*_செ.சேதுராமன். பி.எஸ்சி_*🥒🥕
_உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பழங்கள் !!_🍓🍒
*கொய்யா :*
கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது வளரும் குழந்தைகளின் எலும்புகளுக்கு உறுதியைத் தருகிறது. மேலும் கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் கோளாறு உள்ளவர்கள், தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். சொறி, சிரங்கு மற்றும் இரத்தச்சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.
*பப்பாளி :*
பப்பாளியில், வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால், பல் தொடர்பான குறைபாட்டையும் சிறுநீர்ப்பையில் ஏற்படும் கற்களைக் கரைக்கவும் இது உதவுகிறது. மேலும், இது நரம்புகள் வலுப்பெறவும், இரத்த விருத்தி பெறவும் மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கவும் துணைபுரிகிறது.
பப்பாளி பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்ய நல்லதொரு மருந்தாகும். பப்பாளியில் உள்ள கரோட்டின் சத்து நுரையீரல் புற்றுநோய், உணவுக்குழாய் மற்றும் இரைப்பை புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.
*வாழைப்பழம் :*
இயற்கையாகவே வாழைப்பழங்களில் அதிக அமில எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது. அதனால், தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சலில் இருந்து விடுதலை பெறலாம். உடல் பருமன் உள்ளவர்கள், மெலிந்த தேகம் உள்ளவர்கள் என அனைவருமே வாழைப்பழத்தைச் சாப்பிட்டு அதன் பலனை பெற்றுக்கொள்ளலாம்.
புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டுமென்றால், வாழைப்பழத்தைச் சாப்பிடலாம். வாழைப்பழத்தில் உள்ள பி 6, பி 12 போன்றவை புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோட்டினை சிறிது சிறிதாக குறைக்க உதவும். இதன் மூலம் புகைபிடிப்பதில் இருந்து விடுபட முடியும்.
*மாதுளை:*
இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று ரகங்கள் உள்ள மாதுளம்பழம் இதயம், மூளை போன்றவற்றுக்கு பலம்தரக்கூடியது. புளிப்பு மாதுளை வயிற்றுக்கடுப்பைப் போக்கும். இரத்தபேதிக்கு நல்ல மருந்தான மாதுளை, தடைபட்ட சிறுநீரை வெளியேற்றவும் குடல்புண்ணை ஆற்றவும் செய்யும்.
கர்ப்பக் காலத்தில் ஏற்படும் வாந்தியை நிறுத்த மாதுளம்பழத்தின் சாற்றை அருந்தினால் பலன் கிடைக்கும். மேலும், கர்ப்பக்கால இரத்தச்சோகையைப் போக்கும். பொதுவாக அனைவருக்கும் வரக்கூடிய உடல்சோர்வைப் போக்க மாதுளம்பழத்தின் சாற்றுடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.
*அன்னாசி:*
அன்னாசிப்பழத்தில் வைட்டமின் பி உள்ளதால், இது உடலுக்கு பலம் தருவதுடன், இரத்தத்தை விருத்தி செய்யக்கூடியது. வெள்ளைப்படுதல் பிரச்சனை உள்ள பெண்கள் தொடர்ந்து அன்னாசிப்பழம் சாப்பிட்டு வந்தால், நிவாரணம் கிடைக்கும்.
அன்னாசியில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீஸ், மினரல் போன்ற முக்கிய சத்துகள் அடங்கியுள்ளன. மினரல் சத்துகள் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்துக்கு முக்கியப் பணி ஆற்றக்கூடியது. கொழுப்புச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால், அன்னாசி இதய நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.
*செ.சேதுராமன். பி.எஸ்சி*🥒🤝🏽