை ஆயிரம் கோடி ரூபாயின் மீது அமர்ந்திருக்கும் மருந்து கம்பெனி மாஃபியா அவ்வளவு எளிதில் இந்த உண்மை வெல்ல அனுமதிக்காது.
200 வருட அலோபதி-ஹோமியோபதியின் போரைத் திரும்பிப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. மிகவும் பலவீனமான மருத்துவ தத்துவத்தைக் கொண்ட ஒரு அமைப்பு, மிகவும் வலிமையான தத்துவார்த்த பின்புலத்தைக் கொண்ட ஹோமியோபதியைத் தோற்கடித்திருக்கிறது. இந்த மருத்துவங்களைவிட பழமையான இந்தியாவின் ஆயுர்வேதமும் சித்த மருத்துவமும்கூட அதனால் தோற்கடிக்கப்பட்டன. அலோபதி வெறுமனே அறிகுறிகளையே சரி செய்கிறது என்பது எல்லோராலும் பேசப்படும் ஒன்றுதான். அதுபோக, நோயின் உடல்ரீதியான அம்சத்திற்கு மட்டுமே அலோபதி முக்கியத்துவம் தருகிறது. உளவியலுக்கும் உடலின் இயக்கத்திற்கும் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பை முற்றிலும் நிராகரிக்கிறது. ஒவ்வொரு தனி நபரும் வேறுபாடுகள் கொண்டவர் என்பதால் ஒவ்வொருவருக்குமான சிகிச்சை தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதையும் அலோபதி நிராகரிக்கிறது. மாறாக, அனைவருக்குமான பொதுவான அளவு ஒன்றை நிர்ணயம் செய்வதன் தொடர் விளைவாக வேதிப் பொருட்களின் அதீத பிரயோகத்தால் நோயைவிட அதிகமான பாதிப்புகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. ஒரு உறுப்பிற்குப் பாதிப்பு என்றால் அதை மட்டுமே தனித்து சிகிச்சை தருகிற அளவுக்கு அலோபதி மருத்துவம் இயந்திரத்தனமாகச் செயல்படுகிறது.
"1920களில் ஒரு மருத்துவ முறைக்கு ஏகாதிபத்யம் வழங்கியதால் இன்று மனித குலம் நோய்களையும் மரணங்களையும் விலையாகக் கொடுக்கிறது" என்கிறார் மருத்துவ வரலாற்றாய்வாளரான ஹாரிஸ் எல்.கொல்டர். அலோபதி மருத்துவம் 200 வருடங்களாக ஒரு கோரமான ரத்தச் சரித்திரம் எழுதி வருகிறது. இதய பைபாஸ் ஆபரேசன் முதல் சிசேரியன் பிரசவம் வரை தேவையில்லாமல் பிரயோகிக்கப்படும் கத்திகள் ஏற்படுத்திய ரணமும் உயிரிழப்பும் நிஜமான போர்களில் ஏற்பட்டதை விட அதிகம். தங்களின் மூட்டுப் பிரச்சினைகளுக்கு வசதியாக ஒரு நல்ல ஆயுர்வேத வைத்தியரை நாடும் அலோபதியின் ஆர்த்தோ டாக்டர்கள் தங்களிடம் காசு கொடுத்து சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு மட்டும் சில வருடங்கள் மட்டுமே தாக்குப் பிடிக்கும் செயற்கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சையைப் பரிந்துரை செய்கிறார்கள். அலோபதியின் எழுச்சி உருவான அமெரிக்காவில் அதனால் ஏற்படும் ரணங்களும் இயல்பாகவே அதிகமாக இருக்கின்றன. அமெரிக்காவில் புற்றுநோய்க்குத் தரப்படும் கீமோ தெரப்பி சிகிச்சையின் கடுமையே 25 சதவீத நோயாளிகளின் உயிரைப் பறிப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. வேறு சிகிச்சை முறைகள் மூலம் புற்றுநோயைக் குணப்படுத்துவதாகக் கூறப்படும் மருத்துவர்கள் மீது மருந்து நிறுவன மாஃபியாக்கள் காவல்துறையை ஏவிவிடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. அமெரிக்காவில் அலோபதி மருத்துவத்தின் தீங்குகளைப் பிரச்சாரம் செய்யும், ஹோமியோபதி போன்ற மருந்துகளை ஆதரிக்கும் இயக்கத்தைச் சேர்ந்தவர்களைக் கொல்வதற்குக்கூட முயற்சிகள் நடப்பதாகப் புகார்கள் வருகின்றன.
அலோபதி மருத்துவத்தின் பயங்கரவாதம் மேற்குலகில் ஹோமியோபதியை ஓரங்கட்டியது போல இந்தியாவின் ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தையும் ஓரங்கட்ட முயற்சி செய்யாமல் இல்லை. ஆயுர்வேதத்திற்கு வலுவான மருத்துவ சிந்தனை உண்டென்றாலும் அதில் ஆன்மீகத்திற்கும் இடமுண்டு. அதை அறிவியல் பூர்வமற்றது என்று ஒதுக்கித்தள்ள இதுவே வசதியாகிப் போனது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக இந்தியாவின் பாரம்பரிய மருத்துவம் கிராமங்களில் மட்டுமே உயிர் வாழ்ந்தது. அதுவும்கூட நவீன மருத்துவர்கள் கிராமங்களுக்குச் செல்லத் துணியாததால் ஏற்பட்ட மறைமுகமான நன்மை இது. அலோபதியின் பிரச்சினைகள் இப்போது அம்பலமாகத் தொடங்கிவிட்டதால் நமது மண்ணின் மரபுகள் மறு கண்டுபிடிப்பு செய்யப்படுகின்றன. அலோபதி மருத்துவம் வளர்த்துக் கொண்டிருக்கும் நவீன நோய் பரிசோதனை முறைகளும் தொழில்நுட்பத்தின் உதவியும் அவசியம்தான் என்றாலும் மிக அரிதாகவே பிரயோகிக்கப்பட வேண்டியவை. பணத்திற்காக அதீதமாகப் பிரயோகிக்கப்படுகின்றன. நோயிலிருந்து விடுதலை கிடைப்பதற்குப் பதில் அதைவிட கூடுதலான வலி வந்து சேர்கிறது. நோய் வந்த பிறகு தலையிடுவது தான் அலோபதியின் ஆதாரமே என்பதால் நோய்கள் இல்லாவிட்டால் அலோபதியும் இல்லை. அதனால் அவர்கள் ஒருபோதும் நோய்களிலிருந்து மனித குலத்திற்கு விடுதலை பெற்றுத் தரப் போவதில்லை. மாறாக, சுயமாகவே செய்துகொள்ளும் அளவுக்குத் தன்னிறைவுக்கான சாத்தியத்தைத் தரும் ஆயுர்வேதத்தைப் போன்ற மருத்துவ முறைகள் நோயால் வருந்துகிறவர்களின் எண்ணிக்கையையே குறைக்கும் வருமுன்காப்பு அம்சத்தைக் கொண்டுள்ளன. மூட்டுப் பிரச்சினைகளுக்கு அக்குபஞ்சர், ஆயுர்வேதம் போன்றவை சிறப்பாக இருக்கிறது என்ற எண்ணம் இருக்கிறது. புற்று நோய் முற்றும் முன்பே கவனித்தால் செல்களின் கட்டுப்பாடில்லா பெருக்கத்தைப் பாரம்பரிய மருத்துவங்களில் கட்டுப்படுத்த முடியும் என கூறப்படுகிறது. இவற்றையெல்லாம் அறிவியலுக்கு அப்பாற்பட்டவை என்று ஒதுக்கித் தள்ளினால் அது அலோபதியின் சுயநல நோக்கையே காட்டும். இன்றைய நவீன மருத்துவத்தின் சோதனை முறைகளைப் பயன்படுத்தி யோக நிலைகளினால் மூளையில் ஏற்படும் நல்லவிதமான மாற்றங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
புற்றுநோய்க்கு கீமோதெரப்பி எடுத்துக்கொண்ட நோயாளிகளுக்கும் இதய நோய்க்கு அறுவை சிகிச்சை பெற்றுக் கொண்ட நோயாளிகளுக்கும் ஆயுர்வேதம் சிகிச்சை தருவதால் வலிமிகுந்த நிவாரண காலகட்டம் வெகுவாகக் குறைவதும் இறப்பு விகிதம் குறைவதும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனினும் முதற்கட்டமாக அத்தகைய கடுமையான அறுவை சிகிச்சைகள் தவிர்க்க முடியாத நிலையில்தான் செய்யப்பட்டனவா என்ற கேள்விக்குப் பதில் ஒருபோதும் கிடைப்பதில்லை. நவீன மருத்துவத்தின் கர்ப்பத் தடை மாத்திரைகளும் வாசக்டமிகளும் ஏற்படுத்திய பக்க விளைவுகள் எத்தனையோ மனிதர்களின் இனிமையான வாழ்வை நிரந்தரமாகப் பறித்திருக்கின்றன அல்லது வாழ்க்கை முழுவதும் ஊனமாக்கியிருக்கின்றன. பத்மாசுரனுக்குக் கொடுத்த வரத்தைப் போல ஒரு பேரழிவை உருவாக்கிவிட்ட பிறகு, அதைக் கட்டுக்குள் கொண்டு வருகிறேன் என்ற பெயரில் உலக நாடுகளின் நிதியை எல்லாம் சாப்பிடுவதுதான் இதன் செயல்முறை. எச்.ஐ.வி/எய்ட்ஸை மையமாக வைத்து உருவான ஒரு பெரிய நிதி சாம்ராஜ்யமே அதற்கு உதாரணம். அக்குபஞ்சரோ, ஹோமியோபதியோ சர்வ ரோக நிவாரணி என்று இங்கு வாதிடவில்லை. எந்த மருத்துவ முறை, எந்த நோய்க்கு சிறப்பாக வேலை செய்கிறதோ அதைப் பயன்படுத்துவதுதான் மனித குலத்திற்கு நலம் பயக்கும். ஆனால் ஆரோக்கிய சமூகத்தை எட்ட உதவக்கூடிய அத்தகைய திறந்த மனதுடனான அணுகுமுறை ஏற்படுவதற்கு நவீன மருத்துவம் தடையாக இருக்கிறது என்பதுதான் பிரச்சினை.

"மனிதகுலம் இதுவரை எத்தனையோ பேரழிவுகளிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. நவீன மருத்துவத்திடமிருந்து மீண்டு வரும்" என்கிறார் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த உடல்நலக் கட்டுரையாளாரான ஜெர்ஹார்ட் கௌச்சர். ஆனால் மற்ற பேரழிவுகளிலிருந்து மீண்டு வந்ததைவிட இதுதான் மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. ஏனெனில் இதில் மனிதனுக்கு எதிரி இயற்கை அல்ல, சக மனிதன்.

முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்...

முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்...

அமெரிக்காவில் கூட காய்ச்சல், சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை... 3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்கும்...

ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்,
தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!

அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.

உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.

இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.

இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.

நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.

ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.

உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.

வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.

அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.

உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.

மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.

அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.

நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.

சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.

வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.

உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.

கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.

எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.

உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.

வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.

குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.

வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.

இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.

பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?

இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.

இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.

கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!

இதற்கு மருத்துவம்  செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!

இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!

இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!

மருத்துவம், உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!

மருத்துவம் தவிருங்கள்!

ஆரோக்கியம்  அனுபவியுங்கள்.......!     

🌿🌱🌴🌿🌱🌴🌿🌱🌴🌿🌱

முழங்கால் மற்றும் மூட்டு வலிகளுக்கு தீர்வு தரும் கால்சியம் நிறைந்த பிரண்டை

முழங்கால் மற்றும் மூட்டு வலிகளுக்கு தீர்வு தரும் கால்சியம் நிறைந்த பிரண்டை

S.SETHU RAMAN.B.Sc

முழங்கால் வலி,மூட்டு வலி நீங்க பிரண்டை துவையல் செய்து சாப்பிடுங்கள்..கால் வலியை போக்க பிரண்டை, மல்லிதலை,  தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் உடல் சோர்வும் இருக்காது.

பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து (கால்சியம்) தான். எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை. அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை. சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும்.

பிரண்டை உப்பை சுமார் 300 மில்லி கிராம் தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள்  வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது. சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை  உடனடியாக உணரலாம்.

பிரண்டையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. கால்சியம் சத்தை உடைய இது, ஈறுகளில் ரத்தம் கசிவை சரிசெய்யும்.

பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் பயன்படுத்தினால்  வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது ஒரு அருமருந்து. பிரண்டையின் மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரமாக்கும்.

S.SETHU RAMAN.B.Sc

பல்வலி மற்றும் ஈறுகளின் வீக்கத்தை குறைக்கும் எளிய மருத்துவம்

பல்வலி மற்றும் ஈறுகளின் வீக்கத்தை குறைக்கும் எளிய மருத்துவம்

S.SETHU RAMAN.B.Sc

வெங்காயமானது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து நச்சுக் கிருமிகளை அழிக்க உதவுகிறது. இது போன்ற  பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள வெங்காயத்தை நமது பற்களின் அடியில் வைத்துக் கொள்வதால் கிடைக்கும்  நன்மைகளை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

பல்வலிக்கு மருந்து

ஒரு வெங்காயத்தை மெல்லிசாக வெட்டி, அதை நமது பற்களின் அடியில் கீழ் பகுதியில் வைத்தால், தாங்க முடியாத பல்வலி  விரைவில் குறைந்துவிடும்.

பல்வலி ஆரம்பத்தில் இருக்கும் போதே அதனுடைய வலி அதிகரிக்கச் செய்யாமல், பல்வலியை போக்குவதற்கு, அந்த வெங்காயத்தை சாதாரணமாக மென்று வந்தாலே போதும்.

கிராம்பு எண்ணெய் பல்வலியை போக்குவதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. காட்டன் பஞ்சை 3 சொட்டு கிராம்பு எண்ணெயில்  நனைத்து பல்வலி இருக்கும் இடத்தில் தேய்த்து கொடுத்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வெங்காயத்தை போன்றே வெள்ளரிக்காய்யை மெல்லிசாக நறுக்கி, அதை பற்களுக்கு அடியில் சிறிது நேரம் வைத்து இருந்தால்,  தாங்க முடியாத பல்வலி குறைந்துவிடும்.

நமக்கு பல்வலி அதிகமாக இருந்தால், இஞ்சியை சிறிய துண்டாக நறுக்கி, அதை பல்வலி இருக்கும் இடத்தில் வைத்து மென்று வர வேண்டும் இதனால் பல்வலிக்கு உடனடி நிவாரணி கிடைக்கும்.

பல்வலி காரணமாக நமது ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டிருந்தால், அதற்கு சூடான டீ பேக்கை எடுத்து பல்வலி இருக்கும் இடத்தில் நேரடியாக வைத்து, ஒத்தடம் போன்று கொடுத்து வந்தால், பல்வலி மற்றும் ஈறுகளின் வீக்கத்தை குறைக்கலாம்.

தினமும் நாம் சாப்பிடும் உணவுகள் நமது பற்களின் இடுக்குகளில் சிக்கிக் கொள்வதால், அது கிருமிகளாகி, பற்களில் வலியை ஏற்படுத்துகிறது. எனவே அன்றாடம் நாம் பற்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

காலையில் பற்களை சுத்தம் செய்வதை தவிர்த்து, இரவு நேரத்தில் சுத்தம் செய்யுங்கள். இரவு நேரத்தில் நீங்கள் பற்களை சுத்தம் செய்துவிட்டு தூங்க சென்றால் எவ்வித கிருமிகளும் பற்களை அண்டாது. காலையில், சுடுநீர் அல்லது சுடுநீருடன்  கொஞ்சம் உப்பு கலந்து சுத்தம் செய்தால் போதுமானது.

S.SETHU RAMAN.B.Sc

சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!

சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்… அதில் உள்ள ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெய்.

இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,

* முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.

* வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

* குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

* சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

* முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

* செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

* சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

* புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

* வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

* வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

* வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

* அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத 8 உணவுகள்!

மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத 8 உணவுகள்!
இன்றைய நாகரிக வாழ்க்கை முறையில் ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற நவீன மின்னணுச் சாதனங்கள் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. விளைவு, தேவையானபோது சமைத்துச் சாப்பிட்டது போய், தேவைக்கு அதிகமாகவே உணவைச் சமைத்து,  ஃப்ரிட்ஜில் வைத்துகொள்கிறோம். அதை விரும்பும்போது மீண்டும் மைக்ரோவேவ் அவனிலோ, அடுப்பிலோ வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. எப்போதும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்ற விருப்பமும், அப்படிச் சாப்பிட்டால்தான் ஆரோக்யம் என்ற தவறான எண்ணமும்தான் இதற்குக் காரணம். `உணவுகளை இப்படிச் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், அதிலுள்ள சத்துகள் குறைந்துபோய்விடும். அதுவே உடல் ஆரோக்யத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும்’ என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், `இது ஃபுட் பாய்ஸனிங் தொடங்கி இதய நோய், புற்றுநோய் போன்ற பெரிய நோய்கள் வரை வழிவகுத்து, உயிருக்கே உலைவைத்துவிடும்’ என்றும் எச்சரிக்கிறார்கள். அந்த வகையில் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.

சிக்கன்

கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம்ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிக்கனைச் சூடுபடுத்தும்போது இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும்; அதையே இரண்டாவது முறை சூடு செய்து சாப்பிட்டால் அதுவே ஃபுட் பாய்சனாக மாறக் காரணமாக அமைந்துவிடும். எனவே, இதை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது. ஒரு முறை வறுத்த இறைச்சியை மீண்டும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்றால், சாண்ட்விச்சாகச் செய்து சாப்பிடலாம்.

கீரை 

கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ்  (Nitrates) சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக   (Nitrites) மாறும். இது, புற்றுநோயை உண்டாக்கும் பண்பு (Carcinogenic Properties) கொண்டது. கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள் உண்டாகும்; குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, கீரையைச் சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

முட்டை

முட்டை அதிக புரோட்டீன் நிறைந்த உணவு. நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக மாறும். இது, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, முட்டையை எக்காரணம் கொண்டும் ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது.

காளான்

காளானைச் சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது. காளானிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இதை,  இரண்டாம் முறை சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.

சாப்பாடு

அரிசி நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் ஓர் உணவுப் பொருள். சாதத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து,  ஃபுட் பாய்சனாக மாறிவிடும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தேவைப்படும்போது சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு. அப்படிச் செய்யும்போது சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விட வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக நச்சுத் தன்மை உள்ளதாக மாறிவிடும்; வாந்தி, குமட்டல், உடல்நல பாதிப்பு எல்லாம் ஏற்படும்.

சமையல் எண்ணெய்

எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். இது புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படக் காரணமாகவும் அமையும்.

பீட்ரூட்
பீட்ரூட்டும் கீரை வகைகளைப் போல நிறைய நைட்ரேட்ஸை உள்ளடக்கியது. அதனால் பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்து பயன்படுத்தக் கூடாது.

படித்து விட்டு பகிர்ந்து விட்டால் நலம்.... கடைப்பிடித்தால் மிக்க நலம்..×+®©

ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய் !!

ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய் !!

எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணைய்யை அதிகம் பயன்படுத்துபவர்கள் நாம். இது வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணை இதுதான். இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளில் எள் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. எள்ளில் வெள்ளை எள், கறுப்பு எள், சிவப்பு எள் என்ற மூன்று வகை உண்டு. மேலும் காட்டெள், சிற்றெள், பேரெள் போன்ற வகைகளும் உண்டு.

* நல்லெண்ணைய், சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

* நல்லெண்ணைய், சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.

* நல்லெண்ணைய்யை, 'இயற்கை நமக்கு அளித்த கொடை' என்று தாராளமாகச் சொல்லலாம். அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே அதற்குக் காரணம். நல்லெண்ணைய், புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றைத் தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றைத் தணிக்கிறது.

* நல்லெண்ணைய்யை தினமும் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழிமுட்டை வெண்கருவுடன் நல்லெண்ணைய் கலந்து பருக்களின் மீது பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும்.

* நல்லெண்ணைய் தேய்த்துக் குளித்து வந்தால், கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல், மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும் என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.www.siddharmedicine.in @ 9943909495

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...