Saturday, June 10, 2017

பிர‌ண்டை தண்டு, வேர், பழம் அனைத்தும் மருத்துவக் குணம். பிர‌ண்டையை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம் S.SETHU RAMAN.B.Sc ‌பிர‌ண்டை எ‌ன்பது ஒரு தவார‌ம், இது கொடி போல வளரு‌ம். இத‌ன் த‌ண்டு‌ப் பகு‌திதா‌ன் உ‌ண்ப‌த‌ற்கு ஏ‌ற்றதாகு‌ம். ‌பிர‌ண்டை‌யி‌ல் ஓலை‌ப் ‌பிர‌ண்டை, உரு‌ட்டு‌ப் ‌பிர‌ண்டை என பல வகை உ‌ண்டு. இவ‌ற்‌றி‌ன் குண‌ம் ஏற‌க்குறைய உ‌ண்டாகு‌ம். இ‌தி‌ல் மு‌ப்‌பிர‌ண்டை ‌கிடை‌ப்பது அ‌ரிது. ‌பிர‌ண்டையை ந‌ன்கு வத‌‌க்‌கி பு‌ளியுட‌ன் சே‌ர்‌த்து சமை‌க்க வே‌ண்டு‌ம். இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் நா‌வி‌ல் அ‌ரி‌ப்பையு‌ம், வ‌யி‌ற்‌‌றி‌ல் எ‌ரி‌ச்சலையு‌ம் ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம். மு‌ற்‌றியதாக அ‌ல்லாம‌ல் இள‌ந்த‌ண்டை பய‌ன்படு‌த்தலா‌ம். இதனை‌ப் ப‌றி‌க்கு‌ம்போது கை‌யி‌ல் தே‌ங்கா‌‌ய் எ‌ண்ணெ‌ய் தே‌ய்‌த்து‌க் கொ‌ண்டு ப‌றி‌த்தா‌ல் கை‌யி‌ல் அ‌ரி‌ப்பு உ‌ண்டாகாது. ‌பிர‌ண்டை‌யி‌ல் கா‌ல்‌சிய‌ம்,கேரா‌ட்டி‌ன் ம‌ற்று‌ம் ‌வை‌ட்ட‌மி‌ன் ‌சி அட‌ங்‌‌கியு‌ள்ளது. எலு‌ம்பு வள‌ர்‌ச்‌‌சி‌க்கு ‌பிர‌ண்டை அ‌திகமாக பய‌ன்படு‌ம். இய‌ற்கை வைத்தியம் சுளு‌க்கு ‌வீ‌க்க‌த்‌தி‌ற்கு வை‌த்‌திய‌ம் ‌திடீரெ‌ன்று சுளு‌க்கு ஏ‌ற்ப‌ட்டு, அதனா‌ல் ‌வீ‌க்க‌ம் ம‌ற்று‌ம் வ‌லி ஏ‌ற்ப‌ட்டா‌ல் ‌பிர‌ண்டை ‌நி‌ச்சயமாக உதவு‌ம். ‌பிர‌ண்டையை இடி‌த்து, சாறெடு‌த்து, அதனுட‌ன் ‌சி‌றிது பு‌ளியு‌ம், உ‌ப்பு‌ம் சே‌ர்‌த்து குழ‌ம்பு பதமாக கா‌ய்‌ச்‌சி, பொறு‌க்க‌க் கூடிய சூ‌ட்டி‌ல் ப‌ற்று‌ப் போ‌ட்டு வர இர‌ண்டொரு நா‌ட்க‌ளி‌ல் குணமாகு‌ம். சு‌ளு‌க்கு ம‌ற்றும அடி ப‌ட்ட ‌வீ‌க்க‌ம் குணமாக, ‌பிர‌ண்டை வேரை ‌நிழ‌லி‌ல் ந‌ன்கு உல‌ர்‌த்‌தி, பொடியா‌க்‌கி, நெ‌ய் ‌வி‌ட்டு லேசாக வறு‌த்து 1-2 ‌கிரா‌ம் அளவு காலை மாலை ஆ‌கிய இரு வேளை உ‌ட்கொ‌ண்டுவரலா‌ம். ‌ பிர‌ண்டை‌யி‌ல் கா‌ல்‌சிய‌ம் அ‌திக‌ம் இரு‌ப்பதா‌ல் எலு‌ம்பு வள‌ர்‌ச்‌சி‌க்கு அ‌திக‌ம் உதவு‌ம். எனவே, கா‌ல்‌சிய‌‌ம் குறைவாக இரு‌ப்பவ‌ர்க‌ள் ‌பிர‌ண்டையை அ‌திகமாக உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். ‌பிர‌ண்டை துவைய‌ல், ‌பிர‌ண்டை வ‌ற்ற‌ல் செ‌ய்து சா‌ப்‌பிடலா‌ம். ந‌ல்ல பல‌ன் ‌கி‌ட்டு‌ம். ‌பிர‌ண்டை‌யி‌ன் மரு‌த்துவ குண‌ம் ‌பிர‌ண்டையை நெ‌ய்‌வி‌ட்டு வத‌ற்‌கி, துவைய‌ல் செ‌ய்து சா‌ப்‌பி‌ட்டு வர ந‌ல்ல ப‌சி உ‌ண்டாகு‌ம். ‌பிர‌ண்டை, க‌ற்றாழை வே‌ர்,‌நீ‌ர் மு‌ள்‌ளி வே‌ர், பூ‌ண்டு, சு‌க்கு, ‌மிளகு, கடு‌க்கா‌ய் சம அளவு எடு‌த்து அரை‌த்து மோ‌‌ரி‌ல் கல‌ந்து குடி‌த்து வர உ‌ள் மூல‌ம் குணமாகு‌ம். எலு‌ம்பு மு‌றிவு‌க்கு, ‌பிர‌ண்டை வேரை ‌நிழ‌லி‌ல் ந‌ன்கு உல‌ர்‌த்‌தி, பொடியா‌க்‌கி, நெ‌ய் ‌வி‌ட்டு லேசாக வறு‌த்து 1-2 ‌கிரா‌ம் அளவு காலை மாலை ஆ‌கிய இரு வேளை உ‌ட்கொ‌ண்டுவர, மு‌றி‌ந்த எலு‌ம்புக‌ள் ‌விரை‌வி‌ல் கூடு‌ம். ‌ பிர‌ண்டையை ‌சிறு‌ந்‌தீ‌யி‌ல் இ‌ட்டு வத‌க்‌கி சாறு ‌பி‌ழி‌ந்து 20 - 30 ‌மி‌ல்‌லி அளவு குடி‌த்து வர முறைய‌ற்ற மாத‌வில‌க்கு ‌சீராகு‌ம். ‌ பிர‌ண்டையை ‌தூளா‌க்‌கி மோ‌ரி‌ல் ஊற வை‌த்து காலை‌யி‌ல் ம‌ட்டு‌ம் 2-3 நா‌ட்க‌ள் குடி‌த்து வர பெரு‌‌ங்க‌ழி‌ச்ச‌ல் குணமாகு‌ம். மாத‌வில‌க்கு வ‌லி குறைய மாத‌வில‌க்கு சமய‌ங்க‌ளி‌ல் பெ‌ண்களு‌க்கு கடுமையான வ‌யி‌ற்‌று வ‌லி உ‌ண்டாகு‌ம். இத‌ற்கு வ‌லி ‌நிவாரண மா‌த்‌திரைகளை அ‌திக அள‌‌வி‌ல் பெ‌ண்க‌ள் சா‌ப்‌‌பிடுவா‌ர்க‌ள். இத‌ற்கு ‌வ‌லி ‌நிவார‌ணிக‌ள் உக‌ந்தது அ‌ல்ல‌. இத‌ற்கு ‌பிர‌ண்டை உ‌ப்பு ந‌ல்ல ‌தீ‌ர்வு அ‌ளி‌க்கு‌ம். நா‌ட்டு மரு‌ந்து கடைக‌ளி‌ல் ‌‌பிர‌ண்டை உ‌ப்பு எ‌ன்று கேட‌்டு வா‌ங்‌கி வை‌த்‌திரு‌ங்க‌ள். இதனை ‌தினமு‌ம் 250 ‌மி‌ல்‌லி ‌கிரா‌ம் அள‌வி‌ற்கு எடு‌த்து வெ‌ண்ணெ‌யில‌் குழை‌த்து ‌தினமு‌ம் இரு வேளை உ‌ட்கொ‌ண்டு வர வே‌ண்டு‌ம். இ‌வ்வாறு சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் மாத‌வில‌க்கு சம‌ய‌ங்க‌ளி‌ல் ‌ஏ‌ற்படு‌ம் வ‌யி‌ற்று வ‌லி பெருமளவு குறையு‌ம். இதே‌ப் ‌பிர‌ண்டை உ‌ப்பை 200 ‌மி‌ல்‌லி ‌கிரா‌ம் அளவு எடு‌த்து, ஜா‌தி‌க்கா‌ய் சூரண‌ம் 500 ‌மி‌ல்‌லி அளவுட‌ன் நெ‌ய்‌யி‌ல் குழை‌த்து இரு வேளை சா‌ப்‌பி‌ட்டு வர நர‌ம்பு‌த் தள‌ர்‌ச்‌சி குணமாகு‌ம். ர‌த்த மூல‌த்‌தி‌ற்கு ‌பிர‌ண்டை ர‌த்த மூல‌த்‌தி‌ற்கு எ‌த்தனையோ வை‌த்‌தி‌ய‌ம் செ‌ய்தாலு‌ம் எதுவு‌ம் ச‌ரியாக வ‌ந்‌திரு‌க்காது. நோயு‌ம் குணமா‌கி‌யிரு‌க்காது. ஆனா‌ல் ர‌த்த மூல‌‌த்‌தி‌ற்கு ‌பிர‌ண்டை கைக‌ண்ட மரு‌ந்தாகு‌ம். இள‌ம் ‌பிர‌ண்டையை ஒ‌ன்‌றிர‌ண்டாக நறு‌க்‌கி, அதனை நெ‌ய்‌வி‌ட்டு வத‌க்கு ந‌ன்கு அரை‌க்கவு‌ம். இ‌ந்த ‌விழுதை ‌சிறு நெ‌ல்‌லி‌க்கா‌ய் அள‌வி‌ற்கு உரு‌ண்டைகளாக‌ப் ‌பிடி‌த்து ‌நிழ‌லி‌ல் உல‌ர்‌த்‌தி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். இதனை காலை, மாலை எ‌ன்று இரு வேளைகளு‌ம் சா‌ப்‌பிட‌்டு வர ர‌த்த மூல‌ம் குணமாகு‌ம். இ‌ந்த உரு‌ண்டைகளை அ‌திக நா‌ட்க‌ள் வை‌த்‌திரு‌க்க வே‌ண்டா‌ம். அ‌வ்வ‌ப்போது இதனை செ‌ய்து சா‌ப்‌பிடுவது‌ம் ந‌ல்லது. ர‌த்த மூல‌ம் உடனடியாக ‌தீ‌‌ர்வு பெறு‌ம். உடல் தேற சிலர் உடல் மெலிந்து எப்போதும் சோகமாகக் காணப்படுவார்கள். இவர்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும். வயிற்றுப் பொருமல் நீங்க வயிற்றுப் பொருமலால் அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும். இரத்த மூலநோய் குணமாக மூலநோயால் அவதிப்படுபவர்களின் மூலப் பகுதி அதிக அரிப்பை உண்டாக்கி புண்ணை ஏற்படுத்தும். இதனால் மலத்தோடு இரத்தமும் கசிந்துவரும். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் விரைவில் குணமாகும். செரிமான சக்தியைத் தூண்ட சிலருக்கு மன அழுத்தம் அல்லது வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும். முதுகு வலி, கழுத்து வலி குணமாக சிலர் முதுகு மற்றும் கழுத்து வலியால் அவதிப்படுவார்கள். இவர்களின் எலும்பு சந்திப்புகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுக்களின் சீற்றத்தால் தேவையற்ற நீர் தேங்கிவிடும். இந்த நீரானது முதுகுத் தண்டு வழியாக இறங்கி சளியாக மாறி பின் பசைபோல் முதுகு, கழுத்துப் பகுதியில் இறுகி முறுக்கிக்கொள்ளச் செய்யும். இதனால்தான் இவர்களால் தலையை திருப்பவோ, அசைக்கவோ, குனியவோ முடியாமல் அவஸ்தைப்படுவார்கள். இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட சித்தர்கள் பிரண்டை உப்பு, பிரண்டை கற்பக மருந்து போன்றவற்றைக் கொடுத்து சிகிச்சை செய்துள்ளனர். இளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் சிறிது வெந்நீர் கலந்து பசைபோல் தயாரித்து கழுத்து, முதுகு இடுப்புப் பகுதியில் பற்றுப்போட்டு வந்தால் முறுக்கிய பகுதிகள் இளகி முதுகு வலி, கழுத்துவலி குணமாகும். பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம். எலும்பு முறிவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும். இதயம் பலப்பட உடலில் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளவர் களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதய வால்வுகள் பாதிப்படைகின்றன. பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும். பிரண்டை உப்பு -: பிரண்டையை உலர்த்தி எடுத்துச் சாம்பலாக்க வேண்டும். ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து வடிகட்டிஅரை நாள் தெளிய வைக்க வேண்டும் தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 -10 நாள் வெய்யலில் காயவைக்கவும் நீர் முழுதும் சுண்டி உலர்ந்தபின் படிந்திருக்கும் உப்பினை சேர்த்து வைக்கவும். பேதி, வாந்தி -: குழந்தைகளுக்கு வரும் வாந்திபேதிக்கு ஒரு கிராம் அளவு பாலில் இந்த உப்பைக் கரைத்து மூன்று வேளை கொடுக்க குழந்தை வாந்தி பேதி குணமாகும். செரியாமை குணமடையும். பெரியவர்களுக்கு 2 -3 கிராம் வடித்த கஞ்சியில், மோரில் கொடுக்கவும். வாய்ப்புண் - :வாய் புண், வாய் நாற்றம், உதடு, நா வெடிப்பு ஆகியவற்றிக்கு 2 கிராம் வெண்ணெயில் இரு வேழை மூன்று நாள் கொடுக்க கணமாகும். வயிற்றுப்புண் -: தீராத வயிற்றுப்புண், குன்மக்கட்டி, வயிற்று வலி ஆகியவற்றிக்கு இதன் உப்பை 48 - 96 நாள் இரு வேழை சாப்பிட குணமாகும். மூலம் -:நவ மூலமும், சீழ்ரத்தம் வருதல், அரிப்பு, கடுப்பு, ஆசனவாயில் எரிச்சல் இருந்தாலும் இந்த உப்பை 3 கிராம் அளவு வெண்ணெயில் 24 -48 நாள் இரு வேழை கொடுக்க குணமாகும். பிரண்டை பற்பம் - : 300 கிராம் பிரண்டை100 கிராம் உப்புடன் ஆட்டி அடைதட்டிமண் குடுவையில் வைத்துச் சீலைமண் செய்துபுடம் போட்டு எடுக்க சாம்பல் பற்பமாகமாறி இருக்கும் உப்பைப் போலவே எல்லா நோய்களுக்கும் இந்த பஸ்பத்தைக் கொடுக்கலாம். உடல் பருமன் -: பிரண்டை உப்பை 2 - 3 கிராம் பாலில் கொடுத்துவர இரு திங்களில் உடல் பருமன் குறைந்து விடும். ஊளைச் சதைகளையும் குறைக்கும். ஆஸ்துமா -: இந்த உப்பை தென்னங்கள்ளில் கொடுத்துவர ஆஸ்துமா, எலும்புருக்கி, மதுமேகம், நீரிழிவு குணமடையும். சூதகவலி - : மூன்று வேழை 2 கிராம் நெய்யில் கொடுக்க சூதகவலி குணமடையும். தாதுநட்டம் -: பிரண்டை உப்பை 2 கிராம் அளவு ஜாதிக்காய்த் தூள் 5 கராமுடன் கலந்து சாப்பிட்டு வர தாது நட்டம் குணமடையும். வீரியம் பெருகும், உடம்பு வன்மை பெரும். செரியாமை -: பிரண்டை இலையையும், தண்டையும் உலர்த்தி, இடுத்து சூரணம் செய்து கொண்டு அதனோடு சுக்குத்தூள், மிளகுத்தூள் சமஅளவாக எடுத்துக்கொண்டு உள்ளுக்குக் கொடுத்துவர செரியாமை தீரும். இதனை கற்கண்டுகலந்த பாலுடன் உட்கொண்டுவரு உடலுக்கு வன்மை தரும். நெய்விட்டு பிரண்டைத்தண்டை வறுத்து துவையலாக அரைத்து உண்டு வர வயிற்றுப் பொருமல் சிறு குடல் பெருகுடல் புண் நீக்கி நல்ல பசிஉண்டாகும். பிரண்டைத் தண்டை நெய்விட்டு வறுத்து அரைத்து கொட்டைப பாக்களவு வீதம் தினம் இரு வேழையாக எட்டு நாட்கள்உட் கொண்டு வந்தால் மூல நோயில்உண்டாகும் நமச்சலும், குருதி வடிதலும் நிற்கும். காதுவலிக்கும், காதில் சீழ்வடிதலுக்கும் பிரண்டையை தீயில் வதக்கி சாறு பிழிந்துஇரண்டு துளி காதில் விட்டு வர குணம் தெரியும். மூக்கில் வடியும் ரத்தம் நிற்கஇந்தச் சாற்றை இரண்டு அல்லது மூன்றுதுளி மூக்கில் விடலாம், இந்தச் சாற்றையே தகுந்த அளவில் உள்ளுக்குக் கொடுத்து வரபெண்களுக்கு உண்டாகும் மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும். பிரண்டை, பேரிலந்தை,வேப்ப ஈர்க்கு,முருங்கன் விதை, ஓமம் இவைகளை சமளவு எடுத்து கஷாயமிட்டு அருந்தி வர, வயிற்றில் உள்ள வாயு நீக்கி வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறி நல்ல பேதி ஏற்படும். முறிந்த எலும்பு விரைவில் சேர்வதற்கு இதன்வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் வீதம் உண்டு வரலாம் இதனை வெந்நீரில் குழைத்து பற்றிட்டும் வரலாம். பிரண்டைத் தண்டை எடுத்து சுண்ணாம்பு தெளி நீரில் ஊரவைத்து வேழைக்கு ஒன்றாக உட்கொண்டு வந்தால் நல்ல பசி ஏற்படும். பிரண்டையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் புளியையும் உப்பையும் கூட்டிக்காச்சி, குழம்பு பதத்தில் இறக்கி பற்றிட்டு வந்தால் சுளுக்கு, கீழே விழுந்து அடிபடுதல், சதை பிரளுதல், வீக்கங்கள் குணமடைந்து நல்ல பலன் கிடைக்கும். S.SETHU RAMAN.B.Sc

பிர‌ண்டை தண்டு, வேர், பழம் அனைத்தும் மருத்துவக் குணம்.
பிர‌ண்டையை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம்

S.SETHU RAMAN.B.Sc

‌பிர‌ண்டை எ‌ன்பது ஒரு தவார‌ம், இது கொடி போல வளரு‌ம். இத‌ன் த‌ண்டு‌ப் பகு‌திதா‌ன் உ‌ண்ப‌த‌ற்கு ஏ‌ற்றதாகு‌ம். ‌பிர‌ண்டை‌யி‌ல் ஓலை‌ப் ‌பிர‌ண்டை, உரு‌ட்டு‌ப் ‌பிர‌ண்டை என பல வகை உ‌ண்டு. இவ‌ற்‌றி‌ன் குண‌ம் ஏற‌க்குறைய உ‌ண்டாகு‌ம். இ‌தி‌ல் மு‌ப்‌பிர‌ண்டை ‌கிடை‌ப்பது அ‌ரிது. ‌பிர‌ண்டையை ந‌ன்கு வத‌‌க்‌கி பு‌ளியுட‌ன் சே‌ர்‌த்து சமை‌க்க வே‌ண்டு‌ம். இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் நா‌வி‌ல் அ‌ரி‌ப்பையு‌ம், வ‌யி‌ற்‌‌றி‌ல் எ‌ரி‌ச்சலையு‌ம் ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம். மு‌ற்‌றியதாக அ‌ல்லாம‌ல் இள‌ந்த‌ண்டை பய‌ன்படு‌த்தலா‌ம். இதனை‌ப் ப‌றி‌க்கு‌ம்போது கை‌யி‌ல் தே‌ங்கா‌‌ய் எ‌ண்ணெ‌ய் தே‌ய்‌த்து‌க் கொ‌ண்டு ப‌றி‌த்தா‌ல் கை‌யி‌ல் அ‌ரி‌ப்பு உ‌ண்டாகாது. ‌பிர‌ண்டை‌யி‌ல் கா‌ல்‌சிய‌ம்,கேரா‌ட்டி‌ன் ம‌ற்று‌ம் ‌வை‌ட்ட‌மி‌ன் ‌சி அட‌ங்‌‌கியு‌ள்ளது. எலு‌ம்பு வள‌ர்‌ச்‌‌சி‌க்கு ‌பிர‌ண்டை அ‌திகமாக பய‌ன்படு‌ம்.

இய‌ற்கை வைத்தியம்
சுளு‌க்கு ‌வீ‌க்க‌த்‌தி‌ற்கு வை‌த்‌திய‌ம்

‌திடீரெ‌ன்று சுளு‌க்கு ஏ‌ற்ப‌ட்டு, அதனா‌ல் ‌வீ‌க்க‌ம் ம‌ற்று‌ம் வ‌லி ஏ‌ற்ப‌ட்டா‌ல் ‌பிர‌ண்டை ‌நி‌ச்சயமாக உதவு‌ம். ‌பிர‌ண்டையை இடி‌த்து, சாறெடு‌த்து, அதனுட‌ன் ‌சி‌றிது பு‌ளியு‌ம், உ‌ப்பு‌ம் சே‌ர்‌த்து குழ‌ம்பு பதமாக கா‌ய்‌ச்‌சி, பொறு‌க்க‌க் கூடிய சூ‌ட்டி‌ல் ப‌ற்று‌ப் போ‌ட்டு வர இர‌ண்டொரு நா‌ட்க‌ளி‌ல் குணமாகு‌ம்.

சு‌ளு‌க்கு ம‌ற்றும அடி ப‌ட்ட ‌வீ‌க்க‌ம் குணமாக, ‌பிர‌ண்டை வேரை ‌நிழ‌லி‌ல் ந‌ன்கு உல‌ர்‌த்‌தி, பொடியா‌க்‌கி, நெ‌ய் ‌வி‌ட்டு லேசாக வறு‌த்து 1-2 ‌கிரா‌ம் அளவு காலை மாலை ஆ‌கிய இரு வேளை உ‌ட்கொ‌ண்டுவரலா‌ம். ‌

பிர‌ண்டை‌யி‌ல் கா‌ல்‌சிய‌ம் அ‌திக‌ம் இரு‌ப்பதா‌ல் எலு‌ம்பு வள‌ர்‌ச்‌சி‌க்கு அ‌திக‌ம் உதவு‌ம். எனவே, கா‌ல்‌சிய‌‌ம் குறைவாக இரு‌ப்பவ‌ர்க‌ள் ‌பிர‌ண்டையை அ‌திகமாக உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். ‌பிர‌ண்டை துவைய‌ல், ‌பிர‌ண்டை வ‌ற்ற‌ல் செ‌ய்து சா‌ப்‌பிடலா‌ம். ந‌ல்ல பல‌ன் ‌கி‌ட்டு‌ம்.

‌பிர‌ண்டை‌யி‌ன் மரு‌த்துவ குண‌ம்

‌பிர‌ண்டையை நெ‌ய்‌வி‌ட்டு வத‌ற்‌கி, துவைய‌ல் செ‌ய்து சா‌ப்‌பி‌ட்டு வர ந‌ல்ல ப‌சி உ‌ண்டாகு‌ம்.

‌பிர‌ண்டை, க‌ற்றாழை வே‌ர்,‌நீ‌ர் மு‌ள்‌ளி வே‌ர், பூ‌ண்டு, சு‌க்கு, ‌மிளகு, கடு‌க்கா‌ய் சம அளவு எடு‌த்து அரை‌த்து மோ‌‌ரி‌ல் கல‌ந்து குடி‌த்து வர உ‌ள் மூல‌ம் குணமாகு‌ம்.

எலு‌ம்பு மு‌றிவு‌க்கு, ‌பிர‌ண்டை வேரை ‌நிழ‌லி‌ல் ந‌ன்கு உல‌ர்‌த்‌தி, பொடியா‌க்‌கி, நெ‌ய் ‌வி‌ட்டு லேசாக வறு‌த்து 1-2 ‌கிரா‌ம் அளவு காலை மாலை ஆ‌கிய இரு வேளை உ‌ட்கொ‌ண்டுவர, மு‌றி‌ந்த எலு‌ம்புக‌ள் ‌விரை‌வி‌ல் கூடு‌ம். ‌

பிர‌ண்டையை ‌சிறு‌ந்‌தீ‌யி‌ல் இ‌ட்டு வத‌க்‌கி சாறு ‌பி‌ழி‌ந்து 20 - 30 ‌மி‌ல்‌லி அளவு குடி‌த்து வர முறைய‌ற்ற மாத‌வில‌க்கு ‌சீராகு‌ம். ‌

பிர‌ண்டையை ‌தூளா‌க்‌கி மோ‌ரி‌ல் ஊற வை‌த்து காலை‌யி‌ல் ம‌ட்டு‌ம் 2-3 நா‌ட்க‌ள் குடி‌த்து வர பெரு‌‌ங்க‌ழி‌ச்ச‌ல் குணமாகு‌ம்.

மாத‌வில‌க்கு வ‌லி குறைய

மாத‌வில‌க்கு சமய‌ங்க‌ளி‌ல் பெ‌ண்களு‌க்கு கடுமையான வ‌யி‌ற்‌று வ‌லி உ‌ண்டாகு‌ம். இத‌ற்கு வ‌லி ‌நிவாரண மா‌த்‌திரைகளை அ‌திக அள‌‌வி‌ல் பெ‌ண்க‌ள் சா‌ப்‌‌பிடுவா‌ர்க‌ள். இத‌ற்கு ‌வ‌லி ‌நிவார‌ணிக‌ள் உக‌ந்தது அ‌ல்ல‌. இத‌ற்கு ‌பிர‌ண்டை உ‌ப்பு ந‌ல்ல ‌தீ‌ர்வு அ‌ளி‌க்கு‌ம். நா‌ட்டு மரு‌ந்து கடைக‌ளி‌ல் ‌‌பிர‌ண்டை உ‌ப்பு எ‌ன்று கேட‌்டு வா‌ங்‌கி வை‌த்‌திரு‌ங்க‌ள். இதனை ‌தினமு‌ம் 250 ‌மி‌ல்‌லி ‌கிரா‌ம் அள‌வி‌ற்கு எடு‌த்து வெ‌ண்ணெ‌யில‌் குழை‌த்து ‌தினமு‌ம் இரு வேளை உ‌ட்கொ‌ண்டு வர வே‌ண்டு‌ம். இ‌வ்வாறு சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் மாத‌வில‌க்கு சம‌ய‌ங்க‌ளி‌ல் ‌ஏ‌ற்படு‌ம் வ‌யி‌ற்று வ‌லி பெருமளவு குறையு‌ம். இதே‌ப் ‌பிர‌ண்டை உ‌ப்பை 200 ‌மி‌ல்‌லி ‌கிரா‌ம் அளவு எடு‌த்து, ஜா‌தி‌க்கா‌ய் சூரண‌ம் 500 ‌மி‌ல்‌லி அளவுட‌ன் நெ‌ய்‌யி‌ல் குழை‌த்து இரு வேளை சா‌ப்‌பி‌ட்டு வர நர‌ம்பு‌த் தள‌ர்‌ச்‌சி குணமாகு‌ம்.

ர‌த்த மூல‌த்‌தி‌ற்கு ‌பிர‌ண்டை

ர‌த்த மூல‌த்‌தி‌ற்கு எ‌த்தனையோ வை‌த்‌தி‌ய‌ம் செ‌ய்தாலு‌ம் எதுவு‌ம் ச‌ரியாக வ‌ந்‌திரு‌க்காது. நோயு‌ம் குணமா‌கி‌யிரு‌க்காது. ஆனா‌ல் ர‌த்த மூல‌‌த்‌தி‌ற்கு ‌பிர‌ண்டை கைக‌ண்ட மரு‌ந்தாகு‌ம். இள‌ம் ‌பிர‌ண்டையை ஒ‌ன்‌றிர‌ண்டாக நறு‌க்‌கி, அதனை நெ‌ய்‌வி‌ட்டு வத‌க்கு ந‌ன்கு அரை‌க்கவு‌ம். இ‌ந்த ‌விழுதை ‌சிறு நெ‌ல்‌லி‌க்கா‌ய் அள‌வி‌ற்கு உரு‌ண்டைகளாக‌ப் ‌பிடி‌த்து ‌நிழ‌லி‌ல் உல‌ர்‌த்‌தி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். இதனை காலை, மாலை எ‌ன்று இரு வேளைகளு‌ம் சா‌ப்‌பிட‌்டு வர ர‌த்த மூல‌ம் குணமாகு‌ம். இ‌ந்த உரு‌ண்டைகளை அ‌திக நா‌ட்க‌ள் வை‌த்‌திரு‌க்க வே‌ண்டா‌ம். அ‌வ்வ‌ப்போது இதனை செ‌ய்து சா‌ப்‌பிடுவது‌ம் ந‌ல்லது. ர‌த்த மூல‌ம் உடனடியாக ‌தீ‌‌ர்வு பெறு‌ம்.

உடல் தேற

சிலர் உடல் மெலிந்து எப்போதும் சோகமாகக் காணப்படுவார்கள். இவர்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.

வயிற்றுப் பொருமல் நீங்க

வயிற்றுப் பொருமலால் அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.

இரத்த மூலநோய் குணமாக

மூலநோயால் அவதிப்படுபவர்களின் மூலப் பகுதி அதிக அரிப்பை உண்டாக்கி புண்ணை ஏற்படுத்தும். இதனால் மலத்தோடு இரத்தமும் கசிந்துவரும். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் விரைவில் குணமாகும்.

செரிமான சக்தியைத் தூண்ட

சிலருக்கு மன அழுத்தம் அல்லது வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும்.

முதுகு வலி, கழுத்து வலி குணமாக

சிலர் முதுகு மற்றும் கழுத்து வலியால் அவதிப்படுவார்கள். இவர்களின் எலும்பு சந்திப்புகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுக்களின் சீற்றத்தால் தேவையற்ற நீர் தேங்கிவிடும். இந்த நீரானது முதுகுத் தண்டு வழியாக இறங்கி சளியாக மாறி பின் பசைபோல் முதுகு, கழுத்துப் பகுதியில் இறுகி முறுக்கிக்கொள்ளச் செய்யும். இதனால்தான் இவர்களால் தலையை திருப்பவோ, அசைக்கவோ, குனியவோ முடியாமல் அவஸ்தைப்படுவார்கள்.

இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட சித்தர்கள் பிரண்டை உப்பு, பிரண்டை கற்பக மருந்து போன்றவற்றைக் கொடுத்து சிகிச்சை செய்துள்ளனர்.

இளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் சிறிது வெந்நீர் கலந்து பசைபோல் தயாரித்து கழுத்து, முதுகு இடுப்புப் பகுதியில் பற்றுப்போட்டு வந்தால் முறுக்கிய பகுதிகள் இளகி முதுகு வலி, கழுத்துவலி குணமாகும். பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம்.

எலும்பு முறிவுக்கு

எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும்.

இதயம் பலப்பட

உடலில் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளவர் களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதய வால்வுகள் பாதிப்படைகின்றன.

பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.

பிரண்டை உப்பு -: பிரண்டையை உலர்த்தி எடுத்துச் சாம்பலாக்க வேண்டும். ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து வடிகட்டிஅரை நாள் தெளிய வைக்க வேண்டும் தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 -10 நாள் வெய்யலில் காயவைக்கவும் நீர் முழுதும் சுண்டி உலர்ந்தபின் படிந்திருக்கும் உப்பினை சேர்த்து வைக்கவும்.

பேதி, வாந்தி -: குழந்தைகளுக்கு வரும் வாந்திபேதிக்கு ஒரு கிராம் அளவு பாலில் இந்த உப்பைக் கரைத்து மூன்று வேளை கொடுக்க குழந்தை வாந்தி பேதி குணமாகும். செரியாமை குணமடையும். பெரியவர்களுக்கு 2 -3 கிராம் வடித்த கஞ்சியில், மோரில் கொடுக்கவும்.

வாய்ப்புண் - :வாய் புண், வாய் நாற்றம், உதடு, நா வெடிப்பு ஆகியவற்றிக்கு 2 கிராம் வெண்ணெயில் இரு வேழை மூன்று நாள் கொடுக்க கணமாகும்.

வயிற்றுப்புண் -: தீராத வயிற்றுப்புண், குன்மக்கட்டி, வயிற்று வலி ஆகியவற்றிக்கு இதன் உப்பை 48 - 96 நாள் இரு வேழை சாப்பிட குணமாகும்.

மூலம் -:நவ மூலமும், சீழ்ரத்தம் வருதல், அரிப்பு, கடுப்பு, ஆசனவாயில் எரிச்சல் இருந்தாலும் இந்த உப்பை 3 கிராம் அளவு வெண்ணெயில் 24 -48 நாள் இரு வேழை கொடுக்க குணமாகும்.

பிரண்டை பற்பம் - : 300 கிராம் பிரண்டை100 கிராம் உப்புடன் ஆட்டி அடைதட்டிமண் குடுவையில் வைத்துச் சீலைமண் செய்துபுடம் போட்டு எடுக்க சாம்பல் பற்பமாகமாறி இருக்கும் உப்பைப் போலவே எல்லா நோய்களுக்கும் இந்த பஸ்பத்தைக் கொடுக்கலாம்.

உடல் பருமன் -: பிரண்டை உப்பை 2 - 3 கிராம் பாலில் கொடுத்துவர இரு திங்களில் உடல் பருமன் குறைந்து விடும். ஊளைச் சதைகளையும் குறைக்கும்.

ஆஸ்துமா -: இந்த உப்பை தென்னங்கள்ளில் கொடுத்துவர ஆஸ்துமா, எலும்புருக்கி, மதுமேகம், நீரிழிவு குணமடையும்.

சூதகவலி - : மூன்று வேழை 2 கிராம் நெய்யில் கொடுக்க சூதகவலி குணமடையும்.

தாதுநட்டம் -: பிரண்டை உப்பை 2 கிராம் அளவு ஜாதிக்காய்த் தூள் 5 கராமுடன் கலந்து சாப்பிட்டு வர தாது நட்டம் குணமடையும். வீரியம் பெருகும், உடம்பு வன்மை பெரும்.

செரியாமை -: பிரண்டை இலையையும், தண்டையும் உலர்த்தி, இடுத்து சூரணம் செய்து கொண்டு அதனோடு சுக்குத்தூள், மிளகுத்தூள் சமஅளவாக எடுத்துக்கொண்டு உள்ளுக்குக் கொடுத்துவர செரியாமை தீரும். இதனை கற்கண்டுகலந்த பாலுடன் உட்கொண்டுவரு உடலுக்கு வன்மை தரும்.

நெய்விட்டு பிரண்டைத்தண்டை வறுத்து துவையலாக அரைத்து உண்டு வர வயிற்றுப் பொருமல் சிறு குடல் பெருகுடல் புண் நீக்கி நல்ல பசிஉண்டாகும்.
பிரண்டைத் தண்டை நெய்விட்டு வறுத்து அரைத்து கொட்டைப பாக்களவு வீதம் தினம் இரு வேழையாக எட்டு நாட்கள்உட் கொண்டு வந்தால் மூல நோயில்உண்டாகும் நமச்சலும், குருதி வடிதலும் நிற்கும்.

காதுவலிக்கும், காதில் சீழ்வடிதலுக்கும் பிரண்டையை தீயில் வதக்கி சாறு பிழிந்துஇரண்டு துளி காதில் விட்டு வர குணம் தெரியும். மூக்கில் வடியும் ரத்தம் நிற்கஇந்தச் சாற்றை இரண்டு அல்லது மூன்றுதுளி மூக்கில் விடலாம், இந்தச் சாற்றையே தகுந்த அளவில் உள்ளுக்குக் கொடுத்து வரபெண்களுக்கு உண்டாகும் மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும்.

பிரண்டை, பேரிலந்தை,வேப்ப ஈர்க்கு,முருங்கன் விதை, ஓமம் இவைகளை சமளவு எடுத்து கஷாயமிட்டு அருந்தி வர, வயிற்றில் உள்ள வாயு நீக்கி வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறி நல்ல பேதி ஏற்படும்.

முறிந்த எலும்பு விரைவில் சேர்வதற்கு இதன்வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் வீதம் உண்டு வரலாம் இதனை வெந்நீரில் குழைத்து பற்றிட்டும் வரலாம்.

பிரண்டைத் தண்டை எடுத்து சுண்ணாம்பு தெளி நீரில் ஊரவைத்து வேழைக்கு ஒன்றாக உட்கொண்டு வந்தால் நல்ல பசி ஏற்படும்.

பிரண்டையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் புளியையும் உப்பையும் கூட்டிக்காச்சி, குழம்பு பதத்தில் இறக்கி பற்றிட்டு வந்தால் சுளுக்கு, கீழே விழுந்து அடிபடுதல், சதை பிரளுதல், வீக்கங்கள் குணமடைந்து நல்ல பலன் கிடைக்கும்.
S.SETHU RAMAN.B.Sc

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-

S.SETHU RAMAN.B.Sc

கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி?
சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.
கண் இமைகளில் வலி.. என்ன வியாதி?
அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.
டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி?
அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.
டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..
கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி?
நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.
டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.
தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி?
இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.
டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.
முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி?
உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.
டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.
தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி?
கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.
டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.
பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி?
சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.
டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.
பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி?
நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.
டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி?
தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.
டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.
சிவந்த உள்ளங்கை என்ன வியாதி?
கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.
டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.
வெளுத்த நகங்கள் என்ன வியாதி?
இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!
ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.
டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.
விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி?
ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.
டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.
நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி?
சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.
டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.
வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி?
பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.
டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.
சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி?
வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.
டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.
வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி?
உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.
டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.

S.SETHU RAMAN.B.Sc

மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு, மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன.

மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு, மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன.

S.SETHU RAMAN.B.Sc

மாதுளையின் பழம், பூ, பட்டை ஆகிய அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்துக் காணப்படுகின்றது.

இதில் புரதம், கொழுப்பு, மாவு, தாதுப்பொருள் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.

பயன்கள்

புளிப்பு ரக மாதுளம் பழத்திலிருந்து 3 டீஸ்பூன் சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவி வந்தால், பூச்சி வெட்டு உள்ள இடத்தில் நன்றாக முடி வளரும்.

3 டீஸ்பூன் வெந்தயம், 2 டீஸ்பூன் துவரம் பருப்பு ஆகிய இரண்டையும் முதல் நாள் இரவே சுடு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் அதை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நின்று வளர ஆரம்பிக்கும்.

மாதுளம் பழத்தின் தோல் பகுதியை நன்றாகக் காய வைத்து அதை பவுடராக்கி அதனுடன் பயத்தம் பருப்பு பவுடரை சம அளவு கலந்து, தினமும் குளித்த பிறகு இந்த பவுடரை பூசி கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நமது உடலில் உள்ள துர்நாற்றம் நீங்குவதுடன் உடலும் குளிர்ச்சியாகிவிடும்.

ஒரு டீஸ்பூன் மாதுளை ஜூஸ், அரை டீஸ்பூன் சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும்.

ஒரு மாதுளம் பழத்தை நான்காக வெட்டி, அதில் ஒரு துண்டை தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு, ஆற வைத்து அந்த தண்ணீரில் கண்களை கழுவினால், கண் பொங்குவது உடனே நிற்கும்.

மாதுளம்பழ விழுதையும், வெண்ணெயையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து நன்றாக குழைத்து அதை தோலில் தொய்வு ஏற்பட்டிற்கும் இடத்தில் பேஸ்ட்டாக தடவி பின்பு பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும், இவ்வாறு செய்தால் தோல் சுருக்கம் நீங்கும்.

மாதுளைப் பழத்தை தொடர்ந்து நாற்பது நாட்கள் ஜூஸ் செய்து அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை நீக்கி, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மேலும் இதனால் நினைவாற்றல் பெருகும்.

மாதுளம் பழச் சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால், நாள்பட்ட வறட்டு இருமல் காணாமல் போய்விடும்.

மாதுளம் பழ சாறையும், அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வருவது நிற்கும்.

மாதுளம் சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் காய்ச்சலை தடுக்கும்.

மாதுளம் பழச் சாற்றினை ஒரு பாத்திரத்தில் விட்டு வெயிலில் சிறிது நேரம் வைத்து பின்பு அதை அருந்தினால் பற்களும், எலும்பும் உறுதியாகும்.

விக்கல் உண்டாகும் போது சாதாரணமாக மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால், விக்கல் நின்றுவிடும்.

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்திற்குப் பின் சாப்பிட்டால், உடலில் புதிய ரத்தம் உற்பத்தியாகி, உடலின் வலிமை கூடும்.

S.SETHU RAMAN.B.Sc

#பேரிச்சம் பழம் சாப்பிடுறீங்களா? அப்படி என்னதான் அதுல இருக்கு?

#பேரிச்சம் பழம் சாப்பிடுறீங்களா?
அப்படி என்னதான் அதுல இருக்கு?

நிறைய பேர் டயட்டில் இருக்கும் போது பேரிச்சம் பழத்தையும் சேர்த்துக் கொள்வார்கள்.
ஏன் என்று தெரியுமா?

ஏனெனில் அதில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் மருத்துவர்களே தினமும் பேரிச்சம் பழத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தினமும் 1-2 பேரிச்சம் பழம் சாப்பிட்டால், நம்பமாட்டீர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும். மேலும் பல கிழக்கிந்திய நாடுகளில் இந்த பேரிச்சம் பழம், அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்பட்டிருக்கும். அத்தகைய பேரிச்சம் பழத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. சொல்லப்போனால் 1 பேரிச்சம் பழத்தில் 23 கலோரிகள் இருப்பதோடு, கொலஸ்ட்ரால் இல்லாமல் இருக்கிறது. அதிலும் இந்த பழத்தை உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட, இந்த இனிப்பான பழத்தை சாப்பிடலாம். இதனால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். சரி இப்போது அந்த பழத்தின் வேறு நன்மைகளைப் பார்போமா

#மலச்சிக்கல்:

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள், இரவில் படுக்கும் போது பேரிச்சம் பழத்தை நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து அதனை சாப்பிட்டால், இந்த பிரச்சனையை தவிர்க்கலாம். ஏனெனில் இந்த பழத்தில் புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், சரிசெய்துவிடும்.

#பார்வை கோளாறு:

பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. ஆகவே கண் பார்வைக்கு தேவையான வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், மாலைக்கண் நோய் ஏற்படாமல் தடுக்கும்.

#கர்ப்பம் :

கர்ப்பிணிகளின் உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், பேரிச்சம் பழத்தை அதிகம் சாப்பிடுமாறு மருத்துவர்கள் சொல்வார்கள். இந்த பழத்தில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் செலினீயம் போன்றவை அதிகமாக உள்ளன. இவை அனைத்து கருவின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள். மேலும் இதில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. ஆகவே கர்ப்பமாக இருக்கும் போது, இதனை அதிகம் சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவானது குறையாமல் பாதுகாத்து கொள்ளும்.

#மூட்டு வலி:

இன்றைய காலத்தில் மக்கள் மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் கால்சியம் குறைபாடேயாகும். ஆகவே தினமும் சிறிது பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் சத்தை பெறுவதோடு, மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை சரிசெய்யலாம்.

#குடல் கோளாறு:

பேரிச்சம் பழத்தில் கால்சியம், வைட்டமின் பி5, நார்ச்சத்து, வைட்டமின் பி3, பாஸ்பரஸ், கொழுப்பு, பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே அத்தகைய பேரிச்சம் பழத்தை, தினமும் சாப்பிட்டு வந்தால், குடலில் ஏதேனும் கோளாறுகள் இருந்தாலும் சரியாகிவிடும்.

#பற்சொத்தை :

நிறைய பேர் பல் சொத்தையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால், பற்களில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கலாம். ஏனெனில் இதில் ஃப்ளோரின் என்னும் சத்து அதிகம் உள்ளது. எனவே பற்களில் ஆரோக்கியத்திற்கு இந்த சத்து மிகவும் இன்றியமையாதது.

GENERIC MEDICINES ALTERNATIVE MADICINES

மிகவும் முக்கியம்......

அனைவரும் கவனமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது.பொதுவாக டாக்டர்கள் மருந்து சீட்டு எழுதித்தரும் போது அதில் கலந்துள்ள கலவை பற்றி எழுதாமல் தயாரிப்பு நிறுவன பெயரையே எழுதுவதால் அதிக விலை உள்ள மாத்திரைகளையே (அது குறைவாக கிடைக்கும் என்ற போதும் ) அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

மருந்து விலைப் பட்டியல் பற்றி அறிய கீழ்க்கண்ட வழி முறைகளைப் பின்பற்றவும்.........

(1) "1MG Health App For India" என்பதை உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்யவும்.

(2) மருந்து பெயரை தேடவும்...........

(3) பயன்படுத்தும் மருந்து தேடவும்.

(உதாரணம்...லிரிகா 75 மில்லி கிராம்) (பிபிசர் கம்பெனி).......

(4) கம்பெனி பெயர், மருந்து பெயர், விலை,கலந்துள்ள வேதிப் பொருட்கள் முதலிய விபரம் பற்றி அறியலாம்.

(5) Substitute என்பதை க்ளிக் செய்யவும்.......

(6) அதே மருந்துகள் மிக குறைந்த விலையிலும் கிடைப்பதை அறிந்து ஆச்சரியப் படுவீர்கள்.....

(உதாரணம்.லிரிகா என்ற மருந்து பதினான்கு மாத்திரை 768.56 ரூபாய்க்கு கிடைக்கிறது.

ஒரு மாத்திரை ரூ.54.89. ஆனால் அதே மாத்திரை Prebaxe என்ற பெயரில் சிப்லா என்ற கம்பெனி பத்து மாத்திரை 59 ரூபாய்க்கு தருகிறது.

ஒரு மாத்திரை ரூ.5.90 மட்டுமே......

இதை DELETE செய்யாமல் FORWARD செய்யவும்.... உங்களது போன் புக்கில் உள்ள எல்லா நம்பருக்கும்...... அனைவரும் பயன் பெற

சுப்ரீம் கோர்ட் தலையிட்டு கவனம் செலுத்தி வருகிறது.........

உயிர் காக்கும் மருந்துகளை கிடைக்காமல் செயவதில் கம்பெனிகள் அக்கறை காட்டுகின்றன.

ஆனால் சாமானியனின் மருத்துவ தேவையை கவனத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட் செயல்படுகிறது......

அன்புக்கு விலை இல்லை.....மற்ற குருப்பில் பதிவிடவும்.....
மற்றவர்க்கு உதவுவதே உருப்படியான காரியம்...

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...