Friday, May 26, 2017

சர்க்கரை disease?

வான்மறை-சர்க்கரை

உங்கள் வீட்டிலுள்ள தாய், தந்தையருக்கு மறக்காமல் இந்த மாதத்திற்கான சர்க்கரை, Bp மாத்திரைகள் வாங்கி கொடுத்து விட்டீர்களா?

கண்டிப்பாக நீங்கள் படிக்க வேண்டிய பதிவு இது,

சற்று நீளமான பதிவு, கொஞ்சம் பொறுமையாக படித்தால் நமது தலைமுறையை காப்பற்றிய பெருமை உங்களை சேரும்.

அனைவரும் அலோபதி மயக்கத்தில் முழ்கி இருக்கும் இந்த நாட்டில், நம் மரபு  மருத்துவத்திற்க்கும்  முக்கியத்துவம் அளிக்கும் உங்கள் அனைவருக்கும் வான்மறை மருத்துவம் சார்பாக வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்

நமது உடல் பல லட்சம் கோடிக்கனக்கான செல்களால் ஆனது. ஒவ்வொறு செல்களுக்கும் அறிவு இருக்கிறது. இதன் முக்கிய வேலை நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உட்கிரகித்து, கழிவுகளை  வெளியேற்றவது. உட்கிரகித்தல், வெளியேற்றுதல் இதன் முக்கிய வேலை.

நமது உடலுக்கு எது எரிபொருள்
உணவு.

நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் இந்த சர்க்கரை எனும் சத்துப்பொருள் செல்கள் உட்கிரகித்து, எரித்து வெப்ப சக்தி வழங்குகிறது.

இந்த வெப்ப சக்தியால் தான் நாம் இயங்குகிறோம்.

இப்ப சொல்லுங்க நாம் இயங்குவதற்க்கு சர்க்கரை எனும் சத்துப்பொருள்.

உயிரோடு இருக்கும் போது உடலில் என்ன இருந்தது ?... வெப்பம் இருந்தது. உயிர் இல்லாத போது உடலில் என்ன இல்லை ?... வெப்பம் இல்லை.

இப்பொழுது சொல்லுங்க உயிரோடு இருக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும் ?.... வெப்பம் வேணுமுங்கோ. வெப்பம் சக்தி எப்படி நமக்கு கிடைக்கிறது ?... உணவில் உள்ள சர்க்கரை (மாவுச்சத்து) செல்களால் எரிக்கப்பட்டு வெப்ப சத்தி கிடைக்குதுங்க.

இப்ப சொல்லுங்க, நாம உயிரோட இருக்கனும் நா என்ன வேண்டும் ?... சர்க்கரை வேணும்.

நாம் உயிரோடு இருக்க தேவைப்படும் ஒரு அத்தியாவசிய சர்க்கரை என்னும் சத்துப்பொருளால் நமக்கு நோய் ஏற்படுகிறது என்கிறார்களே, இதுவே இவர்களின் உச்சகட்ட கொடூர மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

இப்பொழுது செரிமானத்தை பற்றி பார்போம்.

நாம் உண்ணும் உணவு வாயில் உமிழ் நீருடன் கலந்தவுடன் செரிமானம் ஆக துவங்கிவிடுகிறது, பின் வயிற்றில் அமிலத்துடன் கலந்து செரிக்கப்பட்டு, சிறுகுடலுக்கு செல்கிறது இங்கு பித்த பையில் இருந்து வரும் பித்த நீரால் செரிக்கப்படுகிறது. பின் இந்த செரிக்கப்பட்ட உணவுக்கூழில்  உள்ள சத்துக்கள் சிறுகுடலின் கடைசிப்பகுதியில் இரத்ததில் கலக்கிறது. பின் கழிவுகள் பொருங்குடலுக்கு சென்று வெளியேற்றப்படுகிறது.

வாய், வயிறு, சிறுகுடலில் செரிமானம் சரியாக நடந்தால், இரத்தத்தில் கலந்த சத்துப்பொருட்கள் தரமான சத்துப்பொருட்களாக இருக்கும். செரிமானம் சரி இல்லை என்றால். சத்துப்பொருட்கள் தரமற்றவையாக இருக்கும்.

பொதுவாகவே நமது உடலுக்கு நன்மையை ஏற்றுக்கொள்ளும் திறனும். தீமையை வெளியேற்றும் திறனும் இயல்பாவே இருக்கிறது.

எப்படி என்று கேட்கிறீர்களா ? இதோ செயல் முறை விளக்கம்.

இப்பொழுது நீங்கள் பசி யோடு இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நான் உங்களுக்கு மிகவும் பிடித்த உணவை உங்கள் கண் முன்னே கொண்டு வந்து காட்டிச்செல்கிறேன். இப்பொழுது வாயில் என்ன மாற்றம் நிகழும் ?.... ஐய்யா எச்சில் ஊறுகிறது. ம் சரி.
அதே உணவை உங்கள் கண் முன்னே கீழே போட்டு மிதித்துவிட்டேன், அதை அப்படியே தட்டில் எடுத்து வைத்து மீண்டும் உங்கள் அருகில் கொண்டு வந்து காட்டிச்செல்கிறேன். இப்பொழுது எப்படி இருக்கும் ? உமிழ் நீர் சுரக்குமா ?.... சுரக்கவில்லைங்க, கொமட்டீட்டு தான் வருகிறது.

இவ்வளவுதாங்க விஷயமே. நல்லதிற்கு நமது உடல் உமிழ் நீர் சுரந்து ஏற்றுக்கொள்கிறது. கெட்டதற்கு உமிழ் நீர் சுரக்காமல் ஏற்க மறுக்கிறது.

நமது உடலில் பல சுரப்பு உறுப்புகள் இருக்கின்றன. உமிழ் நீர் சுரபிகள், தைய்ராய்டு, தைமஸ், கணையம் போன்ற பல சுரப்புறுப்புக்கள் இருக்கிறது.

இதே போல் தான் கணையமும். இரத்தத்தில் இருக்கும் நல்ல சர்க்கரைக்கு இன்சுலின் சுரக்கிறது கெட்ட சர்க்கரைக்கு இன்சுலின் சுரப்பதில்லை.

எது நல்லது, எது கெட்டது. முன்னால் பார்த்தோம் அல்லவா. செரிமானம் சரியாக இருந்தால் இரத்தத்தில் கலக்கும் சத்துப்பொருள் தரமானதாக இருக்கும் எனவும். செரிமானம் சரி இல்லை என்றால் தரமற்றவையாக இருக்கும்.

தரமான சர்க்கரையை, நல்ல சர்க்கரை என்றும். தரம் குறைந்த சர்க்கரை கெட்ட சர்க்கரை, என்றும் வைத்துக்கொள்வோம்.

நமது உடல் என்ன செய்யும் என்று செயல் விளக்கத்தோடு பார்தோம் ? நல்லதை ஏற்றுக்கொள்ளும், கெட்டதை வெளியேற்றும்.

அதேப்போல் தான் நல்ல சர்க்கரை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கெட்ட சர்க்கரை சிறுநீரகம் மூலம் வெளியேற்றப்படுகிறது.

சரி. நாம் இப்பொழுது உண்கிறோம். என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.

உணவு வாயில் போட்டவுடன் உமிழ் நீர் கலந்து செரிமானம் வேலை ஆரம்பமாகிறது. பின் உணவு வயிற்றுக்கு செல்கிறது இங்கு அமிலம் மற்றும் பல செரிமான நீர்களுடன் கலந்து செரிமானம் ஆகிறது. பின் சிறுகுடலுக்கு சென்று பித்த நீர் கலந்து செரிமானம் ஆகிறது. சிறுகுடல் இறுதியில் சத்துப்பொருட்கள் இரத்தத்தில் கலக்கிறது.

நீங்கள் உண்ட உணவு அறைகுறையாக செரிமானம் ஆகி உள்ளது என்று வைத்துக்கொள்வோம். எனவே பாதி தரமான சத்துப்பொருளும், பாதி தரம் குறைந்த சத்துப் பொருளும் கிடைக்கிறது. இவை அனைத்தும் இரத்தத்தில் கலந்தாச்சு.

உதாரணத்திற்கு 100 சர்க்கரை கிடைத்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். இதில் 50 நல்ல சர்க்கரை, 50 கெட்ட சர்க்கரை. இது அனைத்தும் இரத்தில் ஒடிக்கொண்டிருக்கிறது. கணையம் அருகே வரும் போது. கணையம் ஒவ்வொறு சர்க்கரையாக பரிசோதனை செய்து பார்க்கும். இவை தரமானதா, தரமற்றதா. உடலுக்கு நன்மை செய்யக்கூடியதா, தீமை செய்யக்கூடியதா என்று பரிசோதித்து, நல்ல சர்க்கரைக்கு மட்டும் இன்சுலின் வழங்கும், ஒரு கெட்ட சர்க்கரைக்கும் கூட இன்சுலின்  வழங்காது.

நாம் முன்னே செயல் விளக்கத்தோடு பார்த்தோம் அல்லவா. உடல் நல்ல உணவிற்கு உழிழ் நீர் சுரந்தது, கெட்ட உணவிற்கு சுரக்கவில்லை. இதேதான் இங்கேயும் நடக்கிறது.

தற்போது இன்சுலினுடன் 50 சர்க்கரையும், இன்சுலின் இல்லாமல் 50 சர்க்கரையும் இரத்தத்தில் ஒடிக்கொண்டிருக்கிறது. செல்கள் இன்சுலின் உள்ள சர்க்கரைக்கு மட்டுமே கதவை திறக்கும். இந்த 50 நல்ல சர்க்கரையும் செல்களுக்குள்ளே போய்விடும். பின் இது எரிக்கப்பட்டு வெப்ப சத்தி நமக்கு கிடைக்கிறது. இந்த சத்தி மூலமே நாம் இயங்குகிறோம்.  இன்சுலின் இல்லாத சர்க்கரையை சிறுநீரகம் கண்டறிந்து சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடுகிறது. உடலே நல்லதை, கெட்டதை கண்டறிந்து என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிட்டது. நாம் இப்பொழுது ஆரோக்கியமாக இருப்போம்.

நீங்கள் செய்யும் வேலைக்கு 30 சர்க்கரை போதும் என்று வைத்துக்கொள்வோம். மீதம் உள்ள 20 நல்ல சர்க்கரையை உடல் என்ன செய்யும் ?... உதாரணத்திற்கு நமக்கு தேவையைவிட பணம் அதிகம் இருந்தால் என்ன செய்வோம், சேமித்து வைப்போம் அல்லவா. அது போல் தான் உடல் தேவைக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரையை கூட்டு சர்க்கரையாக (Glycogen) செரிவூட்டி கல்லீரல், தசைநார்களில் சேமித்துவைத்துக்கொள்கிறது.

இந்த சேமிக்கப்பட்ட சர்க்கரை எப்போது எதற்கு பயன்படுகிறது, நாம் செய்யும் வேலைக்கு நல்ல சர்க்கரை போதவில்லை என்றால் லேசாக கிறுகிறுப்பு ஏற்பட்டு கண்கள் இருட்டடையும் போது இந்த சேமிக்கப்பட்ட சர்க்கரை இரத்தத்தில் கொட்டப்படுகிறது. நமக்கு ஏதாவது காயம் எற்பட்டால், அந்த காயத்திற்கு அருகில் இருக்கும் தசைநார்களில் சேமிக்கப்பட்ட சர்க்கரை அங்கு இருக்கும் செல்களை புதுப்பித்து காயத்தை ஆற்ற பயன்படுத்தபடுகிறது. நமக்கு எங்காவது விபத்து ஏற்பட்டு ரோட்டில் கிடந்தால், உறுப்புகள் சீராக இயங்குவதற்காக சேமிக்கப்பட்ட சர்க்கரை இரத்தத்தில் கொட்டப்பட்டு நமது உயிரை காக்க பயன்படுகிறது.

நாம் எப்படி நமக்கு பணம் இல்லாத போது சேமித்த பணத்தை பயன்படுத்துகிறோமோ. அது போல் நமது உடல் ஆபத்து காலங்களில் சேமிக்கப்பட்ட சர்க்கரையை பயன்படுத்துகிறது.

இப்ப சொல்லுங்க மனிதனுக்கு எது உண்மையான சொத்து ?... பணம் காசு வீடு, வாகனமா ? நிச்சயம் கிடையாது. நாம் சேமித்த சர்க்கரையே நமக்கு உண்மையான சொத்து.

எவர் வந்தாலும் வராவிட்டாலும். எது இருந்தாலும் இல்லாவிட்டாலும். இறுதியில், இந்த சர்க்கரையே உங்கள் கூட இருந்து உயிரை காக்கும். நாம் எதற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இப்பொழுது நமது உடல், நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை, அதிகப்படியான நல்ல சர்க்கரைகளை எப்படி கையாள்கிறது என்று பார்தோம். இது மனிதன் தோன்றிய காலம் முதல் நடந்து வரும் இயற்கை நிகழ்வு.

இந்த மாவுச்சத்து பொருளுக்கு எவன் சர்க்கரை என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை. இது நம்மை குழப்புவதற்காக சூழ்ச்சி செய்து வைக்கப்பட்டுள்ளது. செரிமான கோளாறால் ஏற்படும் அதிக நீரிழிவு பிரச்சனைக்கு எவன் சர்க்கரை நோய் என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை.

நாம் உண்ணும் சர்க்கரைக்கும் (இனிப்பு) இந்த சர்க்கரை நோய் என்று சொல்லப்படும் நீரிழிவு பிரச்சனைக்கும் துளி கூட சம்மந்தம் கிடையாது.

சர்க்கரை என்பது ஒரு சுவை. அவர்கள் கூறும் சர்க்கரை (மாவுச்சத்து) என்பது ஒரு சத்து பொருள்.

மனிதனுக்கு செரிமானம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இனிப்பு சுவை மிக மிக அவசியமானது. இனிப்பு சுவையால் மட்டுமே உங்கள் வயிற்றிற்கும், மண்ணீரலுக்கும் சக்தி வழங்க முடியும்.

இலை போட்டு முதலில் இனிப்பு வைத்தவன் எல்லாம் முட்டாள்

வீட்டு தின்னையில் வழிப்போக்கர்களுக்கு ஒரு மூடி தேங்காயும் ஒரு உருண்டை கருப்பட்டி வைத்தவன் எல்லாம் முட்டாள்.

விழா காலங்களில் இனிப்பு பண்டம் செய்து உண்டவன் எல்லாம் முட்டாள்.

இனிப்பை சாப்பிடக்கூடாது என்று சொல்லும் ஆங்கில மருத்துவர்கள் அறிவாளிகள்.

எதற்கு இலையில் முதலில் இனிப்பை வைத்தார்கள் ? அனைத்து உணவையும் சாப்பிட்டுவிட்டு இறுதியில் இனிப்பை வீட்டிற்கு மூட்டைகட்டி செல்லவா !,  இனிப்பை முதலில் உண்ண வேண்டும். இனிப்பு சுவை நாக்கில் பட்டவுடன் மின்காந்த அலையாக மாறி நேரடியாக வயிற்றிற்கும், மண்ணீரலுக்கும் சக்தியை வழங்குகிறது. பின் நாம் என்ன சாப்பிட்டாலும் அது நன்கு செரிமானம் ஆகி நல்ல சத்துக்களாக இரத்தத்தில் கலக்கிறது.

உங்கள் மருத்துவர் என்ன சொல்லுவார் இனிப்பு சாப்பிடக்கூடாது. இனிப்பு சாப்பிடாவிட்டால் வயிறு, இதற்கு சக்தி வழங்கும் மண்ணீரலுக்கு சத்தி கிடைக்காது. இப்பொழுது உணவு உண்டால் செரிமானம் எப்படி இருக்கும் ? அறைகுறையாக. கிடைக்கும் சத்துப்பொருட்கள் பெரும்பாலும் கெட்ட சத்துப்பொருளாகவே இருக்கும். இவைகளை உடல் என்ன செய்யும் சிறுநீர் மூலம் வெளியேற்றிவிடும். நாம் எப்படி இருப்போம் சோர்வுடன் நோயாளியாகவே இருப்போம்.

நம்மை நோயாளியாக்கி சாகடிப்பதற்காக இவர்கள் செய்த முதல் தந்திரம். மாவுச்சத்திற்கு சர்க்கரை என்று பெயர் வைத்தது, இனிப்பு சாப்பிடக்கூடாது என்று சொன்னது.

இனிப்பை சாப்பிடக்கூடாது என்று செரிமானத்தை கெடுத்ததோட விட்டார்களா ! இல்லை.

இவர்களின் அடுத்த கட்ட கொலைகார செயல்களை பார்போம்.

இப்பொழுது உங்களுக்கு அதிக நீரிழவு, தாகம், சோர்வு, அதிக பசி. ஏற்படுகிறது இவை அனைத்திற்கும் என்ன காரணம்? அரைகுறை செரிமானத்தால் இரத்தத்தில் கலந்த கெட்ட சத்துப்பொருட்கள் வெளியேறுவதே காரணம். நீங்கள் என்ன செய்ய வேண்டும் ? செரிமானம் சரியாக என்ன வழிவகையோ அதை செய்ய வேண்டும். செரிமானத்தை சரி செய்தால் மேலே குறிப்பிட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

ஆனால் நீங்கள் என்ன செய்வீர்கள்,  உங்கள் அருகில் உள்ள மேதாவி உனக்கு சர்க்கரை நோய் இருக்கக்கூடும் போய் பரிசோதித்துக்கொள் என்பார். நீங்களும் பரிசேதனை செய்து பார்க்க போவீர்கள். அங்கு எவன் எப்பொழுது மாட்டுவன் எப்படியெல்லாம் அவன் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்று 5 வருடம் படித்துவிட்டு வெள்ளை கோர்ட்டு போட்டு கழுத்தில் பாசக்கயிறை மாட்டிக்கொண்டு ஒரு பூதம் உட்காந்திருக்கும். உங்கள் இரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்து, உங்களுக்கு சர்க்கரை அதிகம் உள்ளது. நீங்கள் சர்க்கரை நோயின் ஆரம்பகட்டத்தில் உள்ளீர்கள் என்பார்கள். இதில் என்ன பரிதாபமான விடையம் என்றால். நல்ல மற்றும் கெட்ட சர்க்கரை இரண்டிற்கும் இவர்களுக்கு வித்தியாசம் தெரியாது, இரண்டுமே சேர்த்துதான் இவர்களால் சொல்ல முடியும்.

அந்த சர்க்கரை நல்ல சர்க்கரையா, கெட்ட சர்க்கரையா ? கணையம் பரிசோதித்து இன்சுலின் வழங்கப்பட்டுவிட்டதா இல்லையா ? சர்க்கரை செல்களுக்குள் சென்று எரிக்கப்பட்டுவிட்டதா ? சிறுநீரகத்தால் கெட்ட சர்க்கரை கண்டரிந்து வெளியேற்றப்பட்டுவிட்டதா அல்லது வேலை நடந்து கொண்டிருக்கிறதா ? அதிக நல்ல சர்க்கரை தசைநார்களில் சேமிக்கப்பட்டுவிட்டதா, இல்லை சேமிப்பு வேலை நடந்து வருகிறதா ? நீங்கள் செய்யும் வேலைக்கு சர்க்கரை போதுமானதா இல்லையா என்று எதுவும் அந்த அப்பாவி Robotic மருத்துவர்களுக்கு தெரியாது. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அளவுகளை பார்த்து மாத்திரை கொடுப்பது மட்டுமே.

நல்ல சர்க்கரைக்கும், கெட்ட சர்க்கரைக்கும் இயந்திரங்களுக்கு வித்தியாசம் தெரியாது. இரண்டிற்கும் ஒரே Chemical formula வைத்தான் காட்டும், Glucose - C6H12O6. இதோ உதாரணம் அடிக்கரும்பு எப்படி இருக்கும் ?... நன்கு இனிப்பு சுவை உடையதாக இருக்கும் ங்க. சரி நுனிக் கரும்பு எப்படி இருக்கும் ?...
இனிப்பு குறைவாக சல்லென்று இருக்கும். இந்து அடிக்கரும்பையும், நுனிக்கரும்பையும் ஒரு Lab ல் கொடுத்து பரிசோதனை செய்யது பாருங்கள் Sucrose - C12H22O11 என்று ஒரே Chemical formula வைதான் காட்டும். எப்படி நமக்கு சுவையில் வித்தியாசம் தெரிந்து இயந்திரத்திற்கு தெரியவில்லையோ, அதேப்போல்தான் தரமான சர்க்கரைக்கும்( நல்ல )மற்றும் தரமற்ற சர்க்கரைக்கும் (கெட்ட) உடலுக்கு வித்தியாசம் தொரியும், இயந்திரங்களுக்கு தெரியாது.

இப்பொழுது புரிகிறதா ஏன் ஆங்கில மருத்துவத்திற்கு நல்ல மற்றும் கெட்ட சர்க்கரைக்கு வித்தியாசம் தெரியவில்லை என்று. இவர்கள் தன் சொந்த மூலையை விட மனிதன் உருவாக்கிய இயந்திரத்தை மட்டுமே நம்புவார்கள்.

சரி, இப்பொழுது நீங்கள் சர்க்கரை நோயாளி என்று முத்திரை குத்தப்பட்டுவிட்டார்கள். மாத்திரை எழுதி கொடுத்துவிட்டார்கள்.

இவர் எந்த அளவை வைத்து உங்களை சர்க்கரை நோயாளி என்று முடிவு செய்தார் ? யார் அளவை நிர்ணயம் செய்தது ? இந்த சர்க்கரை மாத்திரை எதற்கு கண்டுபிடிக்கப்பட்து ? உண்மையில் ஆரோக்கியத்திற்கு அளவு ஏதும் உண்டா ? என்று பார்ப்போம்.

ஆங்கில மருத்துவம் அறுவைசிகிச்சை செய்யத்துவங்கும் காலகட்டத்தில், இரத்த போக்கு அதிகம் ஏற்பட்டு உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சையின் போது ஒரு மாத்திரை கொடுக்கப்பட்டு அறுவைசிகிச்சை செய்துபார்த்தார்கள். இது அவர்களுக்கு வெற்றியாக அமைந்து. அறுவை சிகிச்சையின் போது மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த இந்த மாத்திரையை எப்படி உலகம் முழுவதும் வியாபாரம் செய்து கோடிகோடியாய் பணம் சம்பாதிப்பது என்று இரவு பகலாக ஆங்கில மருத்துவ உலகம், மருந்து மாத்திரை பெருநிறுவனங்கள் இணைந்து ஆலோசனை செய்து ஒரு முடிவிற்கு வந்தார்கள். அந்த முடிவு என்ன ?

சர்க்கரைக்கு அவர்களே ஒரு அளவை நிர்ணயித்து, இதற்கு மேல் சென்றாலும் நோய், கீழ் சென்றாலும் நோய் என்று பொய் பிரச்சாரம் செய்வதென முடிவெடுத்தார்கள்.

இதன் படி உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் மாட்டுவர்கள். இவர்களிடம் மாத்திரை விற்பனை செய்து கோடி கோடியாய் சம்பாதிக்கலாம் என்பதே இவர்களின் இலக்கு.

இந்த வியாபாரிகள் விரித்த வலையில் தான் நீங்கள் இப்போது சிக்கி உள்ளீர்கள்.

உண்மை என்னவென்றால் சர்க்கரை இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. சர்க்கரையை பரிசோதித்து பார்பதே மிகப்பெரிய முட்டாள்தனம்.

ஒரு மனிதன், அவர் வாழும் பகுதி, அவர்கள் பண்பாடு, கலாச்சாரம், அவர் செய்யும் வேலை ( உடல் உழைப்பு), மன நிலை, உணவு, சுற்றுச்சூழல், நீர், செரிமாண மண்டலத்தின் சக்தி, பிராண சக்தி இவைகளை பொருத்து சர்க்கரையின் அளவு ஒவ்வொருவருக்கும் மாறிக்கொண்டே இருப்பது தான் இயற்கை.

உண்மை இப்படி இருக்கும் போது, எதன் அடிப்படையில் உலகம் முழுவதும் அனைத்து மனிதர்களுக்கும், இவர்களால் ஒரே அளவை நிர்ணயம் செய்ய முடிகிறது. இதை வைத்தே தெரியவில்லையா ?.... இவர்களின் நோக்கம் உலக மக்களை நோயாளிகளாக்கி,  அவர்களின் செவ்வம் மற்றும் ஆரோக்கியத்தை சுரண்டும் கொடூர பாவச்செயல்களை செய்கிறார்கள் என்று.

நீங்கள் என்ன செய்தீர்கள், மாத்திரை டப்பாவை வாங்கி வீட்டிற்கு வந்துவிட்டீர்கள். இப்பொழுது உணவெடுக்கிறீர்கள். செரிமானம் அறைகுரையாக இருக்கிறது. இதனால் 70 கெட்ட சர்க்கரையும், 30 நல்ல சர்க்கரையும் இரத்தத்தில் கலக்கிறது என்ற வைத்துக்கொள்வோம். உடல் என்ன செய்யும் 70 கெட்ட சர்க்கரையை கண்டரிந்து சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். 30 நல்ல சர்க்கரை செல்களுக்குள் சென்றுவிடும்.

இப்பொழுது மாத்திரை சாப்பிடுகிறீர்கள். இது என்ன செய்யும் நேரடியாக கணையத்திடம் சண்டையிட்டு 70 கெட்ட சர்க்கரைக்கும் இன்சுலின் வாங்கி கொடுக்கும் கொடூர செயலை செய்யும், இந்த 70 கெட்ட சர்க்கரையும் இன்சுலினுடன் இரத்தத்தில் சுற்றிக்கொண்டிருக்கும். செல்கள் இன்சுலின் இருப்பதால் கதவை திறந்து ஏற்றுக்கொள்ளும். இந்த கெட்ட சர்க்கரையை செல்களால் சரியாக எரிக்கப்பட்டு வெப்ப சக்தியாக மாற்ற முடியாது. எனவே முதல் முதலில் உங்கள் செல்களில் கழிவு தங்குகிறது.

உதாரணத்திற்கு நல்ல சர்க்கரையை வெயிலில் நன்கு காய்ந்த விறகாக கற்பனை செய்துகொள்ளுங்கள். கெட்ட சர்க்கரையை காயாத ஈர விறகாக கற்பனை செய்துகொள்ளுங்கள். செல்களை அடுப்புகளாக கற்பனை செய்துகொள்ளுங்கள்.

அடுப்பின் வேலை என்ன?.. விறகை எரித்து வெப்ப சக்தி வழங்குவது. செல்களின் முக்கிய வேலை என்ன?.. சர்க்கரையை எரித்து வெப்ப சக்தி வழங்குவது. நன்கு காய்ந்த விறகை அடுப்பில் எரித்தால் அங்கு என்ன மிச்சம் இருக்கும் ?... சிறிது சாம்பல் மட்டுமே. வெப்ப சக்தியும் முழுமையாக கிடைத்துவிடும். ஈர விறகை எரித்தால் என்ன நடக்கும் ?... சரியாக எரியாமல் புகைந்து புகைந்து விறகு அடுப்பில் தங்கிவிடும். சரியாக வெப்ப சக்தியும் கிடைக்காது. இது போல் தான் நம் செல்களும் கெட்ட சர்க்கரையை முழுமையாக எரிக்க முடியாமல் கழிவு செல்களில் தங்கிவிடுகிறது.

உலகத்தில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரே காரணம்தான். அது என்ன ? இயற்கை விதிமீறல் செயல்களால் கழிவுகள் நமக்குள் தங்குவதே காரணம். கழிவு தேக்கம் நோய். கழிவு நீக்கம் குணம்.

உடல் சரியாக கெட்ட சர்க்கரையை கண்டரிந்து சிறுநீர் மூலம் வெளியேற்றிய தரமற்ற சர்க்கரையை நாம் சொந்த செலவில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு செல்களுக்குள்ளையே செலுத்துவதுதான் உங்கள் அறிவியலின் உச்சகட்ட அற்புத செயல்.

சாக்கடைக்கு செல்ல வேண்டிய ஒரு தேவையற்ற பொருளை, நாம் செல்களுக்குளே செலுத்துவதால் கழிவுகள் செல்களில் தங்கி அந்த செல் பாதிக்கிறது. இத தொடர்ந்து நடக்கும் போது. அந்து உறுப்பு பாதிக்கிப்படுகிறது. உறுப்புகள் பாதிக்கப்பட்டால் அதன் வேலையை சரியாக செய்ய முடியாது. இதனால் மேலும் கழிவுகள் உள்ளேயே தங்க, சொல்லிலடங்கா துயரங்களுக்கு ஆளாகுகிறோம்.

இப்பொழுது தெரிகிறதா சர்க்கரை நோய் வந்தால் ஏன் எல்லா நோய்களும் வருகிறதென்று. சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு பிரச்சனை வந்தால் எந்த நோயும் வராது. இதற்கு மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி போடுவதின் மூலமே அனைத்து நோய்களும் வருகிறது.

சாதாரணமாக உள்ள செரிமானப்பிரச்சனையை சரி செய்திருந்தால் உங்கள் அனைத்து பிரச்சனையும் சரியாகியிருக்கும் அதைவிட்டுவிட்டு, பன்னாட்டு வியாபாரிகளின் கொடிய விசப் பொருட்களை துளி கூட சிந்திக்காமல், அப்படியே நாம் ஏற்றுக்கொண்டதால் உணர்ச்சியற்ற நோய் பிண்டங்களாக காட்சியளிக்கிறோம்.

நீரிழிவு காரணங்கள் !

சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு பிரச்சனைக்கு மூன்றே காரணம்தான். அனைத்து நீரிழிவு நோயாளிகளும் இதில் அடங்குவார்கள்.

1 - அதிக கவலை
2 - அவசரமாக சாப்பிடுவது
3 - அதிக உடல் வெப்பம்

சர்க்கரை நோயாளி என்னு சொல்லப்படும் செரிமானக் கோளாறு உள்ளவர்கள் அனைவருக்கும் இதில் ஒரு காரணமாவது நிச்சயம் பொருந்தும். பரிசோதித்து பாருங்கள். என்னங்க நான் சொன்னது சரியா... !

*எப்படி குணப்படுத்துவது  ?*

1 : கவலை - சாப்பிடும் பொழுது கவலை எல்லாம் மறந்து உணவின் மேல் முழுகவனமும் செலுத்தி சாப்பிட வேண்டும். கவலைக்கு உண்டான காரணங்களை சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.

2 : அவசரமாக சாப்பிடுவது - அவசரமாக டிக்கட் எடுக்க விரும்புபவர்கள் தாராளமாக அவசரமாக சாப்பிடலாம். "நொறுங்கத்தின்றால் நூறு ஆயுசு", பசி எடுத்தால் மட்டுமே உணவெடுக்க வேண்டும்.
ஒரு முறை நன்கு சிந்தித்து பாருங்கள் நாம் எதற்காக இவ்வளவு பாடுபடுகிறோம் என்று, இறுதியில் சாப்பிடுவதற்காகவே என்று உணர்வீர்கள். அதை இப்பவே உணர்ந்து பொறுமையாக சாப்பிடலாமே. நம் நலனுக்காக நம் உடலை இவ்வளவு பாடுபடுத்துகிறோம், ஏன் உடல் நலனுக்காக நாம் 1/2 மணி நேரம் ஒதுக்கி பொறுமையாக சாப்பிடக்கூடாது.

சாப்பிடும் பொழுது உலகத்தையே மறந்துவிட வேண்டும். உணவிற்கு முன் இனிப்பான பழங்களை சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது உணவை பார்த்து நமது முழு கவனமும் உணவின் மேல் செலுத்தி மென்று ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும்.

கோதுமையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

3 : அதிக உடல் வெப்பம் - பச்சை தண்ணீரில் குளிப்பது. வாரம் இரண்டு நாள் எண்ணெய் குளியல். நீர்காய்கனிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

இனி இந்த செரிமானப்பிரச்சனையை யாரும் நோய் என்று சொல் வேண்டாம். நீரிழிவு என்பதே பொருந்தும். தேவையில்லாத, கெட்ட சத்து பொருட்கள் அனைத்தும் சிறுநீர் முலமே வெளியேறும், சர்க்கரை மட்டும் அல்ல. நீரிழிவை சரி செய்ய மேலே குறிப்பிட்ட மூன்று காரணத்தையும் சரி செய்தால் குணம் பெற்றுவிடுவீரகள்.

சர்க்கரை நோய் - செரிமானக்கோளாறால் ஏற்படும் நீரிழிவு பிரச்சனை.

தீர்வு - இனிப்பான பழங்களை சாப்பிடுவது. உணவை பசிக்கும் போது மென்று ரசித்து ருசித்து சாப்பிடுவது.

இனி நாம் யாரும் பன்னாட்டு வியாபாரிகளின், உயிரை குடிக்கும் இரசாயண மாத்திரைகளையும் இன்சுலின்களையும் எடுக்க மாட்டோம் என்று உறுதி எடுப்போம். மூளையில், மழுங்கி கிடக்கும் நமது முளையை சற்று பயன்படுத்தி சிந்திக்க துவங்குவோம்.

பன்னாட்டு கொலைகார வியாபாரிகளின், கொடூர வச தன்மை உள்ள பொருட்களை விற்கும் சந்தையாக உங்கள் உடலை மாற்றிவிடாதீர்கள்.

"உள்ளமே பெருங்கோவில்
ஊநுடலே ஆலையமாம்"
ஆலயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

உண்மையில் சர்க்கரை நோய் என்று ஒரு நோய் உலகில் இல்லை

இது முழுக்க முழுக்க மருந்து மாத்திரை கம்பனிக்காரர்களின் வியாபார தந்திரம்.

இனிப்பிற்கும், சர்க்கரை நோய்கும் 0.1% கூட சம்பந்தம் கிடையாது.

இதற்கு சர்க்கரை நோய் என்று பெயர் வைத்ததிலேயே மிகப்பெரிய தந்திரம் இருக்கிறது.

லேசாக தலை சுற்றலே, சோர்வே, மயக்கமே வந்து விட கூடாது. உடனே
நீங்கள் பயந்து போய், பரிசோதனை செய்து பார்ப்பீர்கள், அளவு அவர்கள் நிர்ணயித்ததை விட குறைவாகவே, அதிகமாகவோ இருக்கக்கூடும், உடனே உனக்கு சர்க்கரை நோய் உள்ளது, இந்தா இந்த மாத்திரையை போடுனு எழுதி கொடுத்துவிடுவார்.

இதோட நிறுத்தினால் பரவாயில்லை, மாத்திரை போடலைனா அது வந்துரும், இது வந்துரும் னு பயப்படுத்தி, ஒரு பெரிய பட்டியலை காட்டி இதோ பாருங்க சர்க்கரை நோய் வந்தா இந்த எல்லா நோய்களும் வந்துவிடும்னு சொல்வார்.

ஆனால், உண்மை என்ன தெரியுமா, சர்க்கரை நோய் வந்தால் எல்லா நோயும் வராது. சர்க்கரைக்கு அவர்கள் கொடுக்கும் மாத்திரை சாப்பிடுவதால் மட்டுமே எல்லா நோயும் வருகிறது. அந்த மாத்திரை பெட்டியிலேயே இதை சாப்பிட்டால் சிறுநீரக கேன்சர் வரும் என்று எழுதியிருப்பது யாருக்காவது தெரியுமா !

ஆங்கில மருத்துவம் நிர்ணயிக்கும் அளவுகள் எல்லாம் நம் ஆரோக்கியத்தை மையப்படுத்தி நிர்னையிக்கும் அளவுகள் அல்ல.

அளவுகள் நிர்ணயிப்பது யார் தெரியுமா ? மருந்து மாத்திரை கம்பனிக்காரர்களே ! வியப்பாய் உள்ளதா, இது தான் உண்மை.

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும், அவரவர் வாழும் பகுதி, செய்யும் வேலை, உணவு, மனம், சுற்றுச்சூழல் இதை பொருத்து சர்க்கரை அளவு
மாறிக்கொண்டே இப்பது தான் இயற்கை.

இப்படி இருக்கும் போது, எதன் அடிப்படையில், உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான அளவை நிர்ணயம் செய்ய முடிகிறது.

சர்க்கரை நோய் என்று சொல்லப்படும் சிறிய பிரச்சனைப்பற்றி மக்களுக்கு முழு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக
படித்தவுடன் உங்களின் நண்பர்களுக்கு, அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கண்டிப்பாக பகிருங்கள். விழிப்புணர்வுடன் பகிர்ந்தால் குறைந்தபட்சம் ஒரு குடும்பத்தையாவது நிம்மதியுடன் வாழ வைக்க முடியும்.

*☀ONE TREATMENT FOR ALL DISEASES🌛*

*🔺250gm. Fenugreek*  (வெந்தயம்)   
*🔺100gm. Ohmam –Ajwain* (ஓமம்)         
*🔺50gm.  Black Jeeri –Kali Jeeri*  (கருஞ்சீரகம்)

🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

*Preparation:*

*🍃Clean the  above 3 items*
*🍂Roast it separately.*
*☘(Make  sure not to over roast)*
*🌿Mix all of them together and make a powder*
*☀Stock in an airtight glass jar*.
🌱🌱🌱🍁🍁🍁🌱🌱🌱
*👉🏼Dosage:👈🏼*

*👉🏼Consume one spoon with one full glass of warm water in the night.*

*👉🏼It is important to consume with warm water.*

*👉🏼Do not have any food after consuming this*

*👉🏼The powder can be consumed by all genders and ages*

*👉🏼By consuming this powder daily, the toxin stagnant in every corner of our body will be pushed out via Stool, Urine and Sweat*.

*👉🏼The best result will be noticed after 80-90 days of consuming this powder*

*👉🏼By then, the unwanted fat will also be burned down.*
      *👉🏼Fresh, Cleaner Blood will be in Circulation*
      *👉🏼Wrinkles will Vanish.*
      *👉🏼The body will become Strong, Brisk and Glowing.*

*📌Benefits📌*

*👉🏼1.Arthritis (Ghatiya) and similar chronic issues will be Cleared.*

*👉🏼2.Bones will become Stronger.*

*👉🏼3.Improves Eye Sight.*

*👉🏼4.Improves Hair Growth.*

*👉🏼5.Clears Constipation Problem permanently.*

*👉🏼6.Improves Blood Circulation.*

*👉🏼7.Can get rid of Cough.*

*👉🏼8.Improves Performance of Heart.*

*👉🏼9.Makes you feel Brisk*

*👉🏼10.ncreases Memory Power..*

*👉🏼11.Ladies features will be maintained even after marriage.*

*👉🏼12.Improves Hearing.*

*👉🏼13.Clears Side effects of allopathic medicines taken earlier.*

*👉🏼14.Purifies the Blood.*

*👉🏼15.Clears all the Blood Vessels.*

*👉🏼16.Teeth and Gums will become Stronger and help in maintain the Enamel.*

*👉🏼17.Imptroves Sexual Weakness.*

*👉🏼18.Controls Diabetes. You should take this powder along with the Diabetic Care Powder.*

*👉🏼19.The effect of the medicine will be noticed after 2-3 months.*

*👍🏼You can lead a Healthy, Happy, Brisk, Tensionless, Disease-Less, Long life.*

*❤We humbly request you to please circulate this message to whom you Care*
*👌🏻Your Share willBenefit

செல்வம் குறைவதின் அறிகுறிகள்.

கழுவபடாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிக நேரம் அப்படியே இருப்பது.

வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக்கேற்றுவது.

தலைமுடி தரையில் உலாவருவது.

ஒற்றடைகள் சேருவது.

சூரிய மறைவுக்கு பின் வீட்டை பெறுக்குவது துடைப்பது.
தூங்குவது.

எச்சில் பொருள்கள் பாத்திரங்கள் காபி கப்புக்கள் ஆங்காங்கே இருப்பது.

பெண்கள் தினமும் தலைக்கு குளிப்பவர்களை தவிர மற்றவர்கள் செவ்வாய் வெள்ளி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.

ஆண்கள் புதன் வெள்ளி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.

குழாய்களில் தண்ணிர் சொட்டுவது.
சுவற்றில் ஈரம் தங்குவது.

செல் (கரையான்) சேருவது.

பூராண் போன்ற விஷ ஜந்துகள் உலாவுவது.

அதிக நேரம் ஈர துணிகள் போட்டு வைப்பது. தேவைக்கு அதிகமான பொருட்கள் வைத்து இருப்பது. வீண்ணடிப்பது.

உணவு பொருள்கள் வீண்ணடிப்பது.

உப்பு பால் சர்க்கரை அரிசி  போன்றவற்றை சுத்தமாக தீரும் வரை வாங்காமல் இருப்பது, மீண்டும் வாங்காமல் அதன் பாத்திரங்களை கழுவி வைப்பது.

குறைந்த பட்ச வெளிச்சம் இல்லாமல் மின்சாரம் சேமிப்பதாக வெளிச்சங்களை குறைப்பது.

மெல்லிசை கேட்காமல்
சதா காலம் ராஜச இசையை, அபச இசைகளை கேட்பது.

இல்லை இல்லை வராது வராது வேண்டாம் வேண்டாம் போன்ற வார்த்தைகளை அதிம் உச்சரிப்பது.

படுக்கையையும் பூஜை பொருட்களையும்   வேலையாட்களை கொண்டு சுத்தம் செய்வது.

வாசலில் செருப்பு துடப்பம் போன்றவற்றால் அலங்கோலப்படுத்தி வைத்து இருப்பது.🙋🏻‍♂🙋🏻‍♂🙋🏻‍♂🙋🏻‍♂🙋🏻‍♂🙋🏻‍♂🙋🏻‍♂🙋🏻‍♂👁👃🏻👁

வலி நிவாரணி மாத்திரைகளுக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு

http://www.todaytrends.in/2017/05/ttnews01.html

*உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..*

*உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..*

இந்த செய்தியை நீங்கள் படிப்பது மட்டுமின்றி உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும் பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து உதவுங்கள்.

தற்போது நிலவி வரும் பருவ மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது.
இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது. இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது.
இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் உபாதைகள் ஏற்ப்படுகிறது.  இதனை சரி செய்ய நம் சித்தர்கள் அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.

*தேவையான பொருள்கள் :*

1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு

*செய்முறை:*

நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். *சூடு ஆறினதும் எண்ணையை இரு கால்களின் பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும்.*
இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும்.

_*2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது*_ சளி, ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம். மிகுந்த மன அழுத்தம், உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.
இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.
அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.
இதனை I.T துறையில்  வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.
நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து மகிழுங்கள்.

Thursday, April 13, 2017

சாப்பிட்ட  பிறகு  செய்யக்கூடாதவைகள்.*

 *அவசியம்  அறிவோம் பல நோய்களை தவிர்ப்போம்.*
=======================
*1. சாப்பிட்டவுடன்  தண்ணிரை  வயிறுமுட்ட  குடிக்க  கூடாது.  இதனால்  ஜிரணநீர்  நீர்ந்து  போய்  அஜிரணமாகும்  பல  நோய்கள்வர  இது  முக்கிய  காரணமாக  அமையும்.*

 *2. சுமார் 40 நிமிடம் கழித்து  தண்ணீர்தாகம்  எடுக்கும்  அப்போது குடிக்கவேண்டும்.*

*3. சாப்பிட்டதும்  படுத்து விடக்கூடாது. காரணம், குடல்  தனது  செயல்பட மிகவும்  சிரமப்படும். ஜீரணம்  முறையாக  நடக்காது.*

*4. குறைந்தது  ஒரு  மணிநேரம்  கழித்தே  உறங்க  வேண்டும்.  இது  மதியம்  ஓய்வு  எடுப்பவர்களுக்கும்  பொருந்தும்.*

*5. சாப்பிட்டதும்  குளிக்க  கூடாது  குறைந்தது 2 மணிநேரம்  கழித்தே  குளிக்க  வேண்டும்.*

*6. சாப்பிட்டு  முடித்ததும்  எந்த  பழங்களையும் சாப்பிடக்கூடாது.  காரணம்,  உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும்.*  
*பழங்களின்  நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான்.*
*இந்த  வித்தியாசத்தால் நாம் சாபிட்ட  பழம்  வாயுவாக  மாற்றம்  பெரும்.  இதில்  ஒரு  பழத்துக்கு  மட்டும்  விதிவிலக்கு  அது  பேரீச்சம்பழம்.*

*7. சாபிட்ட உணவு  ஜீரணமாகாத நிலையில்  வேறு  உணவுகள்  எதையும்  உண்ணக்கூடாது.  காரணம், இவ்வாறு  சாப்பிட்டால்  ஏற்கனவே  சாபிட்ட  உணவு  ஜீரணத்தை கடுமையாக  பாதிக்கும்.  இதனால்  சுகர்  வர  காரணமாக  அமையும்.*

*8. குளிர்பானங்கள், ஐஸ்கீரீம்,  ஐஸ்வாட்டர்  இவைகளையும்  குடிக்க  கூடாது. காரணம், உணவு  ஜீரணமாக  நமது  குடலில்  வெப்பம் இருக்கவேண்டும். அந்த  வெப்பத்தை  இந்த  குளிர்பானங்கள்  இல்லாமல்  செய்துவிடும்.*

*9. சாப்பிட்டதும்  பரபரப்பாக  இயங்குவதோ  நடப்பதோ  பளுவானவற்றை  தூக்துவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால்  உணவு  கீழ்நோக்கி  செல்லாமல்  மேல்  நோக்கி  வரும்.  இதனால்  நெஞ்சு  எரிச்சல்,  வாயு தொல்லைகள்  ஏற்படும்.*

*இ்ந்தப் பதிவை படித்து உடனே பகிர்ந்தால் இரண்டு நிமிடம் ஆகும். பகிராவிட்டால் ஒரு நல்ல பதிவுக்கு உண்டான நன்மை கிடைக்காமல் போகும்.* 😁😁😁
சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?

சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்...

நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...

இரண்டு சக்கர  வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில்,

சோபாக்களில்,  கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.

*இப்படிக்  காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல
உடல் உபாதைகள் உருவாகிறது*...

இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து  அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...

*நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு  அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு
வாய்ப்பு உள்ளது*.

நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.

மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது  ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது.

எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால்
போட்டு அமர்ந்திருந்தால்  அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.

எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை
மடக்கி அமர்ந்துதான்  சாப்பிட வேண்டும்.

ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு
ஜீரணம்  நன்றாக நடைபெறுகிறது.

சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல்  காலுக்கே அதிகமாக செல்கிறது.

இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம்  யுரோப்பியன் கழிவறையில்  அமரும் பொழுது குடலுக்கு அதிக

அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும்,

அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட  யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.

ஒரு விஷயத்தைப்  புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து  வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்...

எனவே யுரோப்பியன்  வகை கழிவறைகளை தவிருங்கள்...

கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...

சாப்பிடும் பொழுது தரையில்  ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால்
சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்...

சில வீடுகளில் அதற்கு  வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...

சாப்பிடும் முறை...!

1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...

2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக  மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...

3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது...

4. சாப்பிடும் பொழுது  இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.
போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...

5. அவசர  அவசரமாக சாப்பிட வேண்டாம்...

6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...

7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட  வேண்டாம்...

8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...

9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...

10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...

11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு  சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...

12. சாப்பிட வேண்டிய நேரம்...காலை - 7 to 9 மணிக்குள் மதியம் - 1 to 3 மணிக்குள் இரவு - 7 to 9 மணிக்குள்

13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்...

14. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...

அமருங்கள் சம்மணமிட்டு.


‬: *
அகத்தியா்அருளிய உடல்நோய்கள்அனைத்தையும்  முற்றிலும் நீக்கும்இம்மந்திரத்தினை  ஜெபித்து நோய்களினின்றும்   விடுதலைப்பெற்று  மகிழ்வுடன்வாழ்வோமே.......

கணபதி மந்திரம் ...

ஆமப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்ற
அருமையுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
ஓமப்பா ஆதிகண பதிதானொன்று
உறுதியுள்ள மகாகண பதிதானொன்று
தாமப்பா நடனகண பதிதானொன்று
சங்கையுள்ள சக்திகண பதிதானொன்று
நாமப்பா சொல்லுகிறோம் ஒன்றாய்க்கேளு
நன்மையுள்ள வாலகண பதிதானொன்றே.
ஒன்றான உச்சிட்ட கணபதிதானொன்று
உத்தமமே உக்கிரகண பதிதானொன்று
நன்றான மூலகண பதிதானொன்று
நாட்டமுட அஷ்டகண பதிக்குமொன்றாய்க்
குன்றாத மூலமந்திர சூக்ஷந்தன்னைக்
குறிப்புடனே சொல்லுகிறேன் குணமாய்க்கேளு
நின்றாடு மூலமடா ஆதிமூலம்
நிலையறிந்து

ஓம்கிலி அங்உங்கெண்ணே

ஆதி கணபதி, மகா கணபதி, நடன கணபதி, சக்தி கணபதி, பால கணபதி, உச்சிட்ட கணபதி, உக்கிர கணபதி, மூல கணபதி என எட்டு வகை கணபதி இருப்பதாக கூறுகிறார். இந்த எட்டு வகை கணபதிக்கும் ஒரே முலமந்திரம் இருக்கிறது. அது

“ஓம் கிலி அங் உங்”

என்பதாகும். இந்த மூல மந்திரத்தை எவ்வாறு பயன் படுத்தி பலனடைய வேண்டும் என்பதை பின் வருமாறு விளக்குகிறார்.

எண்ணமுடன் இடதுகையால் விபூதிவைத்து
ஏகாந்த கணபதியின் சுழியைநாட்டி
சொன்னமொழி தவறாமற் சுழியைப்பார்த்து
சுத்தமுடன்

ஓம்கிலி அங்உங்

கென்று
தன்னகமே சாட்சியாய் இருநூற்றெட்டுத்208
தான்செபித்து விபூதியைநீ கடாட்சித்தாக்கால்
முன்னிறைந்த சற்குருவின் கடாக்ஷத்தாலே
மூர்க்கமுடன் தீருகிற வியாதிகேளே.
கேளப்பா சுரமுடனே சன்னிதீரும்
கெடியான குன்மமுடன் காசந்தீரும்
சூளப்பா வஞ்சினையும் ஏவல்தீரும்
சுருக்கான பலவிஷமுந் தோஷந்தீரும்
வாளப்பா கரப்பனொடு கெர்ப்பரோகம்
வயற்றிலுள்ள திரட்சியெல்லாம் வாங்கிப்போகும்
ஆளப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்று
ஆதியென்ற பூரணத்தில் அழுந்தலாமே.

இடதுகையில் சிறிதளவு வீபூதியை எடுத்துக் கொண்டு அதில் கணபதியின் சுழியான “உ” என்பதை எழுதிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த திரு நீற்றைப் பார்த்து கணபதியின் மூல மந்திரத்தை இருநூற்றி எட்டு தடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார்.இப்படி செபிக்கப் பட்ட விபூதியை அணிவதால் சுரமுடன் ஜன்னியும் தீருமாம், குன்மமுடன் காசமும் தீருமாம் வஞ்சனை, ஏவல்கள் தீருமாம். அத்துடன் பலவித தோஷங்கள் நீங்குமாம். இது தவிர கரப்பான், கெர்ப நோய்கள் வயிற்றில் இருக்கும் திரட்சிகள் எல்லாம் தீரும் என்கிறார் அகத்தியர்.
-
சிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை உடற்காங்கை என்பார்கள்.

உடலுக்கு இயற்கையான சூட்டை தருவது உணவு. உடல் இயங்கிக் கொண்டே இருப்பதால், சூடு ஒரே நிலையில் இருக்கும். இந்த சூடு வேறு, உடற்காங்கை என்பது வேறு!

உடற்காங்கை தான் பல நோய்களுக்கு காரணமாகிறது. அஜீரணம், மூட்டுவலி, இளநரை, பாலியல் கோளாறுகள், மாதவிடாய் கோளாறுகள் வாய்வுத்தொல்லை, மூலம் இவைகள் உண்டாகும் காரணங்களில் அதீத உடல் உஷ்ணமும் ஒரு காரணம். உடல் உஷ்ணம் கண்களை பாதிக்கும்.

உடற்காங்கை அதிகமாக காரணங்கள் கோபம், மனக்கவலை, பயம், தாபம் இவை உடற்சூட்டைக் கூட்டும். உள்ளங்கை, விலா, தலை நெற்றி இவற்றை தொட்டுப்பார்த்தால் சூடு தெரியும்.

அடுத்த முக்கிய காரணம் உடலிலிருந்து வெளியேறாமல் தங்கி விடும் மலப்பொருட்கள் தான். உடலில் நச்சுப் பொருட்கள் தங்குவது எப்போது கெடுதலை வினைவிக்கும்.

1. உடலுக்கு எண்ணை பதமிடுதல் அவசியம். தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்க, உடற்சூட்டினால் பொலிவிழக்கும் தலைமுடி மீண்டும் கருமையடையும். இளநரையை தவிர்க்கலாம். ஈரமுள்ள தலையில் எண்ணை தடவாமல், உலர்ந்த கேசத்தில் எண்ணை தடவி பின் குளிக்க வேண்டும். தலையின் எண்ணை தடவாமல் ஸ்நானம் செய்வதும், ஸ்தானத்திற்கு பின் ஈரத்தலையில் எண்ணை தடவுவதும், நீர்கோர்வை, சளி, நரை இவற்றை வரவழிக்கும். கேசத்திலும், தோலிலும், எண்ணைப் பசை இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது உடல் உஷ்ணம் குறையும்.

2. இரவு படுக்கப் போகும் போது உள்ளங்கால்களில் நல்லெண்ணை தடவி, தேய்த்து பிடித்து விட்டுக் கொண்டால், கண்களின் எரிச்சல், காங்கை குறையும்.

3. எண்ணை குளியலுக்கு உகந்தவை சூடாக்கப்பட்ட நல்லெண்ணை, திரிபலாதி தைலம், பிருங்காமல தைலம், பொன்னாங்கண்ணி தைலம், போன்றவை பல பலன்களை அளிக்கும். ஆயுர்வேத மருத்துவரின் உதவியோடு, உங்களுக்கு பொருந்தும் தைலத்தை தேர்ந்தெடுக்கவும். கரிசிலாங்கண்ணி, இலைகள், நெல்லி முள்ளி, மருதாணி, எள், இவற்றை தனியாக அரைத்தோ, இல்லை பால்விட்டு அரைத்தோ, சிறிது சூடு செய்து, குளியலுக்கு உபயோகிக்கலாம்.

4. உடலில் தங்கியுள்ள விஷமாகும் கழுவுப் பொருட்களை வெளியேற்ற விரேசன மருந்துகளை, டாக்டரின் அறிவுரைப்படி உட்கொள்ளவும். தினமும் மலம் கழிக்க இவை உதவும். மாதம் ஒரு முறை பேதி மருந்து உட்கொண்டால், வயிறு சுத்தமாகும். திராஷை கஷாயம் போன்றவை இயற்கையாக பலன்தரும்.

5. எண்ணை குளியலை மேற்கொள்ளும் போது, எண்ணையை காய்ச்சி தேய்த்துக் கொள்வதே நல்லது. மிளகு, ஓமம், இவற்றை போட்டு எண்ணையை காய்ச்சுவது வழக்கம். கொம்பரக்கை போட்டு காய்ச்சிய எண்ணையை உபயோகித்தால் உடற்காங்கை குறையும்.

6. எண்ணை தேய்த்துக் கொண்டு குளிக்கையில் சூடான நீரையே பயன்படுத்த வேண்டும்.

7. ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தண்ணீரில் ஒரு இரவு ஊற வைக்கவும். மறு நாள் காலையில் வெறும் வயிற்றில் இதை உட்கொள்ளவும். இதை இரண்டு நாட்களுக்கு செய்யவும்.

8. மதியம் உணவில் மோர் கலந்த சாதத்தில் இரண்டு மூன்று சிறு வெங்காயத்தை சேர்த்து, மூன்று நாட்களுக்கு சாப்பிடவும்.

9. தினமும் இரண்டு மூன்று நெல்லிகாயை உட்கொள்ளவும்.

10. வெள்ளரி சாறு, கேரட் சாறு, இவைகள் உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

11. இளநீர் உடல் உஷ்ணத்தை குறைப்பது சிறந்தது.

12. கசகசா விதைகளை பாலில் அரைத்து இந்த களிம்பை தலையில் தடவிக் கொண்டு குளிக்கலாம்.

13 . மேகம் முற்றினால் வெள்ளை, வெள்ளை முற்றினால் வெட்டை,வெட்டை முற்றினால் கட்டை.-கிராமத்து பழமொழி.

மேகம் என்றால் சூடு, உஷ்ணம் என்று பொருள். உடலில் உஷ்ணம் அதிகரித்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் தோன்றும்.இந்நிலை நீடித்தால் வெள்ளை,வெட்டையாக மாறும். இந்நிலை நீடித்தால் உடல் மெலிந்து வேறு பல நோய்கள் தோன்றி இறக்கும் நிலை உருவாகும்.

சரி இதற்கு பழமொழியில் உள்ள மருத்துவம் எது என்றால்,இதில் உள்ள கடைசி வார்த்தைதான் மருந்து, அதாவது கட்டை இது சந்தனக்கட்டையை குறிப்பதாகும். இன்று சராசரியாக அதிகமாக பெண்களிடம் காணப்படும் நோய்களில் இதுவும் ஒன்று....

முற்றிய நிலை வெள்ளை வெட்டைக்கு தரமான சந்தன கட்டையை சிறிது பன்னீர் விட்டு அம்மியில் தேய்க்க தேய்க்க விழுது போல் வரும்.அதில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து ஒரிஜினல் சந்தன அத்தர் மூன்று சொட்டு விட்டு ஒரு தம்ளர் பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும்

இப்படி மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட அதிக நாள்பட்ட வெள்ளை வெட்டை நோய் குணமாகும்....அம்மா சொல்படி கேட்டு,வெள்ளிக்கிழமை நல்லெண்ணெய் அரப்பு போட்டு குளிச்சீக்கிட்டு இருந்தா,உடல் சூடும் ஆகாது..வெட்டையும் வராது.. ஷாம்பு போட்டு குளிச்சிட்டு,மென்மையான உணவான இட்லியை மறந்து ஜீரணமாகாத பீட்ஸா வை சாப்பிட்டா எல்லாமே வரும்!!

14 . உடல் சூட்டை தணிக்க : இரவு சிறிது அளவு பாதாம் பிசின்னை தண்ணீரில் ஊறவைத்துக், மறுநாள் காலையில் பருக வேண்டும், சூடு தணியும் வரை எடுத்துக்கொள்ளவும்
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.

அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.

* சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.

* வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

* இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.

* கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.

* பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது.
சர்க்கரைநோயினால் ஏற்படும் புண் குணமாவதற்கு வழிமுறைகள்:!!!

மா இலை, அத்தி இலை, ஆகியவற்றை எடுத்து கொண்டு நன்கு அரைத்து ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து மண் பாத்திரத்தில் பாதியாக காய்ச்சி கொள்ள வேண்டும். பிறகு வெள்ளை நிற துணியில் வடிகட்டி கொள்ள வேண்டும். தினமும் காலை உணவுக்கு முன் 50 மில்லியும், இரவு உணவுக்கு பிறகு 50 மில்லியும் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் புண்கள் குணமாகும். உடலில் ஏற்படும் தீராத புண் மீது அத்தி இலை, வேப்பிலை, மஞ்சள் பொடி ஆகியவற்றை எண்ணெயில் கலந்து இரவு தூங்கபோகும் முன் புண் மீது தடவி வந்தால் நோய் குணமாகும். 
நன்றி :- முகநூல்


  
ஜாதிக்காய்

🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛


1. வேறுபெயர்கள்: 
கிழக்கிந்திய ஜாதிக்காய், மேற்கிந்திய ஜாதிக்காய்

2. தாவரப்பெயர்: 
Myristica Fragran Ce, Myristicaceae, Myristice Faeglos

3. வளரும் தன்மை: 

மொலுக்கஸ் தீவில் தோன்றிய ஜாதிக்காய் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சுமார் 3000 எக்டர் பரப்பளவில் பயிர் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் 1000 டன்கள் விளைவிக்கப்படுகிறது. 

தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இது செம்புறைமண், தோமிலிமண், களிமண் கலந்த தோமிலிமண் பயிர் செய்ய ஏற்றது.

ஜாதிக்காய் ஈரப்பதம் அதிகமுள்ள வெப்ப மண்டலப் பகுதிகளான தென்மேற்கு மலை ஓரங்களில் கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் முதல் 1000 மீட்டர் வரை உயரமுள்ள பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. 

இதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள மண் உகந்தது. மண்ணின் அங்ககப் பொருட்கள் அதிகமாக இருந்தல் மிகவும் அவசியம். இது அடர்த்தியாக வளரக்கூடிய பசுமைமாறா மரம். இவை சுமார் 10-20 மீட்டர் உயரம் வரை வளரக் கூடிய பளபளப்பான இலைகளையுடையவை.

 இவற்றின் பூக்கள் இளமஞ்சள் நிறத்தில் மிகச் சிறியதாகக் காணப்படும். ஜாதிக்காயில் ஆண் மரம், பெண்மரம் என தனித்தனியாகக் காணப்படும். இதை 6 வருடங்கழித்து அவை பூக்கும் போதுதான் காண முடியும்.

விதைகளின் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. விதை முளைக்க 6 வாரம் ஆகும். பின் ஆறு மாத கன்றுகளைத் தொட்டிகளுக்கு மாற்றி, ஒரு வருடம் முடிந்தவுடன் நடவுக்குப் பயன்படுத்தலாம்.

 விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ஜாதிக்காய் மரங்கள் 7-8 வருடங்களில் மகசூலுக்கு வருகின்றன 10-12 வருட மரங்கள் ஒரு மரத்திலிருந்து 2000-3000 காய்கள் கிடைக்கும். ஓட்டுக் கன்றுகள் நட்டபின் 4வது வருடத்திலிருந்து மகசூலுக்கு வருகின்றன.

4. பயன்படும் உறுப்புகள்: ஜாதிக்காயின் விதையைச் சுற்றி இருக்கும் சிகப்பு நிறமான பூ போன்ற பகுதிக்கு ஜாதிப்பத்திரி என்று பெயர். இரண்டையும் தன்னடக்கியுள்ள சதைப்பற்றான பகுதிக்கு ஜாதிக்காய் ஆப்பிள் என்று பெயர். மேல் ஓடு வெடிக்கும், அதுவும் பயன்படும்.

5. பயன்கள்: ஜாதிக்காயிலிருந்து பெறப்படும் “மேசின்” என்ற வேதிப்பொருள் மருந்துப் பொருள்களிலும், வாசனைத் திரவியங்கள், முகப்பூச்சு, பற்பசை மற்றும் வாய் கொப்பளிக்கும் தைலங்களில் பயன்படுத்தப்படுகின்றன. 

ஜாதி எண்ணெயில் அடங்கியுள்ள “மிரிஸ்டிசின்” என்ற வேதியல் பொருள் பலவிதமான நோய்களைக் குணமாக்கவும், காமப் பெருக்கியாகவும் பயன்படுத்தப்படுகின்றது. 

ஜாதிக்காயிலிருந்து பிரித்து எடுக்கப்படும் “ஒலியோரேசின்” கொழுப்பு, வெண்ணை போன்றவை வாதம் மற்றும் தசை பிடிப்பிற்கு மருந்தாகவும் பாக்டீரியா மற்றும் கரப்பான் கொல்லியாகவும் பயன்படுகிறது.

“சதை தரும் பத்திரிக்குத் தாபச் சுரம்
ஓதுகின்ற பித்தம் உயருங்காண் – தாகுவிருத்தி
யுண்டாங் கிரகணியோ டோதக்கழிச்சலும்
பண் டாங் குறையே பகர்”

அகத்தியர் குணவாகட பாடல் குறிப்பிடுவது போல் ஜாதிப் பத்திரியானது தாப சுரம், பேதி, நீர்க் கழிச்சல், வாதம், தலைவலி, இருமல், வயிற்றுவலி, மாந்தம் போன்றவற்றைக் குணமாக்கும் தன்மையுடையது.

ஜாதிக்காய் பொடியை அரைகிராம் அளவாக பாலில் கலந்து நாளைக்கு 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்றுப் போக்கு தீரும், விந்திறுகும், உடல் வெப்பகற்றும், இரைப்பை, ஈரல் ஆகியவற்றை பலப்படுத்தும், மன மகிழ்ச்சியை அளிக்கும். நடுக்கம், பக்கவாதம், ஓக்காளம் ஆகியவற்றைப் போக்கும். சிறு அளவில் உண்டுவரச் செரிமானத்திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்படையும்.

எண்ணையில் இட்டு காய்ச்சி இவ்வெண்ணையை காதுக்கு 2 துளி விட்டால் காது நோய், காது வலி தீரும். 10 கிராம் ஜாதிக்காய் பொடியுடன் புதிய நெல்லிக்காய்ச் சாறு ஒரு மேஜைக் கரண்டியளவு கலந்து சாப்பிட்டால் அதிகமறதி, விக்கல், தூக்கமின்மை, ஒழுங்கற்ற இருதயத்துடிப்பு ஆகியவை குணமாகும்.

 ஜாதிக்காய் தூள் சுமார் 10 கிராம் எடுத்து ஆப்பிள் ரசம் (அ) வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு தீர்ந்து விடும்.

ஜாதிக்காய் பாதியளவு உடைத்து ஒரு டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி அதில் ஒரு அவுன்ஸ் தண்ணீர் வீதம் கலந்து குடிக்க காலரா முதலிய வாந்தி பேதி நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும்.

ஜாதிக்காயை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் போது அவை போதையை உண்டாக்கும்.

ஆகவே ஜாதிக்காய் வெப்பமுண்டாக்கி, அகட்டுவாய்வகற்றி, மூர்ச்சையுண்டாக்கி, மணமூட்டி, உரமாக்கி போன்ற மருத்துவப் பண்புகளைப் பெற்றுள்ளது. இதன் தைலம் பல்வலி, வாதம், வாயு, கழிச்சல் போன்றவற்றையும் கட்டுப்படுத்துகிறது.

இயற்கையான வயகரா – ஜாதிக்காய்..!!

பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயகராவாக பயன்படு

40 வயதினிலே... பின்பற்ற வேண்டிய ஆரோக்ய வாழ்க்கை முறை!




உணவு

* வயது கூடக் கூட நம் செரிமான சக்தி குறைய ஆரம்பிக்கும். அதனால் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய, அதே நேரத்தில் சத்தான உணவைச் சாப்பிடவேண்டியது அவசியம். 

* கொழுப்புச்சத்து குறைவான உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதன் மூலம் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம். அதிகமான எண்ணெய், துரித உணவுகள், வறுத்த-பொரித்த உணவுகளைத் தவிர்க்கவும்.


  

* 40-களில் இருப்பவர்கள், கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை அதிகமாகச் சாப்பிட வேண்டும். இவை, எலும்பு உறுதிக்கு உதவும்; ஆஸ்டியோபோரோசிஸ் என்ற மூட்டு தேய்மானம் வராமல் தடுக்கும். பால், ராகி, கீரை வகைகள், மீன், நண்டு ஆகியவற்றை அதிகமாகச் சாப்பிடலாம். 

* காபி,  டீ மற்றும் கோலா பானங்களை அடியோடு தவிர்க்கவும். இவற்றை அதிகம் அருந்துவதால், தூக்கமின்மைப் பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

* உணவுக்கு முன்னர் ஏதாவது ஒரு சூப் குடிப்பது நல்லது. இது, செரிமானத்துக்கு உதவும். 

* புரதம், வைட்டமின், மினரல்ஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

* காய்கறிகள், பழங்கள் முதலியவை ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தவை. எனவே, அவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


  

* நன்கு வெந்த, இதமான உணவுகளையே சாப்பிட வேண்டும். வேகாத, கடினமான உணவுப் பொருட்கள் பற்களின் வலிமையைக் குறைத்துவிடும்.

* இட்லி, இடியாப்பம், புட்டு போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக்கொள்ளவும்

* உணவில் அதிக உப்பு வேண்டாம். உப்பைக் குறைப்பது ஆரோக்கியத்துக்கு நல்வரவு சொல்லும் முதல் படி.

* தினமும் மூன்று வேளை பசும்பால் குடிக்கலாம். இதில் உள்ள கால்சியம் சத்து நமது எலும்புகளை பலப்படுத்த உதவும்.

* தினமும் ஒரு வாழைப்பழம் அல்லது ஒரு கொய்யா சாப்பிட்டால், செரிமானக் கோளாறுகள் வராமல் தடுக்க முடியும்.

* தண்டுக்கீரை, பருப்புக் கூட்டு போன்ற உணவுகள் பலவீனமான உடல் உள்ளவர்களுக்கு சக்தி தர உதவும்.

வாழ்வியல் முறையில் கடைப்பிடிக்கவேண்டியவை... 

* புகைபிடித்தல், குடிப்பழக்கம், பாக்கு போடுதல் போன்ற பழக்கங்களை அடியோடு விட்டுவிட வேண்டும்.

* தினமும் 30 நிமிட நடைப்பயிற்சி மேற்கொள்ளவேண்டியது அவசியம். காலையில் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி மேற்கொள்வது எலும்பு மற்றும் தசைகள் பலம் பெற உதவும்.




* ஏரோபிக் பயிற்சிகள் நுரையீரல் காற்றளவை அதிகப்படுத்தி, சீரான சுவாசத்துக்கு உதவும். இதனால் இதயம் தொடர்பான நோய்களில் இருந்து காத்துக்கொள்ளலாம்.

* நல்ல அமைதியான சூழ்நிலையில் இருக்கவேண்டியது மன ஆரோக்கியத்துக்கு நல்லது. 

* தினமும் நமக்காகவே சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில், நமக்குப் பிடித்தவற்றைச் செய்ய வேண்டும். இதனால் சந்தோஷமான மனநிலை கிடைக்கும்... இவை ஆரோக்கியத்துக்கு உதவும்..

* உணவை அள்ளிப் போட்டுக்கொள்ளாமல், கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட வேண்டும்.

* இனிப்புப் பண்டங்களை தவிர்ப்பது நல்லது. இதன் மூலம், பல்சொத்தையாவது, சர்க்கரைநோய், உடல்பருமன், கொலஸ்ட்ரால் ஆகிய பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம். 

* தினமும் போதுமான அளவு (2 1/2 லிட்டர் - 3 லிட்டர்) தண்ணீர் குடிப்பதால், மலச்சிக்கல், டீஹைடிரேஷன் எனப்படும் நீர்க் குறைபாடு போன்ற பிரச்னைகள் வராமல் பார்த்துக்கொள்ளலாம். 

பரிசோதனைகள்... 

* கண் பரிசோதனை 
நாற்பது வயதில் எல்லோருக்கும் தவறாமல் ஏற்படுவது கண் தொடர்பான பிரச்னை. பார்வை மங்கலாகும்; கண்புரை ஏற்படலாம். கண்கள் சரியாகத் தெரியாவிட்டால், நமது தன்னம்பிக்கை முதலில் உடைந்து போகும். நம்மில் நாமே சுருங்கிப்போவோம். எனவே, கண்ணில் புரை விழுவது, பார்வைக் கோளாறு அனைத்தையும் ஆரம்பத்திலேயே பரிசோதனையில் கண்டறிந்தால், விளைவுகளைத் தவிர்க்கலாம்.

 ரத்தப் பரிசோதனை 

ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்புச்சத்து, உப்புச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை மிக அவசியமானவை. இதில் ஏதேனும் அதிகமாக இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும். இவற்றைச் சீராக்க மருந்து மாத்திரைகள் ஒருபுறம் இருக்கட்டும்... உணவியல் மாற்றமும் மிக முக்கியம். அதற்கு ஓர் உணவியல் நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது பயன் தரும். 

* ஸ்கேன் மற்றும் EEG டெஸ்ட் 

இதன் மூலம் நாம் கல்லடைப்பு, வயிற்றுப்புண் மற்றும் இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா அல்லது வேறு ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளலாம்.

- வைஷ்ணவி சதீஷ், டயட்டீஷியன்




🔵  உங்கள் கைபேசியில் கதிர்வீச்சின் *(Radiation)* அளவு *2.6 watt/kg* என்ற அளவைத்தாண்டினால் பயன்படுத்துபவருக்கும் அருகில் இருப்போருக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும். உங்கள் கைபேசியின் கதிர்வீச்சின் அளவை தெரிந்துகொள்ள ```*#07#```  ஐ டயல் செய்யுங்கள். கதிர்வீச்சின் அளவு திரையில் தெரியும்.

💥
புருவமுடிகளைத் திருத்துகிறோம் (THREADING)என்ற பெயரில் பெண்கள் தங்கள் உயிரைக் குறைத்துக் கொள்கிறார்கள். 
சிறிது நேரம் ஒதுக்கி படிக்கவும்…..
இப்போதுள்ள இளைய தலைமுறை பெண்கள் அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் ஆரோக்கியத்தைக்கெடுத்துக் கொள்ளுகிறார்கள். இப்போது பெண்கள் தங்களை அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் உயிரை தாங்களே அழித்துக் கொண்டிருக்கும் இன்னோர் பழக்கத்தையும் இங்கே விளக்கவே இந்தப் பதிவு! புருவமுடிகளைத் திருத்துகிறோம் (த்ரெட்டிங்)(THREADING)என்ற பெயரில் தங்கள் உயிரைக் குறைத்துக் கொள்கிறார்கள். புருவமுடிகள் என்பவை பிராணன் இயங்கும் இடங்கள். இறப்பு நெருங்கி வரும் பொழுது புருவமுடிகள் தொட்டாலே கையோடு வந்துவிடும். உடல் பிராணன் தீர்ந்து போய் விடுவதாலேயே புருவ முடிகள் கொட்டிப் போய் விடுகின்றன. இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றபோது ( த்ரெட்டிங்)(THREADING), கண்ணைச் சுற்றியுள்ள நட்சத்திர காலம், காம பூரி வர்மம், திலர்த வர்மம் (பொட்டுவர்மம் (அல்)சுடரொளியின் காலம்), மின் வெட்டி வர்மம் (முன்வெட்டி வர்மம் அல்லது விழி பிதுங்கி வர்மம்), மந்திரக் காலம், அடக்க வர்மம், நேம வர்மம், பட்சிவர்மம், கண்ணாடி வர்மம் (மூக்கிறாணி வர்மம்), பால வர்மம், சூண்டிகை வர்மம், கொண்ட வர்மம் போன்ற கண்ணைச் சுற்றி உள்ள வர்மங்களில், பாதிப்புக்கள் நேர்கின்றன. இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றவர்களுக்கு இந்த வர்மங்களைப் பற்றித் தெரிய வாய்ப்பேயில்லை.
இதனால் பெண்களின் பிராண சக்தி குறைகின்றது. விளைவு குறைவான பிராண சக்தியால், ஆயுளும் குன்றி, பிராண சக்தி குன்றிய குழந்தைகளையும் பெற்று, ஆரோக்கியக் குறைவான சமுதாயத்திற்கே வித்திட்டு விடுகின்றனர். இவை ஆயுளைக் குறைப்பதுடன் பல பெரும் நோய்களுக்கும் காரணம் ஆகின்றன. பல ஆங்கில மருத்துவத்துக்கு பிராணன் எங்கே நிலை கொண்டிருக்கிறது. அதை சிதைத்தால் என்ன விளை வுகள் நேரும் என்பது தெரியாது. இதனால் பல ஆங்கில மருத்துவர்கள் கத்திகளை வைக்கக் கூடாத இடத்தில் வைத்து பலரை பரலோகம் அனுப்பி விடுகிறார்கள்.
வர்மங்களில் நிலை கொண்டிருக்கும் மின் காந்த சக்தியை எந்த வழியிலும் சிதைப்பது கூடாது.மேலும் உடலின் முக்கிய சக்திப்பாதைகள் கண்களுக்கு அருகில் ஓடுகின்றன, எனவே இந்த இடங்களில் கை வைப்பது நமக்கு நாமே தலைக்கு கொள்ளி வைத்துக் கொள்வது போல ஆகும். இறைவன் உறையும் இடம் இதுவே!! இதை உணர்ந்து நம் நாட்டுக் கலாச்சாரத்திற்கு ஏற்றாற் போல் பெண்கள் நல்ல சுத்தமான விளக்கெண்ணையை கண் புருவங்களில் தீட்டுவ தானாலும், கண்ணில்இட்டு வருவதனாலும் தம் ஆயுளையும் காத்து, நீட்டித்து, நல்ல பிராணனும், நீண்ட ஆயுள், நிறை ஆரோக்கியமும் கொண்ட தேகத்தால் இதே போல நற்குழந்தைகளையும் பெற்று நல் ஆரோக்கிய சமுதாயத்திற்கு வித்திடுங்கள் .
Link:
http://www.seithy.com/breifNews.php?newsID=148588&category=CommonNews&language=tamil.
மனம் இருந்தால் நண்பர்களிடம் பகிரலாம்.
 கஞ்சி எப்பேர்ப்பட்ட வயிற்றுப்புண்ணையும் ரெண்டே நாட்களில் ஆற்றிவிடும்...

வயிற்றில் புண் அதிகமாக அதிகமாக அது வாய்ப்புண்ணாக நமக்கு வெளிக்காட்டும். அதற்கு என்னதான் மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் தீருவதில்லை.
வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புபுண்ணை பொருத்தவரையில் நம்முடைய முன்னோர்கள் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே குணப்படுத்தி வந்தனர். அதுபோல் வீட்டிலுள்ள கசகசா, தேங்காய்ப்பால் போன்ற சில பொருட்களைக் கொண்டே எவ்வளவு தீராத வயிற்றுப் புண்ணையும் ஆற்றிவிட முடியும்.

 தேவையான பொருட்கள் :

கசகசா – 2 தேக்கரண்டி

தேங்காய் துருவல் – 1 கப்

பச்சரி குருணை – 150 கிராம்

உப்பு – சுவைக்கு

நெய் – 1 தேக்கரண்டி

செய்முறை :

கசகசாவை அரை மணி நேரம் நீரில் ஊறவைத்து அதை தேங்காய் துருவலுடன் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

அரிசி குருணையில் தண்ணீர் சேர்த்து வேகவைத்து கஞ்சியாக காய்ச்சிடுங்கள். அரைத்து வைத்துள்ள கசகசா விழுதை அத்துடன் கலந்திடுங்கள்.

கஞ்சியை உப்பு மற்றும் நெய் கலந்து பரிமாறுங்கள்.

இந்த கஞ்சியை காலை உணவாக சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுபுண் குணமாகும். உடல் குளிர்ச்சியாகும். முதியர்வர்கள் இதை இரவு சாப்பிட்டால் ஆழ்ந்து தூங்கலாம்.

இந்த கஞ்சியை பனங்கற்கண்டு சேர்த்தால் இனிப்பு சுவை கிடைக்கும். கஞ்சி எப்பேர்ப்பட்ட வயிற்றுப்புண்ணையும் ரெண்டே நாட்களில் ஆற்றிவிடும்...

வயிற்றில் புண் அதிகமாக அதிகமாக அது வாய்ப்புண்ணாக நமக்கு வெளிக்காட்டும். அதற்கு என்னதான் மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் தீருவதில்லை.
வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புபுண்ணை பொருத்தவரையில் நம்முடைய முன்னோர்கள் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே குணப்படுத்தி வந்தனர். அதுபோல் வீட்டிலுள்ள கசகசா, தேங்காய்ப்பால் போன்ற சில பொருட்களைக் கொண்டே எவ்வளவு தீராத வயிற்றுப் புண்ணையும் ஆற்றிவிட முடியும்.

 தேவையான பொருட்கள் :

கசகசா – 2 தேக்கரண்டி

தேங்காய் துருவல் – 1 கப்

பச்சரி குருணை – 150 கிராம்

உப்பு – சுவைக்கு

நெய் – 1 தேக்கரண்டி

செய்முறை :

கசகசாவை அரை மணி நேரம் நீரில் ஊறவைத்து அதை தேங்காய் துருவலுடன் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

அரிசி குருணையில் தண்ணீர் சேர்த்து வேகவைத்து கஞ்சியாக காய்ச்சிடுங்கள். அரைத்து வைத்துள்ள கசகசா விழுதை அத்துடன் கலந்திடுங்கள்.

கஞ்சியை உப்பு மற்றும் நெய் கலந்து பரிமாறுங்கள்.

இந்த கஞ்சியை காலை உணவாக சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுபுண் குணமாகும். உடல் குளிர்ச்சியாகும். முதியர்வர்கள் இதை இரவு சாப்பிட்டால் ஆழ்ந்து தூங்கலாம்.

இந்த கஞ்சியை பனங்கற்கண்டு சேர்த்தால் இனிப்பு சுவை கிடைக்கும்.பனங்கற்கண்டு சேர்த்தால் இனிப்பு சுவை கிடைக்கும்.
*🍀 உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை ☘*

_திடக்கழிவு,_
_திரவக்கழிவு,_
_வாயுக்கழிவு,_
_சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்ளும் *மருத்துவக்கழிவு,*_

     இவைகளை வாழ்நாள் முழுவதும், சிரமமில்லாமல் நீக்கும், எளிமையான,
சுவையான முறை.

      *வெந்நீர்*
              +
*எலுமிச்சை சாரு*
             +
       *தேன்*

*செய்முறை :*

   ஒரு டம்ளர் நீரை குறைந்த தனலில் வைக்கவும் !
கொதிக்க வேண்டியதில்லை !
நாம் தாங்கும் சூடு இருந்தால் போதும் !

ஒரு காலி டம்ளரில் 1/2 எலுமிச்சை, சிறியதாயிருந்தால் ஒரு எலுமிச்சை பிழிந்துக்கொள்ளவும் !

3 ஸ்பூன் தேன் சேர்த்து, வெந்நீர் கலந்து, ஸ்பூனில் சிறிது சிறிதாக, அனுபவித்து, உமிழ் நீருடன் நன்றாக உறவாடி, பின் அருந்தவும் !

   காலையில் முதல் உணவாக, வெறும் வயிற்றில் அருந்தவும் !

எல்லா கழிவுகளும் உடனுக்குடன் நீக்கப்படுவதுடன் உடலுக்குத் தேவையான 
உடனடி குளுக்கோஸ், தரமான உயிர்சத்துக்கள் மற்றும் தாது உப்புக்களும் கிடைக்கும் !

*வாழ்நாள் முழுதும் "கேன்சர்" என்ற சொல்லே நம் வாழ்க்கை அகராதியில் இல்லாமல் போகும் !*

   வயது வித்தியாசமின்றி உட்கொள்ளலாம் !

*உணவாகவும்,*
*மருந்தாகவும்,* செயல்புரியும் உன்னத இயற்கை பானம் !

பி . கு :
     சர்க்கரை நோயாளிகள் பயமில்லாமல் அருந்தலாம் !

சிறிது சிறிதாக, உமிழ் நீர் சேர்த்து, சுவைத்து உட்கொள்வதால், தேனில் உள்ள குளுக்கோஸ் தரமான குளுக்கோஸாக மாற்றமடைந்து நன்மை மட்டுமே செய்யும் !

   மேலும், "தேன்" நாக்கிற்கு இனிப்பு, உடல் உறுப்புகளுக்கு கசப்பு !

சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடக்கூடாதென்பது வடிகட்டிய "மூட நம்பிக்கை"!

தொடர்ந்து அருந்துவதால் "அல்சர்" எனும் மருத்துவத்தால் தூண்டப்படும் உபாதை, சொல்லாமல் ஓடிப்போகும்.......!
ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை, ராஜ்கோட்   "பணமே   இல்லாமல் இருதய சிகிச்சை"  என்று பிரபலமாக  உள்ளது,  பணம் செலுத்தும் இடம் என்பதே  இந்த மருத்துவமனையில் இல்லை.

ஒரு இருதய அறுவை சிகிச்சைக்கு, மூன்றிலிருந்து நான்கு  இலட்சங்களுக்கிடையே  செலவு  ஆகும் என்று, நாம் அனைவரும் அறிவோம் ,

ஸ்ரீ சத்ய சாய் மருத்துவமனை, ராஜ்கோட்,  கடந்த 17 ஆண்டுகளாக    இலவசமாக  எல்லா  இருதய நோய்களையும்    குணப்படுத்தி  வருகிறது.

80 படுக்கைகள் கொண்ட, இந்த மருத்துவமனையில் ஏற்கனவே பத்து லட்சத்திற்கும் அதிகமான  மக்கள்  சோதனை செய்து உள்ளனர்,  மற்றும்  பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விலை உயர்ந்த இருதய அறுவை சிகிச்சைகள்  முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டு  உள்ளது

தன்னலமற்ற அதே சேவை  தீர்மானத்தோடு ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை இப்பொழுது  கஷின்ரா,, அகமதாபாத்தில் , விரைவில் துவங்க போகிறது

இந்த புதிய மருத்துவமனையில், இருதய பிரச்சினைகளை கொண்ட  3 முதல் 18 வயது, குழந்தைகளுக்கு,  இலவச அறுவை சிகிச்சையில்  முன்னுரிமை வழங்கப்படும்

இந்த மருத்துவமனையில் சமீபத்திய மற்றும் நவீன இயந்திரங்கள்,  அனைத்து வசதிகள் மற்றும் உபகரணங்கள் உள்ளன .

310 படுக்கைகள்  வசதியுடன், வருடத்திற்கு சுமார் 3000 இருதய அறுவை சிகிச்சைகளை  இலவசமாக செய்ய போகிறார்கள் .

இந்த மருத்துவமனையின்  சேவை  தேவைப்படும்  இருதய நோயாளிகளுக்கு     வழிகாட்டுவதன் மூலம்,  நீங்களும்  இந்த தன்னலமற்ற சேவையில் பங்கு பெற முடியும்

முகவரி :

ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை

ஸ்ரீ சத்ய சாய் மார்க், களவாட  சாலை, ராஜ்கோட் - 360005.

ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை
கஷின்ரா கிராமம், தாலுகா: தாசிசிரோய் , தோள்க  சாலை,
மாவட்டம்: அகமதாபாத் - 382210
தொலைபேசி: 94260 58897/ 99250 34534
மின்னஞ்சல்: saihospital@gmail.com

குறிப்பு :

தயவு செய்து இந்த செய்தியை அனைத்து வாட்ஸாப் குழுக்களுக்கும் பகிர்ந்து  
இந்த சேவையில் , சிறிய அளவில் நம்மால் முயன்ற அளவு   
என கேட்டுக்கொள்கிறோம்

இஞ்சிப் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...

*இஞ்சிப் பால் செய்முறை:*👇🏾

*1 பெரிய துண்டு இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு, அதனை தட்டி, 3/4 கப் நீரில் போட்டு, அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின் ஒரு கப் பாலை நன்கு காய்ச்சி அதில் இஞ்சி சாற்றினை ஊற்றி, அத்துடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கலந்தால் இஞ்சிப் பால் ரெடி!*                                                  உங்கள் ஆரோக்கிய நலனில் அக்கரையுடன் இயற்கை மருத்துவம் சிறந்தது!!!!!

*இஞ்சிப் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்... ஆனால் இஞ்சியை பயன்படுத்தும் போது இயற்கையான மருந்து உள்ளது இஞ்சியுடன் சேர்த்து பயன்படுத்தினால் மிகவும் பயனளிக்கூடியதாகும்*

*இஞ்சியின் மருத்துவ குணங்களைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஏனெனில் அந்த அளவில் அதன் நன்மைகளைப் பற்றி அனைவருக்குமே நிச்சயம் தெரியும். அத்தகைய இஞ்சியைத் தட்டி பாலுடன் சேர்த்து குடித்தால் உடலில் வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வைக் காண்பீர்கள்*

*முக்கியமாக இஞ்சிப் பால் குடித்தால் இரத்தக் குழாய்களில் தங்கி அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்புக்கள் கரையும். வாய்வுத் தொல்லை நீங்கும். அதுமட்டுமின்றி பலரும் குனிந்து தன் பாதத்தை பார்க்க முடியாத அளவிலான தொப்பையைக் குறைக்க முடியும்.*

*ஆரோக்கியமான நுரையீரல்:*👇🏾

*நீங்கள் சிகரெட் பிடிப்பவர்களா? அப்படியெனில் இஞ்சிப் பால் குடியுங்கள். ஏனெனில் இப்பாலைக் குடித்தால் சிகரெட் பிடித்து நுரையீரலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி நுரையீரலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம்.*

*சளி:*👇🏾👇🏾

*சளித் தொல்லையால் அவதிபடுபவர்கள் சளித்தொல்லைகளிருந்து உடனடி நிவாரணம் பெற இஞ்சிபால் குடிக்கலாம்*

*வாய்வு தொல்லை:*👇🏾

*வாய்வு தொல்லையால் அவதிபடுபவர்கள் வாய்வு தொல்லைகளிருந்து உடனடி நிவாரணம் பெற இஞ்சிபால் குடிக்கலாம்* 

*புற்றுநோய்க் கட்டி:*👇🏾

*பெண்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சிப் பால் குடித்து வந்தால் சினைப்பையில் வரும் புற்றுநோய்க் கட்டிகளை நீக்கலாம்.*

*இரத்த குழாய் அடைப்பு*:👇🏾

*குண்டாக இருப்பவர்கள் இஞ்சிப் பால் குடிப்பது நல்லது. ஏனெனில் அதிக அளவிலான கொழுப்பு பதார்த்தத்தை உட்கொண்டு, இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் படிந்து அடைப்பு ஏற்படுவதை தடுப்பதோடு, இரத்தக் குழாய்களில் இரத்த ஓட்டம் ஆரோக்கியமான முறையில் செல்ல இஞ்சிப் பால் வழிவகுக்கும்.*

*தொப்பை:*👇🏾👇🏾

*தினமும் இஞ்சிப் பால் அருந்தி வர படிப்படியாக தொப்பையைக் குறைக்கலாம்.*

*இஞ்சிப் பால் குடிக்கக்கூடாதவர்கள்:*👇🏾

*வாய்ப்புண், அல்சர், மூலம் உள்ளவர்கள் இஞ்சிப் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், இப்பிரச்சனை தீவிரமடையக்கூடும்.*

*இஞ்சிப் பால் செய்முறை:*👇🏾

*1 பெரிய துண்டு இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு, அதனை தட்டி, 3/4 கப் நீரில் போட்டு, அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின் ஒரு கப் பாலை நன்கு காய்ச்சி அதில் இஞ்சி சாற்றினை ஊற்றி, அத்துடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கலந்தால் இஞ்சிப் பால் ரெடி!*                                                  உங்கள் ஆரோக்கிய நலனில் அக்கரையுடன் இயற்கை மருத்துவம் சிறந்தது!!!!!

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...