Saturday, October 13, 2018

நொறுங்கத்_தின்றால்_நூறு_வாழ்வு

#நொறுங்கத்_தின்றால்_நூறு_வாழ்வு

எந்த உணவை எப்படி உண்ண வேண்டும் என்பது பற்றிய தமிழர்களின் 12 வகையான
உணவுப் பழக்க வழக்கங்கள்..

1 . அருந்துதல் — மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது.

2 . உண்ணல் — பசி தீர சாப்பிடுவது.

3 . உறிஞ்சுதல் — நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல்.

4 . குடித்தல் — நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல்.

5 . தின்றல் — பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடுதல்.

6 . துய்த்தல் — உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல்.

7 . நக்கல் — நாக்கினால் துழாவித் துழாவி உட்கொள்ளுதல்.

8 . பருகல் — நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது.

9 . மாந்தல் — ரொம்பப் பசியால் மடமடவென்று உட்கொள்ளுதல்.

10 . கடித்தல் — கடினமான உணவுப் பொருளை கடித்தே உண்ணுதல்.

11. விழுங்கல் — வாயில் வைத்து அரைக்காமல் அப்படியே உள்ளே தள்ளுவது.

12. முழுங்கல் — முழுவதையும் ஒரே வாயில் போட்டு உண்பது.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...